அரைகுறையாக ஆடை அணிந்த பெண்ணை கொலை செய்த கணவன் : திருமணமான 6 மாதத்தில் நடந்த சோகம்!!

கர்நாடகாவில்..

இளம்பெண் ஜோதிக்கு வாழ்வில் நேர்ந்த கொடூரம் வேறு எந்த பெண்ணுக்கும் நேர கூடாது. எதிர்காலம் குறித்தும், வாழ்க்கை குறித்தும் எத்தனையோ கனவுகளுடன் திருமணம் செய்து கொண்ட இளம்பெண்ணின் வாழ்வில் அத்தனைப் பெரிய துன்பம் நேர்ந்து, அதிர்ச்சியளித்துள்ளது.

திருமணமான ஆறே மாதங்களில், புது மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் படுகொலை செய்துள்ள சம்பவம் பெங்களூரு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், பெங்களூரு ஹாசன் மாவட்டத்தில், ராம்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவன் (25).

ரெடிமேட் ஆடை தொழிற்சாலையில் ஒன்றில் பணிபுரிந்து வரும் ஜீவன், அதே தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த ஜோதி (22) எனும் இளம்பெண்ணைக் காதலித்து வந்தார். இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, பெற்றோர்கள் சம்மதத்துடன் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், சிறுவயதில் இருந்தே மாடர்ன் பெண்ணாக வலம் வந்த ஜோதி, தனது உடைகளையும் நவயுக யுவதியைப் போல அல்ட்ரா மார்டனாக அணிந்து வந்துள்ளார். திருமணத்திற்குப் பின்னரும் இப்படி அரைகுறையாக உடை அணிவதை, ஜீவனின் பெற்றோர் குற்றச்சாட்டாக, தங்கள் மகனிடம் குறை கூறியுள்ளனர்.

இதையடுத்து ஜோதியிடம் இப்படி உடல் பாகங்கள் தெரியும்படி அரைகுறையாக உடை அணியாதே என்று ஜீவன் கண்டித்துள்ளார். ஆனால், அதைப்பற்றி கவலைப்படாமல் ஜோதி, தொடர்ந்து அரைகுறையாகவே உடை அணிந்து வந்துள்ளார்.

இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ஜோதி வெளியே செல்லும் போது அரைகுறை உடை அணிந்திருந்ததாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த ஜீவன், தனது மனைவி ஜோதியைக் கண்டித்துள்ளார். ஆனாலும் இதை ஜோதி கேட்கவில்லை.

இதையடுத்து ஜோதியை தனது பைக்கில் அழைத்துச் சென்று விடுவதாக ஜீவன் அழைத்துச் சென்றுள்ளார். கணவன் சமாதானமாகி, ஆசையாக அழைக்கிறார் என்று நம்பி பைக்கில் ஜோதி சென்றுள்ளார்.

ஆனால்,ஜோதியை அங்குள்ள வனப்பகுதிக்கு பைக்கில் ஜீவன் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஜோதியை அவர் தாக்கியுள்ளார். அத்துடன் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜோதியின் கழுத்தை அறுத்தார். இதில் சம்பவ இடத்திலேயே ஜோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து அங்கிருந்து ஜீவன் தப்பியோடி விட்டார். இதுகுறித்த தகவல் அறிந்ததும் அரிசிகெரே புறநகர் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சென்று ஜோதியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், அரைகுறையாக ஆடை அணிந்ததால் அந்த ஆத்திரத்தில் காதல் ஜோதியை, அவரது கணவர் ஜீவன் கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஜீவனை தேடி வருகின்றனர். திருமணமான ஆறே மாதங்களில் காதல் மனைவியை கணவன் கழுத்தை அறுத்துப் படுகொலை செய்த சம்பவம், ஹாசன் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போட்டோ ஷூட் எடுக்க பெற்றோர் எதிர்ப்பு… பிபிஏ மாணவி விபரீத முடிவு.!!

கர்நாடகாவில்..

மாலில் போட்டோ ஷூட்டுக்குச் செல்ல பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டில் மின்விசியில் பிபிஏ மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள சுதாநகரைச் சேர்ந்தவர் வர்ஷினி(21). இவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் வர்ஷினி, பிபிஏ படித்து வந்தார்.

பெங்களூருவில் உள்ள ஒரு மாலில் போட்டோ ஷூட்டுக்குச் செல்ல வேண்டும் என்று தனது பெற்றோரிடம், வர்ஷினி நேற்று அனுமதி கேட்டார். ஆனால், மாலில் போட்டோ ஷூட்டுக்கு அனுப்ப அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வர்ஷினி மனவருத்தம் அடைந்துள்ளார்.

இந்நிலையில் இன்று வர்ஷினி அறைக்கு அவர் தாய் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த மின்விசியில் தூக்கிட்டு வர்ஷினி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதனால் அவர் கதறி அழுதார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வில்சன் கார்டன் போலீஸார் விரைந்து வந்து வர்ஷினியின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து பெங்களூரு மத்தியப் பிரிவு காவல் துறை துணை ஆணையர் சேகர் கூறுகையில், ” பெங்களூரில் உள்ள ஒரு மாலில் போட்டோ ஷூட் செய்ய பெற்றோரிடம் வர்ஷினி அனுமதி கேட்டுள்ளார். போட்டோஷூட்டுக்காக மாலுக்குச் செல்ல அவரது பெற்றோர் அனுமதிக்கவில்லை.

இதன் காரணமாக வர்ஷினி நேற்று இரவு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது” என்றார். போட்டோ ஷூட்டுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் பிபிஏ மாணவி தற்கொலை செய்த சம்பவம் பெங்களூருவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட் விளையாடிய மாணவன் மயங்கி விழுந்து மரணம்.. தண்ணீர் குடித்ததும் நேர்ந்த சோகம்!!

உத்தர பிரதேசத்தில்..

இளம் வயதினரிடையேயான மாரடைப்பு மரணங்கள் சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக 20 வயதைத் தாண்டாதவர்களிடையேயும், உடற்பயிற்சி செய்பவர்கள், விளையாடி வரும் விளையாட்டு வீரர்களிடையே மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து வருகிறது.

17 வயதேயான மாணவன், உத்தர பிரதேச மாநிலத்தில் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி விட்டு, தண்ணீர் குடித்ததும், மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் ஹஸன்பூர் அருகே உள்ள காயஸ்தான் பகுதியைச் சேர்ந்தவர் ராஜீவ் சைனி. இவர், இ-ரிக்ஷா ஓட்டி வருகிறார். இவரது மனைவி சவிதாதேவி. இந்த தம்பதியினரின் மகன் பிரின்ஸ் சைனி (17). இவர், அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று பள்ளி விடுமுறை என்பதால் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி உள்ளார். கிரிக்கெட் விளையாடிவிட்டு சிறுவன் குளிர்ந்த நீரை அருந்திய நிலையில் உடனே மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சைனியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறி அதிர்ச்சி அளித்துள்ளனர்.

இதற்கிடையில் சிறுவன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலில் மூழ்கிய மகளை காப்பாற்ற முயன்று அடுத்தடுத்து 4 பேர் பலியான சோகம்!!

சென்னையில்..

கடலில் மூழ்கிய மகளைக் காப்பாற்ற முயற்சி செய்த நிலையில், அடுத்தடுத்து கடலில் மூழ்கி 4 பேர் பலியான சம்பவம் ஈசிஆர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, தியாகராய நகரைச் சேர்ந்தவர் சிவதாணு (46 ). இவர் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது அலுவலகத்தில் 20 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

புத்தாண்டை கொண்டாடும் வகையில் ஊழியர்கள் அனைவரும் நேற்று முன்தினம் கிழக்கு கடற்கரை சாலையில் கானாத்தூரில் உள்ள ஒரு ரிசார்ட்டுக்கு சென்று தங்கினர். சிவதாணு தனது 19 வயதான மகள் நிவேதிதாவையும் அங்கு அழைத்து சென்றார்.

அங்கு அவா்களில் 9 பேர், கடலில் குளிக்க தடை செய்யப்பட்ட பகுதியில் மாலையில் குளித்தனா். அப்போது பெரிய அலையில் 9 பேரும் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனா்.

நீச்சல் தெரியாத அவா்களின் அலறல் சப்தத்தைக் கேட்ட, கரையில் இருந்த சிவதாணு, தனது மகள் நிவேதிதாவை காப்பாற்றுவதற்காக கடலுக்குள் சென்றாா். ஆனால் அவரும் அலையில் சிக்கி உள்ளே இழுத்துச் செல்லப்பட்டாா்.

அவா்களை மீட்கும் முயற்சியில் அங்கிருந்த பொதுமக்களும், மீனவா்களும் ஈடுபட்டனா். இதில் 4 பேரை பாதுகாப்பாக மீட்டு, கரைக்கு கொண்டு வந்தனா். திருவல்லிக்கேணி சிஎன்கே சாலைப் பகுதியைச் சோ்ந்த சு.பிரசாந்த் (18), துரைப்பாக்கம் பாா்த்தசாரதி தெருவைச் சோ்ந்த ஜெ.மானஸ் (18), நவீன் (26), நிவேதிதா ஆகியோா் தண்ணீரில் மூழ்கியதால், உடனடியாக மீட்க முடியவில்லை.

சிறிது நேர தேடுதலுக்கு பின்னா் நிவேதிதா, உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு பெரும்பாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அதே வேளையில் சடலமாக சிவதாணு, நவீன் ஆகிய 2 பேரும் மீட்கப்பட்டனா். இருவா் சடலங்களையும் கானத்தூா் போலீசார், பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னர் கடலில் மூழ்கி காணாமல்போன பிரசாந்த், மானஸை போலீசார், கடலோர பாதுகாப்பு குழுமத்தினா், கடலோர காவல் படையினா் உதவியுடன் திருவான்மியூா் தொடங்கி மாமல்லபுரம் வரையில் இரவு முழுவதும் படகில் தேடினா்.

மேலும் கடலோரக் காவல் படையினா் ஹெலிகாப்டா் மூலம் சனிக்கிழமை தேடுதல் பணி நடைபெற்றது. இதில் முட்டுக்காடு கடல் பகுதியில் மிதந்த பிரசாந்த் சடலம் மீட்கப்பட்டது. முட்டுக்காடு எம்.ஜி.எம். கடற்கரையோரம் மானஸ் சடலம் ஒதுங்கியது. இந்த சம்பவம் தொடா்பாக கானத்தூா் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

மானஸ், பிரசாந்த் சென்னையில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரில் பி.இ. முதலாமாண்டு படித்து வந்தனா். இவா்கள் பகுதி நேர பணியாளா்களாக பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மனைவி, 3 மூன்று மகள்களை கொன்று தந்தையும் தற்கொலை செய்த சோகம்!!

குண்டூரில்..

கடன் தொல்லை காரணமாக மனைவி மற்றும் மூன்று மகள்களை கொன்றுவிட்டு கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது… ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள தெனாலி பகுதியை சேர்ந்தவர் சிவராமகிருஷ்ணா (42), தங்க நகைகள் தயாரிப்பவர்.

இவரது மனைவி மாதவி (38). இவர்களது மகள்கள் வைஷ்ணவி (16), லட்சுமி (13), குசுமபிரியா (9). சிவராமகிருஷ்ணா எந்த தொழிலும் இல்லாததாலும், பலரிடம் கடன் வாங்கியதாலும் குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்து வருகிறார். கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாமல் தவித்து வருகிறார்.

இந்த நிலையில், கடன் கொடுத்தவர்கள் பலர் பணத்தை திரும்பக் கேட்டுள்ளனர். இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊரை விட்டு வெளியேறிய சிவராமகிருஷ்ணா, அனகப்பள்ளி பகுதி அருகே வாடகை வீட்டில் தங்கினார். இருப்பினும், கடன் கொடுத்தவர்கள் அங்கேயும் பணம் கேட்டு நச்சரித்துள்ளனர்.

இதனால் சிவராமகிருஷ்ணா மிகுந்த வருத்தம் அடைந்தார். 3 மகள்களுடன் எப்படி வாழப் போகிறோம்? என மனைவி மாதவியிடம் அவ்வப்போது கூறியபடி குழம்பினான்.

இந்நிலையில், நேற்று முன்தினம், கடன் கொடுத்தவர்கள் வீடு தேடி வந்ததால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான சிவராமகிருஷ்ணா, தற்கொலை செய்து கொள்ளலாம் என, மனைவியிடம் கூறியுள்ளார்.

“நாங்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டால், எங்கள் மகள்கள் அனாதைகளாகி விடுவார்கள்,” என, மனைவி சமரசம் செய்தார்.ஆனால், அதை ஏற்க மறுத்த சிவராமகிருஷ்ணா, மனைவி மற்றும் மகள்களை கொன்று தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

அதன்படி நேற்று இரவு விஷம் வாங்கிகொண்டு வீடு திரும்பினார். யாருக்கும் தெரியாமல் உணவில் கலந்து கொடுத்தார். இது தெரியாமல் மனைவி, மகள்கள் சாப்பிட்டுள்ளனர். மனைவி மற்றும் மகள்கள் தன் கண் முன்னே விஷம் கலந்த உணவை சாப்பிடுவதை கண்டு சிவராமகிருஷ்ணா கஷ்டப்பட்டுள்ளார். பிறகு அந்த உணவையும் சாப்பிட்டார்.

சிறிது நேரத்தில் அனைவரும் மயங்கி விழுந்தனர். சிவராமகிருஷ்ணா, மனைவி மாதவி, மகள்கள் வைஷ்ணவி, லட்சுமி ஆகியோர் படுக்கையிலேயே ஒருவர் பின் ஒருவராக இறந்தனர். தாய், தந்தை, சகோதரிகள் இறந்ததை பார்த்து 3வது மகள் குசுமபிரியா கதறி அழுதார்.

சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் குசுமப்பிரியாவை மீட்டு அனகப்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த அனகப்பள்ளி போலீஸார் வழக்குப் பதிந்து, சடலங்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அடுத்தடுத்து 4 பேரை திருமணம் செய்து அதிர்ச்சி கொடுத்த இளம்பெண்.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி!!

கர்நாடகாவில்..

அடுத்தடுத்து 4 பேரைத் திருமணம் செய்து இளம்பெண் அதிர்ச்சியளித்து மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் ஏற்கனவே 2 திருமணங்கள் நடந்ததை மறைத்து விட்டு, தன்னை 3வதாக திருமணம் செய்து ஏமாற்றிய இளம்பெண், தற்போது 4வது திருமணம் செய்துள்ளதாக இளைஞர் ஒருவர் போலீசில் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இது குறித்து விசாரணையில் இறங்கிய போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கர்நாடகா மாநிலம் தாவணகெரே பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவர் கடந்த 2022-ம் ஆண்டு மண்டியா மாவட்டத்தில் உள்ள நரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த நிர்மலா என்ற சினேகா என்பவரை திருமணம் செய்துள்ளார்.

நன்றாக இருந்த அவரது குடும்பத்தில், மூன்று மாதங்களுக்குத் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி தனது பெற்றோர் வீட்டிற்கு சினேகா சென்றுள்ளார். இதன் பின் அவர் காணாமல் போனார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ரகு என்பவரை தனது மனைவி சினேகா திருமணம் செய்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தாவணகெரேவில் உள்ள கேடிஜே நகர் காவல் நிலையத்தில் கடந்த 21-ம் தேதி தனது மனைவி காணாமல் போனதாக பிரசாந்த் புகார் செய்தார்.

இதுகுறித்து பிரசாந்த் கூறுகையில். “எனது மனைவி சினேகா கர்ப்பமாக இருப்பதாகக் கூறி அவரது பெற்றோர் வீட்டிற்குச் சென்றார். கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டு குழந்தையை கலைத்துவிட்டு, எனக்கு தெரிவிக்காமல் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

எங்களுக்கு திருமணமாகி ஒன்றரை வருடங்களாவதால் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். அவரது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பார்த்த பிறகு தான் அவரது புதிய திருமணம் பற்றி அறிந்தேன். சமூக வலைதளங்களில் அவரைச் சந்தித்த பிறகு அவர் மீது காதல் கொண்டு திருமணம் செய்தேன்.

எனக்கு முன் இரண்டு ஆண்களை மணந்ததால் என் மனைவிக்கு நான் மூன்றாவது கணவன். தற்போது வேறு ஒருவரை திருமணம் செய்துள்ளார். நான் அவளை திருமணம் செய்யும் போது அவள் குடும்பத்தில் இருந்து யாரும் என்னிடம் அவள் முந்தைய திருமணங்களைப் பற்றி கூறவில்லை.

எதிர்காலத்தில் மற்ற ஆண்களை ஏமாற்றாமல் இருக்க சினேகா மீது மோசடி புகார் கூறியுள்ளேன்” என்றார். தற்போது பெங்களூரில் வசிக்கும் ரகு என்பவரை சினேகா நான்காவது திருமணம் செய்துள்ளார்.

இந்த நிலையில், அவரது மூன்றாவது கணவர் பிரசாந்த் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக உள்ள சினேகா, வீடியோக்களில் அதில் பதிவேற்றம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கைபேசியை பயன்படுத்தியதால் ஆத்திரமடைந்த மனைவி.. கணவனின் கண்ணைக் கத்திரிக்கோலால் குத்திய கொடூரம்!!

உத்தரபிரதேசத்தில்..

கணவனை மொபைல் போன் பயன்படுத்துவதை தடுத்த கணவனை கத்தரிக்கோலால் குத்தினாள் பாதிக்கப்பட்டவரின் கணவர் தனது மனைவி மீது புகார் அளித்து நடவடிக்கை எடுக்கக் கோரினார்.

உத்தரபிரதேச மாநிலம் பாக்பத்தில், இளம் மனைவி ஒருவர் தனது கணவரை மொபைல் போன் பயன்படுத்த விடாமல் தடுத்தபோது அவரது கண்களில் கத்தியால் குத்தியுள்ளார். கணவருக்கு கத்திரியால் பலத்த காயம் ஏற்பட்டது.

சம்பவத்தையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் காவல்நிலையத்திற்கு வந்து தனது மனைவி மீது புகார் அளித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரினார். மனைவி கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தியதாகவும், அதனைத் தடுத்தபோது, ​​கோபமடைந்த அவர், வீட்டில் வைத்திருந்த கத்தரிக்கோலை எடுத்து தனது கண்ணில் குத்தியதாகவும் கணவர் குற்றஞ்சாட்டியுள்ளார். கண்ணில் ஏற்பட்ட காயத்திற்காக அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதே சம்பவம் குறித்து பராட் சிஓ சவிரத்னா கவுதம் கூறுகையில், கணவன்-மனைவி இடையே மொபைல் போன் பயன்படுத்துவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பின் மனைவி கணவரின் கண்களில் கத்திரிக்கோலால் அடித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். உண்மையில், பாரௌத்தில் வசிக்கும் அன்கித் (28) என்பவர் ரமலா காவல் நிலையப் பகுதியின் சூப் கிராமத்தில் வசிக்கும் பெண்ணை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்து சில நாட்கள் எல்லாம் நல்லபடியாக நடந்தாலும் கடந்த ஒன்றரை வருடங்களாக கணவன்-மனைவிக்கு இடையே ஏதாவது ஒரு பிரச்னையில் தகராறு, சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு வந்துள்ளது. இன்றும் அதேதான் நடந்தது.

அங்கித் தனது மனைவியை மொபைலைப் பயன்படுத்துவதைத் தடுத்ததும், அவள் கோபமடைந்து அறைக்குள் சென்றாள். சிறிது நேரம் கழித்து, அவள் கத்தரிக்கோலை எடுத்து கட்டிலில் அமர்ந்திருந்த கணவன் அங்கித்தின் கண்களில் குத்தினாள். இதனால் அங்கித் ரத்தம் கசிந்து தரையில் விழுந்தார்.

சத்தம் கேட்டு அந்த இளைஞனின் அண்ணியும், மருமகனும் ஓடி வந்தனர். அதன் பிறகு பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு சிகிச்சைக்குப் பிறகு அவர் வழக்கு பதிவு செய்தார். தற்போது இது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

திருமணத்திற்கு பிறகும் காதலனுடன் பேசி வந்த மகள்.. ஆத்திரத்தில் கொடூரமாக எரித்து கொன்ற தந்தை!!

கர்நாடகாவில்…

திருமணத்திற்கு பிறகும் காதலனுடன் பேசி வந்த மகளை தந்தையே கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடக மாநிலம் கோலார் அருகே உள்ள முஸ்துரு கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி.

இவர் அந்த பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் அர்பிதா கல்லூரி படிப்பை முடித்து வீட்டில் இருந்தபோது, ​​பக்கத்து கிராமத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட சாதி இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த ரவி தனது மகளைக் கண்டித்து தனது உறவினர் மகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

ஆனால் திருமணம் முடிந்து மணமகன் வீட்டிற்கு சென்ற பிறகும் அந்த இளைஞனிடம் அர்பிதா பேசி வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணமகன் வீட்டார் அர்பிதாவை அவரது தந்தை வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த ரவி கடந்த மே மாதம் அர்பிதாவை மறவேமன கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்று கை, கால்களை கட்டி வைக்கோல் இடையே எரித்து கொன்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, தனது மகள் காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரை விசாரிக்கும் போது நேற்று போலீஸ் நிலையத்திற்கு ஒரு கடிதம் கிடைத்தது. அந்த கடிதத்தில் அர்பிதாவை தந்தை ரவி கொன்றதாக குறிப்பிடப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ரவி மீது போலீசார் கவனம் திரும்ப, போலீசார் அவரை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, ​​தனது மகள் அர்பிதாவை கொலை செய்ததை ரவி ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து ரவியை போலீசார் கைது செய்தனர். மகளைக் கொன்ற தந்தை 6 மாதங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளம்பெண்ணை கார் ஏற்றி கொலை செய்த தொழிலதிபர் : CCTV காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி!!

ஜெய்பூரில்..

இளம்பெண் ஒருவரை கார் ஏற்றி கொலை செய்த தொழிலதிபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் உமா சுதர். இவர் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் நிகழ்வு ஒருங்கிணைப்பாளராகபணியாற்றி வந்தார்.

இவர் தனது நண்பர் ராஜ் குமார் ஜஜாரியா என்பவரோடு நேற்று முன்தினம் இரவு நைட் கிளப்புக்குச் சென்றுள்ளார். அதே கிளப்க்கு மங்கேஷ் அரோரா என்ற தொழிலதிபர் தனது காதலியான ரிக்கி என்பவரோடு வந்துள்ளார்.

அங்கு அவர்கள் இருந்தபோது மங்கேஷ் அரோரா உமா சுதரை நோக்கி ஆபாசமாக வார்த்தை கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த உமா சுதர் மற்றும் அவரின் நண்பர் ஆகியோர் மங்கேஷ் அரோராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடருக்கு இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. அதன் பின்னர் கிளப் ஊழியர்கள் இரு தரப்பினரையும் வெளியே அனுப்பியுள்ளனர். வெளியே வந்தும் வாக்குவாதம் தொடர்ந்த நிலையில், மங்கேஷ் அரோரா தனது காதலியுடன் தனது காரில் ஏறி அங்கிருந்து கிளம்ப முயன்றுள்ளார்.

அப்போது அவர்கள் காருக்கு முன்சென்று ராஜ் குமார் மற்றும் உமா சுதர் ஆகியோர் அவர்களை தடுத்து நிறுத்த முயற்சி செய்துள்ளனர். அப்போது காரை நிறுத்தாமல் மங்கேஷ் அரோரா அவர்கள் மேல் காரை ஏற்றியுள்ளார்.

இதில் உமா சுதர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ராஜ் குமாரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனிடையே இது குறித்து வழக்கு பதிவு செய்த போலிஸார் மங்கேஷ் அரோராவை கைது செய்தனர். இதனிடையே இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம் : மூன்று மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்கும் ஏற்பாடு!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வவுனியாவிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், வவுனியாவில் மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய அபிவிருத்திக் குழுக் கூட்டத்தை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வடக்கிற்கு 4 நாள் பயணமாக ரணில் விக்கிரமசிங்க நாளை (04.01) வியாழக்கிழமை விஜயம் செய்யவுள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளில் வியாழக்கிழமை பங்கேற்கும் அவர், வெள்ளிக்கிழமை (05.01) வவுனியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதன்போது வவுனியா மாநகரசபை கலாசார மண்டபத்தில் வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட்டம் ஜனாதிபதியின் பங்கேற்புடன் வவுனியாவில் இடம்பெறவுள்ளதுடன், மாவட்ட மட்ட முக்கிய பிரச்சனைகள் தொடர்பாகவும் அங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக மாவட்ட செயலக அதிகாரிகள் தொவித்தனர்.

அதன்பின், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் யாழ்ப்பாணம் செல்லவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் அரச அதிகாரிகளால் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா வைத்தியசாலையில் 39 டெங்கு நோயாளர்கள் சிகிச்சை!!

வவுனியா பொது வைத்தியசாலையில் 39 டெங்கு நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு தொற்று ஏற்பட்டு வருகின்றது. அதனடிப்டையில் வவுனியா வைத்தியசாலையில் 39 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எனினும், குறித்த 39 பேரும் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு சென்று வந்த நிலையிலேயே டெங்கு தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். வவுனியா மாவட்டத்தில் டெங்கு தொற்று தாக்கம் பெரியளவில் ஏற்படவில்லை.

எனினும், பொதுமக்கள் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை அழித்து டெங்கு தொற்றில் இருந்து தம்மையும், சமூகத்தையும் காக்க முன்னெச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் எனவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

தீப்பிடித்து எரிந்த பயணிகள் விமானம் : 379 பேர் காப்பாற்றப்பட்டது எப்படி?

டோக்கியோவில்..

ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் இன்று (02-01-2024) டோக்கியோவில் ஹனேடா விமான நிலையத்தின் ஓடுதளத்தில் தரையிறங்கும்போது தீப்பிடித்து எரிந்துள்ளது. ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும்போது அங்கிருந்த கடற்படை விமானத்தில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த விபத்து இடம்பெறும்போதும் ஐப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிகள் உட்பட 379 பேர் இருந்துள்ளனர். விமானத்திற்குள் இருந்த 367 பயணிகள் மற்றும் பணியாளர்கள் உள்பட 379 பேரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக, ஜப்பானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

379 பேருடன் வந்த ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும் போது ஜப்பான் கடலோர காவற்படை விமானத்தின் மீது மோதிவிட்டதாக ராய்ட்டர்ஸ் மற்றும் என்.எச்.கே. செய்தி நிறுவனங்கள் கூறியுள்ளன. மேலும், ஜப்பானில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு அந்த கடலோர காவற்படை விமானம் நிகாட்டா விமான நிலையத்திற்கு செல்லவிருந்ததாக தெரியவந்துள்ளது.

2 விமானங்களும் எப்போது, எப்படி மோதிக் கொண்டன என்பது தொடர்பில்”விசாரிக்கப்பட்டு வருவதாக” கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில், ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் முழுவதும் எரிந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.

ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தில் 379 பேரும், கடலோர காவல்படை விமானத்தில் 6 பேரும் இருந்தனர். அவர்களில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்த 379 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டனர். கடலோர காவல்படை விமானத்தில் ஒருவர் மட்டும் பத்திரமாக வெளியே வந்துள்ளார். மேலும் 5 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை.

இந்த விபத்தைத் தொடர்ந்து ஹனேடா விமானநிலையத்தில் அனைத்து ஓடுதளங்களும் மூடப்பட்டதாக, அதன் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். மேலும், அந்த விமான நிலையத்திலிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தின் உள்ளே இருந்த அனைத்துப் பயணிகளும் காற்று நிரப்பப்பட்ட சாய்தளம் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

பிரித்தானியாவில் உள்ள கிரான்ஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் போக்குவரத்து அமைப்புகள் துறையின் இயக்குநர் பேராசிரியர் கிரஹாம் பிரைத்வைட், ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தில் உள்ளே இருந்த பயணிகளை காப்பாற்றுவதில் விமான குழுவினரும் விமானிகளும் மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டியுள்ளார்.

“போக்குவரத்து பாதுகாப்பு என்று வரும்போது ஜப்பான் தனித்துவமான சாதனைகளை புரிந்துள்ளது,” என தெரிவித்த அவர், ஜப்பான் ஏர்லைன்ஸ் பயணிகளை பாதுகாப்பதில் “உலக தலைவர்” என பாராட்டினார். “பயணிகளை வெற்றிகரமாக வெளியேற்றியது, எந்தளவுக்கு விமான குழுவினருக்கு அது தொடர்பில் பயிற்சி அளித்துள்ளனர் என்பதை உணர்த்துகிறது” என்றார்.

மேலும், “அவர்களுடைய கவனம் முழுவதும் பயணிகளின் பாதுகாப்பு மீதுதான் இருந்துள்ளது” என்றார்.மேலும், “விமானத்திலிருந்து வெளியேறிய கடைசி நபர்கள் விமான குழுவினர் தான். அவர்கள் நம்பமுடியாத வேலையைச் செய்துள்ளனர்” என்றார்.

மருத்துவர்களின் களியாட்டத்தால் பறிபோன இளம் கர்ப்பிணியின் உயிர்!!

போகஹகும்புரத்தில்..

தனது முதல் குழந்தை பிரசவத்திற்காக வெலிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 22 வயதுடைய தாய், மருத்துவர்களின் களியாட்டத்தால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் வெலிமடை போகஹகும்புர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் வைத்தியசாலையில் இடம்பெற்ற வருட இறுதி விருந்தொன்றில் கலந்து கொண்ட வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களின் அலட்சியத்தால் உயிரிழந்துள்ளதாக பிரதேசவாசிகள்குற்றம் சுமத்தியுள்ளனர். சம்பவம்தொடர்பில் மேலும் தெரியவருகையில், வெலிமடை போகஹகும்புர பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய பாத்திமா ரிப்ஷா .

கடந்த 29ஆம் திகதி வெலிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், 30ஆம் திகதி பிரசவத்திற்காக அழைத்துச் செல்லப்பட்டார்.குறித்த தாய்க்கு கருப்பையில் வாயுக் கட்டி இருந்த போதிலும் சாதாரண பிரசவத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெண்ணின் பிரசவத்தின் போது ஐந்து மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் அங்கு இருந்ததாகவும், அவர்களுக்கு உதவ பத்து மருத்துவ மற்றும் தாதியர் ஊழியர்களும் வந்ததாகவும் கூறப்படுகிறது.

எனினும் வயிற்றில் கட்டி வெடிக்கும் அபாயத்தில் இருந்த போது வைத்தியர்கள் உரிய சிகிச்சை வழங்கவில்லை எனவும் அவசர வேளையில் தொடர்பு கொள்ள வேண்டிய நுவரெலியா அல்லது பதுளை பிரதான வைத்தியசாலைகளையும் தொடர்பு கொள்ளவில்லை எனவும் போகஹகும்புர பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். தாயின் வயிற்றில் கட்டி வெடித்து இரத்தம் கொட்டியதால் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டபோதும், தாய் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்பட்டது.

அதன் பின்னர் வெலிமடை வைத்தியசாலை பணிப்பாளரின் ஆலோசனையின் பேரில் ஆபத்தான நிலையில் இருந்த தாயையும் பிள்ளையையும் நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் போதிய இடவசதி இல்லாத காரணத்தினால், குழந்தை மட்டும் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.

தாயார் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதையடுத்து பதுளை வைத்தியசாலையின் அனைத்து மகப்பேறு மற்றும் மகப்பேறு வைத்திய நிபுணர்களும் அவசர சிகிச்சைப் பிரிவில் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர்.

வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 31ம் திகதி சிகிற்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் இளம் தாயின் உயிரிழப்புக்கு , வெலிமடை வைத்தியசாலையின் கவனயீனமே காரணம் என தெரிவித்து, பெண்ணின் உறவினர்களும் கிராம மக்களும் வெலிமடை வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த மோதலின் போது, ​​வைத்தியசாலை ஜன்னல்களும் சேதமடைந்தன. இளம் தாய் உயிரிழந்ததை அடுத்து பிரதேசவாசிகள் ஆவேசமாக நடந்துகொண்டிருந்த நிலையில் வருட இறுதி விருந்தில் கலந்துகொண்ட வைத்தியர்களும் வைத்தியசாலை ஊழியர்களும் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அதேவேளை , இந்த சம்பவங்கள் தொடர்பில் வைத்தியசாலையிடமோ அல்லது பாதிக்கப்பட்ட தரப்பினரிடமோ முறைப்பாடு எதுவும் கிடைக்கவில்லை என வெலிமடை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் இளம் தாயின் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், இதன்படி, சுகாதார அமைச்சின் குழுவொன்று இந்த வாரம் வெலிமடை வைத்தியசாலை மற்றும் பதுளை மாகாண பொது வைத்தியசாலைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ராஜகோபுர வடிவில் கட்டப்பட்ட திருச்சி விமான நிலையம் : புதிய முனையத்தில் தமிழரின் சிறப்புகள்!!

திருச்சி விமான நிலையம்..

இந்தியாவின் திருச்சி விமான நிலையத்தின் புதிய வடிவமைப்பானது இந்து மதத்தின் பிரதிபலிப்பை எடுத்துக்காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் 951 கோடி இந்திய மதிப்பில் கட்டப்பட்ட பயணிகள் முனையமானது இன்றைய தினம் (02) இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த முனையம் 60,723 சதுரமீட்டர் பரப்பளவில் 2 அடுக்குகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஒரே நேரத்தில் 4,000 சர்வ தேச பயணிகள் மற்றும் 1,500 உள்நாட்டு பயணிகளின் நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த புதிய பயணிகள் முனையத்தின் சிறப்பாக இந்தியாவின் தமிழ் கலாச்சார, பண்பாடு மற்றும் திருவிழாக்களை மையமாக கொண்டு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. ஸ்ரீரங்கம் ஆலயத்தின் ராஜகோபுரம் போன்ற மாதிரி கோபுரம் புதிய முனையத்தின் முகப்பில் வண்ணமயமாக பார்ப்போர் கண்களை கவரும் வகையில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உள்செல்லும் வெளியேறும் வாயில்களிலும் இந்து ஆலய கோபுர முகப்பு வளைவுகளும் அமைக்கப்பட்டுள்ளன. உள்ளே சுவரில் நடராஜர் சிற்பங்கள் , இந்து கடவுள்களின் படங்களும் வரையப்பட்டுள்ளதுடன் பிரமான்ட திரையில் ஆலய தேர் கலாசார நடனங்களும் உள்ளன.

இதேபோல, வருகை, புறப்பாடு , பயணிகள் காத்திருப்பு அறைகள் போன்ற பகுதிகளில் புதிய அதிநவீன வசதிகளுடன் உள்கட்டமைப்பு மற்றும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. புதிய முனையத்தின் உள்ளே புறப்பாடு பகுதியில் 10 வாயில்கள், வருகை பகுதியில் 6 வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

40 குடியேற்றப்பிரிவு மையங்கள், 48 பரிசோதனை மையங்கள், 3 சுங்கப்பிரிவு மையங்கள், 15 இடங்களில் எக்ஸ்ரே சோதனை மையங்கள், 10 இடங்களில் மேம்பாலங்கள், 3 இடங்களில் முக்கியஸ்தர்களின் காத்திருப்பு அறைகள்,1,000 கார்களை நிறுத்தும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த முனையத்தில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் வகையில் விமானநிலையத்தின் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கையில் மகளின் தாக்குதலில் பரிதாபமாக பலியான தந்தை!!

தென்னிலங்கையில்..

காலி – வந்துரம்ப – கடம்புராவ பிரதேசத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகள் தாக்கியதில் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று காலை உணவில் மருந்துகளை கலப்பது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக அவர் தனது தந்தையை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்த தந்தை மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர் எனவும், அவரது மகளால் தாக்கப்பட்ட சிறிது நேரத்தில், அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரயவந்துள்ளது. அப்போது தாயும் வீட்டில் இருந்ததாகவும், அவரும் அவரது மகளால் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

22 வயதுடைய பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் உயிரிழந்த தந்தை 54 வயதானவர் எனவும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையில் அறிமுகமாகும் வரி அடையாள எண் தொடர்பில் வெளியான தகவல்!!

இலங்கையில்..

இலங்கையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல், வரி அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்கு தொடங்கும் போதும், கட்டிட திட்டங்களுக்கு ஒப்புதல் கோரும் போதும், வாகனம் பதிவு செய்யும் போதும், போக்குவரத்து வருவாய் உரிமம் புதுப்பிக்கும் போதும், நில உரிமையை பதிவு செய்யும் போதும் இந்த எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வரி அடையாள இலக்கம் பெற்றாலும் வரி செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். வருடாந்த வரி விலக்கு வரம்பான 12 லட்சம் ரூபாவிற்கு மேல் வருமானம் ஈட்டும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே வரி செலுத்த வேண்டியவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“பதிவு செய்வது கட்டாயமாகும். மேலும், ஆண்டு வருமானம் 12 லட்சத்திற்கு மேல் இருந்தால், வரி செலுத்த வேண்டும் என வரி திணைக்களத்தால் அடையாளம் காணப்படும். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் பதிவு செய்வது குறித்து குறிப்பிட்ட குழுவால் தவறான கருத்து பரப்பப்படுகின்றது.

அனைவரும் வரி செலுத்துதலுக்கு உட்பட்டவர்கள். பதிவு கட்டாயம். ஆண்டுக்கு 12 லட்சத்தை தாண்டினால், அவர் வரி செலுத்துபவராக மாறுகிறார்கள்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.