பிரித்தானியா உட்பட வெளிநாட்டிலிருந்து கொழும்பு வந்த இருவர் மர்மான முறையில் மரணம்!!

இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த பிரித்தானிய மற்றும் இந்திய பிரஜை ஒருவர் நேற்று முன்தினம் திடீரென உயிரிழந்துள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

டெரிக் சார்லஸ் என்ற 66 வயதான பிரித்தானிய பிரஜை மற்றும் 31 வயதான அபின் ஜோசப் என்ற இந்திய பிரஜை ஆகியோர் உயிரிழந்துள்ளனர். பிரித்தானிய பிரஜை கொழும்பு 3இல் உள்ள ஹோட்டலில் அவர் தங்கியிருந்த அறையில் படுக்கையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்திய பிரஜை கொழும்பு 3இல் அமைந்துள்ள C20 அடுக்குமாடி குடியிருப்பில் அவர் தங்கியிருந்த அறையின் குளியலறையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இருவரின் சடலங்களும் பொலிஸ் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், உறவினர்கள் வந்து அடையாளம் காட்டியதன் பின்னர் பிரேதப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எச்.எல்.துஷ்மந்தவின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

பாடசாலை மாணவி துஷ்பிரயோகம் : காதல் மன்னனை பொறி வைத்துப் பிடித்த பொலிஸார்!!

பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டு பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த 29 வயதுடைய இளைஞர் ஒருவரை, பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை ( 01) பதிவாகியுள்ளது . சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பண்டாரவளை கினிகம பிரதேசத்தை சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவருடன் முகநூல் ஊடாக நட்பை ஏற்படுத்தி அவரை கொழும்பில் உள்ள தங்குமிட விடுதி ஒன்றிற்கு அழைத்துச் சென்று சில நாட்களாக துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோரிடமிருந்து பண்டாரவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது .

அதற்கமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , சந்தேக நபரின் தொலைபேசி இலக்கத்தை கண்டுபிடித்து , அந்த எண்ணுக்கு பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் ஊடாக அழப்பை ஏற்படுத்து காதல் ஆசை தூண்டுவது போல் நடித்து சந்தேக நபருடன் உறவை வளர்த்துள்ளனர் .

சுமார் இரண்டு வாரங்களாக , பெண் பொலிஸ் அதிகாரி தனக்கு வேலை ஒன்று தேடித்தருவதாக கோரியுள்ளார்.

இதனையடுத்து சந்தேக நபர், வெலிமடை பிரதேசத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு வருவதாகவும் , அப்போது பண்டாரவளையில் சந்தித்து , கொழும்புக்கு செல்வோம் எனவும் கூறியுள்ளார். பின்னர் இடத்தை மாற்றி பலாங்கொடை பஸ் நிலையத்திற்கு வருமாறு பெண் பொலிஸ் அதிகாரியிடம் சந்தேகநபர் கூறியுள்ளார்.

அதற்கமைய இரண்டு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு , சந்தேக நபரை பலாங்கொடையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த பேருந்தில் வைத்து கைது செய்துள்ளனர் .

மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்துள்ள்ளனர் .

கேக் சாப்பிட்ட 10 வயது சிறுமி பரிதாபமாக பலி.. பிறந்தநாளில் நடந்த சோகம்!!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஓன்லைனில் ஓர்டர் செய்யப்பட்ட கேக்கை சாப்பிட 10 வயது சிறுமி சில மணி நேரத்திலேயே உயிரிழந்தார். தற்போதைய காலத்தில் நாம் எந்தவொரு பொருள் வாங்கினாலும் அதனை ஓன்லைன் (Online) மூலமாகவே ஓர்டர் செய்து வாங்குகிறோம்.

வீட்டில் இருந்த படியே நமக்கு தேவையான பொருட்களை வாங்கும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. ஆனால், சில நேரங்களில் நடைபெறும் சம்பவங்கள் சோகத்தையும் ஏற்படுத்துகிறது.

இந்திய மாநிலமான பஞ்சாப், பாட்டியாலாவைச் சேர்ந்த 10 வயது சிறுமி மான்வி தனது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு பிறந்த நாளை கொண்டாடுவதற்காக குடும்பத்தினர் ஓன்லைன் மூலமாக கேக்கை வாங்கி இரவு 7 மணிக்கு கொண்டாடினர்.

அப்போது, அன்று இரவு 10 மணிக்கு கேக் சாப்பிட்ட மான்வி உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் வாந்தி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவரது தாத்தா கூறும்போது, “இரவு 10 மணிக்கு மான்வி மற்றும் அவரது சகோதரிக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டது. மேலும், அவரது தாய் உலர்வதாக கூறினார்.

காலையில் மான்வியின் உடல் நிலை மோசமாக இருந்ததால் மருத்துவமனையில் சேர்த்தனர். மான்விக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்” என்றார். ஓன்லைன் மூலமாக ஓர்டர் செய்த கேக் கெட்டு போனதால் சிறுமிக்கு இப்படி நடந்துள்ளது என்று குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

மேலும், இது சம்பந்தமாக பேக்கரி உரிமையாளருக்கு எதிராக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சிறுமி மான்வியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தங்க நகை வாங்கவுள்ளவர்களுக்கான செய்தி : விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 166500 ரூபாவாக பதிவாகியுள்ளதென தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில தினங்களுடன் ஒப்பிடுகையில், தங்கத்தின் விலை இன்று (01.04.2024) சற்று அதிகரிப்பினை பதிவுசெய்துள்ளதாக தெரியவருகிறது.

இதன்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 180000 ரூபாவாக பதிவாகியுள்ளது. 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 22,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 166,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 20,812 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமான கொண்ட யுவதி!!

இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக்கொண்ட அமுருதா சுரேன்குமார் இடம்பிடித்துள்ளார். அமுருதா சுரேன்குமார் இங்கிலாந்து 19 வயதுக்கு உட்பட்ட தேசிய அணியில் இடம்பிடித்துள்ளார். அமுருதா சுரேன்குமார் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்றுள்ளார்.

இங்கிலாந்து 19 வயதுக்கு உட்பட்ட மகளிர் அணி தற்பொழுது இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இலங்கை 19 வயதுக்கு உட்கட்ட மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் அமுருதா சுரேன்குமார் களமிறங்கியிருந்தார்.

பந்து வீச்சில் மூன்று ஓவர்களை வீசி 24 ஓட்டங்களை கொடுத்திருந்ததுடன் துடுப்பாட்டத்தில் ஓட்டமெதுவும் பெறாது அமுருதா சுரேன்குமார் ஆட்டமிழந்தார். அமுர்தாவின் தந்தையான சிவா சுரேன்குமார், யாழ்ப்பாணம் புனித ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.

இந்நிலையில் இலங்கையில் இருந்திருந்தால் அமுருதா சுரேன்குமார் கிரிகெட்டில் நுழைய விட்டிருப்பார்களோ தெரியாது. ஆனால் புலம்பெயர்ந்து சென்று இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக்கொண்ட அமுர்தா சுரேன்குமார் அமுருதா சுரேன்குமார் ஈழதமிழர்களுக்கு பெருமையாகும்.

வெளிநாட்டவருடன் இலங்கை வந்த மனைவி : கணவன் எடுத்த விபரீத முடிவு!!

குவைத்தில் இருந்து தான் வேலை செய்த வீட்டின் உரிமையாளரை மனைவி நாட்டிற்கு அழைத்து வந்தமையினால் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன் இன்று அதிகாலை வீட்டிற்கு தீ வைத்துள்ளார்.

குவைத் நாட்டை சேர்ந்த 80 வயது முதியவரை மனைவி அழைத்து வந்த நிலையில், தங்கும் இடம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்போது கணவன் வீட்டிற்கு தீ வைத்துவிட்டு பிரதேசத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர் மொனராகலை மாவட்ட உள்ளூராட்சி சபையின் சாரதி எனவும், அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த தீ விபத்தில் காயமடைந்த குவைத் நாட்டவர் மற்றும் சந்தேகநபரின் மனைவி ஆகியோர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிபில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிபில பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் அடங்கிய குழு தீயை அணைத்துள்ளதுடன், வீடு மற்றும் உடமைகள் பலத்த சேதமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வெளிநாட்டு பெண் ஒருவரை காப்பாற்றிய இலங்கை வங்கி ஊழியர்!!

அவுஸ்திரேலியாவில் (Australia) சமூக ஊடகங்கள் ஊடாக சந்தித்த நபர் ஒருவரால் நிதி மோசடியில் சிக்கிய மெல்பேர்னில் வசிக்கும் பெண் ஒருவரை இலங்கை வங்கி அதிகாரி ஒருவர் காப்பாற்றியுள்ளார்.

குறித்த பெண் தனது காதலன் என்று கூறிக்கொண்ட வெளிநாட்டவருக்கு பணம் அனுப்புவதற்காக அவுஸ்திரேலிய தேசிய வங்கியின் (NAB) மெல்பேர்ன் கிளைக்கு சென்றுள்ளார்.

ஆனால் அந்த வங்கியின் வாடிக்கையாளர் ஆலோசகர் அதிகாரியாக இருந்த இலங்கையைச் சேர்ந்த டிலான் பத்திரனவிடம் இந்த பெண் வழங்கிய தகவல் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், மேலதிக விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

60 வயதான பெண்மணி வங்கிக்கு சென்று பணம் அனுப்ப உதவி தேவை என்று கூறினார். ஆனால் பெறுநரின் குடும்பப்பெயர் தனக்குத் தெரியாது என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேற்கொண்ட விசாரணையில் அதுவொரு மோசடி நபர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட பெண் : சந்தேக நபர்கள் கைது!!

கொழும்பு (Colombo) புறநகர் பகுதியில் வீடொன்றில் வைத்து பெண் ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் குறித்த பெண்ணின் உறவினர் உள்ளிட்ட இருவர் கடுவெல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடுவெல, கொரத்தோட்டை, பட்டியவத்த வீதியிலுள்ள வீடொன்றில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தில் கைது செய்யப்பட்ட உறவினர், உயிரிழந்த பெண்ணின் வீட்டுக்கு அயல் வீட்டில் வசித்து வருபவராகும்.

கைது செய்யப்பட்ட குறித்த நபருக்கு 38 வயதென பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவருடன் கைது செய்யப்பட்டுள்ள மற்றைய நபர் சந்தேகநபரின் வீட்டிற்கு பழுதுபார்க்க வந்தவராகும்.

இதன்போது, இரண்டு பிள்ளைகளின் தாயான அஜந்தா கடுகம்பலா என்ற பெண் கடந்த புதன்கிழமை காலை தனது வீட்டில் தலையில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.

அவர் அணிந்திருந்த சில தங்க ஆபரணங்களும் காணாமல் போயிருந்ததாகவும், சந்தேகநபர்களிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் உயிரிழந்த பெண்ணின் கைத்தொலைபேசியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

15 பேருடன் 70 அடி பள்ளத்தில் பாய்ந்த ஜீப் வண்டி!!

கம்பளை தெல்பிடிய பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி சுமார் 75 அடி பள்ளத்தில் வீழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை 4 மணியளவில் பொலெரோ வகை ஜீப் வண்டி ,பண்டாரவளையில் இருந்து ரம்புக்கனை நோக்கி பயணித்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஜீப் வண்டியில் 15 பேர் பயணித்த நிலையில் ,10 பேர் காயமடைந்த நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரவளை பிரதேசத்தில் இடம்பெற்ற மரண வீட்டில் கலந்து கொண்டு திரும்பிய குழுவினரின் பயணித்த ஜீப் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் மரணம்!!

வவுனியா(Vavuniya) சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (31.03.2024) இடம்பெற்றுள்ளது. ஜாஎல பகுதியைச் சேர்ந்த 34 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குற்றச் செயல் ஒன்று தொடர்பில் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில், வைத்தியசாலையில் குறித்த கைதிக்கு சிகிச்சை வழங்கப்பட்ட போதும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். மாரடைப்பு காரணமாகவே குறித்த மரணம் இடம்பெற்றுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

லிட்ரோ எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டது : சற்று முன் வெளியான அறிவிப்பு!!

லிட்ரோ எரிவாயு (Litro Gas) எரிவாயுவின் விலை இன்று (01) நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் (Muditha Peiris) தெரிவித்துள்ளார்.

12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 135 ரூபா குறைக்கப்படும் நிலையில் புதிய விலை 4115 ரூபாவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை ரூபா 55 குறைக்கப்பட்டுள்ளது. எனவே அதன் புதிய விலை 1,652 ரூபாவாகும்.

மேலும், 2.3 கிலோகிராம் சிலிண்டரின் விலை 23 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 772 ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.

நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைப்பு!!

இன்று நள்ளிரவு (31.03.2024) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 95 ஒக்டேன் பெட்ரோல் 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 440 ரூபாவாகும்.

மண்ணெண்ணெய் லீட்டருக்கு 12 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 245 ரூபாவாகும். 92 ஒக்டேன் பெட்ரோல் மற்றும் ஒட்டோ டீசல் விலை மாற்றமில்லை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எனினும், டீசல் மற்றும் ஒக்டேன் 92 பெட்ரோல் ஆகியவற்றின் விலை குறைக்கப்படவில்லை. எவ்வாறாயினும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வருக்கு நேர்ந்த விபரீதம் : ஆசிரியை பலி : மூவர் வைத்தியசாலையில்!!

எம்பிலிபிட்டிய (Embellipitia) நோனகம வீதியில் இன்று (31.03) இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் தாய் உயிரிழந்துள்ளதுடன் தந்தை மற்றும் இரு பிள்ளைகள் காயமடைந்துள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பில் இருந்து ஹம்பாந்தோட்டையில் உள்ள வீட்டிற்குச்சென்று கொண்டிருந்த போது காரின் முன் இருக்கையில் இருந்த மனைவி தூங்கியதால், கார் வீதியின் எதிர்புறமாக சென்று வீதிக்கு அருகில் இருந்த மரத்தில் மோதியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவில வீதியில் வசிக்கும் மாத்தறையில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் பணிபுரியும் சமந்திகா ஜயசிங்க என்ற 51 வயதுடைய ஆசிரியை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பலாந்தோட்டையில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபரான உயிரிழந்த ஆசிரியையின் கணவர், அம்பலாந்தோட்டை அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் காயமடைந்த 20 மற்றும் 16 வயதுடைய இரண்டு பிள்ளைகளும் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆசனவாயில் காற்று நிரப்பி விளையாட்டு.. குடல் வெடித்து உயிரிழந்த இளைஞன்.. இலங்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

தென்னிலங்கை தனியார் நிறுவனமொன்றின் பழுதுபார்ப்பு பிரிவில் பணிபுரியும் ஊழியர் ஒருவரின் ஆசனவாயில் விளையாட்டாக காற்று நிரப்பும் இயந்திரக் குழாயை செருகி காற்று நிரப்பியதால், அவர் குடல் வெடித்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் நிறுவனத்தில் பணியாற்றிய பாணந்துறை அலுபோமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த தேஷான் மதுஷங்க என்ற 24 வயதுடைய இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த திங்கட்கிழமை (25ஆம் திகதி) பிற்பகல், அதே நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு ஊழியர்கள், உயிரிழந்த ஊழியரின் ஆசனவாயில் விளையாட்டாக காற்று நிரப்பும் இயந்திரத்தின் குழாயை பிடித்துள்ளனர்.

இதன்போது, குழாய் செருகுப்பட்டு, உடனடியாக அகற்ற முடியாமல் போனது. அத்துடன், அதிக அழுத்தத்தில் காற்று உட்செலுத்தப்பட்டதால் குடல் வெடித்து ஊழியர் உயிரிழந்தார்.

இந்நிலையில் உயிரிழந்த ஊழியரின் பிரேத பரிசோதனை நேற்று (29ம் திகதி) ராகம வைத்தியசாலையில் நடைபெறவிருந்தது. இந்நிலையில் சம்பவம் தொடர்புடைய இரு தொழிலாளர்களை சப்புகஸ்கந்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய தொழிலாளர்கள் இருவரும் திஸ்ஸமஹாராமய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

யாழில் மனைவியின் கல்லறையில் கேக் வெட்டிக் கொண்டாடிய கணவன் : நெகிழ்ச்சிக் காரணம்!!

யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த இளம் மனைவிக்காக கணவன் அவரது கல்லறையில் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் பலருக்கு ஆச்சரியர்த்தை ஏற்படுத்தி இருந்தாலும், அதன் காரணம் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களின் முன்பு யாழில் இளம் குடும்ப பெண் திருமணமாக ஒரு வருடத்தில் புற்று நோயால் உயிரிழந்திருந்தார். சம்பவத்தில் யாழ்ப்பாணம் பளை பகுதியை சேர்ந்த பெண்ணெ உயிரிழந்திருந்தார்.

கடந்த வருடம் அப்பெண்னுக்கு திருமணமான நிலையில், கணவனும் , மனைவியும் டிக்டொக்கில் பிரபலமானவ்ர்கள் என கூறப்படுகின்றது. உயிரிழந்த பெண் , தமது டிக்டொக் பாலோவேர்ஸ் ஒரு மில்லியன் வந்தவுடன், கேக் வெட்டி கொண்டாட வேண்டுமென கணவரிடம் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் காணொளி ஒரு மில்லியன் பாலோவேர்ஸ் வருவதற்கு முன்னரே யுவதி புற்றுநோயால் உயிரிழந்து விட்டார். எனினும் அவர் உயிரிழந்த சில நாட்களில் அவர்களின் டிக்டொக் பாலோவேர்ஸ் ஒரு மில்லியனை தொட்டுள்ளது.

இதனையடுத்து மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற நினைத்த கணவர், யுவதியின் கல்லறையில் வைத்து கேக் வெட்டி அதனை கொண்டாடியதுடன், அக்காணொளியையும் வெளியிட்டுள்ளார்.

ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற இளம் பெண் : இளைஞர்கள் செய்த செயல்!!

மகாவலி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணின் உயிரை இளைஞர்கள் குழு ஒன்று காப்பாற்றியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த யுவதி நேற்று (29.03.2024) இரவு 7.00 மணியளவில் மஹியங்கனை – கண்டி ஏ26 வீதியில் மகாவலி ஆற்றின் வேரகங்தொட்ட பாலத்தில் இருந்து ஆற்றில் குதிக்க முயற்சித்துள்ளார்.

பாலத்தின் கொன்கிரீட் தடுப்பின் மேல் ஏறி ஆற்றில் குதிக்க தயாராக இருந்த குறித்த யுவதியை கண்ட இளைஞர்கள் குழு ஒன்று அவரை காப்பாற்ற ஓடி வந்த போது யுவதி ஆற்றில் குதித்துள்ளார்.

அதன் பின்னர், இளைஞர்கள் குழு யுவதியை மீட்டு மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். குறித்த பெண் பாலத்திற்கு வந்த பைக் மற்றும் அவரது கைப்பேசி பாலத்தின் மேல் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பொலிசார் அவற்றை கைப்பற்றி, தொலைபேசியில் உள்ள எண்களுக்கு அழைத்து, சம்பவம் தொடர்பில் அவரது பெற்றோருக்கு தெரிவித்தனர். மினிபே பகுதியை சேர்ந்த யுவதி சில காலமாக மனநோயினால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.