இலங்கையில் இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஐ.எஸ்.எச்.ஜே.இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். இந்த வருடம் இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை விநியோகிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இலத்திரனியல் கடவுச்சீட்டு விநியோகத்திற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் தற்போது இன்புளுவென்சா மற்றும் அதனை ஒத்த வைரஸ் காய்ச்சல் அதிகம் பரவவதாக வைரஸ் நோய்கள் தொடர்பான சுகாதார வைத்திய நிபுணர் வைத்தியர் ஜூட் ஜயமஹா எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே, இருமல் இருப்பவர்கள் அது மற்றவர்களுக்கு பரவுவதை தடுக்க முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இன்புளுவென்சா மற்றும் அதனை ஒத்த வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகளாக காய்ச்சல், இருமல், தொண்டை புண், சளி அல்லது அடைப்பு, தசை அல்லது உடல் வலி, தலைவலி மற்றும் சோர்வு போன்றவைகள் ஏற்படலாம். இவ்வாறு அடையாளம் காணபட்டவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
குறிப்பாக நவம்பர் முதல் பெப்ரவரி மாதம் வரையிலும் மற்றும் ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையிலும் இரண்டு காலக்கட்டங்களில் இன்புளுவென்சா வைரஸ் பரவும். கடந்த டிசம்பர் மாதம் மற்றும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் பரிசோதனைகளில் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு 25 சதவீதம் பேருக்கு இன்புளுவென்சா வைரஸ் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொழும்பு, ராகம, களுபோவில, நீர்கொழும்பு, லேடி ரிஜ்வே சிறுவர்களுக்கான வைத்தியசாலை மற்றும் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை உள்ளிட்ட 20 வைத்தியசாலைகளில் இன்புளுவென்சா மற்றும் அதனை ஒத்த வைரஸ் காய்ச்சல் தொடர்பில் கண்காணிப்பை அதிகரிக்க சுகாதார அமைச்சின் செயலாளர் தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதன்படி, நாளாந்தம் மாதிரிகள் தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்படுகின்றன. தற்போது பரவும் முதன்மையான வைரஸ் வகை இன்புளுவென்சா ஏ என கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், கோவிட் 19 வைரஸ் தொடர்பிலும் கண்காணிப்பை மேம்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 9 நாட்களில் 500 மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 6 ஆறு பேருக்கு நோய் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கர்ப்பிணித் தாய்மார்கள், இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் இன்புளுவென்சா போன்ற நோய்களால் பாதிக்கப்படக் கூடியவர்களாவர். எனவே, இருமல் இருப்பவர்கள் மற்றவர்களுக்கு பரவுவதை தடுக்க முகக்கவசம் அணிய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
புத்தளம் – மதுரங்குளி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் மதுரங்குளி – எள்ளுச்சேனை பகுதியில் நேற்றிரவு (17-01-2024) இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் மதுரங்குளி – விருதோடையைச் சேர்ந்த 15 வயதுடைய கலீல் அஹ்மட் முஹம்மது எனும் பாடசாலை மாணவனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த மாணவன் விருதோடை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் 10 ஆம் தரத்தில் கல்வி கற்றுவந்துள்ளார். மேலும், மாணவன் பயணித்த மோட்டார் சைக்கிள், விருதோடை பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த லொறியொன்றுடன், பின்னால் சென்று மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த குறித்த மாணவனை அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த போதிலும், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிசாம் , உயிரிழந்த மாணவனின் சடலம் மீதான மரண விசாரணையை நடத்தினார்.
மேலும், உயிரிழந்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் நல்லடக்கத்திற்காக அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டதாக புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிசாம் கூறினார். இந்த விபத்துச் சம்மவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் டெங்கு நோயாயால் பாதிக்கப்பட்டு வீடு திரும்பிய இரு பிள்ளைகளின் தந்தை உயிர்ழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய இரண்டு பிள்ளைகளின் இளம் தந்தை இன்றைய தினம் (19) யாழ் நகரப்பகுதியில் வங்கியொற்றுக்கு சென்ற சமயம் மயங்கமடைந்து விழ்ந்து உயிரிழந்துள்ளார்.
யாழ் போதனா வைத்தியசாலையில் டெங்கு நோய் காரணமாக சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார் தனது தேவைக்காக வங்குயொன்றுக்கு பணம் பெற சென்றபோது இவ் துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அரியாலை இராசதோட்டம் பகுதியைச் சேர்ந்த செல்வராசா சிந்துஜன் வயது 31என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் உடல் கூற்று சோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. அதேவேளை யாழ்மாவட்டத்தில் டெங்கின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதனால் உயிரிழப்புக்களும் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
களனி ஆற்றில் நீராடச் சென்ற போது முதலை ஒன்றால் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவனின் சடலம் உறவினர்களின் கண்ணீருக்கு மத்தியில் அடக்கம் செய்யப் பட்டுள்ளது. கடுவெல வெலிவிட்ட புனித அந்தோனி மாவத்தையில் களனி ஆற்றுப்படுகையில் இந்த துயர சம்பவம் பதிவாகியிருந்தது.
சிறுவனின் பாட்டி துணி துவைத்துக் கொண்டிருந்த போது, சிறுவன் திஷ்ன தனது தம்பியுடன் அருகில் நீராடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக அங்கு வந்த முதலை திஷ்னவை இழுத்துக் சென்றது. அதன் பின்னர் அந்த இடத்திற்கு வந்த பொலிஸ் கடற்படை பிரிவினர் மற்றும் கடற்படை சுழியோடி அதிகாரிகள் பிரதேசவாசிகள் இணைந்து சிறுவனை தேடும் பணி முன்னெடுக்கபப்ட்டது.
இதனையடுத்து சிறுவன் நீராடிய இடத்தில் இருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் ஆற்றின் கீழ் பகுதியில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. முதலைவாயில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆற்றில் நீராடச் சென்ற போது முதலை ஒன்றால் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவனின் சடலம் உறவினர்களின் கண்ணீருக்கு மத்தியில் அடக்கம் செய்யப் பட்டுள்ளது.
கடுவெல வெலிவிட்ட புனித அந்தோனி மாவத்தையில் களனி ஆற்றுப்படுகையில் இந்த துயர சம்பவம் பதிவாகியிருந்தது. சிறுவனின் பாட்டி துணி துவைத்துக் கொண்டிருந்த போது, சிறுவன் திஷ்ன தனது தம்பியுடன் அருகில் நீராடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக அங்கு வந்த முதலை திஷ்னவை இழுத்துக் சென்றது.
அதன் பின்னர் அந்த இடத்திற்கு வந்த பொலிஸ் கடற்படை பிரிவினர் மற்றும் கடற்படை சுழியோடி அதிகாரிகள் பிரதேசவாசிகள் இணைந்து சிறுவனை தேடும் பணி முன்னெடுக்கபப்ட்டது. இதனையடுத்து சிறுவன் நீராடிய இடத்தில் இருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் ஆற்றின் கீழ் பகுதியில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. முதலைவாயில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
அம்பாறை – அக்கரைப்பற்றுப் பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட பாத்திமா பேகம் ஜலீல் அமெரிக்காவில் Westfield middle school 8 ஆம் தரத்தில் கல்வி கற்கிறார். இம்மாணவி கல்வியிலும் இதர செயற்பாடுகளிலும் சிறந்து விளங்கியதால் அமெரிக்காவில் 300 பாடசாலை மாணவிகள் ஒன்றிணையும் சமூக மேம்பாட்டு ஒன்றிய ஒன்று கூடலுக்கு பாத்திமா பேகம் ஜலீல் Westfield middle school சார்பில் தூதுவராக(Ambassador ) ஆக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் தனது மார்க்கத்தை கைவிடாது பாடசாலையில் ஹிஜாப் அணிந்து கொண்டு தன்னை தூதுவராக (Ambassador) அடையாளப்படுத்தி இருப்பது பாராட்டுக்குரியது. அமெரிக்காவில் பல நாட்டு மாணவர்களுக்கு மத்தியில் பாத்திமா ஜலீல் தூதுவராக (Ambassador) தெரிவு செய்யப்படிருப்பது இவரின் திறமைக்கு ஒரு சான்றாகப் பதிவாகியுள்ளது.
தனது தந்தையின் அயராத உழைப்பும் அர்ப்பணிப்பும் வழிகாட்டலும் தன்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்ததாக பாத்திமா ஜலீல் தெரிவித்துள்ளார்.
புத்தளம் – மதுரங்குளி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் மதுரங்குளி – எள்ளுச்சேனை பகுதியில் நேற்றிரவு (17-01-2024) இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் மதுரங்குளி – விருதோடையைச் சேர்ந்த 15 வயதுடைய கலீல் அஹ்மட் முஹம்மது எனும் பாடசாலை மாணவனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த மாணவன் விருதோடை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் 10 ஆம் தரத்தில் கல்வி கற்றுவந்துள்ளார். மேலும், மாணவன் பயணித்த மோட்டார் சைக்கிள், விருதோடை பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த லொறியொன்றுடன், பின்னால் சென்று மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த குறித்த மாணவனை அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த போதிலும், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிசாம் , உயிரிழந்த மாணவனின் சடலம் மீதான மரண விசாரணையை நடத்தினார்.
மேலும், உயிரிழந்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் நல்லடக்கத்திற்காக அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டதாக புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிசாம் கூறினார். இந்த விபத்துச் சம்மவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பள அதிகரிப்பு, பதவி உயர்வு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூழியர்களினால் நேற்று (18.01.2024) மதியம் 12.30 மணியளவில் கவனயீரப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூழியர்களினால் முன்னெடுக்கப்பட்ட இவ் கவனயீர்ப்பு போராட்டம் பேரணியாக வைத்தியசாலை முன்றலில் ஆரம்பமாகி வைத்தியசாலை வீதியூடாக ஏ9 வீதியினை வந்தடைந்து ஏ9 வீதியூடாக பண்டாரவன்னியன் சுற்றுவட்டம் வரை சென்று மீன்றும் ஏ9 வீதியூடாக வருகை தந்து வைத்தியசாலையின் ஊழியர் நூழைவாயில் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அரசே அனைத்து பதவி உயர்வையும் வழங்கு, பொருளாதார நீதிக்காக வைத்தியர்களுக்கு வழங்கிய 35000 ரூபா கொடுப்பனவை அனைத்து சுகாதார ஊழியர்களுக்கும் சமமாக வழங்கு, வருமானம் அற்ற வரிச்சுமை எதற்கு? போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் பேரணியில் கலந்து கொண்டிருந்ததுடன் சம்பளத்தினை அதிகரி, பதவி உயர்வு வழங்கு போன்ற கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
இக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் 200க்கு மேற்பட்ட வைத்தியசாலை சிற்றூழியர்கள் கலந்து கொண்டிருந்தமையுடன் ஸ்ரீலங்கா ஜனரஜ சுகாதார சேவைச்சங்கம் இக் கவனயீர்ப்புப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
மேலும் நோயார்களின் நலனை கருத்தில் கொண்டு சுகாதார சிற்றூழியர்கள் தமது மதிய நேர இடைவேளையின் போதே இப் போராட்டத்தினை முன்னெடுந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பட்டத்துடன் பறக்க வேண்டாம் என யாழ் இளைஞர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். யாழ் வடமராட்சி பகுதிகளில் பட்டம் விடும் பருவ காலம் ஆரம்பித்துள்ள நிலையில் பலரும் பலவிதமான பட்டங்களை வானில் பறக்கவிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.
அதேசமயம் இளைஞர்கள் சிலர் தமது பட்டத்துடன் பல அடி உயரங்களுக்கு பறந்து ஆபத்தான விளையாட்டுக்களில் ஈடுபடும், சாகசம் செய்யும் காணொளிகளும் சமூகவலைத்தளங்களில் உலாவருகின்றது.
இளைஞர்களின் இந்த செயல் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் இது போன்ற உயிருக்கு ஆபத்தினை ஏற்படுத்து செயற்பாடுகளில் ஈடுபடவேண்டாம் என யாழ் இளைஞர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இத்தாலியில் மர்மான முறையில் உயிரிழந்த இலங்கையர் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. இத்தாலியில் பணியாற்றிய நிலையில் 51 வயதான சம்பத் சந்தன வீரகொடி என்பவர் உயிரிழந்துள்ளார்.
அவர் உயிரிழந்து பத்து மாதங்கள் கடந்துள்ள போதிலும், சடலத்தை நாட்டுக்கு கொண்டு வர முடியாத நிலையில் உள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
இத்தாலி செல்வதற்கு விசாவுக்கு விண்ணப்பித்த போது நிராகரிக்கப்படுவதாக மனைவி வேதனையுடன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தானும் மகனும் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளதாக, 48 வயதான நிரோஷா ஷாமலி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
வவுனியா நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொலிசாரின் ஏற்பாட்டில் மக்களின் நலன் கருதி விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன.
குழுமாட்டுச்சந்தி தாஸ்கோட்டம் பகுதியில் அமைந்துள்ள காளியம்மன் ஆலயத்தில் வெகு சிறப்பான முறையில் இவ் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றிருந்தது.
இவ் வழிபாட்டில் நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.எம்.பி.ஆர்.கே திவுல்வெவ, பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், அப்பகுதி மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
விராலிமலை அருகே சொத்து தகராறில் அண்ணன் மனைவியை கொலை செய்து ஆழ்துளை கிணற்றில் புதைத்து வைத்த இளைஞரை போலிஸார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம் ஆவூர் ஊராட்சியில் இருக்கிறது ஆம்பூர்பட்டி.
இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவருக்கு சேவியர் (42), ராயப்பன் (38) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இதில், ஆரோக்கியசாமி பெயரில் இருந்த சொத்துக்களை அண்ணன், தம்பி இருவரும் சரிசமமாக பிரித்துக் கொண்டனர்.
இந்நிலையில், சேவியருக்கு திருமணம் நடந்து அவருக்கு குழந்தைகள் இல்லை. ராயப்பனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2 வருடத்திற்கு முன்பு சேவியர் இறந்துவிட்டார்.
இதைத் தொடர்ந்து, சேவியர் மனைவி ஆரோக்கியமேரி (37) தனது கணவர் பெயரில் இருந்த சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றி எழுதி வைத்துக் கொண்டார்.
இதனால், அதுகுறித்து ஆரோக்கியமேரிக்கும், அவரது கொழுந்தனாரான ராயப்பனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அப்போது, ‘உனக்கு தான் குழந்தை இல்லையே எதற்கு என் அண்ணன் பெயரில் இருந்து நிலத்தை உன் பெயருக்கு மாற்றினாய்?.
ஒழுங்காக அந்த சொத்துகளை என் பெயருக்கு எழுதி கொடுத்துவிடு. இல்லையென்றால் நடக்கிறதே வேறு. நான் சொல்கிறபடி நடக்காவிட்டால் உன்னை கொலை செய்யாமல் விடமாட்டேன்’ என்று அடிக்கடி மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை ஆரோக்கியமேரி தனது நிலத்தில் விவசாயம் செய்துள்ள நெற்கதிர் வயல்களில் மயில் விரட்டிக் கொண்டிருந்தார். அப்போது, ஆரோக்கியமேரியின் அண்ணன் சகாயராஜ் மணப்பாறை அருகே உள்ள கருங்குளத்தில் இருந்து போனில் பேசியுள்ளார். பின்னர், மாலை 7 மணியளவில் அவர் தனது தங்கைக்கு போன் செய்யும்போது போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.
பலமுறை பேச முயன்றும் பேச முடியாததால் ஆரோக்கியமேரியின் வீட்டருகே உள்ளவர்களுக்கு போன் செய்து வயலுக்கு சென்று தேடி பார்க்க சொல்லி உள்ளார். பின்னர், அவர்கள் அங்கு சென்று பார்த்த போது அவர் அங்கு இல்லை.
இதனால், சந்தேகமடைந்த சகோதரர் அவரது உறவினருடன் கருங்குளத்தில் இருந்து புறப்பட்டு ஆம்பூர்பட்டிக்கு வந்து வயல் பகுதியில் உள்ள கிணறு, மரம், வயல்களில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் அன்று இரவே இதுகுறித்து மாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பின்னர், நேற்று காலை அவரது உறவினர்கள் ஆரோக்கியமேரியின் வயல் அருகே உள்ள மதயானைப்பட்டியை சேர்ந்த மூக்கன் என்பவரது காட்டுப்பகுதியில் மூடப்படாமல் திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் புதிதாக மண் போட்டு மூடி இருந்ததை பார்த்து சந்தேகம் அடைந்து இதுகுறித்து மாத்தூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாத்தூர் காவல் நிலைய போலீஸார் அங்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
பின்னர், நேற்று மதியம் 1 மணியளவில் விராலிமலை தாசில்தார் கருப்பையா முன்னிலையில் பொக்லைன் எந்திரத்தின் மூலம் ஆழ்துளை கிணற்றை தோண்டி பார்த்தபோது அதில் ஆரோக்கியமேரி கொலை செய்யப்பட்டு சடலமாக இருந்தது தெரியவந்தது. பின்னர், அவரது சடலத்தை போலீஸார் குழியில் இருந்து வெளியே எடுத்து உடற்கூராய்வு செய்வதற்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் வயலில் இருந்த ஆரோக்கியமேரியை அவரது கொழுந்தன் ராயப்பன் கொலை செய்து உடலை அவரது டிராக்டர் கொலுவில் வைத்து எடுத்து சென்று அங்கிருந்து 100 மீட்டர் தூரமுள்ள மூக்கன் காட்டில் உள்ள ஆழ்துளை கிணற்றில் சொருகி புதைத்து விட்டு பின்னர் டிராக்டரை வீட்டில் நிறுத்திவிட்டு அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார் என்று அவரது உறவினர்கள் தெரிவித்ததாக கூறினர்.
மேலும் போலீஸார் ராயப்பனின் தாய் சின்னம்மாள், மனைவி லிவிட்டியாமேரி ஆகியோரிடம் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் மாத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், மணப்பாறை பகுதியில் பதுங்கியிருந்த ராயப்பனை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து மாத்தூர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி, சிறையில் அடைத்தனர். சொத்துப் பிரச்னைக்காக தனது அண்ணன் மனைவியை இளைஞர் ஒருவர் கொலை செய்து ஆழ்துளை கிணற்றில் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தனக்குத் துரோகம் செய்ததாக சந்தேகப்பட்டு மனைவியின் கழுத்தை அறுத்து கணவர் படுகொலை செய்த சம்பவம் ஹைதராபாத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் விஜய்(41). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கும் புஷ்பலதா என்பவருக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 13 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 9 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
புஷ்பலதா பியூட்டிஷியன் படிப்பை படித்து வந்தார். தனது மனைவி புஷ்பலதாவின் நடத்தையின் முது விஜய் சந்தேகப்பட்டார். இதனால் அவருக்கும், புஷ்பலதாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், .என்.என்.யு.ஆர்.எம் காலனியில் உள்ள அரசுக்குச் சொந்தமான இரண்டு படுக்கையறைகள் கொண்ட வீட்டை, விஜயின் சகோதரி சமீபத்தில் வாங்கியுள்ளார்.
அந்த வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் என்று தனது மனைவி புஷ்பலதாவை விஜய் நேற்று மாலை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு படுக்கை அறையில் புஷ்பலதாவின் கழுத்தை அறுத்து விஜய் கொலை செய்தார். இதன் பின் ரத்தக்கறையோடு அவர் வீட்டை வெளியேறுவதைப் பார்த்த பொதுமக்கள், போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
அங்கு விரைந்து வந்த அப்துல்லாபூர்மெட் போலீஸார், கொலை செய்யப்பட்ட புஷ்பலதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புஷ்பலதாவை திட்டமிட்டுக் கொலை செய்தவற்காக தனது சகோதரி வீட்டிற்கு விஜய் அழைத்துச் சென்றது விசாரணையில் தெரிய வந்தது.
இதற்காக கொலை செய்வதற்கு முதல்நாள், கத்தியை விஜய் வாங்கியதும் தெரிய வந்தது. இதையடுத்து விஜயை போலீஸார் நேற்று இரவு கைது செய்தனர். இதுகுறித்து அப்துல்லாபூர்மெட் போலீஸார் கூறுகையில்,” மனைவி புஷ்பலதா தனக்கு துரோகம் செய்வதாக சந்தேகித்த விஜய் இந்த கொலையைச் செய்துள்ளார். கடந்த பத்தாண்டுகளாக சந்தேகத்தின் பேரில் கணவன், மனைவிக்குள் பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இதுகுறித்து புஷ்பலதா புகாரும் செய்துள்ளார்” என்றனர். கடந்த 2014-ம் ஆண்டு புஷ்பலதாவை தாக்கிய விஜய் மீது மெடிப்பள்ளி காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சந்தேகத்தால் மனைவியின் கழுத்தை அறுத்து கணவர் கொலை செய்த சம்பவம் ஹைதராபாத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதலிக்காக யார் யாரோ என்னவெல்லாமோ பரிசு தருகிறார்கள். பஞ்சாப் மாநிலத்தில், தன்னுடைய காதலிக்காக, காதலி எழுத வேண்டிய போட்டித் தேர்வை காதலன் எழுத முயற்சித்து, அதற்காக காதலியைப் போல பெண் வேடமிட்டு, போட்டித்தேர்வில் கலந்து கொண்டு தேர்வும் எழுதி அதிர வைத்திருக்கிறார்.
இந்த போட்டித் தேர்வில் கலந்து கொள்வதற்காக தனது காதலியைப் போல் வேடமிட்டு, ஆதார் கார்டு, ஹால் டிக்கெட் என அனைத்து ஆவணங்களையும் போலியாக உருவாக்கி போட்டித்தேர்வில் கலந்து கொண்டிருந்துள்ளார். இந்நிலையில், கைரேகையால் காதலன் அதிகாரிகளிடம் வசமாக சிக்கினார். தேர்வு எழுத வந்த காதலனை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் பகுதியில் சுகாதாரத் துறை பணியாளர்களுக்கான போட்டித் தேர்வு கடந்த ஜனவரி 7ம் தேதி நடைபெற்றது. பாபா பரித் பல்கலைகழகம் சார்பில் டிஏவி பப்ளிக் பள்ளியில் இந்த தேர்வுகள் நடைபெற்றது. இதில் பரம்ஜித் கவுர் என்ற பெண் ஒருவர் தேர்வு எழுதுவதற்காக வருகை தந்திருந்தார். சிவப்பு நிற வளையல்கள், உதட்டுச் சாயம் மற்றும் பெண்களின் உடையில் இருந்ததால் அவரை உள்ளே அனுமதித்துள்ளனர்.
மேலும் அவரிடம் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டு ஆகியவையும் இருந்ததால் யாருக்கும் எந்த சந்தேகமும் எழவில்லை. இருப்பினும் இந்த தேர்வுகள் முழுவதும் மின்னணு முறைக்கு மாற்றப்பட்டிருந்ததால், தேர்வர்கள் அனைவரும் தங்களது விரல் ரேகைகளை வைக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அப்போது பரம்ஜித்தின் கை ரேகை விழாததால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர் பெண் அல்ல, ஒரு ஆண் என்பது தெரிய வந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து உடனடியாக அவரைப் பிடித்த அதிகாரிகள், போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் அவரது பெயர் அங்ரேஷ் சிங் என்பதும், அவர் பரம்ஜித் கவுரின் காதலன் என்பதும் தெரியவந்தது.
பரம்ஜித்தின் விண்ணப்பங்களை பல்கலைக்கழக நிர்வாகம் நிராகரித்து இருந்த நிலையில், அவருக்கு பதிலாக இந்த தேர்வை எழுத அங்ரேஷ் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போலி ஆவணங்களை தயாரித்ததாக கைது செய்துள்ள போலீஸார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாபில் இது போன்ற தேர்வுகளில் ஆள்மாறாட்டங்களில் ஈடுபடுவது புதிதல்ல. கடந்த 2011ம் ஆண்டு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்ற போது, ஆள்மாறாட்டம் செய்தவர்களை போலீஸார் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
திருமணமாகவில்லை என்ற விரக்தியில் இளைஞர் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான கர்நாடகா, பெங்களூருவில் விஜயநகர் மாவட்டம் குட்லிகி தாலுகாவைச் சேர்ந்தவர் மதுசூதன்(27). இவர், பல மாதங்களாக தனக்கு மணப்பெண் தேடும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், மூன்று மணப்பெண்களை மதுசூதன் பார்த்துள்ளார்.
ஆனால், நடத்தையின் காரணமாக, அந்த மூன்று மணப்பெண்களும் திருமணம் செய்ய முடியாது என்று கூறியுள்ளனர். இதனால், மதுசூதன் மதுவுக்கு அடிமையானார் எனவும் கூறப்படுகிறது. அப்போது, அவரது உறவினர்கள் மதுவை நிறுத்திவிட்டு வேலையில் கவனம் செலுத்துமாறு கூறியுள்ளனர் ஆனால், மணமகள் கிடைக்காத விரக்தியில் மதுசூதன் தொடர்ந்து குடித்துள்ளார்.
இந்நிலையில், ஜனவரி 5 -ம் திகதி விஷம் அருந்தி மதுசூதன் மயங்கி விழுந்துள்ளார். அதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விஜயநகர் மருத்துவ அறிவியல் கழகத்தில் (விம்ஸ்) சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு, அவருக்கு தொடர் சிகிச்சைக்கு அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று இரவு மதுசூதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.