மனைவியை சுத்தியலால் அடித்து கொலை செய்த கணவன்.. அதிர்ச்சி வாக்குமூலம்!!

பாலக்காட்டில்..

பாலக்காடு சித்தூர் கம்பிளிசுங்கம் பகுதியில் வசித்து வருபவர் உதயன். இவரது மனைவி ஊர்மிளா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவர் உதயனிடம் விவாகரத்து பெற்று கொழிஞ்சாம்பாறையில் உள்ள புத்தன்பாதையை சேர்ந்த குட்டன் (எ) சஜீசை 2வது திருமணம் செய்துள்ளார்.

இவர் கோழிக்கடைகளில் வேஸ்ட் கழிவு பொருட்கள் வாங்கி மீன் வளர்ப்பவர்களுக்கு விற்பனை செய்து வரும் தொழில்செய்து வருகிறார்.திருமணத்திற்கு பிறகு இருவரும் கொழிஞ்சாம்பாறையில் வீடு எடுத்து வசித்து வந்தனர்.

ஆனால் இவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டு வந்தது. வெறுப்பாக 2ம் கணவரை பிரிந்த நிலையில் ஊர்மிளா 10 மாதங்களாக தாயாரின் வீட்டில் தங்கி ஒரு தனியார் பீர் பாட்டில் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், மனைவியை சஜீஷ் அடிக்கடி போன் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் கணவரின் போன் வந்தால் எடுப்பதை ஊர்மிளா தவிர்த்து வந்தார். இதனையடுத்து ஏன் போனை எடுபதில்லை எனக் கேட்டு மே 18ம் தேதி ஊர்மிளாவின் வீட்டிற்கு சஜீஷ் சென்று அடித்து துன்புறுத்தியுள்ளார்.

அன்றும் கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். இதற்காக அப்போது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சிறை தண்டனை அனுபவித்து சஜீஷ் கடந்த 3 மாதத்திற்கு முன் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

ஊர்மிளா நேற்று காலை வழக்கம் போல் தாயார் வீட்டிலிருந்து வேலைக்கு செல்கின்ற நேரத்திற்காக சஜீஷ் காத்திருந்தார். வெளியே வந்ததும் சஜீஷ் ஊர்மிளாவின் தலையில் சுத்தியால் அடித்து காயப்படுத்தியுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஊர்மிளாவை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஊர்மிளா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொழிஞ்சாம்பாறையில் சஜீஷை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

காதலியை துப்பாக்கியால் சுடும் காதலன்.. உயிரிழக்கும் வேளையில் வீடியோ பதிவிட்ட காதலி!!

பிரேசிலில்..

இளம்பெண் தனது காதலன் தன்னை சுடும் வீடியோவை இறக்கும் முன் சமூக வலைதளத்தில் வெளியிட்டது தற்போது வைரலாகி வருகிறது. பிரேசிலின் தென்மேற்கு பகுதியான கோயாஸ் பகுதியில் உள்ள ஜடாயில் தனது 27 வயது காதலனால் 23 வயது பெண் சுட்டுக் கொல்லப்படும்போது அதை வீடீயோவாக உயிரிழந்த பெண் பதிவு செய்துள்ளார்.

அந்த வீடியோவில், ஒரு கட்டிடத்தின் மேல் பகுதியில் காதலர்கள் இருவரும் நின்று கொண்டிருக்கின்றனர். அப்போது அதில் காதலன் ஒரு தங்க நிற துப்பாக்கியை எடுத்து தனது காதயை நோக்கி காட்டுகிறார்.

உடனே அந்த காதலி சிரித்துக்கொண்டே இருக்கிறார். அப்போது திடீரென கையில் வைத்திருந்த துப்பாக்கியை அழுத்தி காதலியை சுட்டார். திடீரென சீறிப்பாய்ந்து குண்டுகாதலின் உடலில் பாய்ந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அனைத்தும் உயிரிழந்த காதலி வீடியோ பதிவு செய்திருந்தார். அவர் உயிரிழந்ததும் சிறிது நேரத்திலேயே வீடியோ முடிகிறது.

சம்பவத்தின் பின்னர் காதலன் போலிசாருக்கு போன் செய்து தான் தனது காதலியை துப்பாக்கியால் சுட்டு கொன்றதாக கூறினார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

180 நாட்களில் 21 கோடி வருவாய் ஈட்டிய காய்கறி விற்கும் இளைஞர் : அம்பலமான இரகசியம்!!

இந்தியாவில்..

இந்தியாவின் ஹரியானா மாகாணத்தில் போலியான வேலை வாய்ப்புகளை உருவாக்கி, பல ஆயிரம் மக்களை ஏமாற்றி சுமார் ரூ.21 கோடி அளவுக்கு வருவாய் ஈட்டியுள்ளார் காய்கறி விற்கும் இளைஞர் ஒருவர்.

ஹரியானா மாகாணத்தின் ஃபரிதாபாத் பகுதியில் காய்கறி விற்பனை செய்து வந்துள்ளார் 27 வயதான ரிஷப் சர்மா. ஆனால் கொரோனா பெருந்தொற்று இவரது வாழ்வாதாரத்தை மொத்தமாக உலுக்கியுள்ளது.

இதில் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார் ரிஷப் சர்மா. இந்த நிலையில் தான், வீட்டில் இருந்தே பணியாற்றும் மோசடி திட்டத்தை அறிமுகப்படுத்தி, கோடிகளை சம்பாதித்துள்ளார்.

பத்திரிகையில் வெளியான தகவலின் அடிப்படையில், வெறும் ஆறே மாதத்தில் சுமார் 21 கோடி அளவுக்கு இவர் சம்பாதித்துள்ளார். ஆனால் வங்கி பரிவர்த்தனைகளால் பொலிசாரிடம் அக்டோபர் 28ம் திகதி சிக்கியுள்ளார்.

இவர் மீது தற்போது 10 இந்திய மாகாணங்களில் 37 மோசடி வழக்குகள் மற்றும் 855 மோசடிகளில் உதவியது உள்ளிட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளது. மேலும், சீனா மற்றும் சிங்கப்பூர் போன்ற பிற நாடுகளைச் சேர்ந்த குற்றக் குழுக்களுடன் இணைந்து ரகசிய முறைகளைப் பயன்படுத்தி பணத்தை இந்தியாவுக்கு வெளியே அனுப்பியிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் காய்கறி விற்பனையில் ஈடுபட முடியாமல் போக, தமது குடும்பத்தை காக்கும் பொருட்டு, குடியிருப்பில் இருந்தே பல வேலைகளை செய்துள்ளார்.

இந்த நிலையில் தான், ஏற்கனவே இணையமூடாக முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள நண்பர் ஒருவரின் அறிமுகம் இவருக்கு கிடைத்துள்ளது. அதன் பின்னரே, இவர் முறைகேடுகளில் ஈடுபட தொடங்கியுள்ளார்.

டெஹ்ராடூனைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ரிஷப் சர்மாவிடம் ரூ.20 லட்சத்தை இழந்துள்ளார். பலருக்கும் வேலை வாய்ப்பை வழங்குவதாக கூறி, பல லட்சங்கள் முதலீடு செய்ய தூண்டியுள்ளார்.

ஆனால் மக்கள் நிறைய பணத்தை முதலீடு செய்தவுடன், அவர் காணாமல் போனார், மேலும் அவர்களால் அவரை அணுக முடியவில்லை. மேலும், ரிஷப் சர்மாவின் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது தொடர்பில் விசாரணை அதிகாரிகளால் இதுவரை கண்டறிய முடியவில்லை என்றே கூறப்படுகிறது.

வவுனியாவில் உடைப்பெடுத்த குளம் : 15 ஏக்கர் வயல் நிலங்கள் பாதிப்பு!!

வவுனியா ஆசிகுளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட கோமரசங்குளம் பகுதியிலுள்ள குளமொன்று உடைப்பெடுத்தமையினால் அதன் கீழுள்ள 15 ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் முழ்கி பாதிப்படைந்துள்ளமையுடன் குளத்தின் நீர் தொடர்ந்தும் வெளியேறியவண்ணமுள்ளது.

மாவட்டத்தின் கடந்த சில நாட்களாக தொடரும் மழையுடனான காலநிலையினால் பல குளங்களின் நீர்மட்டம் உயர்வடைந்து காணப்பட்ட நிலையிலேயே இக் குளம் நேற்று (12.11) காலை உடைப்பெடுத்துள்ளது.

ஊர் மக்கள் பல மணிநேரமாக குளத்தின் உடைபெடுத்த பகுதியினை மண்நிரப்பி கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அவை பயனளிக்கவில்லை.

கோமரசங்குளம் பகுதியிலுள்ள இக் குளம் நீண்ட காலமாக எவ்வித புனரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன் குளத்தின் கீழ் 35ஏக்கர் வயல் நிலங்கள் காணப்படுகின்ற போதிலும் தற்போது 15ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது.

வவுனியா பல்கலைக்கழகத்தில் கொமர்ஷியல் வங்கியின் “மரங்கள் நிறைந்த தேசம்” எனும் தொனிப்பொருளில் மரக்கன்றுகள் நாட்டி வைப்பு

கொமர்ஷியல் வங்கியின் “மரங்கள் நிறைந்த தேசம்”….

கொமர்ஷியல் வங்கியின் “மரங்கள் நிறைந்த தேசம்” எனும் தொனிப்பொருளின் கீழான இலங்கை முழுவதும் 100,000 மரங்களை நடும் தேசிய திட்டத்தின் முதற்கட்டமாக நேற்றைய தினம் கொமர்ஷியல் வங்கி வவுனியா கிளையினால் வவுனியா பல்கலைக்கழகத்தில் மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டது.

இதன்போது வவுனியா பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் T.மங்களேஸ்வரன், கொமர்ஷியல் வங்கியின் வட பிராந்திய முகாமையாளர் திரு R.சிவஞானம், வவுனியா பல்கலைக்கழக பதிவாளர் திரு N.ராஜவிசாகன், மற்றும் வவுனியா நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் எந்திரி K.கஜமுகதாஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இவ்விழாவானது வங்கி முகாமையாளர் திரு T.யோகச்சந்திரா அவர்களின் தலைமையில் வங்கி ஊழியர்களினால் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

கொமர்சியல் வங்கியின் வவுனியா கிளையின் இதுபோன்ற நிலைபெறுதகு எதிர்காலத்தை நோக்கிய சூழல் சார்ந்த செயற்பாடுகள் வவுனியா மக்களால் பெரிதும் வரவேற்கப்படுகிறது.

வவுனியாவில் மொன்சூன் பருவநிலை மாற்றம் மற்றும் அதன் முன்னேற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்!!

வவுனியா மாவட்டத்தில் மொன்சூன் பருவநிலை மாற்றம் மற்றும் அதன் முன்னேற்பாடுகள் குறித்த கலந்துரையாடல் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று ( 10.11.2023) இடம்பெற்றது.

மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்ர தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் மாவட்டத்தின் தற்போதைய மொன்சூன் பருவநிலை மாற்றம், மற்றும் இக்கட்டான சந்தர்ப்பம் ஏற்படும் வேளையில் அதனை எதிர்கொள்வதற்காக எடுக்கப்படவேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.

இக் கலந்துரையாடலில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உயர் அதிகாரி, நீர்பாசன திணைக்கள பொறியியலாளர், கமநல சேவைகள் திணைக்கள உயர் அதிகாரி, விவசாய திணைக்கள பணிப்பாளர், இராணுவம், பொலிஸ்,உள்ளிட்ட பிரிவுகளின் உயர் அதிகாரிகள் மற்றும் விடயத்திற்கு பொறுப்பான உத்தியோகத்தர்கள் பலரும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா செட்டிகுளத்தில் பிரதேச பண்பாட்டு பெருவிழா 2023!!

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச செயலகமும் கலாசார பேரவையும் இணைந்து நடாத்திய “பிரதேச பண்பாட்டு பெருவிழா- 2023“ அமரர் ஞானவாசகர் (அழகக்கோன்) அரங்கில் நேற்று முன்தினம் (09.11.2023) வியாழக்கிழமை இடம் பெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் பி.ஏ.சரத் சந்ர தலைமையில் இடம்பெற்ற குறித்த விழாவில் வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச செயலாளர், பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.

அதன் போது பாடசாலை மாணவர்களால் கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டதோடு மூத்த கலைஞர்கள் சிலருக்கும் பொன்னாடை போர்த்தி விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அத்துடன் கலைநிகழ்வுகளை நிகழ்த்திய மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டது.

கனடாவில் கொள்ளையிட வந்தவர்களை துவைத்தெடுத்த இலங்கைத் தமிழர்கள்!!

கனடாவில்..

கனடா Toronto வில் உள்ள மஜெஸ்டிக் சிட்டி பிளாசாவில் இடம்பெறவிருந்த கொள்ளைச்சம்பவம் அங்கிருந்த இலங்கைத்தமிழ் இளைஞர்கள் முறியடித்துள்ளனர்.இந்த சம்பவம் அங்கு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் அது தொடர்பில் காணொளியும் வெளியாகியுள்ளது.

குறித்த கொள்ளை சம்பவம் ஸ்டீல்ஸ் ஏவ் அருகே மார்க்கம் சாலையில் உள்ள மெஜஸ்டிக் சிட்டிக்குள் வெள்லிக்கிழமை நண்பகல் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன் போது பிளாசாவில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்த தமிழர்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளனர்.இதன் போது சந்தேக நபர்கள் மக்களின் பிடியில் இருந்து தப்பியோட முயற்சித்த போது பொலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலீசார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். இதே வேளை வேகமாகவும் விவேகமாகவும் செயற்பட்டு கொள்ளையர்களை மடக்கி பிடித்த இலங்கை தமிழ் இளைஞர்களை பலரும் பாராடி வருகின்றனர்.

கொழும்பில் இருந்து சென்ற பேருந்து யாழ்ப்பாணத்தில் விபத்து!!

யாழ்ப்பாணத்தில்..

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் தனியார் பேருந்தும் கூலர் வாகனமொன்றும் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்து இன்று சனிக்கிழமை (11) காலை குறித்த விபத்து கொடிகாமம் – புத்தூர் சந்திக்கிடையே இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து பருத்தித்துறை நோக்கி வந்த பேருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த கூலர் வாகனமும் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

எனினும் விபத்தில் விபத்தில் கூலர் வாகன சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பேருந்த்தில் பயணித்த பயணிகள் ஏனையவர்கள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்.

கட்டிலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலம் : அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!!

கம்பளையில்..

கம்பளை தெல்பிடிய தேவிட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு சடலம் கட்டிலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சடலம் பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் பத்மா தர்மசேன என்ற 63 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையுண்ட பெண் பண கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நகருக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அடையாளம் தெரியாத நபரொருவர் அவரை கொலை செய்து அவரிடம் இருந்த பணத்தை பறித்துச் சென்றிருக்கக்கூடும் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

யாழில் வசிக்கும் அக்காவால் கனடாவில் தங்கை விபரீத முடிவு : நடந்தது என்ன?

யாழில்..

கனடாவில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 32 வயதான இளம் குடும்பப் பெண் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் வசிக்கும் பெண்ணின் சகோதரியால் ஏமாற்றப்பட்ட நிலையில், அவர் இந்த விபரீத முடிவை மேற்கொண்டதாக தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் அறியக்கிடைக்கையில்,

தற்கொலைக்கு குடும்பப் பெண்ணின் மூத்த சகோதரி யாழ்ப்பாணத்தில் வசிக்கின்றார். இந்நிலையில் கடந்த வருட தொடக்கத்தில் யாழ் அரியாலைப் பகுதியில் உள்ள காணி ஒன்றை தனது பெயரில் கொள்வனவு செய்வதற்காக யாழில் உள்ள சகோதரியை நம்பி 1 லட்சத்து 35 ஆயிரம் கனடா டொலரை அனுப்பியுள்ளார்.

அந்த பணத்தை கனடாவில் உள்ள பலரிடம் கடன் பெற்றே அவர் வாங்கி அனுப்பியதாக கூறப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள சகோதரி காணியை தனது பெயரில் பதிவு செய்துவிட்டு கனடாவில் உள்ள சகோதரி மற்றும் அவரது கணவனின் பெயரில் போலியான உறுதியை தயாரித்து அனுப்பியதாக தெரியவருகின்றது.

இந்நிலையில் கடந்த மாதம் கனடா குடும்பப் பெண்ணின் கணவன் யாழ்ப்பாணத்துக்கு வந்து காணி தொடர்பாக ஆராய்ந்த போதே அந்தக் காணி தனது பெயரில் பதிவு செய்யாது தனது மனைவியின் சகோதரியின் பெயரில் பதிவு செய்திருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதன் பின்னர் பொலிசார் மற்றும் சட்டத்தரணிகளிடம் சென்றும் பலனில்லாது போனதையடுத்து கனடா சென்ற கணவர் மனைவியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகின்றது. தனது சகோதரியுடன் தங்கை பேச்சுவார்த்தை நடாத்தியும் பலனில்லாது போனதை அடுத்தே தற்கொலைக்கு முயன்று அவர் காப்பாற்றப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

அதேவேளை புலம்பெயர் தேசங்களில் எமது உறவுகள் கடும் பனியிலும், நித்திரையின்றியும் சேமிக்கும் பணத்தில் தாயத்தில் தனகென ஓர் இடம்வேண்டும் என்பதற்காக தமது உறவுகளை நம்பி மோசம்போன சம்பங்களும் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளது. அத்துடன் ஏமாற்றப்பட்டவர்கள் இவ்வாறு விபரீத முடிவுகளுக்கு சென்ற சம்பவங்களும் யாழ்ப்பாணத்தில் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் களைகட்டிய தீபாவளிப் பண்டிகை வியாபாரம்!!

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் வவுனியாவில் தீபாவளி பண்டிகை வியாபாரமானது களைகட்டியுள்ளதை காணக்கூடியதாக இருந்தது.

குறிப்பாக சிறுவர் முதல் பெரியவர் வரை தமக்கான புத்தாடைகள், வெடிபொருட்கள் மற்றும் இனிப்பு பண்டங்களை வாங்கிச்செல்வதை அவதானிக்க கூடியதாக இருந்தது. இதன் காரணமாக அதிகளவான மக்கள் நகரில் குவிகின்றமையால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை வவுனியாவினை சூழ அதிகளவான அங்காடி வியாபார நிலையங்கள் அமைக்கப்பட்டும் வியாபார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஒரு வயது மகளுக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தாய் எடுத்த விபரீத முடிவு!!

ராணிப்பேட்டையில்..

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே தனது ஒரு வயது மகளுக்கு கடிதம் எழுதிவைத்துவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை கூட்ரோடு புதுகாலனி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (34). இவர் வேலூரில் உள்ள தனியார் பேக்கரி ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம், மித்ராவயல் பகுதியைச் சேர்ந்த அமுதவள்ளி (33) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டதாகவும், இருவருக்கும் ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று (நவ.8) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அமுதவள்ளி தற்கொலை செய்துகொண்டு உள்ளார். இந்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கலவை காவல் ஆய்வாளர் காண்டீபன் தலைமையிலான போலீசார் உயிரிழந்த அமுதவள்ளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.தற்கொலையை கைவிடுகதற்கொலையை கைவிடுகஇந்த சம்பவம் தொடர்பாக பிரகாஷ் மற்றும் அவரது தாயாரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிய நிலையில் அமுதவள்ளி உயிரிழந்தது குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், தற்கொலைக்கான காரணம் என்ன என்று பல கோணங்களில் விசாரணை நடத்தினர். பின் வீட்டை சோதனை செய்தபோது அமுதவள்ளி எழுதி வைத்த கடிதம் ஒன்று கிடைத்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

“அதில் செல்ல மகளே அம்மா உன்னை விட்டு பிரிந்து போகிறேன். நீ புத்தியுள்ள மகளாக வாழவேண்டும். என் தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை” என கடிதம் எழுதி வைத்துள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

டிக்டாக் பிரபலம் மாரடைப்பால் மரணம் : அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

பிரேசிலில்..

டிக்-டாக் பிரபலம் அகால மரணமடைந்த சம்பவம் அவருடைய ரசிகர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரேசில் நாட்டை சேர்ந்த டிக்-டாக் பிரபலம் லுவானா ஆன்ட்ரே (29) உடல் அழகிற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

அப்போது எதிர்பாரதவிதமாக உயிரிழந்தார். Fitness freakஆன லுவானாவுக்கு கால் மூட்டில் அதிகப்படியான கொழுப்பு இருந்துள்ளது.அதனை அகற்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தபோதே 4 முறை மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார்.

சிகிச்சையை பாதியிலேயே நிறுத்தியும் லுவானாவை காப்பாற்ற முடியவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த செய்து அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அழகுக்கு அறுவை சிகிச்சை செய்ய சென்று உயிர் பறிபோன சம்பவம் பகீர் கிளப்பியுள்ளது.

நேர்முகத் தேர்வுக்காக வவுனியா நோக்கிப் பயணித்தவர்களுக்கு நேர்ந்த கதி!!

விபத்து..

ஹொரவப் பொத்தானை – கெப்பித்திக்கொல்லாவ பிரதான வீதியில் கிவுளக்கடை பகுதியில் வேனொன்று விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.இன்று (10.11.2023) காலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பில் இருந்து வவுனியாவுக்கு நேர்முகத் தேர்வு ஒன்றுக்காக சென்றவர்களே விபத்தில் சிக்கியுள்ளனர். வாகனம் வீதியோரம் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்தவர்கள் ஹொரவ்பொத்தான வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்களில் 4 பேர் மேலதிக சிகிச்சைக்களுக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சாரதியின் அசமந்தத்தினால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாமென கருதப்படுகிறது. விபத்து தொடர்பில் விசாரணைகளை ஹொரவ்பொத்தான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாடொன்றில் பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள்!!

வெளிநாடொன்றில்..

மத்திய கிழக்கு நாடான ஜோர்தானில் சுமார் 100 இலங்கையர்கள் பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் இந்த இலங்கையர்களின் விசா காலாவதியாகியுள்ள போதிலும்,

தொழிற்சாலையினால் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இவர்களை நாட்டுக்கு அனுப்ப குறித்த தொழிற்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த தொழிற்சாலை நிறுவனம் ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்காமல் சேவைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இதனால் குறித்த இளைஞர்கள் மீண்டும் இலங்கைக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.