இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து: பலர் வைத்தியசாலையில்..!!

பதுளையில்..

பதுளை-கொழும்பு பிரதான வீதியில் எல்ல ஹல்பே பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும் கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும் இன்று (12.08.2023) மாலை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த நான்கு பெண்கள், மூன்றரை வயது சிறுமி மற்றும் இரண்டு ஆண்கள், தெமோதர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துடன் தொடர்புடைய இரண்டு பேருந்துகளின் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் திடீரென வந்த மர்ம காய்ச்சல் : இருவர் மரணம் -தீவிர சிகிச்சையில் பலர்!!

இலங்கையில்..

குருநாகல் மாவட்டத்தில் நிலவும் வறட்சியான காலநிலையால் வறண்டு கிடக்கும் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞர்கள் சிலர் திடீர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கனேவத்த ஹிரிபிட்டிய கிரிந்திவெல்கால தொராதத்த குளத்தில் மீன் பிடித்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கிரிந்திவெல்கால பிரதேசத்தைச் சேர்ந்த அமில அஜந்த குமார மற்றும் ஜீவன் சதுரங்க ஆகிய இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இந்நாட்களில் நிலவும் வறண்ட காலநிலை காரணமாக வறண்டு கிடக்கும் குளத்தில் மீன்பிடிக்க பிரதேசவாசிகள் பழகியுள்ளனர்.

அதற்கமைய, ஏராளமான இளைஞர்கள் கடந்த வாரம் அந்த இடத்திற்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அவ்வாறு சென்றவர்களில் பதினொரு பேர் காய்ச்சல் காரணமாக ஹிரிபிட்டிய மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

இந்த இளைஞர்கள் சிலர் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 9ஆம் திகதி இருவர் உயிரிழந்ததாக குருநாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சந்தன கஞ்சங்கமுவ தெரிவித்தார்.

உயிரிழந்த இரு இளைஞர்களின் பிரேத பரிசோதனை குருநாகல் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த இளைஞர்களின் சடலங்களில் இருந்து எடுக்கப்பட்ட உடல் பாகங்கள் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்பில் உள்ள அரச மருத்துவ ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மரணத்திற்கான குறிப்பிட்ட காரணங்களை கண்டறிய இவற்றினை அனுப்பியதாக வைத்தியர் சந்தன கஞ்சங்கமுவ குறிப்பிட்டுள்ளார். நோய்வாய்ப்பட்டவர்களின் சுகவீனம் எலிக்காய்ச்சல் என சந்தேகிக்கப்பட்டால், மேலதிக மருத்துவப் பரிசோதனைகள் மூலம் அது தொடர்பான குறிப்பிட்ட நோயை கண்டறிய முடியும் என பிராந்திய சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதற்கிடையில், ஏரியில் எஞ்சியிருக்கும் மீன்களும் இறந்து கிடப்பதால், அந்த மீன்களை சாப்பிட வேண்டாம் என, சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த அபாயகரமான நிலை தொடர்பில் இதுவரையில் எந்தவொரு சுகாதார அதிகாரியும் வரவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

யாழில் வாகனத்தை முந்திச்செல்ல முற்பட்டபோது ஏற்பட்ட விபரீதம்!!

யாழில்..


யாழ் பிரதானவீதி மடத்தடிப்பகுதியில் இன்று மதியம் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

வாகனம் ஒன்றை முந்திக் கொண்டு செல்ல முற்பட்ட போதே இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவருகின்றது.

இந்நிலையில் விபத்தில் படுகாயமடைந்தவர் யாழ் போதனாவைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதகவும் கூறப்படுகின்றது.

நாடளாவிய ரீதியிலான மின்வெட்டு குறித்து இன்று வெளியான அறிவிப்பு!!

மின்வெட்டு..

எதிர்வரும் 16ஆம் திகதிக்கு பின் தென் மாகாணத்தில் சுமார் 10 நாட்களுக்கு இரண்டு மணித்தியால மின்வெட்டு ஏற்படும் சாத்தியம் இருப்பதாக சிரேஷ்ட மின்சார பொறியியலாளர் சங்கத்தின் பேச்சாளர் நந்திக பத்திரகே தெரிவித்துள்ளார்.எனினும் நாடளாவிய ரீதியில் மின்வெட்டு இருக்காது என்றும் அவர் அறிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இன்றைய தினம் (11.08.2023) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.மேலும் தெரிவிக்கையில், மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவு 31% ஆக குறைந்துள்ளது. சமனல ஏரி நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவு 16% இலிருந்து 7% ஆக குறைந்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் போதிய மழை பெய்யாவிட்டால் எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் மட்டுமே மின் உற்பத்தியை மேற்கொள்ள முடியும். அப்போது அவசர மின் கொள்முதல் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இல்லையெனில் மின்வெட்டுக்கு செல்ல நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.

அத்துடன் தற்போதைய காலநிலை காரணமாக குறுகிய கால மின்வெட்டு ஏற்படும். மழை பெய்யாவிட்டால் எதிர்வரும் 16ஆம் திகதிக்கு பின்னர் சமனலவெவ நீர்த்தேக்கத்தில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது.

எவ்வாறாயினும், நாடளாவிய ரீதியில் மின்வெட்டு இருக்காது. தென் மாகாணத்தில் மாத்திரம் இரவு வேளையில் ஒன்றரை முதல் இரண்டு மணித்தியாலங்கள் வரை மின்வெட்டு மேற்கொள்ளப்படும்.நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தையும் அடுத்த வாரத்தில் இருந்து மீண்டும் தேசிய அமைப்பில் இணைத்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இன்றைய கலந்துரையாடலில் அனுமதி கிடைத்தால் அதியுயர் மின்சாரம் கடத்தும் பாதை அமைப்பின் நிர்மாணப் பணிகள் நிறைவடையும் வரை சுமார் இரண்டு வாரங்களுக்கு மின்வெட்டு ஏற்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

வவுனியா இளம் தம்பதி கொலை : சந்தேகநபர்கள் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!!

வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில் தம்பதிகள் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை எதிர்வரும் 24ம் திகதி வரை சிறைச்சாலையில் தடுத்து வைக்க வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் அகமட் ரசீம் இன்று (11.08) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நுழைந்து தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் உட்பட ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இன்று (11.08) வவுனியா வைத்தியசாலையில் ஆள் அடையாள அணிவகுப்பு திகதியிடப்பட்டிருந்த போதும், சாட்சியின் உடல்நிலை சீர் இல்லாத காரணத்தால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அதனால் சாட்சி நீதிமன்றத்துக்கு சமூகமளிக்கவில்லை. இந்நிலையில் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 6 பேரையும் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கவும், மீண்டும் 24 திகதி ஆள் அடையாள அணி வகுப்பிற்காக சாட்சிகளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 1ம் சந்தேகநபர் சுகயீனம் காரணமாக சிறைச்சலை வைத்திய அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதனால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவில்லை.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் சட்டத்தரணி அருள்மொழிவர்மன், கொன்சியஸ் ஆஜராகி சந்தேகநபர்களை எவ்வித துன்புறுத்தலுக்கும் உள்ளாக்காமல் சந்தேகநபர்களின் நலனுரித்துக்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் சந்தேகநபர்கள் விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள் எனவும் மன்றில் தெரிவித்திருந்தார்.

 

வவுனியாவில் வாள்களுடன் அட்டகாசம் செய்த இருவர் கைது!!

வவுனியாவில் வாள்களுடன் அட்டகாசம் புரிந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் இன்று (11.08.2023) தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, வைரவபுளியங்குளம், யங்ஸ்ரார் விளையாட்டு மைதானத்தின் முன் நின்ற இளைஞர்கள் மீது புதன் கிழமை மாலை வாள் வீசி சிலர் அட்டகாசம் செய்துள்ளனர்.

இதன்போது நிலமையை கட்டுப்படுத்த முயன்ற புலனாய்வுத் துறையைச் சேர்ந்த ஒருவர் மீதும் வாள் வீசி தாக்குதல் மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு பொலிசார் சென்றதும் வாள்களுடன் நின்றவர்கள் தப்பிச் சென்றிருந்தனர்.

இதனையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் களமிறங்கிய விசேட அதிரடிப்படையினர் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய தேக்கவத்தை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை கைது செய்து வவுனியா பொலிசில் ஒப்படைத்தனர்.

மற்றும் ஒரு நபர் வவுனியா பொலிசில் சரணடைந்துள்ளார். சரணடைந்தவர் தவசிகுளம் பகுதியைச் சேர்ந்தவராவார். குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, இச் சம்பவத்தையடுத்து விசேட அதிரடிப் படையினர் வவுனியா வைவரவபுளியங்குளம் பகுதியில் விசேட கண்காணிப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.

85 வயது மாமன் மடியில் காது குத்திய 55 வயது மருமகன்.. நெகிழ்ச்சி சம்பவம்!!

வேலூரில்..

85 வயது தாய்மாமன் மடியில் அமர்ந்து 55 மற்றும் 52 வயது மகன்களுக்கு காது குத்தும் விழா நடைபெற்றது தொடர்பான செய்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்திருக்கும் ஏரிக்கோடி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணம்மாள் – கோவிந்தசாமி தம்பதி.

இந்த தம்பதிக்கு 5 மகன்கள், 2 மகள்கள் என மொத்தம் 7 பிள்ளைகள் இருக்கும் நிலையில், கோவிந்தசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் காலமானார். இதில் அனைத்து பிள்ளைகளுக்கும் திருமணமாகி பேரக்குழந்தைகளும் உள்ளனர்.

இந்த சூழலில் 80 வயதான கண்ணம்மாளுக்கு நிறைவேறாத ஆசை இருந்துள்ளது. அதாவது இவரது அனைத்து பிள்ளைளுக்கும் காது குத்தும் விழா நடைபெற்ற நிலையில், தற்போது 55 வயதாகும் முனிவேல், 52 வயதாகும் ராஜா ஆகிய 2 மகன்களுக்கு மட்டும் காது குத்தாமல் இருந்துள்ளது.

இதனால் தனது ஆசையை தனது பிள்ளைகளிடம் கூறியுள்ளார். ஆரம்பத்தில் இதனை கேட்டு நகைத்த பிள்ளைகள், பின்னர் தங்கள் தாயின் ஆசையை நிறைவேற்ற முனைப்பு காட்டியுள்ளனர்.

அதன்படி அவர்களது குலதெய்வ கோயிலான கன்னியம்மன் கோயிலில் காதணி விழாவுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ததோடு உற்றார் உறவினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும் 80 வயதான கண்ணம்மாளின் 85 வயதான சகோதரனுக்கு சிறப்பு அழைப்பு விடுத்துள்ளனர். ஏனெனில் கண்ணம்மாளின் 2 மகன்களுக்கும் அவர் தான் தாய் மாமன்.

எனவே 85 வயது தாய்மாமன் மடியில் 55 மற்றும் 52 வயது மகன்களுக்கு காது மொட்டை அடித்து காது குத்தி விழா சிறப்பாக நடைபெற்றது. பின்னர் அந்த 2 மகன்களும் தனது தாய் கண்ணம்மாளிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர்.

பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என அனைவர் முன்பும் நடைபெற்ற இந்த காதணி விழா தற்போது ஊர் முழுவதும் அனைவரது கவனத்தையும் பெற்று பேசுபொருளாக மாறி வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அதிக தண்ணீர் குடித்ததால் இளம்பெண் மரணம்.. அளவுக்கு மிஞ்சினால் ஆபத்து தான்!!

மெக்சிகோவில்..

உலகின் பல பகுதிகளில் வெப்ப அலை வாட்டி வதைத்து வருகிறது. வட அமெரிக்கா மற்றும் மெக்சிகோவிலும் மக்களை வெயிலால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

தினசரி வெயில் 45 டிகிரி செல்சியசுக்கும் அதிகமான அளவில் வெப்பம் இருப்பதால் குளிர்பானங்கள், ஈரமானத் துண்டுகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெயிலில் அலையும் , சுற்றித்திரியும் மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

திடீர் உயிரிழப்புக்களும் அதிகரித்து வருகின்றன. வெப்பத்தைத் தணிக்க மக்கள் தலையை துண்டால் மறைத்து நிழல் குளிர்ச்சியான குடிநீரை அடிக்கடி குடித்து வருகின்றனர்.

வெளி விளையாட்டுகளை தவிர்த்து வீடுகளுக்குள் தஞ்சம் அடைந்துள்ளனர். அமெரிக்காவில் 35 வயது பெண் ஒருவர் 2 லிட்டர் தண்ணீரை அடுத்தடுத்து ஒரே நேரத்தில் குடித்த இளம்பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, உயிரிழந்த பெண்ணின் மூத்த சகோதரர் டெவன் மில்லர் “ வெயிலில் இருந்து தப்பிக்க தண்ணீர் குடிக்கலாம் என அனைவரும் சொன்னதைக் கேட்டு 20 நிமிடங்களில் நான்கு பாட்டில் தண்ணீரை ஒரே மடக்கில் குடித்து முடித்தார்.

20 நிமிடங்களில் சுமார் 2 லிட்டர் தண்ணீர் குடித்து முடித்ததும் சிறிது நேரத்தில் அவர் திடீரென மயங்கி விழுந்தார். முதலுதவி செய்தும் சுயநினைவு திரும்பாததால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு நிலைமை மோசமாகி உயிரிழந்தார் எனக் கூறியுள்ளார். இது குறித்து டாக்டர் பிளேக் ப்ரோபெர்க் ” இது போன்ற சம்பவங்கள் கோடைக் காலத்தில் தான் அதிகம் ஏற்படும்.

ஏனென்றால் அப்போது தான் வெயில் காரணமாக திடீரென அதிகமான நீரை எடுத்துக் கொள்வார்கள். உடலில் அதிக தண்ணீர் சத்து இருந்தும், போதுமான சோடியம் இல்லாமல் போனால் இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படலாம்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருமணம் செய்துவிட்டு தலைமறைவான கணவன் : நள்ளிரவில் பெண் போராட்டம்!!

திருவாரூரில்..

திருவாரூர் மாவட்டம் தண்டலையில் பதிவு திருமணம் செய்து விட்டு தலைமறைவான காவலர் வீட்டின் முன்பு பெண் காவலர் நள்ளிரவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்.

 

பதிவு திருமணம் செய்து விட்டு தலைமறைவான காவலர் வீட்டின் முன்பு பெண் காவலர் நள்ளிரவில் தர்ணா போராட்டம்திருவாரூர்: தண்டலை வடக்குத் தெருவை சேர்ந்த கோவிந்தராஜன் கலா தம்பதியினரின் இளைய மகன் அஜித் (வயது 28).

இவர் சென்னை பெருநகர காவல் ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவரது வீட்டின் முன்பு காவ்யா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்பவர் அஜித் தன்னை பதிவு திருமணம் செய்துவிட்டு தலைமறைவாகி விட்டதாக கூறி நள்ளிரவில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

29 வயதான காவ்யா பி.காம் மற்றும் எம்.பி.ஏ முடித்த பட்டதாரி ஆவார். இவர் சென்னை பெருநகர காவல் ஆயுதப் படையில் இரண்டாம் நிலை காவலராக அஜித்துடன் பணிபுரிந்தவர் ஆவார். அஜித்தும், காவ்யாவும் ஒரே பள்ளியில் படித்ததாக கூறப்படுகிறது.

அதன் பிறகு முகநூலில் நண்பர்களாக இருந்தவர்கள் மீண்டும் சென்னையில் சந்திக்கும் போது நண்பர்களாக பழகி மூன்று வருட காலமாக காதலித்து வந்ததாகவும் ஒரே வீட்டில் தங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது.மேலும், கடந்த 2022 இல் டிசம்பர் மாதத்தில் காவ்யா மூன்று மாதம் கர்ப்பமானதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அதே மாதம் டிசம்பர் 11 இல் விழுப்புரத்தில் இருவரும் பதிவு திருமணம் செய்து கொள்வதாக முடிவெடுக்க ஏற்பாடு செய்துள்ளனர். அப்போது டிசம்பர் 10 ஆம் தேதி தான் வீட்டிற்கு சென்று விட்டு வருவதாக கூறி அஜித் திருவாரூர் வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது மற்றொரு பெண்ணை பார்த்து அஜித்துக்கு பெற்றோர்கள் பேசி முடித்துள்ளனர்.தொடர்ந்து அஜித்துக்கு பார்த்த பெண் அஜித் உடன் வாட்ஸ் அப்பில் தொடர்பில் இருந்துள்ளார். இதனை கண்டறிந்த காவ்யா அவர்களது குடும்பத்தில் இது குறித்து கூறியுள்ளார்.

இதனால் அஜித்திற்கும் காவ்யாவிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் அஜித் தனது நண்பர் மூலம் திருவாரூரில் இருந்து கருக்கலைப்பு மாத்திரையை கொரியர் மூலம் வாங்கி, அதை வாந்தி சரியாவதற்கான மாத்திரை என்று காவ்யாவிடம் கொடுத்து கருக்கலைப்பு செய்ததாக காவ்யா கூறுகிறார்.

abortion legal in India

அதனைத் தொடர்ந்து சென்னை பெருநகர காவல் ஆயுதப்படை டிசியிடம் காவ்யா புகார் அளித்தவுடன் திருமணம் செய்து கொள்கிறேன் என்று அவருக்கு முன்பு உறுதி அளித்து விட்டு ஒரு மாத காலம் அஜித் தலைமறைவாக இருந்துள்ளார்.

இதனையடுத்து சென்னை தெற்கு மண்டல இணை ஆணையரிடம் காவ்யா புகார் அளித்துள்ளார். அப்போது சி.எஸ்.ஆர் போடப்பட்ட நிலையில் திருமணம் செய்து கொள்வதாக அஜித் ஒத்துக் கொண்டுள்ளார்.இதனையடுத்து சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு இந்த புகாரை அனுப்பி உள்ளனர்.

அங்கு மார்ச் 8 ஆம் தேதி இரண்டு நாட்களில் இருவரும் திருமணம் செய்து கொண்டு பதிவு சான்றிதழை காட்டுகிறோம் என்று அஜித் உறுதியளித்துள்ளார். அதனை அடுத்து இருவரும் மார்ச் 10 ஆம் தேதி மண்ணடி மாரியம்மன் கோயிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

அப்போது காவ்யாவின் பெற்றோர் அஜித்தின் நண்பர்கள் உடன் இருந்துள்ளனர். தொடர்ந்து பெரியமேடு சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்துள்ளனர். திருமணம் முடிந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் பிரச்சனைகளுக்கிடையில் திருமணம் நடந்ததால் மன உளைச்சலாக இருப்பதாக கூறி நண்பர் வீட்டுக்கு சென்று விட்டு வருகிறேன் என்று அஜித் கூறியுள்ளார்.

ஆனால் அவர் திரும்ப வரவில்லை என்று கூறப்படுகிறது.காவ்யா அஜித்துக்கு போன் செய்தால் வந்துவிடுகிறேன் என்று கூறியபடி இருந்துள்ளார். இது குறித்து நேரில் சென்று காவ்யா கேட்டதற்கு அவரை சீருடையில் இருக்கும் போதே அடித்து பூட்ஸ் காலால் மிதித்ததாக காவ்யா கூறுகிறார்.

தற்போது கடந்த மூன்று மாதமாக பணிக்கு வராமல் தலைமறைவாக இருப்பதாக கூறி அஜித் வீட்டின் முன்பு நள்ளிரவில் காவ்யா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் வேறு இடத்தில் நான் பெண் பார்த்து இருந்தால் எனக்கு வரதட்சணை கிடைத்திருக்கும் உன்னை கல்யாணம் செய்து என்ன கிடைத்தது என்று அஜித் கூறியதாக காவ்யா தெரிவித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருவாரூர் தாலுகா காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி நள்ளிரவு இரண்டு மணி வாக்கில் காவ்யாவை அழைத்துச் சென்று உறவினர் வீட்டில் விட்டுள்ளனர்.

மேலும் இது குறித்து திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திங்கட்கிழமை புகார் அளிக்க உள்ளதாக காவ்யா தெரிவித்துள்ளார். இது குறித்து காவ்யா, தனது புகைப்படத்தை தவறாக சித்தரித்து முகநூல் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் அஜித் பதிவேற்றுவதாகவும், மேலும் அஜித்தின் குடும்பத்தார் தனது நடத்தை குறித்து மிக மோசமாகவும் அவதூறாகவும் பேசி தன்னை நிராகரிப்பதாகவும் கூறியுள்ளார்.

இதன் காரணமாக இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஆண் காவலர் அஜித்திடம் பேசும் போது “எனக்கும் காவ்யாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அவர் எனது அக்காவின் வகுப்புத் தோழி அந்த அடிப்படையில் நான் அவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று விடுவேன்.மற்றபடி எனக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை.

என்னை கட்டாயப்படுத்தி தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி திருமணம் செய்து கொண்டார். அந்த திருமணம் செல்லாது என நான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளேன்” என்று கூறியுள்ளார்.

காதல் மனைவி தற்கொலையால் கணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை.. திருமணமாகி 6 மாதத்தில் சோகம்!!

ஆந்திராவில்..

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் சின்னபொலமடா கிராமத்தில் வசித்து வருபவர் பாலபுள்ளையா. இவரது மனைவி ஓபுலம்மா. இந்த தம்பதியின் மகன் மஞ்சுநாத். இவருக்கு வயது 27.

புட்லூர் மண்டலம் கருச்சிந்தலப்பள்ளி கிராமத்தில் வசித்து வரும் 24 வயது ரமாதேவியை காதலித்தார். இவர்களது திருமணத்திற்கு இருவீட்டாரும் முதலில் சம்மதிக்கவில்லை. வேறுவழியின்றி இருவீட்டாரும் சம்மதித்து கடந்த பிப்ரவரியில் இவர்களது திருமணம் நடைபெற்றது.

கடந்த திங்கள்கிழமை மாலை சலவாரிப்பள்ளி கிராமம் அருகே ரயில் முன் பாய்ந்து ரமாதேவி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் கணவருடன் மொபைலில் பேசி உள்ளார்.

மனைவி ரமாதேவி இறந்த செய்தியறிந்த மஞ்சுநாத்தும் திங்கட்கிழமை இரவு 2 முறை ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அவரது குடும்பத்தினர் அவரை காப்பாற்றி வீட்டிற்கு அழைத்து வந்தனர். ஆனால் நேற்று அதிகாலை 3 மணிக்கு மஞ்சுநாத் வீட்டில் இருந்து வெளியே வந்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

மருமகன் மஞ்சுநாத் குடும்பத்தினரின் வரதட்சணை கொடுமையால் மகள் தற்கொலை செய்து கொண்டதாக ரமாதேவியின் பெற்றோர் ஜிஆர்பி போலீசில் புகார் அளித்து உள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் , சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

முகநூல் நண்பன் வீட்டுக்குச் சென்ற மாணவிக்கு நேர்ந்த சோகம்!!

முல்லேரியாவில்..

முல்லேரியாவில் முகநூல் மூலம் அறிமுகமான இளைஞன் வீட்டுக்குச் சென்ற மாணவியொருவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பதினைந்து வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு அவ் இளைஞனால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அளுத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்கா நகரப் பகுதியிலேயே இச் சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அளுத்கம பொலிஸில் மாணவி தனியாக வீட்டை விட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை தேடித்தருமாறு மாணவியின் தாயார் செய்த முறைப்பாட்டின் பேரில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதன்படி அளுத்கம பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபரான இளைஞரும் மாணவியும் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.கைதுசெய்யப்பட்ட இளைஞன் முல்லேரிய பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

“நான் சாக போகிறேன்” தனது காதலியிடம் தெரிவித்து உயிரை மாய்த்த மாணவன்!!

ஹொரனையில்..

ஹொரனை பிரதேசத்தில் மாணவன் ஒருவர் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.17 வயதுடைய பாடசாலை மாணாவனே இவ் விபரீத முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.“நான் வாழ்ந்து பலன் இல்லை, நான் சாக போகிறேன்” என தனது காதலியிடம் தொலைபேசியால் தொடர்பு கொண்டு கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படுவிட்ட வடக்கில் உள்ள வீடொன்றில் தற்காலிகமாக தங்கியிருந்து ஹோட்டல் கற்கைநெறியை பயின்று வந்த தினேத் தஷ்மிகா தேவ் ஷி விக்கிரமசிங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

உயிரிழந்த இளைஞன் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் தனது தாயாரின் தோழியின் வீட்டில் தங்கியிருந்து சுமார் ஒன்றரை மாதங்கள் புலத்சிங்கல பிரதேசத்திற்கு சென்று கற்கை நெறிக்கு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 8ஆம் திகதி வழமை போன்று பாடநெறிக்காக சென்று தனது வீட்டுக்குச் திரும்பிய இளைஞன் அன்று இரவு உறங்கச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மறுநாள் அவ் இளைஞனை எழுப்ப வீட்டின் உரிமையாளரின் சகோதரி அறைக்குச் சென்றதாகவும் இளைஞனின் சடலம் கட்டிலில் தொங்குவதை பார்த்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

2000 ரூபாய் பணத்திற்காக 14 வயது மகளை விற்ற தாய் : தென்னிலங்கையில் நடந்த கொடுமை!!

திவுலபிட்டியவில்..

பதினான்கு வயது மகளை விற்பனை செய்த தாய் ஒருவர் திவுலபிட்டிய பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .அத்துடன் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சிறுமியின் தந்தை உயிரிழந்துள்ளதுடன் சந்தேக நபரான தாய்க்கு நான்கு பிள்ளைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஒருவரிடம் இருந்து 2000 ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு தனது மகளை வீட்டில் வைத்து துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்க இடமளித்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சிறுமி 10ஆம் ஆண்டு படித்து வருவதாகவும் இந்த சட்டவிரோத செயலை பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் சிறுமி நடந்த சம்பவத்தை ஆசிரியை ஒருவரிடம் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சிறுமியை பல மாதங்களாக தாய் பணத்திற்காக விற்பனை செய்து வந்துள்ளதாக சிறுமி பொலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் இருந்து தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அனைத்து சந்தேக நபர்களையும் கைது செய்ய திவுலபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கனடாவில் மாயமான தமிழர் : பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்!!

கனடாவில்..

கனடாவில் தமிழர் ஒருவர் காணாமல் போன விடயம் தொடர்பில் டொரண்டோ பொலிஸார் தகவல்களை வெளியிட்ட்டுள்ளனர்.பொலிஸார் வெளியிட்ட தகவலின்படி “54 வயதான சிவதாஸ் இறுதியாக கனடா – ஒண்டாறியோவின் விண்ட்சர் நகரில் ஜூலை 31ஆம் திகதி காணப்பட்டார்” என கூறப்பட்டுள்ளது.

மேலும் குறித்த நபர் 5 அடி 6 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் காணாமல் போனவரின் பாதுகாப்பு குறித்து பொலிஸார் கவலை கொண்டுள்ளதாக குறித்த தகவலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த நபர் தொடர்பில் தெரியுமாக இருந்தால் 416-808-4100-ஐ தொடர்பு கொள்ளலாம் டொரண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணவரின் செயலால் விரக்தியடைந்த இளம் மனைவி எடுத்த விபரீத முடிவு!!

வெல்லம்பிட்டியவில்..

கணவரின் போதைப்பொருள் பாவனையால் விரக்தியடைந்த மனைவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வசித்து வந்த 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் தங்கத்தின் விலையில் பதிவான சடுதியான மாற்றம்!!

தங்கம்..

நாட்டில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிவடைந்து வருகிறது.கடந்த 4 நாட்களில் தங்கத்தின் விலை 2,350 ரூபா சரிவடைந்துள்ளது. அந்தவையில் இன்றையதினம்(11.08.2023) இலங்கை ரூபாவின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 613,831 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை 22 கரட் தங்க பவுணொன்றின் விலை 158,850 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 24 கரட் தங்க பவுணொன்றின் விலை 173250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

கொழும்பு – செட்டியார்தெரு தகவல்களின் படி ஆபரண தங்கத்தின் விலையானது இன்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இன்றைய தினம் தங்கத்தின் விலை நிலையானதாக காணப்படுவதாக செட்டியார்தெரு தகவல்கள் கூறுகின்றன.

அதன்படி இன்றைய தினம் 22 கரட் தங்க பவுணொன்றின் விலையானது 154,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 167,000 ரூபாவாக காணப்படுகிறது.