இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயத்திற்கான வரி அதிகரிப்பு!!

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கான சிறப்புப் பண்ட வரி கிலோ கிராமுக்கு ரூ.60 லிருந்து ரூ.80 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்திற்கான வரி நேற்று (26) முதல் அமுலுக்கு வரும் வகையில் ரூ.10இல் இருந்து ரூ.50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த வரி திருத்தம் நேற்று முதல் 03 மாதங்களுக்கு அமுலில் இருக்கும் என்று நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. உள்நாட்டு உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காய விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழில் வெளிநாட்டிலிருந்து வந்தவருக்கு காத்திருந்த பேரிடி : மாயமான கோடி ரூபாய் பணம்!!

வெளிநாட்டிலிருந்து வந்து நெல்லியடி பகுதியில் வசித்து வந்த நபர் ஒருவரின் சுமார் ஒரு கோடியே 40 இலட்ச ரூபாய் பணம் கொள்ளையிட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் செவ்வாய்க்கிழமை (26) 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வெளிநாடொன்றிலிருந்து இலங்கை வந்த நபர் ஒருவர் நெல்லியடி பகுதியில் வசித்து வந்துள்ளார். அவர் தனது வீட்டில் வெளிநாட்டு நாணயதாள்கள் உள்ளிட்ட பணத்தினையும் வைத்திருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக தனது பணம் காணாமல் போவதையறிந்து, இந்த விடயம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலைய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , குறித்த நபரின் வீட்டில் வேலை செய்யும் இருவர் தொடர்பில் சந்தேகமடைந்து இருவரையும் கைது செய்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விசாரணைகளின் போது, இருவரும் வெளிநாட்டு பணத்தினை வீட்டில் இருந்து சிறிது சிறிதாக கொள்ளையிட்டதாகவும், அந்த பணத்தினை நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் ஊடாக நெல்லியடி பகுதியில் உள்ள வங்கியொன்றில் வெளிநாட்டு பணங்களை இலங்கை ரூபாவிற்கு மாற்றியதாகவும் கூறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து, திருட்டுக்கு உடந்தையாக செயற்பட்டமை, திருடப்பட்ட பணத்தினை உடைமையில் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் மேலும் 08 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் திருடப்பட்ட பணத்தில் சுமார் 40 இலட்ச ரூபாய் பெறுமதியான பணத்தினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

ஏனைய பணத்தினை மீட்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சில சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா மன்னார் வீதியில் இராணுவ வாகனம் – மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்து : ஒருவர் காயம்!!

வவுனியா மன்னார் பிரதான வீதியில் இன்று (26.08.2025) காலை மோட்டார் சைக்கிலுடன் இராணுவ வாகனம் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

கற்பகபுரம் சந்தியில் இடம்பெற்ற இவ் வாகன விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்தவர் காயங்களுக்குள்ளாகியுள்ளமையுடன் மோட்டார் சைக்கிலும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கார் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : இளைஞன் பலி : ஒருவர் காயம்!!

தணமல்வில – வெல்லவாய வீதியில் கித்துல்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தணமல்வில பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை (26) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெல்லவாய நோக்கிப் பயணித்த கார் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனரும் பின்புறத்தில் பயணித்தவரும் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் மானெல்கல பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் ஆவர். இதனையடுத்து காரின் சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தணமல்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் பலி!!

கொழும்பு, மத்தேகொட பொலிஸ் பிரிவில் உள்ள வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொட்டாவ நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் எதிரே வந்த பேருந்துடன் மோதி வீதியில் கவிழ்ந்தது.

மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த தேவிந்த ருக்‌ஷன் என்ற 30 வயது இளைஞர் விபத்தில் படுகாயமடைந்து ஹோமாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

விபத்து தொடர்பாக பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் மத்தேகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் அருகிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

யாழ்.சுண்டிக்குளத்தில் படகு விபத்து : இளைஞன் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, சுண்டிகுளம் பகுதியில் படகு விபத்தில் இளைஞன் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (26) உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

வடமராட்சிக் கிழக்கு சுண்டிக்குள பகுதியில் உடப்பு பகுதியைச் சேர்ந்த மைனர் சம்மாட்டியின் கரைவலை வாடியில் இன்றையதினம் அதிகாலை கரவலை மீன்பிடி நடவடிக்கை இடம்பெற்றது.

அண்மைய நாட்களாக நாட்டின் சில பகுதிகளில் காணப்படும் அசாதாரண காலநிலை வடமராட்சி கிழக்கு சுண்டிக்குள கடல் பகுதியிலும் நிலவியது.

இதன்போது மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞர் கடலின் அலையில் இருந்து படகை விடுவிப்பதற்கு முயன்ற போது அதே படகு அலையில் சிக்குண்டு குறித்த இளைஞன் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் உடப்பு பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய சின்னத்தம்பி சசிதரன் என்று தெரிவிக்கப்படுகிறது. சடலம் நித்தியவெட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

போராட்டங்களில் பலரது கவனத்தை பெற்றுள்ள “AKD GO கம” பதாகை!!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு விசாரணை இடம்பெற்றுவரும் நிலையில் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் ரணில் ஆதரவாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், போராட்டங்களில் ஈடுபட்டுவரும் மக்கள் “AKD GO கம” என்ற பதாதைகளை தாங்கியவண்ணம் போராட்டங்களில் ஈடுபட்டு வருதை காணக்கூடியதாகவுள்ளது.

பலரது கவனம்

மேலும் “COMEBACK RANIL” என்ற வாசகமும் பலரது கவனத்தை பெற்றுவருகின்றது.

மேலும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான குழுவினரும் கொழும்பில் ஒன்று திரண்டு எதிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை,முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான வழக்கு விசாரணை சிறிது நேரத்திற்கு முன்பு கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் Zoom தொழில்நுட்பம் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

கூடுதல் வரதட்சணைக்காக உணவு கொடுக்காமல் மனைவியை கொன்ற கணவர்!!

தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம், கல்லூர் மண்டலத்தில் உள்ள விஸ்வநாதம்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி பிரசன்னா. இவருக்கும் அதே மண்டலத்தைச் சேர்ந்த பூலா சுரேஷ்பாபு என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

வரதட்சணையாக 2 ஏக்கர் மாம்பழத்தோட்டம், 2 ஏக்கர் வயல், ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பெண் வீட்டார் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், திருமணமாகி ஒரு வருடம் கழித்து தம்பதிக்கு ஒரு குழந்தை பிறந்தது. அதன் பிறகு, சுரேஷ் பாபு தனது மனைவி மற்றும் குழந்தையுடன் 6 ஆண்டுகளாக மாமனார் வீட்டில் வசித்து வந்தார்.

அதன் பிறகு, தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அஸ்வராவ்பேட்டைக்கு வந்த சுரேஷ் பாபு, கடந்த 3 ஆண்டுகளாக தனது மைத்துனி வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த சூழலில் கடந்த 23ம் தேதி, அவரது மனைவி லட்சுமி பிரசன்னாவின் பெற்றோருக்கு போன் செய்து, உங்கள் மகள் படிக்கட்டில் இருந்து விழுந்து காயமடைந்து ராஜேமஹேந்திரவரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சுரேஷ் பாபு கூறினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாமியார் மற்றும் அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு விைரந்து சென்றனர்.

அப்போது, தங்கள் மகள் என்று கூட அடையாளம் தெரியாத வகையில், உடலில் பல இடங்களில் காயத்துடன் மெலிந்துபடி லட்சுமி பிரசன்னா சடலமாக கிடந்தார்.

இதனை கண்டதும் அனைவரும் கதறி அழுதனர். மேலும், கூடுதல் வரதட்சணை கேட்டு அடிக்கடி தங்கள் மகளை சித்ரவதை செய்து வந்த சுரேஷ், அவரது அத்தை விஜயலட்சுமி, சகோதரிகள் தாசரி பூலட்சுமி மற்றும் அவரது கணவர் னிவாஸ் ராவ் தான் மகள் இறப்புக்கு காரணம் என புலம்பினர்.

மேலும், வரதட்சணைக்காக தங்கள் மகளை வீட்டில் அடைத்து வைத்து, சரியாக உணவு கூட கொடுக்காமல் சித்ரவதை செய்து கொன்று விட்டனர் என குற்றம் சாட்டினர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கியுள்

வரதட்சணைக் கொடுமையால் மகளுடன் தீக்குளித்த ஆசிரியை!!

நாடு முழுவதும் சமீப காலங்களாக வரதட்சணை கொடுமையால் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில், பெரும் அதிர்ச்சியளிக்கும் சம்பவமாக வரதட்சணைக் கொடுமை காரணமாக மகளுடன் சேர்த்து ஆரிசியை தீக்குளித்து

தற்கொலை செய்துக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் வரதட்சணை கேட்டு மீண்டும் மாமனார். மாமியார் ஆசிரியையைத் தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் சர்நடா கிராமத்தை சேர்ந்தவர் திலீப் பிஷோனி. இவருக்கும் சஞ்சு பிஷோனி என்பவருக்கும் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதிக்கு 3 வயதில் யாஷ்வி என்ற மகள் இருந்தார். பிட்கன்சி பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் சஞ்சு ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இதனிடையே, சஞ்சுவுக்கும் அவரது

கணவர் திலீப்பிற்கும் இடையே குடும்ப பிரச்சினை நிலவி வந்தது. மேலும், சஞ்சுவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு அவரது மாமனார், மாமியார் கடந்த 5 மாதங்களுக்கு மேல் தொல்லை கொடுத்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, கூடுதல் வரதட்சணை கேட்டு மீண்டும் மாமனார். மாமியார் தொல்லை கொடுத்துள்ளனர்.

இதனால் விரக்தியடைந்த சஞ்சு தனது மகளுடன் வீட்டில் உள்ள அறைக்கு சென்றுள்ளார். அங்கு தான் வைத்திருந்த பெட்ரோலை தன் மீதும் மகள் மீதும் ஊற்றி தீக்குளித்தார்.

இந்த சம்பவத்தில் மகள் யாஷ்வி சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். சஞ்சுவின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து சென்ற அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமத்தனர்.

படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சஞ்சு நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு : கதறும் பெற்றோர்!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 2ம் ஆண்டு கல்லூரி படித்து வந்த மாணவி காயத்ரி, கல்லூரி முடித்து வீட்டுக்கு சென்ற நிலையில், திடீரென அறையை பூட்டிக் கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஜோதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் ராஜன். இவருடைய மகள் காயத்ரி (19).

திருத்தணி அரசு கலை கல்லூரியில் பி.எஸ்.சி. கம்யூட்டர் சயின்ஸ் 2ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் ஜோதி நகரில் நடைபெற்ற திருவிழாவில் காயத்ரி தனது தோழிகளுடன் நடனமாடி மகிழ்ந்துள்ளார்.

நேற்று வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்த காயத்ரி திடீரென அறையை பூட்டி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

காயத்ரி தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் கூச்சலிட்டனர்.

உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காயத்ரியை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் காயத்ரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஜோதிநகரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

யாழில் இளம் குடும்பஸ்தரின் திடீர் மரணத்தால் அதிர்ச்சி : உறவினர் வீட்டில் நடந்த அசம்பாவிதம்!!

யாழில் இரத்த வாந்தி எடுத்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (25) இரவு உயிரிழந்துள்ளார். அராலி மத்தி, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 39 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த குடும்பஸ்தர் கிளிநொச்சியில் உள்ள உறவினரின் வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்று அதிகாலை 3.00 மணியளவில் அங்கு இரத்த வாந்தி எடுத்த நிலையில் சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.

17 வயது இளைஞனின் மரணத்தால் தமிழர் பகுதியொன்றில் பரபரப்பு!!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு – கறுவாக்கேணி பிரதான வீதியில் அமைந்துள்ள வாகன சுத்திகரிப்பு நிலையத்திற்கு முன்னால் உள்ள மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவர் இன்று (26) அன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

17 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இளைஞனின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

திருமணமான 20 வயது இளம்பெண்னின் வாயில் வெடி மருந்தை திணித்து கொடூர கொலை!!

இந்திய மாநிலம் கர்நாடகாவில் திருமணமான 20 வயது இளம்பெண் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கர்நாடகாவின் ஹுன்சூர் தாலுகாவைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ரக்ஷிதா. இவருக்கும் கேரளாவைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரை திருமணம் செய்துகொண்டார்.

ஆனால், ரக்ஷிதா தனது உறவுக்கார நபர் சித்தராஜுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மைசூரு மாவட்டத்தில் உள்ள ஹொட்டல் ஒன்றில் ரக்ஷிதாவும், சித்தராஜுவும் தங்கியுள்ளனர்.

அங்கு அவர்களுக்குள் சண்டை ஏற்பட, ரக்ஷிதா வெடிப்பு ஏற்பட்டு முகம் சிதைந்து உயிரிழந்துள்ளார். இதனையடுத்து தப்பியோட ஓட முயன்ற சித்தராஜுவை உள்ளூர்வாசிகள் மடக்கிப்பிடித்துள்ளனர்.

அப்போது அவர் செல்போன் வெடித்ததால் ரக்ஷிதா உயிரிழந்ததாக கூறியுள்ளார். ஆனால் அவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் உண்மை தெரிய வந்தது.

சித்தராஜு ஒரு ரசாயனப் போடி கலவையைப் பயன்படுத்தி அதனை ரக்ஷிதாவின் வாயில் திணித்து வெடிக்க செய்துள்ளார். இதன் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

நீண்ட வாதத்திற்குப் பின் ரணிலுக்குப் பிணை வழங்கிய நீதிமன்றம்!!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதவான் இந்த உத்தரவை சற்று முன்னர் பிறப்பித்துள்ளார்.

சீரற்ற உடல்நிலை காரணமாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து Zoom தொழிநுட்பத்தின் ஊடாக வழக்கு விசாரணைகளுக்கு முன்னாள் ஜனாதிபதி முன்னிலையானார்.

இதற்கடுத்த வாதப் பிரதிவாதங்களின் அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதிக்கு பிணை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

கர்ப்பிணி மனைவியை கொலை செய்து தலை, கால், கை என துண்டு துண்டாக்கி ஆற்றில் வீசிய கணவர்!!

ஹைதராபாத் விகாராபாத் மாவட்டம் காமரெட்டிகுடா கிராமத்தில் வசித்து வருபவர் 25 வயது மகேந்தர் ரெட்டி. இவர் தனது 22 வயது கர்ப்பிணி மனைவி சுவாதி யாதவை கொடூரமாகக் கொலை செய்ததாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பக்கத்து வீட்டுக்காரர்களாக இருந்த இருவரும் சிறுவயது முதலே காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

25 நாட்களுக்கு முன்பு வேலை வாய்ப்புக்காக ஹைதராபாத் நகரில் குடிபெயர்ந்து உப்பலில் வசித்து வந்தனர்.மனைவியை கொலை செய்த விவகாரத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் மனைவி சுவாதியை மகேந்தர் ரெட்டி கொலை செய்த பின் உடலை துண்டித்ததை ஒப்பு கொண்டு பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதன்படி கைகள், கால்கள், தலையை பிரித்து, அவற்றை பைகளில் சுற்றி பிரதாப் சிங்காரம் அருகே உள்ள மூசி ஆற்றில் கொட்டியதாக தெரிகிறது மீதமுள்ள உடல் பாகங்களை மீட்க பேரிடர் மீட்புப் படை தடயவியல் குழுக்கள் மூசி ஆற்றங்கரையில் தீவிரமாக தேடுதல் நடத்தி வருகின்றனர்.

கர்ப்பிணி பெண்ணை கொலை செய்து உடலை துண்டுகளாக்கி ஆற்றில் வீசி சென்ற சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

10ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு!!

கொரோனாவுக்கு பின்பான வாழ்க்கை அதிக மன அழுத்தத்தைக் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக மாணவ, மாணவிகளிடையே மன அழுத்தம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பெங்களூருவில் 10ம் வகுப்பு மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு புறநகர் பகுதியில் வசித்து வருபவர் ராமு. இவரது மனைவி ஷோபா. இவர்களுக்கு 16 வயதில் மகள் ஒருவர் இருந்தார். மகள் வீட்டின் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் எஸ்.எஸ்.எல்.சி படித்து வந்தாள்.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு வழக்கம் போல் தனது பெற்றோருடன் அமர்ந்து ஒன்றாக சேர்ந்து இரவு உணவை சாப்பிட்டு விட்டு தூங்க சென்றாள்.

நேற்று காலை வெகுநேரமாகியும் மகள் எழுந்து வராததால், படுக்கை அறைக்கு சென்று பார்த்த பெற்றோர், மகள் தூக்கில் சடலமாக தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கதறி துடித்தனர்.

இது குறித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல் துறையினர், மாணவியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, மேற்கொண்டு விசாரித்தனர்.

அப்போது பெற்றோர் தூங்கிய பின்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் எனத் தெரிகிறது. மாணவி என்ன காரணத்திற்காக தற்கொலை செய்தார்? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.