பிரபல பணக்காரர் மனைவி, மகளை சுட்டுக் கொலை செய்து தானும் தற்கொலை!!

அமெரிக்காவில்..

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணம் டொவர் பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ் கமல் (57). இவரது மனைவி டீனா கமல் (54). இந்த தம்பதிக்கு அரினா கமல் (18) என்ற மகள் இருந்தார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த ராகேஷ் கமல் அமெரிக்காவில் பெரும் பணக்காரராக உள்ளார். ராகேஷ் கமல், குடும்பத்துடன் டொவர் பகுதியில் உள்ள தனது பண்ணை வீட்டில் வசித்து வந்தார்.

இதனிடையே, டிசம்பர் 28-ம் தேதி பண்ணை வீட்டில் ராகேஷ் கமல், அவரது மனைவி டீனா கமல், மகள் அரினா கமல் ஆகிய 3 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர். தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் 3 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 3 பேரும் கொலை செய்யப்பட்டனரா? தற்கொலை செய்துகொண்டனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், மனைவி, மகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு ராகேஷ் கமல் தற்கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த ராகேஷ் அருகே கைத்துப்பாக்கி கிடந்துள்ளது.

அந்த துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் தடயவியல் சோதனை மேற்கொண்டனர். மேலும், 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.

அதில் ராகேஷ் கமல், மனைவி டீனா கமல், மகள் அரினாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டது உறுதியாகியுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கைத்துப்பாக்கி ராகேஷ் கமலுக்கு சொந்தமானது அல்ல என்பதும், துப்பாக்கி வைத்துக்கொள்ள ராகேஷுக்கு எந்த உரிமையும் வழங்கப்படவில்லை என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மனைவி, மகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு இந்தியவம்சாவளி பணக்காரர் ராகேஷ் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா பாணியில் பரபரப்பாக நடந்த திருமணம்.. காரில் காதலிக்கு தாலி கட்டிய காதலன்!!

கர்நாடகாவில்..

அம்ரிதா [23] கர்நாடக மாநிலம் கொப்பல் பகுதியைச் சேர்ந்தவர். பல்லாரி சிறுகுப்ப தெக்கலக்கோட்டில் வசிப்பவர் சிவபிரசாத் [25]. இருவரும் சமூக வலைதளங்களில் பேசி வந்தனர். பின்னர் ஒரு கட்டத்தில் இவர்களின் நட்பு காதலாக மாறி காதலாக மாறியது.

இந்நிலையில் சிவபிரசாத் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இவர்களது காதலுக்கு அம்ரிதா வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் அம்ரிதாவை வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அமிர்தா, வீட்டை விட்டு வெளியேறி சிறுகுப்பா சென்றார். அங்கு காத்திருந்த சிவபிரசாத், அமிர்தா ஆகியோரும் காரில் புறப்பட்டனர். வாகனம் ஓட்டும்போது இருவரும் மாலைகளை மாற்றிக்கொண்டனர். பின்னர் அமிர்தாவின் கழுத்தில் சிவபிரசாத் தாலி கட்டினார்.

இதையடுத்து காதல் கொடி பாதுகாப்பு கேட்டு நள்ளிரவில் தேகலகோட்டை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இரவு நேரம் என்பதால் போலீசார் அமிர்தாவை மகளிர் பாதுகாப்பு மையத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதையறிந்த அமிர்தாவின் பெற்றோர், பெண்கள் பாதுகாப்பு மையத்துக்குச் சென்று தகராறு செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அவர்களை சமாதனம் செய்ய முயன்றனர். ஆனால் போலீசார் முன்னிலையில் அமிர்தாவின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிச் செல்ல முயன்றனர்.

ஆனால் அமிர்தா பெற்றோருடன் செல்ல மறுத்தார். காதல் கணவனுடன் வாழ்வேன் என அம்ரிதா தெரிவிக்கையில் அவரின் பெற்றோர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதை பார்த்த காதல் ஜோடி திகைத்து நின்றனர்.

காதல் மனைவியை காரில் தரதரவென இழுத்துச் சென்ற கணவன்.. பதறிய பொதுமக்கள்!!

கன்னியாகுமரியில்..

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் அருகே உள்ள அணைக்கரைப் பகுதியை சேர்ந்தவர் அபிஷா. முதலாறு பகுதியைச் சேர்ந்தவர் பெர்லின். இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு இருவரது வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

ஆனாலும், விடாமல் வீட்டினரைச் சமாதானம் செய்த அபிஷா கடந்த 2021ம் ஆண்டு பெர்லினை திருமணம் செய்துகொண்டார். திருமணத்தின் போது 50 சவரன் நகை மற்றும் ஒன்பது லட்சம் ரூபாய் ஒரு சொகுசு கார் என அபிஷாவின் தந்தை தனது மகளுக்குச் சீதனமாகக் கொடுத்துள்ளார்.

இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. ஓவியரான பெர்லினுக்கு முழு நேர வேலை என்ற ஒன்று இல்லாமல் இருந்துள்ளது. அதோடு, நண்பர்களுடன் ஊர் சுற்றி பொழுதைக் கழித்து வந்துள்ளார். மேலும், அவர் அபிஷாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாகச் சொல்லப்படுகிறது.

ஒரு கட்டத்தில் கணவரின் கொடுமையை பொறுக்க முடியாத அபிஷா, அவரை பிரிந்து சென்றதாகத் தெரிகிறது. அதேபகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில், உதவிப் பேராசிரியையாக பணிக்குச் சேர்ந்து சென்று வந்தார்.

இந்நிலையில், கடந்த 3ம் தேதி மாலை பணி முடிந்து அபிஷா வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியே காரில் வந்த பெர்லின் அவரை வழிமறித்துத் தாக்கினார்.

மேலும், மனைவியை தரதரவென காரில் இருந்தபடியே இழுத்துச் சென்றார். இதில் அபிஷா அலறி கூச்சல் போட்டார். இதைப் பார்த்த அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அத்துடன் சில இளைஞர்கள் காரைத் துரத்திச் சென்றனர்.

உடனே மனைவியை காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு வேகமாகத் தப்பிச் சென்றார். கீழே விழுந்த அபிஷாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அபிஷாவின் தந்தை திருவட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியைக் கொலை செய்து பிணத்தின் அருகே அமர்ந்திருந்த கணவன்!!

கோவில்பட்டியில்..

கோவில்பட்டி அருகே மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவர், பொதுமக்கள் பிடியில் இருந்து இன்று தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கீழபாண்டவர்மங்கலம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் இன்னாசிமுத்து(56). இவரது மனைவி மருதம்மாள்(54).

இந்த நிலையில் இன்னாசிமுத்து வீட்டில் இருந்து இன்று காலையில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அக்கம் பக்கத்தினர் இன்னாசிமுத்து வீட்டிற்கு வந்து பார்த்தனர். அப்போது வீட்டின் கதவு உள்புறம் பூட்டப்பட்டிருந்தது.

இதனால் இன்னாசிமுத்து வீட்டின் ஜன்னல் வழியாக அவர்கள் பார்த்த போது, மருதம்மாள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதனைக் கண்ட கிராம மக்கள் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

அத்துடன் அக்கம் பக்கத்தினர், இன்னாசிமுத்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே செல்ல முயன்றனர். அப்போது வீட்டிற்குள் இருந்த இன்னாசிமுத்து அங்கிருந்து தப்பியோடினார்.

இதனால் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். மனைவியைக் கொலை செய்து இன்னாசிமுத்து வீட்டில் பதுங்கியிருக்கலாம் என்று அவர்கள் சந்தேகமடைந்தனர். இந்த நிலையில், விரைந்து வந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார், மருதம்மாள் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருதம்மாள் எதற்காக கொலை செய்யப்பட்டார், அவரைக் கொலை செய்த இன்னாசிமுத்து எங்கே என போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போட்டோ ஷூட்டுக்கு மறுத்த பெற்றோர்… விரக்தியில் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு!!

பெங்களூருவில்..

கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே, புது வருஷத்தில் மால் ஒன்றுக்கு சென்று போட்டோ ஷூட் எடுக்க ஆசைப்பட்ட கல்லூரி படித்து வரும் மகளிடம், புது வருட கூட்டத்தில் வேண்டாம்… பிறகொரு நாளில் எடுத்துக் கொள் என்று பெற்றோர் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்ததால் கல்லூரி மாணவி வர்ஷினி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள சுதாமா நகரில் வசித்து வருபவர் வர்ஷினி (21). அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிபிஏ படித்து வரும் வர்ஷினி, போட்டோக்ராஃபி படிப்பும் படித்துள்ளார். இந்த சூழலில் போட்டோஷூட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், அடிக்கடி இப்படி போட்டோ எடுத்துக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை புத்தாண்டுக்காக மாலில் இருந்து போட்டோஷூட் எடுக்க எண்ணியுள்ளார். இதனை தனது பெற்றோரிடம் ஞாயிற்றுகிழமை காலையில் கூறவே, அவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அவரை கடுமையாக திட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் தனது அறைக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டார்.

நீண்ட நேரமாகியும் கதவை திறக்கவில்லை என்பதால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை தட்டியுள்ளனர். அப்படியும் திறக்கவில்லை என்பதால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு, தற்கொலை செய்துகொண்ட இடத்தில் சோதனை மேற்கொண்டனர்.

மேலும் மாணவியின் செல்போனை மீட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புத்தாண்டு அன்று போட்டோ ஷூட் எடுக்க ஆசைப்பட்ட இளம்பெண்ணுக்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாடல் அழகி சுட்டுக்கொலை : ரவுடியை என்கவுன்ட்டர் செய்ய போலீஸாருக்கு உதவியதால் ஆத்திரம்!!

மும்பையில்..

மும்பையில் கடந்த 2016 பிப்ரவரி 7-ம் தேதி, ரவுடி சந்தீப் கடோலி போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். மும்பை ஓட்டலில் கடோலியை குறிவைத்துப் பிடிக்க, அவரது தோழியும் மாடல் அழகியுமான 27 வயதான திவ்யா பஹுஜா பயன்படுத்தப்பட்டதாகவும், ஆனால், காவல் துறையினருடனான போலி என்கவுன்டரில் கடோலி கொல்லப்பட்டதாகவும் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், சந்தீப் கடோலியை சுட்டுக் கொன்றதாக திவ்யா பஹுஜா, இவரது தாயார் மற்றும் ஐந்து பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் கடந்த 7 ஆண்டுகளாக திவ்யா பஹுஜா சிறையில் இருந்தார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் மும்பை உயர் நீதிமன்றம் திவ்யா பஹுஜாவுக்கு ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, ஐந்து பேர், திவ்யா பஹுஜாவை, குருகிராமில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு திடீரென அந்த கும்பல் அவரை தலையில் சுட்டுக் கொன்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரது சடலத்தை ஓட்டல் அறையில் இருந்து இருவர் தூக்கிச் செல்வது போன்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக ஹரியாணா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திவ்யா பஹுஜா, ஹரியாணா மாநிலம், குருகிராமில் உள்ள பல்தேவ் நகரைச் சேர்ந்தவர். கடோலி சுட்டுக் கொல்லப்பட்டபோது அவருடன் ஓட்டல் அறையில் அவர் இருந்துள்ளார். சந்தீப் கடோலி கொலை விவகாரத்தில், போலீஸார் மற்றும் ரவுடிக் கும்பல் ஆகிய தரப்புக்கும் மாடல் அழகி திவ்யா பஹுஜா பலிகடாவாகியுள்ளார்.

வவுனியாவில் கடும் பனி : ஒளியைப் பாய்ச்சியபடி செல்லும் வாகனங்கள்!!

வவுனியாவில் இன்று (07.01.2024) காலை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்ட நிலையில் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் இடையூறுகளை சந்தித்திருந்தனர்.

வவுனியா நகர்ப்புறம் உட்பட அனைத்து இடங்களிலும் காலை 7.30 மணிவரை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக வேலைக்கு செல்வோர், வாகனச் சாரதிகள் எனப் பலரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.

ஏ9 வீதி உட்பட வவுனியாவில் வீதியால் சென்ற வாகனங்கள் காலை 7.30 மணிவரை ஒளியைப் பாய்ச்சியபடி சென்றதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இரவோடு இரவாக அமைக்கப்பட்ட இராணுவ முகாம்!!

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நிரந்தரமாக இராணுவ முகாம் ஒன்று இரவோடு இரவாக அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நடைபெற்றபோது புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இராணுவ காவலரணொன்று அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தது.

அதன் பின்னரும் குறித்த காவலரண் அகற்றப்படாத நிலையில் இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டிருந்தனர். இந் நிலையில் நேற்று இரவு கனரக வாகனங்கள் சகிதம் வருகை தந்த இராணுவத்தினர் குறித்த பகுதியில் நிரந்தரமாக பாரியளவிலான இராணுவ முகாம் ஒன்றை அமைத்துள்ளனர்.

இதன் காரணமாக பயணிகளும் குறித்த பகுதியில் உள்ள பொதுமக்களும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

 

இம்மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு 10 இல் 5 : யாழில் ஜனாதிபதி!!

யாழில் ..

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரசு ஊழியர்களுக்கு வழங்குவதாக சொன்ன 10′ 000 ரூபாவில் , 5’000 ரூபாவை ஜனவரி முதல் வழங்குவதாக அறிவித்துள்ளார்.2024 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.

செலுத்த வேண்டிய அனைத்து கட்டணங்களும் செலுத்தப்பட்டு விட்டதாகவும், அடுத்த நான்கு காலாண்டுகளில் பொருளாதாரத்தை வலுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மேலும் , இவ்வருட இறுதிக்குள் பொருளாதார வளர்ச்சி வீதம் 3 வீதமாக அதிகரிக்கப்படும் எனவும், 2025 ஆம் ஆண்டில் 5 வீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

இலங்கையில் கடையொன்றில் டின் மீன் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

இலங்கையில்..

கடையொன்றில் டின் மீன் கொள்வனவு செய்த நபரொருவர், ரின் மீனில் தூண்டிகொக்கி இருந்ததைகண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.வாங்கிய டின் மீனை வீட்டிற்கு திறந்து பார்த்தபோது அதனுள் தூண்டில் கொக்கி ஒன்று இருப்பதை கண்டுள்ளார்.

இந்நிலையில் ரின் மீனில் தூண்டில் கொக்கி இருப்பதை புகைப்படம் எடுத்த நபர் அதனை முகநூலில் பதிவிட்டுள்ள நிலையில் , சமூகவலைத்தளவாசிகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். உணவு பொதியிடுவோரின் அசண்டை காரணமாக இவ்வாறான சம்பங்கள் இடம்பெறுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தொடர்ச்சியாக யாழ். வடமராட்சி கிழக்கில் கரையொதுங்கும் பொருட்கள்!!

யாழில்..

சமீப காலமாக யாழ். வடமராட்சி – கிழக்கில் தொடர்ச்சியாக சந்தேகத்துக்கிடமான பொருட்கள் கரையொதுங்கி வருகின்றன.அந்தவகையில், இன்று (06.01.2024) அதிகாலையில் யாழ். வத்திராயன் கடற்பகுதியில் சந்தேகத்துக்கிடமான படகு ஒன்று கரையொதுங்கியுள்ளது.

குறித்த படகில் காணப்படும் கடற்றொழில் திணைக்களத்தின் பதிவு இலக்கம் அழிக்கப்பட்டுள்ளதால் அந்த படகை போதைப் பொருள் கடத்தல்காரர்கள் பாவித்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.இது தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மற்றும் கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவளை, வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் பௌத்த கொடியுடன் மிதப்பு ஒன்றும் நாகர்கோவில் பகுதியில் மரத்தினாலான மிதப்பு மற்றும் மூடிய கொள்கலன் ஒன்றும் கரை ஒதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் நண்பரால் போதைப்பொருள் பாவிக்க பழகிய மாணவனின் பரிதாப நிலை!!

மாத்தறையில்..

மாத்தறையிலுள்ள பிரதான பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் நேற்று முன்தினம் ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறை பொல்ஹேன பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய மாணவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட போது அவரிடம் இருந்து 60 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில், குறித்த மாணவன் கொச்சிக்கடையில் பேஸ்புக் மூலம் அறிமுகமான சப்ரான் என்ற நண்பருடன் 6 மாதங்களுக்கு முன்னர் முதல் முறையாக போதைப்பொருள் உட்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு நாளொன்றுக்கு சுமார் 50 ஆயிரம் ரூபா தேவைப்படுவதாகவும், அதற்கான பணத்தை தேடுவதற்காக புகைப்படக் கலைஞரான தனது தந்தையின் கமராவை பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

கடற்கரையில் சுற்றித் திரியும் காதலர்கள் மற்றும் மக்களைப் படம்பிடித்து விற்பனை செய்வதாக குறித்த மாணவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நோர்வேயில் பரிதாபமாக உயிரிழந்த யாழ் யுவதி!!

நோர்வேயில்..

நோர்வேயின் எல்வெரும் (Elverum) பகுதியில் இளம் தமிழ் யுவதியொருவரின் சடலம் காருக்குள்ளிருந்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி உயிரிழந்த யுவதியின் பெற்றோர் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2 ஆம் திகதி நோர்வேயின் எல்வெரும் (Elverum) என்னும் பகுதியில் முன்னாள் காதலனால் , பல் மருத்துவரான குறித்த யுவதி கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக நோர்வே பொலிஸார் கூறியுள்ளனர்.

அத்துடன் சந்தேக நபரான இளைஞரும் தற்கொலைக்கு முயன்ற நிலையில் காருக்குள்ளிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் ,அனுமதிக்கப்பட்டதை அடுத்து உயிரிழந்ததாக நோர்வே தகவல்கள் தெரிவிக்கின்றன.

குற்றம் சாட்டப்பட்ட ஆண் (32) படுகாயமடைந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவித்துள்ள பொலிஸார் , இருவருக்கும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

அதேவெளை கொலை சந்தேக நபரான இளைஞர் தொடர்பில் யுவதி, பொலிசில் முறையிட்டதை தொடர்ந்து, அவரை தொடர்பு கொள்ள இளைஞருக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் நோர்வே பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் யுவதியின் உயிரிழப்பு அங்குள்ள புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பெரும் துயரத்தினை ஏற்படுத்தியுள்ளது.

திருகோணமலை – கொழும்பு வீதியில் விபத்து : இருவர் பலி!!

கொழும்பில்..

திருகோணமலை – கொழும்பு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தானது கண்டி – திட்டவேல்மங்கட பகுதியில் நேற்று (05) மாலை இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும், வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மேலும் பேருந்துடன் மோதிய மற்றுமொரு வேன் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

விபத்தின் போது வேனில் வெளிநாட்டு பயணிகள் குழுவொன்று இருந்ததாகவும், விபத்து தொடர்பான விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொன்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

வவுனியாவில் ஐனாதிபதி வருகைக்கு எதிராக போராட்டம் மேற்கொண்டவருக்கு விளக்கமறியல்!!

வவுனியாவில் ஐனாதிபதி வருகைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றாவை எதிர்வரும் 8ம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறும் போராட்டத்தினை காணொளி எடுத்த பெண்ணிற்கு பிணை வழங்கி வவுனியா மாவட்ட நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வவுனியாவிற்குநேற்று (05.01.2024) காலை வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாநகரசபை கலாச்சார மண்டபத்தில் அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடான கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

ஜனாதிபதியின் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கலந்துரையாடல் இடம்பெற்ற மண்டபத்திற்கு செல்லும் பாதையில் வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றாவுக்கு போராட்டம் எதனையும் முன்னெடுப்பதற்கு நீதவான் நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையிலும் அவரும் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்காக நிகழ்வு இடம்பெற்ற மண்டபத்திற்குள் செல்ல முற்ப்பட்டபோது தடுத்து நிறுத்திய பொலிசார் ஜனாதிபதியை சந்திப்பதற்கு அனைவருக்கும் அனுமதி வழங்க முடியாது என்றும் ஒருவருக்கு மாத்திரம் அனுமதி வழங்கமுடியும் என்றும் தெரிவித்தனர்.

இதனை மறுத்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அனைவரையும் அனுமதிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொலிசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்ப்பட்டது.

இதனையடுத்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றா மற்றும் போராட்டத்தினை காணொளி எடுத்த மீரா ஜாஸ்மின் சார்ல்ஸ்நையஸ் ஆகிய பெண்ணும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

இக் கைது நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட இருவருக்கும் பொலிஸாருக்கிடையே தர்க்கமும் ஏற்பட்டிருந்தது. பெண் பொலிஸாரினால் இருவரும் பேருந்தில் ஏற்றப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவர் மீதும் நீதிமன்ற கட்டளையினை அவமதித்தமை, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியமை , அமைதிக்கு பங்கம் விளைவித்தமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களில் வவுனியா பொலிஸார் அவர்களை நீதிமன்றில் முன்னினைப்படுத்த போது,

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றாவை எதிர்வரும் 8ம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறும் போராட்டத்தினை காணொளி எடுத்த பெண்ணிற்கு பிணை வழங்கி வவுனியா மாவட்ட நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

50 தடவைகள் சபரிமலைக்கு யாத்திரை சென்ற 10 வயதுச் சிறுமி!!

இந்தியாவில்…

ஐயப்பசாமியை தரிசனம் செய்ய இந்தியாவுக்கு பல நாடுகளில் இருந்தும் ஐயப்ப சாமிகள் சென்றுவருகின்றனர். கார்த்திகை மாதம் என்றாலே ஐயப்ப பக்தர்கள் விரதமிருந்து சபரிமலைக்கு செல்ல தயாராகிவிடுவார்கள். அந்தவகையில், இலங்கையில் இருந்த் மட்டுமல்லாது புலம் பெயர் தேசங்களில் இருந்து பல்லரும் ஐயப்பசாமியை தரிசிக்க இந்தியா செல்வது வழமை.

ஒன்பது மாத குழந்தையாக இருந்தபோது முதல் தரிசனம்
இந்த நிலையில் 10 வயதான சிறுமியொருவர் 50 தடவைகள் சபரிமலைக்கு யாத்திரை சென்றுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் கொல்லம் மாவட்டம், ஏழுகோன் பகுதியை சேர்ந்த அதிதி என்ற சிறுமியே இவ்வாறு தனது தந்தையுடன் 50 தடவைகள் சபரிமலைக்கு யாத்திரை சென்றுள்ளார்.

குறித்த சிறுமி பிறந்து ஒன்பது மாத குழந்தையாக இருந்தபோது சபரிமலைக்கு தனது தந்தையுடன் வந்து முதன் முறையாக ஐய்யப்பனை தரிசனம் செய்துள்ளார் எனவும், அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் மாதாந்திர பூஜை மற்றும் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை காலங்களில் சபரிமலைக்கு வந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.