வவுனியாவில் சீரற்ற காலநிலையினால் முறிந்து வீழ்ந்த மரம் : போக்குவரத்து பாதிப்பு!!

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் இன்று (14.11) அதிகாலை மரம் முறிந்து வீழ்ந்தமையினால் வவுனியா – மன்னார் பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்படைந்திருந்தது.

மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் சீரற்ற காலநிலையினால் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக வவுனியா – மன்னார் பிரதான வீதி வேப்பங்குளம் பகுதியில் மரம் முறிந்து வீழ்ந்தமையினால் அப்பகுதியூடான போக்குவரத்து பகுதியளவில் பாதிப்படைந்து.

அதன் பின்னர் பல மணிநேரங்களின் பின்னர் பொதுமக்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தினரின் உதவியுடன் மரம் அகற்றப்பட்டமையினையடுத்து போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.

பச்சை நிறத்தில் வாந்தி எடுத்த குழந்தை.. கதறிய தாய்.. பரிசோதனையில் அதிர்ச்சி!!

மும்பையில்..

மும்பையில் 3 பேட்டரிகளை விழுங்கிய குழந்தை வயிற்றில் இருந்து மருத்துவர்கள் பத்திரமாக வெளியே எடுத்த நிகழ்வுக்கு மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

பொதுவாக குழந்தைகள் பக்கத்தில் எந்த ஒரு சிறு பொருளும் வைக்க கூடாது என்பார்கள். குறிப்பாக உலோகம் சார்ந்த பொருட்கள் எதையும் வைக்கக்கூடாது என்று பெரியவர்கள், மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

ஆனாலும் சில நேரங்களில் பெற்றோர்களின் அஜாக்கிரதை காரணமாக குழந்தைகளுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. அந்த வகையில் தற்போது சிறு குழந்தை ஒன்று பேட்டரி விழுங்கிய நிலையில், அதனை எந்தவித சிக்கலும் இன்றி, மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் அமைந்துள்ள முலுண்ட் என்ற பகுதியில் அசோக் – ஸ்வேதா தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் ப்ரீஷா என்ற பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

தற்போது குழந்தை பிறந்து 22 மாதங்கள் ஆகும் நிலையில், சிறுமி தனது பக்கத்து வீட்டு 7 வயது சிறுவனுடன் விளையாடி வந்துள்ளார். அந்த வகையில் கடந்த 8-ம் தேதியும் சிறுமி விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அந்த சமயத்தில் தாய் ஸ்வேதா சமையல் செய்துகொண்டிருந்துள்ளார்.

அப்போது சிறுமி தனது அருகில் இருந்த விளையாட்டு பொருட்களில் பட்டன் வடிவில் இருக்கும் பேட்டரிகளை விழுங்கியுள்ளார். பின்னர் சில மணி நேரம் கழித்து சிறுமி பச்சை நிறுத்தி வாந்தி எடுத்ததால் பதறிய பெற்றோர் உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கே சிறுமிக்கு X-RAY பரிசோதனையில் அவரது வயிற்றில் பட்டன் வடிவிலான 3 பேட்டரிகள் இருந்தது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து சிறுமியின் வயிற்றில் இருந்து பேட்டரிகளை அகற்றும் பணி நடைபெற்றது.

அதன் ஒரு முயற்சியாக இயற்கை உபாதை மூலம் எடுக்க முயன்றனர். அப்போது 2 பேட்டரிகள் மட்டுமே வெளியே வந்ததால், மீதமுள்ள பேட்டரியை மருத்துவர்கள் எண்டோஸ்கோபி மூலம் அகற்றினர்.

அந்த பேட்டரிகளின் ரசாயனயங்களால் சிறுமிக்கு வயிற்றில் அல்சர் ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் சரியான நேரத்தில் பேட்டரியை எடுத்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது சிறுமி நலமாக உள்ளார். இந்த நிகழ்வு அங்கு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் கைகள் மற்றும் கால் ஒன்று துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!!

வவுனியா, தரணிக்குளம், குறிசுட்டகுளம் பகுதியிலிருந்து இன்று (14.11) மாலை பெண் ஒருவரின் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

தரணிக்குளம் குறிசுட்டகுளத்தின் நீரேந்துப் பகுதியில் நீரில் மிதந்த நிலையில் காணப்பட்ட அழுகிய நிலையிலுள்ள பெண்ணின் சடலம் தொடர்பாக அப் பகுதி மக்களால் ஈச்சங்குளம் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் சடலத்தை பார்வையிட்டதுடன், அதனை மீட்டனர். குறித்த சடலமானது இரண்டு கைகளும், ஒரு காலும் இல்லாத நிலையில் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இரு கைகளும், காலும் வெட்டப்பட்டிருக்கலாம் என தடவியல் பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், சடலமாக மீட்கப்பட்டவர் 26 வயதிற்கு உட்பட்டவராக இருக்கலாம் என கருதப்படுவதுடன், சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

வவுனியாவில் இடம்பெற்ற அரசாங்கத்தின் தேசிய தீபாவளி நிகழ்வு!!

அரசாங்கத்தின் தேசிய தீபாவளி நிகழ்வு வவுனியாவில் நேற்று (12.11) மாலை இடம்பெற்றது. வவுனியா, கந்தசாமி ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து குறித்த நிகழ்வு கந்தசாமி ஆலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

கந்தசாமி ஆலயத்தில் மேளதாளம் முழங்க விசேட பூஜை வழிபாடு இடம்பெற்று, அங்கிருந்து இறைவனின் திருவுருவச் சிலையுடன் அதிதிகள் அழைத்து செல்லப்பட்டதுடன், மண்டபத்தில் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் நாட்டிய, நடன, நாடக நிகழ்வுகள் இடம்பெற்றன.

குறித்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவினால் அனுப்பி வைக்கப்பட்ட வாழ்த்துச் செய்து வாசிக்கப்பட்டதுடன், இந்து காலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன்,

வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சாள்ஸ், வடமாகாண பிரதம செயலாளர் சமன்பந்துல சேன, தபால் அத்தியட்சகர் றுவான் சரத்குமார, மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், ஆலய நிர்வாகத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் தேசிய தீபாவளியை முன்னிட்டு தபால் முத்திரை வெளியீடு!!

தேசிய தீபாவளி தினத்தை முன்னிட்டு வவுனியாவில் தபால் முத்திரை வெளியிட்டு வைக்கப்பட்டது. வவுனியா, கந்தசாமி ஆலய பிரதான மண்டபத்தில் நேற்று (12.11) மாலை இடம்பெற்ற தேசிய தீபாவளி நிகழ்வில் வைத்து குறித்த தபால் முத்திரை வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்துக்களின் தீபாவளி தினத்தை முன்னிட்டு இத் தபால் முத்திரை இலங்கை தபால் திணைக்கள அத்தியட்சகர் றுவான் சரத்குமார அவர்கள் வெளியிட்டு வைக்க முதல் முத்திரையை இந்து காலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க பெற்றுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து அதிதிகளாக கலந்து கொண்ட கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன்,

வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர ஆகியோருக்கு தபால் முத்திரை வழங்கி வைக்கப்பட்டதுடன், மதகுருமாருக்கும் வங்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் இலங்கை தபால் திணைக்கள அத்தியட்சகருடன் வடமாகாண தபால் திணைக்கள அத்தியட்சகர் மதுமதி வசந்தகுமாரி மற்றும் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

நடனமாடி உலக சாதனை படைத்த இலங்கை இளைஞன் : குவியும் பாராட்டுக்கள்!!

நுவரெலியாவில்..

நுவரெலியாவை சேர்ந்த இளைஞன் ஒருவர் 131 மணித்தியாலங்கள் நடனமாடி உலக சாதனை படைத்துள்ளார். குறித்த உலக சாதனைக்கான நடனம் International Warriors Book of World Records ஒழுங்கமைப்பில் இடம்பெற்றிருந்தது. நுவரெலியாவை சேர்ந்த தாயாபரனே என்ற இளைஞனே உலக சாதனையை படைத்துள்ளார்.

குறித்த நடனத்தை இந்தியாவில் இருந்து ரகசிய கண்காணிப்பு கமாரா மூலமாக International Warriors Book of World Records அமைப்பு நடனத்தை பார்வையிட்டிருந்தனர்.

லயன் யூட் நிமலன் நெறியாள்கையில் சர்வதேச சட்ட நியதிகளுக்கமைவாக ஆறு நாட்களாக இடம்பெற்றிருந்த குறித்த நிகழ்வில் மதகுரு, யோகபுரம் மகாவித்தியாலய அதிபர் த.பிறேமச்சந்திரன், அணிஞ்சியன்குளம் கிராம அலுவலர் வினோதன் துசாந்தி, மல்லாவி தமிழ்த்தாய் கலமான்றத்தின் யோகநாதன், லயன் சு.சுபநேசன், கலைஞர்கள், ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

மல்லாவியில் உள்ள தொழில்நுட்ப கலாசாரம் மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமையத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வின் இறுதியில் போட்டியாளர் தயாபரனுக்கான கௌரவம் வழங்கப்பட்டு அவருக்கான மின்னிதழ் சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டது

யாழில் தனது தலை முடியால் வாகனத்தை இழுத்து உலக சாதனை!!

யாழில்..

யாழ் – தென்மராட்சி மட்டுவில் கிராமத்தைச் சேர்ந்த 60வயதான உலக சாதனையாளர் செ.திருச்செல்வம் தீபாவளி தினத்தை முன்னிட்டு (12/11/2023) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4மணிக்கு மட்டுவிலில் சாகச நிகழ்வொன்றை நிகழ்த்தியுள்ளார்.

மட்டுவில் கண்ணகை சிறுவர் கழக முன்றலில் இருந்து 1கிலோமீட்டர் தூரம், இரண்டாயிரம் கிலோ எடை கொண்ட வாகனத்தை தனது தலை முடியால் இழுத்தும், தாடியால் இழுத்தும் சாகசம் நிகழ்த்தியிருக்கின்றார்.

இவர் அண்மையில் தனது முகத் தாடியினால் 400 மீற்றர் தூரம் 1500கிலோ எடை கொண்ட வாகனத்தை இழுத்து சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆற்றில் வீழ்ந்த குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!!

ஹட்டனில்..

ஹட்டனில் டிக்ஓயா ஆற்றில் விழுந்து காணாமல் போயிருந்த இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சடலம் குறித்த ஆற்றில் இருந்து நேற்று (12.11.2023) மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹட்டன் – டிக்கோயா, ஒஸ்போன் தோட்டத்தின் மேல் பிரிவைச் சேர்ந்த சந்திரசேகரன் சுரேன் என்ற 28 வயதுடைய இளம் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஹட்டன் நகருக்கு நேற்று முன்தினம் (11) வந்துள்ள குறித்த நபர், மது அருந்திவிட்டு, பேருந்தில் சென்றுள்ளார். பேருந்தில் இருந்து இறங்கி, வீடு நோக்கி நடந்து செல்கையிலேயே ஆற்றில் விழுந்து காணாமல் போய் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து தோட்ட மக்கள், பொலிஸார் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவரின் மனைவி தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

பிரபல இலங்கை பாடகி வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்!!

கொழும்பில்..

கொழும்பின் புறநகர் பகுதியான மாலபே பகுதியில் உள்ள பிரபல பாடகி நிரோஷா விராஜினியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் மர்ம நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கடுவெல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல பதில் நீதவான் கமல் விஜேசிறி உத்தரவிட்டுள்ளார். 35 வயதான சந்தேக நபர் மாலபே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இவர் இதற்கு முன் பலமுறை பாடகியின் வீட்டிற்குள் நுழைய முயன்றுள்ளார்.

இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய நீண்ட விசாரணைகளை மேற்கொண்ட மாலபே பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் ரத்நாயக்க தலைமையிலான குழுவினர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வரவு செலவுத் திட்டம் 2024 : பல சலுகைகளை அறிவித்தார் ஜனாதிபதி ரணில்!!

வரவு செலவுத் திட்டம் 2024..

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று நண்பகல் 12 மணிக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பின் கொண்டுவரப்படும் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் நாட்டில் அனைத்து தரப்பினர்களினதும் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது.

அரச துறையின் மாதாந்த சம்பளத்திற்காக 93 பில்லியன் ரூபா, காப்புறுதி, மருந்துகள், ஓய்வூதியம் உட்பட பொதுநல செலவுகளுக்கு 30 பில்லியன் ரூபா, கடன் வட்டி செலுத்த 220 பில்லியன் ரூபா என 03 பிரதான செலவுகளுக்காக மாத்திரம் அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் 383 பில்லியன் ரூபாவை செலவிடுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

2021ஆம் ஆண்டுக்குள் 900 பில்லியன் ரூபாவாக இருந்த வங்கி மிகைப்பற்று, 70 பில்லியன் ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளதாக, 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அரச வருமானத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% இலிருந்து 15% ஆக அதிகரிக்காவிட்டால் நாடு மீண்டும் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஒரு சில குழுக்களின் எளிய மற்றும் அழகான வாக்குறுதிகளால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது எனவும் தெரிவித்தார்.

நீண்ட காலமாக இடம்பெற்றுவரும் வரி விலக்குகள் உள்ளிட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு முன்மொழிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், அதன் ஊடாக அரச வருமானம் அதிகரிக்கும் போது அதனை விட அதிகமான வரிச் சலுகைகளை வழங்க முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி, அரச செலவினங்களில் 35% அரச ஊழியர்களின் சம்பளத்திற்காக செலவிடப்படுவதாக சுட்டிக்காட்டினார்.

நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களின் சுமை முழுவதுமாக பொதுமக்களையே சார்ந்துள்ளது எனவும், தேசிய சொத்துக்கள் எனக் கூறித் தொடர்ந்தும் மக்கள் மீது அச்சுமையை சுமத்தும் அரசியல் குழுக்கள் நாட்டை பின்னடையச் செய்து வருவதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

சுற்றுலாத் துறைக்காக நுவரெலியா தபால் அலுவலகம் ஒதுக்கப்பட்டமை தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் அல்ல எனவும், மாறாக அது நுவரெலியா அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு அங்கமே எனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இந்த வரலாற்று சிறப்புமிக்க புராதனக் கட்டிடங்களை உரிய நேரத்தில் சுற்றுலாத் தொழில்துறை போன்ற அந்நியச் செலாவணி ஈட்டும் பணிகளுக்குப் பயன்படுத்தாவிட்டால் காலி தபால் அலுவலகத்துக்கும் நேர்ந்த கதியே இதற்கும் ஏற்படக்கூடும் என்றும் குறிப்பிட்டார்.

இந்த நாட்டில் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட அரசியல் மற்றும் பொருளாதாரக் கருத்தியல்கள் தோல்வியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசியல் முறைமையையும், பொருளாதார முறைமையையும் முற்றாக மாற்றியமைத்து, புதிய கோணத்தில் பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

கடந்த கால அனுபவங்கள், உலகளாவிய போக்குகள் மற்றும் எதிர்கால சவால்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டு எமக்குரிய தனித்துவமான பொருளாதார மற்றும் அரசியல் முறைமையை நாம் உருவாக்க வேண்டும் என்று, 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

2021 ஆம் ஆண்டில் இலங்கையின் முதன்மை வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.7% ஆக இருந்த போதிலும், 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இலங்கையின் முதன்மை வரவு செலவுத் திட்டத்தில் மேலதிகத்தை உருவாக்க முடிந்ததாக, 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி தெரிவித்தார்.

2022 செப்டெம்பர் மாதத்தில் 70% ஆக உயர்ந்திருந்த பணவீக்கத்தை, கடந்த ஒக்டோபர் மாதத்திற்குள் 1.5% ஆகக் குறைக்க முடிந்ததாகவும், அன்று பூஜ்ஜியமாகக் குறைந்திருந்த அந்நியச் செலாவணிக் கையிருப்பை, 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை உயர்த்துவதற்கு முடிந்தது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இம்முறை வரவு செலவுத் திட்டம், நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் மற்றும் தற்போதைய சர்வதேச போக்குகளுக்கு ஏற்ப புதிய பொருளாதார அடித்தளத்தை அமைக்கும் வரவு செலவுத் திட்டமாகும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தேர்தல் வெற்றியை விட நாட்டின் வெற்றியே தனக்கு முக்கியம் என்றும் வலியுறுத்தினார்.

அரச ஊழியர்களுக்கு தற்போதுள்ள 7,800 ரூபா வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 2024 ஜனவரி முதல் நடைமுறைக்குவரும் வகையில் மேலும் 10,000 ரூபாவால் உயர்த்தப்படும்.அரசாங்க ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான மாதாந்த வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 2,500 ரூபாவால் அதிகரிக்கப்படுவதோடு, அதன்படி 2024 இல் ஓய்வூதியத்திற்காக 386 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.

தொலைதூரக் கடமையில் இருக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கு தகுந்த மாற்றங்களுடன் உணவு மற்றும் தங்குமிடக் கொடுப்பனவை செலுத்துப்படும்.

கடந்த காலங்களில் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட அரச ஊழியர்களின் அனர்த்தக் கடன் வசதி, 01-01-2024 முதல் முன்னர் காணப்பட்டவாறே வழங்கப்படும்.

கடந்த வருடங்களில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக செலவிடப்பட்ட தொகை 60 பில்லியன் ரூபாவாக இருந்த போதிலும், 2024ஆம் ஆண்டில் அது 183 பில்லியன் ரூபா வரை, மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும பலன்களைப் பெறுவதில் தாமதம் ஏற்படும், தகுதியுள்ள பயனாளிகளுக்கு கடந்த காலத்திலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை.ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோய் உதவித்தொகை 2,500 ரூபாவினால் அதிகரிக்கப்படும்.

முதியோருக்கான மாதாந்த உதவித்தொகை 3000 ரூபா வரை அதிகரிக்கப்படும்.புதிய குடும்பங்கள் பயனாளிகள் பட்டியலில் தாமதமின்றி இணைத்துக்கொள்ள 06 மாதங்களுக்கு ஒரு முறை, அஸ்வெசும பயனாளிகளின் பட்டியல் மதிப்பாய்வு செய்யப்படும்.

அஸ்வெசும வேலைத்திட்டம், ஊனமுற்றோர்கள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் முதியோர்களுக்கான கொடுப்பனவுகளுக்காக 2024 இல் ஒதுக்கப்படும் தொகை, 205 பில்லியன் ரூபா வரை அதிகரிக்கப்படும்.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் 4500 ரூபா மாதாந்த கொடுப்பனவை முறையாக தொடர்ந்து வழங்க 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு. கடந்த காலத்தில் நெருக்கடியை எதிர்கொண்ட சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்தும் திட்டத்தை வலுப்படுத்த 30 பில்லியன் ரூபா சலுகைக் கடன் வசதி.

பாரம்பரிய சொத்துக்களை இழந்த விவசாயிகளுக்கு அந்த வயல் நிலங்களின் முழுத் தனியுரிமை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். நகர்ப்புறங்களில் வாழும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள வீடுகளில் இருந்து வாடகை வசூலிப்பது முற்றிலும் நிறுத்தப்பட்டு, அந்த வீடுகளின் உரிமையை அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தோட்டங்களில் வாழும் மக்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கான காணி உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக ரூபா 4 பில்லியன் ஒதுக்கீடு.பிம் சவிய வேலைத்திட்டத்தை விரைவாக நிறைவு செய்வதற்கு தேவையான வசதிகளை வழங்க 600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

பன்முகப்படுத்தப்பட்ட பட்ஜெட் திட்டத்தை மீள ஆரம்பிக்கும் வகையில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கு 11,250 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு தேசிய கொள்முதல் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும்.

மலையகத்தைச் சேர்ந்த 89 பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய பத்து வருட பல்நோக்கு கிராமிய மற்றும் சமூக அபிவிருத்தி வேலைத்திட்டம் 2024 இல் ஆரம்பிக்கப்படும். அதற்காக 2024 ஆம் ஆண்டில் 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.

மலையகத்தைச் சேர்ந்த 89 பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய பத்து வருட பல்நோக்கு கிராமிய மற்றும் சமூக அபிவிருத்தி வேலைத்திட்டம் 2024 இல் ஆரம்பிக்கப்படும். அதற்காக 2024 ஆம் ஆண்டில் 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.

வரவு செலவுத்திட்ட மூலதனச் செலவுக்கான ஒதுக்கீடு ரூ.1260 பில்லியனாக அதிகரிப்பு. இது மொத்தத் தேசிய உற்பத்தியில் 4% ஆகும்.பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட திட்டங்களை நிறைவு செய்ய 55 பில்லியன் ரூபாய் மேலதிக ஒதுக்கீடு.

அபிவிருத்தித் திட்டங்களின் ஊடாக எதிர்பார்க்கும் நோக்கங்களை உரிய காலத்தில் நிறைவு செய்ய 2024 முதல் ஒவ்வொரு அமைச்சிலும் விசேட பிரிவொன்று நிறுவப்படும்.

சேதமடைந்துள்ள கிராமிய வீதிகளைப் புனரமைக்க 10 பில்லியன் ரூபாவும் இயற்கை அனர்த்தங்களால் சேதமடைந்த வீதிகளையும், பாலங்களையும் புனரமைக்க 2000 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்படும்.

நாட்டின் ஒவ்வொரு மாகாணத்திலும் குடிநீர் பிரச்சனைகள் இருப்பதால், பன்முகப்படுத்தப்பட்ட நிதியைப் பயன்படுத்தும் போதும், வெளிநாட்டு கடன் உதவிகளைப் பெறும்போதும் நீர் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

கல்வி சீர்திருத்தங்கள் முழுமையான செயல்படுத்தப்படும். அந்த சீர்திருத்தங்கள் மூலம், தேசிய உயர்கல்வி பேரவை, தேசிய உயர்கல்வி ஆணைக்குழு மற்றும் தேசிய திறன் ஆணைக்குழு என்பன நிறுவப்படும். உயர் தரம் சித்தியடைந்த ஒவ்வொரு மாணவருக்கும் பல்கலைக்கழகக் கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சீதாவக்க விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் கீழ் குருநாகல் தொழில்நுட்ப நிறுவனம், முகாமைத்துவ தொழில்நுட்ப பல்கலைக்கழகம், சர்வதேச காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகம் ஆகிய 04 புதிய பல்கலைக்கழகங்கள் நிறுவப்படும்.தனியார் உயர்கல்வி நிறுவனங்களை பல்கலைக்கழகங்களாக மாற்றுவதற்கான சட்டவிதிகள் நிறைவேற்றப்படும்.

19 கல்விக் கல்லூரிகளை இணைத்து தேசிய கல்விப் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்காக 2024 ஆம் ஆண்டில் 01 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.
இந்தியாவின் சென்னையில் உள்ள IIT பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலின் கீழ், கண்டி நகரில் ஒரு புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தல்.

அரச பல்கலைக்கழகங்களை புதிய யுகத்திற்கு ஏற்றவாறு மேம்படுத்தும் திட்டமொன்றை செயல்படுத்துவதோடு, அது பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்படும்.

அதற்காக 2024 ஆம் ஆண்டிற்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் நோயெதிர்ப்புத் துறை, தேசிய ஒவ்வாமை மற்றும் நோயெதிர்ப்பு நிறுவனமாக தரம் உயர்த்தப்படும்.

அதற்காக 2024இல் 40 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.உலகில் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு கல்வி நிறுவனத்திற்கும் இந்நாட்டில் பல்கலைக்கழகங்களை நிறுவ அனுமதி வழங்கப்படுவதுடன், தனியார் பல்கலைக்கழகங்களை மேற்பார்வை செய்ய வலுவான சட்டவிதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அரச பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் வட்டியில்லாக் கடன் வசதிகளை, தொடர்ந்தும் வழங்குவதோடு, வணிக வங்கிகள் மூலம் சலுகைக் கல்விக் கடன் வழங்கும் முறையை அமுல்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழு, மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழு ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டு தேசிய உயர்கல்வி ஆணைக்குழுவை ஸ்தாபித்தல்.

தொழிற்பயிற்சி அதிகார சபை, தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை ஆகிய நிறுவனங்களை ஒருங்கிணைத்து தேசிய திறன் விருத்தி ஆணைக்குழுவை நிறுவுதல்.

மத்திய அரசின் கீழ் இயங்கும் தொழில் கல்வி நிறுவனங்கள் மாகாண சபைகளுக்கு மாற்றப்படுவதோடு, திறன் விருத்தி மேம்பாட்டுத் துறையை மேம்படுத்தவும் நவீனப்படுத்தவும் மாகாண கல்வி சபைகளை நிறுவுதல்.

தொழில்நுட்ப தொழில்துறை திறன்களை மேம்படுத்த நிதியமொன்றை ஸ்தாபிக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு, அதற்காக தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கு மேலதிகமாக 2024 ஆம் ஆண்டிற்கு 450 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தடம் புரண்டிருந்த இலங்கையின் பொருளாதாரத்தை கடந்த வருடத்தில் மீண்டும் சரியான பாதையில் தூக்கி நிறுத்த முடிந்ததாகவும், அதற்காக மக்கள் கடுமையாக உழைத்த போதும், சில தரப்பினர் நாட்டை பின்நோக்கி இழுக்க முயற்சித்ததாகவும் குறிப்பிட்டார்.

கற்பனைக் கதைகளால் நாட்டை முன்கொண்டு செல்ல முடியாது எனவும், நீண்ட காலமாக அரசியல் கட்சிகள் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளின் இறுதி முடிவு, நாட்டை வங்குரோத்து அடையச் செய்ததாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, துரதிஷ்டவசமாக நாட்டில் உள்ள சில தரப்பினர் இதனை இன்னும் புரிந்து கொள்ளவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி, அரசியல் நோக்கங்களுக்காக மாயைகளைப் பரப்புவதை நிறுத்துமாறும், அரசியலை விட நாட்டைப் பற்றி சிந்தித்து நாட்டை உயர்த்துவதற்கு அனைவரும் தம்மை உண்மையாக அர்ப்பணிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த கடினமான பாதையில் நாம் தொடர்ந்து பயணித்தால், சிறந்த பொருளாதாரத்தை விரைவில் உருவாக்க முடியும் என்று​​ குறிப்பிட்ட ஜனாதிபதி, கடந்த வருடத்தை திரும்பிப் பார்க்கும் போது, நாடு சரியான பாதையில் செல்வது 100% உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இதுவரையான பயணத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு அர்ப்பணிப்புடன் பாடுபடுவதாகத் தெரிவித்தார்பணவீக்க விகிதத்தை ஒற்றை இலக்கமாக குறைக்க முடிந்ததால், பணவீக்கத்தின் தாக்கத்தில் இருந்து நாட்டை மீட்க முடிந்துள்ளதாக 2024 வரவு செலவுத் திட்ட உரையின் போது ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டை மீட்டெடுப்பது மிகவும் கடினமான செயற்பாடு என்று தெரிவித்த ஜனாதிபதி, ஆட்சியைக் கைப்பற்றும் அரசியல் நோக்கத்துடன் மக்களிடையே நிவாரணம் வழங்கும் கனவு மாளிகைகளை நிர்மாணித்தால் நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்கே தள்ளப்படலாம் எனவும் தெரிவித்தார்.

இதுவரையான பயணத்தின் வெற்றிக்கு அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டமே காரணம் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதன் ஊடாக 2022 ஆம் ஆண்டைப் போன்று பொருளாதார நரகத்தில் வீழ்ந்துவிடாமல் முன்நோக்கிச் செல்வதற்கு அடித்தளமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மின்சார சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் போன்ற நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களின் நட்டத்தை ஈடுசெய்ய, அரச வங்கிகளில் தொடர்ச்சியாக கடன்களைப் பெற்று வருவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த நிலைமையினால் அந்த வங்கிகள் பலவீனமடைந்து வீழ்ச்சியடைவதைத் தடுக்க மக்களின் வரிகளைப் பயன்படுத்த அரசுக்கு நேரிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பாரிய அளவிலான குறைந்த செலவில் புதுப்பிக்கத்தக்க வலு சக்தியை பிரதான கட்டமைப்புடன் இணைப்பதற்குத் தேவையான அனைத்து சட்ட ரீதியான தடைகளும் நீக்கப்பட்டுள்ளதாகவும், செயல்திறனற்ற மின்சார சபையை வினைத்திறன்மிக்க நிறுவனமாக மறுசீரமைப்பதற்கான ஒழுங்குவிதிகள் தற்போது வகுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்னும் சற்று நேரத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்தநிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.இதன்பின்னர் 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சற்று நேரத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

ஒரே கட்டத்தில் சம்பள அதிகரிப்பு இல்லை : 10 ஆயிரம் மட்டுமே – அரச ஊழியர்களுக்கு ரணில் வைத்த செக்!!

சம்பளம்..!

அரச ஊழியர்களுக்கு தற்போதுள்ள 7,800 ரூபா வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 2024 ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மேலும் 10,000 ரூபாவால் உயர்த்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான மாதாந்த வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 2,500 ரூபாவால் அதிகரிக்கப்படுவதோடு, அதன்படி 2024 இல் ஓய்வூதியத்திற்காக 386 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும். கடந்த காலங்களில் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட அரச ஊழியர்களின் அனர்த்தக் கடன் வசதி, 01-01-2024 முதல் முன்னர் காணப்பட்டவாறே வழங்கப்படும்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அரச சேவையாளர்களுக்கு ஒரே கட்டத்தில் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்சமயம் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், 2023 ஆம் ஆண்டு 3415 பில்லியன் ரூபா அரச வருமானம் எதிர்பார்க்கப்பட்ட போதும், 2410 பில்லியன் ரூபா மாத்திரமே திரட்டப்பட்டுள்ளது. ஆகவே வரி வருமான எதிர்பார்ப்பு இலக்கு தோல்வி.

அரசியல் நோக்கங்களுக்காக மாயைகளைப் பரப்புவதை நிறுத்துமாறும், அரசியலை விட நாட்டைப் பற்றி சிந்தித்து நாட்டை உயர்த்துவதற்கு அனைவரும் தம்மை உண்மையாக அர்ப்பணிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார். அரச சேவையாளர்களுக்கு சம்பளம் அதிகரிக்க வேண்டுமாயின் அரச வருமானத்தை அதிகரிக்க வேண்டும் அல்லது நாணயம் அச்சிட வேண்டும், கடன் பெற வேண்டும்.

ஒரு தரப்பினரை மாத்திரம் திருப்திப்படுத்துவது சமவுடைமை கொள்ளைக்கு எதிரானது.சம்பளத்தை அதிகரிக்குமாறு ஒரு தரப்பினர் போராடுகிறார்கள். அரச சேவையாளர்கள் மாத்திரமல்ல ஒட்டுமொத்த மக்களும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள். அரச சேவையாளர்களுக்கு ஒரே கட்டத்தில் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

ஆண்டுக்கு 60 லட்சம் சம்பளம் பெறும் மாணவியின் கதை!!

உத்தரப் பிரதேசத்தில்..

இந்திய மாணவி ஒருவருக்கு LinkedIn தளத்தில், ஆண்டுக்கு ரூ.60 லட்சம் சம்பளத்துடன் வேலை கிடைத்துள்ளது. இந்திய மாநிலம், உத்தரப் பிரதேசத்தின் உனாவில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (IIIT) முஸ்கன் அகர்வால் என்ற மாணவி, மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புப் பொறியியலில் இந்த ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். இவருடைய GPA மதிப்பெண் 9.40.

குறிப்பாக, இவர் இதுவரை தனது கல்லூரியிலேயே அதிக சம்பளத்துக்கு தேர்வான பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதனிடையே, கடந்த ஆண்டு இந்தியாவில் TechGig Geek Goddess 2022 என்ற மிகப்பெரிய கோடிங் போட்டி நடைபெற்றது. இதில் 69,000 போட்டியாளர்களுடன் முஸ்கன் அகர்வால் கலந்துகொண்டார்.

இதில் அனைவரையும் வீழ்த்தி ரூ.1.5 லட்சம் ரொக்கப் பரிசை பெற்றது மட்டுமல்லாமல், India’s top coder என்ற பெருமையையும் பெற்றார். தொழில்நுட்பத்துறையில் முஸ்கன் அகர்வால் இத்தனை சாதனைகள் புரிந்தது தான் நெட்வொர்க்கிங் தளத்தில்வேலை கிடைத்ததற்கு காரணமாக அமைந்தது.

இவரை மென்பொருள் மேம்பாட்டுப் பொறியாளராக ஆண்டுக்கு ரூ.60 லட்சம் சம்பளத்தில் LinkedIn வேலைக்கு எடுத்துள்ளது. இவர், தற்போது பெங்களூருவில் இருந்து கொன்டு கடந்த 5 மாதங்களாக பணிபுரிந்து வருகிறார். மேலும், இவரது கல்லூரியில் பயின்ற மற்றொருவரும் ஆண்டுக்கு ரூ.47 லட்சம் சம்பளத்திற்கு தேர்வாகியுள்ளார்.

குப்பைத் தொட்டியில் இருந்த 25 கோடி மதிப்புமிக்க அமெரிக்க டொலர்.. அதிர்ச்சியடைந்த தூய்மைப் பணியாளர்!!

பெங்களூருவில்..

25 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலரை துப்புரவு பணியாளர் கண்டுபிடித்த சம்பவம் பகீரை கிளப்பியுள்ளது. மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த சுலைமான் ஷேக், பெங்களூருவில் துப்புரவு வேலை செய்து வந்தார்.

இவர் கடந்த 3ஆம் தேதி நாகவரா ரயில் நிலையத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அங்கிருந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் குப்பைகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டார். அப்போது கறுப்பு நிறத்தில் பை ஒன்று காணப்பட்டது.

அதன் உரிமையாளர்கள் யாரும் அருகில் இல்லை. நீண்ட நேரம் கவனித்த நிலையில், பைக்கு சொந்தக்காரர்கள் யாரும் வராத காரணத்தால் அதை எடுத்து கொண்டு தனது அறைக்கு சென்றுள்ளார்.

அங்கு திறந்து பார்த்த போது வெளிநாட்டு பணம் இருந்தது. அதுவும் ஏகப்பட்ட நோட்டுகள் இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார். இதில் ஏதும் விபரீதம் இருக்கலாம் என்று நினைத்திருக்கிறார். உடனே தனது மேற்பார்வையாளர் தவுஹிதுல் இஸ்லாம் என்பவரை சந்தித்து தெரிவித்தார்.

இதையடுத்து சமூக ஆர்வலர் கலீமுல்லா என்பவரின் உதவியுடன் போலீசாரிடம் சென்றனர். நவம்பர் 5ஆம் தேதி பெங்களூரு மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மூத்த அதிகாரி பி.தயானந்தாவிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் போலீசார் ஆய்வு செய்ததில் 25 கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் இருப்பது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட பணத்தை ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் காண்பித்துள்ளனர். அவர்கள் ஆய்வு செய்ததில் போலியான நோட்டுகள் என்று கூறினர்.

ஆனால் அதற்குரிய அதிகாரப்பூர்வ அறிக்கையை தர மறுத்துவிட்டனர். அடுத்தகட்டமாக சென்னையில் உள்ள தனியார் வங்கி ஒன்றிற்கு ஆய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதுபோன்று பணம் தொடர்பான விவகாரங்களில் வழக்கமாக அந்த வங்கியை தான் பெங்களூரு போலீசார் தொடர்பு கொள்வது வழக்கம் என்று கூறுகின்றனர். தற்போதைய சூழலில் 25 கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர்களும் போலி என்று தெரிகிறது.

இதற்கிடையில் பரபரப்பூட்டும் மற்றொரு விஷயம் அரங்கேறியுள்ளது. தவுஹிதுல் இஸ்லாமை மர்ம நபர்கள் அவரது வீட்டில் இருந்து கண்ணை கட்டி கடத்தி சென்றுள்ளனர்.

அந்த பணம் எங்கே என்று கேட்டு மிரட்டியுள்ளனர். அதை போலீசில் ஒப்படைத்து விட்டதாக கூறிய நிலையில் மறுநாள் காலை வேறொரு இடத்தில் இறக்கி விட்டு சென்றுள்ளனர். மீண்டும் போலீசிற்கு சென்றால் அவ்வளவு தான் என்று எச்சரிக்கை விடுத்தது அதிர்ச்சி அளித்துள்ளது.

மீன் பிடிக்க சென்ற நபர்.. ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆன அதிசயம்.!!

பாகிஸ்தானில்..

பாகிஸ்தானைச் சேர்ந்த மீனவர் ஒருவர் அரிய வகை மீன்களை பிடித்து விற்றதில் ஒரே இரவில் கோடீஸ்வரரானார். கராச்சியின் Ibrahim Hyderi மீன்பிடி கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ஹாஜி பலோச். இவர் தனது தொழில் நண்பர்களுடன் அரபிக்கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளார்.

அவரது வலையில் சிக்கிய மீன்களை ஆராய்ந்தபோது அவை ”சோவா” என அழைக்கப்படும் அரிய வகை மீன்கள் ஆகும். இவற்றை தங்க மீன்கள் என்றும் கூறலாம்.

20 முதல் 40 கிலோ எடை கொண்ட சோவா மீன் 1.5 மீற்றர் நீளம் வரை வளரக்கூடியது. கிழக்கு நாடுகளில் அதிகம் விரும்பப்படும் இந்த வகை மீனில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.

அத்துடன் விலைமதிப்பற்றதாகவும், அரிதாகவும் காணப்படும் இந்த மீன் வயிற்றில் உள்ள பொருட்கள் பல நோய்களை குணப்படுத்தும் திறன் கொண்டது என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மீனவர் ஹாஜி அரிய வகை மீன்களை கராச்சி துறைமுகத்தில் ஏலத்தில் விட்டார். அதன் முடிவில் அவருக்கு 7 கோடி ரூபாய் கிடைத்தது. குறிப்பாக அதில் ஒரு மீன் மட்டுமே ரூ.70 லட்சத்திற்கு ஏலம் போனது.

இதன்மூலம் சாதாரண மீனவராக இருந்த ஹாஜி ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார். எனினும் அவர் தனக்கு மட்டும் அந்த பணத்தை வைத்திருக்காமல் தனது குழுவினருக்கும் பகிர்ந்து கொடுப்பதாக கூறினார்.

வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!

கிருஷ்ணகிரியில்..

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாவடியூர் பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி ரமேஷ் (29). இவருக்கும், திருப்பத்தூர் அடுத்த எலவம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாதுவின் மகள் ஹேமலதா (24) என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், நிறைமாத கர்ப்பினியான ஹேமலதாவுக்கு நேற்று பிரசவ வலி அதிகமானது. உடனே, அவரது குடும்பத்தினர் கொரட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பரிசோதனைக்காக ஹேமலதாவை அழைத்துச் சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இது பிரசவ வலி, குழந்தை பிறப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

உடனடியாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என கூறியதாக தெரிகிறது. ஆனால், ஹேமலதாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் அவரது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர். இதையடுத்து, ஹேமலதாவிற்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்ததில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

அதில், அவரின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்ததால் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஹேமலதா ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து திருப்பத்தூர் நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என கூறியதாக தெரிகிறது.

பெற்ற மகளை இரும்புக் கம்பியால் தாக்கி விஷம் கொடுத்து கொன்ற தந்தை!!

கேரளத்தில்..

கேரளத்தில், தான் பெற்ற மகளை இரும்பு ராடால் கொடூரமாக தாக்கி, பூச்சி மருந்தை வலுக்கட்டாயமாக மகளின்வாயில் ஊற்றி கொலைச் செய்து அதிர வைத்திருக்கிற தந்தையின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம் எர்ணாகுளம் ஆலுவாவைச் சேர்ந்தவர் அபீஸ் முகமது (43). இவர் கொச்சி துறைமுகத்தில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.

இவரது மூத்த மகள் ஃபாத்திமா (14), ஆலுவா பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்தார். இந்நிலையில், அதே பள்ளியில் பயிலும் 16 வயதான வேற்று மதத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவருடன், ஃபாத்திமாவுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி, தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர்.

மகளின் காதல் குறித்து, அறிந்த அபீஸ், தனது மகளை கண்டித்ததாக தெரிகிறது. ஆனாலும், ஃபாத்திமா ஆண் நண்பருடன் பேசி வந்துள்ளார். இதையடுத்து, மகளின் செல்போனை அபீஸ் உடைத்துள்ளார். ஆனாலும், மகள் வேறு ஒரு போனில் காதலனுடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இதனைக் கண்டுபிடித்த அபீஸ் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுள்ளார்.

இது தொடர்பாக, கடந்த மாதம் (அக்டோபர்) 29ம் தேதி மகளுக்கும், அவருக்கும் இடையில் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில், வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த அபீஸ் வீட்டில் இருந்த இரும்பு ராடால் மகள் ஃபாத்திமாவை கடுமையாக தாக்கியுள்ளார். மேலும், வாயில் பூச்சி மருந்தையும் ஊற்றியுள்ளார்.

இந்த சம்பவங்கள் அனைத்தையும் சிறுமியின் அருகில் இருந்து பார்த்த தாய், கணவரை தடுத்து மகளை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ஒரு வாரமாக உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஃபாத்திமா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து தந்தை அபீஸ் முகமதுவை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.