“காதலிக்கலைன்னா கொன்று விடுவேன்”.. மிரட்டலுக்கு பயந்து இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

கர்நாடகாவில்..

ஹாசன் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவருக்கு தொடர்ந்து தன்னைக் காதலிக்கச் சொல்லி வாலிபர் ஒருவர் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அவரின் நடவடிக்கைகள் பிடிக்காமல் அவரது காதலை இளம்பெண் ஏற்க மறுத்த நிலையில்,

தன்னைக் காதலிக்காவிட்டால் கொலை செய்து விடுவேன் என்று இளம்பெண்ணுக்கு அந்த வாலிபர் கொலை மிரட்டல் விடுத்ததால், பதட்டத்திலும், பயத்திலும் என்ன செய்வது என தெரியாமல் மனமுடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டத்தில் நிடுகுடு கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கீதா(21). பி.காம் படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்துள்ள சங்கீதாவுக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த சிவா என்ற வாலிபர் காதலிப்பதாக கூறியுள்ளார்.

இவரது காதலை சங்கீதா ஏற்காத நிலையில், தொடர்ந்து சங்கீதாவை ஒருதலையாக சிவா காதலித்து வந்துள்ளார். சங்கீதா எங்கு சென்றாலும் பின் தொடர்ந்து தன்னைக் காதலிக்கும்படி தொடர்ந்து சிவா தொந்தரவு செய்துள்ளார்.

ஒரு கட்டத்தில், தன்னைக் காதலிக்கவில்லை என்று சங்கீதா சொல்லியும், அதைக் கேட்காமல் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு சிவா டார்ச்சர் செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பேலூரில் உள்ள அய்யப்பஸ்வா கோயிலுக்கு சங்கீதா குடும்பத்தினருடன் சென்றிருந்தார்.

அப்போது சிவாவும் அங்கு வந்தார். அங்கு சங்கீதாவை பார்த்து, என் போன் அழைப்பை ஏன் எடுக்கவில்லை என்று திட்ட ஆரம்பித்தார். அத்துடன் என்னைக் காதலிக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இதனால் சங்கீதா மிகவும் கவலையடைந்தார். காதலிக்க முடியாது என்று எத்தனை முறை சொல்லியும், கேட்காமல் தினமும் தொல்லை கொடுப்பதுடன், காதலிக்கவில்லை என்றால் கொலை செய்வேன் என்று சிவா மிரட்டுவதால் மன உளைச்சல் அடைந்தார்.

தன்னால் தன் குடும்பத்திற்கு கெட்டப்பெயர் வந்து விடுமோ என்று அச்சமடைந்த சங்கீதா, நேற்று வீட்டில் யாருமில்லாத போது, அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடைக்குச் சென்றிருந்த அவரது பெற்றோர், வீட்டிற்கு வந்து பார்த்த போது, சங்கீதா தூக்கில் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததுடன் அலறித் துடித்தனர். இச்சம்பவம் குறித்து பேலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தரப்பட்டது.

விரைந்து வந்த போலீஸார், சங்கீதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இச்சம்பவம் குறித்த வழக்குப்பதிவு செய்து சிவாவை கைது செய்தனர்.

துணி துவைக்கச் சென்ற இடத்தில் சோகம் : மகன்,தாய் இருவரும் பலி!!

செங்கல்பட்டில்..

துணி துவைக்கச் சென்ற தாயும், மகனும் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அருகே நெல்வாய்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விமல் ராணி (35).

இவரது மகன் பிரவீன் (15) இருவரும் வயல் பகுதியில் உள்ள கிணற்றில் துணி துவைக்க சென்றனர். அப்போது, ​​கிணற்றின் அருகே அமர்ந்திருந்த பிரவீன்குமார் தவறி கிணற்றில் விழுந்தார். இதை பார்த்த விமல் ராணி மகன் பிரவீனை காப்பாற்ற கிணற்றில் குதித்தார்.

இந்நிலையில் இருவரும் நீரில் மூழ்கி காணாமல் போயினர். அதன்பின், வயல்வெளியில் வேலை செய்துவிட்டு, துணி துவைக்கச் சென்றவர்கள், நீண்ட நேரமாகியும் அவர்களை காணவில்லை என, அங்கு சென்று பார்த்தனர்.

அப்புறம் புடவை மட்டும் மேலே மிதந்து கொண்டு இருந்தது. இதைத்தொடர்ந்து உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கிணற்றில் தண்ணீர் நிரம்பியதால் இருவரையும் மீட்க மீட்புக் குழுவினர் போராடி கிணற்றில் இருந்து இறந்த இருவரையும் மீட்டனர். இதையடுத்து, இருவரது உடல்களையும் கைப்பற்றிய அணைக்கட்டு போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கிராம மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழில் நடந்த திகில் சம்பவம் : பட்டத்துடன் பல அடி தூரம் பறந்த இளைஞன்!!

யாழில்..

யாழ்ப்பாணத்தில் பட்டத்தின் கயிற்றில் ஏறி வானத்தை நோக்கி சென்ற வாலிபர் ஒருவரின் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. யாழ்ப்பாணம் – தொண்டமனாறு பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் பெரிய பட்டம் பறக்கப் பயன்படும் கயிற்றில் ஏறி சுமார் 30 அடி உயரத்தில் ஏறி புகைப்படம் எடுத்துள்ளார்.

வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவிற்காக தயாரிக்கப்பட்ட பெரிய பட்டத்தின் கயிற்றில் ஏறியே குறித்த இளைஞன் புகைப்படம் எடுத்துள்ளார். பட்டத்தின் கயிற்றில் ஏறிய இளைஞன் மீண்டும் கீழே வரமுடியாமல் அசௌகரியத்தில் இருந்ததாகவும் பின்னர் கடின முயற்சியின் பின்னர் காப்பாற்றப்பட்டதாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன் 2021ஆம் ஆண்டு, பெரிய பட்டத்தை பறக்க விட சென்ற இளைஞன் ஒருவர் கயிற்றில் தொங்கி சுமார் 100 அடி உயரத்தில் உயிர்தப்பிய சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலை இழுத்துச்சென்ற சிறுவனின் உடல் மீட்பு!!

களனியில்..

களனி கங்கையில் நீராடியபோது முதலையினால் கௌவிச் சென்ற 11 வயதான சிறுவனின் சடலம் நேற்று (17) இரவு கண்டுபிடிக்கப்பட்டதாக கடுவலை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் நடந்த இடத்திலிருந்து அம்பத்தளை நோக்கி சுமார் 100 மீற்றர் தொலைவில் சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேசமயம் சிறுவனின் உடலின் எந்த பாகமும் காணாமல் போனதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும் கடுவலை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் இவர் மேலும் தெரிவித்தார்.

கடுவலை வெலவிட்ட புனித அந்தோனி மாவத்தையில் வசித்து வந்த 11 வயதுடைய டிஸ்னா பிரமோத் பெரேரா என்ற பாடசாலை மாணவனே முதலை இழுச்சென்றதால் உயிரிழந்துள்ளார்.

இலங்கையர்களுக்கு மத்திய வங்கி வெளியிட்ட எச்சரிக்கை!!

இலங்கையில்..

இலங்கையில் கிரிப்டோ நாணய முதலீடு தொடர்பான மோசடி பாரியளவில் இடம்பெறுவதாக, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மோசடியாளர்களின் தந்திரோபாயங்களில் சிக்கி பணத்தை இழக்காமல் அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிரிப்டோ நாணய முதலீடு தொடர்பில் பொதுமக்களை எச்சரிக்கும் வகையில் வெளியிட்ட அறிவிப்பில் இலங்கை மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது.

நாயை காப்பாற்றும் முயற்சியில் பரிதாபமாக உயிரிழந்த நபர்!!

புத்தளத்தில்..

புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாதம்பே, விலத்தவ பகுதியில் இருந்து நான்கு வழிச் சந்தியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேன் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. வேனுக்கு குறுக்காக பாய்ந்த நாயை காப்பாற்றும் முயற்சில் ஈடுபட்ட வேளையில் விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்றைய தினம் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி படுகாயமடைந்த நிலையில் கல்முருவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தும்மலசூரிய பிரதேசத்தில் வசிக்கும் 63 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் கல்கமுவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாதம்பை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டில் திடீரென அதிகரித்த தேங்காயின் விலை!!

இலங்கையில்..

இலங்கை சந்தையில் தேங்காயின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடளாவிய ரீதியில் தேங்காய் விளைச்சலில் பற்றாக்குறை காணப்படுவதே இதற்கு காரணம் என தென்னை விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மோசமான வானிலை காரணங்களால் தேங்காய் அறுவடை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆண்டு முழுவதும் சுமார் 1500மிமீ மழைவீழ்ச்சியும், தென்னை அறுவடைக்கு சுமார் 28 செல்சியஸ் வெப்பநிலையும் தேவை. ஆனால் கடந்த சில மாதங்களாக சில பகுதிகளில் கனமழையும், சில பகுதிகளில் மிகவும் வறண்ட வானிலையும் நிலவுகின்றமைாயால் இந்தநிலை ஏற்பட்டுள்ளதாக தென்னை அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, காலி மாவட்டத்தில் தற்போது தேங்காய் ஒன்றின் விலை 80 ரூபா தொடக்கம் 120 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், அன்றாட உணவு தயாரிப்பதற்கு அத்தியாவசியமான தேங்காயின் விலை அதிகரித்துள்ளதால் பல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக நுகர்வோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவி : பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்!!

கொழும்பில்..

டெங்கு காய்ச்சலால் ஏற்பட்ட உள் இரத்தக்கசிவே கொழும்பு பல்கலைக்கழக மாணவியின் மரணத்திற்கான காரணம் என பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. டெங்கு நோயினால் ஹொரணை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவியொருவர் நேற்றைய தினம் உயிரிழந்திருந்தார்.

கொழும்பு அழகு பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும்,ஹொரணை உயன பிரதேசத்தில் வசித்து வந்த ஹாஷினி பாக்யா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்திருந்தார். டெங்கு காய்ச்சல் காரணமாக கடந்த 5 ஆம் திகதி ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த 11ஆம் திகதி அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதன்போது அவர் சுயநினைவின்றி இருந்ததாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஹாஷினி பாக்யா நேற்றைய தினம் டெங்கு காய்ச்சலால் ஏற்பட்ட உள் ரத்தக் கசிவு காரணமாக உயிரிழந்துள்ளதாக பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, 2023 ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் 86,232 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு கொழும்பில் 3,992 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இந்த வருடத்தில் இதுவரை டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,892 ஆக உள்ளது. அவர்களில் 1,956 பேர் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல் : ஆறுமுகம் மதியாபரணம்!!

மரண அறிவித்தல் : ஆறுமுகம் மதியாபரணம்!!

நெடுந்தீவு கிழக்கை பிறப்பிடமாகவும்,பெரியதம்பனையை நிரந்தர வசிப்பிடமாகவும், மெனிக்பாம் செட்டிகுளத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் மதியாபரணம் இன்று 17-01–2024 காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலாயுதம் ஜானகி தம்பதிகளின் அன்பு மருமகனும் கமலாதேவியின் கணவரும், விஜயகுமார், மகிழா,கோடீஸ்வரன்,வேணி,முகுந்தன்,விநோதன் ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாமில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் இடம்பெற்று தகனக்கிரிஜைகளுக்காக நாளை மதியம் 2 மணியளவில் மெனிக்பாம் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மகன் – முகுந்தன்
Mobile : +94 0772358453

பிரித்தானியாவில் யாழ்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு!!

பிரித்தானியாவில்..

பிரித்தானியாவில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் இளம் தாய் , புற்று நோய் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த திங்கட்கிழமை (15) உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் யாழ் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 42 வயதான பெண்ணே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் கடந்த 15 வருடங்களாக பிரித்தானியாவில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பெண்ணின் மரணம் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

அபுதாபியில் இலங்கை இளைஞருக்கு நடந்தது என்ன? கதறும் குடும்பத்தினர்!!

அபுதாபியில்..

அபுதாபிக்கு வேலைக்காகச் சென்ற காலியை சேர்ந்த 24 வயது இளைஞன் இறந்துவிட்டதாக அவர் தொழில் புரிந்த நிறுவனம் தெரிவித்துள்ளமை இளைஞனின் உறவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் அபுதாபிக்கு தொழிலுக்காகச் சென்ற காலி – பத்தேகம, கோனாபினுவல பகுதியைச் சேர்ந்த கவிந்து சத்சர என்பவரே இவ்வாறு இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் கவிந்து சத்சர அபுதாபிக்கு தொழிலுக்காகச் சென்று அங்குள்ள ஒரு உணவகத்தில் பணிபுரிந்துள்ளார்.

இந்நிலையில், அவரது குடும்பத்தினருக்கும் நெருங்கிய நண்பர்களுக்கும் தினமும் தொலைபேசி அழைப்பெடுத்து தொடர்பை பேணி வந்துள்ள நிலையில், கடந்த 6 ஆம் திகதி முதல் குடும்ப உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு அவரது தொடர்பு எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

இது தொடர்பில் குடும்ப உறவினர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (16) இளைஞன் தொடர்பில் தொழில் புரிந்த இடத்திற்கு தொடர்புகொண்டு கேட்ட போது அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த உறவினர்கள், இளைஞனுக்கு எவ்வித நோய்களும் இல்லை என்றும் அவர் தொழில்புரியும் நிறுவனத்தில் அவருக்கு எதிராக எந்த பிரச்சனையும் இல்லை என்றும் கூறுகின்றனர்.

இந்நிலையில் இளைஞனுக்கு என்ன நேர்ந்தது என்பதை விரைவில்கண்டறியுமாறும் அந்நாட்டு அரசும் பொறுப்பானவர்களும் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டுமெனவும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

10 வயது இளம் பிக்குவை தகாத முறைக்கு உட்படுத்திய இருவர் கைது!!

மீஹகதென்னயில்..

இளம் பிக்கு ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மீஹகதென்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர். விகாரை ஒன்றின் விகாராதிபதி உட்பட மூவர் 10 வயதான பிக்குவை தகாத முறைக்கு உட்படுத்தியதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பேரிலே 20 மற்றும் 17 வயதுடைய இருவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதன் போது மீஹகதென்ன கும்ஒதுவ மற்றும் களுபஹன பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இளைஞர்கள் இருவரை விகாரைக்கு அழைத்து வந்த விகாராதிபதி புதிய தேரரை தகாத முறைக்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகத்துக்குரிய விகாராதிபதி தற்போது சிங்கப்பூர் சென்றுள்ள நிலையில் அவர் நாடு திரும்பியதும் விசாரணை நடத்தப்படும் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!!

வெளிநாடு..

வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெறுவதற்காக தமது கடவுச்சீட்டு மற்றும் பணத்தை ஒரு நிறுவனத்திடமோ அல்லது நபரொருவரிடமோ ஒப்படைப்பதில் அவதானமாக இருக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் எச்சரித்துள்ளது.

எந்தவொரு நிறுவனத்திடமோ அல்லது நபரிடமோ தங்கள் கடவுச்சீட்டு அல்லது பணத்தை ஒப்படைப்பதற்கு முன், அவ்வாறான தரப்பினர்களின் உரிமம் தொடர்பில் கவனம் செலுத்துமாறு வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் கோரியுள்ளது. அறிவிப்பில் மேலும், அவ்வாறான தரப்பினர்களின் உரிமம் மற்றும் அது சார்ந்த தகவல்களை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் ஊடாக அறிந்து கொள்ள முடியும்.

இதுதவிர 1989 என்ற துரித இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி அது தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்திகொள்ள முடியும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக தெரிவித்து மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன் கடந்த காலங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்று தருவதாக தெரிவித்து இடம்பெற்ற பண மோசடி சம்பவங்கள் தொடர்பில் அதிக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாடசாலை விடுமுறையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் : அதிகரிக்கும் விடுமுறை நாட்கள்!!

இலங்கையில்..

2023 ஆம் ஆண்டின் மூன்றாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இரத்து செய்யப்பட்ட க.பொ.த உயர்தர விவசாய பாடநெறியின் இரண்டாம் பிரிவு வினாத்தாளை எதிர்வரும் முதலாம் திகதி நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அடுத்த தவணைக்காக பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த வினாத்தாளை கடந்த 10ஆம் திகதி மாணவர்களுக்கு வழங்க கல்வி அமைச்சு திட்டமிட்டிருந்தது. எனினும் பரீட்சைக்கு முன்னதாக சமூக வலைத்தளங்களில் விவசாய பாடப்பிரிவு வினாத்தாள் வெளியாகி இருந்தமையால் சர்ச்சை ஏற்பட்டது.

இந்நிலையில், குறித்த பாடநெறிக்கான பரீட்சையை இரத்துச் செய்வதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்திருந்தது. 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டத்தை பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

காதலனை பார்வையிடுவதற்காக சென்ற யுவதிக்கு நேர்ந்த கதி!!

ஆனமடுவவில்..

ஆனமடுவ பிரதேசத்தில் காதலிப்பதாக யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் நபர் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

19 வயது யுவதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும், இந்த சம்பவத்தை அடுத்து ஏற்பட்ட கடும் அதிர்ச்சியால், மாத்திரைகள் உட்கொண்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவகத்தகம பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் இந்த யுவதி தனது பாட்டியுடன் அந்த பகுதியில் உள்ள அறையில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்துள்ளார்.

ஆனமடுவ நகருக்கு தேவைக்காக பணம் பெற்றுக் கொள்வதற்காக வந்த போது குறித்த இளைஞனை அடையாளம் கண்டுள்ளார். இவ்வாறு ஒருவரையொருவர் அறிமுகம் செய்து கொண்ட பின்னர் இருவரும் சில காலம் நட்பாக இருந்த நிலையில், அண்மையில் யுவதியிடம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து பேசுவதற்காக 15ஆம் திகதி தன்னை சந்திக்க வருமாறு யுவதியிடம் அந்த இளைஞர் கூறியுள்ளார்.

ஆனமடுவ நகரிற்கு யுவதியை அழைத்த இளைஞன் அங்கு துஷ்பிரயோகம் செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பின்னர், வீடு திரும்பிய யுவதி, நடந்த சம்பவத்தை தனது தந்தையிடம் கூறிவிட்டு, கழிவறைக்கு சென்று மாத்திரைகள் சிலவற்றை உட்கொண்டுள்ளார்.

யுவதியின் பெற்றோர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

டெங்கு நோயினால் பலியான பல்கலைக்கழக மாணவி!!

மபுதுகலவையில்…

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு ஹொரண வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவி இன்று (16.01.2024) உயிரிழந்துள்ளார். மபுதுகலவை வசிப்பிடமாகக் கொண்ட கொழும்பு பல்கலைக்கழக மாணவியான ஹாசினி பாக்யா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மாணவி காய்ச்சல் காரணமாக கடந்த (06.01.2024) ஆம் திகதி ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில், குறித்த யுவதிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவருக்கு டெங்கு நோய் இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறானதொரு நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த பல்கலைக்கழக மாணவி இன்று (16.01.2024) அதிகாலை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.