யாழில் 800 ரூபாவிற்காக ஈவிரக்கமின்றி தாக்குதல் : இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக பலி!!

யாழில்..

யாழில் 800 ரூபா கடனை திருப்பி செலுத்தவில்லை என இளம் குடும்பஸ்தர் மோசமாக தாக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

800 ரூபா கடன் பணத்தைக் கேட்டு இளம் குடும்பத் தலைவர் மீது இளைஞன் ஒருவன் நடத்திய தாக்குதலால், அடி காயங்களுடன் யாழ் போதனா மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றவர் நேற்று முன்தினம் (16.12) சனிக்கிழமை உயிரிழந்தார்.

சம்பவத்தில் உரும்பிராய் கிழக்கு, வளர்பிறை சனசமூக நிலையயத்தடியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சிங்கரத்தினம் சிவாஸ்குமார் (40) என்ற இ.போ.ச பஸ் ஓட்டுனரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு ஊரெழு மேற்கில் அமைந்துள்ள வீடொன்றுக்கு சென்று திரும்பியபோது அங்கு வந்த இளைஞன் ஒருவன், தனக்கு வழங்க வேண்டிய 800 ரூபா கடன் பணத்தை கேட்டு சிவாஸ்கரன் மீது கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளார்.

அதன் பின்னர் அவரை தானே அழைத்து வந்து சிவாஸ்கரனின் வீட்டில் சேர்த்து விட்டு சென்றுள்ளார்.இந்நிலையில் அடிகாயங்களுக்கு இலக்காகி உடல்நிலை மோசமடைந்திருந்த சிவாஸ்குமாரை மறுநாள் திங்கட்கிழமை மாலை வேலையில் வீட்டார் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதித்ததாக தெரியவருகின்றது.

இந்நிலையில் கடந்த ஆறு நாட்களாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் சனிக்கிழமை உயிரிழந்தார். குடுமபஸ்தரின் உயிரிழப்பை அடுத்து தாக்குதல் நடத்திய இளைஞன் கோப்பாய் போலீஸ் நிலையத்தில் சரணடைந்துளதாக கூறப்படும் நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையின் சிங்கள ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்ற கில்மிஷா : வரலாற்றில் பதிவான முதல் வெற்றி!!

கில்மிஷா..

தென்னிந்தியாவின் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற சரிகமப இசை நிகழ்ச்சியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுமி கில்மிஷா வெற்றி பெற்றுள்ளார்.நேற்றைய தினம் (17) இடம்பெற்ற இறுதிச் சுற்று போட்டியில், கில்மிஷா வெற்றிவாகை சூடினார்.

தென்னிந்திய தொலைக்காட்சிகளில் நடைபெறும் இசை போட்டி நிகழ்வொன்றில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.குறித்த இசை நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து அசானி மற்றும் கில்மிஷா ஆகிய இரு சிறுமிகள் கலந்து கொண்டிருந்த நிலையில் இறுதிச் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை அசானி தவற விட்டிருந்தார்.

இந்தநிலையில், இறுதிச் சுற்று வரை முன்னேறிய கில்மிஷாவுக்கு வடக்கு – கிழக்கு தமிழர் தாயக பகுதிகளிலும், தென்னிந்தியாவிலும், உலகெங்கிலும் வாழும் தமிழர்களிடத்திலும் ஆதரவு அதிகரித்திருந்தது.அத்துடன், இறுதிச் சுற்றில் கில்மிஷா வெற்றிப் பெற வேண்டும் என்ற தமது அவாவை தமிழ் மக்கள் தங்களது சமூக ஊடங்கள் மூலம் வெளிப்படுத்தியிருந்தனர்.

இதற்கு முன்னர் தென்னிந்திய தமிழ் ஊடகங்களில் நடத்தப்பட்ட பல போட்டி நிகழ்ச்சிகளில் இலங்கை தமிழர்கள் பங்கு பற்றியிருந்த போதிலும், ஒருசிலர் இறதிப் போட்டி வரை வந்திருந்த போதிலும் வெற்றி பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் கிடைத்ததில்லை என்பதுடன் வெற்றிப்பெற்றதுமில்லை.இது தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்டு இருந்தன.

எனினும், முதன்முறையாக தென்னிந்திய தமிழ் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட பாடல் போட்டி நிகழ்ச்சியில் இலங்கையைச் சேர்ந்த கில்மிஷா வெற்றிவாகை சூடியுள்ளார். இதற்கு இலங்கையில் இருக்கும் பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை, இலங்கையின் சிங்கள மற்றும் ஆங்கில, தமிழ் ஊடகங்கள் அனைத்திலும் கில்மிஷாவின் வெற்றி தொடர்பான செய்திகளும் வாழ்த்துக்களும் முதன்மை இடத்தைப் பிடித்திருந்தன. குறிப்பாக சிங்கள ஊடகங்களிலும் கில்மிஷாவின் வெற்றி தொடர்பான செய்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அம்மா நான் சாகப்போறேன்… காதலியுடன் விஷம் குடித்து விட்டு போனில் கதறிய மகன்!!

கர்நாடகாவில்..

கர்நாடகா மாநிலம், கலபுர்கி மாவட்டம் சித்தாப்பூர் தாலுகாவில் வசித்து வருபவர் ஆகாஷ். இவர் பக்கத்து கிராமத்தில் வசித்து வரும் ராதிகாவை காதலித்து வந்தார். இருவீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியதால் வாழ்வில் சேர முடியாது என காதலர்கள் முடிவெடுத்தனர்.

சாவிலாவது ஒன்று சேரலாம் என நினைத்து காதலர்கள் இருவரும் சௌகி தாண்டாவிற்கு சென்று தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அவர்கள் இருவரும் அங்கு சென்று கையோடு கொண்டு சென்றிருந்த விஷத்தை குடித்தனர். இதன் பின் தான் ஆகாஷ்க்கு உயிர் பயம் ஏற்பட்டுவிட்டது.

உடனடியாக தனது அம்மாவுக்கு போன் செய்து, காதலியோடு விஷம் குடித்து விட்டதைக் கூறினார். இதனை கேட்ட தாய் அதிர்ச்சி அடைந்தார். அதற்குள் அந்தப்பக்கமாக வந்த சுற்றுலாப் பயணிகள் இவர்கள் இருவரும் விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடப்பதைக் கண்டனர்.

உடனடியாக அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அதற்குள் இருவரும் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கலபுர்கி பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருமணமாகி 4 வாரம் தான்.. புதுமணப்பெண் எடுத்த விபரீத முடிவு!!

கன்னியாகுமரியில்..

திருமணமாகி 4 வாரம் தான் முழுசா முடிச்சிருக்கு. ரெண்டாவது மாதம் நிறைவடைவதற்குள் இளம்மனைவி, வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்டதைப் பார்த்த கணவன் கதறியழுதது பார்ப்போரைக் கலங்க செய்தது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் மேலத்தெருவில் வசித்து வருபவர் நடராஜன்(37).

கன்னியாகுமரியில் உணவகம் ஒன்றை நடத்தி வரும் நடராஜனுக்கு சமீபத்தில், கோயம்புத்தூர் பீளமேடு பகுதியில் வசித்து வரும் பாண்டு என்பவரது மகள் காயத்ரி(32)யுடன் பெற்றோர்களின் ஏற்பாட்டில் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த ஒன்றரை மாதங்கள் கூட இன்னும் முழுதாக முடியாத நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், இளம்பெண் காயத்ரி, மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உணவகத்தை இரவு மூடிவிட்டு, வீட்டுக்கு வந்த நடராஜன், காயத்ரி தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறித் துடித்தார். நடராஜனின் அழுகுரல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, காயத்ரி பிணமாக தொங்குவதைப் பார்த்து, உடடினயாக இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவலளில்த்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், காயத்ரியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, காயத்ரியின் மரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

காயத்ரியின் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்கொலை செய்து கொண்ட இடத்தில், வீடு முழுவதும் சோதனை செய்து பார்த்தும், தற்கொலை குறித்த கடிதம் ஏதும் சிக்கவில்லை.

தற்கொலைக்கு முன்பு காயத்ரி குடும்பத்தில் பிரச்சினை ஏதும் நடந்ததா? இல்லை வேறு ஏதேனும் தற்கொலைக்கு காரணமா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

திருமணமான சிலவாரங்களிலேயே புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகளை தவிக்க விட்டு கணவன் மனைவி எடுத்த விபரீத முடிவு!!

கரூரில்..

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி கல்வார்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் ஐயப்பன். இவரது மனைவி ஜெயா. இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகளும், 8 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

இவர்கள் குடும்பத்துடன் கடந்த 10 நாட்களுக்கு முன் சொந்த ஊரை காலி செய்து பஞ்சமாதேவி கிராமத்தில் புதிய வாடகை வீட்டில் குடியேறினர். நேற்று முதல் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். பள்ளி முடிந்து முதலில் மகன் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீடு உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.

மகன் நீண்ட நேரமாக கதவை தட்டியும் கதவு திறக்கப்படவே இல்லை. அக்கம்பக்கத்தினரிடம் சென்று தகவல் தெரிவித்தார். இதனையடுத்து அவர்கள் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.தம்பதிகள் இருவரும் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் இருந்தனர்.

அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் அளித்தனர். குழந்தைகளைத் தனியே தவிக்க விட்டு விட்டு தம்பதிகள் இருவரும் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இத்தகவலால் ஊர் பொதுமக்கள் சம்பவம் நடந்த வீட்டின் முன்பு குவிந்தனர். போலீஸார், விரைந்து வந்து தற்கொலை செய்த இருவரது சடலத்தையும் கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சொந்த ஊரை விட்டு பஞ்சமாதேவி கிராமத்தில் குடியேறிய 10 நாட்களுக்குள் கணவன் மனைவி இருவரும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பஸ்தர் எடுத்த விபரீத முடிவு.. மனைவி, குழந்தைகளை கொன்று விட்டு தானும் தற்கொலை!!

தெலுங்கானாவில்..

தெலுங்கானா மாநிலம் சித்திபேட்மாவட்டத்தில் உள்ள சின்னகோடூர் மண்டல் ராமுனிப்பட்டா கிராமத்தில் டிசம்பர் 15 வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் ஜீவன் பாட்டீலின் துப்பாக்கி ஏந்திய போலீஸ் கான்ஸ்டபிள் அகுலா நரேஷ் (35), அவரது மனைவி சைதன்யா (30), மகன் ரேவந்த் (6) ஆகியோரைக் கொன்றார்.

மகள் ஹிமாஸ்ரி (5) கைத்துப்பாக்கியில் இருந்து துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டார். நரேஷ் டிசம்பர் 15ம் தேதி பணிக்கு வராமல் வீட்டில் இருந்துள்ளார். துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து குடும்பத்தினர் 4 பேரும் இறந்து கிடப்பதைப் பார்த்தனர்.

இது குறித்து கிராம மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் காவல்துறையினர். இதனையடுத்து இறந்து நிலையில் இருந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

நிதி பிரச்சனையே இந்த சம்பவத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. உள்ளூர்வாசிகள் கூறுகையில், நரேஷ் கடனில் இருந்துள்ளார். இருப்பினும் அனைத்து கோணங்களிலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

சினிமாவை மிஞ்சும் திக் திக்.. மனைவி உட்பட 3 பேரை வெட்டி சாய்த்த கணவர்!!

தஞ்சாவூரில்..

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை விக்டோரியா காலனியில் வசித்து வருபவர் சுந்தர் கணேஷ் . இவரது மனைவி நித்யா . கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. சுந்தர் கணேஷ் தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார்.

கொரோனா காலகட்டத்தில் பணியிலிருந்து விலகினார். அதன்பிறகு அவருக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை இதனால் வீட்டிலேயே இருந்தார். நித்யா தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் மண்டல அலுவலகத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

அடுத்தடுத்து வந்த பொருளாதார பிரச்சனையால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய வீட்டை விற்பனை செய்வது குறித்து கணவன் மனைவி மத்தியில் தகராறு ஏற்பட்டது. இந்த தொடர் சண்டை 3 நாட்களுக்கும் மேலாக நீடித்தது. உறவினர்கள் வந்து இருவரையும் சமாதானப்படுத்தும் அளவுக்கு சென்றுள்ளது.

அவர்கள் சென்றதும் இது குறித்து மீண்டும் கணவன், மனைவி மத்தியில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுந்தர் கணேஷ் தன் மனைவி நித்யாவை அரிவாளால் சராமாரியாக வெட்டி விட்டு காரில் ஏறி தப்பி ஓடிவிட்டார்.

இதன் பிறகு பரிசுத்தம் நகருக்கு சென்று அங்கு பால் பூத் நடத்தி வரும் திருவையாறு அருகே கீழத் திருப்பூந்துருத்தி தாமரைச்செல்வன் மற்றும் கோபி இருவரையும் சுந்தர் கணேஷ் அரிவாளால் வெட்டினார்.

இதனையும் முடித்துவிட்டு திருச்சி சாலையில் தப்பி சென்று விட்டார். அரிவாளை கொண்டு வெட்டியதால் நித்யா அலறித் துடித்தார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

படுகாயம் அடைந்த நித்யாவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைதொடர்ந்து பால் பூத்தில் நடந்த சம்பவத்தால் படுகாயம் அடைந்த தாமரைச்செல்வன், கோபியையும் மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.

ஆத்திரத்தில் காரை ஓட்டிச் சென்ற சுந்தர்கணேஷ் நகர் பகுதியில் தாறுமாறாக இயக்கியதால் செங்கிப்பட்டி அருகே முத்தாண்டிப்பட்டி பகுதியில் எதிரில் வந்த லாரி மீது நேருக்கு நேர் கார் மோதினார். இதில் படுகாயம் அடைந்த சுந்தர் கணேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சினிமாவில் வருவது போல் அடுத்தடுத்த கோர சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் , அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவங்கள் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருமணத்துக்கு தடையாக இருந்ததாக 4 வயது மகள், தாய் கோடாரியால் தாக்கி கொலை : கொடூர தந்தை தற்கொலை!!

கேரளாவில்..

கேரளாவின் ஆலப்புழா மாவட்டம், ஆனக்கூடு என்ற பகுதியை சேர்த்தவர் ஸ்ரீமகேஷ் (வயது 38). இவர் தனது மனைவி வித்யா மற்றும் 4 வயது குழந்தை நக்‌ஷத்ராவோடு துபாயில் வசித்து வந்தனர். இதனிடையே கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் வித்யா தற்கொலை செய்துகொண்டார்.

இதனால் ஸ்ரீமகேஷ்க்கு வேறு திருமணம் செய்துவைக்க அவரது குடும்பத்தினர் முயன்ற நிலையில், அவருக்கு ஒரு குழந்தை இருப்பதால் திருமணம் நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனிடையே ஸ்ரீமகேஷின் தந்தை காலமான நிலையில், அவர் கேரளாவுக்கு வந்துள்ளார்.

இதனிடையே தனது குழந்தையால்தான் தனக்கு திருமணம் ஆகவில்லை என்ற விரக்தியில் கடந்த ஜூன் 7-ம் தேதி தனது குழந்தை நக்‌ஷத்ராவின் தலையில் கோடாரியால் அடித்து ஸ்ரீமகேஷ் கொலை செய்துள்ளார்.

மேலும், இதனை பார்த்த தனது தாயையும் கொலை செய்து அங்கிருந்து தப்பியோடிய போது, அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து காவல்நிலையத்தில் பிடித்து ஒப்படைந்துள்ளனர்.

தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அங்கு கையால் கிழித்து ஸ்ரீமகேஷ் தற்கொலைக்கு முயன்றுள்ளார். எனினும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

பின்னர் அவரை திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைப்பதற்காக போலீஸார் கொல்லம் பயணிகள் ரயிலில் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது திடீரென போலீசாரை தள்ளிவிட்டு ஓடும் ரயிலில் இருந்து ஸ்ரீமகேஷ் கீழே குதித்துள்ளார்.

இதில் படுகாயமடைந்த அவரை போலிஸார் மருத்துவமனையில் அனுமதியுள்ளனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலனை துடிதுடிக்க வெட்டி படுகொலை.. காரில் இருந்து படியே ரசித்த காதலி!!

பொன்னேரியில்..

பொன்னேரியில் கள்ளக்காதலன் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட போது அவரது கள்ளக்காதலி பிரியா காரில் இருந்து ரசித்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பாலாஜி நகரை சேர்ந்த சசிகுமார் என்பவரின் மகன் கோபாலகிருஷ்ணன் (27). திருமணமாகாத இவர் தனியார் கூரியர் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், கணவரை பிரிந்து வாழும் பிரியாவுக்கும் கோபாலகிருஷ்ணணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு 2 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கோபாலகிருஷ்ணன் வேலை விஷயமாக அடிக்கடி வெளியூர் சென்று வந்துள்ளார்.

இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிரியா வேறொரு நபருடன் கள்ளத் தொடர்பில் இருந்துள்ளார். இதனையறிந்த கோபாலகிருஷ்ணன் அடிக்கடி பிரியாவிடம் செல்போனில் பேசி தொந்தரவு செய்து வந்துள்ளார்.

பிரியாவின் கள்ளக்காதலையும் கண்டித்துள்ளார். பிரியா தன்னை கழற்றிவிட்டதை அறிந்த கோபாலகிருஷ்ணன் வீட்டிற்கே சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பிரியா கள்ளக்காதலனை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி தனது காதலன் ரவுடி ஆனந்தன் மூலம் கூலிப்படையை சேர்ந்த 4 பேரை வைத்து கோபாலகிருஷ்ணனை வெட்டி படுகொலை செய்துள்ளார்.

இந்த கொலை சம்பவத்தை காரில் இருந்த படியே பிரியா ரசித்துள்ளார். இதனையடுத்து அந்த கும்பல் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை பிரியா வந்த காருக்குள் போட்டு விட்டு கொலையாளிகள் அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த சம்பவத்தை அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பிரியா சென்ற காரை புழல் அருகே வழிமறித்து பிடித்த போலீசார், அதிலிருந்த ரத்தக்கறை படிந்த அரிவாள் மற்றும் கத்திகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பிரியாவின் ரவுடி காதலன் ஆனந்தன் மற்றும் கூலிப்படையினரையும் போலீசார் கைது செய்தனர்.

தான் குற்றவாளி இல்லை என நிரூபிக்க சட்டம் படித்து வாதாடி வென்ற இளைஞர்!!

இந்தியாவில்..

12 ஆண்டுகளுக்கு முன்பு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர், சட்டம் படித்து வாதாடி தன்னை குற்றவாளி இல்லை என்று நிரூபித்துள்ளார். இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், பாக்பத் மாவட்டத்தைச் சேர்ந்த அமித் சௌத்ரி என்பவர் 12 ஆண்டுகளுக்கு கொலை வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

கடந்த 2011 -ம் ஆண்டு அமித் சௌத்ரி (அப்போதைய வயது 18) என்பவர் பாக்பத் மாவட்டத்திலுள்ள தனது சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு, ஏற்பட்ட பிரச்சனையில் இரண்டு காவலர்கள் தாக்கப்பட்டனர். அதில் ஒரு காவலர் உயிரிழந்தார், மற்றொருவர் படுகாயமடைந்தார்.

இந்த சம்பவத்தில் அமித் சௌத்ரி உடன் சேர்த்து மொத்தம் 17 பேரை குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இதில் அமித் சௌத்ரி பட்டப்படிப்பை மேற்கொண்டிருக்கும் போது தான் வழக்கில் சிக்கியுள்ளார். இதனால் அவரது படிப்பு தடையானது. பின்னர் 2 ஆண்டுகள் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்து மீண்டும் பட்டப்படிப்பை தொடர்ந்தார்.

இதன்பிறகு, இந்த வழக்கில் தன்னை குற்றவாளி இல்லை என்று நிரூபிப்பதற்காக எல்.எல்.எம் முதுநிலை சட்டம் பயின்றார். பின்னர், தன் மீது போடப்பட்ட வழக்கில் உள்ள தடயங்களையம், சாட்சிகளையும் சேகரித்ததில் அமித் சௌரி குற்றவாளி இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், அவர் மீதுள்ள வழக்குகளையும் நீக்கி உத்தரவிட்டது.

இதுகுறித்து அமித் சௌத்ரி பேசுகையில், “தன்னோடு குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட 11 பேருக்கு தான் உதவ விரும்புவதாகவும், அவர்களுக்கு இலவச சட்ட உதவிகளை வழங்கவிருப்பதாகவும்” தெரிவித்தார்.

திருச்சியில் குதிரைப் பால் விற்பனை அமோகம் : 1 லிட்டர் பாலின் விலை எவ்வளவு தெரியுமா!!

தமிழகத்தில்..

தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் குதிரை பால் விற்பனை அமோக வரவேற்பு பெற்று வருகிறது.தமிழகத்தின் திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை அடுத்த வாடிப்பட்டியில் இளைஞர் ஒருவர் குதிரைப் பால் விற்பனையை தொடங்கியுள்ளார்.

வங்கிப் பணியாளரான பாலசுப்பிரமணியன் நாட்டுக்குதிரை இனங்களை மீட்டெடுப்பது குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து நடத்தி வந்துள்ளார். அத்துடன் தற்போது தன்னுடைய வங்கி பணியை துறந்துவிட்டு முழுநேரமும் தன்னை குதிரை வளர்ப்பில் ஈடுபடுத்தி வருகிறார்.

மேலும் குதிரை சவாரி பயிற்சி அகாடமியையும் திறந்து நடத்தி வருகிறார்.இந்நிலையில் குதிரைப் பால் உடல் நலத்திற்கு நலம் தரக்கூடியது என்பதை உணர்ந்த பாலசுப்பிரமணியன் தேசிய குதிரைகள் தினமான டிசம்பர் 13ம் திகதி குதிரை பால் விற்பனையை தொடங்கியுள்ளார்.

நல்ல சத்துள்ள குதிரை ஒருநாளுக்கு 1லிட்டர் பால் மட்டுமே தரும் என்பதால், 1 லிட்டர் குதிரை பாலின் விலை 2,500 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளார்.பாலசுப்பிரமணியம் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டும் 100மி.லி முதல் 200 மி.லி என்ற அளவில் விற்பனை செய்து வருகிறார்.

விற்பனையின் தொடக்க கட்டத்தில் சோதனை முறையில் குதிரைப் பாலை வாங்கி சென்ற மக்கள் தற்போது அதன் சுவை பிடித்து போய் வழக்கமாக வாங்கி வருவதாக தெரிகிறது.

தாய் கழுத்தறுத்துப் படுகொலை : சந்தேகத்தின் பேரில் மகள் கைது!!

வெள்ளந்துறையில்..

தாய் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அவரது மகள் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கஹவத்தை – வெள்ளந்துறையில் கடந்த 13ஆம் திகதி, வினிதா ஜயசுந்தர என்ற 71 வயதுடைய பெண் வீட்டருகே கழுத்தறுத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் இளைய மகள் இன்று (16.12.2023) அதிகாலை 3.30 மணியளவில் கைது செய்யப்பட்டார் என்று கஹவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

38 வயதான திருமணமாகாத பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார், இவர் கஹவத்தை பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றுகின்றார்.

உயிரிழந்த பெண்ணின் இறுதிக்கிரியைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் கஹவத்தை பொலிஸ் நிலையப் பிரதான பொலிஸ் பரிசோதகர் கருணாரத்ன பிள்ளைகளையும் உறவினர்களையும் பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து சாட்சியங்களைப் பதிவு செய்தனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மகள் தனது தாயை வீட்டுக்குள் கழுத்தறுத்துக் கொலை செய்து சில மணித்தியாலங்களின் பின்னர் சடலத்தை வீட்டின் பின்னால் கொண்டு சென்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பின்னர், வீட்டினுள் சிதறிக் கிடந்த இரத்தக்கறைகளை அகற்றுவதற்காக வீட்டை முழுமையாகக் கழுவி அவர் சுத்தம் செய்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

கொலையைச் செய்து விட்டு, முற்பகல் 11.40 மணிக்கு தனது பணியிடத்துக்குச் சென்ற சந்தேகநபர், மாலை 3.40 மணியளவில் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியிருக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்பின்னர் சந்தேகநபர் கஹவத்தை பொலிஸாருக்குத் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு தாய் கொல்லப்பட்டுள்ளார் என்ற செய்தியைத் தெரியப்படுத்தியுள்ளார்.

இரத்தினபுரி மோப்ப நாய்ப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் போது சந்தேகநபரின் கைக்கடிகாரம் இறந்த தாயின் சடலத்திலிருந்து சில அடி தூரத்தில் கிடந்தது என்றும், மோப்ப நாய் வீட்டை விட்டு வெளியேறவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் வெளிவரும் உண்மைகளின் அடிப்படையில் வெளியார் ஒருவர் இதனைச் செய்திருக்க முடியாது எனத் தோன்றியதால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் என்று கஹவத்தை பொலிஸ் நிலையப் பிரதான பொலிஸ் பரிசோதகர் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

தாயை கண்டதும் ஒடிச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம் : கதறும் தாய்!!

மட்டக்களப்பில்..

மட்டக்களப்பு பகுதியொன்றில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்றைய தினம் (16-12-2023) ஏறாவூர் பொலிஸ் பிரிவு ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் ஏறாவூர், தாமரைக்கேணியை சேர்ந்த 16 வயது விசேட தேவையுடைய அமீர்தீன் யாசிர் அறபாத் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,தாயை எதிர்பார்த்து பேருந்து தரிப்பிடத்தில் இருந்த இச்சிறுவன், தாயை கண்டதும் வீதியை கடந்து தாயிடம் ஓடிச் செல்லும் போது, பிரதான வீதியால் பயணித்த தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு சொந்தமான பஸ் ஒன்றுடன் மோதியுள்ளது.

இதன்போது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து பேருந்தின் சாரதி ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவனின் சடலம் 1990 விசேட அம்பியுலன்ஸ் மூலம் ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுகோளின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற மரண விசாரணை அதிகாரி எம்.எஸ். எம்.. நஸீர், விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்காக பிரேதத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தார்.

மேலும், சிறுவனின் தாய் யாசகம் பெறுவதற்காக கல்முனை சென்று ஊர் வரும்போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. குறித்த விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

மக்களே அவதானம் : இலங்கையை சூழவுள்ள பகுதிகளில் வளிமண்டல தளம்பல்நிலை அதிகரிப்பு!!

இலங்கையில்..

இலங்கையை சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற கீழ் வளிமண்டலத் தளம்பல்நிலை காரணமாக, மழை வீழ்ச்சி மேலும் தொடரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, மற்றும் வடமேல் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சிக்கான சாத்தியம் காணப்படுவதுடன் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொழும்பிலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

2024 ஆம் ஆண்டு பாடசாலை கல்வி நடவடிக்கைகள் மற்றும் விடுமுறை : கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்!!

பாடசாலை விடுமுறைகள்..

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்துப் பாடசாலைகளினதும் 2024 ஆம் கல்வி ஆண்டிற்கான கல்வி நடவடிக்கைகள் மற்றும் விடுமுறைகள் தொடர்பில் அறித்தல் வெளியாகியுள்ளது. குறித்த அறிவித்தலை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

கல்வி அமைச்சு பாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிவித்தலில்,2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாகும் முதலாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதையடுத்து, விடுமுறை வழங்கப்பட்டு, முதலாம் தவணையின் 2 ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் 24 ஆரம்பமாகும் என்பதுடன், மே மாதம் 5 ஆம் திகதி வரை நடைபெறும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

பின்னர், விடுமுறை வழங்கப்பட்டு, முதலாம் தவணையின் 3 ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக ஜூன் மாதம் 10 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு ஜுன் மாதம் 25 ஆம் திகதி வரை கல்வி நடவடிக்கைகள் நடைபெறவுள்ளன.

இதையடுத்து, முதலாம் தவணை விடுமுறை வழங்கப்பட்டு, 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஜூலை மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. பின்னர், 3 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகள் 2 கட்டங்களாக நடத்தப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, 3 ஆம் தவணையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி வரையும், 2 ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகள் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

சொத்து வரியை விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை!!

சொத்து வரி..

2025ஆம் ஆண்டளவில் அரசாங்கத்தின் வருமான இலக்குகளை எட்டுவதற்கு அடுத்த வருடம் முதல் சொத்து வரியை நடைமுறைப்படுத்துவது மிகவும் கட்டாயமானது என சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது. நிதியத்தின் இலங்கைக்கு பொறுப்பான தலைவர் பீட்டர் போவர் இது குறித்து தெரிவித்துள்ளதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.

அதற்கு முன், நாட்டில் உள்ள அனைத்து சொத்துக்களையும் முறையாக மதிப்பீடு செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.அதற்கு பின்னரே அதற்கு வரி வசூலிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், வரி விதிக்கப்படும் சொத்தை முறையாக பதிவு செய்திருப்பது அவசியம் என்பது சர்வதேச நாணய நிதியத்தின் முடிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிபிசி அறிக்கைக்கமைய, இலங்கை எதிர்பார்த்த வரி வருவாய் இலக்குகளை இதுவரை எட்டாத காரணத்தால், சர்வதேச நாணய நிதியம் இதனைப் பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

நாணய நிதி நிதியம் இலங்கைக்கு ஒதுக்கப்பட்ட 290 மில்லியன் அமெரிக்க டொலர்களின் விரிவான கடன் தொகையில் இதுவரை இரண்டு தவணைகளில் 670 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. மேலும் அடுத்த கடன் தவணைகளை அனுமதிக்கும் முன் அடுத்த மறுஆய்வு அடுத்த மார்ச் – ஏப்ரல் மாதங்களுக்கு இடையே செய்யப்பட உள்ளது.