4 வயதுக் குழந்தை கொடூரக் கொலை.. சடலத்தை காரில் வைத்துக்கொண்டு சுற்றித் திரிந்த தாய்!!

குழந்தையை கொலை செய்த வழக்கில் தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். KTLA, KABC மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் ஆகிய செய்தி நிறுவனங்களின்படி, குழந்தையைக் கொன்றதற்காக கைது செய்யப்பட்ட பெண் கலிபோர்னியாவைச் சேர்ந்த மரியா அவலோஸ், 38. இவரது மகள் மியா கோன்சலேஸ் (4) கொலை செய்யப்பட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு கிழக்கு லாஸ் ஏஞ்சல்ஸில் காரில் குழந்தை மியாவின் உடலுடன் மரியா கைது செய்யப்பட்டார்.அப்போது குழந்தையால் பேசவோ, சுவாசிக்கவோ முடியவில்லை.

சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரித்தபோதுதான் உண்மை தெரியவந்தது. கொடூரமான குற்றத்தின் அடிப்படையில், மரியா உடனடியாக கைது செய்யப்பட்டார். இதுகுறித்து குழந்தை மியாவின் தந்தை கூறும்போது, ​​“கடந்த சில வாரங்களாக மரியா பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.

விரக்தியில் சில வாரங்களுக்கு முன் மியாவை தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார்,” என்றார்.குழந்தையுடன் தனக்கு தொடர்பில்லை என அவர் தெளிவுபடுத்தியுள்ளதாக தெரிகிறது.குழந்தை மியா பற்றி குடும்பத்தினர் கூறுகையில், “மியா மிகவும் நல்ல குழந்தை.

அவள் எங்கள் வீட்டின் வெளிச்சம். இது அவளுக்கு நடந்திருக்கக் கூடாது; இப்படி ஒரு மரணம் அவளுக்கு நேர்ந்திருக்கக் கூடாது.உண்மையில் கடந்த சில நாட்களாக மரியாவை தொடர்பு கொள்ள முயன்று வருகிறோம். அவள் மன அழுத்தத்தில் இருப்பதாகக் கூறி பேச மறுத்தாள்.

இப்போது சிறையில் இருந்து எங்களை அழைக்கிறார். அவளுக்கு இன்னும் என்ன வேண்டும்?” வேதனையுடன் பேசினார்கள். மேலும் குழந்தையின் இறப்புக்கான காரணத்தை பரிசோதித்த மருத்துவர், “குழந்தையின் கழுத்து நெரிக்கப்பட்டு மணிக்கட்டில் அடிபட்டு காயம் ஏற்பட்டது. அதில் அவர் இறந்தார்,” என்றார்.

மாப்பிள்ளை பிடிக்காமல் கிணற்றில் குதித்த தங்கையைக் காப்பாற்ற குதித்த அண்ணனும் பலியான பரிதாபம்!!

தனக்கு கல்யாணம் செய்து வைப்பதற்காக பார்த்திருக்கும் மாப்பிள்ளையைப் பிடிக்கவில்லை என்று கூறியும், அதே நபருடன் திருமணம் செய்து வைக்க முயற்சித்ததால், எதிர்ப்பு தெரிவித்து கிணற்றில் குதித்து தங்கையைக் காப்பாற்ற அண்ணனும் கிணற்றில் குதித்த நிலையில், இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கர்நாடகா மாநிலம், சிஞ்சோலுவைச் சேர்ந்தவர் சந்தீப்(23). இவரது தங்கை நந்தினி(19). நந்தினிக்கு திருமணம் செய்வதற்காக மாப்பிள்ளை பார்த்து வந்த நிலையில், பெற்றோர் பார்த்திருக்கும் மாப்பிள்ளையை நந்தினிக்கு பிடிக்கவில்லை.

இதனால் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்த மாப்பிள்ளையைத் தான் திருமணம் செய்ய வேண்டும் என்று நந்தினியின் குடும்பத்தினர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் மனஉளைச்சலில் இருந்த நந்தினி, நேற்று மாலை திடீரென கிணற்றில் குதித்தார். இதைப் பார்த்த அதிர்ச்சியடைந்த நந்தினியின் சகோதரர் சந்தீப் தங்கையைக் காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்தார். ஆனால், இருவருக்கும் நீச்சல் தெரியாததால் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.

தகவல் அறிந்த கிராமத்தினர் விரைந்து வந்து சந்தீப், நந்தினி உடல்களை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து சிஞ்சோலி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து உயிரிழந்த இருவரின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அண்ணன், தங்கை உயிரிழந்த சம்பவம், படபள்ளி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமாகி நான்கு மாதம்… மனைவி, காதலனை வெட்டிக் கொன்ற முன்னாள் கணவன்!!

திருமணமாகி நான்கே மாதங்களில், தன்னுடன் சேர்ந்து வாழாமல் பிரிந்து சென்ற மனைவியையும், அவரது காதலனையும் முன்னாள் கணவர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாவட்டம், பெல்காம் மாவட்டத்தில் கொக்கடனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தௌபிக் காடி(24). கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஹீனகௌசர் சுதரனே(19) எனும் இளம்பெண்ணுடன் தெளபிக் காடிக்கு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் திருமணமான ஒரே மாதத்தில் தனது காதலன் யாசினுடன்(21) வீட்டை விட்டு வெளியே கணவரை பிரிந்து சென்றார் ஹீனகௌசர்.

இதுதொடர்பாக ஒன்றரை மாதங்களுக்கு முன்பு கிராம பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து நடைபெற்றது. அப்போது தனது கணவருடன் வாழமாட்டேன் என்றும், காதலனுடன் தான் சேர்ந்து வாழ்வேன் என்று ஹீனகௌசர் சுதரனே திட்டவட்டமாக சொன்னார்.

இதனால் கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இந்நிலையில், யாசினை ஹீனாகௌசருக்கு ஊர் பெரியவர்கள் திருமணம் செய்து வைத்தனர். இதனால், தனது மனைவி மற்றும் அவரது காதலன் மீது தௌபிக் ஆத்திரத்தில் இருந்தார்.

நேற்று இரவு யாசின் வீட்டிற்கு அரிவாளுடன் சென்ற தௌபிக், தன் முன்னாள் மனைவி ஹீனகௌசரை சரமாரியாக வெட்டி விட்டு, அவரது காதலன் யாசினையும் வெட்டினார். அவர்களைக் காப்பாற்ற வந்த அமினாபாய் பகுடா, மாமனார் முஸ்தபா முல்லா ஆகியோரையும் தௌபிக் அரிவாளால் வெட்டி விட்டுத் தப்பியோடி விட்டார்.

இதுகுறித்த தகவல் அறிந்த போலீஸார் விரைந்து வந்து பார்த்த போது, யாசின், ஹீனாகௌசர் ஆகியோர உயிரிழந்து கிடந்தனர். படுகாயங்களுடன் இருந்த அமினாபாய், முஸ்தபா ஆகியோரை மீட்டு மிராஜில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த இரட்டைக் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், தௌபிக்கை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மன அழுத்ததில் மனைவியை சுட்டுக் கொன்று கணவனும் தற்கொலை செய்த சோகம்!!

காஜியாபாத்தின் ரூர்க்கியை சேர்ந்தவர் வினோத் சவுத்ரி. இவர் சில ஆண்டுகளாக தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். பின்னர் வேலையை விட்டுவிட்டு, அதன் மூலம் வருமானம் ஈட்டுவதற்காக தனது கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இவரது மனைவி தீபக். தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். வினோத்துக்கு கடந்த சில வருடங்களாக சிறுநீரக தொற்று இருந்தது. இதற்காக வினோத் மருத்துவ சிகிச்சை பெற்று வேலையை விட்டு விவசாயத்தில் ஈடுபட்டார்.

ஆனால், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன், வினோத்துக்கு மீண்டும் சிறுநீரக தொற்று ஏற்பட்டு, மன உளைச்சலில் இருந்துள்ளார். இதில், வாழ்க்கையை வெறுத்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த வினோத், கால்வாயில் விழுந்து இறக்க முயன்றார்.

வினோத்தின் நண்பர் ஒருவர் அவரைக் காப்பாற்றி அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்து அவருக்கு மனநல சிகிச்சை அளிக்கச் சொன்னார். ஆனால் வினோத் ஒத்துழைக்கவில்லை என்பது தெரிய வந்தது. அவர் தொடர்ந்து மன அழுத்தத்தில் இருக்கிறார்.

தான் தற்கொலை செய்ய போவதாக ஒருமுறை தன் தங்கையிடம் கூறியிருந்தார். இந்நிலையில், வினோத்துக்கு பினு என்ற நண்பர் இருந்துள்ளார், அவரிடம் இருந்து கடந்த வாரம் துப்பாக்கியை வாங்கி காரில் மறைத்து வைத்திருந்தார் வினோத்.

கடந்த செவ்வாய்க்கிழமை, மதுபன் பாபுதம் அருகே காரில் தம்பதியர் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததும், போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று இறந்தவர்கள் வினோத் மற்றும் அவரது மனைவி தீபக் என அடையாளம் கண்டனர்.

தீபக் காருக்கு வெளியேயும், வினோத் காருக்குள்ளும் இறந்து கிடந்தனர். வினோத் கையில் துப்பாக்கி இருந்ததால், வினோத் தனது மனைவி தீபக்கை கொன்று தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே வினோத்திடம் துப்பாக்கியை கொடுத்த பினுவை போலீசார் தேடி வருகின்றனர்.

நண்பரை நம்பிசென்ற 26 வயது யுவதிக்கு நேர்ந்த கொடுமை : நால்வர் கைது!!

கன்னந்தோட்டையில்..

26 வயது யுவதியை தபால் நிலைய ஊழியர் ஒருவரின் வீட்டிற்கு அழைத்துச்சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நான்கு தபால் நிலைய ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் கைதானவர்கள் ருவான்வெல்ல மற்றும் இம்புலான பிரதேசங்களில் உள்ள தபால் நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்களாவர். பாதிக்கப்பட்டவர் கன்னந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய யுவதியாவார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

பாதிக்கப்பட்ட யுவதி கடந்த 26 ஆம் திகதி தனது தாயுடன் ருவான்வெல்ல பிரதேசத்தில் உள்ள தபால் நிலையத்தியம் ஒன்றிற்கு சென்றிருந்துள்ளார். அங்கு தபால் நிலையத்தில் வைத்து அறிமுகமான இளைஞர் ஒருவருடன் நட்பாக பழகி வந்த நிலையில்,

இளைஞன் யுவதியை கன்னந்தோட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். அதன் பின்னர் தபால் நிலையங்களில் கடமையாற்றும் தனது 3 நண்பர்களையும் அழைத்து வந்த நிலையில் சந்தேக நபர்கள் யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட யுவதி இது தொடர்பில் குடும்பத்தினருக்கு எதுவும் தெரிவிக்காத நிலையில், தபால் நிலைய ஊழியர் வீட்டிற்கு யுவதி சென்றிருந்தமை தொடர்பில் யுவதியின் மூத்த சாகோதரிக்கு நபரொருவர் மூலம் தெரியவந்துள்ளது.

மூத்த சகோதரி இது தொடர்பில் தனது இளைய சகோதரியிடம் விசாரித்த போது அவர் சம்பவத்தன்று நடந்த விடயங்களை கூறியுள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட யுவதியின் தாய் சம்பவம் தொடர்பில் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

சம்பவம் ட் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட யுவதி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ருவான்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்தியர்கள் தவிர்ந்த ஏனையவர்கள் பணிப்புறக்கணிப்பு : நோயாளர்கள் அவதி!!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை தாதியர்கள், சிற்றூழியர்கள், மருந்தாளர்கள், தொழிநுட்பவியலாளர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்று 01.02.2024 (சுகயீன விடுமுறை) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பள அதிகரிப்பு, ஊழியர் பற்றாக்குறையினை உடன் நிவர்த்தி செய், வாழ்வாதாரத்தினை அதிகரி போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கடந்த மாதம் 11ம் மற்றும் 16ம் ஆகிய திகதிகளில் பணிப்புறக்கணிப்பில் (சுகயீன விடுமுறை) ஈடுபட்டிருந்த போதிலும் அதற்கு எவ்வித தீர்வும் கிடைக்கப்பெறாத நிலையில் வைத்தியர்கள் தவிர்ந்த ஏனையவர்கள் இன்று (சுகயீன விடுமுறை) பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கை முழுவதும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும் அவசர நோயாளர் பிரிவு, நோயாளர் விடுதி, விபத்துப்பிரிவு, சத்திர சிகிச்சைப் பிரிவு உட்பட்ட சில சேவைகளில் மட்டுப்படுப்பட்ட சிற்றூழியர்கள் மற்றும் தாதியர்கள் சேவைகள் ஈடுபடுவதுடன்,

வெளிநோயாளர் பிரிவு, கிளினிக் பிரிவு, ஸ்கானிங், கதிர் பிரிவு, கதிரியக்கப்பிரிவு போன்ற ஏனைய சேவைகளிலிருந்து தாதியர்கள், சிற்றூழியர்கள், மருந்தாளர்கள், தொழிநுட்பவியலாளர்கள் முற்றாக 24மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக கிளினிக், வெளிநோயாளர் பிரிவு, மருந்தக பிரிவு ஆகியவற்றிக்கு வருகைதந்த நோயாளிகள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.

மீண்டும் ஒரு காற்று சுழற்சி இலங்கைத்தீவுக்கு அண்மையில் பயணிக்கும்!!

இலங்கைத் தீவுக்கு தெற்காக நகரும் காற்று சுழற்சி காரணமாக கடந்த (28.01.2024) ஆம் திகதி முதல் பல பாகங்களில் மழை காலநிலை நீடித்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆனால் அந்த காற்று சுழற்சியின் நகர்வு தாமதம் காரணமாக கடந்த (29.01.2024) ஆம் திகதி முதல் சற்று கனத்த மழை பெய்தது.
தற்போது இந்த காற்று சுழற்சி இலங்கையின் தெற்காக நகர்ந்து கொண்டிருக்கின்றது.

காற்று சுழற்சி நகர்ந்து சென்ற பின் பெரும்பாலும் இன்று முதல் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதன் பின்னர் சில நாட்களுக்கு பெரும்பாலும் சீரான காலநிலையே நீடிக்கும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மீண்டும் ஒரு காற்று சுழற்சி இம்மாதம் எதிர்வரும் 13, 14, அல்லது 15ஆம் திகதியளவில் இலங்கைத் தீவுக்கு அண்மையாக வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

கடவுச்சீட்டு கட்டணம் இரு மடங்காக அதிகரிப்பு!!

கடவுச்சீட்டு கட்டணம் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, சாதாரண கடவுச்சீட்டு சேவைகளுக்கான கட்டணங்கள் நாளை முதல் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கடவுச்சீட்டு விண்ணப்பங்களுக்கான கட்டணம் 5,000 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு 10,000 ரூபாவாக அறவிடப்படவுள்ளது.

இலங்கையில் எரிபொருள் விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு!!

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள்களின் விலையில் திருத்தம் செய்து அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைத் திருத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 371 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 8 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 456 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை, 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 363 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 7 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 468 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலை 26 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 262 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாவனைக்கு தயாராகும் முதுமையை தடுக்கும் மருந்து : இலங்கை மருத்துவ துறையின் சாதனை!!

முதுமையை தடுக்கும் மருந்து..

கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல் ஆராய்ச்சி பீடத்தால், இலங்கையில் முதன்முறையாக முதுமையை தடுக்கும் ஊட்டச்சத்து மாத்திரை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாத்திரையானது, இயற்கையான மூலப்பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளதகாகவும் தற்போது அந்த மூலப்பொருட்களை பற்றிய தகவல்களை வெளியிட முடியாது எனவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல் பேராசிரியர் சமீர ஆர். சமரகோன் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த முதுமையை தடுக்கும் மாத்திரையானது நீண்ட கால ஆய்விற்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் நான்கு மாதங்களுக்குள் அது பாவனைக்கு வெளிவர தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த மாத்திரை இயற்கை ஆயுர்வேத முறைப்படி உருவாக்கப்பட்டிருப்பதால் இலங்கையின் ஆயுர்வேத திணைக்களத்திடம் உரிய அனுமதி பெறப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல் பீடத்தால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 25 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடிய மருந்து தற்போது சந்தையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வரி இலக்கத்தை பெறாதவர்களுக்கு விதிக்கப்படவுள்ள அபராதம் : எடுக்கப்பட்டுள்ள திடீர் தீர்மானம்!!

இலங்கையில்..

வரி இலக்கத்தை பெறாத நபர்களுக்கு அபராதம் விதிப்பதை உள்நாட்டு இறைவரி திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது. நிதியமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி முதலாம் திகதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வரி கோப்பினை ஆரம்பிக்க வேண்டியது கட்டாயம் எனவும் அரசாங்கம் அறிவித்திருந்தது.

உரிய வரி அடையாள எண்ணைப் பெறாதவர்களுக்கு 50,000 ரூபா அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இதனை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதன் காரணமாக பெப்ரவரி முதலாம் திகதி முதல் அதனை கட்டாயமாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வற் வரி பதிவுச்சான்றிதழை வணிக ஸ்தாபனத்தில் தெளிவாகக் காட்சிப்படுத்துவதை உள்நாட்டு இறைவரித்திணைக்களம் கட்டாயமாக்கியுள்ளது.

குறித்த நிறுவனத்தின் அனைத்து கிளைகளிலும் சான்றிதழின் புகைப்பட நகல் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

200 கோடி ரூபா மோசடி : இலங்கை நடிகை தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு!!

இலங்கையில்..

200 கோடி ரூபா மோசடி வழக்கில் இலங்கையை சேர்ந்த பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ( Jacqueline Fernandez) அளித்த மனு மீதான விசாரணையை ஏப்.15 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த மோசடி வழக்கில் சுகேஷ் சந்திரசேகருடன் பாலிவுட் நடிகை ஜெக்கலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார்.

போர்ட்டீஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் நிறுவனர் சிவிந்தர் மோகன் சிங் மனைவியை மிரட்டி 200 கோடி பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கப் பிரிவு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் ஜெக்கலின் பெயர் இடம்பெற்றது.

இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார் என்று தெரிந்தும், தொடர்ந்து அவருடன் பணபரிவர்த்தனை வைத்துக் கொண்டதாக ஜெக்கலின் மீது குற்றம்சாட்டப்படது.

வழக்கில் ஜெக்கலின் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி இடைக்கால ஜாமீன் பெற்றார். ஆனால் நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறக்கூடாது என்ற நிபந்தனையுடன் ஜாமீன் பெற்றார்.

திரைப்பட நடிகையாக இருப்பதால், ஜெக்கலின் பெர்னாண்டஸ் அடிக்கடி வெளிநாடு செல்ல நேரிடும் என நீதிமன்றத்தில் ஜாக்குலின் தரப்பு கூறியது. இதனையடுத்து ஜெக்கலின் நீதிமன்ற நிபந்தனைகளை தவறாக பயன்படுத்தவில்லை என்ற அடிப்படையில் ஜாமீன் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டன.

அந்த வகையில், ஜெக்கலின் பெர்னாண்டஸ் அவர் செல்லும் நாடுகள், அவர் தங்கியிருக்கும் இடம், தொடர்பு எண்கள் போன்ற பிற விவரங்கள் உட்பட அவரது பயணத்தின் விரிவான விவரங்களை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த வழக்கு தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. தொடர்ந்து, பணமோசடி வழக்கில் தன் மீது பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என நடிகை ஜெக்கலின் பெர்னாண்டஸ் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஏப்.15 ஆம் திகதிக்கு ஒத்தித்துள்லதாக தெரிவிக்கப்படுள்ளது.

வரும் 5ம் திகதி திங்கட்கிழமை அரசாங்க விடுமுறை வழங்குவது தொடர்பில் வெளியான தகவல்!!

இலங்கையில்..

எதிர்வரும் பெப்ரவரி 5ஆம் திகதி பொது விடுமுறை வழங்கப்படுமா என்பது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுதந்திர தினம் ஞாயிற்றுக்கிழமை வருவதால் அதற்கு அடுத்த நாள் விடுமுறை வழங்கப்படுவது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை. இது தொடர்பில் அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்னவிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பின.

அதற்கு பதிலளித்தவர் ​​4ஆம் திகதி சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 5ஆம் திகதி விடுமுறை வழங்குவது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

டிக் டொக் மோகத்தால் ஏற்பட்ட விபத்து : இளைஞர்களுக்கு நேர்ந்த கதி!!

ஹொரணையில்..

மோட்டார் சைக்கிளிலை செலுத்திக்கொண்டு கையடக்கத் தொலைபேசியில் டிக் டொக் காணொளி எடுக்க முனைந்த இளைஞர்கள் காரில் மோதி விபத்துள்குள்ளாகியுள்ளனர்.

இந்த விபத்து ஹொரணை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தலங்கம பிரதேசத்தை சேர்ந்த 5 இளைஞர்கள் 4 மோட்டார் சைக்கிள்களுடன் கொழும்பு பிரதேசத்தில் இருந்து ஹொரணை பிரதேசத்தை நோக்கி பயணித்துள்ளனர்.

இதன்போது மோட்டார் சைக்கிளை அதிக வேகத்தில் செலுத்திச்செல்வதை காணொளி எடுக்க முனைந்த போது இரு இளைஞர்கள் செலுத்திய மோட்டாள் சைக்கிளின் பின்புறத்தில் கார் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த இரு இளைஞர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய 5 இளைஞர்களில் 2 இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் , ஏனைய 2 இளைஞர்கள் 3 மோட்டார் சைக்கிள்களுடன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஒரு இளைஞர் தனது மோட்டார் சைக்கிளுடன் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரகஹஹேன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கைக்கு அருகில் மீண்டும் பயணிக்கவுள்ள காற்று சுழற்சி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

இலங்கையில்..

இலங்கைக்கு அருகில் மீண்டும் ஒரு காற்று சுழற்சி பயணிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. இலங்கைக்கு தெற்காக நகரும் காற்று சுழற்சி காரணமாக எதிர்வரும் 13, 14, அல்லது 15 ஆம் திகதியளவில் இலங்கைக்கு அருகில் மீண்டும் ஒரு காற்று சுழற்சி பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் சில நாட்களுக்கு பெரும்பாலும் சீரான காலநிலையே நீடிக்கும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. தீவின் ஏனைய பகுதிகளில் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா, சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ. வரை பலத்த மழை பெய்யக்கூடும் என்று கூறப்படுகிறது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் தருணங்களில் பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கோரியுள்ளது

சிறைச்சாலையில் திடீரென உயிரிழந்த இளைஞன்!!

அநுராதபுரத்தில்..

22 வயதுடைய இளைஞர் ஒருவர் பொலிஸ் நிலைய சிறைக்கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது சுகயீனமடைந்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அநுராதபுரத்தைச் சேர்ந்த ஷானுக கிஹான் மரம்பகே என்ற 22 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டாவது தடவையாகவும் கைதுசெய்யப்பட்ட இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று (30) இந்த இளைஞனும் மேலும் மூன்று இளைஞர்களும் அநுராதபுரம், போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் அநுராதபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டு பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.