தோழியின் பிறந்தநாளுக்குச் சென்ற சிறுமி தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்க்கப்பட்ட அதிர்ச்சி!!

கோவையில் பிறந்தநாள் விழாவிற்கு சென்ற 8 வயது சிறுமி வீட்டின் தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பேரூர் அருகே உள்ள பச்சாபாளையம் பகுதியில் வசித்து வருபவர்கள் செண்பகவல்லி-வீரன் தம்பதி. விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இவர்களுக்கு 10 வயது ஆண் குழந்தை மற்றும் 8 வயது பெண் குழந்தை கோகுலப்பிரியா ஆகியோர் உள்ளனர்.

நேற்று இரவு அதே பகுதியில் வசிக்கும் வான்மதி என்பவரது வீட்டில் பிறந்தநாள் விழா நடைபெற்றுள்ளது. இதற்காக சிறுமி கோகுல பிரியாவும் சென்றுள்ளார்.

நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வீடு திரும்பாததால் சிறுமியின் பெற்றோர் வான்மதி வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளனர். அப்போது கோகுலப்பிரியா ஏற்கெனவே வீட்டிற்கு சென்று விட்டதாக வான்மதி கூறியுள்ளார்.

ஆனால் சிறுமி வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் வீட்டை சுற்றிலும் தேடி உள்ளனர். அப்போது வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டி அருகே தண்ணீர் சிந்திக் கிடப்பதை பார்த்து கோகுல பிரியாவின் பெற்றோர் சந்தேகம் அடைந்துள்ளனர்.

தண்ணீர் தொட்டியை திறக்கும்படி கூறிய போது, வான்மதி முதலில் மறுத்ததாக கூறப்படுகிறது. நீண்ட நேரத்திற்கு பிறகு தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்தபோது உள்ளே கோகுலபிரியா சடலமாக மிதந்தது தெரியவந்தது.

உடனடியாக அவரது உடலை மீட்டு பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் சிறுமி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்த மருத்துவர்கள், குழந்தையின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனிடையே தங்களது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக செண்பகவல்லி, பேரூர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக போலீஸார் தற்போது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சுற்றுவட்டார பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளம்பெண்ணை 25 முறை கத்தியால் குத்திக் கொலை : கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எடியூரில் வசித்து வருபவர் கிரீஷ் என்ற ரியான் கான். 35 வயதாகும் இவர் பெங்களூருவில் கார் ஓட்டி வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கு கணவரை இழந்த 42 பரிதா கானத்துடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.பெங்களூரு ஜெயநகரில் உள்ள மசாஜ் சென்டரில் பரிதா கானம் வேலை பார்த்து வந்தார். பரிதா கானத்திற்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இவருடைய் முதல் மகள் கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்நிலையில், பரிதா கானத்தை திருமணம் செய்துகொள்ள கிரீஷ் முடிவு செய்தார். இதனையடுத்து ஜெயநகரில் உள்ள ஷாலினி பூங்காவில் வைத்து கிரீஷ் , பரிதா கானம் இருவரும் பேசிக் கொண்டு இருந்தனார்.

கிரீஷ் மசாஜ் சென்டர் வேலையை விட்டுவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார். இதற்கு பரிதா கானம் தனக்கு 2 பிள்ளைகள் உள்ளதால் திருமணம் செய்து கொள்ள முடியாது எனக் கூறியுள்ளார்.

ஆத்திரம் அடைந்த கிரீஷ், தான் மறைத்து வைத்திந்த கத்தியால் பரிதா கானத்தை 25 இடங்களில் சரமாரியாக குத்தி கொலை செய்தார். தானாகவே காவல்நிலையத்தில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், எடியூரில் வசித்து வரும் கிரீசுக்கு திருமணமாகவில்லை.

இந்து மதத்தை சேர்ந்த அவர் 2011ல் முஸ்லிம் மதத்திற்கு மாறி தனது பெயரையும் ரியான் கான் என மாற்றிக் கொண்டார். கிரீசுக்கும், அவரது தங்கைக்கும் திருமணத்துக்கு வரன் கிடைக்காததால் மீண்டும் இந்து மதத்திற்கு கிரீஷ் மாறினார்.

இந்நிலையில் 2022ல் கிரீசுக்கு பரிதா கானத்துடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. திருமணத்திற்கு பரிதா கானம் மறுப்பு தெரிவிக்கவே அவரை 25 முறை கத்தியால் குத்தி கிரீஷ் கொடூரமாக செய்துள்ளார். இதனை வாக்குமூலமாக அளித்து கிரீஷ் தானாகவே காவல்நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.

இளம்பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் தீவிர விசாரணை!!

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் மேப்பாடியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தவர் ஃபெலீஸ் நசீர் (31).

கோழிக்கோடு ஃபெரோக் பகுதியைச் சேர்ந்த டாக்டர் கேஇ ஃபெலிஸ் நசீர் (31) நேற்று மாலை, தான் பணிபுரிந்து வரும் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டார்.

ஃபெலிஸ் பொது அறுவை சிகிச்சை துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். தூக்கில் தொங்கிய நிலையில், ஃபெலிஸைக் கண்டதும், அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே அவர் உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர்.

இளம்பெண் மருத்துவர், தான் பணிபுரிந்த மருத்துவமனை குடியிருப்பு பகுதியிலேயே தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்த தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஃபெலிஸ் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு, வழக்குப் பதிவு செய்து, ஃபெலிஸ் மரணத்திற்கான காரணம் குறித்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

காதலன் விபத்தில் பலி.. பிரிவை தாங்கமுடியாமல் காதலி எடுத்த விபரீத முடிவு!!

கோவை பெரியநாயக்கன்பாளையம் பூங்கா நகரில் வசித்து வருபவர் ஈஸ்வரன். இவருடைய மகள் தர்ஷினி வயது 21 இவர் நரசிம்ம நாயக்கன்பாளையம் அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.

அதே நிறுவனத்தில் சோமனூர் திவாகரும் பணிபுரிந்து வந்தார். இவருக்கு வயது 24. இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் ஒரு கட்டத்தில் காதலாக மாறியது.

இவர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்தனர். திவாகர், தனது நிறுவனத்தில் பணியை முடித்து விட்டு சிங்காநல்லூர் பைபாஸ் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது திடீரென எதிரில் வந்த வாகனம் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த திவாகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் திவாகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதை அறிந்த அவரது காதலி தர்ஷினி கதறி அழுதுகொண்டே மருத்துவமனைக்கு சென்று திவாகர் உடலை பார்த்தார். அவருடைய உறவினர்கள் எத்தனையோ ஆறுதல் கூறியும் தர்ஷினி கதறியதை நிறுத்தவே இல்லை.

அழுது கொண்டே வீட்டிற்கு சென்ற தர்ஷினி தனது அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலை விபத்தில் காதலன் உயிரிழந்ததால் காதலி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மனைவி, மகன், மகளை கொலை செய்து உடல்களுடன் 3 நாட்கள் உறங்கிய கணவர்!!

உத்தரப்பிரதேச மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தின் ரத்தன்பூர் கிராமத்தில் வசித்துவருபவர் ராம் லகன் கவுதம். இவர் மார்ச் 15ம் தேதி தனது மனைவி ஜோதி, 6 வயது மகள் பயல் , 3 வயது மகன் ஆனந்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

ஜோதிக்கு கள்ளத்தொடர்பு இருந்ததாக சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து கௌதம் தனது மனைவியுடன் அடிக்கடி சண்டை போட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். 14 ஆண்டுகளுக்கு முன் மும்பை கல்யாண்பூரில் பணிபுரிந்து வந்த ஜோதியை காதல் திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் லக்னோவில் வசித்து வந்த நிலையில் சரோஜினி நகர் கவுரி பஜார் பகுதியில் கொத்தனார் வேலைக்கு சென்று வந்தார். அதே பகுதியில் வாடகைக்கு ஒரு வீடு எடுத்து தங்கியுள்ளனர். மார்ச் 28ம் தேதி வியாழக்கிழமை தம்பதிகளிடையே பெரும் தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரத்தில் கௌதம் நீண்ட நேரம் திட்டிக் கொண்டே இருந்துவிட்டு தூங்கிவிட்டார். நள்ளிரவு எழுந்து தூங்கிக் கொண்டிருந்த ஜோதியை சேலையால் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

தனது கைகளால் பாயல் மற்றும் ஆனந்த்தையும் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். மறுநாள் காலை அவர் கதவை பூட்டிவிட்டு வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார்.

யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க, அடுத்த 3 நாட்களுக்கும் அதே போல தினமும் காலை வேளைக்கு சென்று திரும்பினார். இவரது வீட்டில் இருந்து 2 நாட்களாக துர்நாற்றம் வீசுவதாக காவல்துறையில் அக்கம் பக்கத்தினர் புகார் அளித்தனர்.

ஆனால் கொத்தனார் வழக்கம் காலை வேலைக்கு சென்றதையும் பார்த்துள்ளனர். இந்த புகாரின் பேரில் போலீசார் அவரது வீட்டிற்கு சென்று கதவை உடைத்து பார்த்த போது அவரது மனைவியும் 2 குழந்தைகளும் உயிரிழந்த நிலையில் பிணமாக காணப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

கொத்தனார் தனது மனைவி, மற்றும் 2 குழந்தைகளை கொன்று, 3 நாட்கள் அவர்கள் உடல்கள் கிடந்த அதே அறையில் உறங்கிவிட்டு, தினமும் வழக்கம் போல் பணிக்கு சென்றுள்ளார். போலீசார் அறையின் பூட்டை உடைத்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளம் பெண்ணை கொலை செய்து போலீசில் சரணடைந்த காதலன்!!

பெங்களூருவில் தனது காதலியை பட்டப்பகலில் பொதுவெளியில் குத்தி கொலை செய்திருக்கிறார் கார் டிரைவர். கொலை செய்ததும் போலீஸ் ஸ்டேஷன் சென்று சரணடைந்து வாக்குமூலமும் கொடுத்திருக்கிறார்.

பெங்களூருவில் கால் டாக்சி ஓட்டுநராக இருக்கிறார் 35 வயதான கிரிஷ். சிரிஷ் பெங்களூரு ஜெயாநகரைச் சேர்ந்தவர். இவர் 42 வயதான மேற்கு வங்க பெண்ணான பரிதா கத்துன் என்பவரை காதலித்து வந்தார். இந்த பெண் பெங்களூருவில் இருக்கும் ஒரு ஸ்பாவில் பணி செய்துவந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், கொலை செய்த கிரிஷ் கடந்த 2011ல் அவரது தங்கைக்கு மாப்பிள்ளை கிடைக்க வேண்டும் என இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். சில வருடங்களில் தனது உண்மையான பெயரான கிரிஷ் என்கிற பெயரிலேயே சில இஸ்லாமிய பழக்கவழக்கங்களை மேற்கொண்டு இருக்கிறார்.

கிரிஷ் காதலித்த பரிதா ஏற்கனவே திருமணமானவர். இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் இருக்கிறார்கள். சொந்த மாநிலமான மேற்கு வங்கம் சென்றிருந்த பரிதா கடந்த மார்ச் 26 அன்று அவரது மகள்களுடன் பெங்களூரு திரும்பினார். மார்ச் 29 கிரிஷின் பிறந்தநாளை கொண்டாட வேண்டுமெனவும் நினைத்திருக்கிறார் பரிதா.

மேலும், மூத்த மகளுக்கு கல்லூரியையும் தேடியிருக்கிறார் பரிதா. சம்பவம் நடந்த நாளன்று, பரிதா மற்றும் அவரது மகள்களை கிரிஷ் ஷாப்பிங் மற்றும் உணவு சாப்பிட அழைத்து சென்றிருக்கிறார். பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.

அன்று மாலை, ஷாலினி கிரௌண்ட்ஸ் என்கிற இடத்தில் கிரிஷ் தனது காதலை பரிதாவிடம் வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படியும் கிரிஷ் பரிதாவிடம் கேட்டு இருக்கிறார். ஆனால், பரிதா திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.

இது இருவருக்கும் வாக்குவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உடனே ஆத்திரமடைந்த கிரிஷ் கத்தியால் பல முறை பரிதாவை குத்தி இருக்கிறார். அதில், சம்பவ இடத்திலேயே பரிதா பரிதாபமாக இறந்திருக்கிறார். கொலை செய்த கையேடு ஜெயாநகர் காவல் நிலையத்தில் சரணடைந்திருக்கிறார் கிரிஷ். அந்த வகையில், கிரிஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தார்கள்.

இரவு 8:30 மணியளவில் ஷாலினி கிரௌண்ட்ஸ் படியில் பெண்ணின் உடல் இருப்பதாக போலீசுக்கு அழைப்பு வந்துள்ளது. அதன்படி, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்து பரிதாவின் உடலில் இருந்த காயங்களை பார்த்தார்கள். இந்த கொலை செய்ததற்க்காக விசாரணையையும் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

கிரிஷ் மற்றும் பரிதா கடந்த பாத்து ஆண்டுகளாக உறவில் இருந்திருக்கிறார்கள். ஆனால், பரிதா கிரிஷை திருமணம் செய்ய மறுத்திருக்கிறார். இதுவே கொலைக்கான காரணமாக இருக்கும் என்கிறார்கள் போலீசார்.

மேலும், சம்பவம் நடந்த இடத்திலும் இருவரும் தங்கியிருக்கும் இருப்பிடத்தில் இருப்பவர்களிடமும் விசாரணையை மேற்கொண்டு இருக்கிறார்கள் போலீசார். மேலும், இந்த கொலைக்கு பின்னால் வேறு காரணங்கள் இருக்குமா என்கிற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

கனடாவில் பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணை தேடும் பொலிஸார்!!

கனடாவில் வீடுகளை வாடகைக்கு விடுவதாக ஏமாற்றி மக்களிடம் பண மோசடி செய்த பெண் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் தேடி வருகின்றனர். குறித்த பெண் எவ்வித அதிகாரமும் இன்றி, வீடுகளை வாடகைக்கு விடுவதாக கூறி பணத்தை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

லாரிசா ரீசென்டென்ஸ் லோபஸ் என்ற 26 வயதான பெண்ணே இவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் குடியிருப்புக்களை வாடகைக்கு விடுவதாக இந்தப் பெண் இணைய தளங்களில் விளம்பரம் செய்துள்ளார்.

இந்நிலையில் அதிகமானோர் இந்த மோசடியில் சிக்கியுள்ளதாகவும், மோசடியில் சிக்கியோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வலி தாங்க முடியவில்லை… யாழில் விபரீத முடிவெடுத்த குடும்பஸ்தர்!!

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் கண் மற்றும் கால் வலி காரணமாக தவறான முடிவெடுத்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் புதிய செம்மணி வீதி, கல்வியங்காடு பகுதியை சேர்ந்த 65 வயதான கோபால் புஸ்பராசா என்ற 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த நபர் சில காலங்களுக்கு முன்னர் கீழே விழுந்த நிலையில் 2 கால்களிலும் சத்திரசிகிச்சை செய்யப்பட்டு கிளிப் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இவருக்கு கண் வலியும் காணப்படுகிறது.

இந்த நிலையில் 2 வலிகளும் தாங்க முடியாத நிலையில் அவரது வீட்டில் உள்ள மாட்டு கொட்டகையில் தூக்கிட்டு கொண்டுள்ளார். குறித்த நபரை அவர் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வேளை இடையில் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

யாழில் தறிகெட்டு ஓடிய மோட்டார் சைக்கிள் வீட்டுக்குள் நுழைந்தது : இருவருக்கு நேர்ந்த கதி!!

யாழ் இராசாவின் தோட்டப் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வாசல் கதவினை பிரிந்து உள்ளே நுழைந்தது விபத்துக்குள்ளானது.

யாழ் ஆரியகுளப் பகுதியில் இருந்து வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் அருகில் இருந்த வீட்டின் மூடிய வாயில் கதவினை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றது.

இந்த விபத்தில் காயமடைந்த இருவரும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

யாழ்ப்பாணத்தில் மட்டக்களப்பு இளைஞன் சடலமாக மீட்பு!!

யாழ் கொழும்புத்துறை கடற்கரையில் இளைஞர் ஒருவர் இன்றையதினம் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு பெரியகல்லாறு ஓடக்கரையைச் சேர்ந்த 19 வயதான ரவீந்திரன் யதுசன் என்பவரே உயிரிழந்தார்.

நேற்றையதினம் மட்டி எடுப்பதற்கு கடலுக்குள் சென்றவர் காணாமல்போன நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

சடலங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உடல்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரியவருகின்றது.

வவுனியாவில் மூன்று பிள்ளைகளின் தந்தை கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!!

வவுனியா செட்டிக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று (01.04.2024) மாலை கிணற்றிலிருந்து மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரின் சடலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

அவரது வீட்டிலிலுள்ள கிணற்றிக்கு பக்கத்திலுள்ள வாழை மரத்தின் வாழைக்குலையினை வெட்ட முற்பட்ட சமயத்தில் தவறி கிணற்றிலினுள் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவருகின்றது.

சம்பவ இடத்திற்கு சென்ற செட்டிக்குளம் பொலிஸார் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தமையுடன் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குழந்தை இல்லாத காரணத்தால் தினமும் சண்டை.. மனமுடைந்த இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

குழந்தை இல்லாத காரணத்தினால் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பெண்ணின் கணவரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த விளாப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனுவாசன் (28). இவரது மனைவி சந்தியா (23). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. தம்பதிக்கு இன்னும் குழந்தைகள் இல்லை.

இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் சீனுவாசன் மற்றும் அவரது பெற்றோர் நடராஜன் மற்றும் எல்லம்மாள் ஆகியோர் குழந்தை இல்லாத காரணத்தை கூறி சந்தியாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தனர். இது தொடர்பாக போளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சந்தியா ஏற்கனவே புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 20ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் விரக்தியடைந்த சந்தியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து சந்தியாவின் தாய் வெங்கடேஸ்வரி, போளூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ஹேமாவதி வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், இது குறித்து விசாரணை நடத்த போலீசார் பரிந்துரை செய்தனர்.

இந்நிலையில், பிரேத பரிசோதனைக்கு பின், கடந்த 24ம் தேதி, உடல் ஓகூர் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த சந்தியாவின் உறவினர்கள், இது தற்கொலை இல்லை .

சந்தியாவை அவரது கணவர் சீனுவாசன் வரதட்சனால் கொடூரமாக தாக்கி அதன் உச்சக்கட்டத்தில் மனைவியை தீ வைத்து எரித்து கொன்றார். அவரை கைது செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என முருகபாடி கூட்ரோடு சாலையில் ஒரு மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போளூர் டிஎஸ்பி சி.நல்லு, இந்த வழக்கு தொடர்பாக கோட்டாட்சியரிடம் விசாரணை நிறைவடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

அவரது அறிக்கை கிடைத்த பிறகே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர். இதையடுத்து கோட்டாட்சியரின் விசாரணையின் அடிப்படையில் போளூர் போலீசார் நேற்று சீனுவாசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், சந்தியா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது எரித்து கொலை செய்யப்பட்டரா? என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

’என்னை ஏமாத்திட்டாங்க’.. மனைவி மீது பாகிஸ்தான் கணவர் பரபரப்புப் புகார்!!

சீமா ஹைதரின் பாகிஸ்தான் கணவர் குலாம் ஹைதர், இந்தியாவில் உள்ள நொய்டா நீதிமன்றத்தில் சீமா மற்றும் அவரது இந்திய கணவர் சச்சின் மீது மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் நடந்து வரும் விசாரணையும், விவாதங்களும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

பாகிஸ்தானின் சீமா ஹைதர்-இந்தியாவின் சச்சின் மீனா காதல் திருமணத்தில் முடிந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிறது. கடந்த ஆண்டு மே மாதம் இணையத்தில் இருவரும் சந்தித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

பின்னர் நேபாளத்தில் திருமணம் செய்து கொண்டனர். சச்சின் உடன் வாழ பாகிஸ்தானின் சீமா ஹைதர் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தார்.

இப்போது சீமா ஹைதரின் பாகிஸ்தான் கணவர் குலாம் ஹைதர், நொய்டா நீதிமன்றத்தில் அவரது மனைவி சீமா மற்றும் அவரது இந்தியக் கணவருக்கு எதிராக ‘திட்டமிட்டு என்னை ஏமாற்றிவிட்டார்கள்’ எனக் கூறி வழக்கு தொடர்ந்துள்ளார்.

குலாம் ஹைதரின் இந்திய வழக்கறிஞர் மோமின் மாலிக், குற்றவியல் சட்டத்தின் 156(3) பிரிவின் கீழ் சீமா-சச்சின் தம்பதிக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கினார்.

அவரிடமிருந்து முறையாக விவாகரத்து பெறாமல் மனைவி சீமா இந்தியாவில் திருமணம் செய்து கொண்டதாகவும், இதனால் அவரது புதிய திருமணம் செல்லாது என்றும் நொய்டா நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்ற விசாரணையின் போது, சச்சினை திருமணம் செய்து கொண்டதாக சீமா பகிரங்கமாக தெரிவித்தார். ஆனால் சீமா சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததாகக் கைது செய்யப்பட்டபோது,

அதற்கான ஜாமீன் மனுவில், குலாம் ஹைதரை தனது கணவர் என சீமா அடையாளம் காட்டி, குலாம் ஹைதரின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முக்கிய வாதத்தை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக ஏப்ரல் 18ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நொய்டா காவல்துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சீமா-சச்சின் ஜோடியை நொய்டா போலீசார் கடந்த ஆண்டு ஜூலை 3ம் தேதி கைது செய்தனர். அவர்கள் வெளிநாட்டினர் தொடர்பான ஐபிசியின் 14வது பிரிவின் கீழும், குற்றவியல் சதி தொடர்பான ஐபிசியின் 120பி பிரிவின் கீழும் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்கள் ஜூலை 7ம் தேதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சச்சினின் தந்தையும் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

தற்போது இந்து மதத்தை தழுவி வரும் சீமா ஹைதர் பாகிஸ்தானுக்கு திரும்ப மாட்டேன் என்றும் கூறியுள்ளார். மேலும் சீமா தனது முந்தைய திருமணத்தில் பிறந்த 4 குழந்தைகளும் இந்து மதத்திற்கு மாறியதாகவும் கூறியுள்ளார். இதற்கிடையில், சீமா ஹைதர் இந்திய குடியுரிமை கோரி ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

உறங்கிக்கொண்டிருக்கும் போது வெடித்துச் சிதறிய ஏசி.. 4 பேர் பரிதாப பலி!!

குஜராத் மாநிலம் துவாரகாவில் இன்று காலை ஆதித்யா சாலையில் அமைந்துள்ள வீட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.

அதிகாலையில் வீட்டில் அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த போது திடீரென ஏசி யூனிட் வெடித்து சிதறியது. இதனால் ஏற்பட்ட புகை மண்டலத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 8 மாத கைக்குழந்தை மற்றும் மூதாட்டி உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

39 வயதான பவன் உபாத்யாய், அவரது 29 வயது மனைவி திதி, அவர்களது 8 மாத மகள் தயானா மற்றும் பவனின் 69 வயது தாய் பவானி ஆகியோர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்ட தகவல்களின்படி அதிகாலை 3 மணியளவில் ஏசி வெடித்ததில் 4 பேர் உயிரிழந்ததாகவும், அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தவர்கள் புகையில் சிக்கி மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

அந்த வழியாக சென்ற சிலர் வீட்டில் இருந்து புகை வருவதை பார்த்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்து தீயை அணைத்தபோது, வீட்டின் மாடியில் உள்ள படுக்கையறையில் 4 சடலங்கள் கிடந்தன.

இந்த விபத்தில் அதே வீட்டின் கீழ் தளத்தில் தூங்கிக் கொண்டிருந்த பவனின் 90 வயது மூதாட்டி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மூதாட்டி வயது முதிர்வு காரணமாக மேலே ஏற முடியாமல் தரைத்தளத்தில் தூங்குவது வழக்கம்.

இதனால், மாடியில் ஏசி வெடித்ததில் இருந்தும், புகை மூட்டத்தால் உயிரிழப்பிலும் உயிர் தப்பினார். ஆனால், குழந்தை உட்பட குடும்பத்தினர் அனைவரும் இறந்த நிலையில் அதிர்ச்சியடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

ஒரு வயது குழந்தையுடன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்த தாய் : பொலிசார் தீவிர விசாரணை!!

கர்நாடக மாநிலம் மங்களூரு அடையாரில் வசிப்பவர் நாகராஜ், 32. இவரது மனைவி சைத்ரா, 30. தம்பதியருக்கு, தியான்ஸ், 1, என்ற மகன் உள்ளார். கடந்த 28ம் தேதி, தியான்ஸின் முதல் பிறந்தநாள். நாகராஜும் சைத்ராவும் தங்கள் மகனின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினர். இந்நிலையில் சைத்ரா நேற்று காலை குழந்தையுடன் வீட்டில் இருந்து திடீரென மாயமானார்.

அவர்களை எங்கும் காண முடியவில்லை. அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சைத்ரா மற்றும் குழந்தை பற்றிய தகவலை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

அவர்களைப் பற்றிய விவரம் தெரிந்தால், தங்களுக்குத் தெரிவிக்கவும் என கேட்டுக்கொண்டனர். நேற்று இரவு, மங்களூரு கிராமிய பகுதியில் உள்ள நேத்ராவதி ஆற்றில் தாயும், மகனும் இறந்து கிடந்தனர்.

முதற்கட்ட விசாரணையில் குழந்தையுடன் நேத்ரா ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. கணவர் நாகராஜிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டில் பொய்கூறி மாணவர்களுடன் மாணவிகள் செய்தமுகம் சுழிக்கும் செயல்!!

வெலிமடை பகுதியில் கைவிடப்பட்ட கட்டிடமொன்றில் மதுபான விருந்து ஏற்பாடு செய்த பாடசாலை மாணவர்கள் பொலிஸார் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர். வெலிமடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மாணவர்கள் கையும் களவுமாக சிக்கியுள்ளனர்.

அந்த கைவிடப்பட்ட கட்டிடத்தில் விருந்து வைத்து கொண்டிருந்த 05 பாடசாலை மாணவர்களும், 2 மாணவிகளையும் பொலிஸார் பொறுப்பேற்றனர்.

அதிக விலைக்கு விற்கப்படும் மதுபானத்தை இந்த பாடசாலை மாணவர்கள் அப்போது அருந்திக்கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலதிக விசாரணையின் போது, பயிற்சி வகுப்புகளுக்கு செல்வதாக கூறிவிட்டு ​​இந்த கைவிடப்பட்ட கட்டிடத்தில் மது விருந்துக்கு ஏற்பாடு செய்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாணவர்கள் அந்த கட்டிடத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.