யாழ்ப்பாணம் புங்குடுதீவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் புங்குடுதீவு 10 வட்டாரத்தை சேர்ந்த குடுபஸ்தரே இவ்வாறு விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார்.
அவரது உயிரிழப்புக்கான காரணம் வெளியாகாத நிலையில், குடும்பஸ்தரின் விபரீத முடிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கண்டோஸ் சாக்லேட் தயாரிப்பாளரான ‘சிலோன் சாக்லேட்ஸ் லிமிடெட்’ அதன் சாக்லேட் உற்பத்தி ஒன்று தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நிறுவனம் அறிவிப்பு ஒன்றினையும் வெளியிட்டுள்ளது. அதேவேளை மருத்துவமனை சிற்றுண்டிச்சாலையில் கொள்வனவு செய்த சாக்லேட்டில் மனித விரல் ஒன்று இருந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் சொக்லட் ஒன்றில் மனித எச்சங்கள் : அதிர்ச்சியில் மக்கள்!!
இலங்கையில்..
மஹியங்கனை வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலையில் கொள்வனவு செய்த சொக்லட் ஒன்றில் மனித விரலின் ஒரு பகுதி நேற்று காணப்பட்டதாக மஹியங்கனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
நேற்று பிற்பகல் உணவகத்தில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட சொக்லட் ஒன்றில் மனித விரலின் ஒரு பகுதி காணப்பட்டதாக வைத்தியசாலையில் பணிபுரியும் உத்தியோகத்தர் ஒருவர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
விசாரணையின் போது அது நகத்துடன் கூடிய மனித விரலின் ஒரு துண்டு என உறுதிப்படுத்தப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர் சர்மிந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, குறித்த விரலின் உரிய பகுதியையும், அதில் இருந்ததாக கூறப்படும் சொக்லட் பொதியையும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் பொறுப்பேற்றுள்ளது. அத்துடன், நாளைய தினம் மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் இந்த விடயம் அறிவிக்கப்படவுள்ளது.
மஹியங்கனை சுகாதார வைத்திய அதிகாரி சஹான் சமரவீரவின் ஆலோசனையின் பேரில், பொது சுகாதார பரிசோதகர் சர்மிந்த ரத்நாயக்க மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் குழு இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் தண்டவாளத்தில் ரயில் வருவதை அறியாமல் கடக்க முயன்ற தனது இரு மகள்களை காப்பாற்றச் சென்ற தாய், மகள்களை காப்பாற்றிவிட்டு ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி பழைய கட்டத் தொட்டி தெரு பகுதியை சேர்ந்தவர்கள் சித்ரா மற்றும் ஏழுமலை தம்பதியினர். இவர்களுக்கு சுபிக்ஷா (22), வர்ஷா (19) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் கல்லூரியில் பார்மசி சார்ந்த பட்டப்படிப்பு படித்து வருகின்றனர்.
சித்ரா மெடிக்கல் ஒன்றில் கணக்காளராகவும், அவரது கணவர் ஏழுமலை ஆட்டோ ஓட்டுநராகவும் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் இரண்டு மகளும் பார்மசி சார்ந்த பட்டப் படிப்பு படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் தனது இரண்டு மகள்களுக்கும் புதிய ஆடைகள் எடுப்பதற்காக சித்ரா தனது இரண்டு மகள்களுடன் தி.நகர் பகுதிக்குச் சென்று உள்ளனர்.
ஆடைகள் எடுத்துவிட்டு திருவல்லிக்கேணியில் உள்ள அவர்களது வீட்டுக்கு செல்வதற்காக மூவரும் தி.நகரில் இருந்து கோட்டை ரயில் நிலையம் வந்து, பின் வேளச்சேரி மார்க்கம் செல்லும் பறக்கும் ரயிலில் ஏறுவதற்கு அடுத்த பிளாட்ஃபார்ம் நோக்கி சென்று உள்ளனர்.
சரியாக 5.30 மணியளவில் கோட்டை ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை தனது இரண்டு மகளுடன் சித்ரா கடந்துள்ளார். அப்போது அதிவேகமாக மின்சார ரயில் ஒன்று வந்துள்ளது. தண்டவாளத்தில் ரயில் வருவதனைக் கவனிக்காமல் மகள்கள் சென்றதை சித்ரா கவனித்து பதறிபோயுள்ளார்.
தனது உயிரை பற்றி சற்றும் கவலைக்கொள்ளாமல் தண்டவாளத்தில் ஓடிச் சென்று அவரது இரு மகள்களையும் தண்டவாளத்திலிருந்து வெளியே தள்ளிவிட்டு உள்ளார் தாய் சித்ரா.இதில் மகள்கள் இருவரும் தண்டவாளத்தை விட்டு வெளியே வந்து விழுந்து உள்ளனர்.
இரண்டு மகள்களும் ரயிலில் அடிபடாமல் நூலிழையில் தப்பித்த நிலையில் தாய் சித்ரா ரயிலில் அடிபட்டு உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த எழும்பூர் ரயில்வே போலீசார், உடலை மீட்டு உடற் கூராய்வுக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்தச் சம்பவம் குறித்து எழும்பூர் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனது இரண்டு மகள்களின் உயிரை காப்பாற்ற தனது உயிரை தாய் ஒருவர் தியாகம் செய்திருக்கும் சம்பவமானது சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சமீபகாலமாக சென்னையில் ரயில் தண்டவாளங்களில் அதிகளவில் விபத்து நடைபெற்று வருவதனால் இதனை தடுக்க ரயில்வே துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், முன்னதாக சென்னை கிண்டி பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு இடையே உள்ள தண்டவாளத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டு உள்ளது. இன்று காலை வழக்கமாக பராமரிப்பு பிரிவை சார்ந்தவர்கள் தண்டவாளத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
கிண்டி, பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு இடையே உள்ள தண்டவாளத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது கிண்டியில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லக்கூடிய மார்க்கத்தில் உள்ள தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதை ஊழியர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
பின்னர் இது குறித்து ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் அடிப்படையில் தாம்பரத்தை நோக்கி செல்லக்கூடிய அனைத்து ரயில்களும் ஆங்காங்கே தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டது.பின்னர் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரம் பணிக்கு பிறகு தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்தனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லக்கூடிய அனைத்து ரயில் சேவையும் பாதிப்படைந்தன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்த பின்னர் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் சென்னை புறநகர் மின்சார ரயில் வழக்கம்போல் இயக்கப்பட்டன. ஊழியர்கள் முன்கூட்டியே கண்காணித்து தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சற்று நேரத்திற்கு பெரும் பரபரப்பு நிலவியது.
வவுனியாவில் கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக 3 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் பாதிப்படைந்துள்ளதுடன், 3 வீடுகளும் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வவுனியாவில் நேற்று (09.08.2023) மாலை திடீரென கடும் காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதன் காரணமாக பாவற்குளம் படிவம் 6 பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 அங்கத்தவர்களும்,
பிரமனாலங்குளம் பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 அங்கத்தவர்களும், முதலியார்குளம் பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 அங்கத்தவர்களும் என 3 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
அத்துடன், குறித்த மூன்று குடும்பங்களும் வசித்து வந்த 3 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் மகேந்திரா பகுதியில் வசித்து வரும் இளம்பெண்ணும், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலே லிவிங் டு கெதரில் வாழ்ந்து வந்துள்ளார்.
சில நாட்களில் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. காதலனின் நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த காதலி ஆத்திரத்தில் அருகில் இருந்த 150 உயர மின் கோபுரத்தில் ஏறிவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த காதலன் மின்கோபுரத்தில் காதலியின் பின்னாலேயே ஏறினார். அப்போது தனது காதலி எந்த விபரீத முடிவும் எடுத்து விடக்கூடாது என அவரிடம் பேசிக் கொண்டே பின்னாலேயே சென்றார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 150 அடி உயர மின்கோபுரத்தில் காதல் ஜோடிகள் இருவரும் சண்டை போட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உங்களுக்கு சண்டை போடுவதற்கு வேறு இடம் கிடைக்கவில்லையா என காவல்துறையினர் வசை பாடினர். பின்னர் இருவரையும் கீழே இறங்கும்படி காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்தனர்.
அரை மணி நேரமாக காதல் ஜோடிகள் மின் கோபுரத்திலிருந்து கீழே இறங்கவே இல்லை. அதன் பிறகு கீழே இறங்கினர். இதில் காதலன் கீழே இறங்கியதும் காதலன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து காதலியிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
We have been building transmission towers from ages. This is the first time I have seen someone climb them to commit suicide upset with her lover. Good news, the boyfriend followed her up and convinced her to climb down. All iz well #Chhattisgarh#todaypic.twitter.com/3MRpbZ8RJI
வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் வாரம் ஒரு புதிய அம்சத்தை வெளியிட்டுக் கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம்.
இந்நிலையில் மீண்டும் ஒரு புதிய அம்சம் வாட்ஸ்அப் தளத்தில் வெளிவந்துள்ளது. அதாவது வாட்ஸ்அப் செயலியில் வீடியோகால்(Video call) பேசும் போது உங்கள் சாதனத்தின் ஸ்கிரீனை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டு வருகிறது.இந்த அம்சம் ஸ்கிரீன் ஷேர் (screen share) என அழைக்கப்படுகின்றது.
ஸ்கிரீன் ஷேர் (screen share) என்பது ஒரு திறன்பேசியிலுள்ள திரையை மற்றொரு நபருடன் பகிர்வதாகும். அதாவது ஒரு நபருடைய திரையில் என்ன தோன்றுகிறதோ அதை மற்றொரு நபர் அவதானிக்க முடியும்குறிப்பாக இந்த புதிய அம்சத்தினை மெட்டா நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் ஆளும் கட்சியான பாஜக மற்றும் பிரதமர் மோடியையும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இதனால் அடிக்கடி சமீபகாலமாக சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
இந்நிலையில் தான் கர்நாடகாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் கல்லூரிக்கு சிறப்புரை ஆற்ற சென்றிருந்தார். அவரது உரை முடிந்து கிளம்பியதும் தயாராக வைத்திருந்த கோமியத்தை அவர் நின்று சிறப்புரை ஆற்றிய இடம் மற்றும் அவரது காலடி பட்ட அனைத்து இடங்களிலும் மாணவர்கள் கோமியம் தெளித்து சுத்தம் செய்தனர். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் பிரகாஷ்ராஜ் இந்துத்துவா அமைப்பினரையும், அவர்களின் கொள்கைகளையும் பொது மேடைகளில் தாக்கி பேசி வருகிறார் இதற்கிடையே தான் கர்நாடகா மாநிலம் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியதில் உள்ள தனியார் கல்லூரியில் தியேட்டர் வசனம், சினிமா, சமூகம் சார்ந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தார். இதற்கு மாணவர்களில் ஒரு பிரிவினர் நடிகர் பிரகாஷ் ராஜ் வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் கல்லூரி அருகே போராட்டமும் நடத்தினர். இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். போலீஸ் பாதுகாப்புடன் பிரகாஷ்ராஜ் சிறப்புரை ஆற்றினார். அதே சமயம் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கல்லூரிக்கு நுழைய விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
மாணவர்களில் ஒரு தரப்பினர் கோமியம் எடுத்து சென்று நடிகர் பிரகாஷ் ராஜ் சென்ற இடங்களில் தெளித்து சுத்தம் செய்தனர். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி விவாதத்தை கிளப்பி உள்ளது.
மேலும் இந்த செயலில் ஈடுபட்டவர்கள் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் என முத்திரை குத்தி உள்ளனர். நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கோமியம் கொண்டு சுத்தம் செய்வது இது முதல் முறையல்ல. ஏற்கனவே இதே போல் பல சம்பவங்கள் அரங்கேறி பெரும் பேசுபொருளானதும் குறிப்பிடத்தக்கது.
அம்பாறை – திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த துயர சம்பவம் நேற்றையதினம் (09) புதன்கிழமை பதிவாகியுள்ளது.
உயர்தர பரீட்சை முடிவுக்காக காத்திருந்த மாணவன்
சம்பவத்தில் தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றி புள்ளிகளுக்காக காத்திருக்கும் தனுஷன் இன்றும் மாணவன் தற்கொலை செய்துள்ளதாக தெரியவருகின்றது.
உயிரிழப்புக்கான காரணம் வெளியாகாத நிலையில் மாணவனின் சடலம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழில் தொடர் பாலியல் தொல்லைக்கு உள்ளாகிய 12 வயதான சிறுமி ஒருவர் தனது உயிரை மாய்க்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எனினும் சிறுமி ஊரவினர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவருகையில்
கடந்த சில தினங்களுக்கு முன்னர் 12 வயது சிறுமி ஒருவர் தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் வீட்டாரால் காப்பாற்றப்பட்டு, சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்தியசாலையில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு , சிறுமி உடல்நலம் தேறிய பின்னர் , சிறுமிக்கு உளவள சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதன்போது, தனக்கு 21 வயதுடைய இளைஞன் ஒருவர் தொலைபேசி குறுந்தகவல்கள் ஊடாக ஆபாச குருஞ்செய்திகளை அனுப்புவதாகவும், தவறான தொடுகைகள் மூலம் பாலியல் தொந்தரவு தந்ததலும் , தான் கடும் விரக்தியடைந்ததால் உயிர் மாய்க்க முயன்றதாக தெரிவித்துள்ளார்.
அதனை அடுத்து சம்பம் தொடர்பில் வைத்தியசாலை ஊடாக ஊர்காவற்துறை பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
மட்டக்களப்பை சேர்ந்த பெண்ணிடம் மோசடியான முறையில் பெருந்தொகை பணம் ஏமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் இருந்து வந்த பார்சலை பெற்றுக்கொள்ள 95 ஆயிரம் பணத்தை செலுத்துமாறு மோசடியான முறையில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
சுங்க திணைக்களத்தில் கடமையாற்றும் பெண் போல் நடித்த மோடிக்கும்பலிடம் மட்டக்களப்பை சேர்ந்த பெண் ஏமாந்துள்ளார் வெளிநாட்டிலிலுள்ள பெண் ஒருவர் மட்டக்களப்பு பெண்ணுடன் சில காலம் நட்பு ரீதியாக பழகியுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு பெறுமதியான பார்சல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதனை பெற்றுக்கொள்ள 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா அனுப்புமாறும் கேட்டுள்ளார்.
அதனை நம்பிய இலங்கை பெண் முதற்கட்டமாக 95 ஆயிரம் ரூபாவை வெளிநாட்டு பெண் வழங்கிய கணக்கிற்கு மாற்றம் செய்துள்ளார்.அதன் பின்னர் குறித்த வெளிநாட்டு பெண்ணை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் போதே அவர் ஏமாற்றப்பட்டுள்ள விடயத்தை அறிந்துள்ளார். அண்மைக் காலங்களாக வெளிநாட்டில் இருந்து பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் பெட்டியில் வந்துள்ளது.
வாதுவ பிரதேசத்தில் விபத்தில் உயிரிழந்த இளைஞனின் இறுதி ஊர்வலத்தில் பயணித்த இளைஞர்களை எச்சரித்த மூன்று பிள்ளைகளின் தந்தை கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.நேற்று பிற்பகல் ஹெல்மெட் அணிந்த இளைஞர்கள் சிலர், குறித்த நபரை தாக்கியதாக தெரியவந்துள்ளது.
தல்பிட்டிய பிரதேசத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த 19 வயதுடைய இளைஞரின் இறுதிக்கிரியைகள் நேற்று வெரகம பொது மயானத்தில் இடம்பெற்றது.
அங்கு சுமார் 50 மோட்டார் சைக்கிள்களில் ஆர்பாட்டமாக வந்து இறந்த உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப் போவதாக கூறி ஆபத்தான சாகச செயற்பாட்டில் ஈடுபட்டனர்.
பலர் அதை கோபத்துடன் பார்த்த போதிலும் அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் அங்கு வந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
குறித்த தந்தையை, ஏறக்குறைய 30 இளைஞர்கள் கொண்ட குழு ஹெல்மெட்களால் தாக்கியதுடன் எட்டி உதைத்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.பின்னர் அங்கு வந்த பலர் அவரை தீவிர முயற்சியின் பின்னர் காப்பாற்றிய நிலையில் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தான் பைப்பில் தொங்கிக் கொண்டு இருப்பதாகவும், தன்னை காப்பாற்றுமாறும் சிறுமி ஒருவர் அதிகாலை நேரத்தில் போலிஸுக்கு போன் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர பிரதேசத்தின் குண்டூர் பகுதியில் சிறுமி ஒருவர் அதிகாலை நேரத்தில் போலிஸுக்கு போன் செய்து தான் பைப்பில் தொங்கிக் கொண்டு இருப்பதாகவும், தன்னை காப்பாற்றுமாறும் கூறியிருக்கிறார்.
வேறு எந்த தகவலும் கூறாத அந்த சிறுமியை போலிசார் அலைந்து தேடி வந்தனர். இந்த சூழலில், அவர் போன் செய்த எண் உள்ளிட்டவையை வைத்து அந்த சிறுமி இருக்கும் இடத்தை போலிசார் அரிந்துகொண்டனர்.
பின்னர் சிறுமி இருக்கும் இடமான கோதாவரி ஆற்றின் மேல் இருக்கும் பாலத்தில் தேடினர். அப்போது சிறுமி அந்த பாலத்தில் பிளாஸ்டிக் பைப் ஒன்றை பிடித்தவாறு தொங்கி கொண்டிருந்தார்.
இதனைக் கண்டதும் அதிர்ந்துபோன போலிசார் உடனடியாக சிறுமியை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து சிறுமியிடம் நடந்தவற்றை குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது சிறுமி தான் பைப்பில் தொங்கியதற்கான காரணத்தை குறித்தும், தனது விவரங்களையும் கூறினார். அதாவது கீர்த்தனா என்ற 13 சிறுமி, தனது தாய் பப்பாலா சுஹாசினி (36) மற்றும் ஒரு வயதுடைய ஜெர்சி என்ற தங்கை ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.
இவர்களுடன் சிறுமியின் தாயின் ஆண் நண்பரான உலவா சுரேஷ் என்ற நபரும் வசித்து வந்துள்ளார். இவர்கள் அனைவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், சம்பவத்தன்று அனைவரும் காரில் ராஜமகேந்திரவரம் என்ற பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ரவுலாபாலம் மேம்பாலம் அருகே கார் வந்தபோது செல்பி எடுக்கலாம் என்று கூறி அந்த நபர் அனைவரையும் கீழே இறங்க கூறியிருக்கிறார். அப்போது பாலத்தின் அருகே செல்பி எடுக்க நின்றபோது, அங்கே இருந்து 1 வயது குழந்தை உட்பட 3 பேரையும் பாலத்திலிருந்து ஆற்றில் தள்ளிவிட்டு, அங்கிருந்து சென்றுள்ளார்.
அந்த சமயத்தில் சிறுமி மட்டும், அந்த பாலத்தில் இருந்த பிளாஸ்டிக் பைப் ஒன்றை இறுக்கமாக பற்றிக்கொண்டு கத்தி கூச்சலிட்டுள்ளார். ஆனால் யாரும் வரவில்லை என்பதால் தனது ஆடையில் செல்போன் இருப்பதாய் உணர்ந்த சிறுமி உடனே அவசர எண் ‘100’-ஐ தொடர்புகொண்டுள்ளார்.
இதையடுத்தே போலீஸ் நீண்ட தேடுதலுக்கு பிறகு அதிகாலை சுமார் 4 மணியளவில் சிறுமியை மீட்டுள்ளனர். சிறுமியின் வாக்குமூலத்தின்படி வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆற்றில் தள்ளிவிடப்பட்ட சிறுமியின் தாய் மற்றும் 1 வயது குழந்தையை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் தப்பியோடிய உலவா சுரேஷையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் 2 குழுவாக பிரிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் உயரதிகாரி தெரிவித்துள்ளார். அதிகாலை நேரத்தில் தான் பைப்பில் தொங்கிக் கொண்டு இருப்பதாகவும், தன்னை காப்பாற்றுமாறும் சிறுமி ஒருவர் அதிகாலை நேரத்தில் போலிஸுக்கு போன் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணையை எவருக்கும் கையளிக்கும் தீர்மானம் இல்லை என வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
வவுனியா குடிமக்கள் பேரவை வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணையை வேறுதேவைகளுக்காக பயன்படுத்துவதை தடுக்க கோரியும் அவ்வாறான திட்டமிருக்கும் பட்சத்தில் அதனை கைவிடுமாறும் வட மாகாண ஆளுனருக்கு கடிதம் மூலமாக தெரியப்படுத்தியிருந்தது.
இதற்கு பதிலளித்துள்ள உதவி காணி ஆணையாளர் க. சிவப்பிரியா வவுனியா அரச பண்ணையை எவருக்கும் கையளிக்கும் தீர்மானம் இல்லை என வடக்கு ஆளுனர் தெரிவித்துள்ளதாக குடிமக்கள் பேரவைக்கு தெரியப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
காதலன் வரமறுத்ததால் ரயிலின் முன்பாய்ந்து இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கண்டியிலிருந்து இன்று (09) காலை பதுளை நோக்கிச் சென்ற சரக்கு ரயில் பேய்து பெண் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலவாக்கலை – டயகம பிரதேசத்தில் வசித்து வந்த 28 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் ஹட்டனில் உள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் பணியாற்றியவர்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் இந்த யுவதி ஹட்டன் பொன்னகர் பிரதேசத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவருடன் 5 வருடங்களாக காதல் தொடர்பு வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது.
இன்று காலை தன்னை வந்து சந்திக்குமாறு உயிரிழந்த யுவதி இளைஞனுக்கு தொலைபேசியில் தெரிவித்துள்ளார். எனினும் , அதற்கு அவர் மறுத்ததால் ஆத்திரமடைந்து அவர் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பெண்ணின் சடலம் அவரது காதலனால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனைக்காக சடலம் டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் வாள்வெட்டு குழு ஒன்று வாள் வீசி அட்டகாசம் செய்துள்ளதுடன், அதனை தடுக்கச் சென்ற புலனாய்வு துறை உத்தியோகத்தர் மீதும் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று (09.08.2023) மாலை வவுனியா, வைரவபுளியங்குளம், யங்ஸ்ரார் விளையாட்டு மைதானம் முன்பாக குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வவுனியா, வைரவபுளியங்குளம், யங்ஸ்ரார் விளையாட்டு மைதானத்தின் முன் வீதியில் நின்ற சில இளைஞர்கள் மீது மோட்டர் சைக்கிளில் வாள்களுடன் வந்த சிலர் வாள் வீசி தாக்குதல் மேற்கொள்ள முற்பட்டதுடன், சிறிது நேரம் அப்பகுதியில் வாள்களுடன் நின்று அட்டகாசம் செய்துள்ளனர்.
இதனால் அவ் வீதியில் பயணித்த தனியார் கல்வி நிலையங்களுக்கு சென்று வந்த மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலரும் வீதியோரத்தில் அச்சத்தில் நின்றுள்ளனர்.
இதன்போது அப் பகுதிக்கு வந்த புலனாய்வுத்துறை உத்தியோகத்தர் ஒருவர் குறித்த இளைஞர்களை கட்டுப்படுத்த முயன்றுள்ளார். அவர் தான் புலனாய்வுத்துறை என்பதை உறுதிப்படுத்திய போதும் அவர் மீது வாள் வீசி தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்துள்ளனர்.
குறித்த இடத்திற்கு பொலிசார் வருகை தந்த போது வாள்களுடன் நின்றவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்த இலங்கைத் தமிழர்கள் 270 பேரை கைது செய்யாமல் மனிதாபிமான அடிப்படையில் மண்டபம் முகாமில் தற்காலிகமாக தமிழக அரசு தங்க வைத்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்.22-ம் தேதி இலங்கை மன்னார் மாவட்டம் உயிலங்குளத்தைச் சேர்ந்த பிரதீப் (32), அவரது மனைவி கஸ்தூரி (29) ஆகியோர் தங்களது 2 குழந்தைகளுடன் அகதிகளாக தனுஷ்கோடி வந்து மண்டபம் முகாமில் தங்கி இருந்தனர்.
இந்நிலையில், பிரதீப் மண்டபம் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனு விவரம்: எனது மனைவி கஸ்தூரி `மாடலிங்’கில் நாட்டம் கொண்டவர். இதற்காக சென்னை, திருச்சி போன்ற ஊர்களுக்கு சென்று வருவார்.
ஜூலை 27-ம் தேதி `மாடலிங்’ படப்பிடிப்புக்காக மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு அவரை ரயிலில் அனுப்பி வைத்தேன். சென்னை சென்ற முதல் 2 நாட்கள் மனைவியிடம் பேசினேன். அதன் பிறகு அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.
சென்னை சென்று பார்த்த போது மனைவி கொடுத்த முகவரி போலி எனத் தெரியவந்தது. எனவே, அவரை கண்டு பிடித்துத்தர வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மண்டபம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து அகதிகளாக வந்த தமிழர்கள் தங்கியிருக்கும் மண்டபம் முகாமிலிருந்து வெளியே செல்ல அனுமதி கிடையாது. ஆனால், இலங்கை அகதிப் பெண் அடிக்கடி வெளியூர் சென்று வந்தது குறித்து உளவுத் துறை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.