இந்திய பிரதமர் மோடியை விமர்சித்த அமைச்சர்கள் மூவர் இடைநீக்கம்!!

அமைச்சர்கள் மூவர் இடைநீக்கம் ..

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை விமர்சனம் செய்த மாலைதீவைச் சேர்ந்த அமைச்சர்கள் மூவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அண்மையில் லட்சத்தீவுக்கு பயணம் மேற்கொண்ட SNORE KILLING எனப்படும் ஆழ்கடல் நீச்சலுக்கான உடையில் இருந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

பிரதமர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதோடு மாலைதீவுக்குப் பதிலாக லட்சத்தீவைப் பரிந்துரைக்கும் விதத்திலும் அமைந்தன. இதையடுத்து மாலைதீவு அமைச்சர்களான மரியம் ஷியுனா, மல்ஷா மற்றும் ஹசன் ஜிஹான் ஆகியோர் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

அமைச்சர்களின் கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில்,மாலைதீவு அரசாங்கம் குறித்த அமைச்சர்கள் மூவரையும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தது. அதோடு அது தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில், வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் உயர்மட்ட நபர்களுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் தரக்குறைவான கருத்துக்கள் பதிவேற்றப்பட்டு இருப்பது அரசின் கவனத்துக்கு வந்துள்ளது.

இந்த கருத்துகள் தனிப்பட்டவை. அவை மாலைதீவு அரசாங்கத்தின் கருத்துகளைப் பிரதிநிதித்துவப் படுத்துவதில்லை. இதுபோன்ற தரக்குறைவான கருத்துகளை கூறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயங்க மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை மாலைதீவு அமைச்சர்களின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து, மாலத்தீவுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தமது பயணத்தை இரத்து செய்துள்ளனர்.அத்துடன் Boycott maldives என்ற ஹேஷ்டேக்கும் இணையங்களில் தற்போது டிரென்டாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காதலை மறுத்ததால் யுவதிக்கு நேர்ந்த பயங்கரம்!!

பிலியந்தலையில்..

தன் காதலியுடன் ஏற்பட்ட முரண்பாட்டில் காதலன் காதலியைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது. இந்தச் சம்பவம் பிலியந்தலை பிரதேசத்தில் இன்று (07) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் 24 வயதுடைய இளைஞர், கொலைக்குப் பயன்படுத்திய கத்தியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்த 26 வயதான ஜே.எம். ஆயிஷா லக்மினி என்ற யுவதியே கொலை செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்ட யுவதி தனது தாய், தந்தை மற்றும் சகோதரருடன் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் பிலியந்தலை பிரதேசத்தில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரான காதலனுடன் கொல்லப்பட்ட யுவதி சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர் காதல் உறவில் இருந்த நிலையில், பின்னர் கடந்த மூன்று மாதங்களாகத் தனது காதலனைத் தவிர்த்து வந்தமை சந்தேகநபரின் வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளதாகவும் பிலியந்தலை பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.

தென்னிலங்கையில் உயிரிழந்த ஆறு வயதுச் சிறுவன்!!

களுத்துறையில்..

களுத்துறையில் இடம்பெற்ற விபத்தில் ஆறு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெலவத்த நெலுவ வீதியில் தேயிலை ஏற்றிச் சென்ற லொறியொன்று வீதியை விட்டு விலகி அருகில் உள்ள வீடொன்றில் வீழ்ந்தமையினால் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சாரதியும் உதவியாளரும் காயமடைந்துள்ளதாக தினியாவல பொலிஸார் தெரிவித்தனர். யட்டபான 9 மைல்கல் பகுதியில் வசிக்கும் ஆதித்ய புன்சர என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார். பெலவத்தையில் இருந்து தினியாவல நோக்கி பயணித்த லொறி யட்டபாத 9 மைல்கல் பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

காயமடைந்த லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் மெகதன்ன வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலதிக விசாரணைகளை தினியாவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை நடிகை மீது பாலியல் துஸ்பிரயோகம்!!

இலங்கையில்..

இலங்கையின் 23 வயதுடைய பிரபல நடிகை ஒருவரை முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு முயற்சித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிலியந்தலை, ஜாலியகொட பகுதியில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோதே இந்த அசம்பாவித்திற்கு நடிகை முகம் கொடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மொரட்டுவ கட்டுபெத்த பிரதேசத்திலிருந்து முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென முச்சக்கரவண்டியை வீதிக்கு அருகில் நிறுத்தி, தொழில்நுட்ப கோளாறை சரிபார்ப்பதாக கூறிய சாரதி, நடிகையை துஷ்பிரயோகத்துக்கு முயற்சித்துள்ளார்.

இந்நிலையில், சந்தேக நபரை நடிகை தள்ளிவிட்டு முச்சக்கரவண்டியிலிருந்து குதித்து தப்பித்துள்ளார். இதனையடுத்து முச்சக்கரவண்டியின் சாரதி நடிகையை விட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவத்தின் பின்னர் முச்சக்கரவண்டி கொழும்பு ஹொரணை வீதியூடாக பொரலஸ்கமுவ நோக்கி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இறந்த மகளின் கல்லறைக்கு சென்ற தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

இலங்கையில்..

பதுளை மாவட்டத்தில் உயிரிழந்த யுவதியின் சடலம் புதைக்கப்பட்ட பின்னர் சடலத்தை சவக்குழியில் இருந்து மீண்டும் தோண்டி​ எடுத்து, ஆடைகளை கழற்றி நிர்வாணமாக விட்டுச்​ சென்றுள்ளதாக சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பண்டாரவளை பதுலுகஸ்தான பகுதியைச் சேர்ந்த 24 வயதான ரஷ்மிகா மதுஷானி என்ற இளம் பெண் நிமோனியா காய்ச்சலால் கடந்த புதன்கிழமை (03.01.2024) உயிரிழந்துள்ளார். இதையடுத்து அனைத்து மத சடங்குகளுக்கு பின் இளம் பெண்ணின் சடலம் அடுத்த நாள் புதைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அந்த யுவதியின் பிறந்த தினமான இன்று (07.01.2024) யுவதியின் தந்தை கல்லறைக்குச் சென்றுள்ளார். அப்போது ​​தனது மகளின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு, ஆடைகள் இன்றி நிர்வாணமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதையடுத்து, இது தொடர்பில் பண்டாரவளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். சம்பவம் குறித்து பண்டாரவளை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரியவருகின்றது.

வடையை மட்டுமல்ல தங்கத்தையும் களவாடிய காகம் : வெளிவந்த சுவாரஸ்ய சம்பவம்!!

கேரள மாநிலத்தில்..

சிறுமியின் தங்க வளையலை தூக்கிச்சென்று காகமொன்று கூடு கட்டிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு காப்பட் பகுதியை சேர்ந்த தம்பதியினர் நசீர் மற்றும் ஷரீப, திருமண நிகழ்வொன்றுக்கு சென்றுள்ளனர். அதன் போது அவரது சிறிய மகளையும் தங்க நகைகள் அணிவித்து அழைத்துச் சென்றுள்ளனர்.

திருமணம் முடிந்து மீண்டும் வீடு திரும்பிய பின்னர் சிறுமி தங்க வளையலை கழற்றி கடதாசியில் சுற்றி வீட்டில ஓர் இடத்தில் வைத்துள்ளார். மீண்டும் ஒருநாள் அவர்கள் உறவினர் வீட்டுக்குச் செல்லும் சிறுமியின் வளையலை தேடிப்பார்த்த போது அது மாயமாகியிருப்பது தெரியவந்துள்ளது.

அதையடுத்து அவர்கள் பாத்திமா நகையை கழற்றி வைத்த இடம் உட்பட வீட்டில் அனைத்து இடங்களிலும் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் நகைகள் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் பதற்றமடைந்தனர். அவரும், பையின் மீது வைத்ததாக கூறினார்.

ஆனால், அந்த இடத்தில் பார்த்த போது வளையல் இல்லாததால் அவர்கள் வேதனையடைந்தனர். இந்நிலையில், அவர்களின் உறவினர்கள் காகம் ஒன்று பிளாஸ்டிக் வளையல் மற்றும் சிறு குச்சி போன்றவற்றை தூக்கி சென்றதை பார்த்துள்ளனர்.

அதனால், தங்களது தங்க வளையலையும் தூக்கிச் சென்றிருக்கக்கூடும் என்ற சந்தேகம் அவர்களுக்கு எழுந்தது, இதன்பின்னர், சிறுமியின் உறவினர் காகம் கூடு கட்டி வைத்திருந்த தென்னை மரத்தில் ஏறி பார்த்தனர். அப்போது சிறுமியின் தங்க வளையல் இருந்தது, அவர் அதனை எடுத்து சிறுமியின் தாயிடம் கொடுத்துள்ளார்.

புதிய வரி நடைமுறை : வாகனம், காணி கொள்வனவு செய்வோருக்கு முக்கிய தகவல்!!

இலங்கையில்..

இலங்கையில் ஒருவர் வாகனம், நிலம் அல்லது வீடு வாங்கினால் மட்டும் அந்த நபர் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊழியர்களாக பணிபுரிந்து 12 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறுபவர்களுக்கு மட்டுமே வருமான வரி விதிக்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறானவர்கள் செலுத்த வேண்டிய வருமான வரியானது தனது திணைக்களத்திற்கு முதலாளி ஊடாக பெறப்படுவதாக உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் வரிக் கொள்கை மற்றும் சட்டப்பிரிவின் சிரேஷ்ட பிரதி ஆணையாளர் நிஹால் விஜேவர்தன தெரிவித்தார். ஊடகமொன்றின் உடனான விசேட கலந்துரையாடலின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

“ஒருவர் நீண்ட கால சேகரிப்பின் மூலம் வாகனம் வாங்கலாம், வெளிநாட்டில் இருந்து உறவினர்கள் ஊடாக கிடைத்த பணம், பரிசாக கிடைத்த பணம், அல்லது மாதாந்தம் செலுத்தி வாகனம் வாங்குவதற்கு வருமான வரி விதிக்கப்படாது. தாங்கள் வருமானமாக பெறும் 12 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டும்.

தொழில் கிடைக்கும் சம்பளத்திலேயே வருமான வரி அறவிடப்படும். அந்த சம்பள பணத்தில் வாகனம் வாங்கினால் அதற்கு வருமான வரி அறவிடப்படாது. காணி அல்லது வீடு கொள்வனவு செய்யும் போதும் அந்த நபருக்கு எவ்வாறு பணம் கிடைத்ததென்பதனை பொறுத்தே தீர்மானிக்கப்படும்.

ஒரு வாகனம், வீடு அல்லது காணிக்கு முழு தொகையையும் செலுத்தி கொள்வனவு செய்கின்றார் என்றால் அது தொடர்பான தகவல் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு கிடைத்துவிடும். எனினும் அந்த பணம் எப்படி கிடைத்ததென்பதனை ஆராய்ந்து அது வரி செலுத்தாத வருமானமாக இருந்தால் மாத்திரமே வரி அறவிடப்படும். ” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் தவறான மத போதனையால் பலர் உயிரிழக்கும் ஆபத்து!!

நாட்டில்..

சமூக ஊடகங்கள் மூலம் மத போதனைகளை வழங்கி உயிரை மாய்க்க தூண்டியதாக கூறப்படும் ருவான் பிரசன்ன குணரத்னவின் ஆதரவாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களை கண்டுபிடிக்க குற்றப்புலனாய்வு திணைக்களம் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இது இரகசியப் பொலிஸ் பிரிவின் இரண்டு உதவி பொலிஸ் அத்தியட்சகர்களின் கீழ் 15 அதிகாரிகள் கொண்ட இரண்டு குழுக்களால் நாடு முழுவதும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழுவில் உயிரை மாய்த்துக்கொண்ட ஏழு பேரின் மருத்துவப் பதிவுகள் மூலம் விசாரணை நடத்தி வருகிறது, மேலும் யூடியூப், பேஸ்புக் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் பரவிய வீடியோக்களும் இந்த விசாரணைக்காக பயன்படுத்தப்படவுள்ளது.

மேலும், இந்த நபரின் போதனைகளில் ஈடுபட்டவர்கள் மற்றும் அவரைப் பின்பற்றுபவர்களை அடையாளம் கண்டு, அவர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பெற மற்றைய பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரனைக்கமைய, இறந்த நபருக்கு எத்தனை சீடர்கள் இருந்தார்கள், சம்பந்தப்பட்டவர்கள், அவர்கள் எந்தெந்த மாகாணங்களை சேர்ந்தவர்கள் என கண்டறியப்படவுள்ளது.

சமீபத்தில் பதிவான ஏழு சந்தேக மரணங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, இந்த ஏழு பேரும் அதே விஷத்தை குடித்து உயிரை மாய்த்துக் கொண்டதால், இந்த விஷத்தை குறித்த போதனைகளில் கலந்துகொண்ட அனைவருக்கும் விநியோகித்தாரா என்ற சந்தேகத்தில் இந்த விசாரணை நடத்தப்படுகின்றது.

மேலும், உயிரிழந்தவரின் வழியை பின்பற்றி அவரை பின்பற்றுபவர்கள் தொடர்ந்து இதுபோன்ற விரிவுரைகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிய இந்த விசாரணைகள் நடத்தப்படும். இந்த தற்செயலான உயிரை மாய்க்கும் அலையாக மாறுவதைத் தடுக்க இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க மற்றும் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காவிந்த பியசேகர ஆகியோரின் பணிப்புரைக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வவுனியா ஊடான வடக்கு புகையிரத சேவைகள் ஆறு மாதங்களுக்கு நிறுத்தப்படும்!!

இலங்கையில்..

வடக்கு மாகாணத்திற்கான தொடருந்து சேவைகள் ஆறு மாத காலத்திற்கு நிறுத்தப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (07.01.2024) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மஹவ மற்றும் அநுராதபுரத்துக்கிடையிலான பாதை அபிவிருத்திக்காகவே 6 மாதங்களுக்கு மூடப்படவுள்ளதாக தொடருந்து பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்று முதல் கொழும்பிலிருந்து மஹவ வரையும் அநுராதபுரத்திலிருந்து காங்கேசன்துறை வரையுமே தொடருந்து சேவைகள் இடம்பெறுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, மட்டக்களப்பு தொடருந்து பாதையையும் இவ்வருடம் புனரமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணம் வரை புதிய தொடருந்து சேவையையும் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கல்விக்கட்டணம் செலுத்தாததால் 9ம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு!!

நெல்லையில்..

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் வசித்து வருபவர் நாகராஜன். இவர் தனியார் நிறுவனங்களில் ஊழியரான இவரின் மனைவி பெயர் மாரியம்மாள். இவர்களின் மகன்கள் நரேன், சுர்ஜித். இவர்கள் இருவரும் அருகில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். இதில் நரேன் 9ம் வகுப்பு படித்து வந்தார் டிசம்பர் 4 ம் தேதி காலையில் நரேன் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். சுர்ஜித் மட்டும் பள்ளிக்கு சென்று இருந்தார்.

பள்ளி முடிந்ததும் மாரியம்மாள் மாலையில் சுர்ஜித்தை அழைத்து வருவதற்காக பள்ளிக்கு சென்றார். வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு உள்பக்கமாக பூட்டி இருந்தது.மாரியம்மாள் நீண்ட நேரமாக கதவை தட்டியும் நரேன் திறக்கவில்லை. உடனே அங்கு வந்த நாகராஜன், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது நரேன் தூக்கில் பிணமாக தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி அழுதனர்.

இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உயிரிழந்த நரேனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இந்நிலையில் நரேனின் பெற்றோர், உறவினர்கள், பொதுமக்கள் பள்ளிக்கூடத்தின் முன்பு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து மறியலை கைவிட்டவர்கள், பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். மாணவன் நரேனின் பெற்றோர் “பொருளாதார சூழ்நிலையால் நரேனுக்கு டிசம்பரில் செலுத்த வேண்டிய கல்வி கட்டணத்தை செலுத்த முடியவில்லை. இதுகுறித்து நாங்கள் பள்ளி ஆசிரியர், முதல்வரிடம் தெரிவித்துவிட்டோம். அவர்கள் தொடர்ந்து கட்டணத்தை செலுத்துமாறு வலியுறுத்தினர்.

அரையாண்டு விடுமுறைக்கு பிறகு ஜனவர் 2ம் தேதி பள்ளிக்கு சென்ற நரேனிடம், கல்வி கட்டணத்தை செலுத்தும் படி வலியுறுத்தியுள்ளனர். இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளான நரேன் நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்லவில்லை. மாலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.

அவன் உயிரிழப்புக்கு பள்ளி நிர்வாகம்தான் காரணம். பள்ளி ஆசிரியர், முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம்” என தெரிவித்துள்ளார். இது குறித்து நெல்லை மாவட்ட கல்வி அலுவலர் தனியார் பள்ளி நிர்வாகத்திடம், நரேனின் பெற்றோரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

50 சவரன் நகை கொடுத்தும் போதாது போதாது என காதல் மனைவியை காரில் இழுத்துச் சென்ற கொடூர கணவன்!!

கன்னியாகுமரியில்..

வரதட்சணை கேட்டு காதல் மனைவியை காரில் இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள அமந்தகரை பகுதியை சேர்ந்தவர் அபிஷா. முடார் பகுதியைச் சேர்ந்தவர் பெர்லின். இருவரும் காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு இருவரது வீட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், குடும்பத்தை சமாதானம் செய்த அபிஷா, 2021ல் பெர்லினில் திருமணம் செய்து கொண்டார்.

அபிஷாவின் தந்தை, மகளின் திருமணத்தின் போது, ​​மகளுக்கு ரூ.50 சவரன் நகை மற்றும் ரூ.9 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை பரிசாக அளித்துள்ளார்.இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. ஓவியராக இருக்கும் பெர்லின் முழு நேர வேலை இல்லாமல் இருந்துள்ளார். அதுமட்டுமின்றி, நண்பர்களுடன் ஊர் சுற்றியிருக்கிறார்.

மேலும், அபிஷாவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் கணவரின் கொடுமையை தாங்க முடியாத அபிஷா, அவரை பிரிந்து சென்று விட்டதாக தெரிகிறது. இவர் அதே பகுதியில் உள்ள கல்லூரியில் உதவி பேராசிரியராக சேர்ந்தார். இந்நிலையில், அபிஷா கடந்த 3ம் தேதி மாலை பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, ​​அவ்வழியாக காரில் வந்த பெர்லின் அவரை வழிமறித்து தாக்கினார். மேலும், அவர் தனது மனைவியை காரில் இழுத்துச் சென்றார். இதனால் அபிஷா அலறி துடித்தார். இதை பார்த்த அப்பகுதியில் நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், சில வாலிபர்கள் காரை துரத்திச் சென்றனர்.

உடனே மனைவியை காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு ஓடினார். இதில் அபிஷா கீழே விழுந்து சிறு காயம் அடைந்தார். பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அபிஷாவின் தந்தை திருவட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு!!

நீலகிரியில்..

கல்லூரி விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ராம்சந்த் கல்பனா காட்டேஜ் பகுதியை சேர்ந்தவர்கள் கணேசமூர்த்தி-மல்லிகா தம்பதி. கணேசமூர்த்தி அரவேணு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு சந்தியா (25), ஸ்ரீநிதி (21) என்ற இரு மகள்கள் உள்ளனர்.

கோவையில் ஸ்ரீநிதி தனியார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஸ்ரீநிதி கடந்த 10 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊரான கோத்தகிரிக்கு வந்துள்ளார்.

இதையடுத்து இன்று காலை ஸ்ரீநிதியின் பெற்றோர் இருவரும் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், ஸ்ரீநிதி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். மதியம் ஸ்ரீநிதியின் தந்தை கணேசமூர்த்தி ஸ்ரீநிதிக்கு போன் செய்ததாக கூறப்படுகிறது.

நீண்ட நேரமாக போன் செய்தும் பதில் வராததால், மகள் வீட்டில் இருக்கிறாரா என அக்கம் பக்கத்தினருக்கு போன் செய்தார். அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது, ​​நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால், வீட்டின் ஜன்னல் வழியாக அங்கிருந்தவர்கள் பார்த்தனர்.

அப்போது, ​​ஸ்ரீநிதி வீட்டின் அறையில் துப்பட்டாவில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.

இதற்கிடையே கோத்தகிரி இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஸ்ரீநிதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விடுமுறையில் வீட்டுக்கு வந்த மருத்துவ மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

23 ஆண்டுகள் துபாயில் இருந்த இந்தியரை ஒரே நாளில் கோடீஸ்வரராக மாற்றிய லொட்டரி!!

துபாயில்..

பல ஆண்டுகளாக துபாயில் பணியாற்றி வந்த இந்தியர் ஒருவருக்கு மிகப்பாரிய ஜாக்பாட் அடித்துள்ளது.துபாயில் 23 ஆண்டுகளாக மேலாக Lucky Draw-ல் தனது அதிர்ஷ்டத்தை சோதித்த கவுடா அசோக் கோபாலுக்கு (Gowda Ashok Gopal), இறுதியாக இந்த ஆண்டு ஜனவரி 3-ஆம் திகதி ஜாக்பாட் அடித்துள்ளது.

Dubai Duty Free (DDF) Millennium Millionaireல் கோபால் ஒரு மில்லியன் டொலர் பரிசு வென்றுள்ளார். இது இலங்கை பணமதிப்பில் ரூ. 32,28,85,000 ஆகும்.59 வயதான கோபால் தற்போது மும்பையில் இருக்கிறார். கடந்த ஆண்டு டிசம்பர் 20-ஆம் திகதி DDFன் 40வது ஆண்டு விழாவில் டிக்கெட் எண் 3082 ஆன்லைனில் வாங்கியதாக அவர் கூறினார்.

23 வருடமாக ஒவ்வொரு வருடமும் DDF டிக்கெட் வாங்குவது என்னுடைய தவிர்க்கமுடியாத பழக்கமாகிவிட்டது. இந்த வருடமும் டிக்கட் வாங்கினேன், இம்முறை டிக்கெட் எண் 3082 என்னை கோடீஸ்வரனாக்கியது. விரைவில் துபாய் சென்று பரிசுத்தொகையை வாங்க உள்ளதாக கோபால் கூறியுள்ளார்.

23 ஆண்டுகளாக துபாயில் வசித்து வருவதாக கூறும் கோபால்,1999-ல் DDF தனது முதல் டிராவை நடத்தியபோது அவர் அங்கு இருந்ததாக கூறினார். அப்போது ஆன்லைன் ஷாப்பிங் கிடையாது, டிக்கெட் வாங்க வரிசையில் பொறுமையாக நிற்க வேண்டும் என்றார்.

DDF டிக்கெட்டுகளை முதலில் வாங்கியவர்களில் நானும் ஒருவன். நாங்கள் அனைவரும் நீண்ட வரிசையில் நின்றோம், முதல் டிராவில் எனக்கு முன்னால் இருந்தவர் வெற்றி பெற்றார்.அடுத்ததாக அந்த அதிர்ஷ்டம் எனக்கு வரும் என்று உணர்ந்தேன். அதனால் ஒவ்வொரு வருடமும் டிக்கெட் வாங்கிட்டு இருந்தேன். இப்போது பரிசு விழுந்துவிட்டது.

நவம்பர் 1999-ல் Dubai Duty Free லொட்டரி தொடங்கப்பட்டதிலிருந்து 1 மில்லியன் டொலர் பரிசை வென்ற 222வது இந்திய நாட்டவர் கோபால் ஆனார்.2015-க்குப் பிறகு துபாய்க்குப் போகவே இல்லை என்றும் ஆனால் துபாயுடனான தனது தொடர்பு முறிக்கப்படவில்லை என்றும் கோபால் கூறுகிறார்.

மும்பை வந்த பிறகும் ஆண்டுதோறும் DDF டிக்கெட் வாங்கத் தவறவில்லை. கடந்த இரண்டு தசாப்தங்களில் தோல்வியால் தான் ஏமாற்றமடையவில்லை என்று கோபால் கூறினார்.தற்போது அவருக்கு ஜாக்பாட் அடித்துள்ளதால், நிலுவையில் உள்ள பல பணிகளை செய்து முடிப்பதோடு, தொண்டு செய்வதாகவும் கூறியுள்ளார்.

நடுவானில் பறந்த விமானத்தின் கதவு : அதிர்ச்சி வீடியோ!!

அமெரிக்காவில்..

அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம், 174 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்களுடன், வெள்ளிக்கிழமை (உள்ளூர் நேரம்) அமெரிக்காவில் உள்ள போர்ட்லேண்டில் உள்ள போர்ட்லேண்டில் தரையிறங்கியது. அப்போது திடீரென வெளியேறும் கதவு மற்றும் அருகிலுள்ள ஆளில்லாத இருக்கை ஆகியவை நடுவானில் பறந்தன. யாரேனும் காயமடைந்தார்களா என்பது தெரியவில்லை.

சமூக ஊடகங்களில் வெளியான காட்சிகள் விமானத்தின் பின்புற மிட் கேபின் வெளியேறும் கதவு சுவர் காணாமல் போனதைக் காட்டியது. இந்த கதவு முதலில் வெளியேற்றும் நோக்கத்திற்காக இருந்தது, ஆனால் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் செயல்படுத்தப்படவில்லை மற்றும் நிரந்தரமாக “பிளக்” செய்யப்பட்டுள்ளது.

இந்த விமானம் போயிங் 737-9 MAX மூலம் இயக்கப்பட்டது, இது ஒன்ராறியோவுக்குச் சென்றது, புறப்பட்ட உடனேயே சம்பவத்தை அனுபவித்து, மாலை 5:26 மணிக்கு (உள்ளூர் நேரம்) போர்ட்லேண்டில் பாதுகாப்பாக தரையிறங்கியது. விமானம் பறக்கும் போது 16,000 அடி உயரத்திற்கு உயர்ந்தது, பின்னர் திடீரென கீழே இறங்கத் தொடங்கியது என்று விமான ஆய்வாளர்களின் தரவுகள் தெரிவிக்கின்றன.

பயணிகள் தங்களின் வேதனையான அனுபவத்தை, இது ஒரு கனவு என்று கூறினர். 22 வயதான பயணி ஒருவர் நியூயார்க் டைம்ஸிடம், “நான் கண்களைத் திறக்கிறேன், முதலில் நான் பார்ப்பது எனக்கு முன்னால் உள்ள ஆக்ஸிஜன் முகமூடியைத்தான். நான் இடது பக்கம் பார்க்கிறேன், விமானத்தின் பக்கவாட்டில் உள்ள சுவர் போய்விட்டது. நான் முதலில் நினைத்தது, ‘நான் இறக்கப் போகிறேன்’.

தாய் திட்டியதால் மனமுடைந்த மாணவன் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட விபரீதம்!!

பெங்களூருவில்..

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேந்தவர் தம்மையா. இவர் பெங்களூரு – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் சுங்கச்சாவடி நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். இதன் காரணமாக இவர் லைசென்சுடன் துப்பாக்கி வைத்துள்ளார்.

இவரது மகன் விஷ்ணு உத்தப்பா, முதலாம் ஆண்டு இன்ஜினியரிங் படித்து வருகிறார். இந்நிலையில், படிப்பு தொடர்பாக விஷ்ணுவுக்கும், அவரது தாயாருக்கும் இடையே கடந்த 3ம் தேதி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் விஷ்ணுவை, தாய் கடுமையாக திட்டியதாக தெரிகிறது.

இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில், நேற்று தம்மையா, அவரது மனைவி இருவரும் வெளியே சென்றதாக தெரிகிறது. வீட்டில் தனியாக இருந்த விஷ்ணு, தந்தையின் துப்பாக்கியை எடுத்து தன்னைத்தானே நெஞ்சில் சுட்டுக்கொண்டு இறந்தார். இன்று பிற்பகல் வீடு திரும்பிய தம்மையாவும், அவரது மனைவியும் மகன் இறந்துகிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக இதுகுறித்து பெங்களூரு காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார், விஷ்ணுவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விஷ்ணு சுட்டுக்கொண்ட துப்பாக்கியையும் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டை விட்டு கோபமாக வெளியே சென்ற இளம்பெண்.. மூன்று நாள் கழித்து சடலமாக மீட்கப்பட்ட சோகம்!!

ராணிப்பேட்டையில்..

ராணிப்பேட்டை மாவட்டம் மக்கட்டா அருகே உள்ள மரிஷியூர் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மனைவி விமலேஸ்வரி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இளைய மகள் பிரியங்கா (23) வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 3ம் தேதி காலை கோபமாக வீட்டில் இருந்து வெளியே வந்த பிரியங்கா வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடினர். அப்போது பிரியங்காவின் காலணிகள் ஊருக்கு அருகில் உள்ள விவசாயி கிணறு அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதனால் சந்தேகமடைந்த பிரியங்காவின் பெற்றோர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

நீண்ட நேரம் தேடியும் பிரியங்காவை காணாததால் தீயணைப்பு துறையினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். பிரியங்காவின் உறவினர்களும் தேடுதல் வேட்டையை கைவிட்டனர்.பிரியங்கா காணாமல் போன மூன்றாவது நாளான இன்று, விடியற்காலையில் பிரியங்காவின் தாத்தா கிணற்றைப் பார்த்துள்ளார்.

அப்போது பிரியங்காவின் சடலம் மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரியங்காவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.