திருமண நிகழ்ச்சிக்கு சென்று வீடு திரும்பிய போது நேர்ந்த சோகம்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பரிதாபமாக பலி!!

உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், ஒரு இளம்பெண் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சாலை விபத்தில் உயிரிழந்தனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

பைக்கை ஓட்டிச் சென்ற நபரும் அவரது சகோதரிகள் இருவர் மருத்துவமனையில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது அதிகாரிகளின் கூற்றுப்படி, பீட்டா 2 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரி சௌக்கில் அதிகாலை 2.30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

“சுரேந்திர சிங் (28), அவரது சகோதரி ஷைலி (26) இளம் சகோதரி அன்ஷு (14) ஆகியோருடன் கஸ்னாவில் நடந்த திருமண விழாவில் இருந்து குலேசரா பகுதியில் உள்ள தங்கள் வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்,” என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

“அவர்கள் பரி சௌக் ரவுண்டானா அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியது மற்றும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு சுரேந்திரா, ஷைலி மற்றும் அன்ஷு சிகிச்சையில் இருந்தபோது இறந்துவிட்டதாக மருத்துவர் அறிவித்தார்” என்று செய்தித் தொடர்பாளர் கூறினார். எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 279 (அடிப்படையில் அல்லது கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல்), 338 (அலட்சியத்தால் கடுமையான காயத்தை ஏற்படுத்துதல்) மற்றும் 304A (அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்துதல்) ஆகியவை அறியப்படாத குற்றவாளிக்கு எதிராக. அதிவேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதி காயமடைந்தவர்கள் மீது மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கைகளைத் தொடங்க நொய்டா காவல்துறை சோகமான சம்பவத்தில் தொடர்புடைய ஓட்டுநர் மற்றும் வாகனத்தை அடையாளம் காண முயற்சிக்கிறது.

நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா நகரங்களை உள்ளடக்கிய கௌதம் புத்த நகர், 2023 ஆம் ஆண்டில் 1,176 சாலை விபத்துக்களைக் கண்டது, இதன் விளைவாக 470 பேர் இறந்தனர் மற்றும் 858 பேர் காயம் அடைந்தனர். மாவட்டத்தில் 2022 இல் இதுபோன்ற 437 இறப்புகள் மற்றும் 856 பேர் காயம் அடைந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைகூடாத காதல்… காதலனுடன் சேர்ந்து புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு!!

கர்நாடக மாநிலம் கதக் தாலுகா நரேகல் பகுதியை சேர்ந்தவர் அப்பண்ணா (வயது 28). கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் லலிதா (25). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இருவரும் கல்லூரி படிக்குபோதே காதலித்து வந்துள்ளனர். ஆனால் தங்கள் காதலை இருவரும் வீட்டில் சொல்லாமல் இருந்துள்ளனர். அதாவது தங்களின் காதல் பற்றி வீட்டில் பேசுவதற்கு பயத்தில் இருந்துள்ளனர்.

இதற்கிடையே லலிதாவுக்கு, அவரது பெற்றோர் வேறொரு நபரை பார்த்து திருமணம் செய்து வைத்தனர். அவர்களின் திருமணம் கடந்த 4-ந்தேதி நடந்தது. திருமணத்துக்கு பிறகும் லலிதாவும், அப்பண்ணாவும் பேசி வந்துள்ளனர்.

மேலும் அவர்கள் தங்களால் ஒன்று சேர முடியவில்லையே என வருத்தத்தில் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் லலிதாவும், அப்பண்ணாவும் வீட்டை விட்டு வெளியேறினர்.

கிராமத்தின் வெளிப்பகுதிக்கு சென்ற அவர்கள், அங்கிருந்த ஒரு மரத்தில் ஒரே கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர். இதற்கிடையே அப்பண்ணாவும், லலிதாவும் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்ற கிராம மக்கள், போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், இருவரும் காதலித்து வந்ததும், காதல் விவகாரம் குறித்து பெற்றோரிடம் கூறாமல் இருந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்து கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்த சோகம்!!

நாமக்கல் மாவட்டம் பரமத்தி சாலை கொங்கு நகரில் வசித்து வருபவர் 54 வயது மனோகரன் . இவர் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி அனிதா.

இவருக்கு 24 வயது மகன் ராகுல் இருந்தார். ஓமனில் பணிபுரிந்து வந்த இவர் ஏப்ரல் 11ம் தேதி நாமக்கல் வந்துள்ளார். இவரது பழைய வீட்டை புதுப்பிக்கும் யோசனையில் இருந்தார்.

அத்துடன் மகனை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பவும் முடிவு செய்யப்பட்ட நிலையில் அவருக்கும், அனிதாவுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. வழக்கம் போல் ஏப்ரல் 12ம் தேதி இரவும் தகராறு, வாக்குவாதம் தொடர்ந்தது.

மகன் ராகுல் சந்தைப்பேட்டை புதூரில் உள்ள வீட்டிற்கு தூங்க சென்றுவிட்டான். காலை வீட்டிற்கு சென்ற ராகுல் அம்மாவைத் தேடியுள்ளார். அனிதா கழிவறையில் கழுத்து அறுக்கப்பட்டு கொலையான நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். மற்றொரு அறையில் என்ஜினீயர் மனோகரன் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் கிடந்தார்.

அதிர்ச்சி அடைந்த ராகுல், நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப தகராறில் மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல வெற்றிப்படங்களின் தயாரிப்பாளர் தற்கொலை… அதிர்ச்சியில் திரையுலகினர்!!

பிரபல தொழிலதிபரும் பல வெற்றிப் படங்களின் தயாரிப்பாளருமான சௌந்தர்ய ஜெகதீஷ் பெங்களூருவில் தனது வீட்டில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார்.

இது குறித்த தகவல் அறிந்த போலீசார், செளந்தர்ய ஜெகதீஷ் உடலைக் கைப்பற்றி, தற்கொலை வழக்காக பதிவு செய்து, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, விசாரித்து வருகின்றனர்.

‘அப்பு & பப்பு’, ‘மஸ்த் மஜா மாடி’, ‘சிநேகிதரு’ மற்றும் ‘ராம்லீலா’ உள்ளிட்டப் பல படங்களை கன்னடத்தில் தயாரித்தவர் செளந்தர்ய ஜெகதீஷ்(55). படங்கள் தயாரிப்பது மட்டுமல்லாது, பிசினஸிலும் கவனம் செலுத்தி வந்தார்.

இப்படியான சூழ்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை மீட்ட போலீஸார் தற்கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

ஜெகதீஷ் அதிகாலை 4 மணியளவில் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். காலை 9.40 மணியளவில் நடந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்குத் தெரிவிக்கப்பட்டது.

ஜெகதீஷ் உடலை மருத்துவமனைக்கு போலீஸார் கொண்டு சென்றனர். அங்கு அவரது உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிர் பிரிந்து விட்டதை உறுதிப்படுத்தினர்.

ஜெகதீஷின் மனைவி புகார் அளித்துள்ளதாக வடக்கு டிசிபி சைதுலு அதாவத் தெரிவித்தார். “இந்த வழக்கை அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருகிறோம்.

சமீபத்தில், அவரது மாமியார் காலமானார். அவர் மீது அலாதி அன்பு வைத்திருந்த ஜெகதீஷ் அவரது மரணத்தால் மனச்சோர்வடைந்தார். அவர் மன அழுத்தத்திற்கான சிகிச்சையும் எடுத்து வந்தார்” என்று அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

ஜெகதீஷின் உறவினர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், குடும்பத்தில் நிதி பிரச்சினையோ அல்லது அவருக்கு உடல்நலப் பிரச்சனைகளோ எதுவும் இல்லை எனத் தெரிவித்தனர். இவரது மகளுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. அவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

ராஜாஜிநகரில் அமைந்துள்ள ஜெட்லாக் ரெஸ்டோபார் நிறுவனமும் ஜெகதீஷுக்கு சொந்தமானது. இங்கு தர்ஷன் நடித்த ‘காட்டேரா’ படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நள்ளிரவு 1 மணிக்கு மேல் வரையிலும் பார்ட்டி நடந்ததாக ஜெகதீஷ் மற்றும் பலர் மீது கடந்த ஜனவரி மாதம் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை உயிரிழப்பு… இரண்டு நாட்களாக தொடர்ந்த மீட்புபணியில் சோகம்!!

மத்திய பிரதேச மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் ஏப்ரல் 12ம் தேதி 6 வயது சிறுவன் தவறி விழுந்தான். இவன் 40 அடி ஆழத்தில் சிக்கி கொண்டதாக மீட்பு குழுவினர் தெரிவித்தனர். தகவல் தெரிவிக்கப்பட்டதும் உடனடியாக மாநில பேரிடர் மீட்பு குழு, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

40 மணி நேர போராட்டத்துக்கு பின் நேற்று காலை 8 மணிக்கு சிறுவன் இருக்கும் இடத்தை மீட்பு கருவிகள் நெருங்கின. ஆனால், சிறுவன் உயிரோடு இல்லை. அவனது உடல்மட்டுமே மீட்கப்பட்டது. ஆழ்துளைக் கிணறு குறுகலாக இருந்ததால், சிறுவனை உயிருடன் மீட்க முடியவில்லை என மாவட்ட ஆட்சியர் பிரதீபா பால் கவலை தெரிவித்தார்.

மத்திய பிரதேச மாநிலம், ரீவா மாவட்டத்தில் உள்ள மனிகா கிராமத்தை சேர்ந்தவர் மயங்க் என்ற 6 வயது சிறுவன். நேற்று இரவு 9 மணியளவில் சிறுவன் தனது வீட்டின் அருகில் உள்ள வயலில் விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது, வீட்டின் அருகே உள்ள ஆழ்துளை கிணற்றில் சிறுவன் தவறி விழுந்தான். 70 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் 40 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கிக் கொண்டான்.

சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்ததாக தகவல் கிடைத்ததும், போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.சிறுவனை இழந்த பெற்றோருக்கு அம்மாநில முதல்வர் ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கி ஆறுதல் தெரிவித்துள்ளார்.

கழுத்தினால் உழவு இயந்திரத்தை இழுத்து உலக சாதனை படைத்த யாழ். முதியவர்!!

யாழ்ப்பாணத்தில் உழவு இயந்திரத்தை 50 மீற்றர் தூரம் வரை தனது கழுத்தினால் இழுத்து முதியவரொருவர் சாதனை படைத்ததுடன் அது உலகசாதனைப் பத்தகத்திலும் பதிவானது.

இன்றையதினம் (14-04-2024) மாலை நடைபெற்ற 2600 கிலோ எடையுடைய உழவு இயந்திரத்தை தனது கழுத்தினால் இழுத்து உலக சாதனை படைத்துள்ளார்.

யாழ் தென்மராட்சியைச் சேர்ந்த செல்லையா திருச்செல்வம் தனது தாடியால் பட்டா ரக வாகனத்தை ஏற்கனவே இழுத்து பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

உலக சாதனை படைத்துள்ள திருச்செல்வத்தின் தொடர் முயற்சிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்திலும் வலுச் சேர்த்துள்ளார்.

இதற்கு முன்னர் திருச்செல்வத்தின் முயற்சிகள் உலக சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கில் அவரை ஊக்குவிக்கும் முகமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஏற்பாட்டில் கொழும்பு காலி முகத்திடலில் 1000 மீற்றர் தூரத்திற்கு 1550 கிலோ கிராம் எடையுடைய பட்டா ரக வாகனத்தை 500 மீற்றர் தூரம் தாடியாலும், 500 மீற்றர் தூரத்தை தனது தலை முடியாலும் இழுத்து திருச்செல்வம் அந்த முயற்சியினூடாக உலக சாதனையை நிகழ்த்தினார்.

இந்நிலையில் இன்று யாழ்ப்பாணத்தில் திருச்செல்வம் தனது மற்றுமொரு உலகசாதனை படைக்கும் முயற்சியில் இறங்கியிருந்த நிலையில் அதனையும் ஊக்குவித்து உற்சாகப்படுத்தும் வகையில் அமைச்சர் குறித்த நிகழ்விடத்திற்கு சென்றிருந்தார்.

குறித்த சாதனை படைத்த திருச்செல்வத்திற்கு அனுசரணை வழங்கியிருந்த நிறுவனத்தால் சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில் அவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கரங்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தங்கத் தட்டில் பானிபூரி : வைரலாகும் காணொளி!!

பாஸ்ட்புட் பானிபூரி தங்கத் தட்டில் தங்கம் மற்றும் வெள்ளிப்படலத்துடன் பரிமாறப்படும் இணையத்தில் வைரலாகியுள்ளது. பாஸ்புட் உணவு இன்றைய காலத்தில் மக்களிடம் வெகு பிரபலம் என்பதுடன், பலரும் அதனையே விரும்பி உண்கின்றனர்.

இந்தியாவில் தெருவோர உணவுகளில் அதிகமாக விற்பனையாகும் பாஸ்புட் உணவுகளில் ஒன்றான பானிபூரி மக்களுக்கு பிடித்தமான உணவுகளில் ஒன்றாகும். உணவும் பிரியர்களை ஈர்ப்பதற்காக பல்வேறு வகைகளில் பானிபூரி தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், குஜராத்தின் அகமதாபாத்தை சேர்ந்த ஒரு தெரு உணவக விற்பனையாளர் ஒருவர், பானிபூரியின் புதிய வகை ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில்,

தங்கத் தட்டில் தங்கம் மற்றும் வெள்ளிப்படலத்துடன் பரிமாறப்படும் பானிபூரியுடன் துருவிய பாதாம் மற்றும் தண்டாய் ஆகிய கலவை சேர்க்கப்பட்டுள்ளது. மொத்தம் 6 பானிபூரிகள் தட்டில் உள்ளது.

ஒவ்வொரு பானிபூரியிலும் துண்டாக்கப்பட்ட பாதாம் மற்றும் சில முழு முந்திரி மற்றும் பிஸ்தாவை சேர்க்கும் விற்பனையாளர் தாராளமாக தேனை சேர்த்து அவற்றை வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுவது போல காட்சிகள் உள்ளன. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி 80 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் பிரான்ஸில் இருந்து வந்த பெண் உயிரிழப்பு : காரணத்தால் அதிர்ச்சி!!

யாழ்ப்பாணத்தில் பிரான்ஸ் நாட்டில் இருந்து தனக்கான ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை வந்த 62 வயதான பெண் கொரோனா தொற்ரால் உயிரிழந்துள்ளமை அதிர்ச்சியினை ஏற்படுத்திய்யுள்ளது.

உயிரிழந்த பெண் வட்டுக்கோட்டை அராலியில் தங்கியிருந்த நிலையில் காய்ச்சல் காரணமாக இரண்டு நாட்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே கடந்த வெள்ளிக்கிழமை (12) உயிரிழந்துள்ளார்.

உயிரிழப்பின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை கடந்த சில தினங்களின் முன்னர் தென்னிலங்கையில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்த நிலையில் யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்துக்குப் பின்னர் கொரோனோ தொற்றுக் காரணமாக பெண் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் மூடநம்பிக்கையால் உயிரிழந்த இளம் ஆசிரியை!!

யாழ்ப்பாணத்தில் இளம் ஆசிரியை ஒருவர் வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் இந்த சம்பவமானது நேற்று முன்தினம் (13.04.2024) இடம்பெற்றுள்ளது.

வண்ணார் பண்ணை – வடமேற்கு, ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த 37 வயதுடைய கோவிந்தசாமி கல்பனா என்ற, அராலி முருகமூர்த்தி பாடசாலையின் ஆங்கில ஆசிரியையே உயிரிழந்துள்ளார்.

குறித்த ஆசிரியைக்கு கடந்த 2016ஆம் ஆண்டு, லண்டனைச் சேர்ந்த ஒருவருடன் இந்தியாவில் திருமணம் நடைபெற்றுள்ளது. பின்னர் அவர் கணவனைப் பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் சுகயீனம் ஏற்பட்டதையடுத்து அவருக்கு மாந்திரீகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து அவரது தந்தையுடன் இளவாலை முள்ளானை தேவராச்சியத்தின் கிறிஸ்துவின் சபையில் கடந்த 05 ஆம் திகதி தொடக்கம் தங்கியுள்ளனர்.

இதனைதொடர்ந்து இவருக்கு கடந்த 12ம் திகதி வயிற்றுவலியும் வாந்தியும் ஏற்பட்டதையடுத்து போதகர் மூலம் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (13) உயிரிழந்துள்ளார்.

மேலும் அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளதுடன் மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டு சடலத்தை புதைக்குமாறு கூறி நேற்றையதினம் (14.04) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இரட்டைக் கொலைச் சம்பவம் : விசாரணையில் வெளியான முக்கிய தகவல்!!

கடந்த ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி மொரகஹஹேன (Moragahahena) பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்திற்கு சந்தேகநபர்கள் பயன்படுத்திய கார் சப்புகஸ்கந்த பிரதேசத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஆரம்பக்கட்ட விசாரணையின் பின்னர் காரை வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டதாக மொரகஹஹேன பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட நபர், சபுகஸ்கந்த ஹெயன்துடுவ கொட்டுன்ன வீதியில் வசிக்கும் 35 வயதுடையவர் என கூறப்படுகிறது.

சந்தேக நபர் வாகனங்களை விற்பனை, இடமாற்றம் மற்றும் வர்ணம் பூசும் வியாபாரத்தை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, கொலை தொடர்பில் தற்போது விளக்கமறியலில் உள்ள சஞ்சய் நமட்ட, வெளிநாட்டில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ஹோமாகம ஹந்தய நமட்டவின் நெருங்கிய உறவினரே தனக்கு காரை வழங்கியுள்ளதாக கூறியுள்ளார்.

இதன்படி, சியம்பலாப்ப பிரதேசத்தில் வீதி சமிக்ஞைக்கு அருகில் உள்ள பாதசாரிகள் செல்லும் நடைபாதைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை எடுத்து வெள்ளை நிறத்தில் மாற்றுமாறு பணித்ததாக சந்தேக நபர் கூறியுள்ளார்.

ஹோமாகம ஹந்தயா டுபாய் மாநிலத்தில் இருந்து ஒரு இலட்சம் ரூபாவையும் கடுவலை பிரதேசத்தில் உள்ள வங்கியொன்றில் இருந்து மேலும் 40,000 ரூபாவையும் தனது கணக்கில் வரவு வைத்துள்ளதாக சந்தேக நபர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் காருக்கு வெள்ளை நிறப்பூச்சு மற்றும் இலக்கத்தக்கடை மாற்றி, அந்த இடத்திற்கு கொண்டு சென்று நிறுத்தியதாக, கைது செய்யப்பட்ட நபர், வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதன்படி வாகனத்தை கொண்டு வந்து நிறுத்திய காட்சியானது அருகிலுள்ள சிசிரீவி கருவியில் பதிவாகியுள்ளது. வெளிநாட்டில் உள்ள ஹோமாகம ஹந்தயா மற்றும் அவரது நண்பர் சஞ்சய் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர்களது உறவினர்கள் கைது செய்யப்பட்ட போது இந்த சந்தேக நபர் உதவிகளை வழங்க தலையிட்டதாக மேலதிக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை ஏப்ரல் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹொரணை நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

கனடாவில் சொகுசுக் காரில் சடலமாக மீட்கப்பட்ட மாணவன் : குடும்பத்தினர் விடுத்துள்ள கோரிக்கை!!

கனடாவில் (Canada) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இந்தியாவை சேர்ந்த மாணவன் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சிராக் அன்டில் (Chirag Antil) என்ற அடையாளம் காணப்பட்ட உயிரிழந்த மாணவர் இந்தியா (India) – ஹரியானாவைச் (Haryana) சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

24 வயதுடைய சிராக் அன்டில் என்ற மாணவன் கனடாவின் வான்கூவரில் (Vancouver) கார் ஒன்றின் உள்ளே இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

எனினும் கொலையை செய்த நபர் மற்றும் கொலைக்கான காரணம் குறித்த தகவல்கள் பொலிஸார் வெளியிடவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசாங்கத்திடம் வேண்டுகோள்

கடந்த 2022 ஆம் ஆண்டு உயர் கல்விக்காக சிராக் கனடா சென்றுள்ளார். இந்நிலையில், சிராக்கின் உயிரிழப்புக்கு குடும்பத்தினர் நீதிகோரியுள்ளனர்.

மேலும், உடலை இறுதிச் சடங்குகளுக்காக சொந்த ஊருக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யுமாறும் இந்திய அரசாங்கத்திடம் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மூன்று கிராமங்களை அச்சத்தில் வைத்திருந்த பெண்கள் : அதிரடி காட்டிய பொலிஸார்!!

காலி மாவட்டத்திற்குரிய கொஸ்கொட ஊரகஸ்மன்ஹந்திய மற்றும் அஹுங்கல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மக்களை பீதியில் வைத்திருந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரவு நேரங்களில் பல வீடுகளில் கொள்ளையடித்த கொள்ளை கும்பலை வழிநடத்தி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் இரண்டு பெண்களும் இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாமி மற்றும் மருமகள் முறை உறவினர்களான 29 மற்றும் 40 வயதுடைய இரு பெண்களும், கைது செய்யப்படும் போது 2410 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 3112 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் அவர்களிடம் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொள்ளை கும்பலை முழுமையாக இந்த 2 பெண்களின் தலைமையின் கீழ் செயற்பட்டுள்ளது.

மேலும் இந்த பெண்கள் வழங்கும் போரா பொருளை இளைஞர் பருகிவிட்டு கதவுகளை உடைத்து வீடுகளுக்குள் நுழைந்து மக்களை அச்சுறுத்தி கொள்ளையடிப்பதாக தெரியவந்துள்ளது.

ஐந்து வீடுகளில் கொள்ளையடித்து சென்ற ஐந்து லட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான தங்க ஆபரணங்கள், கொள்ளை சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்ட வாள்கள், கத்திகள், இரும்பு கம்பிகள், மன்னா கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இலங்கையில் 40 வயது காதலனின் வெறியாட்டம் : 17 வயது காதலி மீது துப்பாக்கி சூடு!!

பொலனறுவை மின்னேரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரித்தலை யாய 04 பகுதியில் நேற்று இரவு துப்பாக்கி சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான அவர், பொலன்னறுவை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் அவர் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும், அவரது நிலை மோசமடைந்ததையடுத்து மேலதிக சிகிச்சைக்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சிறுமி அப்பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய நபருடன் சுமார் இரண்டு வருடங்களாக காதல் தொடர்பில் இருந்து வந்துள்ளார். அவருடன் சில காலம் அதே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

குறித்த நபரின் தொல்லை தாங்க முடியாமல் சில வாரங்களுக்கு முன்பு தனது பெற்றோர் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் தன்னுடன் வருமாறு அந்த நபர் பல சந்தர்ப்பங்களில் மிரட்டியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இதேவேளை, நேற்றிரவு குறித்த சிறுமியும் அவரது தாயாரும் அருகில் உள்ள உறவினர் வீட்டில் வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட நிலையில், அந்த வீட்டில் இருந்த குறித்த நபர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச் சூட்டில் சிறுமியின் வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைக் கைது செய்ய இரண்டு பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மின்னேரிய பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவில் மதுபோதையில் பேரூந்தினை செலுத்திய சாரதி கைது!!

புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக நாடு முழுவதும் போக்குவரத்து பொலிஸாரினால் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அந்த வகையில் வவுனியா மாவட்டத்திலும் போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்தமையுடன் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கையினையும் முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது மதுபோதையில் வாகனத்தினை செலுத்திய குற்றச்சாட்டில் தனியார் பேரூந்தின் சாரதியினை பொலிஸார் கைது செய்தமையுடன் பேருந்தினையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றுள்ளனர்.

வவுனியாவில் யானை தாக்கி ஒருவர் காயம்!!

வவுனியா, மாமடுப் பகுதியில் யானைத் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாமடு பொலிசார் தெரிவித்தனர்.

புத்தாண்டு தினமான நேற்று (14.04.2024) மாலை வவுனியா, மாமடு – கள்ளிக்குளம் வீதியில் நபர் ஒருவர் பயணித்த போது வீதியில் நின்ற யானை குறித்த நபர் மீது தாக்குதல் மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து சென்றுள்ளது.

பின்னர் அவ் வீதியால் சென்றோர் தாக்குதலுக்குள்ளான நபரை வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மாமடுப் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மாமடு – கள்ளிக்குளம் வீதியில் உள்ள பல காணிகளில் வீடுகள் கட்டப்பட்டுள்ள போதும், அவ் வீடுகளில் பலரும் குடியிருக்காமையால் அப் பகுதி பற்றை காடுகளாக மாறியுள்ளதுடன்,

காட்டில் இருந்து வரும் யானைகள் அப் பற்றைகாடுகளின் ஊடாக வீதிக்கு வருவதாகவும், தினமும் அப் பகுதியில் நடமாடித் திரிவதுடன் வீதியில் செல்வோரை தாக்க முயற்சிப்பதாகவும் அப் பகுதியில் குடியிருக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் புத்தாண்டு தினத்தில் நிகழ்ந்த சோகம் : பாரிய வெட்டுக்காயத்துடன் இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி!!

புத்தாண்டு தினமான நேற்றையதினம் பாரிய வெட்டுக்காயத்துடன் இளைஞன் ஒருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாலிக்குளம் பகுதியினை சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் ஒருவர் காலில் பாரிய வெட்டுக்காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

குறித்த இளைஞர் மீது யாரேனும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனரா அல்லது தற்செயலாக இடம்பெற்றதா என்ற சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் மேலதிக விசாரணைகளுக்காக பூவரசங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது