அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறிய பெண் ஒருவர், குழந்தை ஒன்றிற்கு தந்தையான ஆச்சரிய நிகழ்வொன்று இந்தியாவில் நிகழ்ந்துள்ளது. மஹாராஷ்ட்ராவிலுள்ள Rajegaon என்னும் கிராமத்தில் பிறந்தவர் லலிதா (Lalita Salve) என்ற பெண்.
அவர் பொலிஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றிவருகிறார். 2013ஆம் ஆண்டு தனது உடலில் வித்தியாசமான மாற்றங்கள் ஏற்படுவதைக் கண்ட லலிதா, மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
அப்போது, அவரது உடலில் Y குரோமோசோம் இருப்பது தெரியவந்தது. அதாவது, பெண்கள் உடலில் இரண்டு X குரோமோசோம்கள் இருக்கும் நிலையில், ஆண்கள் உடலில் X மற்றும் Y குரோமோசோம்கள் இருக்கும். ஆக, தான் ஆண் தன்மை உள்ளவர் என தெரியவரவே, 2018 முதல் 2020 வரை, மூன்று அறுவை சிகிச்சைகள் செய்து ஆணாக மாறினார் லலிதா, இப்போது அவர் பெயர் லலித் (Lalit Salve).
2020ஆம் ஆண்டு, சீமா என்ற பெண்ணைத் திருமணமும் செய்துகொண்டார் லலித். இந்நிலையில், பெண்ணாக இருந்து ஆணாக மாறிய லலித், ஒரு குழந்தைக்கு தந்தையாகியுள்ளார். திங்கட்கிழமை, அதாவது, ஜனவரி 15ஆம் திகதி, லலித், சீமா தம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
பெண்ணாகப் பிறந்து ஆணாக மாற நான் பயணித்த பாதை பல சிக்கல்கள் உள்ளதாக இருந்தது. ஆனால், பலர் எனக்கு ஆதரது தந்தார்கள். என் மனைவி சீமா குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என ஆசைப்பட்டாள். தந்தையானதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி, எங்கள் குடும்பமும் மகிழ்ச்சியில் திழைக்கிறது என்கிறார் லலித்.
காலை உணவு அரசனைப் போலவும், மதிய உணவு அரசியைப் போலவும், இரவு உணவு ஒரு யாசகனைப் போலவும் இருக்க வேண்டும் என்று பலர் சொல்லுவது உண்டு. அந்தவகையில் இரவு உணவை தவிர்ப்பது என்பது அனைவருக்கும் இப்பொழுது வழக்கமாகியுள்ளது. இரவு உணவை தவிர்ப்பதால் உண்டாகும் ஆபத்துகள் பற்றி மருத்துவர் ஷைனி சுரேந்திரன் பகிர்ந்திருக்கிறார். அவர் கூறியது குறித்து விரிவாக காணலாம்
இரவு உணவை தவிர்த்து வேலையில் செய்து கொண்டிருக்கும்போது சோர்வாக உணர்ந்தால் அதன் பின் தேவையற்றை உணவுகளை உன்ன நேரிடும். இரவு உணவை தவிர்ப்பதால் தூக்கமின்மை ஏற்பட்டு மறுநாள் முழுக்க சோர்வாக இருக்கும்.
மேலும் தலைவலி ஏற்பட்டு, புத்துணர்ச்சி இல்லாமல் இருக்கும். மேலும் இரவு உணவை தவிர்ப்பது அமிலத்தன்மை(Acidity), இரைப்பை சார்ந்த பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இரவு உணவு சாப்பிட்ட பின் குறைந்தது 2½ மணி நேரம் கழித்து தான் தூங்கவேண்டும். அப்போது தான் உணவு செரிமானமாகி வயிறு நிரம்பிய உணர்வை தராது.
இரவு உணவாக என்ன எடுத்துக்கொள்ளலாம்?
1 கப் சுண்டல்
பழங்கள்
காய்கறிகள் சூப்
அரிசி கஞ்சி
சோள அவல்(Cornflakes)
பால்
உடைத்த கோதுமை உப்மா
உடைத்த கோதுமை கஞ்சி
காய்கறிகள் சாலட்
காய்கறிகள் சான்வெஜ்
புதினா சட்னி
காரம் இல்லாத இறைச்சி
ஓட்ஸ் கஞ்சி
முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா மற்றும் கௌதம் அதானி உட்பட ஆடம்பரமான வாழ்க்கை முறை மற்றும் ஏராளமான கார்கள் மற்றும் சொத்துக்களை வைத்திருக்கும் பல பணக்கார தொழிலதிபர்களின் தாயகமாக இந்தியா உள்ளது.
ஆனால் உலகின் மிக விலையுயர்ந்த தனியார் ஜெட் விமானத்தின் உரிமையாளர் இந்தியர் அல்ல. உலகின் மிக விலையுயர்ந்த தனியார் விமானத்தின் உரிமையாளர் வேறு யாருமல்ல, சவூதி அரேபிய இளவரசரும் தொழிலதிபருமான அல் வலீத் பின் தலால் அல் சௌத் (Saudi prince Alwaleed bin Talal al-Saud) ஆவார்.
அவர் ஒரு முக்கிய மத்திய கிழக்கு அரச குடும்பத்தின் உறுப்பினராகவும், பெரும் செல்வத்தை உடையவராகவும் உள்ளார். Saudi prince Alwaleed bin Talal al-Saud, most expensive private jet in the world, Mukesh Ambani private jet, Gautam Adani private jets, Ratan Tata most expensive private jet, Elon Musk, Bill Gates, Jeff Bezos, இந்த ஒன்றை விமானம் ரூ.16,000 கோடி., உலகின் மிக விலையுயர்ந்த Private Jet வைத்திருக்கும் கோடீஸ்வர இளவரசர்
சவூதி இளவரசர் அல்வலீத் பின் தலால் அல்-சவுத் உலகின் மிக விலையுயர்ந்த தனியார் ஜெட் விமானத்தை வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது, இது 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புடையதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது இலங்கை பண மதிப்பில் ரூ. 16,000 கோடிக்கு மேல் இருக்கும். இதை ஒப்பிடும்போது, அம்பானி மற்றும் டாடா இருவரும் வைத்திருக்கும் தனியார் ஜெட் விமானங்களின் மதிப்பு மிகவும் குறைவானதாகவே உள்ளன.
இளவரசர் அல்வலீத் பின் தலால் அல்-சவுத் Boeing 747 தனியார் விமானத்தை வைத்திருக்கிறார், இது பொதுவாக 150 முதல் 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை மதிப்புடையதாக உள்ளது. Saudi prince Alwaleed bin Talal al-Saud, most expensive private jet in the world, Mukesh Ambani private jet, Gautam Adani private jets, Ratan Tata most expensive private jet, Elon Musk, Bill Gates, Jeff Bezos, இந்த ஒன்றை விமானம் ரூ.16,000 கோடி., உலகின் மிக விலையுயர்ந்த Private Jet வைத்திருக்கும் கோடீஸ்வர இளவரசர்.
ஆனால், விரிவான மேம்படுத்தல்கள் மற்றும் மாற்றங்கள் காரணமாக, இளவரசரின் தனியார் விமானத்தின் மொத்த விலை சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது. இந்த விமானத்தில் 800 விருந்தினர்கள் வரை தங்கலாம் மற்றும் 10-seat dining hall, opulent master suite, prayer room, home theatre system, spa மற்றும் sauna ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
Saudi prince Alwaleed bin Talal al-Saud, most expensive private jet in the world, Mukesh Ambani private jet, Gautam Adani private jets, Ratan Tata most expensive private jet, Elon Musk, Bill Gates, Jeff Bezos, இந்த ஒன்றை விமானம் ரூ.16,000 கோடி., உலகின் மிக விலையுயர்ந்த Private Jet வைத்திருக்கும் கோடீஸ்வர இளவரசர்.
அல் வலீத் பின் தலால் அல் சவுதின் மொத்த சொத்து மதிப்பு 18.7 billion USD, இலங்கை பணமதிப்பில் கிட்டத்தட்ட ரூ. 6 லட்சம் கோடி என Forbes மதிப்பிட்டுள்ளது. இந்திய கோடீஸ்வரரான Mukesh Ambaniக்கு சொந்தமான Boeing Business Jet 2 விமானத்தின் மதிப்பு ரூ.603 கோடி என கூறப்படுகிறது.
அதானி குழுமத்தின் Gautam Adaniயிடம் Hawker Beechcraft 850XP, Embraer Legacy 650, and Bombardier Challenger 605 மொடல்கள் உட்பட பல தனியார் விமானங்களும் உள்ளன. இதற்கிடையில், டாடா குழுமத்தின் Ratan Tata மிகவும் விலையுயர்ந்த தனியார் ஜெட் மாடல்களில் ஒன்றான Dassault Falcon 2000 விமானத்தைக் கொண்டுள்ளது, அதன் மதிப்பு ரூ.200 கோடிக்கு மேல் என கூறப்படுகிறது. Elon Musk, Bill Gates மற்றும் Jeff Bezos போன்ற மற்ற பில்லியனர்களும் தனியார் ஜெட் விமானங்களை வைத்திருக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 8 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. கள்ளக்குறிச்சி மாவட்டம் அகரகோட்டாலத்தைச் சேர்ந்த வெற்றிச்செல்வனும், ஆரோக்கிய ஷர்மிளா என்ற இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர், கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்சனைகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனக்கசப்பு ஏற்பட்ட ஆரோக்கிய ஷர்மிளா தனது தாய் வீட்டிற்கு செல்ல முடிவு செய்துள்ளார்.
8 மாத கர்ப்பிணியான ஆரோக்கிய ஷர்மிளா கள்ளக்குறிச்சியில் தனது தாய் வீடு இருக்கும் ராயபுரம் கிராமத்திற்கு வந்துள்ளார். சிறிது காலம் அங்கேயே தங்கியுள்ளார். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட மனக்கசப்பு சண்டையாக முற்றியதாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலில் இருந்து வந்த ஆரோக்கிய ஷர்மிளா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
அதன்படி, வீட்டில் யாரும் இல்லாத வேளையில், படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதைப் பார்த்த பெற்றோர்கள், உறவினர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சந்தேகத்தின் பேரில் மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் விஜய் (41). ஆட்டோ டிரைவரான இவருக்கும் புஷ்பலதாவுக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகனும், 9 வயதில் ஒரு மகளும் உள்ளனர். புஷ்பலதா பியூட்டிஷியன் படித்து வந்தார்.
மனைவி புஷ்பலதாவின் நடத்தையில் விஜய்க்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் இவருக்கும் புஷ்பலதாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதற்கிடையில், விஜய்யின் சகோதரி சமீபத்தில் NNURM காலனியில் அரசுக்கு சொந்தமான இரண்டு படுக்கையறைகள் கொண்ட வீட்டை வாங்கினார்.
நேற்று மாலை வீட்டை சுத்தம் செய்ய மனைவி புஷ்பலதாவை அழைத்துச் சென்றார் விஜய். விஜய் படுக்கையறையில் கழுத்தை அறுத்து புஷ்பலதாவை கொன்றார். இதையடுத்து, ரத்த வெள்ளத்தில் அவர் வீட்டை விட்டு வெளியேறியதை பார்த்த பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அப்துல்லாபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட புஷ்பலதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் புஷ்பலதாவை கொலை செய்ய அவரது சகோதரி வீட்டிற்கு விஜய் அழைத்துச் சென்றது தெரியவந்தது. கொலை நடந்த முந்தைய நாள் விஜய் கத்தியை வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து நேற்று இரவு போலீசார் விஜய்யை கைது செய்தனர்.
அப்துல்லாபூர்மேடு போலீசார் கூறுகையில், விஜய் தனது மனைவி புஷ்பலதா தனக்கு துரோகம் செய்ததாக சந்தேகம் கொண்டதால் இந்த கொலையை செய்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக கணவன்-மனைவி இடையே சந்தேகத்தின் காரணமாக பிரச்னை இருந்து வந்தது.
இதுகுறித்து புஷ்பலதாவும் புகார் அளித்துள்ளார்,” என்றனர். கடந்த 2014ம் ஆண்டு புஷ்பலதாவை தாக்கிய விஜய் மீது மெடிப்பள்ளி காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆள்நடமாட்டம் குறைந்த வீதிகளில் தனியாக பயணிக்கும் பெண்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாணந்துறையில் வீதியொன்றில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் 74 வயதுடைய பெண்ணொருவரின் கழுத்தில் இருந்த நகையை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சுமார் ஒன்றரை பவுண் கொண்ட 130,000 ரூபா பெறுமதியான தங்க சங்கிலி திருடப்பட்டுள்ளது.
அருகாமையில் உள்ள மத ஸ்தலத்தில் இருந்து வீடு திரும்பிய போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி பெண்ணை தரையில் உருட்டி நகையை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் அருகில் உள்ள நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் பாணந்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். நகைகளுடன் பயணிக்கும் பெண்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடா அரசியல்வாதிகளும் மக்களில் ஒரு பகுதியினரும் புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு வருவதை எதிர்ப்பதாக ஆய்வுகள் தகவல் வெளியிட்டுள்ளன. அத்தோடு கனடாவில் ஏற்ப்பட்டுள்ள வீட்டுப் பற்றாக்குறைக்கு புலம்பெயர்ந்தோர் தான் காரணம் என சில அமைச்சர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கனடாவில் புலம்பெயர்தலானது பேசு பொருளாகியுள்ள நிலையில் அரசியல்வாதிகள் புலம்பெயர்தலை எதிர்ப்பதை அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. புலம்பெயர்வோரை வரவேற்கும் நீங்கள் அதற்கேற்ப வீடுகளைக் கட்டவேண்டாமா என அரசை நோக்கி எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளன.
கனடா அரசியல்வாதிகள் மட்டுமின்றி கனடா மக்களில் ஒரு பகுதியினரும் புலம்பெயர்தலுக்கு எதிராக இருப்பது ஆய்வுகளில் வெளியாகி உள்ளது. சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் வெறும் 9 சதவிகித கனேடியர்கள் மட்டுமே பெரும் எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு வருவதை ஆதரிக்கிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
அத்துடன், 43% பேர் இப்போது இருக்கும் எண்ணிக்கையிலேயே புலம்பெயர்வோர் வருகை இருக்குமானால் தங்களுக்குப் பிரச்சினையில்லை என்று கூற 39% பேர் குறைந்த எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு வந்தால் போதும் என நினைக்கின்றார்கள். அத்துடன், 72% கனேடியர்கள் கனடாவின் மக்கள்தொகை அதிகரிப்பதில் புலம்பெயர்ந்தோரின் பங்கு முக்கியமானது என கருதுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதே எண்ணிக்கையிலானவர்கள், அதாவது 75% கனேடியர்கள் வீடுகள் பற்றாக்குறை பிரச்சினைக்கு புலம்பெயர்ந்தோர் தான் காரணம் என்றும், 73% கனேடியர்கள் கனடாவின் மருத்துவ அமைப்புக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதற்கு புலம்பெயர்ந்தோர் காரணம் என்றும் கருதுகின்றனர்.
63% கனேடியர்கள் பள்ளிகளில் கனேடிய மாணவர்களுக்கு இடப்பற்றாக்குறை ஏற்படுவதற்கு புலம்பெயர்ந்தோர் காரணம் என்றும் கருதுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
2025ஆம் ஆண்டு இலங்கையில் புதிய சொத்து வரி அறிமுகப்படுத்தப்படும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தூதுக் குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்ட வேலைத்திட்டத்தின் பிரகாரம் இந்த வரி அறிமுகப்படுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வரி மூலம் சொத்து உரிமையாளர்களிடம் இருந்து அரசாங்கத்தால் வரி வசூலிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2022இல் வரி வருவாய் 7%ஆகக் குறைந்திருந்தது. இலங்கையின் வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியம் பூரண ஆதரவை வழங்கி வருகிறது.
அரசாங்கத்தின் வரி வருமானத்தை முன்னைய நிலைக்கு அதிகரிப்பது மிகவும் முக்கியமானது. மேலும், கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகள் தொடர்பில் மிக விரைவில் இறுதி உடன்படிக்கைகளை எட்டுவது மிகவும் முக்கியமானது என சுட்டிக்காட்டியுள்ளார்.
குருணாகலில் அப்பாவி குடிமகன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவம் பொலிஸ் திணைக்களத்திற்கு பெரும் அவமானம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாரம்மல பிரதேசத்தில் உப பொலிஸ் பரிசோதகரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் லொறி சாரதி ஒருவர் உயிரிழந்தார்.
இந்த செயற்பாடு தனிப்பட்ட ரீதியிலும் திணைக்களமும் எதிர்கொண்ட பாரிய அவமானம் என குருநாகல் மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், மிகவும் போராடி சம்பாதித்த மக்களின் நம்பிக்கையை ஒரே நொடியில் அழிக்க முடியும் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் எதுவுமில்லை என அவர் கூறியுள்ளார்.
குற்றஞ்சாட்டப்பட்ட இந்த அதிகாரியின் நடவடிக்கையால் வீதியில் பயணித்த அப்பாவி குடிமகன் ஒருவரின் துரதிர்ஷ்டவசமான மரணம் ஏற்பட்டுள்ளது.
இழப்பீடு அல்லது விலையால் ஈடுகட்ட முடியாத இழப்பு எனவும் ஒரு குடும்பத்திற்கு கணவர் மற்றும் பிள்ளைகளுக்கு தந்தை இல்லாமல் போயுள்ளதென அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேகத்திற்குரிய இந்த அதிகாரி தொடர்பில் நியாயமானதும் வெளிப்படையானதுமான விசாரணையை நடத்துவதற்கு சாத்தியமான அனைத்து சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என சுஜித் வேதமுல்ல உறுதியளித்துள்ளார்.
அம்பலாங்கொடைக்கு வருகை தந்த 23 வயதுடைய ஜேர்மன் சுற்றுலாப் பயணி ஒருவர் கடற்கரையில் தனியாக சென்று கொண்டிருந்த போது வன்புணர்வு முயற்சியில் இருந்து தப்பியுள்ளார் என தெரியவருகின்றது.
இச் சம்பவம் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. அடையாளம் தெரியாத ஒரு நபர் திடீரென அவர் மீது பாய்ந்ததில் அவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதுடன் அதிர்ச்சியான நிலைக்கு சென்றுள்ளார்.
உள்ளூர் ஹோட்டலில் தங்கியிருந்த அவர், சம்பவம் நடந்தபோது அமைதியான கடற்கரை அமைப்பை அனுபவித்துக் கொண்டிருந்திருந்துள்ளார்.
அம்பலாங்கொடை காவல்துறையிடம் அவர் அளித்த வாக்குமூலத்தின்படி, தாக்குதல் நடத்திய நபர் எதிர்பாராதவிதமாக தன்னை அணுகி பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றார். அதைத் தொடர்ந்து தப்பிக்க நடந்த போராட்டத்தில், தனது மார்பு பகுதியில் காயம் இருந்ததாக தெரிவித்தார்.
ஹோட்டல் நிர்வாகம் உடனடி மருத்துவ உதவிவழங்கி அவரது காயங்களுக்கு சிகிச்சை அளித்தது. இதற்கிடையில், அம்பலாங்கொடை காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்வதற்கான முழுமையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அவர்கள் தற்போது பாதுகாப்பு காட்சிகளை மதிப்பாய்வு செய்து, சம்பவங்களை ஒன்றிணைத்து சந்தேக நபரை அடையாளம் காண விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வாணியம்பாடி அருகே பட்டியலின இளைஞரை காதலித்து திருமணம் செய்த பெண்ணை, உறவினர்கள் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தியாகு (21).
பட்டியலின இளைஞரான இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த நர்மதா என்ற பெண் காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதனையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 6ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய நர்மதா, காதலரைத் திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து, தங்கள் மகளைக் காணவில்லை என நர்மதாவின் பெற்றோர், அம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், விசாரணை நடத்தி, காதல் ஜோடியை கடந்த டிசம்பர் 7ம் தேதி வாணியம்பாடி நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நீதிமன்றத்தில் நர்மதா கணவருடன் செல்ல விரும்புவதாக கூறினார். இதையடுத்து, அவர் மேஜர் என்பதால், கணவருடன் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், நர்மதாவின் குடும்பம் ஆத்திரத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இருவரது உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம் என கூறப்பட்ட நிலையில், இருவரும் வெளியூர் சென்று வசித்து வந்தனர். இந்த சூழலில் நர்மதாவின் உறவினர்கள் தியாகுவையும், நர்மதாவையும் தீவிரமாகத் தேடியுள்ளனர்.
இது குறித்து அறிந்த இருவரும், 2 வாரங்களுக்கு முன்பு தங்கள் சொந்த ஊரான சங்கராபுரத்திற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, தியாகு வீட்டிற்கு வந்த நர்மதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், தியாகுவையும் அவரது பெற்றோரையும் தாக்கிவிட்டு, நர்மதாவை காரில் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, தியாகு அம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், தனது மனைவி நர்மதாவை அவரது தந்தை ராஜேந்திரன், அண்ணன்களான கோவிந்த ராஜ், பிரபு, ராஜேஷ் மற்றும் ஈச்சங்கால் ஊராட்சி மன்றத் தலைவர் ஏழுமலை ஆகியோர் காரில் கடத்திச் சென்று விட்டனர். மனைவியின் உயிருக்கு ஆபத்து இருப்பதால், அவரை உடனடியாக கண்டுபிடித்துத் தர வேண்டும் என அந்தப் புகாரில் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், நர்மதாவை கடத்திச் சென்ற அவரது தந்தை, அண்ணன் உள்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும், தனிப்படை அமைத்து அவர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், சங்கராபுரம் பகுதியில் எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
ஐக்கிய அமீரகத்தின் Al Nahyan குடும்பத்தினருக்கு சொந்தமாக துபாய் மாகாணத்தில் ரூ 4,078 கோடி மதிப்பில் அரண்மனை உள்ளது. இந்த குடும்பத்தின் முக்கிய உறுப்பினர் ஒருவரே தற்போது ஐக்கிய அமீரகத்தின் ஜனாதிபதியாக பொறுப்பில் உள்ளார். Al Nahyan குடும்பத்திற்கு சொந்தமாக 8 விமானங்கள் மற்றும் உலகிலேயே பணக்கார கால்பந்து அணியும் இவர்களுக்கு சொந்தம் என்றே கூறப்படுகிறது.
ஜனாதிபதி Sheikh Mohamed bin Zayed Al Nahyan என்பவருக்கு 18 சகோதரர்கள் மற்றும் 11 சகோதரிகள். மட்டுமின்றி, ஜனாதிபதிக்கு 9 பிள்ளைகளும் 18 பேரப்பிள்ளைகளும் உள்ளனர். உலகின் மொத்த எண்ணெய் இருப்புக்களில் 6 சதவிகிதம் இவர்களுக்கு சொந்தம் என்றே கூறப்படுகிறது.மட்டுமின்றி, Manchester City கால்பந்து அணியும் இவர்களுக்கு சொந்தம். உலகில் பிரபலமான பல நிறுவனங்களில் Al Nahyan குடும்பம் முதலீடு செய்துள்ளது. எலான் மஸ்கின் Space X நிறுவனத்திலும் இவர்கள் முதலீடு செய்துள்ளனர்.
அமீரக ஜனாதிபதியின் இளைய சகோதரரான Sheikh Hamad என்பவருக்கே பிரபலமான மற்றும் அரியவகை 700 கார்களின் சேகரிப்பு உள்ளது. Al Nahyan குடும்பம் அபுதாபி மாகாணத்தில் அமைந்துள்ள Qasr Al-Watan அரண்மனையில் வசித்து வருகிறது.
94 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த அரண்மனை போன்று மேலும் சில அரண்மனைகள் இந்த குடும்பத்திற்கு சொந்தமாக உள்ளது. ஜனாதிபதியின் சகோதரர் ஒருவர் முன்னெடுத்து நடத்தும் முதலீடு நிறுவனத்தின் சந்தை மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 28,000 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
தற்போதைய சந்தை மதிப்பு என்பது 235 பில்லியன் அமெரிக்க டொலர் என்றே கூறப்படுகிறது. Al Nahyan குடும்பத்திற்கு ஐக்கிய அமீரகம் மட்டுமின்றி, லண்டன் மற்றும் பாரிஸ் நகரங்களிலும் சொத்துக்கள் உள்ளது. 2008ல் தான் Al Nahyan குடும்பம் ரூ 2,122 கோடிக்கு Manchester City கால்பந்து அணியை வாங்கியுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்னங்கண்டி பாடசாலைக்கு முன்பாக உள்ள கழிவு வாய்க்கால் ஒன்றிலேயே இளைஞனின் சடலம் அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபரை நேற்று மாலை 7 மணியளவில் மக்கள் இறுதியாக அவதானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், குறித்த இளைஞன் இன்று(20) காலை சடலமாக காணப்படுவது அவதானிக்கப்பட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் மருதநகர் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன்,
சம்பவ இடத்தில் நீதவான் விசாரணைகளின் பின்னர் குற்றத்தடுப்பு பொலிசார் விசாரணையின் பின்னர் இளைஞனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏரியில் திடீரென 2 குழந்தைகள் ஒரு பெண்ணின் உடல் மிதந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் யார் என்பது குறித்து அக்கம்பக்கத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அத்துடன் தீயணைப்பு படையினர் உதவியுடன் ஏரியில் கிடந்த 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதலில் அவர்கள் யார்? எந்தப்பகுதியை சேர்ந்தவர்கள்? என்பது குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை. பின்னர் இது குறித்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், ஏரியில் உயிரிழந்த சடலமாக மிதந்தவர்கள் சிந்தாமணி தாலுகா யாகவகோட்டையை சேர்ந்த மல்லிகார்ஜுன் மனைவி ராதா. இவருடன் அவர்களின் 4 வயது மகள் பூர்விதா மற்றும் 1½ வயது மகனும் என்பது உறுதி செய்யப்பட்டது.
ராதா எதற்காக தனது மகன்மற்றும் மகளை ஏரியில் வீசி கொன்றுவிட்டு அவரும் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராதாவின் கணவர் மல்லிகார்ஜுனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவர் ஒருவர், வகுப்பிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான மத்திய பிரதேசம், சாகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ராஜா லோதி (20). இவர் மத்தியப் பிரதேச அரசுப் பணியாளர் தேர்வாணையம் (MPPSC) தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்தார்.
அதாவது, இந்தூரில் மாநில சிவில் சர்வீஸ் தேர்வுக்கு பயிற்சி வகுப்பில் சேர்ந்து படிப்பில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில், வகுப்பறையில் நிமிர்ந்து உட்கார்ந்து படித்த லோகி திடீரென மார்பைப் பற்றிக் கொண்டு சில நொடிகளில் நாற்காலியில் இருந்து சரிந்து விழுந்தார்.
அப்போது, அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். இதில், இளைஞரின் மரணம் குறித்து சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் நாவற்குழி செம்மணி வீதியுடாக முச்சக்கர வண்டியில் குடும்பத்துடன் பயணித்த நபர் ஒருவர் நாய் குறுக்கே பாய்ந்ததில் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மனைவி மற்றும் இரண்டு வயது ஆண் குழந்தை காயமடைந்துள்ளனர். இச் சம்பவம் நேற்று முன் தினம்(18) நாவற்குழி செம்மணி வீதியில் இடம்பெற்றுள்ளது.
படுகாயமடைந்த குறித்த இளம் குடும்பத்தர் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் உயிரிழந்தார்.
சம்பவத்தில் சாவகச்சேரி நாவற்குழி பகுதியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை அமல்ராஜ் வயது 35 என்ற இரண்டு வயது பிள்ளையின் தந்தை உயிரிழந்தவர் ஆவார். இந்நிலையில் இளம் குடும்பஸ்தர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது