வவுனியா நகர்ப் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு!!

வடமாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் டெங்கினை வவுனியா மாவட்டத்தில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை,

பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் இராணுவத்தினர், பொலிஸார், வர்த்தக சங்கத்தினர் ஆகியோர் இணைந்து டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா பிரதேச வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள பல இடங்களில் இன்றைய தினம் (03.02.2024) குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

வர்த்தக நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய சூழல்களை அடையாளப்படுத்தல் மற்றும் அவற்றை அப்புறப்படுத்துதல், அதே நேரம் நுளம்பு பெருக்கத்திற்குச் சூழல் காணப்படும் வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களை அடையாளப்படுத்தும் முகமாகச் சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், டெங்கு ஒழிப்பு செயலணி உத்தியோகத்தர்கள், பாதுகாப்புத் துறையினர் விசேட கள விஜய செயற்பாடுகளையும் முன்னெடுத்தனர்.

அதே நேரம் வவுனியா வவுனியா நகர மத்திய பகுதிகளைச் சூழ உள்ள பகுதிகள் இராணுவத்தினரின் உதவியுடன் விசேட சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டமையுடன் நகரசபையின் உதவியுடன் குப்பைகளும் அகற்றப்பட்டன.

அத்துடன் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கீழுள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் சுதந்திர தின நிகழ்வுக்கான பணிகள் பூர்த்தி!!

இலங்கையின் 76 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை மைதானத்தில் நாளையதினம் (04.02.2024) காலை 8 மணிக்கு இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

பெரும்பாலான பணிகள் வன்னி இராணுவத்தினரினால் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் ஏனைய ஏற்பாடுகளை வவுனியா மாவட்ட செயலகத்துடன் இணைந்து பிரதேச செயலகத்தினரும் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் மாணவர்கள், முப்படையினர் ஆகியோரின் அணிவகுப்புக்கான ஒத்திகைகள் கடந்த மூன்று நாட்களாக இடம்பெற்றிருந்தன. மேலும் ஏ9 வீதியினை தற்காலிகமாக மூடுவதற்குரிய நடவடிக்கைளும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.ஏ சரத்சந்திர தலைமையில் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன் நிகழ்வின் பிரதம அதிதியாக வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் குலசிங்கம் திலீபன் கலந்து கொள்ளவுள்ளார்.

வவுனியாவில் வடக்கு கிழக்கில் வசிக்கும் 51 பேருக்கு பிரஜாவுரிமை பெறுவதற்கான சத்தியப்பிரமாணம்!!

வடக்கு – கிழக்கின் 7 மாவட்டங்களில் வசிக்கும் 51 பேருக்கு இலங்கை பிரஜாவுரிமை பெறுவதற்கான சத்தியப்பிரமான நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (03.02) இடம்பெற்றது.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து இந்தியாவில் வசித்து வந்த நிலையில் அங்கு பிறந்த பிள்ளைகளுடன் யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் நாடு திரும்பிய பலர் இலங்கை பிரஜாவுரிமையைப் பெற முடியாது பல்வேறு நெருக்கடிக்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நடமாடும் வேலைத் திட்டமாக துரிதமாக பிறப்பு சான்றிதழை வழங்குவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளது. அந்தவகையில், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய வடக்கு – கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்த,

51 பேருக்கு பிரஜாவுரிமை மற்றும் பிறப்புச் சான்றிதழ் பெற்றுக் கொடுப்பதாற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ள நிலையில் அதன் ஒரு கட்டமாக இலங்கை பிரஜை என குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கையொப்பமிடும் நிழகழ்வு இடம்பெற்றது.

இதில் வவுனியா மாவட்ட அரச அதிபரி பீ.ஏ.சரத்சந்திர, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், குடிவரவு குடியகல்வு திணைக்கள பிரதி கட்டுப்பாட்டாளர், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரின் பிரத்தியேக செயலாளர், குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள், ஒப்பர் சிலோன் அமைப்பின் பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

சீனாவில் 15வது மாடியிலிருந்து குழந்தைகளை வீசிக் கொன்ற தம்பதிக்கு நேர்ந்த பரிதாபம்!!

இருவரும் புதிய வாழ்வை தொடங்குவதற்கு இடையூறாக இருந்ததாகக் கருதப்பட்ட இரண்டு குழந்தைகளையும், 2020-ம் ஆண்டில், ஜாங் போ 15-வது அடுக்குமாடிக் குடியிருப்பின் ஜன்னலிலிருந்து வெளியே வீசியிருக்கிறார். இதில் இரு குழந்தைகளும், பரிதாபமாக உயிரிழந்தன.

சீனாவைச் சேர்ந்த ஜாங் போ – சென் மெய்லினை என்ற தம்பதிக்கு, 2 வயது பெண் குழந்தையும், 1 வயது ஆண் குழந்தையும் இருந்தன. இந்த நிலையில், இருவரும் பிரிந்துவிட்டதால், இரண்டு குழந்தைகளும் ஜாங்கிடம் இருந்தன.

இதற்கிடையில், ஜாங் போகுக்கு, யே செங்சென் என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு, இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில், இருவருக்கும் மத்தியில் குழந்தைகள் விவகாரத்தில் அடிக்கடி சண்டை ஏற்பட்டிருக்கிறது.

இதில், ஆத்திரமடைந்த, யே செங்சென், இரண்டு குழந்தைகளையும் கொலைசெய்துவிடுமாறு வற்புறுத்தியிருக்கிறார். இருவரும் புதிய வாழ்வை தொடங்குவதற்கு இடையூறாக இருந்ததாகக் கருதப்பட்ட இரண்டு குழந்தைகளையும்,

2020-ம் ஆண்டில், ஜாங் போ 15-வது அடுக்குமாடிக் குடியிருப்பின் ஜன்னலிலிருந்து வெளியே வீசியிருக்கிறார். இதில் இரு குழந்தைகளும், பரிதாபமாக உயிரிழந்தன. இந்தச் சம்பவம் சீனா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால், ஜாங் விசாரணையில்போது, “குழந்தைகள் விழுந்தபோது நான் தூங்கிக் கொண்டிருந்தேன். கீழே மக்கள் கூச்சலிட்டதைக் கண்டுதான் விழித்தேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், சீனா உச்ச நீதிமன்றம், ஜாங் போ – யே செங்சென் ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது.

அதனடிப்படையில், நேற்று இருவருக்கும் மரண ஊசி மூலம் தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இவர்களின் மரண தண்டனை செய்தி, பிரபல ஊடக தளமான வெய்போவில் 200 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் தீ விபத்தில் பலியான இளம்பெண்கள் : புகைப்படங்கள் வெளியாகின!!

பிரித்தானியாவில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் தீப்பற்றியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு அழகிய இளம்பெண்கள் பரிதாபமாக பலியாகினர்.

பிரித்தானியாவின் ஸ்கொட்லாந்திலுள்ள அபர்தீன் நகரில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில், திங்கட்கிழமை, (ஜனவரி 29) மாலை 6.00 மணியளவில் தீப்பற்றியது.

தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்த நிலையில், அந்த குடியிருப்பிலிருந்து ஒரு குழந்தை மீட்கப்பட்டது. ஆனால், அதே தீயில் சிக்கி இரண்டு இளம்பெண்கள் உயிரிழந்துவிட்டார்கள்.

இந்நிலையில், உயிரிழந்த இளம்பெண்களின் புகைப்படங்கள் மற்றும் பெயர் முதலான சில விவரங்கள் வெளியாகியுள்ளன.

அந்த பெண்களில் ஒருவர் பெயர் Shikshya, மற்றவர் பெயர் Aanchal Subedi. இருவரும் உடன்பிறந்த சகோதரிகள் ஆவர். அவர்கள் அபர்தீனிலுள்ள Aberdeen Grammar School என்னும் பள்ளியில் படித்தவர்கள் ஆவர்.

இந்த விபத்தில் அந்த இளம்பெண்கள் வளர்த்த ஒரு பூனையும் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மனைவியை 12 ஆண்டுகளாக வீட்டுச்சிறை வைத்த கணவன்.. இறுதியில் நேர்ந்த சோகம்!!

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை 12 ஆண்டுகளாக வீட்டுக்குள் கணவனே சிறைவைத்த சம்பவம் மைசூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், மைசூருவில் உள்ள எச்.டி.கோட் தாலுகா எச்.மாடகெரே கிராமத்தைச் சேர்ந்தவர் சுனலயா. இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு எச்.டி கோட் கிராமத்தைச் சேர்ந்த சுமா என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்.

அவரை திருமணம் செய்த நாளில் இருந்து சுமாவின் நடத்தை மீது சுனலயா சந்தேகம் கொண்டார். இதன் காரணமாக ஒரு அறையில் சுமாவை வைத்து பூட்டி 3 பூட்டுக்களைப் போட்டார். விளக்குகள் இல்லாத அந்த இருட்டறையில் சுமா தவித்து வந்தார்.

அத்துடன் தன் மனைவி யாரிடமும் பேசக்கூடாது என்பதற்காக வீட்டின் ஜன்னல்களையும் சுனலயா பூட்டி வைத்தார். மேலும் சுமா இருந்த அறையில் கழிப்பறை இல்லை.

இதனால் வாளியை வைத்து,அவர் மலம், சிறுநீர் கழிப்பது வழக்கம். அதைக் காலையில் சுனலயா எடுத்து வெளியேற்றியுள்ளார். இதை வெளியில் யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவதாகவும் அவர் மிரட்டியுள்ளார்.

கடந்த 12 ஆண்டுகளாக சுமாவின் நடமாட்டம் இல்லாததால் சுனலயாவிடம் உறவினர்கள் விசாரித்தும் உள்ளனர். ஆனால், அவர் உரிய பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், இருட்டறையில் கடந்த 12 ஆண்டுகளாக சுமா அடைத்து வைக்கப்பட்டதை அறிந்த வழக்கறிஞர் சித்தப்பாஜி சாந்த்வான் கேந்திரா என்பவர் போலீஸில் புகார் செய்தார்.

இதையடுத்து காவல் துறை அதிகாரி சுபான் தலைமையில் போலீஸார் சுனலயா வீட்டிற்கு நேற்று இரவு சென்று பூட்டுக்கள் மற்றும் கதவை உடைத்து சுமாவை மீட்டனர்.

இச்சம்பவம் குறித்து எச்.டி.கோட் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். அத்துடன் சுமாவையும், அவரது குழந்தைகளையும் மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். தப்பியோடிய சுனலயாவை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மைசூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மது குடிக்கவேண்டாம் என கண்டித்த மனைவி அடித்துக் கொலை : கணவன் தலைமறைவு!!

கோயில் திருவிழா அன்று குடிபோதையில் வந்த கணவனைக் கண்டித்த மனைவி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தாவணகெரேவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், தாவணகெரே மாவட்டத்தில் உள்ள கிரமகொண்டனஹள்ளி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஹனமந்தா(28). இவரது மனைவி அர்பிதா(24). இவர்களின் கிராமத்தில் நேற்று இரவு கிராம தெய்வ வழிபாடு நடைபெற்றது.

இதனால் ஹனமந்தா வீட்டிற்கு அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வந்திருந்தனர். குடிப்பழக்கம் உள்ள ஹனமந்தா நேற்றும் வழக்கம் போல மது குடித்து விட்டு வந்தார்.

இதனால் அவரது மனைவி அர்பிதா எரிச்சலடைந்தார்.தனது கணவனான ஹனமந்தாவை கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

5 மாத குழந்தையை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்த சோகம்!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தோப்பிரம்குடியை சேர்ந்தவர் டீனு (வயது 35). இவருக்கு திருமணமாகி 5 மாத குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு டீனு தனது 5 மாத குழந்தையை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், நீண்ட நேரமாகியும் வீட்டில் சத்தம் எதுவும் கேட்காததால், டீனுவின் வீட்டின் அருகே உள்ள அவரது உறவினர் கதவைத் தட்டியுள்ளார்.

அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்ததையடுத்து அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, ​​டீனு தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மற்றொரு அறையில் டீனுவின் குழந்தை இறந்து கிடந்ததையும் கண்டார்.

சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் உயிரிழந்த டீனு மற்றும் அவரது 5 மாத குழந்தை உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது உறவினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது 4 மாதங்களுக்கு முன்பு டீனுவின் கணவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அன்றிலிருந்து டீனு மனமுடைந்து காணப்பட்டதாக உறவினர் போலீசில் வாக்குமூலம் அளித்தார்.

விருப்பமில்லாத காதல்.. தங்கையின் காதலன் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சகோதரர்கள்!!

சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர், திருவள்ளுவர் தெருவில் வசித்து வருபவர் 24 வயது ஜீவா. இவர் கானா பாடல் பாடி, மேளம் அடிக்கும் பணி செய்து வந்தார். இவர் குண்டுமேடு பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்தார்.

அந்த பெண்ணுக்கு அவரது பெற்றோர், வேறு ஒரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தனர். இது குறித்து அந்த மாப்பிள்ளைக்கு ஜீவா, அந்த பெண்ணுடன் தான் சேர்ந்து இருக்கும் படத்தை அனுப்பி வைத்துள்ளார்.

இதனால் பெண்ணின் தந்தை மற்றும் அவரது மகன்கள் ஜீவாவை கண்டித்தனர். இதன் பிறகும் அந்த பெண்ணுடன் பெருங்களத்தூர் ரெயில்வே கேட் பகுதியில் தண்டவாளம் அருகே நின்று ஜீவா பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த பெண்ணின் சகோதரர்கள் அந்த பெண்ணை திட்டி வீட்டுக்கு அழைத்துச்சென்றனர். இது குறித்து ஜீவா தனது நண்பர்களுடன் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று தகராறு செய்தார்.

அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசை பார்த்ததும் தப்பி ஓடிவிட்டனர். மீண்டும் இரவு 11 மணிக்கு ஜீவா, நண்பர்களுடன் சேர்ந்து சென்று தகராறு செய்தார்.

பெண்ணின் சகோதரர்கள் அவர்களின் நண்பர்களுடன் சேர்ந்து ஜீவாவின் நண்பர்களை அடித்து விரட்டினர். ஜீவா மட்டும் அவர்களிடம்தனியாக சிக்கிக்கொண்டார்.

பெண்ணின் சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் ஜீவாவை சுடுகாட்டுக்கு தூக்கிச்சென்று அரிவாளால் வெட்டியும், தலையில் கல்லை போட்டும் கொலை செய்துள்ளனர்.

சுடுகாட்டில் ஜீவா கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், ஜீவாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பெண்ணின் சகோதரர்களான விஜய், அஜித், அவர்களது நண்பர் அரவிந்தன் மூவரையும் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தங்கையின் காதலை சேர்த்து வைக்க விருப்பமில்லாத நிலையில் வீடு தேடி வந்து தகராறு செய்ததால் ஆத்திரத்தில் ஜீவாவை கொலை செய்து விட்டதாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றி கழகம் : புதிய கட்சியை ஆரம்பித்தார் நடிகர் விஜய்!!

தென்னிந்திய நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியை அறிவித்து அதற்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என்று பெயரிட்டுள்ளார். தமிழக வெற்றி கழகம் தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பை அவர் தனது டுவிட்டர் பதிவின் மூலம் வெளியிட்டுள்ளார்.

பல ஆண்டுகளாக விஜய் மக்கள் இயக்கமாக செயல்பட்டுவந்த நடிகர் விஜயின் ரசிகர் மன்றம் இன்று தமிழத்தில் புதிய அரசியல் கட்சியாக மாற்றம்பெற்றுள்ளது.

இந்நிலையில், புதிய கட்சியை ஆரம்பிப்பது குறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மக்கள் இயக்க நிர்வாகிகள் பலருடன் ஆலோசனை நடத்திருந்தார். அதன் அடிப்படையில் கட்சியின் தலைவராக விஜய் தற்போது தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

எதிர்வரும் ஐந்தாம் திகதி இலங்கையில் விடுமுறை தினமா? வெளியானது அறிவிப்பு!!

எதிர்வரும் திங்கட்கிழமை (05.02.2024) விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட மாட்டாது என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 76ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (04) கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில் அதற்கு மறுதினம் திங்கட்கிழமை விடுமுறை தினம் என தகவல்கள் பகிரப்பட்டு வந்தது.

இந்த நிலையிலேயே குறித்த அறிவிப்பை பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இன்று (02.02.2024) வெளியிட்டுள்ளார்.

இதன்படி, திங்கட்கிழமை அனைத்து அரச நிறுவனங்களும் வழமை போன்று இயங்கும் எனவும் யசரத்ன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா குடிவரவு குடியகல்வுத் திணைக்கள பிராந்திய காரியாலயத்தினை முற்றுகையிட்ட மக்கள்!!

வவுனியா குடிவரவு குடியகல்வுத் திணைக்கள பிராந்திய காரியாலத்தின் பிரதான வாயிலை பொதுமக்கள் முற்றுகையிட்டமையினால் ஏற்பட்ட பதற்ற நிலமையினையடுத்து பொலிஸார் வரவழைக்கப்பட்டு நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. திணைக்கள வாயிலின் முன்பாக இன்று (02.02.2024) காலை இடம்பெற்ற இவ் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா குடிவரவு குடியகல்வுத் திணைக்கள பிராந்திய காரியாலயத்தில் சாதாரண மற்றும் ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டினை பெறுவதற்காக நேற்று (01.02.2024) இரவு முதல் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் காரியாலயம் முன்பாக வரிசையில் காத்திருந்தமையுடன் வரிசையில் காத்திருந்தவர்களுக்கான வரிசை இலக்கம் பொலிஸாரினால் வழங்கப்பட்டு வரிசையில் நின்றவர்களின் பெயர்களையும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் 85ம் இலக்கம் பெற்ற நபர் வாயிலின் வெளியே வரிசையில் நிற்கத்தக்கதாக இனி எவருக்கும் கடவுச்சீட்டு வழங்க முடியாது எனவும் 160 நபர்களை தாம் ஒருநாள் சேவையின் கீழ் உள்வாங்கியுள்ளமையுடன் 50 நபர்களை சாதாரண சேவையின் கீழ் உள்வாங்கியுள்ளமையினால் பிறிதொரு தினத்தில் வருமாறு குடிவரவு குடியகல்வுத் திணைக்கள பிராந்திய காரியாலய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இதன் காரணமாக ஆத்திரமடைந்த வரிசையின் நின்ற பொதுமக்கள் 85ம் இலக்கம் பெற்ற நபர் வெளியே நிற்க எவ்வாறு 160ம்இலக்கம் பெற்ற நபர் உள்ளே செல்ல முடியும் என்பதுடன் அங்கு நின்ற பெண்கள் உள்ளடங்கலான மாபியா கும்பல் கடவுச்சிட்டு பெற வருபவர்களிடம் பணம் பெற்று வரிசைகளுக்கு இடையே அவர்களை உள்நுழைக்கின்றனர் என தெரிவித்தமையுடன்,

அங்கு சற்று குழப்பநிலமை ஏற்பட்டிருந்தமையுடன் பின்னர் திணைக்க பிரதான வாயிலினை வழிமறித்தமையுடன் தமது எதிர்ப்பினையும் பொதுமக்கள் வெளிப்படுத்திருந்தனர்.

அதனால் கடவுச்சீட்டு திணைக்களம் முன்பாக பதற்ற நிலமை நிலவியமையுடன் வவுனியா பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸ் நிலைய சமூக சேவை நிலைய பொறுப்பதிகாரி ஆர்.கே.கே.பியரத்தன தலமையிலான பொலிஸ் குழுவினர் குடிவரவு குடியகல்வுத் திணைக்கள பிராந்திய காரியாலயத்தினுள் சென்று ஆணையாளருடன் கலந்துரையாடினார்.

இன்று மேலதிக நபர்களை உள்ளெடுக்க முடியாது எனவும் , பிரிதொரு தினத்தில் கடவுச்சீட்டினை பெருவதற்கு முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்கான இலக்கம் வழங்குவதாக ஆணையாளர் உறுதிமொழி அளித்துள்ளதாகவும்,

கடவுச்சிட்டினை பெற வருபவர்களிடம் பணம் பெற்று வரிசையில் ஈடுபடுத்துபவர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுவதாக வவுனியா பொலிஸ் நிலைய சமூக சேவை நிலைய பொறுப்பதிகாரி,

ஆர்.கே.கே.பியரத்தன தெரிவித்தமையினையடுத்து சுமுகமான நிலமைக்கு பொதுமக்கள் வந்தமையுடன் குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளினால் பிரிதொரு தினத்தில் முன்னுரிமை அடிப்படையில் கடவுச்சிட்டை பெறுவதற்கான இலக்கமும் வழங்கப்பட்டது.

வவுனியா வைத்தியசாலையில் இன்றும் வைத்தியர்கள் தவிர்ந்த ஏனையவர்கள் பணிப்புறக்கணிப்பு : நோயாளர்கள் அவதி!!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை தாதியர்கள், சிற்றூழியர்கள், மருந்தாளர்கள், தொழிநுட்பவியலாளர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்றும் 02.02.2024 (சுகயீன விடுமுறை) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பள அதிகரிப்பு, ஊழியர் பற்றாக்குறையினை உடன் நிவர்த்தி செய், வாழ்வாதாரத்தினை அதிகரி போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கடந்த மாதம் 11ம் மற்றும் 16ம் ஆகிய திகதிகளில் பணிப்புறக்கணிப்பில் (சுகயீன விடுமுறை) ஈடுபட்டிருந்தமையுடன் நேற்றையதினமும் சுகயீன விடுமுறையில் ஈடுபட்டனர்.

எனினும் அதற்கு எவ்வித தீர்வும் கிடைக்கப்பெறாத நிலையில் வைத்தியர்கள் தவிர்ந்த ஏனையவர்கள் இன்று (சுகயீன விடுமுறை) பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கை முழுவதும் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்நிலையிலேயே வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும் அவசர நோயாளர் பிரிவு, நோயாளர் விடுதி, விபத்துப்பிரிவு, சத்திர சிகிச்சை பிரிவு உட்பட்ட சில சேவைகளில் மட்டுப்படுப்பட்ட சிற்றூழியர்கள் மற்றும் தாதியர்கள் சேவைகள் ஈடுபடுவதுடன்,

வெளிநோயாளர் பிரிவு, கிளினிக் பிரிவு, ஸ்கானிங், கதிர் பிரிவு, கதிரியக்கப்பிரிவு போன்ற ஏனைய சேவைகளிலிருந்து தாதியர்கள், சிற்றூழியர்கள், மருந்தாளர்கள், தொழிநுட்பவியலாளர்கள் முற்றாக 24மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக கிளினிக், வெளிநோயாளர் பிரிவு, மருந்தக பிரிவு ஆகியவற்றிக்கு வருகைதந்த நோயாளிகள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.

வவுனியாவில் சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்த சந்தேகநபர் தப்பியோட்டம்!!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் நேற்று 31.01.2024 காலை தப்பியோடியுள்ளமை தொடர்பில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.

கஞ்சா விற்பனை மற்றும் வைத்திருந்தமை குற்றச்சாட்டில் கடந்த 26.01.2024 அன்று நெளுக்குளம் பொலிஸாரினானால் கைது செய்யப்பட்ட 28 வயதுடைய இளைஞன் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் வவுனியா சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் 29.01.2024 அன்று சிறைச்சாலையில் சந்தேகநபரான 28வயதுடைய இளைஞருக்கு ஏற்பட்ட சுகயீனம் காரணமாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.

இந்நிலையிலேயே 31.01.2024 அன்று காலை 6 மணியளவில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலிருந்து தப்பியோடியுள்ளார். தப்பியோடிய குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை வவுனியா பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா புளியங்குளத்தில் பொலிசாரின் வாகனத்தின் மீது தாக்குதல் : ஒருவர் கைது!!

வவுனியா புளியங்குளம் பொலிஸ் நிலைய வாகனத்தின் மீது தாக்குதல் மேற்கொண்ட ஒருவரை நேற்று (31.01.2024) இரவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்கான வாகனத்தின் சென்ற பொலிஸாரின் வாகனத்தின் மீது வீதியில் நின்ற நபர் ஒருவரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த நபரை புளியங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் மீது மேற்கொள்ளப்படும் மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டவரை வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மேலதிக வகுப்புக்கு செல்ல பணமில்லை : விரக்தியில் மாணவி எடுத்த விபரீத முடிவு!!

தனியார் வகுப்புக் கட்டணம் செலுத்த பணம் இல்லாத சோகத்தில் மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் பதுளை – புவக்கொடமுல்ல பிரதேசத்தில் நேற்று முன்தினம் (30.01) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் பதுளை – புவக்கொடமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் தரம் 11 இல் கல்வி கற்கும் ஆயிஷா பர்வீன் என்ற மாணவியே தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவி இரத்த அழுத்த மருந்தை அளவுக்கு அதிகமாக உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவர் தனது தாயாரிடம் கணித வகுப்புகளுக்கு பணம் கேட்டுள்ள நிலையில்,அங்கு தனது தந்தை மற்றும் அவரது தாயாருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் மனமுடைந்த மாணவி இந்த விபரீத முடிவை எடுத்ததாக கூறப்படுகின்றது.

அவரை உடனடியாக பதுளை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும் மாணவி உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.