மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் கல்வா பகுதியில் வசித்து வருபவர் திலீப் சால்வி. இவருக்கு வயது 56. இவரது மனைவி பிரமிளா வயது 51. திலீப் சால்வே தானே மாவட்ட முன்னாள் மேயர் கணேஷ் சால்வியின் சகோதரன் .
தீலிப் சால்வே நேற்று இரவு 10 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, திலீப்பிற்கும் அவரது மனைவி பிரமிளாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் துப்பாக்கியால் தன் மனைவி பிரமிளாவை திலீப் 2 முறை சுட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் பிரமிளா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். மனைவியை சுட்டுக்கொன்ற சில நிமிடங்களில் திலீப்பிற்கு மாரடைப்பு ஏற்பட்டது.
இதனால், அவரும் சுருண்டு விழுந்தார்.துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டு விரைந்து வந்த திலீப்பின் மகன் தன் தாயார் ரத்த வெள்ளத்தில் கிடப்பதையும், தந்தை மயங்கி கிடப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
திலீப் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். மனைவியை சுட்டுக்கொன்ற கணவன் மாரடைப்பால் உயிழந்த நிலையில் இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இங்கிலாந்தில்..காதலுக்கு சாதி, மதம், நிறம் மட்டுமல்ல, நாடுகளும், கண்டங்களும் தடையில்லை என்பதை இந்த ஜோடியின் காதல் திருமணம் நிரூபித்துள்ளது. பெரியவர்களை வற்புறுத்தி குடும்பத்தார் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
அந்த இளைஞரின் பெயர் பென், பிரித்தானியாவைச் சேர்ந்தவர். பெற்றோர் ரோஜர் நைஜல் மற்றும் ஜீன் லைட்டோவ்லர். அந்தப் பெண்ணின் பெயர் சிந்துரா. தெலுங்கானா மாநிலம் மஞ்சிரியாலா மாவட்டம் லக்ஷெட்டிபேட் மண்டலத்தைச் சேர்ந்த கோட்டா மகேந்தர் மற்றும் சுஜாதலா தம்பதியரின் மகள்.
மேற்படிப்புக்காக இங்கிலாந்து சென்ற சிந்துரா, பிரிட்டிஷ் பல்கலைக்கழகத்தில் பென்னை காதலித்தார். இருவருக்கும் இனம், மொழி, மதம் எல்லாம் வெவ்வேறானாலும் இவர்களின் காதலை எதுவும் தடுக்கவில்லை.
இரு வீட்டாரும் இவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவித்ததையடுத்து, பெரியவர்கள் முடிவு செய்த முஹூர்த்தத்தில் ஹைதராபாத்தில் உள்ள ஷமீர் பேட்டா ரிசார்ட்ஸில் இந்து பாரம்பரியத்தில் சொந்த பந்தங்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றது.
பிரித்தானியாவின் சேர்ந்த பென் மற்றும் லக்ஷெட்டிபேட்டையைச் சேர்ந்த சிந்துரா ஆகியோரின் திருமணத்தில் மணமகனின் பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டு புதுமணத் தம்பதிகளை ஆசிர்வதித்தனர்.
இங்கிலாந்தில் எம்எஸ் படிக்கும் போது சக மாணவரான பென் லைட்டவ்லரை சந்தித்த சிந்துரா அது காதலாக மாறியது. தற்போது பென் லைட்டவ்லர் ஜெர்மனியிலும், சிந்துரா இங்கிலாந்திலும் பணிபுரிந்து வருகின்றனர்.
பென்னின் பெற்றோர் கூறுகையில், இந்தியாவில் இருக்கும் பாரம்பரியங்கள் தங்களுக்கு பிடிக்கும் என்றும், தங்கள் நாட்டில் அப்படிப்பட்ட திருமண முறைகள் இல்லை என்றும், சிந்துரா தங்கள் குடும்ப உறுப்பினராக இருப்பதால் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளனர்.
இந்து மரபுகள், பழக்கவழக்கங்கள் மற்றும் திருமண நடைமுறைகள் பற்றி அறிந்த பென் ஹைதராபாத்தில் திருமணம் செய்து கொள்ள ஆர்வம் காட்டினார். பென் முதன்முதலில் தனது பெற்றோர்களான ரோஜர் நைகல் மற்றும் ஜீன் லைட்டோவ்லர் ஆகியோரிடம் தனது முடிவைக் கூறியபோது, அவர்கள் உடனடியாக ஓகே சொன்னார்கள். என்ன இருந்தாலும் காதல் என்றால் இதுதான் என்பது போல பென் சிந்துராலாவின் திருமணம் நடந்தது.
பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த பிரபல நடிகை சிலவினா லுனா உயிரிழந்தார். பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிரபல நடிகை திடீர் அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்தவர் சில்வினா லூனா. இவர் பிரபல நடிகையும் மாடல் அழகியுமாவர்.
கடந்த 2011ம் ஆண்டு இவர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு அவருக்குச் சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதற்காக மருத்துவமனை சென்று சோதனை செய்தபோது அவருக்கு சிறுநீகர மாற்று அறுவை சிகிச்சை செய்தே தீர வேண்டும் என தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு மூன்று முறை டயாலிசிஸ் செய்யப்பட்டது.
பின்னர் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து 79 நாட்களாக மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த தகவலை அவரது வழக்கறிஞர் உறுதிப்படுத்தி தெரிவித்தள்ளார். இதையடுத்து உயிரிழந்த சில்வினா லூனாவிற்கு அவரது ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் சில்வினா லூனா பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்தபோது அவருக்குத் தடை செய்யப்பட்ட மருத்துகள் பயன்படுத்தப்பட்டதாலேயே அவருக்குச் சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டது எனவும் கூறப்படுகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் பார்த்திபன்.இவர் அதே பகுதியில் ஊதுபத்தி தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். தொழிற்சாலையில் ஆண்கள் பெண்கள் என சுமார் 20க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இதில் காமராஜ்புரம் பகுதியில் வசித்து வரும் கூலி தொழிலாளி கண்ணன் என்பவரின் 17 வயது மகன் மோகன் 10 ம் வகுப்பு வரை படித்து விட்டு கடந்த சில மாதங்களாக ஊதுபத்தி தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.
வழக்கம் போல் நேற்று காலை பணிக்கு வந்து மோகன் ஊதுவத்தி மாவு கலக்கும் இயந்திரத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது சிறுவனின் கை இயந்திரத்தில் சிக்கி சிக்கியது. உடனடியாக அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த சக தொழிலாளிகள், அவரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி மோகன் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சிறுவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்த வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமண வைபவத்திற்கு சென்றுவிட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் தனியார் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இடம்பெற்ற விபத்தில் வஸ்கடுவ பிரதேசத்தில் வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தந்தையான சுகத் தயானந்த என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்டு வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த போது, களுத்துறையிலிருந்து வஸ்கடுவ, வாடியமங்கட சந்திக்கு அருகில் வந்த பேருந்துடன் முச்சக்கரவண்டி மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பேருந்துடன் மோதிய முச்சக்கரவண்டி அதன் பயணிகளுக்கு முன்னால் சில மீற்றர் தூரம் இழுத்துச் சென்றதாகவும், பலத்த காயமடைந்த நபர் களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாகவும் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார். பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகளின் பின்னர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
கம்பஹாவில் பேஸ்புக்கில் வெளியான விளம்பரம் மூலம் ஆப்பிள் கையடக்க தொலைபேசி வாங்க வந்த இளம்பெண் ஒருவர் அதை சோதனை செய்வதாக கூறி அதனை எடுத்துக் கொண்டு தப்பியோடியுள்ளார்.குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் உடுகம்பலை பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் இருந்து வெளிநாட்டிற்கு செல்பவர்களுக்கு விரிவுரைகள் வழங்கும் பணியில் அவர் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.அவரிடம் இருந்து சுமார் ஒரு லட்சத்து 20ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆப்பிள் கையடக்கத் தொலைபேசியையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.முறைப்பாட்டாளர் தனது கையடக்க தொலைபேசியை விற்க பேஸ்புக்கில் விளம்பரம் செய்துள்ள நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட விளம்பரத்தைப் பார்த்த குறித்த பெண் அதனை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளார்.அதற்கமைய, கம்பஹாவிலுள்ள தனியார் தொலைபேசி நிறுவனம் ஒன்றின் கிளைக்கு அதனை கொள்வனவு செய்வதற்காக நேற்று முன்தினம் வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
யாழில் 08 வயது சிறுமியின் இடது கை , மணிக்கட்டின் கீழ் அகற்றப்பட்டுள்ள நிலையில் சிறுமி தொடர்ந்தும் யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். இது தொடர்பில் சிறுமியின் தாத்தா சுப்பையா கனக நாயகம் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 22 ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டிருந்தது சரவணபவன் வைத்தியர் மூலம் மருந்துகளை பெற்றுக் கொண்டோம் மருந்துகளை எடுத்தும் தொடர்ந்தும் காய்ச்சல் இருந்ததால் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் விடுதியில் வைத்திருந்தோம்.
அங்கு இருக்கின்ற தாதியர்கள் எனது பேத்திக்கு கையில் ஊசி மருந்து செலுத்துவதற்கான ஊசியை ஏற்றி இருந்த போது எந்த தப்பும் நடந்ததாக அப்போது எங்களுக்கு தெரியவில்லை,
காத்தான்குடி அல்ஹிரா வித்தியாலயத்தில் 1998 ஒரு பரிசளிப்பு விழா நடந்தது. 10 பாடங்களில், 8 பாடங்களுக்கான பரிசுகளையும் பெற்றுக் கொண்டு வீட்டுக்கு வரும் போது மனசெல்லாம் நிறைந்திருந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் அகமது நிஹாஜ் தெரிவித்துள்ளார்.
6ம் ஆண்டிலிருந்துதான் படிக்க தொடங்கியிருந்தேன். 5ம் ஆண்டு வரை, 10ம் ஆளுக்குள் வருவதையே கனவாக கொண்டிருந்த நான், 6ம் ஆண்டிலிருந்து 11ம் ஆண்டு வரை, எல்லாத் தவணைகளிலும் முதலாவதாகவே வந்தேன்.இத்தனைக்கும் குடும்ப சூழ்நிலை துரத்திக் கொண்டே இருந்தது. ஒழுங்கான உடுப்பு இல்லாத, சப்பாத்து இல்லாத, டியூட்டரியில் காசு வாங்க நிற்கும் போது, “வந்துட்டான்டி …….” என்டு சிரிக்கப்பட்ட நிலைகள்.
யாரோ செய்த தவறுக்கு, நீதான்டா செய்திருப்பாய் என முழு கிளாசின் முன்னும் கன்னத்தில் அறைந்த ஆசிரியர். அதைப் பார்த்து சிரித்த சகபாடிகள். இத்தனைக்குள்ளும் படிப்பில் ஆர்வமூட்டிய தாய், சகோதரர்கள் மற்றும் ஆசிரியர்கள் என கடந்து போனது.2002ம் ஆண்டு, O/L இல் 9 A, 1 C எடுத்தேன். மட்டக்களப்பு மாவட்டத்தில் 31வது நிலை. A/Lஇல் படிப்பே வாழ்வாகிப் போனது.
2005ம் ஆண்டு மாவட்டத்தில் முதலிடமும், தேசியளவில் 21ம் வந்த போது, மற்றவர்கள் நம்புவது ஒரு புறம் இரிக்க, எனக்கே நம்ப முடியவில்லை. மேலே படித்தால், இந்த சேர்ஜரி துறையில் படிப்பது இல்லாவிட்டால் நாட்டை விட்டு ஓடுவது என்ற முடிவில், மெடிக்கல் பெகல்டியை விட்டு வெளியாகி, intern தொடங்குவதற்கு முன்பே சேர்ஜரி படிப்பதற்கு classக்கு போன முதலாவது ஆள் நானாகத்தான் இருப்பேன்.
2015ல் முதல் தரமே சேர்ஜரி எக்சாமை பாஸாகிய போது, இந்த துறையின் எல்லைக்கு போவது என்று முடிவெடுத்தேன்.2019ல் இரண்டாவது எக்சாமுக்கு போகும் போது, கட்டாயம் இரண்டு ரிசேர்ச்களை செய்திருக்க வேண்டும். என்னிடம் 17 பப்ளிகேசன்ஸ் இருந்தன. UKஇல் பயிற்சிக்கு வந்து இறங்கிய நாட்களில் படபடப்பாக இருந்தாலும், இங்கே இவர்கள் தந்த ஊக்கம் படிக்க வைத்தது.
FRCS பட்டமளிப்பு விழாவிற்காக, UKஇற்கு வந்திருக்கிறேன். இந்த FRCS பரீட்சை எழுதுவதற்கு, MRCS பாஸாகி, சேர்ஜரியின் அனைத்து பயிற்சிகளையும் முடித்து, 3 கன்சல்டன்மார் இவர் தகுதியானவர்தான் என உறுதிப்படுத்த வேண்டும்.யார் செய்த புண்ணியமோ, MRCSஎக்சாம் எழுதாமலேயே, எனது portfolioவையும் கன்சல்டன்ட்மாரின் பரிந்துரைகளையும் பார்த்து, நேரடியாகவே FRCSஇற்கு அனுமதி தந்தார்கள்.
முதல் தரமே அதில் பாஸ். இங்கே பிரித்தானியாவில் வேலை செய்த மருத்துவமனைக்கு எனது பொஸ்மாரை இரண்டு நாட்களுக்கு முன் பார்க்க சென்றேன்.”வருஷத்துல ஒரு மாசம் இங்க வந்து, கன்சல்டன்டா வேல செய்ரியா, எல்லாத்தையும் அரேன்ஞ் பண்ணித் தாரன், நீயும் உன்ட ஸ்கில்ஸ வளர்க்கலாம், எங்களுக்கும் கடும் பிரயோசனமா இரிக்கும்” இந்த ஒபர் என்னை கடுமையாக யோசிக்க வைத்திருக்கிறது.
நேற்று 500 வருடங்கள் பழமை வாய்ந்த, Royal college of surgeons, Edinburghஇல் எனது பட்டமளிப்பு விழா நடந்தது.இத்தனைக்கும் எனக்கு பின்னாலே இழுபட்டுத் திரிந்த எனது மனைவி மக்களும், மற்றும் தாயார், சகோதரர்கள், மாமனார் மாமியார் மற்றும் இதர குடும்பமும் இவ்விடத்தில் இல்லையே என்ற கவலை இருந்தாலும், நண்பர்கள் மூவர் கூடவே வந்திருந்தார்கள் என தெரிவித்துள்ளார்.
முகநூலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கொலை அச்சுறுத்தல் விடுத்த இளைஞரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர் நேற்று (04) பிற்பகல் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எப்பாவல, மெடியாவ பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் நேற்று முற்பகல் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.எதிர்வரும் வியாழக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தம்புத்தேகம மற்றும் எப்பாவல பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இளைஞரின் அச்சுறுத்தல் பதிவை இட்ட இளைஞரைத் துரிதமாக கண்டறிந்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் அவரைக் கைது செய்தனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் விஞ்ஞானப் பிரிவில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி கோணேஸ்வரன் மோகனபிரதா இரண்டாம் நிலையைப் பெற்றுள்ளார்.
கடந்த 2022 (2023) ஆண்டுக்கான க.பொ.த உயர் தரப் பரீட்சைப் பெறுகள் வெளியாகியுள்ளது. குறித்த பெறுபேற்றின் அடிப்படையில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி கோணேஸ்வரன் மோகனபிரதா விஞ்ஞான பிரிவில் 03 ஏ சித்தி பெற்று மாவட்டத்தில் இரண்டாம் இடத்தையும், அகில இலங்கையில் 68வது இடத்தையும் பெற்றுக் கொண்டார்.
இதேவேளை, வெளியான உயர்தர பரீட்சை முடிவுகளில் சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் விஞ்ஞான பிரிவில் மூவரும், கணித பிரிவில் இருவரும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளதுடன் வர்த்தக பிரிவில் 12 பேரும், கலைப்பிரிவில் 21 பேரும் ஏனைய பிரிவுகளில் ஆறு மாணவர்களும் பல்கலைக்கழகம் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திடீர் தலைவலி காரணமாக மூளைச்சாவு அடைந்த குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியின் மாணவி ஒருவர் உயர்தர பரீட்சை பெறுபேற்றில் மூன்று பாடங்களிலும் அதி சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த மாணவிக்கு அதிவிசேட பெறுபேறு கிடைத்தமை அப்பகுதியில் உள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உயர்தரப் பாடசாலை மாணவியான 19 வயதுடைய விஹகன ஆரியசிங்க என்ற மாணவிக்கே இந்தப்பெறுபேறு கிடைத்துள்ளது.
அவர் வணிகப் பிரிவில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் மூன்று A சித்திகளை பெற்றுள்ளார். மேலும் இந்த மாணவி மூளைச்சாவு அடைந்தபோது இறுதி தருவாயில் மற்றுமொரு உயிரை காப்பாற்றியுள்ளார் என கூறலாம்.
அதாவது மாணவி இறந்தபின் அவரிடம் இருந்து எடுக்கப்பட்ட இரண்டு சிறுநீரகங்களும் மிகவும் மோசமான நிலையில் உள்ள இரண்டு நோயாளிகளுக்கு வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் டொறின் ரூபகாந்தன் என்ற மாணவி மாவட்ட ரீதியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தை சேர்ந்த இந்த மாணவி வர்த்தகப் பிரிவில் முதலிடத்தைப் பெற்று பாடசாலை சமூகத்திற்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
குறித்த மாணவி இறுதி யுத்தத்தில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வருகின்ற நிலையிலே இவ்வெற்றியை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று இறுதி யுத்தத்தில் தந்தையை இழந்து தாய் மற்றும் அப்பம்மா ஆகியோரின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த டொறின் ரூபகாந்தன் வர்த்தக பிரிவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கொழும்பு, மாத்தறை மற்றும் காலியைச் சேர்ந்த மாணவர்கள் பிரதான நான்கு பாடப்பிரிவுகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.
2022 (2023) க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்று மாலை வெளியாகியிருந்தது. நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்றோர் விபரம்,
இதன்படி, உயிரியல் விஞ்ஞான பிரிவில் மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தைச் சேர்ந்த பிரமோதி பாஷானி முனசிங்க நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
கொழும்பு றோயல் கல்லூரியைச் சேர்ந்த மனேத் பானுல பெரேரா பௌதீக விஞ்ஞான பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
கொழும்பில் உள்ள சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்தைச் சேர்ந்த கவிதினி தில்சரணி தருஷிகா வர்த்தகப் பிரிவில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளார்.
உயிரியல் பிரிவில் மாத்தறை மாணவி சாதனை
அத்துடன் காலி ரிச்மண்ட் கல்லூரியைச் சேர்ந்த சமுதித நயனப்பிரிய பொறியியல் தொழிநுட்ப பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.
இதேவேளை 2022 (2023) ஆண்டில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய விண்ணப்பதாரர்களில் 166,938 பேர் இந்த ஆண்டு பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு தகுதி பெற்றவர்களில் 149,487 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 17,451 தனியார் விண்ணப்பதாரர்களும் உள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மொனராகலையில் மனைவி ஆண் குழந்தையை பிரசவித்ததை அடுத்து அக்குழந்தையின் தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.மொனராகலை, கலபெத்த, அம்பலாந்த பகுதியைச் சேர்ந்த 16 வயதுச் சிறுமி ஒருவரே இவ்வாறு குழந்தை ஒன்றை பிரசவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொனராகலை பொது வைத்தியசாலையில் கடந்த 31ஆம் திகதி குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் தொடர்பில் மொனராகலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த சிறுமி மொனராகலை அலியாவத்தை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஒன்பதாம் தரம் வரை கல்வி கற்று பின்னர் தனது தாயுடன் கூலி வேலைக்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமி அம்பலாந்த பிரதேசத்தில் கரும்பு வெட்டச் சென்ற போது அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞருடன் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது. பெரியவர்களின் சம்மதத்தின் பேரில் மொனராகலை பிரதேசத்தில் உள்ள திருமணப் பதிவாளர் ஒருவரால் சிறுமிக்கு 19 வயது எனக் கூறி சட்டப்பூர்வமாக திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
பின்னர் இருவரும் அம்பலாந்த பகுதியில் உள்ள இளைஞரின் வீட்டில் ஒன்றாக வசித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணமானபோது அச் சிறுமிக்கு 14 வயது 07 நாட்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய கணவரை கைது செய்து விசாரணைகளை மொனராகலை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்
காலி – கொழும்பு பிரதான வீதியின் வாடியமன்கட சந்தியில் முச்சக்கரவண்டியொன்று பேருந்தொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
களுத்துறை – வஸ்கடுவ பிரதேசத்தில் வசிக்கும் 52 வயதுடைய சுகத் தயானந்த சில்வா என்ற திருமணமான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த முச்சக்கரவண்டி பாணந்துறையிலிருந்து களுத்துறை நோக்கி சென்றதுடன்,
வேக கட்டுபாட்டை இழந்து முன்னால் பயணித்த பேருந்து மீது மோதியுள்ளது.இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.