காதலனுக்காக பாகிஸ்தானில் இருந்து நொய்டா வந்த சீமா ஹைதர் சம்பவம் நடப்பதற்கு பின், மற்றொரு வங்கதேச பெண் இந்திய கணவனைத் தேடி தனது மகனுடன் நொய்டாவுக்கு வந்துள்ளார்.
வங்கதேசத்தைச் சேர்ந்த சோனியா அக்தர் என்ற அந்தப் பெண் தனது மகனுடன் நொய்டாவுக்கு வந்தார். நொய்டாவில் வசிக்கும் சவுரவ் காந்த் திவாரி தன்னை வங்கதேசத்தில் திருமணம் செய்து கொண்டதாகவும், அவர்களுக்கு ஒரு மகன் இருப்பதாகவும் சோனியா கூறினார்.
திவாரி வங்கதேசத்தில் பணிபுரியும் போது தாங்கள் காதலித்து இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டதாக சோனியா கூறினார். தனது கர்ப்பத்திற்குப் பிறகு, இஸ்லாம் மதத்திற்கு மாறிய திவாரி, முக்கியமான வேலையை முடித்துவிட்டுத் திரும்புவதாக உறுதியளித்து இந்தியா வந்தார்.
திவாரி திரும்பி வராததால், சோனியா அவரிடம் செல்போன் மூலம் பேச முயன்று தோல்வியடைந்தார். இந்நிலையில், சீமா ஹைதரின் சம்பவத்தால் ஈர்க்கப்பட்ட சோனியா அக்தர் விசா உதவியுடன் இந்தியா வர முடிவு செய்தார்.
சோனியா அக்தர் நொய்டாவை அடைந்தவுடன், பொலிஸார் அவரை காவலில் எடுத்து, செக்டார்-62ல் உள்ள தடுப்பு மையத்தில் தங்க வைத்தனர். பின்னர், நொய்டா காவல் ஆணையரகத்தின் மகளிர் பிரிவு திவாரிக்கும் சோனியாவுக்கும் இடையே சமரசம் செய்ய முயன்றும் பலனில்லை.
தனது கணவர் தன்னுடன் வங்கதேசத்திற்கு திரும்பி வர வேண்டும், இல்லையெனில் திவாரியுடன் இந்தியாவில் தங்குவேன் என்று சோனியா கூறுகிறார். மொத்தத்தில் காதலர்களுக்காக வெளிநாட்டு பெண்கள் இந்தியாவுக்கு வருவது விவாதப் பொருளாகியுள்ளது.
தருமபுரி பாலக்கோடு சாணார் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவா் இன்று(ஆகஸ்ட் 22) தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு மனு அளித்தார்.
அந்த மனுவில், “நர்மதா என்பவரை தான் கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்ததாகவும், திருமணத்திற்கு நர்மதா வீட்டில் சம்மதிக்கவில்லை.
இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 20-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டோம். இதனை அறிந்த நர்மதா வீட்டைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் எனது நண்பர்களை அழைத்து,
சீனிவாசன் எங்கே இருக்கிறார் என்று கேட்டு துன்புறுத்துவதாகவும், தங்கள் இருவரையும் கொலை செய்வதாக மிரட்டல் விடுத்து வருவதால் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய சீனிவாசன், “நான் ஹோட்டல் நடத்தி வருகிறேன்.நர்மதா நர்சிங் படித்து வருகிறார். ஐந்து வருடங்கள் காதலித்து வந்தோம். நர்மதா வீட்டிற்கு காதல் விவகாரம் தெரிந்தவுடன் பல்வேறு இடங்களில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள்.
வீட்டை விட்டு வெளியேறி பழனியில் திருமணம் செய்து கொண்டோம். நர்மதாவின் உறவினர்கள் அவரது பெற்றோர் எனது பெற்றோர் மற்றும் உறவினர்களை சீனிவாசன் எங்கே? என்று கேட்டு மிரட்டி வருவதால் பாதுகாப்பு கேட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளோம்” இவ்வாறு கூறினார்.
சேலம் கன்னங்குறிச்சி எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் திலக். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கொரோனா காலத்தில் இருந்து சேலத்தில் வீட்டிலிருந்தபடியே வேலை பார்த்து வந்தார் திலக்.
அவரது தந்தை சிவராமன், தாய் வசந்தா, மனைவி மகேஸ்வரி மற்றும் ஆறு வயதில் பிறவியிலிருந்து பேச முடியாத குழந்தை சாய் கிரிசாந்த் ஆகியோருடன் வசித்து வந்தார். ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை முதலீடு செய்து அதன் மூலமாக வருமானத்தையும் ஈட்டி வந்துள்ளார்.
இந்த நிலையில் திலக்கின் ஒரே மகன் பிறவியிலிருந்து வாய் பேச முடியாமல் இருந்ததால் மிகுந்த மன அழுத்தத்தில் திலக் குடும்பத்தினர் இருந்துள்ளனர். தொடர்ச்சியாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை மற்றும் கோவிலுக்கு சென்று குழந்தைக்கு பேச்சு வர வேண்டும் என பிரார்த்தனை நடத்தி வந்துள்ளது.
இதேபோன்று நேற்று இரவு திலக் கோவிலுக்கு சென்று வந்ததாக கூறி வீட்டிலிருந்து தந்தை, தாய், மனைவி மற்றும் குழந்தைக்கு பிரசாதம் வழங்கியதாக கூறப்படுகிறது. அந்தப் பிரசாதத்தில் திலக் விஷம் வைத்து கொடுத்ததாக தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் பிரசாதம் சாப்பிட்டு திலக்கின் தந்தை சிவராமன், மனைவி மகேஸ்வரி மற்றும் மகன் சாய் கிரிசாந்த் உயிரிழந்துள்ளனர். திலக்கின் தாய் வசந்தா மயக்க நிலையில் இருந்துள்ளார்.
இன்று காலை பெங்களூரில் பணியாற்றி வரும் திலக்கின் அண்ணன் வீட்டிற்கு பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு யாரும் எடுக்காததால் சந்தேகம் அடைந்துள்ளார். உடனடியாக சேலத்தில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தொடர்பு கொண்டு வீட்டிற்கு சென்று பார்க்க சொல்லி இருக்கிறார்.
உடனடியாக திலக்கின் வீட்டிற்கு வந்த உறவினர்கள் பலமுறை கதவை தட்டிப் பார்த்துள்ளனர். யாரும் வராததால் உடனடியாக கன்னங்குறிச்சி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கன்னங்குறிச்சி காவல்துறையினர் கதவிற்கு அருகில் இருந்த கண்ணாடியை உடைத்து கதவை திறந்தனர். அப்போது திலக்கின் தாய் வசந்தா மயக்கமான நிலையில் தவழ்ந்த படி வந்துள்ளார். திலக்கின் தந்தை சிவராமன் அவரது அறையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.
மேல் மாடியில் உள்ள அறைக்குச் சென்று பார்த்தபோது திலக் தூக்கில் தொங்கியபடியும், அவரது மனைவி மகேஸ்வரி மற்றும் மகன் சாய் கிரிசாந்த் உயிரிழந்த நிலையில் கீழே கிடந்துள்ளனர்.
மேலும் உயிருடன் இருந்த திலக்கின் தாய் வசந்தாவை மீட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். திலக்கின் அறையில் சோதனை நடத்திய காவல்துறையினர் தற்கொலை கடிதத்தை கைப்பற்றி உள்ளனர்.
அதில் ஆன்லைன் வர்த்தகத்தில் பெருமளவில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனை கைப்பற்றிய கன்னங்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த நான்கு பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சேலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினரும், பொலிசாரும் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது முறைகேடான வகையில் தனியார் வைத்தியசாலைகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதாரப் பிரிவினர் இன்று (24.08) தெரிவித்தனர்.
வவுனியா வைத்தியசாலையில் அண்மையில் இடம் பெற்ற வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளரின் ஊடக சந்திப்பின் போது வவுனியாவில் முறைகேடான முறையில் அதாவது உரிய தகுதி பெறாத வைத்தியர்கள் சிலர் தனியார் வைத்தியசாலைகளையும், மருந்தகங்களையும் நடத்துவதாக ஊடகவியலாளர்கள் குற்றம் சாட்டி அதனை சுட்டிக் காட்டியிருந்தனர்.
இதனையடுத்து, வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அவர்களின் பணிப்புக்கு அமைய வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் மற்றும் பொலிசார் இணைந்து,
வவுனியா, நெளுக்குளம் பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிகையின் போது ஆயுள்வேத வைத்தியர் ஒருவர் தனியார் வைத்தியசாலையின் பேரில் ஆங்கில மருந்துகளை விநியோகம் செய்வது கண்டு பிடிக்கப்பட்டதுடன், அங்கிருந்த பெருந்தொகையான மருந்துகளும் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன், சிதம்பரபுரம் பகுதியில் உள்ள ஒருவர் ஆயுள்வேத வைத்தியர் என்ற பெயரில் வைத்தியசாலை ஒன்றினை நடத்தி வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த வைத்தியசாலையில் இருந்த ஆயுள்வேத மற்றும் ஆங்கில மருந்துகள் மீட்கப்பட்டுள்ளதுடன், குறித்த நபர் ஆயுள்வேத வைத்தியர் இல்லை என்பதும் தெரியவந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த தனியார் வைத்தியசாலைகளை நடத்திய உரிமையாளர்கள் இருவரையும் விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், குறித்த இரு நிலையங்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, இரட்டை கொலை சந்தேக நபர்கள் மற்றும் தேடப்படும் நபர்களின் வங்கிக் கணக்குகளை பரிசோதிக்க குற்றப் புலனாய்வு திணைக்கள கொலை விசாரணைப் பிரிவுக்கு (சிஐடி) அனுமதி வழங்கியதுடன், அவர்கள் வெளிநாடு செல்ல தடை விதித்து அவர்களது கடவுச் சீட்டுக்களையும் முடக்க வவுனியா நீதிமன்றம் இன்று (24.08) உத்தரவிட்டது.
வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த மாதம் 23 ஆம் திகதி அதிகாலை இடம்பெற்ற இரண்டைக் கொலை சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டு வவுனியா நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் தொடர்பான விசாரணை வவுனியா நீதிமன்றில் இடம்பெற்று வந்த நிலையில் இன்றையதினம் (24.08) அடையாள அணிவகுப்புக்கு திகயிடப்பட்டிருந்தது.
எனினும் அடையாள அணிவகுப்புக்கு உரிய நபர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதானால் குறித்த வழக்கு எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு திகயிடப்பட்டது.
குறித்த வழக்கு விசாரணையின் போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரின் கொலை விசாரணைப் பிரிவினரால் முதலாம் மற்றும் இரண்டாம் சந்தேக நபர்களிடம் பெறப்பட்ட வாக்கு மூலம் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டதுடன்,
பிரதான சந்தேக நபரான 6ஆம் சந்தேக நபரை மீள விசாரணை செய்ய மன்றில் அனுமதி கோரியிருந்தனர். இதற்கு மன்று அனுமதி வழங்கியிருந்தது.
அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்கள கொலை விசாரணைப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட டிப்பர், பட்டா ரக வாகனம், 4 மோட்டர் சைக்கிள்கள், வாள்கள், கோடரிகள் உள்ளிட்ட சான்றுப் பொருட்கள் மன்றில் ஒப்படைக்கப்பட்டது.
மேலும், சந்தேக நபர்களினதும், தேடப்படும் நபர்களினதும் வங்கிக் கணக்குகளை பரிசோதனை செய்ய நீதிமன்றத்திடம் குற்றப் புலானாய்வு திணைக்களத்தினர் அனுமதி பெற்றதுடன், அவர்கள் வெளிநாட்டு செல்ல தடை விதித்து அவர்களது கடவுச் சீட்டுக்களும் மன்றினால் முடக்கப்பட்டது.
பிரதான சந்தேக நபரான 6 ஆவது சந்தேக நபர் சிறைச்சாலையில் கைத்தொலைபேசி பாவித்துள்ளதுடன், 3292 அழைப்புக்களை மேற்கொண்டுள்ளதாகவும் மன்றுக்கு தெரியப்படுத்திய குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் அது தொடர்பில் விசாரணை செய்ய மன்றின் அனுமதியையும் பெற்றிருந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினரின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மொடிஸ் ரஞ்சலமரகே அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக பொலிஸ் பரிசோதகர் இக்பால், பொலிஸ் சார்ஜன்ட் சந்தரூவான், பொலிஸ் கான்ஸ்டபிள் விஜயரட்ண மதுசங்க பண்டார ஆகியோர் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ்.வடமராட்சி கொற்றாவத்தை பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 14 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் இன்று (24.08.2023) மதியம் கரணவாய் வடமேற்கு, கொற்றாவத்தை கணபதி மில்லுக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் கொற்றாவத்தை பகுதியைச் சேர்ந்த வயது 14 சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், 21 வயதுடையவர் இளைஞன் படுகாயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் தூக்கி வீசப்பட்டதோடு, மோட்டார் சைக்கிள் தீ பிடித்தும் எரிந்துள்ளது.சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு-வாழைச்சேனை, புனாணை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளம் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்துச் சம்பவம் இன்று (24.08.2023) அதிகாலை 12.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அண்மையில் ஆங்கிலப் பாட ஆசிரியர் நியமனம் பெற்ற 25 வயதுடைய ஓட்டமாவடி 3ஆம் வட்டாரத்தில் வசித்து வந்த எஸ்.எச்.எம்.அஸாம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஓட்டமாவடி கல்விக் கோட்ட ரிதிதென்னை இக்ராஹ் வித்தியாலயத்தின் ஆங்கிலப் பாட ஆசிரியரான இவர், ரிதிதென்னையிலிருந்து ஓட்டமாவடி நோக்கி தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது எதிரே வந்த பேருந்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மற்றையவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.உயிரிழந்த இளம் ஆசிரியரின் உடல் வைத்திய பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
அண்மைக்கால வரலாற்றில் பாரிய சம்பள நிலுவையான இலங்கை பெறுமதியில் 25,10,400 ( 2400 குவைத் தினார்கள்) ரூபாவை பெற்றுக் கொண்ட பெண் ஒருவர் குவைத்திலிருந்து நாடு திரும்பியுள்ளார்.அந்நாட்டில் பணிப் பெண்ணாக வேலை செய்த ஜெனிட்டா டெலிகா என்ற இலங்கைப் பெண்ணே இன்று (24.08.2023) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
ஜெனிட்டா டெலிகா என்ற 46 வயதான காலி – கோனாபினுவில் வசிக்கும் ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு மிகப் பெரிய சம்பளப் பாக்கியை பெற்றுக் கொண்டு நாடு திரும்பினார்.இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பணிப் பெண்ணாக குவைத்தில் உள்ள வீடு ஒன்றுக்குச் சென்றிருந்தார்.
அந்த நாட்டில் பாடசாலை ஆசிரியையான பெண் ஒருவரின் வீட்டில் பணிப் பெண்ணாக பணிபுரிந்த இவர் ஆசிரியையான எஜமானியால் பலத்த துன்புறுத்தலுக்கு உள்ளாகினார். ‘அந்த வீட்டின் உரிமையாளரான பெண் எப்போதும் என்னை அடிப்பார். ‘எனக்கு மாத சம்பளம் முறையாக வழங்கப்படவில்லை’. என ஜெனிடா டெலிகா கூறுகிறார்.
இதுபற்றி அம்மாவிடம் தெரிவித்தேன். அதன்படி, கடந்த (02.02.2022) அன்று அம்மா கொழும்பு வந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் முறைப்பாடு செய்தார் என்றும் அவர் கூறியுள்ளார்.குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு இது தொடர்பில் முறையிடப்பட்டதனையடுத்து இலங்கை தூதரக அதிகாரிகள் அந்நாட்டுப் பொலிஸாருக்கு இதனை அறிவித்திருந்தனர்.
அப்போதும் குறித்த வீட்டிலேயே ஜெனிடா டெலிகா பணி புரிந்து வந்ததால் வீட்டின் உரிமையாளரை அந்நாட்டு பொலிஸார் அழைத்து விசாரணையை முன்னெடுத்தனர்.அந்த வீட்டில் 3 வருடங்களும் 8 மாதங்களும் பணியாற்றிய ஜெனிடாவுக்கு ஒரு வருடமும் 3 மாதத்துக்குமான சம்பளமே வழங்கப்பட்டது.
பின்னர், இலங்கை தூதரக அதிகாரிகள் இந்த முறைப்பாட்டை அப்பகுதி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தபோது, மீதமுள்ள சம்பள பாக்கியை வழங்குவதற்கு வீட்டின் உரிமையாளர்களுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டது.
அதுவரை ஜெனிட்டா டெலிகா இலங்கை தூதரகத்துடன் இணைந்த வரவேற்பு மையம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையிலேயே அவர் தனக்கான பாக்கிப் பணத்தைப் பெற்றுக் கொண்டு இலங்கை வந்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணிகளை ஏற்றி வந்த சொகுசு பேருந்து நீர்கொழும்பில் தீப்பற்றி எரிந்துள்ளது.குறித்த சம்பவம் இன்று (24-08-2023) அதிகாலை 4:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வெளிநாடு செல்வதற்காக 35 பயணிகளை ஏற்றி வந்த சொகுசு பஸ் ஒன்றே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளது.புதன்கிழமை (23-08-2023) இரவு எட்டு மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து 35 பயணிகளை ஏற்றுக் கொண்டு விமான நிலையம் நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.
இதற்கமைய இன்று (24.08.2023) அதிகாலை 4.30 மணி அளவில் நீர்கொழும்பு தளுவகொட்டுவ பிரதேசத்தில் வைத்து திடீரென தீ பற்றி கொண்டதாகவும் உடனடியாக பேருந்தில இருந்த பயணிகள் காப்பாற்றப்பட்டதுடன் வேறு வாகனங்களில் அவர்கள் விமான நிலையம் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்த தீ விபத்து காரணமாக பேருந்து முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இளம் மனைவி கொலையில் 5 மாதங்களின் பின்னர் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி அலவத்துகொட எல்லக்கடை பிரதேசத்தில் வசித்து வந்த இருபத்தியாறு வயது பெண்ணை கொன்று வீட்டிற்கு அருகில் ஒரு வயல் சேற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் மனைவி கொலை சம்பவம் தொடர்பில் , அங்கவீனமுற்ற இராணுவ சிப்பாய் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தார்.
இது தொடர்பாக விசாரணைகளில் ஈடுபட்ட போலீசார் , படுகொலைச் சம்பவம் இடம்பெற்று ஐந்து மாதங்களின் பின்னர், உண்மைகளின் அடிப்படையில் கொலையுண்ட பெண்ணின் கணவரை சந்தேகத்தின் பேரில் நேற்று (22) கைது செய்துள்ளனர்.
வவுனியாவை உலுக்கிய இரட்டைக் கொலை பிரதான சந்தேநபரிடம் இருந்து வவுனியா சிறைச்சாலையில் தொலைபேசி மீட்கப்பட்டுள்ளதுடன், பெண் ஒருவருடன் தினமும் 90 நிமிடங்கள் உள்ளடங்களாக 35 தடவைகள் உரையாடியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினரால் நீதிமன்றிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புகுந்த நபர்கள் அவ் வீட்டில் இருந்த ஒருவர் மீது வாள் வீசி தாக்கியதுடன், வீட்டிற்கு பெற்றோல் ஊற்றி தீ வைத்தனர். இச் சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர்களான கணவன், மனைவி ஆகிய இருவரும் மரணமடைந்திருந்தனர்.
இச் சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் பிரதான சந்தேக நபர்கள் உட்பட 5 பேர் வவுனியா சிறைச்சாலையிலும், ஒருவர் அனுராதபுரம் சிறைச்சாலையிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் வவுனியா சிறைச்சாலையில் இருந்த பிரதான சந்தேக சந்தேக நபர் தொலைபேசி பாவித்துள்ளமை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினருக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து இன்று (24.08) அதிகாலை சிறைச்சாலையில் மேற்கொண்ட திடீர் சோதனையில் பிரதான சந்தேக நபரிடம் இருந்து கைத்தொலைபேசி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த தொலைபேசி ஊடாக 3292 வெளிச் செல்லும் அழைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதில் 3 அழைப்புக்கள் குறித்த நபரின் மனைவிக்கும், பிறிதொரு பெண்ணுக்கு ஒன்றரை மணித்தியாலப்படி 35 தடவைகள் அழைப்பு எடுத்து கதைத்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நீதிமன்றத்திடம் அனுமதி பெற்று குற்றப் புலனாய்வு திணைக்கள கொலை விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
களுத்துறை – அங்குருவத்தோட்ட, ஊருதொடாவ பிரதேசத்தில் இளம் தாய் மற்றும் 11 மாத பெண் குழந்தையை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபர் சிறைச்சாலையினுள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராணுவ சிப்பாயான சந்தேக நபரின் சடலம் கயிற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.வரகாகொட சல்கஸ்வத்த மாவத்தை பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட சந்தேகநபர் அங்குருவத்தோட்ட, ஊருதொடாவ பிரதேசத்தில் வசித்த 24 வயதான வாசனா குமாரி மற்றும் 11 மாத குழந்தையான தஸ்மி திலன்யாவை படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புவி ஈர்ப்பு விசை இல்லாத விண்வெளிக்குச் செல்லும் வீரர்களுக்கு உணவு உண்பது என்பது கடிமான விடயம்.விண்வெளி வீரர்களுக்கு அதிகளவில் உலர் பழங்கள், பெரும்பாலும் திரவ நிலையிலான உணவு வகைகளே இதுவரைக்காலமும் வழங்கப்படுகிறது.
புவியீர்ப்பு விசையே இல்லாத விண்வெளியில் உணவை சாப்பிடுவது என்பது மற்றொரு சவால். இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் விண்வெளி வீரர் ஒருவர் வெளியிட்டுள்ள விண்வெளியில் சாப்பிடும் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் விண்வெளி வீரர் சுல்தான் அல்-நியாடி ஆறு மாதங்களாக விண்வெளிப் பயணத்தில் ஈடுபட்டுள்ளார். விண்வெளி பயணத்தின் போது அவர் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) விண்வெளி வீரர்கள் எப்படி உணவு உண்கிறார்கள் என்பதை அவர் கூறியுள்ளார். இந்த வீடியோவில், அவர் தேன் தடவிய ரொட்டியை சாப்பிடுவதைக் காணலாம்.
வீடியோவைப் பகிரும் போது, அவர் அதன் தலைப்பில், ‘விண்வெளியில் தேனைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்னிடம் எமிராட்டி தேன் மீதம் உள்ளது, அதை நான் அவ்வப்போது சாப்பிடுகிறேன். இதன் நன்மைகள் பல நிறைந்தது. இது விண்வெளி வீரர்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது’ என பதிவிட்டுள்ளார்.
கானாவில் நடைபெற்ற 4ஆவது மிஸ் ரீன் சுற்றுலா (Miss Teen Tourism ) போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய மிஸ் நெலுனி சௌந்தர்யா, இன்று புதன்கிழமை (23) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
20 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்குபற்றிய இப்போட்டியானது கானாவின் அக்ரா நகரில் கடந்த முதலாம் திகதி முதல் 20 ஆம் வரை இடம்பெற்றது.
இந்த வெற்றியைப் பெற்ற மிஸ் நெலுனி சௌந்தர்யா துபாயிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL-226 மூலம் இன்று காலை 05.20 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பு வரவேற்பளிகப்பட்டது. அதேவேளை மிஸ் ரீன் சுற்றுலா போட்டியில் இலங்கை இந்த வெற்றியை முதன்முறையாக வென்றமை குறிப்பிடத்தக்கது.
மானிப்பாய்-சண்டிலிப்பாயில் வீடொன்றுக்குள் புகுந்து மோட்டார் சைக்கிள்களை தீயிட்டு கொளுத்திய வன்முறைச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத்தின் வழிகாட்டடிலில் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு தெ.மேனன் தலைமையிலான குழுவினரால் நேற்று(23.08.2023) இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது 23,24 வயதுடைய மானிப்பாயைச் சேர்ந்த சந்தேகநபர்களை கைது செய்ததுடன் வன்முறை சம்பவத்துக்கு பயன்படுத்திய ஒரு மோட்டார் சைக்கிள் இரண்டு வாள்கள், இரும்புக் கம்பி ஒன்று என்பனவற்றையும் மீட்டுள்ளனர்.
ஏற்கனவே இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் பழிவாங்கும் நோக்கிலேயே இந்த வன்முறைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று(24.08.2023) நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
அத்துடன் மேலும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட 6 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் குற்றத்தடுப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல்காரரான கயானி தில்ருக்ஷியின் வீட்டை பறிமுதல் செய்யும் நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.போதைப்பொருள் கடத்தல் காரணமாக தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள குடு கயானி என்ற பெண்ணின் வீடே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வு பிரிவின் மோசடி விசாரணை பிரிவினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.2019 ஆம் ஆண்டு முதல் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தில் அவர் இந்த வீட்டைக் கட்டியுள்ளார்.கட்டப்பட்ட வீட்டின் மதிப்பு சுமார் 5 கோடி ரூபாய் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், வீடு கட்டுவதற்கு பணம் எப்படி கிடைத்தது என்பதை தெரிவிக்க அந்த பெண்ணால் முடியாமல் போனதால் விசாரணை அதிகாரிகள் வீட்டை பறிமுதல் செய்துள்ளனர்.குறிப்பிட்டுள்ளனர்.