தாயை கொடுமைப்படுத்திய மகனை கொலை செய்த தந்தை!!

அரநாயக்கவில்..

அரநாயக்க பொலிஸ் எல்லைக்குட்பட்ட புனாபொகுன, துல்தெனிய கிராமத்தில் தந்தையொருவர் தனது மகனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். கத்திக் குத்து தாக்குதலுக்குள்ளானவர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னர் உயிரிழந்துள்ளார். அமித் பிரசாத் ஹேமச்சந்திர என்ற 29 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.

61 வயதான அவரது தந்தையே இந்த கொலையை செய்துள்ளார். உயிரிழந்த இளைஞன் போதைப்பொருள் பாவனை மற்றும் திருட்டு போன்றவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொலை செய்யப்பட்ட இளைஞன் பணத்திற்காக பெற்றோரை தொடர்ந்து துன்புறுத்தியுள்ளார். அவர்களை தாக்க முயற்சிப்பதும், நீண்ட காலமாக இந்த பிரச்சனைகளை சகித்துக் கொண்டிருந்துள்ளனர்.

இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தனது தாயை துன்புறுத்தி சித்திரவதை செய்த கொடுமைகளை செய்துள்ளார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் கோபத்தில் இளைஞனை அவரது தந்தை கத்தியால் குத்தியுள்ளார். இளைஞனின் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் சடலம் மேலதிக பரிசோதனைக்காக கேகாலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

யாழில் கோரவிபத்தில் உயிரிழந்த அரச உத்தியோகஸ்தர்!!

யாழில்..

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் நேற்று (12) இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் வெற்றிலைக்கேணி முள்ளியானை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 31வயதுடைய அன்ரன் பிலிப்பின் தாஸ் என்பவரே உயிரிழந்துள்ளார்.

பணி முடித்து வீடு திரும்பிச் சென்று கொண்டிருகும் வேளை இரவு 10.00மணியளவில் மருதங்கேணி நோக்கி சென்று கொண்டிருந்த இராணுவ உழவு இயந்திரத்துடன் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்து தொடர்பாக மருதங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தாயின் தகாத உறவால் பதின்ம வயது சிறுமிகள் சீரழிப்பு!!

களுத்துறையில்..

களுத்துறையில் தாயுடன் தொடர்பை பேணிய நபரால் பதின்ம வயது இரு மகள்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 9 மற்றும் 13 வயதுடைய பெண் பிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் பயாகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கலேவெல பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடையவராவார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் தந்தை 4 வருடங்களுக்கு முன்னர் மனைவி மற்றும் பிள்ளைகளை விட்டு பிரிந்து சென்ற நிலையில், சிறுமிகளின் தாய் வேரொரு நபருடன் தொடர்பை பேணி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் சுகயீனம் காரணமாக களுத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது இரு சிறுமிகளும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

தாயுடன் தொடர்பை பேணிய நபரே இரு சிறுமிகளையும் அவர்களின் வீட்டில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார். இது தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தினர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து சந்தேக நபர் பயாகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரயிலுடன் விபத்தை தடுக்க வாகனத்தில் இருந்து பாய்ந்த சாரதி..!

வெலிகந்தையில்..

கெப் வண்டி ஒன்று ரயிலில் மோதி இடம்பெற்ற விபத்தில் கெப் வண்டி சாரதி காயமடைந்துள்ளதாக வெலிகந்தை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து சம்பவம் வெலிகந்தை ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை (12) மாலை இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த கெப் வண்டி சாரதி வெலிகந்தை – மொனராதென்ன பிரதேசத்தை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையாவார். மட்டக்களப்பில் இருந்து பொலன்னறுவை நோக்கி பயணித்த ரயிலில் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது கெப் வண்டி சாரதி தனது உயிரைக் காப்பாற்ற வண்டியிலிருந்து வெளியே குதித்த போது காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிக்கந்தை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வவுனியா – புளியங்குளத்தில் கஞ்சாவுடன் குடும்பஸ்தர் கைது!!

வவுனியா, புளியங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றின் இருக்கைக்குள் மறைத்து கொண்டு செல்லப்பட்ட கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிசார் இன்று (13.01) தெரிவித்தனர்.

வவுனியா, புளியங்குளம் பகுதியில் விசேட அதிரடிப் படையினர் விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்த போது முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஏ9 வீதி ஊடாக பொல்காவலை நோக்கி பயணித்த குடும்பஸ்தரை மறித்து சோதனை செய்தனர்.

இதன்போது, மோட்டார் சைக்கிள் இருக்கைப் பகுதிக்குள் சூட்சுமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ 375 கிராம் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து கஞ்சா மீட்கப்பட்டதுடன், குறித்த குடும்பஸ்தரும் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு புளியங்குளம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பொல்காவலைப் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். மேலதிக விசாரணைகளின் பின் குறித்த நபரையும், கஞ்சாவையும் நீதிமன்றில் முற்படுத்த புளியங்குளம் பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வெளிநாட்டு பணிக்கு செல்லும் பெண்களுக்கு புதிய சட்டம்!!

இலங்கையில்..

5 வயதுக்குட்பட்ட பிள்ளைகளை கொண்ட தாய்மார்கள் வெளிநாடுகள் செல்வதை தடுக்க புதிய சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என பெண்கள் மற்றும் குழந்தைகள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.

ஸ்திரமான நாட்டை நோக்கி அனைவரும் ஒரே பாதையில் பயணிக்கும் வகையில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சிறு பிள்ளைகளை தாய்மார்கள் வெளிநாடுகளுக்கு விட்டு செல்வது சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரிப்பதற்கு காரணம் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு 7000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுவர்கள் மற்றும் பெண்கள் நீதிமன்றில் ஆஜராகும்போது அவர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதை தடுப்பதற்காக வீடியோ தொழில்நுட்பம் மூலம் தொடர்பு கொள்ளவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

வெளிநாடொன்றில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கைப் பெண்!!

சவூதியில்..

சவூதி அரேபியாவின் ரியாத் நகருக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் வீட்டு வேலை செய்ய சென்ற பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வெளிநாடு சென்ற மெதிரிகிரிய பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண் வேலை செய்து கொண்டிருந்த வீட்டில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். 26 வயதான மதுபாஷினி குமாரி என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குடும்பத்தின் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பணிப்பெண்ணாக வெளிநாடு சென்றுள்ளார். வெளிநாட்டில் சில நாட்கள் கழித்து தனது உறவினர்களுக்கு தொலைபேசி அழைப்பேற்படுத்தி தான் வேலை செய்யும் வீட்டில் சாரதி பிரச்சினை செய்வதாக கூறியுள்ளார். மேலும், பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார்.

வாரத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை தொலைபேசியில் அழைப்பதாகவும் வீட்டில் வேலை அதிகம் எனவும் அதிக நேரம் பேச முடியாது எனவும் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் தங்கிய முதல் மாதத்தில் 78,000 ரூபாய் சம்பளம் கொடுத்ததாகவும், சில மாதங்களுக்குப் பிறகு அது குறைக்கப்பட்டதாகவும் கூறினார். இரண்டாவது மாதத்தில் 53,000 மற்றும் பின்னர் 20,000 கடந்த மாதம் 10,000 ஆக குறைக்கப்பட்டது.

ஒரேயடியாக பணம் தருவதில்லை என்று அந்த பெண் கணவரிடம் கூறியுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 8ஆம் திகதி தனது கணவருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டிருந்த நிலையில், அதன் பின்னரும் அவருக்கு அழைப்பு வராததால், உறவினர்கள் ஜனவரி மாதம் 9ஆம் திகதி வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு அறிவித்துள்ளனர். அங்கு, ஒரு வாரத்திற்கு முன்பு எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் இந்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

நியூசிலாந்தில் இலங்கை இளைஞன் மரணம்!!

நியூசிலாந்தில்..

நியூசிலாந்தில் இலங்கை இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கடந்த இரண்டாம் திகதி 19 வயதான ஹிரன் ஜோசப் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஒக்லாந்தின் கரோட்டா கடற்கரையில் அலைகளில் சிக்கி அவர் காணாமல் போனார்.

தீவிரமாக தேடப்பட்ட வந்த நிலையில் குறித்த இளைஞனின் சடலம் 5 நாட்களின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணாமல் போன இடத்தில் இருந்து 20 கிலோமீற்றர் தூரத்தில் சடலத்தை நியூசிலாந்து உயிர்காக்கும் படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

முச்சக்கரவண்டியில் பெண்ணை எரிக்க முயற்சித்த நபர் : பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!!

கொழும்பில்..

கொழும்பு – ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸ் நிலையத்திற்கு தேவைப்படும் சந்தேக நபரை அடையாளம் காண்பதற்கு ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கடந்த (10.01.2024) ஆம் திகதி பெண்ணொருவர் மீது பெற்றோல் ஊற்றி தீவைத்து கொலை செய்ய முயற்சித்த சந்தேகநபரை கைது செய்வதற்கே பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

குறித்த சந்தேக நபர் கொழும்பு 13, ஆட்டுப்பட்டித் தெரு, இலக்கம் 93/13 இல் வசிக்கும் மொஹமட் நிஜாம் மொஹமடி சப்னிஸ் ஆவார். சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

0717478912, 0718594423, 0112323356

உலகின் மிக உயர்ந்த கட்டடத்தை அமைக்கும் மற்றுமொரு அரபு நாடு!!

டுபாயில்..

உலகின் மிக உயர்ந்த கட்டடமாக கருதப்படும் டுபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவை (burj khalifa) விட உயரமான கட்டடம் ஒன்று சவூதி அரேபியாவில் கட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் முடிவடையும்போது அது டுபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவை (burj khalifa) விட உயரமான கட்டடமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

சவூதி அரேபியாவின் மையத்தில் ஜெட்டாஹ் டவர் அல்லது கிங்டம் டவர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த உயர்ந்த கட்டடம் தற்போது கட்டுமானப் பணியில் உள்ளது. இதன் உயரம் 1000 மீட்டர் (1 கி.மீ / சுமார் 3,281 அடி) இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார ஈர்ப்பை மையமாக வைத்து கட்டப்பட்டுவரும் ஜெட்டாஹ் டவர், உணவகம், தங்கும் விடுதிகள், ஆடம்பர குடியிருப்புகள், அலுவலகங்கள் என பலவற்றை உள்ளடக்கியதாக கட்டப்பட்டு வருகிறது. டுபாயில் கடந்த 2004ஆம் ஆண்டு புர்ஜ் கலிஃபா கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. தொடர்ந்து 6 ஆண்டுகள் நடைபெற்ற கட்டுமானப் பணிகள் முடியும்போது உலகின் மிக உயரமான கட்டடம் என்ற பெருமையைப் பெற்றது.

828 மீட்டர் உயரம் கொண்ட புர்ஜ் கலிஃபா, உலகில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தமான கட்டடமாக மாறியது. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் டுபாயின் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த கட்டடம், எண்ணெய் உற்பத்திக்கு அடுத்தபடியாக சுற்றுலாத் துறையில் அதிக இலாபம் கொடுக்கும் இடமாக மாறியுள்ளது.

மகள், மருமகன், பேத்தியை நடுத்தெருவில் நிற்க வைத்து சுட்ட தந்தை!!

பீகாரில்..

பீகார் மாநிலம் பகல்பூர் மாவட்டம் நவ்டொலியா கிராமத்தில் வசித்து வருபவர் பப்பு சிங். இவருக்கு திராஜ் சிங் என்ற மகனும், சாந்தினி குமாரி என்ற மகளும் உள்ளனர். இவர் அதே பகுதியில் வசித்து வந்த சந்தன்குமாரும் காதலித்து வந்தனர். காதலுக்கு பப்பு சிங் எதிர்ப்பு தெரிவிக்க, அவர்களின் எதிர்ப்பையும் மீறி சந்தன்குமாரும் சாந்தினியும் திருமணம் செய்து கொண்டனர்.

ஊருக்கு வெளியே இருவரும் யாருக்கும் தெரியாமல் வசித்து வந்தனர். இவர்களுக்கு ரோஷ்னி குமாரி என்ற மகள் உள்ளார். இந்நிலையில், சந்தன்குமாரும், சாந்தினி குமாரியும் தங்கள் குழந்தையுடன் நேற்று மாலை 5 மணியளவில் நவ்டொலியா கிராமத்திற்கு வந்திருந்தனர். இதனை பார்த்த சாந்தினியின் தந்தை அவர்களுடன் தகராறில் ஈடுபட்டார்.

ஆத்திரம் அடங்காத பப்புசிங் தான் வைத்திருந்த இரும்பு கம்பியால் மகள், மருமகன், பேத்தி 3 பேர் மீது தாக்குதல் நடத்தியதால் சற்று நேரத்தில் 3 பேரும் மயங்கி விழுந்தனர். திராஜ் சிங், துப்பாக்கியால் சகோதரி சாந்தினி குமாரி, அவரின் கணவன் சந்தன்குமார், மகள் ரோஷ்னி குமாரி மீதும் சுடத் தொடங்கினார்.

இதனால் 3 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். பப்பு சிங் மற்றும் அவரது மகன் திராஜ் சிங்கும் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் போலீசார், விரைந்து வந்து உயிரிழந்த 3 பேரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலை செய்துவிட்டு தலைமறைவான 2 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

4 வயது மகனை கொன்ற பெண் அதிகாரி : சிக்கிய முக்கிய ஆதாரம்!!

கர்நாடகாவில்..

4 வயது மகனை கொலை செய்த பெண் சிஇஓ அதிகாரி சுசனா சேத் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் இருந்து முக்கியமான ஆதாரம் ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். கர்நாடகாவில் தனியார் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வந்த சுசனா சேத்(Suchana Seth, 39) என்ற பெண் சிஇஓ அதிகாரி சமீபத்தில் கோவாவில் கைது செய்யப்பட்டார்.

சனிக்கிழமை கோவாவில் உள்ள தனியார் ஹோட்டல் அறைக்கு தன் 4 வயது மகனுடன் சென்ற சுசனா சேத், இரு தினங்களுக்கு பிறகு ஹோட்டல் அறையை காலி செய்து விட்டு சென்றுள்ளார். ஆனால் அவருடன் அவரது 4 வயது மகன் செல்லவில்லை என்பதால் சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பொலிஸார் சுசனா சேத்தை மடக்கி பிடித்து சோதனை செய்ததில், அவர் வைத்து இருந்த சூட்கேஸில் 4 வயது மகன் பிணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சுசனா சேத் மீது வழக்குப்பதிவு செய்து பொலிஸார் கொலை விசாரணை நடத்தி வரும் நிலையில், குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில் உயிரிழந்த குழந்தை தலையணையிலோ அல்லது துணியிலோ அழுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பதாக தற்போது வெளியாகியுள்ள பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. ஆனால் குழந்தையின் கழுத்தை நெரித்ததற்கான காயங்களோ அல்லது குழந்தை போராடியதற்கான அடையாளங்களோ உடலில் இல்லை என்றும் பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் சுசனா தங்கிருந்த ஹோட்டல் அறையை சோதனையிட்ட பொலிஸார், அங்கு இருந்த 2 காலியான இருமல் பாட்டில்களை கண்டெடுத்துள்ளனர். எனவே இருமல் கொடுத்து குழந்தை மயங்கியதும் கழுத்தை நெரித்து சுசனா கொன்று இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் சுசனா தங்கியிருந்த அறையில் இருந்து ஹோட்டல் ஊழியர்கள் ரத்தக்கறையுடன் டவல் ஒன்றையும் கண்டுபிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டை சேர்ந்த தன் கணவர் வெங்கட்ராமன் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து வாழ்ந்து வந்த சுசனா சேத், கணவனை பழிவாங்கும் விதமாக தனது 4 வயது மகனை கொலை செய்து உள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

 

ரீல்ஸ் செய்யாதே, கண்டித்த கணவன்: ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி!!

பீகாரில்..

ரீல்ஸ் செய்ததை கண்டித்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டம் நர்ஹான் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ்வர் குமார். இவர் கொல்கத்தாவில் கூலி வேலை செய்து வந்தார்.

இவரது மனைவி ராணி குமாரி. இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில், கொல்கத்தாவில் வேலை செய்து வந்த மகேஷ்வர் குமார், கடந்த சில நாட்களுக்கு முன்பு பீகாருக்கு வந்திருந்தார்.

இவரது மனைவி ராணி குமாரி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்வதையே வழக்கமாக கொண்டிருந்தார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று ரீல்ஸ் செய்யும் போது கணவர் மகேஷ்வர்குமார் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் தொடர்ந்ததால், மனைவி ராணி குமாரி ஆத்திரத்தில் கணவர் மகேஷ்குமாரின் கழுத்தை நெரித்தார்.

இதில் அவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்தார். பின்னர், மகேஷ்வர் குமாரின் சகோதரர் கொல்கத்தாவில் இருந்து இரவு போன் செய்கிறார். அப்போது, ​​வேறொருவர் போனில் பேசியதால் சந்தேகமடைந்த மகேஷ்வர்குமாரின் அண்ணன்,

தந்தையிடம் நேரில் சென்று பார்க்கச் சொன்னார். இதையடுத்து, மகேஷ்வர் குமாரின் தந்தையும் சென்று பார்த்தபோது, ​​சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த சம்பவம் குறித்து உயிரிழந்தவரின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த மகேஷ்வர் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், மனைவி ராணி குமாரி மற்றும் அவரது தாயை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு திரும்பிய மனைவி : கணவர் எடுத்த விபரீத முடிவு!!

கிண்ணியாவில்..

கிண்ணியா – ஏழு புளியடி மீள்குடியேற்ற கிராமப் பகுதியில் நேற்று முன்தினம் (10.01) காலை 6.30 மணியளவில் டைனமைன்ட் வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்து உள்ளார். சம்பவத்தில் பெரிய கிண்ணியா கட்டையாறு பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடைய உனைதீன் ரபாய்தீன் என்பவரே உயிர் இழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் மனைவி வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக குவைட்டுக்குச் சென்று ஒன்றரை வருடங்களின் பின் மீண்டும் வீடு திரும்பி உள்ளார். மனைவி நாட்டுக்கு வந்து ஐந்து நாட்களேயான நிலையில் , இருவருக்கும் இடையிலான கருத்து முரண்பாடுகள், வாய் தர்க்கங்கள் ஏற்பட்டுள்ளன.

வெளிநாட்டில் இருந்து வந்த மனைவி தனது கணவனுடன் அன்புடன் வாழ விருப்பமில்லை என்ன கூறியுள்ளார். இதன் காரணமாக மனம் சோர்வடைந்த கணவன் நேற்று முன்தினம் (10) காலை 6.30க்கு தனது இடுப்பில் வெடிக்கும் டைனமைன்ட் வெடிப்பொருளைக் கட்டிக் கொண்டு வெடிக்கவைத்து உயிரிழந்துள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மனைவி உடலை அடக்கம் செய்த போது மயங்கி விழுந்து கணவர் உயிரிழப்பு!!

கேரளவில்..

கேரள மாநிலம் ஆலப்புழாவில் மனைவி இறந்த சில மணி நேரங்களிலேயே அவரது கணவரும் உயிரிழந்தார். காக்காம் மிஸ்ரியா மன்சிலில் ரஷீதா (60) மயங்கி விழுந்து இறந்த சில மணி நேரங்களில், அவரது கணவர் முகமது குஞ்சுவும் (65) மயங்கி விழுந்து இறந்தார். நேற்று இரவு ஒன்பது மணியளவில் ரஷீதா மயங்கி விழுந்தார்.

ரஷீதாவை வந்தனம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர், ஆனால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. ரஷீதாவின் மரணத்திற்குப் பிறகு கணவர் முஹம்மது கடும் மன அழுத்தத்தில் இருந்ததாக உறவினர்கள் கூறுகின்றனர்.

இன்று காலை ரஷீதாவின் உடல் தகனத்திற்காக எடுத்துச் செல்லப்பட்டபோது, ​​ முகமது மயங்கி விழுந்தார். இதைத் தொடர்ந்து, முகமதுவை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார், ஆனால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. மனைவி உடலை அடக்கம் செய்யும் போது கணவனும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

4 வயது மகனை கொன்று சூட்கேஸில் வைத்து பயணித்த பெண் அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!!

இந்தியாவில்..

இந்திய மாநிலம் கர்நாடகாவில் பெண் அதிகாரி ஒருவர், தனது 4 வயது மகனை சூட்கேசில் எடுத்துச் சென்ற சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.கர்நாடகாவில் தனியார் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வருபவர் சுசனா சேத் (39).

தன் கணவருடனான கருத்து வேறுபட்டதால் சுசனா சேத் அவரை பிரிந்து, தனது 4 வயது மகனுடன் வாழ்ந்து வந்தார். இவர் கடந்த சனிக்கிழமை கோவாவிற்கு மகனுடன் சென்றுள்ளார். அங்குள்ள தனியார் ஹொட்டலில் அவர் தங்கினார். நேற்று காலை சுசனா ஹொட்டல் அறையை காலி செய்துவிட்டு கிளம்பியுள்ளார். ஆனால் அவருடன் மகன் வெளியேறவில்லை.

மேலும், அவர் தங்கியிருந்த அறையை பராமரிப்பு ஊழியர் சுத்தம் செய்தபோது ரத்தக்கறைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து சுசனா வெளியேறும் போது அவரது மகன் உடன் இல்லாததை ஹொட்டல் நிர்வாகத்தினர் உறுதி செய்தனர். இதனால் சந்தேகமடைந்த ஹொட்டல் நிர்வாகத்தினர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் ஹொட்டலுக்கு விரைந்த பொலிஸார், சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விசாரணையை தொடங்கினர். சுசனா சேதத்தை போனில் தொடர்பு கொண்டு பேசிய பொலிஸார், மகன் எங்கே என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் நண்பர் வீட்டில் விட்டு சென்றதாக கூறியுள்ளார். ஆனால் அவர் கூறிய முகவரியில் சென்று விசாரித்தபோது அது போலி என தெரிய வந்தது. இதனால் சுசனா பயணித்த டாக்சி ஓட்டுநரை பொலிஸார் தொடர்பு கொண்டு பேசினர்.

அப்போது அவரது காரில் சிறுவன் இல்லை என தெரிய வந்ததால், ஜமங்கலா காவல் நிலையத்திற்கு காரை கொண்டுவருமாறு பொலிஸார் கூறியுள்ளனர். அதன்படி ஓட்டுநரும் காவல் நிலையம் வர, காரினை பொலிஸார் சோதனை செய்தபோது சூட்கேசில் சுசனா சேத்தின் மகன் பிணமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அப்போது தான் சுசனா சேத் தன் மகனை கொன்று, சூட்கேசில் அடைத்து வைத்தது தெரிய வந்தது. கொலைக்கான காரணம் தெரியாத நிலையில், சுசனா சேத் மீது வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.