பிடிக்காத திருமணம்… தாலியை கழற்றி வைத்து விட்டு புதுமணப்பெண் காதலனுடன் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை!

கர்நாடகாவில் வசித்து வரும் 28 வயது கூலித்தொழிலாளி அப்பண்ணா. அதே பகுதியில் வசித்து வரும் லலிதா ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இருவரும் கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தே காதலித்து வந்தனர். தங்களின் காதல் குறித்த பயத்தில் வீட்டில் சொல்லவே இல்லை. இந்நிலையில் லலிதாவுக்கு, ஏப்ரல் 4ம் தேதி அவரது பெற்றோர் வேறொரு நபருக்கு திருமணம் செய்து வைத்தனர்.

திருமணத்துக்கு பிறகும் லலிதாவும், அப்பண்ணாவும் வழக்கம் போல் பேசி வந்தனர். தங்களால் ஒன்று சேர முடியவில்லையே என மனவருத்தத்தில் இருந்து வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு தாலியைக் கழற்றி வைத்துவிட்டு, கணவர் வீட்டில் இருந்து லலிதா வெளியேறினார். காதலனிடம் ‘உன்னை பிரிந்து என்னால் வாழ முடியவில்லை. நாம் இருவரும் திருமணம் செய்தாலும், பெற்றோர் வாழ விட மாட்டார்கள்’ என அப்பண்ணாவிடம் லலிதா கூறியுள்ளார். ‘ஒன்றாக வாழ முடியவில்லை என்றாலும், ஒன்றாக சாவோம்’ என இருவரும் முடிவு செய்தனர்.

வீட்டிற்கு சென்ற அப்பண்ணா, இரண்டு கயிறை எடுத்து வந்தார். இந்நிலையில் இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் லலிதாவும், அப்பண்ணாவும் கிராமத்தை விட்டே வெளியேறினர்.

கிராமத்தின் வெளிப்பகுதியில் இருந்த ஒரு மரத்தில் ஒரே கயிற்றால் இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர். அந்த வழியாக சென்றவர்கள் அப்பண்ணாவும், லலிதாவும் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

கிராம மக்களுக்கும், போலீசாருக்கும் தகவல் அளித்ததன் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து நடத்தப்பட்ட விசாரணையில், இருவரும் காதலித்து வந்ததாகவும், இது குறித்து பெற்றோரிடம் கூறாமல் இருந்ததும் தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

200 கோடி சொத்தை தானம் செய்து துறவியான தம்பதியினர் : ஏன் தெரியுமா?

தங்களுடைய ரூ.200 கோடி மதிப்பிலான சொத்துகளை தானமாக வழங்கி தம்பதியினர் துறவறத்தை ஏற்றுக்கொண்டனர்.

இந்திய மாநிலமான குஜராத், ஹிம்மத்நகரை சேர்ந்த தொழிலதிபர் பாவேஷ் பண்டாரி (Bhavesh Bhai Bhandari). இவர், சபர்கந்தா மற்றும் அகமதாபாத் ஆகிய இரு நகரங்களிலும் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

இவரும், இவரது மனைவியும் கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற விழாவில் ரூ.200 கோடி மதிப்பிலான சொத்துகளை தானமாக வழங்கி துறவறத்தை ஏற்றுக் கொண்டனர்.

இவர்களின், 19 வயது மகளும் 16 வயது மகனும் கடந்த 2022 -ம் ஆண்டு துறவறத்தை ஏற்றுக் கொண்ட நிலையில், தற்போது பாவேஷ் பண்டாரியும், அவரது மனைவியும் துறவறத்தை ஏற்கின்றனர் என்று உறவினர்கள் கூறுகின்றனர்.

இவர்கள் தற்போது முக்திக்கான பயணத்தை தொடங்க திட்டமிட்டு, நாடு முழுவதும் வெறுங்காலுடன் நடந்து சென்று, யாசகம் பெற்று மட்டுமே உயிர் வாழ்வார்கள்.

இவர்கள் தங்களிடத்தில் இரண்டு வெள்ளை ஆடைகள், யாசகம் பெறுவதற்கு ஒருகிண்ணம், பூச்சிகளை அப்புறப்படுத்த “ரஜோஹரன்” எனும் வெள்ளை துடைப்பம் ஆகியவற்றை மட்டுமே வைத்திருப்பார்கள். இதைத்தவிர வேறு பொருட்கள் வைத்திருப்பதற்கு அனுமதியில்லை.

வரும் ஏப்ரல் 22-ம் திகதி தம்பதியினர் உறுதிமொழியை ஏற்ற பிறகு அனைத்து குடும்ப உறவுகளையும் துண்டித்து, துறவற வாழ்வை மேற்கொள்வார்கள். தற்போது, இந்த சம்பவம் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

முல்லைத்தீவில் திருமணம் செய்து நான்கு மாதங்களில் உயிரிழந்த யாழ் நபர்!!

முல்லைத்தீவில் திருமணம் செய்து நான்கு மாதங்களில் , யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .

யாழ்ப்பாணம் அல்வாய் வடமேற்கு திக்கம் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் முல்லைத்தீவு தேராவில் பகுதியில் வசித்து வந்த நிலையில் , நான்கு மாதங்களுக்கு முன்னர் பதிவுத்திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் கடும் சுகயீனமுற்று முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் பரமகுரு ஜெகன் (வயது 44) என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்த நிலையில், குடும்பஸ்தரின் திடீர் உயிரிழப்பு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி தம்பதி பலி : காப்பாற்றச் சென்றவரும் பலியான சோகம்!!

விக்டோரியா (Victoria) நீர்த்தேக்கத்தில் மூழ்கிய தம்பதியை காப்பாற்ற முயற்சித்த நபரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். விக்டோரியா (Victoria) நீர்த்தேக்கத்தில் நேற்று (15.4.2024) பிற்பகல் இளம் தம்பதியினர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களை காப்பாற்ற முன் வந்த 30 வயதுடைய பிரதேசவாசி ஒருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நீராடுவதற்காக நீர்த்தேக்கத்தில் இறங்கிய பெண் திடீரென நீரில் மூழ்கியுள்ளார். அவளைக் காப்பாற்ற கணவனும் நீர்த்தேக்கத்தில் இறங்கியுள்ளார்.

எவ்வாறாயினும், வெள்ளத்தில் சிக்கி இருவரும் காணாமல் போயுள்ளதுடன், அவர்களை காப்பாற்ற பிரதேசவாசி ஒருவரும் நீரில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது முதலில் மனைவியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதுடன், அவர்களைக் காப்பாற்றச் சென்ற கணவன் மற்றும் பிரதேசவாசியின் சடலம் பின்னர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் (Victoria Reservoir) மூழ்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை குறித்த பெண்ணின் கணவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்திற்கு திஹாரிய பிரதேசத்தில் வசிக்கும் திருமணமான தம்பதியரே இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காணாமல்போன நபரை தேடும் நடவடிக்கை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தெல்தெனிய பிரதேசத்தில் உள்ள பெண்ணின் கிராமத்திற்கு சென்ற போது கும்புக்கந்துர பிரதேசத்தில் இருந்து விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு இவர்கள் நீராட சென்றுள்ளனர்.

இந்நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. காணாமல்போன நபரை தேடும் நடவடிக்கையை பொலிஸாரும் பிரதேசவாசிகளும் ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணுக்கு 22 வயது எனவும் காணாமல்போன ஆணுக்கு 28 வயது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் காதலி மற்றும் காதலியின் தாயையும் வெட்டிய பின் காதலன் தற்கொலை!!

யாழ். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் காதலியையும் காதலியின் தாயாரையும் கத்தியால் வெட்டிய பின்னர் காதலனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதிவாகியுள்ளதாக இளவாலை பொலிசார் தெரிவித்தனர்.

பனிப்புலம் பகுதியினை சேர்ந்த 35 வயதான குணதிலகம் பிரணவன் எனும் இளைஞன் அதே பகுதியினை சேர்ந்த யுவதி ஒருவரை காதலித்து வந்த நிலையில் வீட்டாரிடயை முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டு வளவினுள் புகுந்து மலசலகூடத்தினுள் ஒழித்திருந்த இளைஞன் 4 மணியளவில் வீட்டில் உறங்கிய நிலையில் இருந்த காதலியையும் காதலியின் தாயாரையும் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து காயமடைந்த நிலையில் இருவரும் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து இளைஞனும் பனிப்புலம் பகுதியில் உள்ள வளவொன்றினுள் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இது குறித்து ஆரம்பகட்ட விசாரணைகளை இளவாலை பொலிசார் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது

உலகின் மிகவும் பிரபலமான அன்னாசி இலங்கையில்!!

உலகின் மிகவும் பிரபலமான அன்னாசி வகைகளில் ஒன்றான MD 2 அல்லது Super Sweet Pineapple இலங்கையில் பயிரிடுவதற்கு உடனடியாக பரிந்துரைக்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

MD 2 Super Sweet pineapple வகைக்கு உலக சந்தையில் அதிக கிராக்கி இருந்தாலும், அந்த அன்னாசி வகையை இலங்கையில் பயிரிட இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், குறித்த அன்னாசி வகையை இலங்கையில் பயிரிடும் பரீட்சார்த்த நடவடிக்கை வெற்றியளித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அதோடு , குறித்த அன்னாசி வகையை பயிரிடுவதற்கு விவசாயிகளுக்கு பரிந்துரைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் திடீரென உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்!!

யாழில் இரத்தப்புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பஸ்தர் தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை போக்குவரத்துசபை முல்லைத்தீவு சாலையில் பணிபுரிந்து வந்த இவர் கடந்த 20 நாட்களாக சுகயீனமுற்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

4 தினங்களுக்கு முன்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தநிலையில் இரத்தப்புற்று நோய் காரணமாகசிகிச்சை பலனின்றி பரிதாபமாக இன்றையதினம் (15-04-2024) மாலை உயிரிழந்துள்ளார்.

அல்வாய் தெற்கு உண்டுவத்தைப் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 50 வயதான தங்கவேல் சதீஸ்குமார் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூன்றரை வயதுச் சிறுமி பரிதாப மரணம்!!

பொலன்னறுவை – அரலகங்வில ருஹுனுகம பிரதேசத்தில் நீர்த்தாங்கி தலையில் வீழ்ந்து மூன்றரை வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக அரலகங்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹிருணி ரஷ்மிகா தேவி என்ற மூன்றரை வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வீட்டு முற்றத்தில் தனது மூத்த சகோதரியுடன் விளையாடிய பின்னர், இந்த சிறுமி நீராடுவதற்காக குளியலறைக்கு சென்றுள்ளார்.

இதன்போது குளியலறையின் மேற்கூரையில் இருந்த நீர்த் தாங்கி தலையில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் அரலகங்வில பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மீண்டும் உச்சம் தொடும் தங்க விலை!!

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 713,245 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதன்படி, 24 கரட் 1 கிராம் தங்கம் 25,160 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 201,300 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்துடன் , 22 கரட் 1 கிராம் தங்கம் 23,070 ரூபாவாகவும் , 22 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 184,550 ரூபாவாகவும், 21 கரட் 1 கிராம் தங்கம் 22,020 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேவேளை , 21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 176,150 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாகவும் கொழும்பு செட்டியார்தெரு தகவல்கள் கூறுகின்றன.

யாழில் வெளிநாட்டு மோகத்தால் கோடிக்கணக்கில் பண மோசடி : தலைமறைவாகி இருந்த பெண் கைது!!

யாழ்ப்பாணத்தில் (Jaffna) வெளிநாடுகளுக்குச் செல்வதற்காகப் பணம் கொடுத்து ஏமாறும் சம்பவங்கள் அண்மைய நாள்களில் வெகுவாக அதிகரித்துள்ளன.

இந்நிலையில், வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்தவர்களிடம் சுமார் 2 கோடியே 50 இலட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மோசடி நடவடிக்கை குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகவும், வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்களை பெற்று தருவதாகவும், சமூக ஊடகங்கள் ஊடாக விளம்பரங்களை செய்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பலரிடம் சுமார் இரண்டரை கோடி ரூபாய் பணத்தினை மோசடி செய்துள்ளார்.

மோசடி தொடர்பில் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு (Jaffna District Police) கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த வேளை அந்த பெண் கொழும்பில் (Colombo) பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில், கொழும்பில் தலைமறைவாகி இருந்த நிலையில் பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அப்பெண் கொழும்பிலும் மோசடிகளில் ஈடுபட்டுள்ளாரா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதன் பின்னர் யாழ்ப்பாண பொலிஸாரிடம் அவரை கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏழைகளின் காவலன் என போற்றப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் பாலித்த தேவரப்பெரும காலமானார்!!

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும தனது 64 வயதில் இன்று காலமானார்.

வீட்டில் இரண்டு மின்சுற்றுகளை இணைக்கச் சென்ற போது மின்சாரம் தாக்கி நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துள்ளதாக குடும்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலித தெவரப்பெரும களுத்துறை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றம் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!!

முஸ்லிம் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் அறிவித்தல் வெளியாகி உள்ளது.

அந்தவகையில், நாட்டில் உள்ள முஸ்லிம் பாடசாலைகள் நாளைய தினம் (17.4.2024) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாடசாலை இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

2024 ஆம் கல்வி ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதற்கட்ட கல்வி நடவடிக்கைகள் நிறைவடைந்த நிலையில் கடந்த 10 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டது.

இதையடுத்து, பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 24ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டது.

இது அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் உள்ள சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு பொருந்தும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்திருந்தது. அதன்படி, முஸ்லிம் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவை வந்தடைந்த அன்னை பூபதியின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி : மக்கள் அஞ்சலி!!

நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டு நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி இன்று (16.04.2024) வவுனியாவை வந்தடைந்த நிலையில் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்த அன்னை பூபதியின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி வடக்கு – கிழக்கின் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள நிலையில் வவுனியாவை வந்தடைந்தது.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக நிறுத்தப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து பொங்கு தமிழ் நினைவுத்தூபி, பண்டார வன்னியன் நினைவு சதுக்கம், கோவில்குளம், ஈச்சங்குளம், வவுனியா வடக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் சென்றதுடன், அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா.ஜெயவனிதா சுடரினை ஏற்றி வைத்ததுடன், தாய்மாரால் மலர்மாலை அணிவித்ததையடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

வவுனியாவில் பொலிசார் தாக்குதல் : குடும்பஸ்தர் வைத்தியசாலையில்!!

வெளிநாட்டில் இருந்து வருகைதந்துள்ள நபர் ஒருவருடன் சேர்ந்து புளியங்குளம் பொலிசார் தன்னை தாக்கியதாக தெரிவித்து வவுனியா வைத்தியசாலையில் குடும்பஸ்தர் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றயதினம் (15.04.2024) மாலை இடம்பெற்றது. வவுனியா சின்னப்பூவரசங்குளத்தை சேர்ந்த ஒருபிள்ளையின் தந்தையே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

குறித்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்த போது, நேற்றயதினம் ஒரு விசாரணை ஒன்று இருப்பதாக புளியங்குளம் பொலிசார் என்னை அழைத்தனர். நான் அங்கு சென்றநிலையில் எனது தொலைபேசி கைப்பை என்பன பறிக்கப்பட்டு இரு கையிலும் விலங்கு போடப்பட்டது.

பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி உட்பட ஏனைய பொலிசாரும் என்னை பிடித்துவைத்திருக்க வெளிநாட்டில் இருந்து வருகைதந்திருந்த நபர் ஒருவர் பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து என்னை தாக்கியிருந்தார்.

பின்னர் நாய்போல என்னை இழுத்துச்சென்ற அவர்கள் அந்த நபரின் வாகனத்தில் ஏற்ற முற்ப்பட்டனர். இதன்போது நான் போதுமக்களின் உதவியினை நாடி பிரதான வீதியை மறித்திருந்தேன். பின்னர் மீண்டும் என்னை பொலிஸ் நிலையத்திற்குள் இழுத்துச்சென்றனர். அங்கு பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி அவரது சப்பாத்து கால்களால் எனது நெஞ்சில் தாக்கினார்.

பின்னர் அங்கு வந்த பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் என்னிடம் வாக்குமூலம் பெற்றுவிட்டு பொலிஸ் நிலையத்தில் இருந்து என்னையும் எனது மனைவி பிள்ளைகளையும் வீட்டிற்கு அனுப்பியிருந்தார். பொலிசார் தாக்கியதால் எனது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன். என்றார்.

இதேவேளை குறித்த விடயம் தொடர்பாக தாக்கப்பட்டவரின் மனைவி வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதுடன் வைத்தியசாலை பொலிசாரிடமும் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

சிலை இடிந்து விழுந்ததில் சிறுவன் பரிதாப மரணம் : இலங்கையில் நடந்த சோகம்!!

கொங்கிரீட்டால் செய்யப்பட்ட ஒட்டகச்சிவிங்கி சிலை இடிந்து விழுந்ததில் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த துரதிஷ்டவசமான சம்பவம் ஹெட்டிபொல, திக்கலகெதர பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த குழந்தை குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளது. குழந்தையின் வீட்டின் முற்றத்தில் வைக்கப்பட்டிருந்த கொங்கிரீட்டால் செய்யப்பட்ட ஒட்டகச்சிவிங்கியின் சிலையே குழந்தையின் உடலில் விழுந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில் 8 வயது சிறுவனே உயிரிழந்துள்ளான். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹெட்டிபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அவுஸ்திரேலியாவில் நடந்த கொடூரம் – இலங்கையில் இருந்து சென்றவர் பலி!!

அவுஸ்திரேலியா சிட்னி வணிக வளாகத்தில் இடம்பெற்று கத்திக் குத்து தாக்குதலில் உயிரிழந்தவர் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.

குறித்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியா சென்ற பாகிஸ்தான் அகதி ஒருவரும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.

போண்டி சந்தி வெஸ்ட்பீல்டில் பாதுகாவலராகப் பணியாற்றிய 30 வயதான முன்னாள் அகதி, கடந்த சனிக்கிழமை நடந்த கொடூரமான கத்திக்குத்துத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இலங்கையில் இருந்து ஒரு வருடத்திற்கு முன்னர் அவுஸ்திரேலியா சென்ற 30 வயதான பராஸ் தாஹிர் என்பவரே உயிரிழந்துள்ளார்.

பராஸ் அவுஸ்திரேலியாவின் அஹ்மதியா முஸ்லீம் சமூகத்தின் மதிப்புமிக்க உறுப்பினர் மட்டுமல்ல, அஹ்மதியா முஸ்லிம் இளைஞர் அமைப்பின் தொண்டு முயற்சிகளிலும் தீவிரமாக பங்களித்தார் என தெரியவந்துள்ளது.

எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் இந்த கடினமான நேரத்தில் பராஸின் குடும்பத்தினருடனும் அன்புக்குரியவர்களுடனும், உள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.