மயங்கி விழுந்த மேடைப் பாடகி.. பிரேத பரிசோதனையால் சிக்கிய கணவன்!!

மதுரையில் தனது மனைவியான மேடை பாடகியை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, உடல் நலக்குறைவு என நாடகமாடிய கணவர், பிரேத பரிசோதனை அறிக்கையால் வெளியான தகவலால் தற்போது சிறையில் கம்பி எண்ணுகிறார்.

மதுரை மாநகராட்சி மதிச்சியம் சப்பாணி கோவில் தெருவை சேர்ந்த 37 வயதாகும் நாகராஜின் மனைவி கவிதா, இவருக்கு 34 வயது ஆகிறது. ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் மேடைகளில் பாடி வரும் பாடகியான கவிதா, இசைக்குழு ஒன்றின் மூலம் மேடைகளில் பாடி சம்பாதித்து வந்தார்.

அந்த இசைக்குழுவில் தான் நாகராஜ் மைக்செட் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இ்ந்த நிலையில் சமீப காலமாக கவிதாவுக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டு வந்ததாம். அதற்காக கண் மருத்துவமனையில் பரிசோதித்து சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்.

இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது ரத்தம் கக்கிய நிலையில் கவிதா இறந்து கிடந்தார். பின்னர் அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்தபோது கவிதா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அரசு மருத்துவமனை டாக்டர்கள் மதிச்சியம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். கவிதா உடலில் காயங்கள் இல்லை என்பதால், உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் இறந்து விட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அதே நேரத்தில் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியானது. அந்த அறிக்கையில் கழுத்து நெரிக்கப்பட்டு அவர் இறந்து இருப்பது உறுதியாகி உள்ளது.. இது குறித்து போலீசாருக்கு டாக்டர்கள் தெரிவித்தனர். உடனே நாகராஜை போலீசார் அழைத்து துருவி துருவி விசாரணை நடத்தினர்.

குடும்ப தகராறில் கழுத்தை நெரித்து கவிதாவை கொன்றதுடன், அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாக நாகராஜ் நாடகமாடியது விசாரணையில் உறுதியானது. இதையடுத்து நாகராஜை போலீசார் கைது செய்தனர்.

வானும் காரும் மோதி விபத்து : 7 பேர் படுகாயம்!!

திஸ்ஸ – மாத்தறை பிரதான வீதியின் ஹூங்கம பகுதியில் காரும் வானும் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து நேற்று (04.02.2024) இடம்பெற்றுள்ளது.

பேருந்து ஒன்றை வான் கடக்க முற்பட்ட போது எதிரே வந்த கார் மீது வான் மோதியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை விபத்தின் போது காரில் இருந்த 5 பேர் மற்றும் வானில் பயணம் செய்த இருவர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த 7 பேர் தங்காலை, அங்குனுகொலபெலஸ்ஸ மற்றும் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இவர்கள் தங்காலை மற்றும் ஹூங்கம பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹூங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணமான 30 நாட்களில் இரட்டைக் கொலையில் முடிந்த காதல் கதை!!

கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம், கொக்கடனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 19 வயதான ஹீனா கவுசர். இவர், 24 வயதான தௌஃபிக் காடியை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், 4 மாதங்களுக்கு முன் அவரை திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின்னர், நர்சிங் கல்லூரியில் சேர்ந்து படித்த ஹீனாவிற்கு, அவரது கணவரின் நண்பரான யாசின்-பகோட்டின் நட்பு கிடைத்துள்ளது. யாசினின் இன்ஸ்டா பக்கத்தை பாலோ செய்த ஹீனா, அவரது கலர்ஃபுல் ரீல்ஸ்களை பார்த்து, அரட்டை அடிக்க ஆரம்பித்துள்ளார்.

அப்போது தெளஃபிக்கிற்கு தெரியாமல்போனது, நண்பனே தனது குடும்ப வாழ்க்கையில் கும்மி அடிக்க போகிறார் என்று. ஹீனாவும், யாசினும் செல்போன் எண்களை ஷேர் செய்து நண்பர்களாக பழக, நாளடைவில் அது தகாத உறவாக உருவெடுத்துள்ளது.

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து, கதை பேசியதாக கூறப்படுகிறது. அதுதொடர்பாக தௌஃபிக்கிற்கு தெரியவர, மனைவியையும் – நண்பனையும் அழைத்து கண்டித்திருக்கிறார். இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள், வீடும் 500 மீட்டர் தூரத்தில் இருந்ததால், ரகசிய ஜோடியின் சீக்ரெட் காதலுக்கு தடை போட முடியவில்லை.

புதுமோகம் கண்ணை மட்டுமல்லாது கண்டதையும் மறைக்க, வீட்டை விட்டு வெளியேறிய ஹீனா, புதுக்காதலன் யாசினும் சிட்டாக பறந்திருக்கிறார். 20 நாட்கள் தலைமறைவாக குடும்பம் நடத்தியவர்கள், ஊர் பெரியவர்களிடம் பேசி மீண்டும் திரும்பினர்.

ஜமாத்தில் மூன்று பேரை அழைத்து சமரசம் செய்தபோது ஹீனா, யாசினுடன் செல்வதாக திட்டவட்டமாக கூறினார். அப்போது மன உடைந்து போன தௌஃபிக், இருவரின் காதலுக்கும் தடையாக இருக்க மாட்டேன் எனக்கூறிய தலாக் கொடுத்துவிடுகிறேன் என்று கூறியுள்ளார்.

பின்னர் யாசின் மற்றும் ஹீனா இருவரும் பெரியவர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். அப்போது இவர்களுக்கு தெரியாமல் போனது, இருவரின் உயிருக்கும் தௌஃபிக் எமனாக வரப்போகிறார் என்று.

புதுஜோடி இருவரும் ஒரு மாதமாக, கொக்கடனூர் கிராமத்தின் புறநகரில் உள்ள ஜாதவ் பண்ணையில் வசித்து வந்தனர். அப்போதுதான் கிராமத்தில் யல்லம்மா தேவியின் திருவிழா நடைபெற்றது. அதில் முன்னாள் கணவர் தௌஃபிக்-கும், ஹீனாவும் நேருக்கு நேர் சந்தித்து கொண்டனர்.

‘உன்னை விட, யாசின் என்னை நன்றாக பார்த்து கொள்கிறான், நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று தெரியுமா’?, எனக்கூறி தௌஃபிக்-கை சூடேற்றி இருக்கிறார்.

சும்மா இருந்த சங்கை ஊதியே உடைத்த புதுக்கதையாய், ஹுனாவின் வார்த்தைகள் தௌஃபிக்-கை ஆத்திரக்காரனாக மாற்றியது. கையில் அரிவாளுடன் புறப்பட்டு சென்றவர், ஹீனாவின் வீடு புகுந்து ஆக்ரோஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஹீனா, அவரது புது கணவன் யாசின் ஆகிய இருவரையும் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். சம்பவத்தை தடுக்க முயன்ற யாசினின் தாய் அமினாபாய் மற்றும் உறவினர் முஸ்தபா ஆகிய இருவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

குலை நடுங்க வைக்கும் இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்து வந்த போலீசார், கொலை செய்யப்பட்ட இருவரின் உடல்களையும், உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த யாசினின் தாய் மற்றும் உறவினரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதை அடுத்து, இரட்டை கொலை தொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார், தலைமறைவாக இருந்த தௌஃபிக்-கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருமணமான 30 நாட்களில் புதுமோகத்தால் வீட்டை விட்டு ஓடிய மனைவி மற்றும் அவரது காதலன் இருவரையும் முன்னாள் கணவன் அரிவாளால் வெட்டி கொன்ற சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

2வது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மனைவியை மொட்டையடித்து வீதியில் இழுத்துச்சென்ற துணை நடிகர்!!

இரண்டாவது திருமணம் செய்துகொள்ள எதிர்ப்பு தெரிவித்த மனைவிக்கு மொட்டை அடித்து தெரு, தெருவாக இழுத்து சென்ற அவரது கணவரான சினிமா தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர். ந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் பெடகொண்டேபுடி கிராமத்தை சேர்ந்தவர் அபிராம் என்கிற ராம்பாபு (33).

இவர் தெலுங்கு சினிமாவில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக (துணை நடிகர்) உள்ளார். இவர் தன்னுடன் பணியாற்றும் நெல்லூரை சேர்ந்த ஆஷாவை(26) காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஐதராபாத்தில் வசித்து வந்த இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

அதன்பிறகு ராம்பாபு தான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளபோகிறேன். அதற்கு நீ சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த ஆஷா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ஆஷாவை தொடர்ந்து அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து ஐதராபாத் போலீசில் ஆஷா புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார், ராம்பாபு மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதையறிந்த ராம்பாபுவின் பெற்றோர், மருமகள் ஆஷாவை சமாதானம் செய்து வழக்கை வாபஸ் பெறும்படி கூறினர்.

இதையடுத்து இருவரையும் பெடகொண்டேபுடிக்கு கிராமத்திற்கு அழைத்து வந்தனர். இங்கு வந்தபிறகு ராம்பாபு ஒரு அதிகாரியிடம் கார் டிரைவராக வேலைக்கு சேர்ந்தார். சில நாட்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்த நிலையில், மீண்டும் ஆஷாவை கொடுமைபடுத்தினார்.

இதுகுறித்து பெடகொண்டேபுடி போலீசாரிடம் ஆஷா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ஆஷா, கணவரை பிரிந்து தனது மகனுடன் ஐதராபாத்திற்கு சென்று வசித்து வந்தார். இந்நிலையில் ராம்பாபு 2வது திருமணம் செய்து கொள்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து.

வருகிறது. இதையறிந்த ஆஷா, ராம்பாபுவிடம் சட்டப்படி விவாகரத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள். மேலும் நான் கொடுத்த பணம் மற்றும் என் மகனுக்கான இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என்றார். இதற்கு ராம்பாபு நான் இழப்பீடு தருகிறேன். ஆனால் போலீசில் அளித்த புகாரை வாபஸ் பெற வேண்டும் என்றார்.

இதற்கு ஆஷா மறுப்பு தெரிவித்ததால், இருவர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரடைந்த ராம்பாபு, வீட்டிற்குள் இழுத்துச்சென்று ஆஷாவிற்கு மொட்டை அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் நேற்று தெரு, தெருவாக இழுத்து சென்றுள்ளார்.

இதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசில் புகார் அளித்தனர். தன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்ட ஆஷாவை மீட்டு ராஜமுந்திரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராம்பாபுவை தேடி வருகின்றனர்.

கோர விபத்தில் சிக்கிய குடும்பம் : தாய் பலி, ஆபத்தான நிலையில் மகள்!!

ஹொரணை – பாணந்துறை வீதியின் குல்பான பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் இருவர் காயமடைந்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மூன்று வயது மகள் ஆகியோர் பயணித்த முச்சக்கர வண்டி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் மோதி விபத்துக்குள்ளானதாக ஹொரண தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரகம, ரைகம கொஸ்வத்தபர பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான ஆர்.ஏ.தனுஜா பிரியதர்ஷனி என்ற 40 வயதுடைய பெண்ணே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

பெற்றோர்கள் இருவரும் தமது மகளின் தேவைக்காக ஹொரண நகருக்கு வந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிரதேசவாசிகளால் தாய் மற்றும் தந்தை மற்றும் சிறுமியை ஹொரண ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போது தாய் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

காயமடைந்த சிறுமியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கு அடிப்படை சிகிச்சை அளிக்கப்பட்டு, கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் மருத்துவமனை பேச்சாளர் தெரிவித்தார்.

தந்தையின் வலது கை, கழுத்து மற்றும் மார்பில் காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

காணாமல்போயுள்ள தமிழ்ச் சிறுவன் : உறவினர்கள் விடுத்துள்ள கோரிக்கை!!

வத்தளை பகுதியை சேர்ந்த ரமேஷ் தனுஜன் என்ற சிறுவனை ஜனவரி 31ம் திகதி மாலை 6 மணியிலிருந்து காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுவன், கொழும்பில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் 14 வயதுடையவர் ஆவார்.

இந்நிலையில், அச்சிறுவன் பாடசாலை விடுமுறையை கழிப்பதற்காக ஹட்டன் பிரதேசத்தில் இருக்கும் சித்தி வீட்டுக்கு சென்றிருந்த நிலையில் காணாமல்போயுள்ளார்.

இவர் சம்பந்தமாக ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர் கருமை நிறம், நான்கரை அடி உயரம் கொண்ட தோற்றத்தை உடையவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவரைக் கண்டால் கீழ் உள்ள இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு சிறுவனின் உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

0777747157

மோட்டார் சைக்கிள் விபத்து : இரு இளைஞர்கள் தீவிர சிகிச்சையில்!!

அம்பாறை-நிந்தவூர் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் முன்பாக சட்டவிரோதமாக வீதிகளில் பயணித்த இரு இளைஞர்கள் விபத்துக்குள்ளாகியுள்ளனர். இச்சம்பவம் நேற்று (03.02.2024) இடம்பெற்றுள்ளது.

இரு இளைஞர்களும் மேலும் இருவருடன் நிந்தவூர் வைத்தியசாலை வீதியிலிருந்து பிரதான வீதியினை நோக்கி மோட்டார் சைக்கிள-ஓட்டப்பந்தயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது,மோட்டார் சைக்கிளானது வேகக் கட்டுப் பாட்டினை இழந்தமையினால் ஜும்ஆ பள்ளிவாசல் சுவர் பகுதியில் மோதி இரு இளைஞர்கள் பலத்த காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், காயமடைந்தவர்கள் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா சிறைச்சாலையில் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 12 கைதிகள் விடுதலை!!

நாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தை வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 12 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

76 ஆவது சுதந்திர தினத்தையடுத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொது மன்னிப்பின் கீழ் நாடு பூராகவும் 600 சிறைக் கைதிகள் இன்று (04.02) விடுதலை செய்யப்பட்டனர்.

சிறு குற்றங்களுக்காக குறுகிய கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர். அதன்படி வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து 12 கைதிகள் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களை சிறைச்சாலை அதிகாரிகள் கைலாகு கொடுத்து வீடுகளுக்கு வழியனுப்பி வைத்தனர்.

வவுனியாவில் சுதந்திரதினத்திற்கு ஆதரவாக இடம்பெற்ற வாகனப் பேரணி!!

சுதந்திர தினத்திற்கு ஆதரவு தெரிவித்து வன்னி மக்கள் ஒன்றியத்தினால் வாகன பேரணியொன்று இன்று (04.02.2024 ) காலை 09.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பெருமளவான பகுதிகளில் இலங்கையில் 76வது சுதந்திர தின நிகழ்வுகள் புறக்கணிக்கப்பட்டு கரிநாளாக அனுஷ்டிக்கப்பட்டுவதுடன் கறுப்பு கொடிகளையும் கட்டி தமது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்ற நிலையிலேயே சுதந்திர தினத்திற்கு ஆதரவாக இவ் வாகனப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

அனைத்து வாகனங்களிலும் தேசியக்கொடிகள் கட்டப்பட்டு 150க்கு மேற்பட்ட வாகனங்கள் பேரணியாக வவுனியா நகரை வலம் வந்திருந்திருந்தன. இப் பேரணியில் இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு அருகே ஆரம்பமான வாகனப்பேரணியானது ஏ9 வீதியூடாக ஹொரவப்பொத்தானை வீதியினை வந்தடைந்து பஜார் வீதியூடாக மணிக்கூட்டு கோபுர சந்திக்கு வந்து மீண்டும் ஏ9 வீதியூடாக பயணித்து குடியகல்வுத் திணைக்கள வீதியூடாக சென்று புகையிரத நிலைய வீதியினை சென்றடைந்து , வவுனியா – மன்னார் பிரதான வீதியூடாக மீண்டும் பேரணி ஆரம்பித்த இடத்தினை சென்றடைந்திருந்தது.

வவுனியாவில் சுதந்திரதினக் கொண்டாட்டத்தில் மயங்கி விழுந்த மாணவர்கள்!!

வவுனியாவில் மாணவர்கள், சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உட்பட 04 பேர் திடீரென மயங்கி விழுந்து அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

வவுனியா மாவட்டத்தில் இலங்கையின் 76வது சுதந்திர தின விழா இன்று (04.02.2024) காலை நகர சபை மைதானத்தில் இடம்பெற்றது. இதில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.ஏ.சரத் சந்திர தலைமையில் இடம்பெற்றதுடன் பிரதம அதிதியாக வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் குலசிங்கம் திலீபன் கலந்து கொண்டிருந்தார்.

அணிவகுப்பில் கலந்துகொண்ட பாடசாலை மாணவர்கள், சிவில் பாதுகாப்புப் படையினர், பொலிஸார் அணிவகுப்பு நிறைவடைந்த பின்னர் பிரதான நிகழ்வு மண்டபத்திற்கு முன்பாக உள்ள மைதானத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

குறித்த மாணவர்கள், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஒரு மணித்தியாலமாக மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், 2 மாணவர்களும் 2 சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் வெயிலின் தாக்கத்தினால் மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்களை செஞ்சிலுவைச் சங்க தொண்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

ஒவ்வொரு வருடமும் இடம்பெறுகின்ற சுதந்திர தின நிகழ்வின் போது வெப்பத்தின் தாக்கத்தினால் மாணவர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் மயங்கி விழுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனவே இனிவரும் சுதந்திர தின நிகழ்வுகளில் அணிவகுப்பு வகுப்பு முடிந்தவுடன் அவ்விடத்தை விட்டு வெளியேற அனுமதிப்பது அல்லது மாற்று வழிகளில் செல்வது நல்லது. இவை தொடர்பில் உரிய அதிகாரிகளை கவனம் செலுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

 

வவுனியா நகர் முழுவதும் பறக்கவிடப்பட்ட தேசியக் கொடிகள்!!

வடக்கு கிழக்கு மாகாணங்களில் சுதந்திரதினத்தினை கரிநாளாக அனுஸ்ரித்து வருகின்ற இந்நிலையில் வவுனியா நகர் முழுவதும் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.

வவுனியா ஏ9 வீதியின் இரு பகுதிகளிலும், மணிக்கூட்டு கோபுரம், வைத்தியசாலை சுற்றுவட்டம் ஆகிய பகுதிகளில் இலங்கையின் தேசிய கொடி பறக்கவிடப்பட்டுள்ளன.

சுதந்திரதினத்தினை கரிநாளாக அனுஸ்ரித்து தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் ஏற்பாட்டில் சுதந்திரதினமான இன்றையதினம் வடக்கின் சில மாவட்டங்களில் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டமையுடன் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தினரும் போராட்டங்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இலங்கையின் 76 ஆவது சுதந்திரதினம் அனுஸ்டிப்பு!!

இலங்கையின் 76 ஆவது சுதந்திரதினம் இன்று (04.02) வவுனியா மாநகரசபை மைதானத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

வவுனியா அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திரவின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கு.திலீபன் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.

பாடசாலை மாணவர்களின் பாண்ட் இன்னிசை, மாணவர் படையணி உட்பட முப்படை அணிவகுப்பும் இதன்போது இடம்பெற்றதுடன் பொலிஸ் உயர் அதிகாரிகள் உட்பட முப்படை அதிகாரிகள், மதத்தலைவர்கள், அரச அதிகாரிகள் உட்பட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

கையடக்க தொலைபேசிக்காக உயிரை மாய்த்த மாணவன்!!

கண்டியில் பிரதான ஆண்கள் பாடசாலையில் கல்வி பயின்ற மாணவன் ஒருவர் வீட்டின் அறையொன்றில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக பொத்தபிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளார்.

பொத்தபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெனிக்திவெல பிரதேசத்தில் 08 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் ரொனித் என்ற பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் பாடசாலையில் ரக்பி வீரர் எனவும் பெற்றோரிடம் கையடக்கத் தொலைபேசி கேட்டபோதும் பெற்றோர் தர மறுத்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாகவே குறித்த மாணவன் இந்த முடிவை எடுத்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரியந்த ரணசிங்க உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு அவுஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பு!!

இலங்கையர்களுக்கு அவுஸ்ரேலியா உட்பட பல நாடுகளில் வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாக, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனங்களில் பெற்றுக்கொண்ட தொழிற்கல்வி மூலம் இலங்கை இளைஞர், யுவதிகளுக்கே இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்தப் பயிற்சி நிறுவனங்களின் மூலம் அதிக இளைஞர்கள் பயன் பெறும் வகையில் தொழில்நுட்பம் சார்ந்த புதிய பயிற்சி நெறிகளை உள்ளடக்க வேண்டியதன் தேவையை சபாநாயகர் சுட்டிக்காட்டினார். சபாநாயகருக்கும், ஜேர்மன் தூதுவர் பெலிக்ஸ் நியூமனுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு அண்மையில் நாடாளுமன்ற சபாநாயகர் அலுவலகத்தில் நடைபெற்றது. எதிர்வரும் மார்ச் மாதம் ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர்களின் தூதுக் குழுவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக, இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் பெலிக்ஸ் நியூமன் இதன்போது தெரிவித்துள்ளார்.

இலங்கை – ஜேர்மன் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை புதுப்பிப்பது தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், இதன் மூலம் இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்த முடியுமெனவும், ஜேர்மன் தூதுவர் குறிப்பிட்டார்.

வீதியை கடக்க முயன்ற சிறுவனை மோதிய வாகனம் : சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!!

தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் சம்மாந்துறை பிரயோக விஞ்ஞான பீடத்தின் முன்னால் இடம்பெற்ற விபத்தில் 12 வயதுடைய சிறுவன் உடல் நசுங்கி இன்று பலியாகினார்.

குறித்த சிறுவன் சம்மாந்துறை – அம்பாரை பிரதான வீதியில் பல்கலைக்கழக பீடத்தின் பக்கத்திலிருந்து வீதியை கடந்து அடுத்த பக்கத்தில் உள்ள தமது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்ததார்.

இதன்போது சம்மாந்துறை பகுதியில் இருந்து அம்பாறையை நோக்கி வந்த கென்டர் ரக வாகனம் மோதியலில் மாணவன் ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளார்.

சம்பவத்தில் சம்மாந்துறை பிரதான வீதி உடங்கா 02 இல் வசிக்கும் ஏ.எம்.பாஸீர் (வயது 12) எனும் மாணவன் மரணமடைந்துள்ளதுடன் லொரி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மரணமடைந்த மாணவனின் உடல் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான வாகனம் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மாடியில் இருந்து விழுந்து மாணவன் உயிரிழப்பு : பெரும் துயரத்தை ஏற்படுத்திய சம்பவம்!!

வீடொன்றின் பாதுகாப்பற்ற மாடியில் இருந்து தவறி விழுந்த 15 வயது மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குருநாகல், ஹிந்தகொல்ல கல்பொத்தவத்த பிரதேசத்தில் நேற்று முன்தினம் (01.02) மாலை இடம்பெற்றுள்ளது.

15 வயதுடைய சுதேஷ் மதுஷங்க தனது வீட்டிற்கு அருகில் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது இந்த துயரம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

அயல் வீடொன்றின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவன் , குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சுதேஷ் மதுஷங்க ஹிந்தகொல்ல திகம்பிட்டிய ஸ்ரீ பியரதன மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வரும் நிலையில் இவ்வருடம் தரம் 10 க்கு சித்தியடைந்திருந்தார்.

மாணவைன் உயிரிழப்பு பெரும் துயரத்தை ஏற்படுத்திய நிலையில, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.