உலக சாதனைப்புத்தகத்தில் தனது கவித்திறனால் இடம்பிடித்து இலங்கைகக்கு பெருமைசேர்த்துள்ளார் மலையகப் பெண்னான ஷாருலதா பாலகிருஷ்ணன் என்பவர்.
இந்தியாவின் தமிழ் தொண்டன் பைந்தமிழ் சங்கம் மற்றும் நிலாவட்டம் இலக்கிய அமைப்பு ஆகியன ஏற்பாடு செய்திருந்த 100 கவிஞர்களின் தலா 100 கவிதைகள் கொண்ட “பத்தாயிரம் கவிதைகள்” அடங்கிய “கவித்தேனருவி” எனும் கவிதை தொகுப்பு நூலானது உலக சாதனை புத்தகமான கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
இந்நிகழ்வானது கடந்த (2023.11.23) ஆம் திகதி வட சென்னையில் இடம்பெற்றுள்ளது.பெண் கவிஞரான ஷாருலதா பாலகிருஷ்ணன் அவர்கள் ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.குறித்த கவிதை நூலில் மலையகத்தைச் சேர்ந்த பெண் கவிஞரான ஷாருலதா பாலகிருஷ்ணன் அவர்களின் “எண்ணத்தின் கிறுக்கல்கள்’ எனும் கவிதை நூலும் இடம்பெற்றுள்ளது.
புத்தளம் பாலாவி கற்பிட்டி பிரதான வீதியின் கரம்பை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.புத்தளம் பாலாவியிலிருந்து நுரைச்சோலைப் பகுதி நோக்கிச் சென்ற லொறியை முந்திச் செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிளொன்று எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தானது இன்று(05.01.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.விபத்தில் இராணுவ விஷேட படையணியின் சார்ஜண்ட் மேஜராக கடமையாற்றி ஓய்வுப்பெற்ற பாலாவி பொத்துவில் பகுதியைச் சேர்ந்த அனுர மங்கள குமார என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மத விரிவுரைகளை வழங்கிய ருவான் பிரசன்ன குணரத்னவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திம்புலாகலை சிறிபுர பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை விஷம் அருந்தியதால் தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறிபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபர் மற்றும் அவரது மனைவி விரிவுரைகளை வழங்கிய ருவன் பிரசன்ன குணரத்னவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டிருந்ததாகவும் நுவரகலைச் சேர்ந்த சுமார் ஐந்து பேரும் கலந்து கொண்ட நிலையில் பொலிஸ் விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் விஷம் குடித்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நபர் விரிவுரைகளில் பங்கேற்றாரா இல்லையா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.
எனினும் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பெண் பலருக்கு விரிவுரைகளை வழங்கியதுடன் மத தத்துவத்தை பரப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விரிவுரைகளை வழங்கியதாகக் கூறப்படும் ருவன் பிரசன்ன குணரத்ன, தெஹியத்தகண்டிய பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு சொந்தமான வீட்டில் சுமார் ஆறு வருடங்களாக வாடகைக்கு தங்கியிருந்தமை விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
டிசம்பர் 28ஆம் திகதி ருவன் பிரசன்ன ஒரு வகை விஷத்தை பயன்படுத்தி உயிரை மாய்த்துக் கொண்டார், இரண்டு நாட்களுக்கு பின்னர் அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளும் அதே முறையில் உயிரை மாய்த்துக் கொண்டனர்.சமய தத்துவ விரிவுரைகளை வழங்கிய ருவன் பிரசன்ன குணரத்னவின் விரிவுரைகளில் கலந்து கொண்ட பலர் பொலன்னறுவையின் பல பிரதேசங்களில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருவதாக பாதுகாப்பு புலனாய்வு அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த வான் ஒன்று விபத்துக்குள்ளான நிலையில் உயிரிழந்த தாய், மகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பத்தேகம பகுதியில் லொறி ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
இலங்கை வங்கியின் பெரகம கிளையின் உதவி முகாமையாளராக கடமையாற்றிய 30 வயதான உமேஷிகா மதுமி மற்றும் 56 வயதான அவரின் தாய் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.இவர்கள் அம்பலாந்தோட்டை பெரகம பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த மகள் கொழும்பில் இருந்து இலங்கை வங்கியின் நலன்புரி வேனில் தனது தாயை வைத்தியரிடம் அழைத்து சென்று பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளரின் கையொப்பத்துடன் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வாரியத்தின் எந்தப் பணியாளரும் எந்தக் காரணத்திற்காகவும் தனது அதிகாரப்பூர்வ அடையாளத்தையும் தகவலையும் சமூக ஊடகங்களுக்குப் பயன்படுத்த முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் வாரியத்தின் இரகசிய தகவல்களை வெளியிடுவது, தவறான அல்லது அரசியல் அவதூறு விஷயங்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவது ஆகியவை ஒழுங்கு விதிகளின்படி கடுமையான குற்றமாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.இந்த சுழற்சிக்கு முரணாக செயற்படுபவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடக்கிற்கு விஐயம் மேற்கொண்ட ஐனாதிபதி வவுனியாவிற்கு இன்று (05.01.2024) விஐயம் மேற்கொண்ட நிலையில் வவுனியா விமானப்படை தளத்தில் ஜனாதிபதி விசேட விமானத்தில் வருகை தந்து வன்னி அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துகொண்டார்.
இந்நிலையில் பாதுகாப்பு வாகனத்தொடரணி ஏற்பாடுகளை கண்டிருந்த நிலையில் அதனை இளைஞரொருவர் புகைப்படம் மற்றும் காணொளி எடுத்தமையினை அவதானித்த விமானப்படைத்தள பாதுகாப்பு உத்தியோகத்தரொருவர் குறித்த இளைஞனை கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த இளைஞன் பூனாவ பகுதியை சேர்ந்த 18வயதுடையவராவர். இவரிடம் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
வவுனியாவிற்கு இன்று (05.01.2024) காலை வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாநகரசபை கலாச்சார மண்டபத்தில் அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடான கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில் மாநகரசபை கலாச்சார மண்டபத்திற்கு ஜனாதிபதி வருகைதந்த சமயத்தில் ஜனாதிபதியின் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கலந்துரையாடல் இடம்பெற்ற மண்டபத்திற்கு செல்லும் பாதையில் வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுக்கும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டிருந்தமையுடன் பல மணிநேரமாக இரு தரப்பினருக்குமிடையே தர்க்கம் ஏற்பட்டிருந்தமையுடன் வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்காக நிகழ்வு இடம்பெற்ற மண்டபத்திற்குள் செல்ல முற்ப்பட்டனர்.
அவர்களை தடுத்து நிறுத்திய பொலிசார் ஜனாதிபதியை சந்திப்பதற்கு அனைவருக்கும் அனுமதி வழங்க முடியாது என்றும் ஒருவருக்கு மாத்திரம் அனுமதி வழங்கமுடியும் என்றும் தெரிவித்தனர்.
இதனை மறுத்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அனைவரையும் அனுமதிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொலிசாருக்கும் போராட்டக்காறர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்ப்பட்டது.
இதனையடுத்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றா மற்றும் போராட்டத்தினை காணொளி எடுத்த மீரா ஜாஸ்மின் சார்ல்ஸ்நையஸ் ஆகிய பெண்ணும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
இக் கைது நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட இருவருக்கும் பொலிஸாருக்கிடையே தர்க்கமும் ஏற்பட்டிருந்தது. பெண் பொலிஸாரினால் இருவரும் பேருந்தில் ஏற்றப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை கைதுசெய்யப்பட்டிருந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றாவுக்கு இன்றையதினம் போராட்டம் எதனையும் முன்னெடுப்பதற்கு நீதவான் நீதிமன்றம் தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கைது செய்யப்பட்ட இருவர் மீதும் நீதிமன்ற கட்டளையினை அவமதித்தமை, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியமை, அமைதிக்கு பங்கம் விளைவித்தமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையுடன் கைது செய்யப்பட்ட இருவரையும் மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தம்பதியினரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெற்று வருவதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்து தம்பதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் போது 15 லீற்றர் கசிப்பினைக் கைப்பற்றியுள்ள பொலிஸார், இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை இளைஞன் ஒருவர் ஓமானில் கடந்த 6 மாதங்களாக குப்பைமேட்டில் வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.குறித்த இலங்கையர் ஓமானில் உள்ள குப்பை மேட்டில் உடைந்த லொரியில் ஆறு மாதங்களாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஹொரணையை சேர்ந்த புலஸ்தி சானக என்ற இந்த இளைஞன் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி கும்பலிடம் சிக்கி 10 லட்சம் ரூபாவை கொடுத்து சுற்றுலா விசாவில் ஓமானுக்கு வேலைக்கு சென்றுள்ளார்.பணத்தை பெற்றுக்கொண்ட பின்னர் அந்த இளைஞன் உட்பட பெருமளவிலான இளைஞர்கள் ஓமன் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு கைவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
அதேவேளை கடத்தல்காரர்களிடம் சிக்கிய ஏனைய இலங்கை இளைஞர்கள் ஓமானில் பல்வேறு இடங்களில் அவதிப்பட்டு வருவதாக புலஸ்தி சானக தெரிவித்தார்.
ஓமன் நாட்டில் பல இடங்களில் தங்கி இருந்தும், 6 மாதங்களாக குப்பை கிடங்கில் நிறுத்தப்பட்ட உடைந்த லொரியில் தான் வாழ்ந்து வருவதாகவும், பிஸ்கட், தண்ணீர் போத்தல்கள் தான் தன்னை காப்பாற்றி வருவதாகவும் மிகுந்த வேதனையுடன் கூறினார்.
எனினும் இது தொடர்பில் இலங்கை தூதரகத்திற்கு தெரிவித்தும் இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை எனவும், பல மாதங்களாக வயிற்றில் ஒரு சோறு கூட இல்லாமல் தவிப்பதாகவும் முடிந்தவரை ஓமானில் உள்ள யாராவது தமக்கு உதவுமாறும் புலசத்தி கோருவதுடன், தன்னை இலங்கைக்கு இதிப்பி அழைத்து வர யாராவது உதவி செய்யுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
சந்தையில் மீன்களின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காலநிலை மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பே இதற்கு காரணம் என்றும் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி சந்தைகளில் கெளவல்ல மீன் 2400 முதல் 2600 ரூபா வரையிலும், தலபத் மீன் 3200 முதல் 3400 ரூபா வரையிலும், சால மீன் 650 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
யாழ்ப்பாணம் உடுத்துறை கடற்கரையில் மர்மப் பொருளொன்று கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வடமராட்சி கிழக்கு உடுத்துறை ஒன்பதாம் வட்டாரம் அரசடி முருகன் கோவிலடியிலையே இந்த மர்ம பொருள் கரையொதுங்கியுள்ளது.
குறித்த பொருளில் Asia 2 என பெயரிடப்பட்டுள்ளதாகவும் கப்பலில் இருந்து தவறி விழுந்து கரையொதுங்கியிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்படுகின்றது.
மேலும், கரையொதுங்கிய குறித்த பொருளை பொதுமக்கள் அதிகளவானோர் பார்வையிட்டு வருவதுடன் பொலிஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைய நாட்களாக உடுத்துறை வேம்படி, நாகர்கோவில், உடுத்துறை என பல்வேறு விதமான மர்ம பொருட்கள் கரையொதுங்கியமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் குருந்துகஹாதெக்ம பகுதியில் லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்றைய தினம் இரவு இடம்பெற்ற குறித்த விபத்தில் தாயும் மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.வானில் பயணித்த தாய் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மகள் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர்கள் அம்பலாந்தோட்டை பகுதியை சேர்ந்த 57 வயதுடைய பெண்ணும் அவரது 31 வயது மகளும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் பரவுவதால் பொது மக்களை அவதானமாக இருக்குமாறு சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் தற்பொழுது எலிக்காய்ச்சல் அதிகளவாக பரவுவதனால் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இக் காய்ச்சலானது எலிகளில் இருந்து மனிதனுக்குப்ப பரவும் ஒருவகை பக்ரீறியா நோய் ஆகும்.
ஈரமான, சேறு நிறைந்த இடங்களில் வேலை செய்பவர்கள் அல்லது வயல்களில் வேலை செய்வோர் தங்கள் கால்களில் காயங்கள் அல்லது தோல் நோய்கள் இருப்பின் அவதானமாக இருத்தல் வேண்டும்.தற்போது பலர் எலிக்காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, காயச்சல், தலைவலி, உடல் வலி என்பன ஏற்படின் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெறவும். குறிப்பாக அண்மையில் வவுனியா, செட்டிகுளம், முகத்தான்குளத்தை சேர்ந்த பிரசங்கர் என்ற 22 வயது இளைஞன் எலிக்காய்ச்சல் காரணமாக மரணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒரு வயதுக் குழந்தையின் தாயை கழுத்தறுத்துக் கொன்ற தந்தை பின்னர் ரயில் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இத்துடன் இரவெல்லாம் தாயின் சடலத்துடன் வீறிட்டு அழுதபடி கிடந்த குழந்தை குறித்தான அவலம் குருகிராமில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்திரப்பிரதேசம்மாநிலம் காசியாபாத் பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க நபர் ரயில் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். நேற்று நேரிட்ட இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், முன்னதாக அந்த நபர் தனது மனைவியை கொன்றுவிட்டு தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து அந்த நபரின் வீட்டை அடைந்த போலீஸார், கழுத்து அறுபட்டு சடலமாக கிடந்த பெண்ணையும், அதன் அருகே அழுதபடி இருந்த ஒரு வயது குழந்தையையும் மீட்டனர்.
ஆக்ராவை சேர்ந்தவர் கவுரவ் சர்மா. ஆறு மாதம் முன்பாக மனைவி லட்சுமி ராவத் மற்றும் ஆண் குழந்தையுடன் குருகிராமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்தனர்.
இதற்கு அப்பால் இந்த தம்பதியர் குறித்து அக்கம்பக்கம் வசிப்போர் அதிகம் தெரிந்திருக்கவில்லை. புத்தாண்டு கொண்டாட்டத்தில் நகரம் ஆழ்ந்திருந்தபோது, கவுரவ் சர்மா வீட்டில் பயங்கரம் அரங்கேறி இருக்கிறது.
மனைவி லட்சுமி ராவத் தலையில் செங்கல்லால் தாக்கப்பட்டும், கூரிய ஆயுதத்தால் கழுத்து அறுக்கப்பட்டும் கொல்லப்பட்டுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடக்கும் தாயின் சடலத்தின் அருகே அவரது ஒரு வயது மகன் இரவெல்லாம் அழுதபடி இருந்துள்ளான்.
அவனது தலையிலும் செங்கல்லால் தாக்கிய சிறு காயம் தென்பட்டுள்ளது. மனைவியை கொன்ற கவுரவ் சர்மா, மகனைக் கொல்லும் முயற்சியில் பின்னர் அதனை கைவிட்டதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
மனைவியை கொன்றதும், ஒரு வயது குழந்தையையும் அங்கேயே தவிக்கவிட்டு நள்ளிரவில் வீட்டைவிட்டு வெளியேறிய கவுரவ் சர்மா, கவுசாம்பி மெட்ரோ ரயில் நிலையம் அருகே பதுங்கி இருந்துள்ளார். காலையில் பயணிகள் நடமாட்டம் அதிகரித்ததும் அங்கிருந்து வெளிப்பட்டவர் முதலாவது பிளாட்பாரத்துக்கு விரைந்துள்ளார்.
வைஷாலி நோக்கி விரையும் ரயில் அருகில் வந்ததும், தண்டவாளத்தில் குதித்து தற்கொலை செய்திருக்கிறார். இவை அனைத்தும் மெட்ரோ ரயில் நிலைய சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளன. கவுரவ் சர்மா, லட்சுமி ராவத் தம்பதியின் உடலை கைப்பற்றி இருக்கும் போலீஸார், கொலை – தற்கொலை சம்பவங்களின் பின்னணி குறித்து விசாரித்து வருகின்றனர்.
சேலத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட தகராறில் கிணற்றில் குதித்த மனைவியை காப்பாற்ற சென்ற கணவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் துக்கியாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அருள் முருகன் (31) என்பவருக்கும் அபிராமி (19) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
அருள் முருகன் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். அருள் முருகனுக்கு குடி பழக்கம் உள்ளதால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வாடிக்கையாகியுள்ளது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு, தம்பதி இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. கோபத்தில் அருள் முருகன் மனைவி அபிராமியை அடித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அபிராமி அங்குள்ள விவசாய கிணற்றில் குதித்துள்ளார். இதனை பார்த்த அருள் முருகன் அவரை காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்துள்ளார். போதையில் இருந்ததால் அருள் முருகனால் மனைவி அபிராமியை காப்பாற்ற முடியாத சூழலில் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், அவர்கள் தீயணைப்பு துறையினருடன் வந்து நள்ளிரவு முதல் இருவரது உடலை தேடிய நிலையில், அதிகாலையில் மீட்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருமணம் முடிந்து 3 மாதங்களே ஆகும் நிலையில், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்றைய நவீன உலகில் சமூக வலைத்தளங்களானது நம்மில் பல பேர் தவறாமல் பயன்படுத்தக்கூடிய ஒன்றாகும். சாப்பாடு மற்றும் தூக்கத்தை விட இந்த சமூக வலைத்தளமானது முக்கியமானதாக திகழ்கிறது, அதுவும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் இதன் வளர்ச்சி அபரிதமாக இருந்தது.
பலரும் யூடியூப் சேனல்கள் தொடங்கி மாதந்தோறும் லட்சங்களில் சம்பாதித்து வருகின்றனர். எதற்கெடுத்தாலும் யூடியூப் வீடியோ என அனைத்துவிதமான வீடியோக்களையும் பதிவேற்றம் செய்கின்றனர்.
அவ்வாறு சமையல் வீடியோக்கள் மூலம் பெண் ஒருவர் மாதம் லட்ச ரூபாய் வருமானமாக பெறுகிறார் என்றால் நம்பமுடிகிறதா? ஆம், நிஷா மதுலிகா என்கிற பெண் அவர்களது வீடியோக்கள் மூலம் லட்சக்கணக்கான subscriberகளை பெற்று நன்கு சம்பாதித்து வருகிறார்.
தனது ஓய்வுகாலத்திலும் ஓய்வு எடுக்காமல் அந்த நேரத்தையும் பயனுள்ளதாக செலவழித்து வருகிறார். நடுத்தர குடும்பத்தில் பிறந்து தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்ததும் தொழில்முனைவோரான எம்.எஸ். குப்தாவை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஆரம்பகாலத்தில் ஆசிரியர் பணியாற்றிய இவர் பின்பு அவரது கணவர் தொழிலின் நிதியை கையாண்டு வந்தார். குடும்பத்துடன் நொய்டாவிற்கு மாறியபோது இந்த வேலையை மேற்கொள்வது கடினமாக இருந்ததால் இதை விட்டுவிட்டார்.
கணவர் அலுவலகத்துக்கு சென்றதும் சுமார் 6 மணி நேரம் வீட்டில் சும்மா இருப்பதை வெறுத்த இவர் ஏதாவது பயனுள்ளதாக செய்யவேண்டும் என்று விரும்பினார். நிஷா மதுலிகா 2007ஆம் ஆண்டில் சமையல் தொடர்பான பதிவுகளை எழுதி வெளியிட தொடங்கினார்.
இதில் பெரும்பாலானவை அவரது அம்மாவிடம் இருந்து கற்றுகொண்டவையே, இதை எழுத தொடங்கியபோது இவருக்கு 54 வயதாகும். இவரது மகன்களும், கணவருமே இணையத்தளங்களை உருவாக்க முற்றிலும் உதவினர். இவரது குறிப்புகளானது பெருமளவில் வரவேற்கப்பட்டதால், இவரை வீடியோ பதிவாக வெளியிடுமாறு கேட்டனர்.
2011 ஆம் ஆண்டில் தனது யூடியூப் channel ஐ ஆரம்பித்து 2200 வீடியோக்களை வெளியேற்றினார். சமையல் வீடியோக்களை வெளியிடுவோர்களில் மிகவும் பிரபலமான ஒருவராக நிஷா மதுலிகா உள்ளார்.
ஓய்வில் இருப்பதை நினைத்து வருந்திய இவர் தற்போது சற்றுக்கூட உட்கார இயலாத அளவிற்கு தன்னுடைய 64 வயதிலும் கடுமையாக உழைப்பது மட்டுமின்றி எல்லாருக்கும் முன்னுதாரணமாகவும் திகழ்கிறார்.
இவரது யூடியூப் channelக்கு 1.4 கோடிக்கும் மேற்பட்ட subscriberகள் உள்ளனர், லட்சக்கணக்கில் வருமான ஈட்டும் இவரது சொத்துமதிப்பானது ரூ.29 என்று மதிப்பிட்டுள்ளது.