வேலையே விட்டு இடைநிறுத்திய பெண் அதிகாரி கொடூர கொலை.. கார் சாரதியின் கொடூர செயல்!!

பிரதிமா (45) கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மூத்த அதிகாரியாக பணியாற்றி வந்தார். அவர் மாநில அரசின் சுரங்கம் மற்றும் புவியியல் துறையில் துணை இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். பெங்களூருவில் உள்ள தொட்டகல்லசந்திராவில் வசித்து வருகிறார்.

ஆனால் கடந்த நவம்பரில் யாரோ அவரை படுகொலை செய்து விட்டு வீட்டில் வைத்து கொடூரமாக கத்தியால் குத்தி கொன்றனர் . இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

வீட்டில் இருந்த தங்க நகைகள் உள்பட ரூ.5 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. தீவிர விசாரணைக்கு பின் கிரண்குமாரை போலீசார் கைது செய்தனர்.

பிரதிமா பணிபுரிந்த அதே நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்த 31 வயதான இந்த கிரண் குமார் தான் பிரதிமாவை கொன்றதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், இந்த கொலைக்கான காரணமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரண்குமார் ஏற்கனவே டிரைவர் வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். அதனால், மீண்டும் தனக்கு வேலை வழங்க வேண்டும் என பிரதிமாவிடம் கேட்டு வந்தார்.

ஆனால், தவறு செய்ததால் தான் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும், மீண்டும் பணியில் அமர்த்த முடியாது என்றும் உறுதியாக கூறியுள்ளார் பிரதிமா. வேலை தர மறுத்த கோபத்தில் அவரை கொன்று நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றதாக கிரண்குமார் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

அதாவது வெறும் 8 நிமிடத்தில் பிரதிமாவை கொன்றான் கிரண். இது தொடர்பாக பெங்களூரு போலீசார் தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த சம்பவம் நடந்து இன்றுடன் 3 மாதங்கள் ஆகிறது.. இந்த 3 மாதங்களாக விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், மொத்தம் 70 சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைகளுடன் 600 பக்க ஆவணத்தையும் போலீசார் சமர்ப்பித்துள்ளனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், பிரதிமாவின் அதிகாரப்பூர்வ கார் டிரைவராக கிரண் 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.பலமுறை கவனக்குறைவாக காரை ஓட்டியிருக்கிறார்.

இதற்கு பிரதிமா அவனை பலமுறை திட்டியிருக்கிறார். அதனால்தான் கிரணை இந்த வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்திருக்கிறார். “பிரதிமாவை மீண்டும் வேலைக்கு அமர்த்துமாறு கிரண் கேட்டுள்ளார். ஆனால் ப்ரதிமா சம்மதிக்கவில்லை. அதனால் தான் பிரதிமா மீது கோபம் கொண்டு அவரை கொலை செய்யும் அளவிற்கு சென்றுவிட்டான். குற்றப்பத்திரிகையில் என்ன பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிகிச்சைக்கு பணமில்லை : நாட்டை உலுக்கிய தம்பதிகளின் விபரீத முடிவு!!

வைத்தியசாலை சிகிச்சைக்கு தேவையான பணத்தை செலுத்த முடியாததால் தம்பதிகள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் சூரியவெவ பிரதேசத்தில் கடந்த 4 ஆம் திகதி இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. இவ்வாறு உயிரிழந்தவர்கள் சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த 58 மற்றும் 54 வயதுடைய தம்பதிகளாவர்.

மனைவி காசநோயினால் பாதிக்கப்பட்டு பல காலமாக சுகயீனமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலை சிகிச்சைக்கு தேவையான பணத்தை செலுத்த முடியாததால் கணவர் மனைவிக்கு விஷம் பானத்தை அருந்த கொடுத்து தானும் அருந்திவிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிகிற்சைக்கு பணமில்லாததால் தம்பதிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை சூரியவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவியுடன் தகராறு : 14 மாத பெண்குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தை!!

தெலங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டம் கிம்யாதாண்டா கிராமத்தில் வசித்து வருபவர் 32 வயது திருப்பதி. இவரது மனைவி 28 வயது சிவலி. இவர்களின் பெண்குழந்தை சசிகலா பிறந்து 14 மாதங்கள் ஆகிறது.

திருப்பதிக்கு திருமணமான சில மாதங்களில் இருந்தே மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். அடுத்தடுத்த தகராறு காரணமாக சிவலி தாங்க முடியாத மன உளைச்சலுக்கு ஆளானார்.

இதனையடுத்து சிவலி கணவனை விட்டு பிரிந்து ஐதராபாத்தில் உள்ள தாய் வீட்டுக்கு குழந்தையுடன் சென்றுவிட்டார். இந்நிலையில் பிப்ரவரி 4ம் தேதி இரவு திருப்பதி மாமியார் வீட்டுக்கு சென்று மனைவி சிவலியிடம் குடும்பம் நடத்த வரும்படி அழைப்பு விடுத்தார்.

சிவலி, சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்யும் உன்னுடன் வரமாட்டேன் எனக் கூறிவிட்டார். ஆத்திரத்தில் திருப்பதி குழந்தையை தூக்கிக்கொண்டு ஆட்டோவில் தனது கிராமத்திற்கு புறப்பட்டார்.

ஆட்டோவில் வரும்போது மனைவியிடம் செல்போனில் பேச முயற்சித்தார். ஆனால் சிவலி போனை எடுக்கவே இல்லை எனத் தெரிகிறது. இதனால் திருப்பதி, பிஜினப்பள்ளி புறநகர் பகுதியில் ஆட்டோ சென்று கொண்டிருந்த போது ஆட்டோவிலேயே குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதையறிந்த ஆட்டோ ஓட்டுனர் அதிர்ச்சி அடைந்தார்.

ஆனால் திருப்பதி ஆட்டோவை காவல்நிலையத்துக்கு விடும்படிகூறினார். அதன்படி ஆட்டோவில் சென்று குழந்தையின் உயிரிழந்த சடலத்துடன் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார்.

பிரிந்து சென்ற காதல் மனைவி.. மனமுடைந்த கபடி வீரர் எடுத்த விபரீத முடிவு!!

கர்நாடக மாநிலம், சிக்கமகளூரு தாலுகா, தெகுரு கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் ராஜ் அரஸ். தேசிய கபடி வீரரான வினோத், ஒரு பெண்ணை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

இந்நிலையில் வினோத் ராஜ் அரஸ் அந்த பெண்ணை 2023 டிசம்பர் 10ம் தேதி திருமணம் செய்தார்.இந்நிலையில் அவரது மனைவி டிசம்பர் 31ம் தேதி வினோத்தை பிரிந்துள்ளார். இதனால் வினோத் மன உளைச்சலுக்கு ஆளானார்.

இந்த சம்பவம் குறித்து மகிளா காவல் நிலையத்தில் டிச., 31ல் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் வினத் ராஜ் அரஸ் திருமணத்தில் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மனைவி பிரிந்த சோகத்தால் வினோத் ராஜ் அரஸ் கடந்த வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதையடுத்து அவர் மங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று இரவு அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே மாதத்தில் காதல் மனைவி பிரிந்து சென்ற தேசிய கபடி வீரர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொலையில் முடிந்த முக்கோண காதல் விவகாரம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

திங்களன்று கவுகாத்தியில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடந்த ஒரு முக்கோணக் காதல் கொடூரமான கொலையில் முடிந்தது, மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் அரை ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் கொல்கத்தாவிற்கு பறக்கும் முன் விரைவாக பிடிக்கப்பட்டார்.

சந்தீப் குமார் காம்ப்ளே (44) என்பவர் கவுகாத்தி விமான நிலையம் அருகே உள்ள அசாரா ஹோட்டலில் நேற்று மதியம் இறந்து கிடந்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் – அஞ்சலி ஷா, 25, மற்றும் அவரது காதலன் பிகாஷ் குமார் ஷா, 23 – இரவுக்குப் பிறகு கொல்கத்தாவிற்கு விமானத்தில் ஏற இருந்தனர், ஆனால் உடனடி பொலிசார் அவர்கள் விமான நிலையத்தை அடைவதற்கு முன்பே கைது செய்ய வழிவகுத்தது.

புனேவைச் சேர்ந்த கார் டீலர் காம்ப்ளே, அவரது அறையின் தரையில் படுத்திருந்த ஹோட்டல் ஊழியர்களால் அவரது மூக்கிலிருந்து அதிக ரத்தம் வழிந்ததை முதலில் கண்டார்.

கொல்கத்தா விமான நிலையத்தில் உள்ள ஒரு உணவகத்தில் பணிபுரிந்த அஞ்சலி, கடந்த ஆண்டு விமான நிலையத்தில் நட்பாக இருந்த காம்ப்ளே என்பவருடன் உறவில் இருந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.

இருப்பினும், அஞ்சலி ஏற்கனவே பிகாஷுடன் உறவில் இருந்ததால் இது சிக்கல்களுக்கு வழிவகுத்தது, அவர் அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு அழுத்தம் கொடுத்து வந்தார். பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியது என்னவென்றால், பாதிக்கப்பட்ட பெண் தனது தொலைபேசியில் அவருடன் நெருக்கமான படங்களை வைத்திருந்தார், அஞ்சலி விசாரணையின் போது கூறினார்.

இது தம்பதியர் – அஞ்சலி மற்றும் பிகாஷ் – அந்த புகைப்படங்களில் காம்ப்ளேவை எதிர்கொள்ள ஒரு திட்டத்தை வகுக்க தூண்டியது. அவர்கள் முன்னதாக கொல்கத்தா விமான நிலையத்தில் சந்திக்க திட்டமிட்டிருந்தனர், ஆனால் காம்ப்ளே அதை கவுகாத்திக்கு மாற்றினார், அங்கு அவர் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒரு அறையை பதிவு செய்தார்.

இருவரும் ஒன்றாக குவஹாத்திக்கு பறந்தனர் ஆனால் அங்கு சென்றதும் பிரிந்தனர். காம்ப்ளேவுக்குத் தெரியாமல் அதே ஹோட்டலில் தனக்கென ஒரு அறையை பிகாஷ் பதிவு செய்தான்.

அவர்களின் திட்டத்தின்படி, அஞ்சலியை காம்ப்ளே நகரத்தில் சந்தித்து, அவர்கள் ஒன்றாக ஹோட்டலுக்குச் சென்றனர் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையில் பிகாஷ் தனியாக வந்தார்.

அவர்களது சந்திப்பின் போது, ​​பிகாஷின் வருகை காம்ப்ளேவை ஆத்திரமடையச் செய்தது மற்றும் இருவருக்கும் இடையே சண்டை வெடித்து தாக்குதலில் ஈடுப்பட்டனர். சண்டையில் காம்ப்ளே படுகாயமடைந்தார்.

அதைப் பார்த்த காதல் ஜோடி தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் காம்ப்ளேக்கு சொந்தமான இரண்டு மொபைல் போன்களையும் எடுத்துச் சென்றனர் – அதில் அவர்களது அந்தரங்க புகைப்படங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

பிகாஷிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பு ஹோட்டல் அதிகாரிகளை எச்சரித்தது, அவர்கள் கவுகாத்தி நகர காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் உடனடியாக ஹோட்டல் பதிவு, சிசிடிவி காட்சிகள் மற்றும் விமான நிலைய பயணிகளின் பட்டியல் மூலம் சந்தேகத்திற்குரிய இரண்டு நபர்களை பூஜ்ஜியமாக்கினர்.

இரவு 9:15 மணிக்கு கொல்கத்தா செல்லும் விமானத்தில் ஏறுவதற்கு முன் அஞ்சலியும் பிகாஷும் ஹோட்டலுக்கு அருகில் கைது செய்யப்பட்டனர். அவர்களின் சண்டைக்கு வழிவகுத்த நிகழ்வுகளை ஒன்றாக இணைக்க போலீசார் முயற்சிப்பதால் வழக்கு விசாரணையில் உள்ளது.

காதல் மனைவியை உயிரோடு தீயிட்டு கொளுத்திய கணவன்!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பார்வதியாபுரம் கிராமத்தில் பார்த்திபன் என்பவரும், குடியாத்தம் பொன்னம்பட்டி பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு கடந்த 6 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும், நான்கு வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

பார்த்திபன் குடியாத்தம் பகுதியில் உள்ள கறிக்கடையில் வேலை செய்து வருகிறார். தனலட்சுமி குடியாத்தம் சந்தப்பேட்டை பகுதியில் பிரபல நகைக்கடையில் வேலை செய்து வருகிறார். தனலட்சுமியின் சித்தப்பா மகளான தங்கை இறந்து இன்று காரியம் நடைபெற்றது.

இதில் பார்த்திபன் காரிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று மனைவி தனலட்சுமிக்கும், பார்த்திபனுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே திடீரென வீட்டில் இருந்து தனலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது தனலட்சுமி தீக்காயங்களுடன் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் தனலட்சுமியை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தனலட்சுமியின் பெற்றோருக்கு பார்த்திபன் போன் செய்து தங்கள் மகள் தீயிட்டு கொளுத்திக் கொண்டதாகவும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளதாகவும் தெரிவித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

மருத்துவமனைக்கு கொண்டு வந்த தனலட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே தகவல் அறிந்து வந்த பெற்றோர்களும், உறவினர்களும் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கணவனே மனைவியை தீயிட்டுக் கொளுத்தி இருக்கலாம் என்று குற்றம் சாட்டுகின்றனர்.

தகவல் அறிந்து வந்த குடியாத்தம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன் தீயிட்டு கொளுத்தினாரா அல்லது மனைவியே தீயிட்டு கொளுத்திக் கொண்டாரா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு மனைவி பலத்த தீ காயங்களுடன் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முல்லைத்தீவில ஏஜமானின் உயிரை காப்பாற்ற முயற்சித்த நாய் : இறுதியில் நேர்ந்த சோகம்!!

முல்லைத்தீவில் உள்ள பகுதியொன்றில் நாயுடன் காட்டிற்குள் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் வெடியில் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்துள்ளார்.

இதன்போது, அவரது டைகர் எனப்படும் வளர்பு நாய் உறவினர்களிடம் வந்து தனது ஏஜமானின் ஆபத்து தொடர்பில் அசைவுகளை வெளிப்படுத்தியதை தொடர்ந்து உறவினர்களால் அவர் மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் ஒட்டுசுட்டான் மணவாளன் பட்டமுறிப்ப பகுதியில் நேற்றைய தினம் (05-02-2024) இடம்பெற்றுள்ளது. வெடிப்பில் இருந்து மீட்கப்பட்டவர் மணவாளன் பட்ட முறிப்பினை சேர்ந்த 7 பிள்ளைகளின் தந்தையான 66 அகவையுடை பழனி வடிவேல் ஆவர்.

இவர் தேன் எடுப்பதற்காக நேற்று காட்டிற்கு தனது வளர்ப்பு நாயுடன் சென்றுள்ளார். இதன்போது காட்டிற்குள் இருந்த சட்டவிரோத வெடிபொருள் வெடித்ததில் குறித்த குடும்பஸ்தர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் வளர்ப்பு நாய் தனியாக வீடு திரும்பி தனது சோகத்தினை வெளிப்படுத்தியுள்ளது.

இதனை அவதானித்த உறவினர்கள் காட்டிற்கு சென்றவரை காணவில்லை என உறவினர்கள் தேடி சென்றுள்ளனர். இதன்போது, அவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மாங்குளம் ஆதார மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிசிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்போது உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் தாக்கிய விவகாரம் : யாழ். பல்கலைக்கழக மாணவனை கைது செய்ய உத்தரவு!!

வட்டுக்கோட்டை பொலிஸார் தாக்கியதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவனை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த கட்டளையிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இந்த கட்டளையை வழங்கியுள்ளார்.

போதைப்பொருளுக்கு அடிமையான அவரை நீதிமன்றின் ஊடாக மறுவாழ்வு முகாமுக்கு அனுப்புமாறும் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் குறித்த நபர் பாடசாலை மாணவிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றமை தொடர்பில் ஆசிரியர்கள், மாணவிகளின் வாக்குமூலத்தை பதிவு செய்து நீதிமன்றில் தாக்கல் செய்யுமாறும் அவர் பணித்துள்ளார்.

நேற்றையை தினம் வட்டுக்கோட்டை பொலிஸார் தன்னை போக்குவரத்து விதி மீறியதாக வழிமறித்து வீதியில் வைத்து தாக்கியதுடன் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றும் தாக்கினார்கள் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் பல்கலைக்கழக மாணவன் முறைப்பாடு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பற்ற முறையில் மரம் வெட்டியதால் பறிபோன 14 வயது சிறுவனின் உயிர் : ஐவர் கைது!!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நியூட்டன் தோட்டத்தில் மரக்கிளை விழுந்து பாடசாலை மாணவனொருவர் பலியான சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுமதி பத்திரமின்றி, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி மரம் வெட்டிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். இதனையடுத்து அவர்களை எதிர்வரும் 12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நோர்வூட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி பயிலும் நியூட்டன் தோட்டத்தை சேர்ந்த முருகன் அஷான் என்ற 14 வயது மாணவன் நேற்று முன்தினம் சிகையலங்கார நிலையம் நோக்கி சென்றுள்ளார்.

இதன்போது வீதியில் சிலர் மரம்வெட்டிகொண்டிருந்துள்ளனர். அவ்வேளையில் மரக்கிளையொன்று சிறுவன்மீது விழுந்ததில் அவர் படுகாயம் அடைந்துள்ளார்.

டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாறப்பட்டார். வைத்தியசாலை செல்லும் வழியில் உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து சடலம் நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

இதனையடுத்து மரம் வெட்டிய ஐவர் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன், இச்சம்பவம் தொடர்பில் தோட்ட நிர்வாகத்திடமும் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது என நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

முல்லைத்தீவில் வேக கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்து!!

முல்லைத்தீவு – விசுவமடு பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து நேற்று (05.02.2024) மாலை இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு, பரந்தன் A35 பிரதான விதி ஊடாக புதுகுடியிருப்பு பகுதியில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த கார் விசுவமடு பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றை முந்தி செல்ல முற்பட்டுள்ளது.

இதன்போது வேக கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த கடையின் முன்பகுதியில் பொருட்கள் கொள்வனவு செய்வதற்கு வந்த வாடிக்கையாளர்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள், துவிச்சக்கரவண்டி மற்றும் முச்சக்கரவண்டி என்பனவற்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் இவ்விபத்தில் எவருக்கும் எந்த வித ஆபத்தும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் விபத்தில் சேதமடைந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் துவிச்சக்கர வண்டியையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பாடசாலையில் மரம் விழுந்து 5 வயது மாணவன் பரிதாபமாக பலி!!

கம்பளையில் பாடசாலையொன்றில் மரம் சரிந்து விழுந்ததில் மாணவரொருவர் உயிரிழந்துள்ளார். சம்வத்தில் 5 வயது மாணவரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை இந்த விபத்தில் சிக்கி இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்த 2 மாணவர்களும் சிகிச்சைக்காக கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

7 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன கணவர்.. தேடிச் சென்று பார்த்த மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டத்தில் உள்ள ஐசூர் போலீஸ் பகுதியை சேர்ந்தவர் லட்சுமண ராவ். அவர் 2015 இல் திருமணம் செய்து கொண்டார். லக்ஷ்மண் ராவுக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு மார்ச் மாதம் லட்சுமண ராவ் திடீரென மாயமானார்.இதுகுறித்து ஐசூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த ரீல்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் லக்ஷ்மண் ராவ் போன்று ஒரு திருநங்கையும் இருந்தார். லட்சுமண ராவின் குடும்பத்தினரும் இந்த வீடியோவை பார்த்து ஐசூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார், ரீல்சில் வைக்கப்பட்டிருந்த புகைப்படத்தில் இருந்த லட்சுமண ராவ் மற்றும் திருநங்கை குறித்து விசாரித்து தகவல் பெற்றனர்.

அப்போது அந்த ரீலை பதிவு செய்த ராஷ்மிகா, லட்சுமண ராவ் தோற்றத்துடன் இருக்கும் திருநங்கையின் முகவரியை போலீசாரிடம் கொடுத்தார். அந்த முகவரிக்கு போலீசார் சென்றபோது அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த திருநங்கையின் பெயர் விஜயலட்சுமி என்றும், 7 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன லட்சுமணராவ் திருநங்கை என்றும் கண்டுபிடித்தனர். பின்னர், விஜயலட்சுமி (லட்சுமணராவ்) காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

விஜயலட்சுமியின் குடும்பத்தினரும் அங்கு வந்தனர். அதன்பின், திருநங்கை விஜயலட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் அவரை மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாழச் சொன்னார்கள்,

ஆனால் அவர் காவல்துறையினரோ அல்லது அவரது குடும்பத்தினரோ சொல்வதை கேட்க மறுத்துவிட்டார். பெண்ணுக்குரிய குணங்கள் என்னிடம் உள்ளன. அதனால் எனக்கு மனைவி, குழந்தைகள் வேண்டாம். அவர்களுடன் வாழ்வது எனக்குப் பிடிக்கவில்லை.

திருநங்கையாக வாழ விரும்புவதாக திட்டவட்டமாக தெரிவித்தார். இதனால், போலீசாரின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால், குடும்பத்தினரும் மிகுந்த வேதனையும், ஏமாற்றமும் அடைந்தனர்.

காணாமல் போனவர் 7 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டார், ஆனால் அவர் திருநங்கையாக மாறியதால் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் வேதனையுடன் வெளியேறினர்.

ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள்: 33 வயதில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?

அமெரிக்காவை சேர்ந்த ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் 10 வருடங்களாக ஆசிரியராக பணியாற்றி அசத்தி வருகின்றனர். ஏபி மற்றும் பிரிட்டானி(Abby & Brittany) என்ற அமெரிக்காவை சேர்ந்த ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் தங்களது தனித்துவமான வாழ்க்கையின் மூலம் அனைவரையும் ஈர்த்துள்ளனர்.

இரட்டையர்களான ஏபி மற்றும் பிரிட்டானிக்கு நுரையீரல், முதுகு தண்டுவடம், இதயம், வயிறு என அனைத்துமே தனித்தனியாக தான் உள்ளது. ஆனால் இருவருக்கும் சேர்த்து கை மற்றும் கால்கள் இரண்டு தான் உள்ளது.

ஏபி மற்றும் பிரிட்டானி இருவரும் தனித்தனியாகவே எழுதுகிறார்கள், படிக்கிறார்கள், உணவருந்துகிறார்கள், அதே போலவே இருவரும் தனித்தனியாக கார் ஓட்டி அவர்களுக்கென தனியான ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளனர்.

இருவரும் 2012ம் ஆண்டு கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு பள்ளியில் குழந்தைகளுக்கு கணிதம் சொல்லி கொடுக்கும் பணியை செய்து வருகின்றனர். பாடம் எடுப்பது, வகுப்பை கவனிப்பது என தனித்தனியாக செய்தாலும் இருவருக்கும் சேர்த்து ஒரே சம்பளம் தான் வழங்கப்படுகிறது.

இது தொடர்பாக இரட்டையர்களான ஏபி மற்றும் பிரிட்டானி வழங்கிய கருத்தில், நாங்கள் இணைந்து வகுப்புகளை எடுத்தாலும், தனித்தனியாக தனியாக தான் கல்வியை பயின்றோம்,

இருவருக்கும் வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன, தனிப்பட்ட வேறு வேறு கருத்துக்களை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறோம் இருந்தும் ஒரே சம்பளம் என்பது எங்களுக்கு உரியது அல்ல என்று கூறுகின்றனர்.

சாப்பாடு செய்யாததால் ஆத்திரம்.. பெற்ற தாயை இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்த சிறுவன்!!

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம், முல்பாகலையில் வசித்து வருபவர் நேத்ரா.. 40வயதாகும் இவர் தற்போது பெங்களூரு கே.ஆர்.புரம் பீமய்யா லே – அவுட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 2 பிள்ளைகள் . இதில் மகனுக்கு 17 வயது.

இவர் கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, நேத்ராவுக்கும் மகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது .இதனால் கோபத்தில் மகன், சாப்பிடாமலேயே தூங்கிவிட்டார். காலை 7:30 மணிக்கு காலேஜ் செல்வதற்காக பரபரப்பாக கிளம்பினார்.

நேத்ரா அயர்ச்சியில் தூங்கிக் கொண்டிருந்தார். எழுந்திருக்கவே இல்லை. அதனால் வீட்டில் டிபன் தயாராகவும் இல்லை. தான் காலேஜ் போவது தெரிந்தும்கூட, டிபன்கூட செய்யாமல் இன்னமும் அம்மா தூங்கி கொண்டிருந்ததை பார்த்ததும் மகனுக்கு கோபம் வந்துள்ளது.

இதனையடுத்து நேத்ராவை எழுப்பி டிபன் கேட்டார். ஆத்திரமடைந்த நேத்ரா, மகனை சத்தம் போடவும், மீண்டும் வாய் தகராறு ஏற்பட்டது. கோபத்தில் நேத்ரா நீ என் மகன் இல்லை. ஏன் உனக்காக சமைக்கணும் என கூறிவிட்டார்.

ஆவேசமடைந்த மகன், வீட்டிற்குள்ளிருந்து இரும்பு கம்பியை எடுத்து வந்து, நேத்ராவின் தலையில் ஓங்கி அடித்தார். இதில், ரத்த வெள்ளத்தில் நேத்ரா சுருண்டு விழுந்தார்.

துடிதுடித்து சம்பவ இடத்திலேயே மகன் கண் முன்னாலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மகன், நேராக கே.ஆர்.புரம் போலீசில் சரண் அடைந்துவிட்டார்.

இச்சம்பவம் நடந்தபோது, வீட்டில் இவர்கள் 2 பேரை தவிர வேறு யாருமில்லை. போலீசார் நேத்ராவின் சடலத்தை கைப்பற்றி, வழக்கு பதிவு செய்து, தாயை கொன்ற மகனிடம் விசாரணை நடத்தினர்.

இதில் மகன் அம்மா தன்னை சரியாக கவனிக்கவில்லை, முறையாக சாப்பாடும் தருவதில்லை. காலேஜூக்கு கிளம்பும்போது தன்னை திட்டியதால் ஆத்திரத்தில் இரும்புகம்பியால் பலமாக தாக்கிவிட்டதாக பரபரப்பு வாக்குமூலம் தந்துள்ளார்.

நேத்ராவுக்கு இன்னொரு மகள் ஜார்ஜியாவில் மருத்துவ படிப்பு படித்து வருகிறார். கடந்த 30 வருடங்களாக கே.ஆர்.புரா பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார் நேத்ரா. காலை 7.30 மணிக்கு தொடங்கிய தகராறு அரை மணி நேரத்திலேயே கொலையாக முடிந்து விட்டது. இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

காதல் மனைவி திடீர் உயிரிழப்பு… சோகத்தில் கணவன் எடுத்த விபரீத முடிவு!!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி செல்வநகர் பச்சூர் பகுதியில் வசித்து வருபவர் பெருமாள். இவரது மகன் யோகேஸ்வரன். இவர் பெங்களூருவில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.

இவர் கந்திலி பகுதியில் வசித்து வரும் விஜயலட்சுமிஎன்ற பெண்ணை சில ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் பச்சூரில் உள்ள யோகேஸ்வரன் வீட்டில் வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் 5 மாத கர்ப்பிணியாக இருந்த விஜயலட்சுமி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மர்ம காய்ச்சலால் உயிரிழந்தார். காதல் மனைவி உயிரிழந்த சோகத்தில் இருந்த யோகேஸ்வரன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாதநேரத்தில் தன் மனைவியின் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர் உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி உயிரிழந்த துக்கத்தில் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸாரால் தாக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவன்!!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கடுமையான தாக்குதலுக்குள்ளானதாக தெரிவித்து பல்கலைக்கழக மாணவன் ஒருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்துள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவம் இன்று (05.2.2024) திங்கட்கிழமை காலை நடைபெற்றதாக பாதிக்கப்பட்டவரால் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் வட்டுக்கோட்டை கோட்டைக்காடு பகுதியினை சேர்ந்த கருணாகரன் நிதர்ஷன் எனும் 27 வயதான இளைஞனே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.