திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சிறுவாக்கம் சானார் பாளையம் கிராமத்தில் வசிப்பவர் பழனி. இவரது மகன் முரளிகிருஷ்ணன்(24). இவருக்கும் சோழவரம் ஜெகநாதபுரத்தை சேர்ந்த சேகர் மகள் தனலட்சுமி(20) என்பவருக்கும் கடந்த ஜனவரி 27ம் தேதி இரு வீட்டார் சம்மத்துடன் திருமணம் நடைபெற்றது.பொன்னேரி அருகே இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் பெண்ணின் மரணத்திற்கு காரணமான கணவர் குடும்பத்தினரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தால் ஈடுபட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சிறுவாக்கம் சானார் பாளையம் கிராமத்தில் வசிப்பவர் பழனி. இவரது மகன் முரளிகிருஷ்ணன்(24). இவருக்கும் சோழவரம் ஜெகநாதபுரத்தை சேர்ந்த சேகர் மகள் தனலட்சுமி(20) என்பவருக்கும் கடந்த ஜனவரி 27ம் தேதி இரு வீட்டார் சம்மத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், தனலட்சுமியை கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், தன்னை வீட்டிற்கு அழைத்து சென்றுவிடுமாறு பெற்றோரிடம் தனலட்சுமி கூறியுள்ளார். பின்னர் பெற்றோர் அவரை சமாதானம் செய்து வைத்துள்ளனர்.
இந்நிலையில், கடும் மன உளைச்சலுக்கு ஆளான தனலட்சுமி நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக தனலட்சுமியின் பெற்றோருக்கு தெரிவித்துள்ளனர். தகவலறிந்து தாய் முத்துலட்சுமி மகளின் உடலை பார்த்து நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறி அழுதனர். பின்னர் தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும், முரளிகிருஷ்ணன், சிவகாமி, ரவிக்குமார் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாகவும் பொன்னேரி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
இந்த புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் தனலட்சுமி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வரதட்சணை கொடுமை புகாரின் பேரில், பொன்னேரி ஆர்டிஓவான விசாரணை நடத்தி வருகிறார். இதனிடையே தனலட்சுமி தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
என்னை காதலித்து விட்டு, ஏமாற்றி விட்டு, இன்னொருத்தனைக் காதலித்து வந்ததால், ஆத்திரத்தில் நந்தினியைக் கொடூரமாக கொலைச் செய்ததாக முன்னாள் காதலன் போலீசாரிடம் வாக்குமூலம் தந்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.சென்னையில் ஐடி நிறுவன ஊழியர் இளம்பெண் நந்தினி, கொடூரமான முறையில் சங்கிலியால் கட்டப்பட்டு, எரித்து கொலை செய்யபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இந்த கொலை விவகாரத்தில் தேடப்பட்டு வந்த முன்னாள் காதலனை போலீசார் கைது செய்துள்ள நிலையில், தன்னை காதலித்து விட்டு, பின்னர் நிராகரித்து, வேறு ஒருவனைக் காதலித்ததால் காதலி நந்தினியைக் கொலை செய்ததாக போலீசாரிடம் கூறியுள்ளார்.சென்னை பொன்மார் அடுத்த தாழம்பூர் பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் பெண் ஒருவர் சங்கிலியால் கை கால்கள் கட்டபட்டு எரித்து கொல்லபட்ட நிலையில், அதனை போலீஸார் மீட்டு விசாரணை நடத்தினர்.
இதில் இறந்தவர் நாவலூர் மப்பேடு பகுதியை சேர்ந்த மென்பொறியாளர் நந்தினி (25) என்பது தெரிய வந்ததது,இந்த கொலை தொடர்பாக நந்தினியின் முன்னாள் காதலரான வெற்றி (28)என்பவரை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் விசாரணையில் வெற்றி, “மதுரையில் கல்லூரியில் படிக்கும் போதிருந்தே நந்தினியை ஐந்து வருடமாக காதலித்து வந்தேன். எனக்கு தன்பாலின ஈர்ப்பில் ஆர்வம் இருந்ததை அறிந்த நந்தினி என்னை திருநங்கை என்று கூறி நிராகரித்து விட்டார்.
ஆனால் நண்பர்களாக இருப்போம் என்ற அடிப்படையில் நந்தினியுடன் அதன் பிறகு பழகி வந்தேன்.என்னை வெறுத்த நந்தினி, ராகுல் என்பவரைக் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார். ராகுல் உடனான காதலை துண்டித்துக் கொள்ளுமாறு நந்தினியை தொடர்ந்து வற்புறுத்தி வந்தேன். அதனை நந்தினி பொருட்படுத்தவில்லை.
இதனால் அவரை கொலை செய்வதென்று முடிவெடுத்தேன். நேற்று நந்தினியின் பிறந்தநாள் என்பதால் கோயிலுக்கு நந்தினியுடன் சென்று விட்டு, ஆதரவற்ற இல்லத்தில் உணவு வழங்கினோம். பின்னர் பிறந்தநாள் சர்ப்ரைஸ் தருவதாக கூறி தாழம்பூர் பாழடைந்த கட்டிடத்திற்கு அழைத்து சென்றேன்.
அங்கு சென்றதும், நந்தினியின் கைகால்களை சங்கிலியால் கட்டிய பின்னர், மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தில் சரமாரியாக குத்தினேன். வலி தாங்க முடியாது நந்தினி கத்தியதால், கையோடு எடுத்து சென்றிருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தேன்” என்று வாக்கு மூலம் தந்துள்ளார்.
ஒருவர் நண்பர் மற்றும் அவரின் குடும்பத்தையே கொடூரமாக கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் தெலங்கானாவில் நடைபெற்றுள்ளது. தெலங்கானா மையம் நிஜாமாபாத் மாவட்டம் மக்லூரைச் சேர்ந்த பிரசாத் (வயது 39) மற்றும் பிரசாந்த் ( வயது 25) ஆகியோர் நண்பர்களாக இருந்துள்ளனர்.
இதில் 2018ம் ஆண்டு இளம்பெண் தற்கொலை குறித்து பிரசாத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் துபாய் என்று அங்கிருந்து வழக்கு குறித்து தனது நண்பர் பிரசாந்திடம் கேட்டு வந்துள்ளார்.
அந்த காலகட்டத்தில் பிரசாத் 3.5 லட்சம் ரூபாய் வரை பிரசாந்த்க்கு கடன் கொடுத்துள்ளார். இதனிடையே கடந்த ஆண்ட நாடு திருப்பிய பிரசாத்தை போலிஸார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டாலும், கொலை குற்றம் காரணமாக அவரை கிராமமக்கள் ஊரை விட்டு விலக்கி வைத்துள்ளனர்.
இதனால் குடும்பத்துடன் காமரெட்டி மாவட்டத்தில் உள்ள பல்வஞ்சா பகுதிக்கு இடம்பெயர்ந்தார் பிரசாத் தனது நண்பர் பிரசாந்திடம் கொடுத்த கடனை திரும்ப கொடுத்துள்ளார்.
மேலும், அவசர உதவிக்கு பணம் தேவைப்பட்டதால் தனது சொத்துக்களை அடகுவைத்து பணம் தருமாறு பிரசாந்த் பெயரில் தனது சொத்துக்களை மாற்றியுள்ளார்.
இதனிடையே பிரசாத்தை கொலை செய்தால் அவர் சொத்து அனைத்தும் தனக்கு சொந்தமாகி விடும் என கருதிய பிரசாந்த் பிரசாத்தை தனியே ஒரு இடத்துக்கு வரவைத்து பானோத் வம்சி மற்றும் குகுலோத் விஷ்ணு மற்றும் மைனர் வயதுடைய தனது சகோதரரை கூட்டு சேர்த்து தனது நண்பர் பிரசாத்தை கொலை செய்துள்ளார்.
அதோடு நிற்காமல் தனது நண்பரின் குடும்ப உறுப்பினர்களான பிரசாத்தின் மனைவி சான்விகா மற்றும் சகோதரி ஸ்ரவாணி,ஸ்வப்னா, இரட்டை குழந்தைகள் சைத்ரிகா ஆகியோரையும் தனி தனியே வரவழைத்து கொலை செய்துள்ளார்.
மேலும் இந்த கொலைகளுக்கு தனது தாயாரையும் கூட்டு சேர்ந்துள்ளது. எனினும் அவர்களிடமிருந்து பிரசாத்தின் தாயார் சுசிலா மட்டுமே தப்பியுள்ளார். இதில் பிரசாத்தின் சகோதரி ஸ்ரவாணியின் உடலை கைப்பற்றிய போலிஸார் அது குறித்து விசாரணை நடத்தியபோதுதான் பிரசாந்த் தனது நன்பர் குடும்பத்தையே கொடூரமாக கொலை செய்த அதிர்ச்சி உண்மை தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து பிரசாந்த் மற்றும் அவருக்கு உதவியவர்களான குகுலோத் விஷ்ணு, பனோத் வம்சி, வட்டம்மா மற்றும் ஒரு சிறார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த போலிஸார் அவர்களை கைது செய்தனர்.
அதிக வரதட்சணை கொடுக்குமாறு கேட்டு தகராறில் ஈடுபட்ட கணவன், ஒருகட்டத்தில் மனைவியின் மூக்கை கடித்து துப்பிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரதட்சணை கேட்பதே சட்டப்படி குற்றம் என்று இருக்கும் போது, மூக்கையும் கடித்து காயப்படுத்திய அந்தக் கொடூரனுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்தியாவை முன்னேறிய நாடு என நாம் கூறிக்கொண்டாலும் இன்னமும் மிகவும் பிற்போக்கான, அவமானகரமான செயல்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. சாதி ரீதியிலான கொடுமைகள், தீண்டாமை, வரதட்சணை என அவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இவற்றில் வரதட்சணை கொடுமை என்பது இந்த 21-ம் நூற்றாண்டிலும் தொடர்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. நன்றாக படித்த, நல்ல பணிகளில் இருப்பவர்கள் கூட வரதட்சணை கேட்பதையும், வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொள்வதையும் பார்க்க முடிகிறது.
அந்த வகையில், உத்தரபிரதேசத்தில் நடந்த சம்பவமானது, இந்தியாவில் வரதட்சணை கொடுமை எந்த அளவுக்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை காட்டுவதாக உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்தவர் நஜீம். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அஜ்மி (22) என்ற பெண்ணுக்கும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 6 மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
இதனிடையே, திருமணத்திற்கு முன்பு உறுதி செய்யப்பட்ட வரதட்சணையை காட்டிலும் சிறிதளவு குறைவான தொகையை பெண் வீட்டார் வழங்கியதாக தெரிகிறது. இதனால் திருமணம் ஆன நாள் முதலாகவே அஜ்மியை கணவன் நஜீமும், அவரது குடும்பத்தினரும் துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது.
ஒவ்வொரு முறை இப்படி பிரச்சினை நடக்கும் போதும், போலீஸாரிடம் கூறுவதற்காக அஜ்மி புறப்பட்டு செல்வாராம். ஆனால், அந்த ஊர் பெரியவர்கள் அவரை மடக்கிப் பிடித்து பஞ்சாயத்து நடத்தியே பிரச்சினையை தீர்த்து வைத்து வந்துள்ளனர்.
இந்த சூழலில், நேற்று முன்தினம் இரவு மது போதையில் வந்த நஜீம், தான் கேட்ட வரதட்சணையை இப்போதே கொண்டு வருமாறு அஜ்மியிடம் கூறி அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர், கூறிய வரதட்சணையை கொடுக்க முடியாத உனக்கு மூக்கு எதற்கு எனக் கேட்டு, பாய்ந்து சென்று அஜ்மியின் மூக்கை கடித்தார்.
இதில் மூக்கின் சிறு துண்டை அவர் கடித்து துப்பினார். இதனால் வலி தாங்க முடியாமல் அலறிய அஜ்மி, அப்படியே ஓடிச்சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், கணவன் நஜீம் மற்றும் அவரது குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம், ராமநகர் மாவட்டம், பனஹல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியம்மா (21). இவர் இன்று காலை துணி துவைக்க செல்வதாக கூறி அருகில் உள்ள கனவா நீர்த்தேக்கத்துக்கு தனது 15 மாத ஆண் குழந்தை தேவராஜூடன் சென்றார்.
இந்நிலையில், மாலையில், குழந்தை தேவராஜ், நீரில் தவறி விழுந்து விட்டதாக பாக்கியம்மா அழுது கொண்டே வீட்டுக்கு வந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார். அந்த பெண்ணை சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, பாக்கியம்மா முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தார்.
இதனால் சந்தேகமடைந்த போலீஸார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பாக்கியம்மா தனது குழந்தையை நீரில் தூக்கி வீசி கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். அவர் குழந்தையை ஏன் கொலை செய்தார் என்பதற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை.
ஆனால், தகாத தொடர்பில் இந்த குழந்தை பிறந்ததால் நீரில் வீசி கொலை செய்திருக்கலாம் என போலீஸார் தரப்பி்ல் தெரிவித்துள்ளனர். பெற்ற குழந்தையை நீரில் வீசி தாயே கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள மும்பையில் 1996 பிப்ரவரி 8 -ம் திகதி பிறந்தவர் வித்யா ஃபிலிப்பன். இவரை, அவரது தாய் விலி பார்லேவில் உள்ள அன்னை தெரசா மிஷனரி கருணை இல்லத்தில் விட்டுச் சென்றார்.
பின்னர், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த தம்பதியினர் வித்யா ஃபிலிப்பனை அவர்களது நாட்டுக்கு அழைத்துச் சென்றனர். தற்போது, 27 வயதான வித்யா ஃபிலிப்பனுக்கு திருமணமாகிவிட்டது.
தனது தாய் வசித்ததாக கூறப்படும் தஹிசார் பகுதிக்குச் சென்று வித்யா ஃபிலிப்பன் விசாரித்துள்ளார். ஆனால், அங்கு அவரது குடும்ப பெயரான ‘காம்ப்ளி’ என்ற அடைமொழியுடன் யாரும் இல்லை. தற்போது, குடும்ப பெயரும், அடைமொழியும் மட்டுமே உள்ள நிலையில் தனது கணவருடன் வித்யா ஃபிலிப்பன் மனம் தளராது தேடி வருகிறார்.
இது தொடர்பாக வித்யா ஃபிலிப்பன் கூறுகையில், “எனது தாயைக் கண்டறிவதற்கு தத்து உரிமை கவுன்சில் இயக்குநரும், வழக்கறிஞருமான அஞ்சலி பவார் உதவி வருகிறார். எனது தாய் என்னை 20 வயதில் பெற்றெடுத்துள்ளார்.
தற்போது, 10 ஆண்டுகளாக நான் அவரை தேடி வருகிறேன். எனது அம்மாவை கண்டுபிடிப்பதற்கு மும்பை மக்கள் வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடகாவில் பள்ளிக்கு சென்ற 13 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் முடிகெரே தாலுகாவில் உள்ள கேசவலு ஜோகண்ணனகெரே கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ருஸ்தி. 13 வயது சிறுமியான இவர் தராதஹள்ளி தொடக்கப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் சிறுமி வழக்கம் போல் இன்று வீட்டிலிருந்து பள்ளிக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது செல்லும் போது திடீரென சாலையில் சுருண்டு விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சிறுமியை எம்.ஜி.எம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்குச் சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா தொற்றுக்குப் பிறகு சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிகமாக மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இது குறித்து மருத்துவ ரீதியான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பூங்காவில் உள்ள மரத்தில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சானசந்திரம் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகள் கோபிகா. அவருக்கு 19 வயது.
கிருஷ்ணகிரி தளியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் கோபிகா முதலாம் ஆண்டு பி.காம் படித்து வருகிறார். மாணவி யாரிடமாவது செல்போனில் அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது.இதை கவனித்த பெற்றோர், மகள் கோபிகாவை செல்போனில் தொடர்ந்து பேச வேண்டாம் என கண்டித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த மாணவி நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு வெளியேறி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் மகளை தேடினர். ஆனால் மாணவியை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், ஓசூர் சந்திரா சுடேஸ்வரர் மலைக்கோயில் பின்புறமுள்ள பூங்காவில் உள்ள மரத்தில் மாணவி ஒருவர் செவ்வாய்க்கிழமை தூக்கில் தொங்கினார். அந்த வழியாக சென்றவர்கள் ஓசூர் காவல்துறையினருக்கும், மாணவியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தூக்கில் தொங்கியது மாணவி கோபிகா என்பது தெரியவந்ததும் மருத்துவமனைக்கு வந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவியின் உடலை பார்த்து கதறி அழுதனர். மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து ஓசூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவித்துள்ளன. அதன்படி, இன்று (27.12.2023) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் “22 கரட்” தங்கம் ஒரு பவுனின் விலை 2,000 ரூபாவால் அதிகரித்து 168,500 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த வாரம் புதன்கிழமை இதன் விலை 163,700 ரூபாயாக காணப்பட்டது. இதனிடையே கடந்த புதன்கிழமை 177,000 ரூபாயாக நிலவிய “24 கரட்” தங்கம் ஒரு பவுனின் விலை இன்று 182,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரசித்தி பெற்ற முல்லைத்தீவு – வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் திருட முற்பட்டவர்கள் பாம்புத் தீண்டலுக்கு இலக்கானதாக கூறப்படும் சம்பவம், உண்மைக்கு புறம்பானது என ஆலயத்தின் நிர்வாக செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆலயத்தில் உள்ள சிசிரீவி கருவியை சரிபார்க்க சென்ற நிர்வாக குழு உறுப்பினரையே பாம்பு தீண்டியதாகவும், சில ஊடகங்கள் உண்மைக்கு புறம்பான செய்தியினை வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,உதவி முகாமையாளரிடம் சிசிரீவி கருவியை இயக்குவதற்கான சுட்டியை எடுத்துக் கொடுங்கள் என்று நான் கூறினேன்.
சுட்டி தொழில்படாத காரணத்தினால் பிரதான பெட்டியை திறக்க வேண்டி ஏற்பட்டது. அதனுள் இருந்தே பாம்பு எமது உறுப்பினரை தீண்டியது. இதன்காரணமாக பாம்பு தீண்டியவரையும், பாம்பையும் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லவேண்டிய தேவை ஏற்பட்டது.” என்றார்.
மதுரையைச் சேர்ந்த இளம்பெண் நந்தினி (28) சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். நேற்று பிறந்தநாள் என்பதால், கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு முன்னாள் காதலன் வெற்றி அழைத்துச் சென்றுள்ளார்.
இதனையடுத்து நந்தினியை பிறந்தநாள் சர்ப்ரைஸ் என அழைத்து சென்ற முன்னாள் காதலன், நந்தினியை சங்கிலியால் கட்டி, கை, கால்களை அறுத்து வெட்டி, இரவு கேளம்பாக்கம் அருகே கொடூரமாக படுகொலை செய்துள்ளார்.
பின்னர் உடலை எண்ணெய் ஊற்றி எரித்து விட்டு சென்றுள்ளார். கொலை செய்துவிட்டு தப்பியோடிய முன்னாள் காதலனை தல்ஹாம்பூர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.விசாரணையில், எனது காதலை புறக்கணித்துவிட்டு வேறு ஒருவரை காதலித்ததாக வெற்றிமாறன் (திருநம்பி) காவல்துறையினரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதில், வெற்றிமாறன் ஆண் இல்லை என்றும், மதுரை கீசவாசல் பகுதியைச் சேர்ந்த பாண்டி முருகேஸ்வரி (25) என்ற பெண் என்றும் தெரியவந்தது. பெண்ணாக இருந்து ஆணாக மாறி பின்னர் வெற்றிமாறன் என பெயர் மாற்றிய ‘திருநம்பி’யின் விவரமும் காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து தாளஹாம்பூர் காவல்துறையினர் பாண்டி முருகேஸ்வரி (எ) வெற்றிமாறனை கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்தனர்.
மதுரை தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திரன். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், அமுதா, நந்தினி என்ற இரு மகள்களும் உள்ளனர். ரவீந்திரன் மதுரையில் உள்ள ஹார்டுவேர் கடையில் வேலை செய்து வருகிறார். மூத்த மகள் அமுதா பெற்றோருடன் உள்ளார். இளைய மகள் நந்தினி (25) மதுரை தியாகராயர் கல்லூரியில் எம்.காம் முடித்துள்ளார். நந்தினியும் வெற்றிமாறனும் பள்ளிப் பருவத்திலிருந்தே ஒன்றாகப் படித்தவர்கள்.
தீயில் கருகி இறந்த நந்தினியும், பாண்டி முருகேஸ்வரி (எ) வெற்றிமாறனும் பள்ளி முதல் கல்லூரி வரை ஒன்றாக படித்தவர்கள். நந்தினி 2021 ஆம் ஆண்டு சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மென்பொருள் மேம்பாட்டு நிறுவனத்தில் சேர்ந்தார்.
இவர் சென்னை துரை பாக்கம் கண்ணகி நகரில் உள்ள சித்தப்பா வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார். கல்லூரியில் சேர்ந்து படிக்கும் போது பாண்டி முருகேஸ்வரி நந்தினியிடம் தனது உடல் மாற்றங்கள் மற்றும் ஆசைகள் பற்றி கூறியிருந்தார்.
2019ல் பாண்டி முருகேஸ்வரி தனது பெயரை ‘வெற்றிமாறன்’ என மாற்றிக்கொண்டார். அவளும் ஆண்களைப் போல உடைகள் மற்றும் தலைமுடியை மாற்றிக்கொண்டாள். 2019 ஆம் ஆண்டின் இறுதியில், அவர் தனக்குத் தெரிந்த மாற்றுத்திறனாளிகளின் உதவியுடன் மும்பைக்குச் சென்று ஆண் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முயன்றார். கடைசியில் நந்தினிதான் தடுத்தாள்.
நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன் என்று கூறி அறுவை சிகிச்சை முயற்சியை கைவிட்டார். வெற்றிமாறன் திருநம்பியாக மாறினாலும் பள்ளி நண்பர்கள் என்பதால் நந்தினியின் பெற்றோர் வெற்றிமாறனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதற்கிடையில் வெற்றிமாறன் நந்தினியிடம், எனக்கும் சென்னைக்கு வந்து உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக கூறினார்.
அதன்படி, நந்தினி, பெருங்குடியில் வேலை பார்க்கும் தனியார் நிறுவன அதிகாரிகளிடம், வெற்றிமாறன் குறித்து பேசி, வேலைக்கு அமர்த்தினார். அதன் பிறகு பாண்டி முருகேஸ்வரி சந்தேகமில்லாமல் அதே நிறுவனத்தில் பணிபுரிந்தார். நான் பெண்ணாக இருந்து திருநம்பி ஆனதால் யாரும் எனக்கு பெண் கொடுக்க மாட்டார்கள். கடைசி வரை நீ எனக்கு துணையாக இருக்க வேண்டும் என நந்தினியிடம் வெற்றிமாறம் கூறியுள்ளார்.
இந்நிலையில் பள்ளிக்கரணையை சேர்ந்த ராகுலுடன் நந்தினிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனால், வார இறுதி நாட்களில் நண்பர் வெற்றிமாறனுடன் வெளியே செல்வதை நிறுத்திவிட்டு, காதலர் ராகுலுடன் நந்தினி சென்றார். இது வெற்றிமாறனுக்கு பிடிக்கவில்லை. இதுகுறித்து நந்தினியை 6 மாதங்களுக்கு முன்பே எச்சரித்துள்ளார் வெற்றிமாறன்.
இருப்பினும் நந்தினி, ‘நீ என் வாழ்க்கை துணை, ராகுல் என் காதலன், நான் அவரை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்.சாகும் வரை உங்களுடன் நட்பு இருக்கும் என்று வெற்றிமாறனிடம் கூறினார். ஆனால் வெற்றிமாறன் நந்தினியிடம், ‘இல்லை, என்னைப் பற்றி உங்களுக்கு எல்லாம் தெரியும். இருவரும் திருமணம் செய்துகொண்டு சென்னையில் மகிழ்ச்சியாக வாழலாம் என்றார்.
நந்தினி, ‘நீ என் தோழி, என் ஆசைகளை எப்படி நிறைவேற்றுவாய், என் ஆசையை ஒரு ஆணால்தான் நிறைவேற்ற முடியும்’ என்று கூறிவிட்டு வெற்றிமாறனை விட்டு வெளியேறினார் நந்தினி. இருவரும் கடந்த 3 மாதங்களாக ஒருவருக்கொருவர் பேசாமல் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.
நந்தினிக்கு நேற்று 25வது பிறந்தநாள். இதனால் 22ம் தேதி இரவு வெற்றிமாறன் நந்தினிக்கு போன் செய்தார். ‘என்னுடைய கடைசி ஆசையை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். ஒரு நாள் முழுவதும் என்னுடன் வெளியே வா. அதன் பிறகு நான் உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன்.
காதலனுடன் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று கூறினார்.நந்தினி ஒப்புக்கொண்டாள். அதன்படி நேற்று காலை நந்தினியை பெசன்ட் நகர் கடற்கரை, வேளாங்கண்ணி மாதா கோயில், அம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஸ்கூட்டரில் அழைத்துச் சென்றார் வெற்றிமாறன்.
பின்னர் கோவளம் வந்து கடற்கரையில் சிறிது நேரம் விளையாடிவிட்டு நேராக கேளம்பாக்கம் வழியாக பொன்மார் பகுதிக்கு சென்றனர்.அவர் நடுவில் வண்டியை நிறுத்தி பிறந்தநாள் என்பதால், ‘உனக்கு சர்ப்ரைஸ் கிப்ட் தருகிறேன்’ என, ஆள் நடமாட்டம் இல்லாமல், கட்டுமான பணியால் பாதியில் நிற்கும் கட்டடம் அருகே அழைத்துச் சென்றார். கட்டிடத்திற்குள் நுழைந்த அவர், திடீரென நந்தினியை கட்டையால் தாக்கி கீழே தள்ளினார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத நந்தினி அங்கிருந்து ஓட முயன்றார்.ஆனால் வெற்றிமாறன் ஏற்கனவே பையில் கொண்டு வந்திருந்த நாய் சங்கிலியை எடுத்து நந்தினியின் கை கால்களை கட்டிவிட்டு சத்தம் போடாதே… ‘நீ எனக்கு மட்டும் சொந்தம்.
இடையில் வந்த ராகுலுக்கு நீ சொந்தமில்லை. பள்ளி நாட்களில் இருந்து என்னுடன் இருந்த நீங்கள் இப்போது கடைசியாக கேட்கிறேன், நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்ளலாமா வேண்டாமா? என்று கேட்டார்.
அதற்கு நந்தினி, ‘நான் ராகுலுடன் வாழ்வேன்.பெண்ணுடன் வாழமாட்டேன்’ என ஆபாசமாக திட்டினார். இதனால் ஆத்திரமடைந்த வெற்றிமாறன், உயிர் தோழி என்று பார்க்காமல் தான் வைத்திருந்த கத்தியால் நந்தினியின் கை, கால் நரம்புகளை வெட்டினார். மேலும் வலி தாங்க முடியாமல் அலறி துடித்த நந்தினியின் இடது பக்க கழுத்தை அறுத்துள்ளார்.
நந்தினிக்கு வலி தாங்க முடியாமல் ரத்தம் கொட்டியது. ‘இறுதியாக மீண்டும் கேட்கிறேன். எனக்கு நீ மட்டும் வேண்டும் என்று என்ன சொல்கிறாய்’ எனக் கேட்டார் வெற்றிமாறன். நான் செத்தாலும் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்’ என்றாள் நந்தினி.
இரத்தப்போக்கு காரணமாக நந்தினியால் வெற்றிமாறனுடன் சண்டையிட முடியவில்லை. அப்போதும் அடங்காத வெற்றிமாறன், நீ செத்து போடி என்று சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில், நந்தினி மீது பாட்டிலில் இருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.
நந்தினியை கொன்றது நான்தான் என்பதை போலீசார் கண்டுகொள்ளக்கூடாது என்பதற்காக, போலீஸ் அழைப்பின் பேரில் மருத்துவமனைக்கு வெற்றிமாறன் வந்துள்ளார். ஆனால் அவர் பயன்படுத்திய செல்போன் சிக்கியது. இவ்வாறு கைது செய்யப்பட்ட வெற்றிமாறன் வாக்குமூலம் அளித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தமிழகத்தின் கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த தாய்க்கு அவருடைய மகன்கள் இரண்டு பேர் சேர்ந்து திருமணம் செய்து வைத்துள்ளனர். தமிழகத்தின் கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த வளையாம்பட்டு ஊராட்சியை சேர்ந்த பாஸ்கர், இவரது தாயின் பெயர் செல்வி.
பாஸ்கர் பொறியியல் முதலாம் ஆண்டு படித்து கொண்டு இருக்கும் போது, அவரது தம்பி விவேக் 11ம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்துள்ளார், அப்போது அவரது தந்தை துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து மனைவி செல்வி தன்னுடைய பாஸ்கர் மற்றும் விவேக் ஆகிய இரண்டு குழந்தைகளையும் தனியாக வளர்த்து வந்துள்ளார்.கல்லூரி முடித்து வேலைக்காக வெளியே சென்ற போது, அவரிடம் புத்த வாசிப்பு பழக்கம் அதிகரித்துள்ளது, அப்போது பெரியார், கலைஞர் ஆகியோரின் மறுமணம் குறித்த புத்தகங்களை அதிகமாக படிக்க தொடங்கியுள்ளார்.
மேலும் புத்த வாசிப்பு மூலம் நண்பர்கள் பெருகியதுடன் அவரது சிந்தனையும் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து கொண்டே சென்றுள்ளது. இதற்கிடையில் நம் வீட்டிலும் அம்மா தனியாக இருக்கிறாரே, அவருக்கு ஏன் மறுமணம் செய்து வைக்க கூடாது என்ற எண்ணம் பாஸ்கருக்கு வந்துள்ளது.
இதற்கு அண்ணன் பாஸ்கரை அப்படியே பின்பற்றும் தம்பி விவேக்கும் சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் இருவருக்கும் இந்த பேச்சை எவ்வாறு அம்மாவிடம் தொடங்குவது என்று தெரியாமல் இருந்துள்ளனர்.
இந்நிலையில் தாய் செல்வி ஒருநாள் தன்னுடைய மகன் பாஸ்கருக்கு திருமணம் செய்து வைப்பது தொடர்பாக பேச தொடங்கியுள்ளார். அப்போது விளையாட்டாக நீண்ட நாட்களாக தனியாக நீ கஷ்டப்படுகிறாய், அதனால் நீ முதலில் திருமணம் செய்து கொள் அப்போது தான் நான் பண்ணிக் கொள்வேன் என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு இது குறித்து இரண்டு மகன்களும் தாய் செல்வியிடம் பேசி வந்துள்ளனர்.
2 மகன்களின் சில ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு தாய் செல்வி திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். உறவினர்கள் இதற்கு முற்றிலுமாக மறுப்பு தெரிவித்த நிலையில், கஷ்டமான காலத்தில் நமக்கு உதவி செய்யாத உறவினர்கள் இப்போது மட்டும் ஏன் அவர்களின் எண்ணங்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என நினைத்து திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
மூத்த மகன் இது தொடர்பாக முதலில் என்னிடம் பேசிய போது அதிர்ச்சியாக இருந்தது, ஊர் என்ன பேசும் என்று அவர்களை கண்டித்தேன், உங்களுக்கு என்று ஒரு துணை இருந்தால் வெளியூரில் வேலை செய்யும் போது நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் என்று நாங்கள் அங்கு நிம்மதியாக இருப்போம் என தெரிவித்தனர்.
மேலும் இது உங்களை போன்று கணவர்களை இழந்து தனியாக வாழும் பெண்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் என தெரிவித்தனர். அதே சமயம் நான் கணவரை இழந்த நின்ற போது பலர் அதை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி என்னிடம் தவறாக நெருங்க அணுகியுள்ளனர்.திருமண உறவு என்றால் பாலியல் மட்டுமே இல்லை. நட்புறவோடு உறுதுணையாக ஒருவர் உங்களுக்கென இருக்கிறார் என்பதே தனி தைரியத்தை வழங்கும்,” என்கிறார் செல்வி.
இறுதியில் அம்மாவும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டார், ஆனால் அதற்காக மனைவியை இழந்தவர் யாரையாவது திருமணம் செய்து வைத்து எங்கள் கடமையை முடிக்க நாங்கள் விரும்பவில்லை. என மூத்த மகன் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அவருக்காக பார்க்கும் நபர்களிடம் சில நாட்கள் பேசி பழகி பிறகு சம்மதம் என்றால் மட்டும் மேற்கொண்டு பேசுவோம் என தெரிவித்தோம். இறுதியில் அம்மாவுக்கு தற்போது மணந்துள்ள அப்பாவை பிடித்து இருந்ததால் அவர்கள் இருவரும் மறுமணம் செய்து கொண்டுள்ளனர்.
அம்மா செல்வி தற்போது விவசாய தொழிலாளியான ஏழுமலை என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார், அவர் தன்னை அன்பாக பார்த்துக் கொள்வதாகவும், அனைத்து வேலைகளையும் இழுத்து அடித்து கொண்டு செய்வதாக சிரிப்புடன் தெரிவித்துள்ளார்.
மைதானத்தில் கபடி வீரர், விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென சரிந்து விழுந்து மரணமடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக இளவயது உயிரிழப்புக்கள் அதிகரித்து வருகின்றன.
உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மரணம், மணமேடையில் மயங்கி சரிந்து மரணம் விளையாடிக் கொண்டிருந்த போது மரணம், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாரடைப்புக்கள் அதிகரித்து வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுபட்டி பகுதியில் வசித்து வந்தவர் தங்கராஜ். இவருடைய மனைவி தமிழரசி. இவர்களுக்கு யோகேஸ்வரன், சிவா என 2 மகன்கள். இதில் யோகேஸ்வரன் கபடி வீரர். இவர் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பி.ஏ. 3ம் ஆண்டு படித்து வந்தார் இந்நிலையில் அன்னவாசல் மாங்குடியில் நேற்று கபடி போட்டி நடத்தப்பட்டது.
இதில் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டனர். கபடி போட்டியில் யோகேஸ்வரன் கலந்து கொண்டு விளையாடினார்.
விளையாடிக் கொண்டிருந்த போது யோகேஸ்வரன் திடீரென மைதானத்தில் மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவரை சக வீரர்கள் மீட்டு அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு யோகேஸ்வரனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் கபடி போட்டி ரத்து செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மைதானத்தில் கபடி வீரர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் விபத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (25.12.2023) இடம்பெற்றுள்ளது.
இதன்போது யாழ். முனியப்பர் கோவில் வீதி, கட்டுவன் மேற்கு பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 41 வயதுடைய சந்திரசேகரம் மயூரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் முச்சக்கர வண்டி சாரதியாக பணியாற்றி வந்த நிலையில் நேற்று முன்தினம் (24) இரவு முச்சக்கர வண்டியில் செல்லும்போது குப்பிழானில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் முச்சக்கர வண்டியை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம்(25) அவரது வீட்டுக்கு முன்னால் உள்ள புளியமரத்தில் சடலமாக தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து அவரது சடலம் மீதான மரண விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் இன்றைய தினம்(26) சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியம் மற்றும் தென் அந்தமான் கடல் பிராந்தியத்தில் காற்று சுழற்சியுடன் கூடிய தாழமுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், வட அந்தமான் கடல் பிராந்தியத்திலும், நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பகுதியிலும் (Equatorial Indian Ocean) வெவ்வேறான காற்று சுழற்சிகள் உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
குறித்த இரண்டு காற்று சுழற்சிகளும் தற்போது ஒன்றாக இணைந்து சற்று வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.
இதன் காரணமாக இன்றுள்ள வானிலை நிலவரங்களின் படி அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களிலும் நாளை (27) முல்லைத்தீவு மாவட்டத்திலும் மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாவலப்பிட்டி கல்பொட நீர்வீழ்ச்சியில் நண்பர்கள் குழுவுடன் நீராடச்சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (26.12.2023) மதியம் இடம்பெற்றுள்ளது.
கடுகன்னாவ, பானபொக்கவைச் சேர்ந்த 15 வயதுடைய பசிந்து சாமோத் என்ற பாடசாலை மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது.
நண்பர்கள் குழுவுடன் தொடருந்தில் கல்பொடவுக்கு வந்த குறித்த சிறுவன் கல்பொட நீர்வீழ்ச்சியில் நீராடிக்கொண்டிருந்த போதே இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளார்.
இந்நிலையில் சிறுவன் மீட்கப்பட்டு நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.