வெளிநாட்டிலிருந்து மனைவியுடன் இலங்கை வந்தவருக்கு நேர்ந்த பரிதாபம்!!

பெந்தோட்டையில்..

நத்தார் பண்டிகையை கொண்டாடுவதற்காக வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். பெந்தோட்டை கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த போது நீரோட்டத்தில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் டிட்டோ வட்லோவ் என்ற 51 வயதான கஸகஸ்தான் நாட்டை சேர்ந்தவராகும். கிறிஸ்மஸ் தினத்தன்று இலங்கைக்கு வந்திருந்த அவர், பெந்தோட்டையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார்.

நேற்று அவர் தனது மனைவியுடன் கடலில் நீராடச் சென்ற போது விபத்திற்குள்ளாகியுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

வவுனியா ஊடான வடக்கிற்கான யாழ்ப்பாணம் – கொழும்பு புகையிரத சேவை இடைநிறுத்தம்!!

தொடருந்து..

வடக்கிற்கான தொடருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. சேவை இடைநிறுத்தம் தொடர்பில் திணைக்களம் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு தொடருந்து மார்க்கத்தை நவீனமயமாக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனவரி 7 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே மஹவ தொடக்கம் அனுராதபுரம் வரையான வடக்கு தொடருந்து மார்க்கம் அன்றைய தினம் முதல் 06 மாத காலத்திற்கு மூடப்படும் என அதன் பிரதி முகாமையாளர் என்.ஜே. இந்திபொலகே குறிப்பிட்டுள்ளார்.

இந்த காலப்பகுதியில் கொழும்பில் இருந்து மஹவ மற்றும் அனுராதபுரத்திலிருந்து காங்கசன்துறை வரை மட்டுமே தொடருந்து சேவைகள் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் பரவும் வைரஸ் தொற்று : பொது மக்களுக்கான எச்சரிக்கை!!

இலங்கையில்..

நாட்டில் தற்போது பரவி வரும் இன்புளுவென்சா உள்ளிட்ட வைரஸ் தொற்றுக்களுக்கு, வைத்திய ஆலோசனையின்றி நுண்ணுயிர் மருந்துப்பொருட்களையும் பயன்படுத்தக் கூடாது என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

நீண்ட நாட்களாக காய்ச்சல் நிலவுமாயின் உடனடியாக அரச வைத்தியசாலைக்கு சென்று வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் நந்தன திக்மதுகொட அறிவித்துள்ளார்.

அத்துடன் இவ்வாறான வைரஸ் தொற்றுகள் காற்றின் மூலம் வேகமாகப் பரவுவதால், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் நாற்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நோயிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக முகக்கவசத்தை அணியுமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாசாவின் 2024ஆம் ஆண்டு நாட்காட்டியில் இலங்கைச் சிறுவனின் படம்!!

நாசாவில்..

நாசாவின் 2024ஆம் ஆண்டு நாட்காட்டியில் தனது ஓவியத்தை சேர்ப்பதற்கு இலங்கை சிறுவன் ஒருவர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அனுராதபுரம் – திரப்பன பிரதேசத்தை சேர்ந்த தஹாம் லோசித பிரேமரத்ன என்ற சிறுவன் தனது திறமையை வெளிப்படுத்திய ஒரு சிறிய கலைஞராகியுள்ளார்.

திரப்பன மஹாநாம ஆரம்ப பாடசாலையில் 02 ஆம் தரத்தில் கல்வி கற்கும் சிறுவன் பலரது பாராட்டுக்களை பெற்றுக் கொண்டுள்ளார். ஓவியம் வரைவதில் உள்ளார்ந்த திறமை கொண்ட தஹாம் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் தனது படைப்புகளை சமர்ப்பித்துள்ளார்.

இந்த நேரத்தில் தஹாமிற்கு நாசா ஏற்பாடு செய்த கலைப் போட்டி பற்றிய தகவல் கிடைக்கிறது.

அதற்கமைய, விண்வெளியில் வாழ்வதும் வேலை செய்வதும் என்ற கருப்பொருளில் தஹாம் வரைந்த ஓவியம் உலகின் பல நாடுகளின் சிறிய ஓவியங்களைத் தோற்கடித்து முதலிடத்தைப் பெற்றது.

அதன்படி, 2024ஆம் ஆண்டுக்கான நாசாவின் ஜூலை மாதத்திற்கான நாசாவின் நாட்காட்டியில் தஹாமின் படம் சேர்க்கப்பட்டுள்ளது.

யாழ் பல்கலை மாணவிக்கு நடந்தது என்ன? வைத்தியசாலைக்கு பறந்த உத்தரவு!!

மாணவி சுபீனா..

யாழ்ப்பாண பல்கலை மாணவி சுபீனா மரணம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன யாழ் போதனா வைத்தியசாலைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கமருந்தின் ஒவ்வாமைப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவி ,மருந்தின் ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ள நிலையில் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்து மாணவியின் உறவினர்கள் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர்.

மாணவிக்கு எவ்விதமான ஒவ்வாமையும் இல்லை எனவும் செலுத்தப்பட்ட ஊசி மருந்து என்னவென்பது தமக்கு தெரிவிக்கப்படவில்லை என பொலிஸாருக்கான முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்ற குணரத்தினம் சுபீனா என்ற 25 வயதான மாணவி டிசம்பர் 23ம் திகதி உயிரிழந்தார்.

காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மாணவி, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த மாணவி உயிரிழந்தார்.

இதன்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குறித்த மாணவிக்கு செலுத்தப்பட்ட மருந்தின் ஒவ்வாமை காரணமாகவே உயிரிழப்பு இடம்பெற்றது என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மாணவியின் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கபப்ட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சேவையில் இணைந்து ஒரு மாதத்தில் 24 வயது இளம் தாதி திடீர் உயிரிழப்பு!!

கொழும்பில்..

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணிபுரியும் இளம் தாதி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த தாதி மருத்துவமனையில் இருந்து பண்டாரவளையிலுள்ள தனது வீட்டுக்குத் திரும்பிய நிலையில் திடீரென சுகவீனமடைந்து உயிரிழந்துள்ளதாக பண்டாரவளை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

புதிதாக சேவையில் இணைந்து கொண்ட தாதி உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை (26) உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் பண்டாரவளை மகுல்லல்லேல பகுதியைச் சேர்ந்த சந்துனி சுலோச்சனா என்ற 24 வயதுடைய புதிய தாதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த தாதி கடந்த ஒரு மாதத்துக்கு முன்னரே சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டவர் என கூறப்படும் நிலையில் அவரது மரணம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெண்ணொருவடன் விடுதிக்கு சென்ற நபர் திடீரென உயிரிழப்பு!!

கொழும்பில் ..

பொரலஸ்கமுவில் இருந்து பெண் ஒருவருடன் விடுதி ஒன்றிற்கு சென்ற நபரொருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவத்திற்கு பின்னர் குறித்த பெண் தப்பிச் சென்றுள்ளதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொரலஸ்கமுவ தெஹிவளை வீதியில் உள்ள சமூபகார மாவத்தையில் உள்ள விடுதிக்கு பெண் ஒருவருடன் சென்ற நபரே திடீரென உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர், பொரலஸ்கமுவ வெரஹெர போதிராஜபுர பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என தெரிவயந்துள்ளது.

உயிரிழந்த நபர் நேற்றைய தினம் (25-12-2023) மதியம் குறித்த பெண்ணுடன் விடுதிக்கு வந்துள்ளார், சில மணித்தியாலங்களின் பின்னர் குறித்த பெண் அறையிலிருந்து அலறியடித்தவாறு வெளியே வந்துள்ளார்.

பின்னர், அந்த நபர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக விடுதி முகாமையாளரிடம் தெரிவித்தார். முகாமையாளர் அறைக்குச் சென்று பார்த்தபோது, ​​அவரது வாயிலிருந்து சளி வெளியேறியதைக் கண்ட அவர், உடனடியாக நடவடிக்கை எடுத்து முச்சக்கரவண்டியைக் கொண்டு வந்து அந்த நபரை வைத்தியசாலையில் அனுமதித்தார்.

அப்போது அந்த பெண் அங்கிருந்த தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது. குறித்த பெண்ணை கண்டுபிடிக்க விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு – கிழக்கில் கனமழை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

கனமழை..

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியம் மற்றும் தென் அந்தமான் கடல் பிராந்தியத்தில் காற்று சுழற்சியுடன் கூடிய தாழமுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், வட அந்தமான் கடல் பிராந்தியத்திலும், நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பகுதியிலும் (Equatorial Indian Ocean) வெவ்வேறான காற்று சுழற்சிகள் உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. குறித்த இரண்டு காற்று சுழற்சிகளும் தற்போது ஒன்றாக இணைந்து சற்று வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.

இதன் காரணமாக வானிலை நிலவரங்களின் படி அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களிலும் நாளை (27.12.2023) முல்லைத்தீவு மாவட்டத்திலும் மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இது சில நாட்களுக்கு தொடரும் சாத்தியம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் மாவட்டங்களில் அவ்வப்போது இடையிடையே ஓரளவு மழை பொழியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் உயிரிழந்த யாழ் இளம் பெண் : சோகத்தில் குடும்பம்!!

கனடாவில்..

கனடாவில் யாழ்ப்பாணம் – வல்வெட்டி பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் இளம் தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த துயர சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றதாக தெரியவருகின்றது. சம்பவத்தில் ஐந்து பிள்ளைகளின் இளம் தாய் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் .

சம்பவதினம் நித்திரைக்கு சென்ற குறித்த பெண் நித்திரையில் உயிரிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது . இந்நிலையில் இளம் தாயின் உயிரிழப்பு அவரது குடும்பத்துக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா கருமாரியம்மன் ஆலயத்தில் 19ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்!!

வவுனியா, குட்செட்வீதி, கருமாரியம்மன் ஆலயத்தில் 19 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் இன்று (26.12) காலை அனுஸ்டிக்கப்பட்டது.

இதன்போது, சுனாமியில் உயிர் நீத்த உறவுகளிற்காக மோட்ச தீபமேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், விசேட பூசை வழிபாடுகளும் இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியமும், ஸ்ரீ கருமாரி அம்மன் தேவஸ்தான பரிபாலன சபையினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அந்தணர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா சிறையில் இருந்து 23 பேர் விடுவிப்பு!!

நத்தார் தினத்தினை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து 23 கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டனர்.

நேற்று நத்தார் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 1004 சிறைக் கைதிகள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்திருந்தது.

அதற்கமைய வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து சிறுகுற்றங்களை புரிந்த மற்றும் தண்டப்பணத்தினை செலுத்த முடியாத 23பேர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் முன்னிலையில் விடுவிக்கப்பட்டனர்.

வவுனியா போக்குவரத்து பொலிசார் புத்தாண்டை முன்னிட்டு விசேட சோதனை!!

புத்தாண்டை முன்னிட்டு வவுனியா போக்குவரத்து பொலிசார் இன்று (26.12) விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். புத்தாண்டு காலத்தில் விபத்துக்களை கட்டுப்படுத்தவும், போதைப் பாவனையை தடுக்கும் வகையிலும் வவுனியா போக்குவரத்து பொலிஸார் திடீர் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன்போது, 10 சாரதிகளுக்கு எதிராக தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன், ஒரு சாரதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கமைய போக்குவரத்து பொலிஸாரினால் வவுனியா புகையிரத நிலைய வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த சோதனை நடவடிக்கையில் தலைக்கவசம் சீராக அணியாமை, சாரதி அனுமதிப்பத்திரம் இன்மை, அதிக சத்தம் எழுப்பியமை, முச்சக்கரவண்டிக்கு அதிகளவான அலங்காரம், தலைக்கவசத்தினுள் தொலைபேசி வைத்திருந்தமை போன்ற பல்வேறு குற்றங்களுக்காகவே சாரதிகளுக்கு தண்டம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

வவுனியா பூந்தோட்டத்தில் சுனாமி நினைவு தினம் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது!!

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயம் மற்றும் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் சுனாமி பேரலையில் உயிர்நீத்தவர்களிற்கான 19 ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு இன்று(26.12.2023) இடம்பெற்றது.

பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுகழக மைதானத்தில் அமைந்துள்ள சுனாமி நினைவு தூபியில் குறித்த பிரார்த்தனை நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

இதன்போது உயிரிழந்தவர்களிற்கு இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த நினைவு தூபி சுனாமி பேரலை ஏற்பட்டு 31 ஆம் நாளில் நரசிங்கர் ஆலய நிர்வாகத்தினரால் அமைக்கப்பட்டிருந்ததுடன், இலங்கையின் முதலாவதாக அமைக்கப்பட்ட தூபியாகவும் விளங்குகின்றது. தற்போது நகரசபையால் புணர்நிர்மானம் செய்யப்பட்டு பராமரிக்கப்படுகின்றது.

நரசிங்கர் ஆலயத்தின் தலைவர் கோ.சிறிஸ்கந்தராஜா, தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மதகுருமார்கள், பொதுஅமைப்புகள், கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள், என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதுண்டு விபத்து : ஒருவர் படுகாயம்!!

வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிவ் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பட்டானிச்சூர் பாடசாலையினை அண்மித்த பகுதியில் நேற்று (25.12.2023) மதியம் இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா நகரிலிருந்து மன்னார் வீதியூடாக முதியவர் ஒருவர் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் வீதியின் மறுபக்கம் மாற முற்பட்ட சமயத்தில் அதே திசையில் வந்த அதிவேக சீசியுடைய மோட்டார் சைக்கிள் முதியவர் செலுத்திய மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் முதியவர் படுகாயமடைந்த நிலையில் 1990 அவசர நோயாளர் காவு வண்டி சேவையூடாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையுடன் விபத்துக்குள்ளான இரு மோட்டார் சைக்கிலும் பகுதியளவில் சேதமடைந்திருந்தன.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா மற்றும் நெளுக்குளம் போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

நத்தார் தினத்தை கொண்டாட முடியாமல் தவறான முடிவெடுக்க முயற்சித்த குடும்பஸ்தர்!!

மட்டக்களப்பில்..

மட்டக்களப்பில் தொழில் இல்லாத காரணத்தால் நத்தாருக்கு பிள்ளைகள் மனைவிக்கு ஆடைவாங்கி கொடுக்க முடியாது மனமுடைந்த குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து கல்லடி பாலத்தில் இருந்து வாவியில் குதித்த நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் (24) இரவு 11 மணியளவில் இடம்பெற்றள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 42 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தை மேசன் தொழில் செய்துவந்துள்ளார். இந்த நிலையில் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக கட்டிடத் தொழில் இல்லாத காரணத்தால் பொருளாதார ரீதியில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்துள்ளார்.

வருடத்தில் ஒருதடவை வரும் நத்தார் தினத்தை கொண்டாடுவதற்கு பிள்ளைகளுக்கு ஆடை வாங்கி கொடுக்க முடியாது நிலையினால் மனக்கவலையடைந்துள்ளார். இதனையடுத்து நேற்று முன்தினம்(24) இரவு வீட்டைவிட்டு வெளியேறி யேசுநாதரின் பிறந்த தினம் எனது இறப்பு தினமான அமைய வேண்டும் என தவறான முடிவெடுக்க கல்லடி பாலத்தில் இருந்து வாவியில் குதித்துள்ளார்.

இதன்போது நீரில் தத்தளித்த நிலையில் பயம் ஏற்பட்டதையடுத்து காப்பாற்றுமாறு கத்தியதையடுத்து அவர் காப்பாற்றப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் குறித்த நபரை பொலிஸார் கைது செய்து தவறான முடிவெடுக்க முயற்சித்த குற்றச்சாட்டில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை இவரின் இந்த நடவடிக்கை பரபரப்பு அல்ல நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் எதிர்காலத்தில் நாட்டு மக்கள் வாழமுடியாது இவ்வாறு தவறான முடிவெடுக்கம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை இவரின் செயல் மூலம் அனைவருக்கும் உணர்த்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மக்களின் வருமானத்தில் கடும் வீழ்ச்சி : வெளியான கணக்கெடுப்பு!!

இலங்கையில்..

இலங்கையில் 60 சதவீதத்திற்கும் அதிகமான குடும்பங்கள் 2022 மார்ச் மாதத்திற்குப் பிறகு மொத்த வருமானத்தில் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையிலுள்ள குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்றன என்பதை அறியும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் மூலம் இது தெரியவந்துள்ளதாக அந்த திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

வேலை இழப்புகள் மற்றும் வேலை ஒப்பந்தங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டமை,வேலை நேரம் குறைக்கப்பட்டமை,விற்பனை வீத வீழ்ச்சி என்பன இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கால்நடை தீவனம், எரிபொருள் மற்றும் உரங்களின் விலைகள் அதிகரிப்பு என்பனவும் கணக்கெடுப்பில் பதிவாகியுள்ளது.