4 வயதுச் சிறுவன் அதிர்ச்சி மரணம்… கதறும் பெற்றோர்!!

சென்னையில்..

சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது மகன் உயிரிழந்த சம்பவம், அவனது பெற்றோர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகனை இழந்த பெற்றோர் கதறியழுத்தது நெஞ்சை உலுக்குவதாக இருந்தது.

சென்னை மதுரவாயல், பிள்ளையார் கோவில் தெருவில் வசிப்பவர் அய்யனார். இவரது மனைவி சோனியா. இவர்களது மகன் ரக்சன் (4). இந்நிலையில் சிறுவன் ரக்சன் கடந்த சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தான். இதையடுத்து அவனது பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு ரத்த பரிசோதனை செய்த போது சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக கடந்த 6ம் தேதி எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் ரக்சனை சேர்த்துள்ளனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சிறுவன் ரக்சன் பரிதாபமாக உயிரிழந்தான். டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரவாயல் பகுதியில் மழைநீர் தேங்கி சுகாதார சீர் கேடு நிலவுகிறது. இதனால் டெங்கு காய்ச்சல் பரவியதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் நடவடிக்கை எடுக்கும் வரை இறுதிச் சடங்கு நடைபெறாது என உறவினர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியரின் உயிரைப் பறித்த சூதாட்டம் : பணத்தை இழந்த விரக்தியில் எடுத்த விபரீத முடிவு!!

திருப்பூரில்..

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ரோடு, கேட்டுத்தோட்டம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.

இந்தத் தகவல் அறிந்து சென்ற திருப்பூர் ரயில்வே போலீஸ் உதவி ஆய்வாளர் பாபு, போலீஸார், இறந்தவரின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். இதில், இறந்தவர் ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த சாய்குமார் (32) என்பதும், இவர் கோவையில் தங்கியிருந்து தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

இந்த நிலையில், சாய்குமார் ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகி, அதில் அதிக அளவு பணத்தை இழந்திருக்கிறார் என்பது தெரியவந்தது. மேலும், சொந்த ஊரிலுள்ள தனது குடும்பத்தினர், நண்பர்களிடம் தனக்கு பணத் தேவை என பல லட்ச ரூபாய் கடன் வாங்கி அந்தப் பணத்தை வைத்து ஆன்லைன் சூதாட்டம் விளையாடி வந்திருக்கிறார்.

ஒருகட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகிய சாய்குமார் தனக்குப் பணம் அனுப்புமாறும், இல்லையென்றால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்வதாகவும் குடும்பத்தினரிடம் செல்போனில் பேசியிருக்கிறார். ஆனால், பணம் கொடுத்தால் சாய்குமார் மீண்டும் ஆன்லைன் சூதாட்டம் விளையாடுவார் என்று எண்ணி குடும்பத்தாரும் பணம் கொடுக்கவில்லை.

இந்த நிலையில், பணம் இல்லாத விரக்தியில், திருப்பூர் வந்த சாய்குமார் ஊத்துக்குளி ரோடு கேட்டுத் தோட்டம் பகுதியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இது குறித்து ரெயில்வே போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர்.

1½ வயது குழந்தையை மாடியிலிருந்து வீசிக்கொன்ற தந்தை : மதுவால் நடந்த விபரீதம்!!

மகாராஷ்டிராவில்..

மகாராஷ்டிராவில் சண்டையால் மனைவி மீது ஏற்பட்ட ஆத்திரத்தில் மாடியில் இருந்து 1½ வயது குழந்தையை வீசி கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர். தானே மாவட்டம் தைகர்காவ் அபய்நகர் பகுதியைச் சேர்ந்தவர் அல்டாப் முகமது.

இவர் தனது மனைவி மற்றும் 1½ வயது மகளுடன் வசித்து வந்தார். அல்டாப் முகமதுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து, மனைவியுடன் தகராறு செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 8ம் தேதி மாலை 6 மணி அளவில் வேலை முடிந்து அல்டாப் முகமது மதுகுடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது, இது தொடர்பாக மீண்டும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், கடும் ஆத்திரம் அடைந்த அல்டாப் முகமது மனைவியை அடித்து உதைத்துள்ளார்.

இருப்பினும் கோபம் அடங்காத அவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 1½ வயது மகளைத் தூக்கிக் கொண்டு மாடிக்கு சென்ற அவர், அங்கிருந்து பெற்றக் குழந்தை என்றும் பாராமல் கீழே வீசினார். இதில் படுகாயம் அடைந்த குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இது பற்றி அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அல்டாப் முகமதுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிணற்றில் குதித்து தற்கொலை செய்த இளம் பெண்.. தாய் கண்டித்ததால் விபரீதம்!!

திருப்பூரில்..

திருப்பூர் மாவட்டம் பாரபாளையம் பகுதியில் வசித்து வருபவர் விஜி . இவர் தனது தாய் மற்றும் தங்கையுடன் இருந்து வரும் நிலையில் அதே பகுதியில் இருக்கும் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

விஜி கடந்த ஒரு ஆண்டாக விஜி அதே பகுதியில் வசிக்கும் இளைஞரை காதலித்து வந்தார். இதனை விஜியின் தாய் கண்டித்துள்ளார். செப்டம்பர் 7ம் தேதி வழக்கம் போல் வேலைக்குச் சென்றவர் பின்னர் வீட்டுக்கு திரும்பவில்லை.

குடும்பத்தினர் விஜியை தெரிந்த இடங்களில் எல்லாம் தேடிப் பார்த்தனர். அவர் எங்கும் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் பாரப்பாளையத்தில் உள்ள பரமசிவன் கோவில் கிணற்றில் பெண் சடலம் ஒன்று கிடந்தது. அதனை பரிசோதித்ததில் அந்த பெண் சடலம் விஜியினுடையது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. போலீஸார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் காதலுக்கு தாய் பச்சைக்கொடி காட்டாமல் எதிர்ப்பு தெரிவித்து கண்டித்து வந்ததால் விஜி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

காதலனை குத்திக் கொலை செய்த காதலி வழங்கிய பரபரப்பு வாக்குமூலம்!!

பெங்களூருவில்..

கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் வசித்து வருபவர் ரேணுகா . இவர் கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் வசித்து வரும் ஜாவத்தை காதலித்து வந்தார். இதில் ஜாவத் மொபைல் பழுது பார்க்கும் கடையில் பணிபுரிந்து வந்தார்.

ரேணுகா தனியாக வாடகை வீட்டில் தங்கியிருந்த நிலையில், இருவரும் ஒன்றாக வாழ முடிவு செய்து பெங்களூருவில் உள்ள அக்ஷயா நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருவரும் ஒரே வீட்டில் லிவ்-இன் உறவில் இருந்து வந்தனர்.

தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்க்கை சுமூகமாக போய்க் கொண்டிருந்த நிலையில் கடந்த சில மாதமாக இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வந்தது. ஜாவத் இவரை விட்டு மற்றோரு பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.

ஜாவத் வேறொரு பெண்ணுடன் பழகுவதை அறிந்த ரேணுகா அவரிடம் கேட்டு சண்டை போட்டுள்ளார். ஜாவத்தின் பெண் தோழியால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

அப்போது ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற ரேணுகா, அருகில் இருந்த கத்தியை எடுத்து ஜாவத்தின் நெஞ்சு பகுதியில் சராமாரியாக குத்தியுள்ளார்.

இதனால் ஜாவத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதன் பிறகு தான் தவறை உணர்ந்த ரேணுகா, தனது காதலன் ஜாவத்தின் உடலை தன்னுடைய மடியில் வைத்து கதறி கதறி அழுதுள்ளார்.

அவரது கதறல் சத்தம் அக்கம் பக்கத்தினருக்கு கேட்கவே ஓடி வந்த பார்த்த அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ், ஜாவத்தின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே பரிசோதித்த மருத்துவர்கள் ஜாவத் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார், குற்றவாளி ரேணுகாவை கத்தியோடு கைது செய்தனர்.

தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. வேறு ஒரு பெண்ணுடன் பேசியதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், தனது காதலனை கத்தியால் குத்தி கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இச்செயல் அப்பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

திருமண வீட்டில் சோகம்.. சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவன் பரிதாபம்.!!

திருவாரூரில்..

வீட்டில் சுபநிகழ்வுகள் நடைபெறும் போது நம் கவனக்குறைவால் சில விபரீதங்கள் நிகழ்ந்துவிடுவதுண்டு. அந்நேரத்தில் சுப வீடு துக்கவீடாக மாறிவிடும். அந்த வகையில் திருவாரூரில் திருமணத்திற்காக பந்தல் போடும் வேளையில் வீட்டின் கூரையை பிரித்த போது சுவர் இடிந்து விழுந்து 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் தீபங்குடி தெற்குத் தெருவில் வசித்து வருபவர் விவசாய கூலித் தொழிலாளி ராஜசேகர். இவரது மகன் கனிஷ் .கனிஷ் அரசு நடுநிலைப் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் ராஜசேகரின் சகோதரர் பீட்டருக்கு திருமணம் நடைபெற இருந்தது. தங்களது ஓட்டு வீட்டின் முன்பக்கம் உள்ள கூரை கொட்டகையில் இருந்த கீற்றுகளை அகற்றிவிட்டு பந்தல் போடுவதற்கான வேலை நடந்து வந்தது.

வேலையாட்கள் கீற்றுகளை பிரித்து விட்டு கீற்று போடுவதற்காக விட்டுச் சென்ற நிலையில் அந்த கூரைக் கொட்டகையில் உள்ள மண்சுவர் அருகே விளையாடிக் கொண்டிருந்தான்.

திடீரென கனிஷ் மீது மண் சுவர் இடிந்து விழுந்துள்ளது. சுவர் மேலே விழுந்ததால் சிறுவனால் குரல் எழுப்ப முடியவில்லை. இடிபாடுகளுக்கிடையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான்.

இதனை சிறிது நேரம் கழித்து தான் குடும்பத்தினர் கவனித்தனர். உடனடியாக சிறுவனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து குடவாசல் போலீசார் சிறுவனின் உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கலகலப்பாக இருந்த கல்யாணவீடு துக்கவீடாக மாறியுள்ளது.

பாலாடைக்கட்டியை சாக்லேட் போல் சாப்பிட்ட பெண் : 33 உலக சாதனைகள்!!

பாலடைக்கட்டி..

உங்களால் அரைக் கிலோ பாலடைக்கட்டியை (Cheese) ஒரே வேளையில் சாப்பிட முடியுமா? இப்படி யாராவது உங்களுக்கு சவால் விட்டால்? நீங்கள் நிச்சயம் யோசிப்பீர்கள்.

ஆனால், ஐரோப்பிய பெண்மணி லியா ஷட்கேவர் அப்படியல்ல. அதனை நொடிகளில் சாப்பிடுகிறார். சமீபத்தில் அரைக்கிலோ சீஸ் சாப்பிட்டு உலக சாதனை படைத்துள்ளார். இது மட்டும் அவரது சாதனையல்ல, அவர் மொத்தம் 33 கின்னஸ் உலக சாதனை பட்டங்களைப் பெற்றுள்ளார்.

லியா ஷட்கேவர், சீஸ் சவாலை ஏற்றுக்கொண்டது மட்டுமின்றி, 1 நிமிடம் 2.34 வினாடிகளில் 500 கிராம் மொஸரெல்லா சீஸ் சாப்பிட்டு உலக சாதனை படைத்துள்ளார். இந்த வீடியோவை கின்னஸ் உலக சாதனையாளர்கள் தங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

வீடியோவில், லியா ஷட்கேவரின் முன் ஒரு மேஜையில் ஒரு வெள்ளைத் தட்டில் இரண்டு பாரிய மொஸரெல்லா சீஸ் இருப்பதைக் காணலாம். டைமர் தொடங்கும் போது அவர் இரண்டையும் சாப்பிடுகிறார்.

இரண்டாவது பிளாக் சாப்பிடும் போது, ​​அவளுக்கு ஏதோ பிரச்சனை இருப்பது போல் தோன்றியது, ஆனால் அவர் சாதனையை முறியடித்தார். அதுமட்டுமின்றி, அவர் ஏற்கனவே 33 கின்னஸ் உலக சாதனை பட்டங்களை தனது பெயரில் வைத்துள்ளார். அவள் ஒரு தொழில்முறை உணவு உண்பவள் என்பது குறிப்பிடத்தக்கது.

1 நிமிடம் 2.34 வினாடிகளில் சாப்பிட்டு, 500 கிராம் மொஸரெல்லாவை வேகமாக நேரத்தில் சாப்பிட்டவர் என்ற சாதனையை லியா ஷட்கேவர் படைத்துள்ளார். லியா ஷட்கேவர் தனது சாதனை முயற்சியின் போது இரண்டு முறை குமட்டினார். இருப்பினும் தனது பிடியை விட்டுக் கொடுக்காமல் சாதனைகளை படைத்தார்.

திருவிழாவில் மின்சாரம் தாக்கி 7 வயது சிறுவன் பலி.. சோகத்தில் மூழ்கிய கிராமம்!!

ராமநாதபுரத்தில்..

திருவிழா என்றாலே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். ஆனால் சில நேரங்களில் கவனக்குறைவு, அலட்சியம் காரணமாக விபரீதங்கள் நிகழ்ந்து விடுவதுண்டு. அந்த நேரங்களில் சந்தோஷம் முற்றிலும் வடிந்து சோகமான சூழ்நிலையாக மாறிவிடுவதுண்டு.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மேலாயக்குடி கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் உறியடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. உறி அடித்த பின்பு அந்த பானையின் கயிற்றை பிடித்து இழுத்து அங்கிருந்த சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர்.

அப்போது அதன் அருகில் சென்ற மின்சார கம்பி மீது அந்த கயிறு உரசிவிட்டது.இதனால் விளையாடிக்கொண்டிருந்த 4 சிறுவர்களும் படுகாயம் அடைந்தனர்.

அதில் பரமக்குடி மணி நகரில் வசித்து வரும் முருகன் என்பவரின் மகன் கபினேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். கபினேஷுக்கு வயது 7.
அந்த சிறுவன் சோமநாதபுரத்தில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.

அவனது அண்ணன் கோகுல ராகுல் (10) படுகாயம் அடைந்து மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளான். முருகன் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். சொந்த ஊரான மேலாயக்குடியில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்கு சிறுவர்கள் தனது தாயார் அனுசுயா தேவியுடன் சென்றுள்ளனர்.

அப்போது தான் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் குறித்து எமனேஸ்வரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி சிறுவன் பலியானது கிராமம் முழுவதுமே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெண் தோழியிடம் பேசிய காதலன் நெஞ்சில் பலமுறை குத்திக் கொன்ற காதலி!!

பெங்களூருவில்..

வேறு ஒரு பெண்ணுடன் பேசியதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், தனது காதலனை கத்தியால் குத்தி கொன்ற காதலியின் செயல் பெங்களூருவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் ரேணுகா (எ) ஷீலா (34). இவர் இருக்கும் அதே பகுதியில் கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த ஜாவத் (24) என்பவர் செல்போன் பழுது பார்க்கும் கடையில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்த சூழலில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் பப்பில் சந்தித்த இவர்களது நட்பு பழக்கம் காதலில் முடிந்துள்ளது. ரேணுகா தனியாக வாடகை வீட்டில் தங்கி வந்த நிலையில், இருவரும் ஒன்றாக வாழ எண்ணியுள்ளனர்.

அதன்படி பெங்களூருவில் உள்ள அக்ஷயா நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருவரும் ஒரே வீட்டில் லிவ்-இன் உறவில் இருந்து வந்துள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இருவரும் நன்றாக இருந்து வந்த நிலையில், கடந்த சில மாத காலமாக இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டு வந்துள்ளார்.

இந்த சமயத்தில் ஜாவத் வேறு ஒரு பெண்ணுடன் பழகி வந்துள்ளார். ஜாவத் வேறொரு பெண்ணுடன் பழகுவதை அறிந்த ரேணுகா அவரும் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் மேலும் இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்படி தான் சம்பவத்தன்றும் ஜாவத்தின் பெண் தோழியால் இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டுள்ளது.

அப்போது ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற ரேணுகா, அருகில் இருந்த கத்தியை எடுத்து ஜாவத்தின் நெஞ்சு பகுதியில் குத்தியுள்ளார். தொடர்ந்து ஆத்திரம் அடங்காமல் குத்திக்கொண்டே இருந்துள்ளார்.

இதில் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே ஜாவத் உயிரிழந்தார். இதையடுத்து தான் செய்ததை உணர்ந்த காதலி ரேணுகா, தனது காதலன் ஜாவத்தின் உடலை தன்னுடைய மடியில் வைத்து கதறி கதறி அழுதுள்ளார்.

இந்த சம்பவம் அக்கம்பக்கத்தினருக்கு தெரியவரவே அவர்கள் இதுகுறித்து போலீஸ், ஆம்புலன்சுக்கு தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த ஆம்புலன்ஸ், ஜாவத்தின் உடலை மீட்டு மருத்துவனமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே பரிசோதித்த மருத்துவர்கள் ஜாவத் ஏற்கனவே, உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனிடையே சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், குற்றவாளி ரேணுகாவை கத்தியோடு கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

வேறு ஒரு பெண்ணுடன் பேசியதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், தனது காதலனை கத்தியால் குத்தி கொன்ற காதலியின் செயல் பெங்களூருவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாழ் நல்லூர் கந்தன் ஆலயத்தில் பலரின் கவனம் ஈர்த்த குழந்தை!!

யாழில்..

யாழ்ப்பாணம் , வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா இடம்பெற்று வருகின்றது.

திருவிழாவின், 22ஆம் நாளான இன்று மாம்பழ திருவிழா (தெண்டாயுதபாணி உற்சவம்) சிறப்பாக நடைபெற்ற நிலையில் ஆலயத்திற்கு வருகை தந்த குழந்தையொன்று பக்தர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தெண்டாயுதபாணி போல வஸ்திரம் அணிந்த குழந்தை ஆலயத்தின் முன் மாம்பழத்துடன் அமர்ந்துள்ள புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

சிங்கப்பூரில் மனைவியை கொன்றதாக இலங்கையர் மீது குற்றச்சாட்டு!!

சிங்கப்பூரில்..

சிங்கப்பூரில் இலங்கையரொருவர் தனது மனைவியை படுகொலை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.சிங்கப்பூரின் கிழக்கு கரையோர வீதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் தனது மனைவியை படுகொலை செய்து விட்டு அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இஷான் தாரக கோட்டகே என்ற நபர் மீதே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.32 வயதான செவ்வந்தி மதுகா குமாரி என்ற பெண்ணே சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

மின்மாற்றியுடன் மோதி விபத்துக்குள்ளான பேருந்து!!

அம்பலாந்தோட்டையில்..

அம்பலாந்தோட்டை நகரில் தனியார் பேருந்து ஒன்று மின்சார சபையின் மின்மாற்றியுடன் மோதி முற்றாக சேதமடைந்துள்ளதுடன், அம்பலாந்தோட்டை நகரிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இரண்டு தனியார் பேருந்துகளுக்கிடையில் ஏற்பட்ட போட்டி காரணமாக தனியார் பேருந்தில் ஏறிய ஒரு குழுவினர், சாரதியை தாக்கியதுடன் பேருந்தை அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலையத்தை நோக்கிச் செலுத்துமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.

இதன்போது கட்டுப்பாட்டையிழந்த பேருந்து மின்மாற்றியுடன் மோதியுள்ளது.இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்

காதலனுக்கு வந்த சந்தேகம் : பரிதாபமாக உயிரிழந்த யுவதி!!

எல்லக்கலவில்..

ஹோட்டல் ஒன்றில் வைத்து காதலன் தாக்கியதில் பலத்த காயங்களுக்குள்ளாகி வத்துபிட்டிவல போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த காதலி உயிரிழந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

எல்லக்கல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த 2ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் விவசாய பட்டதாரியான குருணாகல் ரிதிகம பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார்.காதலியை தாக்கிய காதலன் இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடையவர் ஆவார்.

அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.தாக்குதலுக்கு உள்ளான காதலி வேறு ஒரு இளைஞருடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாக காதலனுக்கு எழுந்துள்ளது. அந்த சந்தேகத்தின் அடிப்படையிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொலிஸ் காவலில் உயிரிழந்த ராஜகுமாரி வழக்கில் புதிய தகவல்!!

வெலிக்கடையில்..

பொலிஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்த வீட்டுப்பணிப்பெண் ராஜன் ராஜகுமாரி மரணத்தின் பின்னர் வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட பொறுப்பதிகாரி மீண்டும் அதே பதவியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக நீதிமன்றத்தில் இன்று தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் ஆஜரான சட்டத்தரணி சேனக பெரேரா, நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.இதேவேளை, ராஜன் ராஜகுமாரி மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வெலிக்கடை பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வரும் எதிர்வரும் 18ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதேவேளை, இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் இன்று அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

எனினும்,பிரதிவாதிகள் சார்பில் முன்வைத்த ஆட்சேபனையின் அடிப்படையில் , அடையாள அணிவகுப்பை ரத்து செய்த கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனுவல, சந்தேகநபர்களை எதிர்வரும் 18ஆம் திகதி மீண்டும் அடையாள அணிவகுப்புக்காக ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்

யாழில் இறந்த ஒருவரின் வீட்டில் நடமாடும் தீய சக்திகள்: பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!

யாழில்..

யாழ்ப்பாணம் – அச்சுவேலியில் உயிரிழந்த ஒருவரின் வீட்டில் தீய சக்திகளின் நடமாட்டம் தொடர்ச்சியாக இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.அண்மையில் குறித்த வீட்டில் ஒருவரின் இறப்பிற்கு சென்ற பெண்ணும் அந்த வீட்டில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் வீட்டில் ஒவ்வொரு நாளும் மர்ம சத்தங்கள் கேட்பதும் வீட்டிற்குள் மண்ணை அள்ளித் தூவுவதும் ஜன்னல் கதவுகளை அடிப்பதும், புகை போன்ற உருவம் சத்தத்துடன் வருவதும் போன்ற சம்பவங்கள் இடம்பெற்று வந்தன.அதனை வீட்டின் உரிமையாளர் தனது தொலைபேசியில் நடுநிசி 1.00 மணியளவில் காணொளி எடுத்துள்ளார்.

எடுக்கப்பட்ட வீடியோவில் ஆவி ஒன்று நாற்காலியை பல்வேறு கோணங்களில் சுழற்சியும் ஆட வைத்தும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.சம்பவத்தை தொடர்ந்து வீட்டில் இருந்தவர்கள் தற்காலிகமாக வேறு வீட்டில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆழ்கடலில் கண்டுபிடிக்கப்பட்ட தங்க முட்டை : ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்!!

அமெரிக்காவில்..

அமெரிக்காவின் அலாஸ்கா வளைகுடாவில் 3,300 அடி ஆழத்தில் விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ‘தங்க முட்டை’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முட்டை என சந்தேகிக்கப்படும் இந்த மர்ம பொருள் குறித்து தற்போது அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இதன் முதற்கட்ட பரிசோதனையில் இந்த மர்மப்பொருள் உயிரியல் தோற்றம் கொண்டது என தெரியவந்துள்ளது.முட்டை வடிவிலான இந்த பொருள் வெடித்து சிதறியதால், ஏதேனும் உயிரினம் வெளியே வந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இருப்பினும், இந்த பொருள் எந்த விலங்கின் முட்டை என்பது யாருக்கும் தெரியாது. இப்படி ஒரு பொருள் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல் முறை.

இந்த மர்மமான பொருளின் அகலம் 10 செ.மீ. இது உண்மையிலேயே முட்டையாக இருந்தால், கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்படாத உயிரினமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் ஊடகங்களில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அமெரிக்காவின் பெருங்கடல் மற்றும் வளிமண்டல ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கடலுக்கு அடியில் ஆய்வு மேற்கொண்டபோது இந்த முட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.