யாழில் கொள்ளையிட வந்த கும்பல் தலைதெறிக்க ஓட்டம்!!

யாழில்..

யாழில் கொள்ளையிட வந்த கும்பல் வீட்டினரின் சத்தத்தை அடுத்து அயலவர்கள் கூடியதால் தலைதெறிக்க ஓட்டம் எடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவம் யாழ்.திருநெல்வேலி – பால்பண்ணை பகுதியில் இன்று அதிகாலை 2 மணிளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,வீடொன்றுக்குள் இன்று அதிகாலை 2 மணியளவில் கூரையை பிரித்து நுழைந்த முகமூடி கொள்ளை கும்பல் வீட்டில் இருந்தவர்களை கத்திமுனையில் கட்டிவைத்து மிரட்டியுள்ளனர்.இந் நிலையில் விட்டினரின் கூக்குரல் சத்தம் கேட்டு அயலவர்கள் கூடியதால் தப்பி ஓடியுள்ளது.

வீட்டின் கூரையை பிரித்து முகமூடி அணிந்தவாறு வீட்டிற்குள் இறங்கிய மூவரடங்கிய கும்பல் வீட்டில் உறக்கத்தில் இருந்தவரை தட்டி எழுப்பி இரண்டு கைகளையும் கயிற்றினால் கட்டிவைத்தனர்.அதன் பின்னர கழுத்தில் கத்தினை வைத்து எங்கே நகையுள்ளது என அரை மணி நேரமாக மிரட்டியுள்ளனர்.

எனினும் கூக்குரல் இட்டு அயலவர்கள் வீட்டு விளக்கை ஒளிர விட்டதன் காரணமாக அச்சுறுத்திய கும்பல் தாங்கள் கொண்டு வந்த பெரிய கத்தியினையும் கைவிட்டுவிட்டு அவ்விடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் கோப்பாய் குற்ற த்தடுப்பு பொலிஸ் பிரிவி வினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கேரளாவில் இடம்பெற்ற பயங்கரம்.. இலங்கை தமிழ்ப் பெண்களுக்கு நேர்ந்த சோகம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் கேரள மாநிலம் வயநாடு அருகே பள்ளத்தாக்கில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பெண் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.இந்த விபத்து சம்பவம் நேற்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் ஜீப்பில் சென்றுக் கொண்டிருந்தபோது, மானந்தவாடி பகுதியில் 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.குறித்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் அனைவரும் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர், விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்து தொடர்பில் கேரள பொலிஸார் சார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த விபத்து தொடர்பில் வயநாடு எம்.பி. ராகுல் காந்தி தனது டுவிட்டர் வலைத்தள பதிவில்,”வயநாட்டின் மானந்தவாடியில் பல தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் உயிரைப் பறித்த சோகமான ஜீப் விபத்துக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள்.

மாவட்ட அதிகாரிகளிடம் பேசி விரைவில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளேன். எனது எண்ணங்கள் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சுற்றியே இருக்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

அவரை ஆறு மாசத்துல தமிழ் பேச வெச்சிடுவோம்.. துருக்கி இளைஞரை காதல் திருமணம் செய்த தமிழ் பெண்!!

கரூரில்..

“எங்க ரெண்டு குடும்பத்துக்கும், ஒருத்தவங்க பேசுறது மத்தவங்களுக்குப் புரியாது. ஆனா, மொழி தாண்டி கொஞ்சம் கொஞ்சமா மனுஷங்களை புரிஞ்சிக்க ஆரம்பிச்சுட்டாங்க. இப்போ நல்லபடியா கல்யாணம் பண்ணி வெச்சிட்டாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு!” – மணப்பெண் பிரியங்கா

கரூரைச் சேர்ந்த பி.டெக் பட்டதாரிப் பெண் பிரியங்கா, துருக்கியைச் சேர்ந்த தன் காதலரை, இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். கரூரில் உள்ள பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரியங்கா. பி.டெக் படித்துள்ள இவர், தற்போது டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார்.

டெல்லியில், ஒன்றரை வருடங்களுக்கு முன்பு அஹமத் ஜெமில் கயான் என்பவருடன், பிரியங்காவுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. துருக்கி நாட்டைச் சேர்ந்த இவர், டெல்லி மற்றும் துருக்கியில் தொழில் செய்து வருகின்றார். நண்பர்களாக அறிமுகமாகிய இவர்கள், கடந்த 6 மாதங்களாகக் காதலித்து வந்துள்ளனர்.

இதையடுத்து, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், நேற்று கரூரில் உள்ள பிரியங்கா வீட்டில் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணத்தில், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்து கொண்டு மணமக்களை நேரில் வாழ்த்தினார்.

காதல் பயணம் குறித்து பிரியங்காவிடம் பேசினோம். “நாங்க ரெண்டு பேரும் முதன்முதலாக டெல்லியில் சந்திச்சோம். கிட்டத்தட்ட ஒன்றரை வருஷமா இவரை தெரியும். ட்ராவல் பண்ணும்போதுதான், இவரை சந்திச்சேன். ஆரம்பத்துல ஃப்ரெண்ட்ஸா பழகினோம். அப்புறம், ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருந்தது. ஆறு மாசத்துக்கு முன்னாடிதான், புரொப்போஸ் பண்ணிக்கிட்டோம்.

அதுக்குப் பிறகு, நாங்க ரெண்டு பேரும் எங்களோட வீட்டுல பேசினோம். அவங்க வீட்டுல பத்து நிமிஷத்துல ஓகே சொல்லிட்டாங்க. அப்புறம், வீடியோ கால் பண்ணிப் பேசினோம். எங்க வீட்டுல ஒரு வாரம் கழிச்சு ஒத்துக்கிட்டாங்க.

இவரை கரூருக்கு கூட்டிட்டு வந்து, எங்க ஃபேமிலிகிட்ட அறிமுகப்படுத்தி வெச்சேன். இவரை எங்க வீட்டுல எல்லோருக்கும் ரொம்பப் பிடிச்சுபோச்ச்சு. நாடு, மொழி, மதம்னு வேறுபாடு இருந்தாலும், எங்க ரெண்டு பேரையும் புரிஞ்சிக்கிட்டு சம்மதம் தெரிவிச்சிட்டாங்க.

இப்போ மொழிதான் பிரச்னையா இருக்கு. நான் துருக்கி மொழி கத்துக்கிட்டு இருக்கேன். அவர், தமிழ் கத்துக்கிட்டு இருக்கார். இன்னும் ஆறு மாசத்துல முழுசா பேச ஆரம்பிச்சிடுவோம். அவரை தமிழ் பேச வெச்சிடுவோம்’’ என்று சிரித்தவர்,

குடும்பத்துக்கிட்ட சொல்லுவேன். எங்க ரெண்டு குடும்பத்துக்கும், ஒருத்தவங்க பேசுறது மத்தவங்களுக்குப் புரியாது. ஆனா, மொழி தாண்டி கொஞ்சம் கொஞ்சமா மனுஷங்களை புரிஞ்சிக்க ஆரம்பிச்சுட்டாங்க. இப்போ நல்லபடியா கல்யாணம் பண்ணி வெச்சிட்டாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு” எனப் பூரிப்புடன் பேசினார் பிரியங்கா.

ஆசை ஆசையாக கட்டிய வீடு.. கணவனை தள்ளிவிட்டு காப்பாற்றி உயிரை விட்ட மனைவி!!

திண்டுக்கல்லில்..

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே, ஆசை ஆசையாக கட்டிக்கொண்டிருந்த வீட்டில் கணவர் மீது மின்சாரம் பாய்ந்த நிலையில், அவரை தள்ளிவிட்டு காப்பாற்றிவிட்டு, மனைவி உயிரை விட்டுள்ளார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே குளத்துப்பட்டியை சேர்ந்த 37 வயதாகும் பாண்டி கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி 30வயதாகும் உதயசூரியா நிலக்கோட்டையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள்.

இன்று தேர்தல் நடக்கட்டும்.. மோடி “கன்ஃபார்மா” பிரதமர் ஆவார்! பட் காங்கிரஸும் டுவிஸ்ட் வைக்குதே? இன்று தேர்தல் நடக்கட்டும்.. மோடி “கன்ஃபார்மா” பிரதமர் ஆவார்! பட் காங்கிரஸும் டுவிஸ்ட் வைக்குதே?

நிலக்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் டிரைவர் பாண்டி புதிதாக வீடு ஒன்றை கட்டி வருகிறார். அண்மையில் தான் அந்த வீட்டிற்கு மேல்தளம் (கான்கிரீட் ) போட்டார்கள். மாடிக்கான வேலை நடப்பதால் வெளிச்சத்துக்காக, வீட்டுக்குள் தற்காலிகமாக மின்விளக்கு ஒன்றை அவர் எரிய விட்டிருக்கிறார்.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு நேரத்தில் கணவன்-மனைவி 2 பேரும் புதிய வீட்டுக்கு சென்றுள்ளார்கள். அங்கு தாங்கள் ஆசையோடு கட்டி வரும் வீட்டிற்கு தண்ணீரை குழாய் மூலம் பீய்ச்சி அடித்தனர். அப்போது விளக்குக்கு பயன்படுத்திய வயரில் இருந்து மின்கசிவு ஏற்பட்டிருந்தது.

அதன் மீது தண்ணீர் பட்டவுடன், எதிர்பாராதவிதமாக பாண்டி மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாண்டி கூச்சலிட்டார். இதையடுத்து கொஞ்சம் கூட யோசிக்காத உதயசூரியா தனது கணவரை காப்பாற்றுவதற்காக அவரை அங்கிருந்து தள்ளி விட்டார். இதனால் உதயசூரியா மீது மின்சாரம் பாய்ந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே உதயசூரியா இறந்து விட்டதாக தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் பாண்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கணவரை காப்பாற்ற முயன்றபோது மின்சாரம் பாய்ந்து மனைவி பலியான சம்பவம், திண்டுக்கல் நிலக்கோட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தீரா கடன் தொல்லை ஆறா வடுவாக மாறிய கொடூரம்.. பெற்ற மகளை கொன்று விட்டு தந்தை விபரீத முடிவு!!

சென்னையில்..

சென்னைஅயனாவரம் பூசனம் தெருவில் வசித்து வந்தவர் கீதா கிருஷ்ணன் (வயது 52). இவர் இஎஸ்ஐ மருத்துவமனையில் தூய்மை பணியாளர்களுக்கு மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று (ஆகஸ்டு. 23) இரவு இவரது வீட்டிற்கு ஓட்டேரியைச் சேர்ந்த லட்சுமிபதி என்பவர் வந்து நீண்ட நேரமாக கதவை தட்டி உள்ளார்.

நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் உடனே சந்தேகமடைந்த லட்சுமிபதி ஜன்னல் வழியாக பார்த்து உள்ளார்.அப்போது கீதா கிருஷ்ணன் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் தகவல் அறிந்த அயனாவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்த போது, கீதா கிருஷ்ணன் தனது 6 வயது மகள் மானசாவை கொன்றுவிட்டு, தானும் உயிரை மாய்த்து கொண்டது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, 2 பேரின் உடலையும் மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திய போது கடன் தொல்லையால் குடும்பமே உயிரிழந்த சோக சம்பவம் தெரியவந்ததாக கூறினர். அதாவது கோட்டூர்புரத்தில் வசித்து வந்த கீதா கிருஷ்ணனுக்கு கடந்த 2005 ஆம் ஆண்டு பேராசிரியை கல்பனா என்பவருடன் காதல் திருமணம் நடந்துள்ளது.

இவர்களுக்கு குணாலிஸ்ரீ மற்றும் மானசா என இரு மகள்கள் இருந்து வந்த நிலையில் கீதா கிருஷ்ணன் வேலைக்கு செல்லாமல் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் ஈடுப்பட்டு பல பேரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது.

இதனால் மனைவி கல்பனாவுக்கும், கீதா கிருஷ்ணனுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்ட நிலையில், ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தோர் நெருக்கடி கொடுத்ததால் குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொள்ள கீதா கிருஷ்ணன் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு கீதா கிருஷ்ணன் மூத்த மகள் குணாலினிஸ்ரீயை கொலை செய்துவிட்டு மனைவி கல்பனா தற்கொலை செய்து கொண்டு உள்ளார். அப்போது அதிர்ச்சியில் உறைந்த கீதா கிருஷ்ணன் தற்கொலை முடிவில் இருந்து மனம் மாறி இளைய மகள் மானசாவுடன் திருப்பதிக்கு தப்பிச்சென்ற நிலையில், அவர் சென்னை வந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில் 3 மாத சிறை தண்டனைக்குப் பிறகு, சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்த கீதா கிருஷ்ணன் தனது மகள் மானசாவுடன் அயனாவரத்தில் தங்கி வந்துள்ளார். மேலும் கடன் தொல்லை மீண்டும் இவரை சூழ்ந்ததால் ஒருவரிடம் கடன் வாங்கி அந்த கடனை அடைத்து வந்துள்ளார்.

இதற்கிடையே கீதா கிருஷ்ணனுக்கு சொந்தமான வீட்டை லட்சுமிபதி என்பவருக்கு லீசுக்கு விடுவதாக கூறியுள்ளார்.அதற்காக கீதா கிருஷ்ணன் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டதாக தெரிகிறது. ஆனால் பணத்தை வாங்கிய கீதா கிருஷ்ணன் வீட்டை லீசுக்கு விடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் லட்சுமிபதி பணத்தை திருப்பி தரும்படி கேட்டுள்ளார்.

ஆனால் அவர் தரவில்லை. இந்த நிலையில் தான் பணத்தை வாங்க அவரது வீட்டிற்கு லட்சுமிபதி சென்ற போது, தன் மகளை கொலை செய்து விட்டு கீதா கிருஷ்ணன் உயிரை மாய்த்து கொண்டதாக தெரிய வந்து உள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் மீண்டும் மின்வெட்டுக்கான அபாயம்.. வெளிவந்துள்ள தகவல்!!

இலங்கையில்..

நாட்டில் வறட்சியான காலநிலை நிலவுவதால் நீர்மின் உற்பத்தி கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளதுடன், மின் உற்பத்திச் செலவு அதிகரிப்பினால் மீண்டும் மின்வெட்டுக்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அக்டோபர் மாத தொடக்கத்தில் போதிய மழை பெய்யாவிட்டால் மின் உற்பத்தி நெருக்கடிக்கு உள்ளாகும் என இலங்கை மின்சாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போதைய வறண்ட காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதால் நீர் மின் உற்பத்தித் திறன் தேசியத் தேவையில் 15 வீதமாகக் குறைந்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நீர்த்தொட்டியில் வீழ்ந்து பெண் குழந்தை பலி!!

வவுனியா நெளுக்குளம் பகுதியில் நீர்த்தொட்டியில் வீழ்ந்து இரண்டு வயது பெண்குழந்தை ஒன்று மரணமடைந்தது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்…

நேற்று (26.08.2023) மாலை வீட்டுமுற்றத்தில் குறித்த சிறுமி விளையாடிக்கொண்டிருந்தார். எனினும் சிறிது நேரத்தில் குழந்தையை காணாதநிலையில் பெற்றோர் அவரைத் தேடியுள்ளனர்.
இதன்போது குறித்த குழந்தை கிணற்றிற்கு அருகாமையில் இருந்த நீர்த்தொட்டியில் வீழ்ந்துள்ளமை கண்டறியப்பட்டது.

உடனடியாக மீட்கப்பட்ட சிறுமி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் ஏற்கனவே மரணமடைந்ததாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தில் நெளுக்குளம் பகுதியை சேர்ந்த லிங்கராயா திவிக்கா என்ற இரண்டு வயதான குழந்தையே மரணமடைந்தது. சம்பவம் தொடர்பாக நெளுக்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

வவுனியா சட்டத்தரணிகளால் மேற்கொள்ளப்பட்ட பணிப்புறக்கணிப்பும் ஆர்ப்பாட்டமும்!!

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர பாராளுமன்றுக்குள் இருந்து கொண்டு கதைக்காமல் தைரியமிருந்தால் வெளியில் வந்து கதைக்குமாறு வவுனியா சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர தெரிவித்த கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்து வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஒருமணி நேர பணிப்புறக்கணிப்பும் ஆர்ப்பாட்டமும் இன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த போதே வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் அன்ரன் புனிதநாயகம் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்..

நிலுவையில் உள்ள குருந்தூர் மலை தொடர்பான வழக்கினை விசாரித்து வரும் நீதிபதியை பாதிக்கும் வகையிலான கருத்தினை பாராளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர தெரிவித்திருந்தார். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

அத்துடன் அவர் பாராளுமன்ற வரப்பிரசாதத்தை பயன்படுத்தியே இவ்வாறு கதைக்கிறார். முடிந்தால் அவர் வெளியில் வந்து இவ்வாறு கதைக்கவேண்டும்.

அவரது உரை தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவருக்கு முகவுரையிடப்பட்டு, ஐனாதிபதி மற்றும் நீதிஅமைச்சர் நீதிச்சேவைகள் ஆணைக்குழு ஆகியவற்றிற்கு அதன் பிரதிகளை அனுப்ப இருக்கின்றோம். இந்த கடிதமானது வடக்கு கிழக்கில் அமைந்துள்ள அனைத்து சட்டத்தரணிகள் சங்கம் சார்பிலும் அனுப்பப்படவுள்ளது என்றார்.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நீதியான சட்டவாட்சி நடைமுறைப்படுத்தப்படுவதை தடுக்காதே, அரசியல்வாதிகளே நீதிபதிகளை சுதந்திரமாக செயற்படவிடுங்கள், நீதிபதிக்கு மரியாதை வழங்குங்கள், நீதித்துறையில் அரசியல் தலையீடு ஏன் போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

பட்டிதொட்டியெல்லாம் பரவும் யாழ்ப்பாண கலைஞர்களின் ஆலங்குருவியே பாடல்!!

யாழ்ப்பாண கலைஞர்களின் கூட்டு படைப்பாக வெளிவந்துள்ள ஆலங்குருவியே பாடல் தற்போது சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

பல அரச தேசிய விருதுகளுக்கு சொந்தக்காரரான அருள்செல்வம் இப் பாடலை இயக்கியுள்ளார். இவரது ஏனைய படைப்புக்களை போலவே இந்த பாடலும் தனித்துவமான வரவேற்பினை பெற்றுவருகின்றது.

பாடலுக்கான இசையை ஸ்ரீவிஜய் ராகவன் கோர்த்துள்ளதுடன் பாடல் வரிகளையும் அவரே எழுதியுள்ளார். அழகிய மயக்கும் மெட்டுக்கு பாடல்வரிகளை கோர்வையாக எழுதியுள்ளது சிறப்பானது.

படப்பிடிப்பு தளம் யாழ்ப்பாணம். கலாசார தன்மை மிளிரும் மண்ணை வெகு சிறப்பாக படம்பிடித்து அசத்தியுள்ளார் பன்முகத்திறமையாளர் அருள்செல்வம் பாடலை படத்தொகுப்பு செய்தவரும் அவர்தான், நடிகர்களான லஜந்தா குணாளன், கிறிஸ்டினா கிரேஸ், சோபிதன், டருன் ஆகியோரும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

நமது மண் வாசனையுடன் இணைந்த இந்த பாடல் மற்றும்திறைமையான நம் கலைஞர்களின் அத்தனை முயற்சியும் வெற்றிபெற நமது வாழ்த்துகள்.

தந்தை, மனைவி, மகனை கொலை செய்த நபர் எடுத்த விபரீத முடிவு!!

இந்திராநகரில்..

சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி இந்திராநகரில் வசித்து வருபவர் சிவராமன். இவர் பெங்களூரில் உள்ள விமான நிலையத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி வசந்தா மற்றும் இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இவரின் 2வது மகன் திலக், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் 2வது மகனான திலக், அவரது மனைவி மகேஸ்வரி மற்றும் 6 வயது வாய் பேச முடியாத மகன் வசித்து வந்தனர்.

வாய் பேச முடியாத மகனுக்கு அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போனது . தந்தையாக திலக் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இதனால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டார்.

அதன்படி வீட்டிலிருந்த தாய், தந்தை, மகன் மற்றும் மனைவி அனைவருக்கும் திலக், தண்ணீரில் விஷம் கலந்து கொடுத்து விட்டார். அத்துடன் திலக்கும் மாடியில் உள்ள ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அவரது மனைவி மகேஸ்வரி, தனது சகோதரருக்கு தற்கொலை செய்துகொள்ளப்போவதாக வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.உடனே மகேஸ்வரியின் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களுக்கு போன் செய்து மகேஸ்வரியின் வீட்டில் சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.

அப்போது சிவராமன், திலக், மகேஸ்வரி மற்றும் அவரது 6 வயது மகன் ஆகியோர் உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.அவரது தாய் வசந்தா மயக்க நிலையில் இருந்ததை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அத்துடன் அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஊசிபோட்டு தற்கொலை செய்து கொண்டவைத்தியர்.. காரணம் என்ன?

சென்னையில்..

சென்னையில் மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியர் ஊசி போட்டு தற்கொலை கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் வசித்து வந்தவர் டாக்டர் கார்த்திக்(42).

இவர் சென்னை மருத்துவக்கல்லூரியில் இரைப்பை, குடல் அறுவை சிகிச்சை பிரிவின் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில், காத்தியை உறவினர் பலமுறை செல்போனில் தொடர்பு கொண்ட போதும் எடுக்கவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரது தோழியை வீட்டிற்கு சென்று பார்க்கும் மாறி கூறியுள்ளனர். இதனையடுத்து, கார்த்திக் வீட்டிற்குச் சென்று பார்த்த போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அப்போது கார்த்திக் அழுகிய நிலையில் சடலமாக கிடப்பதை கண்டு அலறி கூச்சலிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவரது தற்கொலை தொடர்பாக போலீசார் அவரது வீட்டை பரிசோதனை செய்த போது கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதில், எனது முடிவு என்னுடையது என்று எழுதப்பட்டிருந்தது. டாக்டர் தற்கொலை குறித்து தேனாம்பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

யூடியூப் பார்த்து இயற்கை முறையில் பிரசவம் பார்த்த கணவர்.. இளம்பெண் பரிதாப மரணம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் யூடியூப் பார்த்து இயற்கை முறையில் பிரசவம் பார்த்ததால் இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலங்களில் பலருக்கு இயற்கை மீதான ஆர்வம் அதிகமாகி வருகிறது.

கர்ப்பிணி பெண்கள் அனைவருக்கும் இயற்கை முறையில் பிரசவம் ஆக வேண்டும் என்பதே ஆசையாக இருக்கும். வேறு வழி இல்லாத காரணத்தினால் மட்டுமே செயற்கை மருத்துவத்தை நாடுகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், அழகுக்குறிப்புகள் முதல் உடல்நிலை பிரச்சனை வரை யூடியூப் பார்த்து தான் அதற்கான தீர்வினை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்தவகையில், தற்போது சிலர் மருத்துவமனைக்கு செல்லாமல் இயற்கை முறையில் எப்படி பிரசவம் ஆக வேண்டும் என்பது பற்றிய குறிப்புகளை யூடியூபில் பார்க்கின்றனர்.

தமிழகம், தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தை சேர்ந்த மாதேஷ் (27) என்பவருக்கும், போச்சம்பள்ளியை அடுத்த புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த லோகநாயகி (27) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இவர்கள், இருவரும் இயற்கை மீதான ஆர்வம் கொண்டவர்கள். மேலும், இவர்கள் இருவருமே வேளாண்மை பட்டப்படிப்பு படித்தவர்கள். இந்நிலையில், லோகநாயகி கர்ப்பமானதையடுத்து தனது வீட்டிலேயே இயற்கை முறையில் பிரசவம் ஆக வேண்டும் என்று கணவரிடம் கூறியதாக கூறப்படுகிறது.

இதனால், இயற்கை முறையில் எப்படி குழந்தை பெற்றுக்கொள்வது என்று யூடியூபில் பார்த்துள்ளனர். இந்நிலையில், லோகநாயகிக்கு நேற்று காலை வலி வந்துள்ளது. அப்போது, பேசியபடியே யூடியூப் பார்த்து கணவர் மாதேஷ் மனைவிக்கு பிரசவம் பார்த்துள்ளார். அப்போது, அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

பின்னர், லோகநாயகிக்கு திடீரென ரத்தப்போக்கு அதிகமாகி மயக்கமானார். இதனையடுத்து, அவரை போச்சம்பள்ளியில் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே லோகநாயகி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து மாதேஷிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இயற்கை முறையில் பிரசவம் பார்த்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கழிவறையில் காத்திருந்த எமன்.. ஓடும் புகையிரதத்தில் 22 வயது இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!!

ராஜஸ்தானில்..

கஜுராஹோ எக்ஸ்பிரஸ் ரயிலின் கழிப்பறையில் 22 வயது இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சமீப காலமாக மாரடைப்பு காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

இந்த வயது இருக்கும் நபர்களுக்கு தான் மாரடைப்பு ஏற்படுகிறது என்று இல்லாமல் வயது வித்தியாசம் இல்லாமல் வருகிறது. இது போன்ற சம்பவம் தான் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்து உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் சித்தோகர் பகுதியில் வசித்து வந்த அக்ஷய் என்ற 22 வயது இளைஞர் ராமேஸ்வரத்தில் மத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ஊர் திரும்பும் போது இந்த துயர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ராமேஸ்வரத்தில் நடைபெற்ற பகவத் சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அக்ஷய் மற்றும் சித்தோகர் பகுதியை சேர்ந்த மேலும் பலர் ராஜஸ்தானில் இருந்து கிளம்பியுள்ளனர்.

சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முடித்த பிறகு, அங்கிருந்து ராஜஸ்தானுக்கு திரும்ப அக்ஷய் மற்றும் அவருடன் வந்த குழுவினர் கஜூராஹோ எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியுள்ளனர்.

அப்போது ரயில் சித்தோர்கரை அடைவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு குடும்பத்தினர் ரயிலில் இருந்து இறங்குவதற்காக தங்கள் பொருட்களைக் கட்டிக் கொண்டிருந்தனர்.

அப்போது அக்ஷய் கங்ரார் ரயில் உள்ள கழிப்பறைக்கு சென்றார். அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்து கீழே விழுந்தார். நீண்ட நேரமாகியும் அக்ஷய் திரும்பவில்லை.

அவரது குடும்பத்தினர் சந்தேகம் அடைந்து கழிவறைக்கு சென்று பார்த்தனர். அங்கு கழிவறை மூடப்பட்டு இருந்துள்ளது. அவர்கள் கதவை தட்டிஅழைத்தபோது உள்ளே இருந்து எந்த பதிலும் வரவில்லை.

இதற்கிடையில், ரயில் அதிகாலை 4.05 மணிக்கு சித்தூர்கர் சந்திப்புக்கு வந்தபோது, ​​குடும்பத்தினர் இது குறித்து ஜிஆர்பிக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று கழிவறை கதவை உடைத்து பார்த்தபோது, ​​அக்ஷய் கீழே விழுந்து கிடந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அக்ஷய் ஆம்புலன்ஸ் மூலம் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாக தெரிவித்தனர், பிரேத பரிசோதனைக்கு பின், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மருத்துவம் படிக்க விரும்பிய அக்ஷய் அடுத்த மாதம் செர்பியாவுக்கு சென்று மருத்துவ படிப்பை தொடர இருந்த நிலையில் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நடுரோட்டில் நண்பனின் மனைவியை குத்தி கொலை செய்த இளைஞன்!!

செங்கல்பட்டில்..

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் ரயில் நகர் பகுதியில் வசித்து வருபவர் சுந்தர். இவருடைய மனைவி தாரணி . இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இதில் சுந்தர் கூலிப்பணி செய்து வருகிறார்.

இதில் செங்கல்பட்டு சிங்கபெருமாள் கோவில் மல்ரோசாபுரம் பகுதியில் சுதீன் , சுந்தர் இருவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் ஒன்றாக மது குடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

அதே நேரத்தில் சுதீன் சுந்தரின் வீட்டிற்கு அடிக்கடி வருவதும் வாடிக்கை தான். இந்நிலையில் சுந்தரின் மனைவி தாரணியிடமும் சுதீன் பேசி வந்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இதனையடுத்து இருவரும் அவ்வப்போது தனிமையில் உல்லாசம் அனுபவித்தும் வந்துள்ளனர்.சில நாட்களில் தாரணியின் கணவர் சுந்தருக்கு இருவரின் கள்ளக்காதல் விவகாரம் தெரிய வந்தது இதனை அடுத்து இருவரையும் கண்டித்துள்ளார். கணவரின் பேச்சை கேட்டு சுதீன் உடனான தொடர்பையும் தாரணி துண்டித்துள்ளார்.

இந்நிலையில் தாரணி சுந்தரின் வீட்டு வாசலில் நின்றுக்கொண்டு இருந்தார். அப்போது சுதீன் என்னிடம் ஏன் வழக்கம் போல பேசுவது கிடையாது, என்னை விட்டு ஏன் விலகி செல்கிறாய் என கூறி விவாதம் செய்துள்ளார்.

இந்நிலையில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சுதீன் தான் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் அரிவாள்மனையை கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் தாரணியின் மார்பு,வயிறு,கழுத்து பாகங்களில் சரமாரியாக குத்தி கொலை செய்தார்.

தாரணி அதே இடத்தில் இரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்து பரிதாபமாக துடி துடித்து உயிரிழந்தார். தாரணியை ஆத்திரம் தீர கொலை செய்த சுதீன் மறைமலை நகர் காவல் நிலையத்திற்கு தானே நேரில் சென்று ஆஜரானார்.

கொலை நடந்த இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தாரணியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு சுதீனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அத்துடன் அவர் கொலை செய்ய பயன்படுத்திய கத்தியையும் பறிமுதல் செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பனின் மனைவியை நண்பனே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும்,அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

காதலன் உயிரிழந்து 2 மாதம் கழித்து விபரீத முடிவெடுத்த காதலி : விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!!

புதுச்சேரியில்..

புதுச்சேரி பிராந்தியம் ஏனாம் பகுதி ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள யூ.கே.வி நகரைச் சேர்ந்தவர் மௌனிகா. இவரது பெற்றோர் இறந்த நிலையில் கடந்த 10 வருடமாக மாமா வீட்டில் தங்கி, செவிலியர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

மேலும் மௌனிகா ஏனாம் குருசம்பேட்டை பகுதியைச் சேர்ந்த சின்னா என்ற வாலிபரை காதலித்து வந்தார். கஞ்சா பழக்கத்துக்கு அடிமையான இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சகோதரரிடம் கஞ்சா புகைக்க 500 ரூபாய் பணம் கேட்டுள்ளார். இதற்கு அவர் பணம் தர சகோதரர் மறுத்துள்ளார்.

அப்போது சின்னா தனது உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொள்வதாக மிரட்டியபோது எதிர்பாராத விதமாக அவரது உடலில் தீப் பிடித்துக் கொண்டது. பிறகு தீயை அணைத்துப் பலத்த காயத்துடன் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்குச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து காதலன் உயிரிழந்ததால் கடந்த இரண்டு மாத காலமாக மௌனிகா கல்லூரி செல்லாமல் சோகத்திலிருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மாமா காவல்நிலையத்திற்குப் புகார் கொடுத்தார். பின்னர் அங்கு வந்த போலிஸார் மொளனிகாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை செய்து கொள்வதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராமில் தனது காதலன் பெயரை கையில் பொருத்திய ரீல்சை மௌனிகா வெளியிட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

5 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன செய்தி தொகுப்பாளினி.. எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சோகம்!!

சத்தீஸ்கரில்..

காணாமல் போன செய்தி தொகுப்பாளினியின் எலும்புக்கூடு 5 ஆண்டுகளுக்கு பின்பு கிடைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் செய்தி தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் சல்மா சுல்தானா.

இவர் கடந்த அக்டோபர் 21, 2018-ம் ஆண்டு வேலைக்கு சென்றவர் பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் இவரின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்படி வழக்கு பதிவுசெய்த போலிஸார் சல்மா குறித்து தகவல் ஏதும் கிடைக்காததால் இந்த புகாரை அப்படியே விட்டுவிட்டனர். 5 ஆண்டுக்கு பிறகு நிலுவையில் உள்ள வழக்குகள் பரிசீலிக்கப்பட்டபோது சல்மா குறித்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டது.

அப்போது வங்கி ஒன்றில் சல்மா கடன் வாங்கியதும் அதற்கான வட்டியை இளைஞர் ஒருவர் திருப்பி செலுத்தியதும் பின்னர் 2019-ம் ஆண்டுக்கு பின்னர் அந்த இளைஞர் வட்டி கட்டுவதை நிறுத்தியதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவரை கண்டறிந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், சல்மாவும் அந்த இளைஞரையும் காதலித்து வந்தது தெரியவந்தது, பின்னர் சந்தேகம் ஒன்றில் சல்மாவை அந்த இளைஞர் கொலை செய்து நண்பர் உதவியோடு புதைத்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சல்மா புதைக்கப்பட்ட இடத்துக்கு போலிஸார் சென்றபோது அங்கு சாலை அமைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

பின்னர் சல்மா புதைக்கப்பட்ட இடத்தில் போலிஸார் சோதனை நடத்தியபோது, பாலித்தீன் சுற்றப்பட்ட எலும்புக்கூடு கண்டறியப்பட்டது. மேலும், அதோடு ஒரு ஜோடி செருப்பும் கண்டறியப்பட்டுள்ளது. பின்னர் அந்த எலும்புக்கூடு டிஎன்ஏ சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.