பரீட்சை மண்டபத்தில் சுருண்டு விழுந்து பள்ளி மாணவி மரணம்!!

தேர்வறையில்..

தேர்வு எழுதிக் கொண்டிருந்த நிலையில், தேர்வறையில் சுருண்டு கீழே விழுந்து மாரடைப்பு காரணமாக 9ம் வகுப்பு மாணவி மரணமடைந்த சம்பவம் நாடு முழுவதுமே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

60, 70 வயதுகளைக் கடந்தவர்கள் மாரடைப்பு காரணமாக மரணமடைந்து வந்த நிலையில், கொரோனா பெருந்தொற்றுக்களின் வருகைக்கு பின்பான வாழ்க்கையில், இளம்வயதினர் பலரும் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து வருகின்றனர்.

குறிப்பாக பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. மாரடைப்பு ஏற்பட்டு மாணவ, மாணவிகள் உயிரிழக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. நடனம் ஆடும் போது மரணம், மணமேடையில் மயங்கி விழுந்து மரணம், உடற்பயிற்சி செய்யும் போது மரணம் என கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இளம் வயது பிள்ளைகள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது.

குஜராத் மாநிலம் அம்ரேலி நகரில் 9ம் வகுப்பு பள்ளி மாணவி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்பட்டு வந்த நிலையில் தற்போதெல்லாம் இளம் வயதினருக்கு அதிக அளவில் மாரடைப்பு ஏற்படுகிறது.

அதிலும் குறிப்பாக பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. மாரடைப்பு ஏற்பட்டு மாணவ, மாணவிகள் உயிரிழக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் இதே போல் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி வருகிறது. குஜராத் மாநிலம் அம்ரேலியில் 9ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவி சாக்‌ஷ் ரஜோசரா என்றும், அவர் ராஜ்கோட் மாவட்டத்தின் ஜாஸ்டன் தாலுகாவில் வசித்து வருபவர். சாந்தபா கஜேரா பள்ளியில் படித்து வந்த அவர் நேற்று காலை தேர்வறைக்குள் நுழையும் போது மயங்கி விழுந்துவிட்டார்.

உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, மாணவி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக குஜராத்தில், குறிப்பாக ராஜ்கோட்டில் இளம் வயதினருக்கு மாரடைப்பால் பீதியையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கொரோனாவுக்கு மாரடைப்பால் உள்ள தொடர்பு குறித்து கூறியிருந்தார்.

மேலும் கடுமையான கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாரடைப்பு ஏற்படும் ஆபத்து அதிகம் இருப்பதாகவும் மிகவும் கடினமாக உழைக்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

மனைவி குழந்தையை எரிக்க முயன்ற கணவன்.. தற்காப்பிற்காக மனைவி செய்த விபரீத செயல்!!

சேலத்தில்..

சேலம் மேட்டூர் கொசவன்கரடு பகுதியைச் சேர்ந்த சக்தி. சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வரும் இவர், அடிக்கடி குடித்து விட்டு மனைவி மணிமுடியை அடித்து துன்புறுத்துவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்.

இந்நிலையில், வியாழக்கிழமை (நேற்று முன்தினம்) இரவும் வழக்கம்போல் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது போதை மயக்கத்தில் மண்ணெண்ணெய்யை எடுத்து மனைவி மற்றும் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை மீதும் ஊற்றி தீ வைக்க முயற்சி செய்துள்ளார்.

சுதாரித்துக் கொண்ட மனைவி மணிமுடி, மண்ணெண்ணெய் கேனை தட்டி விட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சக்தி, வீட்டில் இருந்த கடப்பாரையை எடுத்து அவரை தாக்க முயற்சித்துள்ளார்.

அப்போது மணிமுடி தற்காப்புக்காக கடப்பாரையை பிடுங்கி கணவரின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சக்தி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து மணிமுடியை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தற்காப்புக்காக மனைவியே கணவனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனைவிக்கு உப்புமாவில் விஷம் கலந்து கொலை செய்த கணவன் : விசாரணைக்கு பயந்து எடுத்த விபரீத முடிவு!!

கன்னியாகுமரியில்..

கன்னியாகுமரி மாவட்டத்தில் மனைவியை உணவில் விஷம் கலந்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பொறியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு பகுதியை அடுத்த வெள்ளிகோடு பகுதியைச் சேர்ந்தவர் பெல்லார்மின் (வயது 34) பொறியாளரான இவர் கல்லூரி பேராசிரியராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் 6-ம் தேதி தனது மனைவி திவ்யா சில்வெஸ்டர் ஐ உப்புமாவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த வழக்கில் சிறை சென்ற இவர் பிணையில் வந்து தற்போது ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

மனைவியை கொன்ற வழக்கு பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் வியாழக்கிழமை வழக்கு விசாரணைக்கு வர இருந்த நிலையில் அன்றைய தினம் காலை வெகு நேரமாகியும் பெல்லார்மின் வீட்டின் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் அறை ககதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அவர் மின் விசிரியில் தூக்கிட்ட படி தொங்கியுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தக்கலை போலீசார் நடத்திய விசாரணையில் பெல்லார்மின் மனைவி திவ்யா சில்வெஸ்டர் ஐ ஆன்லைனில் விஷம் வாங்கி உப்புமாவில் கலந்து கொடுத்த கொலை செய்த வழக்கில் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் வந்த நிலையில் வழக்கில் தந்தை பெர்மான்ஸ், தாய் அமலோற்பம் ஆகியோர் வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்ததால் நீதிமன்ற விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதனையடுத்து தற்கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மனைவியை கொலை செய்த வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு பயந்து பொறியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பாரிய மோசடியில் ஈடுபட்ட கும்பல் : பின்னணியில் பிரபல நடிகர்!!

இத்தாலியில்..

இத்தாலியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நீண்ட நாட்களாக மோசடி செய்து வந்த கும்பலை புறக்கோட்டையில் சுற்றிவளைப்பதற்கு வலானா மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த கும்பலின் தலைவன் ஒரு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் என தெரியவந்துள்ளது.

இத்தாலியில் தொழில் பெற்று தருவதாக 5 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுக்கொண்டு இந்த மோசடியை செய்துள்ளனர். இச்சம்பவத்தின் மூளையாக விளங்கும் நபர் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நாடக நடிகர் என காட்டி இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவரும் அவரது குழுவும் மற்றொரு பண மோசடியில் ஈடுபட்டபோது, ​​​​வாலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் அவர்களை சிக்க வைத்து கைது செய்தனர். இந்த மோசடி கும்பலிடம் சிக்கியவர்களுக்கு கடவுச்சீட்டு வழங்க வந்த போதே இந்த கும்பல் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களிடம் இருந்து வெளிநாட்டு கடவுச்சீட்டுகள், இத்தாலிய அரசாங்கத்தால் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் போலி விசாக்கள், போலி விமான டிக்கெட்டுகள் மற்றும் போலி ஆவணங்கள் அடங்கிய பல கையடக்க தொலைபேசியையும் விசாரணை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

100 மீட்டர் தூரத்தை 30 நொடிகளில் ஓடி முடித்த இலங்கைச் சிறுவன்!!

பலாங்கொடையில்..

2 வயதான இலங்கைச் சிறுவன் 100 மீட்டர் தூரத்தை 30 நொடிகளில் ஓடி முடித்து சோழன் உலக சாதனை படைத்துள்ளார். பலாங்கொடையில் வசித்து வரும் ராஜீவ்காந்தி மற்றும் ரொஷானி தம்பதிகளின் மகனான ஆரோன் சாத்விக் என்ற 2 வயது 11 மாதங்கள் ஆன சிறுவன் இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.

இந்த நிகழ்வானது நேற்று (05) பலாங்கொடை பெரிய மைதானத்தில் நடைபெற்றது. நிகழ்வின் நடுவர்களாக சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாகவாணி ராஜா, இரத்தினபுரி மாவட்டத் தலைவர் பிரவீனா பாரதி மற்றும் நுவரெலியா மாவட்டத் தலைவர் சாம்பசிவம் சதீஷ்குமார் போன்றோர் நிகழ்வைக் கண்காணித்து உறுதி செய்தனர்.

சோழன் உலக சாதனை படைத்த சிறுவனுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்ட அதேவேளை, அங்கிருந்த அனைவரும் சிறுவனுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் இளம் பெண்ணுக்கு கத்திக் குத்து!!

கொழுமபில்..

கொழும்பு – நாரஹேன்பிட்டிய பகுதியில் காதலிக்க மறுப்பு தெரிவித்ததனால் பெண் ஒருவரை கத்தியால் குத்திய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்தவர், நாரஹேன்பிட்ட நில அளவையாளர் அலுவலக கட்டுப்பாட்டுப் பிரிவில் பணிபுரியும் பின்னதுவ வலஹந்துவா பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய யுவதி என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

சந்தேக நபரும், காயமடைந்த யுவதியும் காலியில் இருந்து நெடுஞ்சாலை வழியாக நாரஹேன்பிட்ட பகுதிக்கு பேருந்தில் வந்துள்ளனர். நாரஹேன்பிட்ட கிருள வீதியில் அமைந்துள்ள நில அளவையாளர் அலுவலகத்திற்கு முன்பாக பேருந்தில் இருந்து இறங்குவதற்கு தயாரான போதே சந்தேகநபர் அவர் வைத்திருந்த கத்தியால் யுவதியை தாக்கியுள்ளார்.

இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளன யுவதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சம்பவம் தொடர்பான விசாரணைகளை நாரஹேன்பிட்ட பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

முச்சக்கர வண்டி சாரதியின் நேர்மை : இன்ப அதிர்ச்சியில் பெண்!!

கெக்கிராவவில்..

கெக்கிராவ பிரதேசத்தில் பணம் உள்ளிட்ட பொருட்களுடன் தவறவிடப்பட்ட பையை அதன் உரிமையாளரை தேடி ஒப்படைத்த முச்சக்கர வண்டி சாரதி தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

200,000 ரூபாய் பணம், புதிய ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி, முக்கிய ஆவணங்கள் உள்ளிட்ட பொருட்களுடன் கிடைத்த குறித்த பையை 24 மணி நேரத்திற்குள், உரிமையாளரின் பெண்ணை கண்டுபிடித்து வழங்க முச்சக்கர வண்டி சாரதி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

கெக்கிராவ – ஒலுகரத கிராமத்தில் வசிக்கும் 48 வயதுடைய என்.பி பாலித பீரிஸ் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இந்த செயலை செய்துள்ளார்.

இந்த கைப்பையின் உரிமையாளர் முச்சக்கரவண்டியில் பயணித்ததாகவும், அவர் தனது பையை மறந்துவிட்டு இறங்கியதாகவும் தெரியவந்துள்ளது. பின்னர், சாரதி கைப்பையை கெக்கிராவ பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்று ஒப்படைத்தார்.

உரிமையாளரை கண்டுபிடித்து ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இந்த கைப்பையின் உரிமையாளர் இபலோகம – மஹமிகஸ்வெவ பிரதேசத்தில் வசிக்கும் எஸ். தயாவதி என்ற 53 வயது பெண்ணுடையதாகும். முச்சக்கரவண்டி சாரதி கெக்கிராவ பொலிஸாரின் உதவியுடன் கைப்பையை உரிமையாளரிடம் மீள வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கெப் ரக வாகனத்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து : இருவர் படுகாயம்!!

திருகோணமலையில்..

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி கிளிவெட்டி 58ஆம் கட்டை பகுதியில், கெப் ரக வாகனம் ஒன்றுடன் முச்சக்கர வண்டி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியில் பயணித்த கணவன், மனைவி இருவரும் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்தானது இன்று (06.11.2023) காலை இடம்பெற்றுள்ளது.இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த தெஹிவத்த – மந்தனபுர பகுதியில் வசித்துவரும் டபிள்யு. எம்.சேனக்குபண்டார (39வயது) மற்றும் அவரது மனைவி எச்.எம்.நிலந்தி (34வயது) ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

விபத்தில் படுகாயமடைந்த இருவரும் திருகோணமலை பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்துடன் தொடர்புடைய கெப் வானத்தின் சாரதியை கைது செய்துள்ளதுடன், விபத்து தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மண்ணுக்கு பெருமையை சேர்த்த பாடசாலை மாணவிகள்!!

வவுனியாவில்..

பளுதூக்கும் போட்டியில் வவுனியாவில் உள்ள கோமரசங்குள பாடசாலை மாணவிகள், மற்றும் பளுதூக்கும் கழக மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, பொலன்னறுவையில் நேற்று முன்தினம் (05.11.2023) இளைஞர், கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட மாணவர்களுக்கான பளுதூக்கும் போட்டி இடம்பெற்றிருந்தது.

இந்த போட்டியில் வவுனியா கோமரசங்குள பாடசாலை மாணவிகள், மற்றும் பளுதூக்கும் கழக மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.கு றித்த போட்டியில் க.அபிசாளினி மற்றும் பா.மதுசாளினி – முதல் இடத்தையும் பா.கிசாளினி மற்றும் பா.செரோண்யா – இரண்டாம் இடத்தையும் பெற்று வவுனியா பளுதூக்கல் கழகத்தின் பயிற்றுவிப்பாளர், ஞா.ஜீவன் பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள்.

இவ்வாறு தற்காலத்தில் வடமாகாணத்தை சேர்ந்த வீர , வீராங்கனைகள் அதிகம் பளுதூக்கும் போட்டிகளில் வெற்றி பெற்று தொடர்ந்து சாதனை நிகழ்த்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

மரணித்த மனிதம்.. ரத்தம் சொட்ட உயிருக்குப் போராடிய இளைஞர் : உதவாமல் பொருள்களைத் திருடிச் சென்ற மக்கள்!!

டெல்லியில்..

டெல்லியில் பைக் விபத்தில் காயமடைந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சினிமா தயாரிப்பாளருக்கு உதவாமல், ரோட்டில் சென்றவர்கள் வீடியோ எடுத்துக்கொண்டு, அவரின் பொருள்களைத் திருடிச் சென்ற சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

டெல்லி குருகிராமில் புகைப்படக் கலைஞராகவும், திரைப்படத் தயாரிப்பாளராகவும் இயங்கிவந்தவர் பியூஷ் பால். இவர் தனது வேலையை முடித்துக்கொண்டு, இரவில் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார்.

ஹௌஸ் காஸ் என்ற இடத்தில் சென்றபோது, இவரின் வாகனம் எதிர்பாராதவிதமாக மற்றொரு இரு சக்கர வாகனத்துடன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த பியூஷ் பால், சாலையோரம் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். ஆனால், அந்த வழியாகச் சென்ற யாரும் பியூஷ் பாலுக்கு உதவ முன்வரவில்லை.

மாறாக, அவர்கள் தங்களது மொபைல் போனில் வீடியோ எடுப்பதில் பிஸியாக இருந்தனர். சிலர் பியூஷ் பாலுக்கு உதவி செய்வதுபோல் அவர் அருகில் சென்று, பியூஷிடமிருந்த பொருள்களைத் திருடிச்சென்றனர். பியூஷிடமிருந்த மொபைல், பர்ஸ், லேப்டாப் உள்ளிட்டவை திருட்டுப்போய்விட்டன.

சிலர் காயமடைந்து கிடந்த பியூஷ் அருகில் நின்று செல்ஃபியும் எடுத்துக்கொண்டனர். விபத்து குறித்து யாரோ போலீஸாருக்கு போன் செய்து தகவல் கொடுத்தனர். அரை மணி நேரமாக உதவியின்றி சாலையோரம் கிடந்த பியூஷ், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பிறகே, சம்பவ இடத்துக்கு போலீஸார் வந்து சேர்ந்தனர். ஆனால், சிகிச்சை பலனலிக்காமல் பியூஷ் இறந்துபோனார்.

மற்றொரு இரு சக்கர வாகனத்தை ஓட்டி காயமடைந்தவரிடம், போலீஸார் வாக்குமூலம் வாங்கியிருக்கின்றனர். விபத்து நடந்தவுடன் உதவி செய்திருந்தால், பியூஷ் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும்.

ஆனால், யாரும் உதவி செய்ய முன்வராத காரணத்தால் பரிதாபமாக இறந்துபோனார். பியூஷ் காயமடைந்து கிடந்தபோது அவரிடம் திருடியது யார் என்பது குறித்து, அருகில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர்.

இறந்துபோன எஜமானுக்காக 4 மாதங்களாக காத்திருக்கும் நாய் : நெகிழவைத்த சம்பவம்!!

கேரளாவில்..

நாய் நன்றியுள்ள பிராணி என்பது பலர் கூற நாம் கேள்விப்பட்டிருப்போம். வீட்டினை காப்பததுடன் தன்னை வளப்போரிடமும் எவ்விதபிரதி பலனையும் எதிர்பாராது மிகவும் விஸ்வாசத்துடன் காவல்காத்து இருப்பது என்றால் அது ஐந்தறிவுள்ள நாய்தான்.

மனிதர்கள் கூட பல சமயங்களில் நன்றி மறந்தவர்களாகின்றனர். ஆனால் நாயானது நன்றி மறவாதது. இந்நிலையில் , தனது எஜமானர் இறந்தது தெரியாமல், அவரது வளப்பு நாய் கடந்த 4 மாதங்களாக அவருக்காக காத்திருப்பதாக கூறப்படுகின்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்ட வைத்தியசாலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல் நலம் சரியில்லாத ஒருவரை உறவினர்கள் சிகிச்சைக்காக அழைத்து வந்தபோது . அவர்களுடன், அவர் வளர்த்த நாயும் வந்துள்ளது.

வைத்தியசாலையில் சிகிறைச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. அவரது உடல் அங்குள்ள சவக்கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பின்னர், உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

உறவினர்கள் உயிரிழந்தவ்ரின் உடலை மற்றொரு வாசல் வழியாக எடுத்துச் சென்று இறுதிச் சடங்கு செய்துள்ளனர். இந்நிலையில் இதை அறியாத அவருடைய வளர்ப்பு நாய், சவக்கிடங்கு வாசலில் கடந்த 4 மாதமாக தனது எஜமானுக்காக காத்துக் இருக்கும் நிலையில் , வைத்தியசாலை ஊழியர் ராஜேஷ் அதனை கவனித்துள்ளார்.

முதலில் சில நாட்களாக அந்த நாய் உணவு ஏதும் சாப்பிடாமல் இருந்துள்ளது. அதன்பின்னர், சிலர் வழங்கும் பிஸ்கட் மற்றும் இதர உணவுகளை சாப்பிட்டு, தனது எஜமானர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் சவக்கிடங்கு அருகே காத்துக் கிடக்கிறது.

அருகில் உள்ள பிசியோதெரபி கட்டடத்துக்கும் சவக்கிடங்குக்கும் மாறி மாறி சென்று வருவதாகவும், தற்போது அந்த நாய்க்கு, அந்த வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் தனது வீட்டில் இருந்து உணவு கொண்டு வந்து கொடுப்பதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் தனது எஜமான் இறந்தது தெரியாது அவருக்காக காத்திருக்கும் நன்றியுள்ள அந்த ஜீவனை வளர்க்க பருல் விருப்பம் தெரிவித்துள்ளார்களாம்.

உலகமே முடங்கும் : 2024 குறித்து உலா வரும் பாபா வாங்காவின் கணிப்புகள்!!

பாபா வாங்கா..

பாபா வாங்காவின் 2024 ஆம் ஆண்டிற்கான கணிப்புக்கள் தொடர்பில் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகிறது. தற்போது உலகளவில் நடைபெறும் யுத்தங்களை அடிப்படையாக வைத்தே அவரின் அடுத்த ஆண்டுக்கான கணிப்புக்கள் தொடர்பில் பல்வேறு தரப்புகளிலும் பேசப்படுகிறது.

இதனடிப்படையில், அவர் ஏழு தீர்க்கதரிசனங்களைச் கூறியுள்ளார் என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. குவாண்டம் கணினிகளின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்படும்.

ரஷ்யா ஜனாதிபதி புடின் தனது சொந்த நாட்டைச் சேர்ந்த ஒருவரால் படுகொலை செய்யப்படுவார். ஐரோப்பாவில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரிக்கும். மேலும் ஒரு “பெரிய நாடு” அடுத்த ஆண்டு அணு ஆயுத சோதனைகள், தாக்குதல்களை நடத்தும்.

பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், மர்ம நோயால் பாதிக்கப்படுவார். சைபர் தாக்குதல்கள் அதிகரிக்கும். ஹேக்கர்கள் மிகவும் அதிநவீனமாகி, பவர் கிரிட்கள் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற முக்கியமான உட்கட்டமைப்புகளை குறிவைப்பார்கள்” கணித்து எச்சரித்துள்ளார்.

இவர்களை கண்டால் உடன் அறிவிக்கவும் : புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸார்!!

பத்தரமுல்லையில்..

பாரிய பண மோசடி செயற்பாட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் ஆண் மற்றும் பெண் ஒருவரது புகைப்படம் பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தெரியப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விக்னேஸ்வரன் கணேசன் (வயது 31), ரீவல் நிரோஷனி ராஜரத்தினம் (வயது 36) என்ற சந்தேக நபர்களே இவ்வாறு தேடப்பட்டு வருவதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். இவர்கள், கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் பணத்தினை மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பத்தரமுல்லை பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்குச் சொந்தமான கட்டடம் மற்றும் தோட்டம் என்பவற்றை புனரமைப்புச் செய்து தருவதாக கூறி அந்த நிறுவனத்திடம் இருந்து 9,943,108.03 ரூபாயை குறித்த சந்தேகநபர்கள் பெற்றுக் கொண்டுள்ளனர்.

எனினும், பெற்றுக் கொண்ட தொகைக்கு, நிர்மாணப்பணிகளை மேற்கொள்ளாமல் சந்தேக நபர்கள் மோசடி செய்தமை தொடர்பில் மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில் குறித்த நிறுவனம் முறைப்பாடு செய்துள்ளது.

அதன்படி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு, சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், இவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி 0718137373 அல்லது 0112852556 ஆகிய இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு பாடசாலை மாணவி தென்னிலங்கையரால் கடத்தல் : பொலிஸார் வெளியிட்ட தகவல்!!

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு பாடசாலை மாணவி தென்னிலங்கையரால் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு, மாங்குளம்- கிழவன்குளம் பகுதியில் இருந்து பாடசாலைக்கு சென்ற 15 வயதுடைய மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிழவன்குளம் பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் கடந்த முதலாம் திகதி பாடசாலைக்கு சென்ற சமயம் காணாமல் போய் இருப்பதாக அவரது தாயாரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இதுவரை காணாமல்போன சிறுமி தொடர்பான தகவல்கள் எதுவும் தமக்கு கிடைக்கவில்லை என சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தென்பகுதியில் இருந்து குறித்த பிரதேசத்திற்கு வேலைக்காக வந்து தங்கியிருந்த ஒருவரே மேற்படி சிறுமியை கடத்திச் சென்றுள்ளதாக தெரிவித்த மாங்குளம் பொலிஸார், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

தன்னை கடித்த பாம்பை சடலமாக மருத்துவமனைக்கு கொண்டு வந்த பெண்!!

தூத்துக்குடியில்..

பெண் ஒருவர் தன்னை கடித்த கட்டு விரியன் பாம்பை கொன்று சடலமாக மருததுவமனைக்கு எடுத்து வந்தது அதிர்ச்சியளித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆத்திக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி அழகு ராணி (35). இவர் வீட்டின் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிந்துள்ளார்.

அப்பொழுது கட்டுவிரியன் பாம்பு ஒன்று அவரை கடித்த நிலையில், கூச்சலிட்டுள்ளார். மனைவியின் அலறல் சத்தம் கேட்டு கணவர் சரணவன் வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்.

ஆனால் குறித்த பெண் பிளாஸ்டிக் பை ஒன்றில் அப்பாம்பை சடலமாக கொண்டு வந்துள்ளார். பாம்புடன் வந்த பெண்ணைப் பார்த்து பதறிய மருத்துவமனை ஊழியர்கள், பின்பு பாம்பு சடலமாக இருப்பதைக் கண்டு பெருமூச்சு விட்டுள்ளனர்.

தற்போது குறித்த பெண்ணிற்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்கு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்.. விரக்தியில் காதலர்கள் தூக்கிட்டு தற்கொலை!!

மதுராந்தகத்தில்..

மதுராந்தகம் அருகே நர்சிங் மாணவி, காதலனுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கரிப்பாளையம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் குணசேகர். இவருடைய மகன் அருண் (வயது 22).

கடந்த 6 ஆண்டுகளாக மதுராந்தகத்தில் உள்ள வாகனங்கள் பழுது பார்க்கும் கடையில் வேலை செய்து வந்தார். மதுராந்தகம் அருகே உள்ள புதுமாம்பாக்கத்தில் ஜனனி பிரகாஷ் என்பவர் வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்தார்.

மரக்காணம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணி. இவருடைய மகள் ஜனனி (17). தனியார் கல்லூரி யில் நர்சிங் படித்து வந்தார். அருண் ஜனனி இருவரும் காதலித்து வந்த தாக கூறப்படுகிறது.

இவரது காதலுக்கு இருவரின் வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் விரக்தியடைந்த அருண், தான் தங்கி இருந்த வீட்டில் காதலி ஜனனியுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அருண், ஜனனி இருவரும் தூக்கில் பிணமாக தொங்கு தை பார்த்த வீட்டின் உரிமையாளர் மதுராந்தகம் போலீசாருக்கு தகவல் தெரி வித்தார். போலீசார் இருவரது உட லையும் கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக மதுராந்தகம் மருத்துவமனைக்கு அரசு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.