யாழ்ப்பாண பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவனின் கன்னத்தில் ஆசிரியர் ஒருவர் அறைந்ததில் மாணவன் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வலிகாமம் – சுழிபுரம் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 6 ல் கல்வி கற்கும் மாணவனின் கன்னத்தில் ஆசிரியர் அறைந்ததில் மாணவனின் செவிப்பறை பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,குறித்த மாணவனுக்கு பாடசாலை ஆசிரியர் கடந்த 31 ஆம் திகதி பாடசாலையில் வைத்து தாக்கியுள்ளார்.இந்த நிலையில் மாணவனுக்கு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காதினால் நீர் வடிந்ததை அவதானித்த பெற்றோர் மாணவனை விசாரித்துள்ளனர்.
இதனையடுத்து, நடந்த சம்பவத்தை பெற்றோர்களுக்கு தெரியப்படுத்திய நிலையில் மாணவனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.மாணவனை பரிசோதனை செய்த வைத்தியர்கள் மாணவரின் செவிப்பறை பாதிப்புக்கு உள்ளாகியமையை உறுதி செய்துள்ளனர்.
அந்தவகையில் வைத்தியசாலை பிரிவு பொலிஸார் இது தொடர்பில் மாணவனிடம் வாக்குமூலம் பெற்று அதனை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பியுள்ளனர்.பாடசாலை நிர்வாகத்தினர் குறித்த விடயத்தினை வெளியே கசிய விடாமல் மூடி மறைக்க முயற்சிப்பதாக அறியமுடிகிறது.
மேலும் மாணவர்களை ஆசிரியர் தாக்கும் சம்பவங்கள் கடந்த இரண்டு மாதங்களாக அதிகரித்து உள்ள நிலையில் வடமாகாண கல்வி அமைச்சு இதுவரை குற்றம் செய்த ஆசிரியர்களுக்கு நிர்வாக ரீதியான ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்ததாக தெரியவரவில்லை.
யாழ். கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள வீட்டொன்றில் பணிப்பெண்ணாக இருந்த 17 வயதான தர்மிகா என்ற சிறுமி கடந்த ஜுலை மாதம் 23 ஆம் திகதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இவ் விடயம் தொடர்பான உண்மை நிலையை அறிந்து கொள்ள சிறுமி பணிபுரிந்த வீடு மற்றும் சிறுமியில் வீட்டுக்கு சென்று தகவலை சேகரித்துள்ளனர்.
பல முயற்சிகள் எடுத்தும் சம்பந்தப்பட்ட தரப்பினரது ஒத்துழைப்பு எமக்கு கிடைக்காததால் முழுமையாக தகவலை வெளியிட முடியவில்லை, இருப்பினும் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட ஊரவர்கள் இந்த சிறுமிக்கு நடந்தது அநீதி அதற்கு நீதி கிடைக்கவேண்டும் என தமது ஆதங்கங்களை வெளியிட்டிருந்தனர்.
சிறுமியை வீட்டுப்பணிக்கு இருத்தியது ஏன்? சிறுமிக்கு நடந்த அநீதியை பெற்றோர் கண்டுகொள்ளாதது ஏன்? பரிசோதனைக்காக மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்ட நிலையிலும் சடலத்தை எதற்காக எரித்தார்கள்? என்ற பல கேள்விகளுடன் சமூக வலைத்தளங்களிலும் பலர் சிறுமி ஒருவர் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார் என்ற சம்பவத்தை வன்மையாகக் கண்டித்திருந்தனர்.
இதனடிப்படையில் பொதுமக்களின் ஆதங்கங்களையும் கேள்விகளையும் ஊடகம் ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.முதலில் குறித்த சிறுமியின் குடும்ப நிலவரம் தொடர்பில் தெரியவருவதாவது,யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை, முதலிகோயிலடியை சேர்ந்த கேதீஸ்வரன் தர்மிகா. இவர் கடந்த 2006.11.03 இல் பிறந்தவர். சிறுமியின் தாய் தற்போது 2வது திருமணம் செய்துள்ளார்.
இந்த திருமணத்தில் 2 பிள்ளைகள் உள்ளனர். சிறுமியின் குடும்பம் சிறிய குடிசை வீடொன்றில் வசிக்கிறார்கள். தாயாரின் இரண்டாம் தார கணவன் கூலி வேலை செய்து வருகிறார்.
குறித்த உயிரிழந்த சிறுமி, கடந்த 2021ஆம் ஆண்டு பாடசாலையிலிருந்து இடைவிலகி தனது 14 வயதிலிருந்து வீட்டு வேலைகள் செய்து வருகிறார் என்றும் அறிய கிடைத்துள்ளது.
இந்த சிறுமி கடந்த 4 மாதங்களாக கல்வியங்காட்டில் உள்ள வீட்டில் பணிபுரிந்துள்ளார். மாதாந்தம் ரூ.25,000 ரூபா சம்பளம் பேசப்பட்டுள்ளது. சிறுமிக்கு பேசப்பட்ட சம்பளத்தில் ரூ.5 ஆயிரம் வீதமே கொடுக்கப்பட்டுள்ளது.
மீதிப்பணத்தை வீட்டு உரிமையாளர்கள் பிடித்து வைத்துள்ளனர். மீதிப்பணத்தில் சிறுமிக்கு சங்கிலியொன்று செய்து கொடுக்குமாறு சிறுமியின் தாயாரே தம்மிடம் கேட்டதாக வீட்டு உரிமையாளர்கள் மரண விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுமியின் தாயார் கூறுகையில்,வீட்டின் வறுமை நிலை காரணமாக எனது மகளை வேலைக்கு அனுப்பிவைத்தேன். எனவும் தனது மகளை சித்திரை மாதம் 16ம் திகதி வீட்டு வேலைக்கென அழைத்து சென்றனர்.
அதன் பின்னர் நான் போய் பார்த்து வந்திருந்தேன் என்றார்.மாதத்தில் ஒருநாள் 10ஆம் திகதிகளில் மகளுடன் குடும்பத்தினரை தொலைபேசியில் பேசிக்கொள்ளலாம் என வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் குடும்பத்திடமும் தொலைபேசியில்லை. சிறுமியிடமும் தொலைபேசியில்லை. குறிப்பிட்ட நாளில் சிறுமியின் குடும்பத்தினரின் வீட்டுக்கு அண்மையாக உள்ள வீட்டிலுள்ள ஆசிரியர் ஒருவரின் கைத்தொலைபேசிக்கு சிறுமி மிஸ்ட் கோல் ஏற்படுத்திய பின்னர் குடும்பத்தினர் அழைப்பேற்படுத்தி பேசுவார்கள்.
கடந்த இரண்டு மாதங்களாக ஆசிரியர் ஒருவரின் தொலைபேசி மூலம் மகளுடன் கதைத்ததாகவும் அதன்பின்னர் ஒவ்வொரு மாதமும் 10ம் திகதி மகள் தன்னுடன் கதைப்பார் எனவும் தாயார் குறிப்பிட்டார்.
இனி சிறுமியின் மரணம் தொடர்பில் தாயார் கூறியவற்றை பார்க்கையில் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் காணப்பட்ட சிறுமியின் கால்கள் இரண்டும் தரையில் காணப்பட்டன. இன்னும் குறிப்பாக சொல்வதெனில் சிறுமியின் உயிரற்ற உடலின் கழுத்தில் தூக்கு மாட்டிய துணி காணப்பட்டது.
சிறுமியின் இரண்டு முழங்கால்களும் தரையில் முட்டிக் கொண்டிருந்தன. தமது மகளின் சடலமாக காணப்பட்ட போது, முழங்கால்கள் தரையில் ஊன்றியிருந்ததன் அடிப்படையில், இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குறிப்பிட்டனர்.
கடந்த 23ம் திகதி தான் விறகு கட்டச் சென்ற இடத்தில் தனது தம்பி விறகு கட்டிய அக்காவிடம் தொலைபேசியில் சொன்னதன் பிற்பாடே தான் உடனடியாக பதறியவாறு ஓடிவந்ததுடன் அங்கு நின்றவர்களது உதவியோடு சம்பவம் இடம்பெற்ற வீட்டிற்கு சென்றேன். அங்கு சென்ற போது நான் பிள்ளையை பார்க்கவில்லை.
அதேவேளை அங்கிருந்த வீட்டுக்காரியிடம் ஏன் என்ன நடந்தது எனவும் எனக்கு உடனடியாகவே போனில் கூறியிருக்கலாமே என தான் கேட்டதற்கு ‘லூசுப் பெட்டை என்னவெல்லாம் செய்திருக்கால் தெரியுமோ என கூறியபோது என்ன லூசுபெட்டை என்கிறாய் என குறித்த வீட்டுக்காரியை பேசியதாக குறித்த சிறுமியின் தாயார் தெரிவித்தார்.
என்ன நடந்தது என கூறுமாறு வீட்டுக்காரியிடம் சிறுமியின் தாய் வினவியபோது அவர்கள் வாய் திறந்து எதுவுமே சொல்லவில்லை. அதேவேளை தாங்கள் விட்டுட்டு செல்லும் போது குறித்த சிறுமி பாண் சாப்பிட்டதாகவும் கூறினார்கள்.
அதேவேளை தன்னுடைய மகளின் தலையில் புழுதி படிந்திருந்தாகவும் அவர் உள்ளாடைகள் எதுவும் இல்லாமல் தனியே ஒருசட்டை மாத்திமே அணிந்த நிலையில் தனது மகளின் சடலத்தை பார்த்ததாகவும் வழமையாக தனது மகள் உள்ளாடைகள் இன்றி இருப்பதில்லை என்றும் உறுதிபட கூறுகின்றார்.
நடந்த சம்பவத்தை தனக்கு 3.30 தான் அறிவித்ததாகவும் அதற்கு முதல் இரு தடவை அழைப்பு எடுத்தும் சொல்லவில்லை எனவும் கூறியதற்கு வீட்டுக்கார பெண்மணி “தங்களுக்கு ஏற்பட்ட பதற்றம் காரணமாகவே சொல்லவில்லை” எனவும் தெரிவித்ததாகவும் சிறுமியின் தாயார் தெரிவித்தார்.
மேலும், மகளில் சடலத்தை பெற்றுகொண்ட பின்னர் வழக்கு நடைபெறுவதால் சடலத்தை புதைக்கவேண்டுமா என மரணவிசாரணை அதிகாரியிடம் கேட்டபோது “வழக்கிற்கும் இதற்கும் சம்பந்தமில்லை நீங்கள் விரும்பினால் சைவ முறைப்படி எரிக்கலாம்” என்று கூறியதாலே தான் தாம் எரித்ததாகவும் சிறுமியின் தாயாரும் மாமன்முறை உறவினரும் கூறுகின்றார்.
அதேவேளை இரண்டு இலட்சம் பணத்தை தாம் வாங்கியதாகவும் அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை எனவும், மரணவிசாரணை அதிகாரி, “உயிரிழந்த பிள்ளையை எரிக்கப்போகின்றீர்களா தாக்கப்போகின்றீர்களா” என கேட்டபோது நாங்கள் சைவம் என்று கூறியதற்கு அப்படி என்றால் நீங்கள் சைவமுறைப்படி செய்யுங்கள் என தெரிவித்தார்.
அதேவேளை சைவமுறைப்படி செய்தால் வழக்காடலாமா என தனது மாமா கேட்டபோது வழக்குக்கும் இதற்கும் சம்பந்தமில்லை வழக்கு வழக்குத்தான் நீங்கள் உங்கள் பிள்ளையை விரும்பியபடி செய்யுமாறும் 85,000 பிள்ளை வேளை செய்த காசு, அதைவிட செத்த வீட்டிற்கென 2 இலட்சம் ரூபாவும் வேண்டித் தந்திருப்பதாகவும் குறித்த அதிகாரி தெரிவித்ததாக தாயார் தெரிவித்தார்.
தமது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் எமக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றே தயார் கண்ணீர் மல்க கோரியுள்ளார்.வைத்தியசாலையில் மரண விசாரணை அதிகாரி எல்லா றிப்போட்டையும் பதிவு செய்து முடிவடைந்த பின்னர் கூறியிருந்தார் நீங்கள் எனி சிறுமியை கொண்டுபோகலாம் என தெரிவித்தார்.
அதற்கு நாங்கள் சிறுமியை தாக்கப்போகின்றோம் என கூறியபோது, இல்லை நீங்கள் உங்கள் சமய முறைப்படி எரிக்கலாம் என தெரிவித்தார். அதன் பின்னரே நாம் நவாலி வழுக்கையாறு இந்து மயானத்திற்கு கொண்டு வந்து தகனம் செய்தோம் எனவும் மாமனார் தெரிவித்தார்.
இதேவேளை சிறுமி வேலை பார்த்த இடத்தில் வயது முதிர்ந்த தம்பதிகள் மற்றும் அவர்களின் மருமகள் மற்றும் பேரப்பிள்ளைகள் வசிக்கின்றனர்.குறித்த வீடு வைத்தியர் ஒருவருக்கு சொந்தமானது. இருப்பினும் தற்போது அங்கு குறித்த குடும்பம் வாடகை அடிப்படையில் குடியமர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.குறித்த சிறுமியின் மரணத்தின் பின்னர், வடக்கு மாகாண ஆளுநர் அதிகாரிகளை அழைத்து சிறுமியை வேலைக்கு அனுப்பியது தொடர்பில் ஆராயுமாறு பணித்திருந்தார்.
அதேவேளை சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் சென்று கள ஆய்வை மேற்கொண்டிருந்த போதும், அவர்களுக்கு சிறுமியை பணிக்கு அமர்த்திய விடயம் அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கின்றனர்.இவ் விடயத்தை அறிந்த அயலவர்கள் யாராவது தமக்கு தகவல் தந்திருந்தால் உடனடியாக தாம் நடவடிக்கை எடுத்திருப்பார்கள் என சுட்டிக்காட்டியிருந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிய வருகிறது.இருப்பினும் இதுதொடர்பாக பொலிஸாரிடம் மேலதிக விடயங்கள் அறிய முற்பட்ட போது, விசாரணை முடிவடையும் வரை தகவல்களை வழங்க மறுத்துவிட்டனர்.எனினும், இந்த மரணம் தொடர்பில் செய்தி வெளிட்ட சில ஊடகங்களிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் 19 வயது யுவதியை அழைத்துச் சென்ற 54 வயது ஆண்ணொருவரை பொதுமக்கள் அடித்துக் கொலை செய்த சம்பவத்தில் நான்கு பேர் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. குறித்த இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியே சென்று குடும்பமாக வாழ்ந்து வந்த நிலையில், அவர்களை சேர்த்து வைப்பதாக உறவினர்கள் நேற்றையதினம் ஊருக்கு வரவளைத்தனர்.
இவ்வாறு அவர்கள் வந்தவேளை உறவினர்களால் அவர்கள் இருவர் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்ட நிலையில், படுகாயமடைந்த நிலையில் அந்த ஆண் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டவேளை இடையில் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் சுன்னாகம் பொலிஸாரால் அறுவர் கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவர்கள் அறுவரையும் எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
இவ்வாறான நிலையில், தாக்குதலுக்கு உள்ளான யுவதி தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் யுவதியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், தடயச் சான்றான, உயிரிழந்த நபரின் சாறத்தை எரித்த குற்றச்சாட்டின் கீழ் யுவதியின் அண்ணாவையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், சம்பவம் நிகழ்ந்த இடத்தினை மல்லாகம் நீதிமன்ற பதில் நீதிவான் நேற்று மாலை 4 மணியளவில் பார்வையிட்டார். அதன்பின்னர் உயிரிழந்தவரது சடலமானது பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மாத்தறை நோக்கி செல்லும் கலனிகம நுழைவாயிலில் தாய் மற்றும் இரண்டு பிள்ளைகளை கடத்திய இருவரை பொலிஸார் கைது செய்தனர்.குடும்ப தகராறு காரணமாக இவ்வாறு கடத்தப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.37 வயதுடைய பெண் ஒருவரும் அவரது 7 மற்றும் 15 வயதுடைய இரண்டு பிள்ளைகளுமே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளனர்.
முதல் திருமணத்தில் பெண்ணின் கணவர் இறந்துவிட்ட நிலையில், சில காலம் வேறு ஒருவருடன் வசித்து வந்துள்ளார். பின்னர் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவரைப் பிரிந்த பெண், இந்தச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
அவர்கள் காலி தல்பே பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்து வந்தனர். எனினும் இவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த பெண் தனது இரண்டு பிள்ளைகளுடன் பண்டாரகம பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில் மற்றுமொரு நபருடன் காரில் வந்த சந்தேக நபர் வீட்டுக்குள் புகுந்து, அவரை அச்சுறுத்தி கடத்திச் சென்றுள்ளார்.
கலனிகம அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலில் கார் நிறுத்தப்பட்டவுடன், அந்த பெண் காருக்குள் இருந்து ‘என்னை காப்பாற்றுங்கள்’ என சத்தமிட்டுள்ளார்.அப்போது கலனிகம அதிவேக வீதி நுழைவாயிலில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் சுஜீவ உடனடியாகச் செயற்பட்டு காரை நிறுத்தி சோதனையிட நடவடிக்கை எடுத்துள்ளார்.
பின்னர், சந்தேகநபர்கள் இருவரும் பண்டாரகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், குடும்ப தகராறு காரணமாக இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
காரை சோதனையிட்டபோது, அதில் பெரிய கத்தி ஒன்றும் சிக்கியுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வில்வத்த ரயில் கடவையில் கொள்கலன் ஒன்று தொடருந்துடன் இன்று காலை மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இதன் காரணமாக கிரிஉல்ல – மீரிகம வீதி போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது. பொல்கஹவெலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அலுவலக தொடருந்துடன் இந்த கொள்கலன் மோதியுள்ளது.
தொடருந்தில் மோதிய கொள்கலன் பெட்டி சுமார் 100 மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு நிறுத்தப்பட்டதால் தொடருந்து சமிஞ்சை, மின்கம்பங்கள், தொடருந்து கதவுகள் என்பன பலத்த சேதம் அடைந்துள்ளதென என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தால், தொடருந்தின் சக்கரங்கள் மற்றும் என்ஜின் பலத்த சேதமடைந்துள்ளன. இதனால் பல தொடருந்துகள் தாமதமாக புறப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நுவரெலியாவில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட இளம் தம்பதி கடந்த 08 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நுவரெலியா டொப்பாஸ் பகுதியில் வசிக்கும் என்டன் தாஸ் மற்றும் நாதன் ரீட்டா என்ற தம்பதியே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த தம்பதி, கணவரின் தாயாருடன் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில், தனது மகன் தனது மருமகளை சுட்டுக் கொன்றபோது, அயலவர்களிடம் உதவி பெறுவதற்காக வீட்டை விட்டு வெளியே தாய் ஓடியதாகவும், வீடு திரும்பியபோது, தனது மகனும் துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்த நிலையில் கிடந்ததாக தாய் பொலிஸாரிடம் தெரிவித்தார்.
மகன், மருமகள் மற்றும் நானும் தனியான வீட்டில் வசித்து வருகின்றோம். அன்றைய தினம் இரவு மகனுக்கும், மருமகளுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.நான் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தபோது சமையல் அறையில் பாரிய வெடிப்பு சத்தம் கேட்டது, நான் சமையல் அறைக்குள் சென்று பார்த்தபோது மருமகள் இரத்த காயங்களுடன் கிடந்தார்.
மகனிடன் ஏன் என கேட்டப்போது மின்சாரம் தாக்கி கீழே விழுந்து விட்டதாகவும் , யாரையாவது உதவிக்கு அழைக்குமாறு கூறினார்.நான் அயலவர்களை அழைப்பதற்காக வீட்டில் இருந்து வெளியே வரும்போது மீண்டும் ஒரு வெடிப்பு சத்தம் கேட்டது, பின்னர் வீட்டினுள் சென்று பார்த்தால் மகனும் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து காணப்பட்டனர் ” என தாயார் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மூலமே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.நீதவான் விசாரணைக்கு பின்னர் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அனுராதபுரம் – இராஜாங்கனைப் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவம் இன்று (09.08.2023) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இளம் தம்பதியினர் பயணித்த ஹயஸ் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் அருகில் இருந்த மரத்துடன் மோதியுள்ளது.இதன்போது ஹயஸ் வாகனத்தைச் செலுத்திச் சென்ற 28 வயதுடைய கணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
படுகாயங்களுடன் நோயாளர் காவுகை வாகனத்தில் இராஜாங்கனை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட 26 வயதுடைய மனைவி இடைவழியில் உயிரிழந்துள்ளார்.
இருவரினதும் சடலங்களும் இராஜாங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.உயிரிழந்த இளம் தம்பதியினர் அனுராதபுரம் – பலுகஸ்வெவை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குடும்ப சூழ்நிலை காரணமாக தனது படிப்பை 2-ம் வகுப்போடு முடித்துக்கொண்ட மிசோராம் முதியவர் ஒருவர் தற்போது மீண்டும் பள்ளியில் சேர்ந்து படித்து வரும் செய்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மியான்மர் எல்லையில் கடந்த 1945-ல் குவாங்லெங் (Khuangleng) என்ற கிராமத்தில் பிறந்தவர் லால் ரிங்தாரா. தனது 2 வயதிலே தன்னுடைய தந்தையை இழந்தார். இதனால் தாய்க்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று எண்ணி, தனது பள்ளி படிப்பை 2-ம் வகுப்போடு முடித்துக் கொண்டார்.
அதன்பிறகு பல்வேறு பகுதிகளுக்கு தனது தாயோடு இடம்பெயர்ந்த இவர், 1995-ம் ஆண்டு மிசோராம் மாநிலம் ஹ்ருவைகான் (Hruaikawn) என்ற கிராமத்திற்கு வந்தார். பிறகு அங்கேயே தனது புதிய வாழ்க்கையை தொடங்கிய இவர், பாதுகாவலாராக பணிபுரிந்து வந்தார்.
இருப்பினும் தனது படிப்பை பற்றிய கனவுகள் இவருக்குள் இருந்துள்ளது. இதனால் தனக்கு 70 வயதை தாண்டிய பிறகு கடந்த 2018-ம் ஆண்டு ஹ்ருவைகான் கிராமத்தில் இருக்கும் RMSA பள்ளியில் சேர்ந்தார். அங்கே தனது 5-ம் வகுப்பை முடித்த இவர், அந்த பள்ளியில் இருந்து வெளியேறினார்.
பின்னர் தனது படிப்பை தொடர எண்ணிய இவர், 8-ம் வகுப்பு வரை வேறொரு பள்ளியில் படித்து மீண்டும் RMSA பள்ளியில் 9-ம் வகுப்புக்கு சேர்ந்தார். தற்போது இவருக்கு 78 வயதாகும் நிலையில், அவரது வீட்டில் இருந்து சுமார் 3 கி.மீ., தூரம் வரை தினமும் நடந்தே பள்ளிக்கு சென்று படித்து வருகிறார்.
இதுகுறித்து முதியவர் லால் ரிங்தாரா கூறுகையில், தனக்கு மிசோ மொழியில் பேசவும், எழுதவும் தெரியும் எனவும், ஆனால் ஆங்கிலத்தில் எழுத பேச வேண்டும் என்று விருப்பபட்டதாகவும், அதற்காக பள்ளிக்கு சென்று படித்து வருவதாகவும் தெரிவித்தார்.
அதோடு ஆங்கிலம் படிக்க எழுத தெரிந்தால்தான் ஆங்கிலத்தில் விண்ணப்பிக்க முடியும் என்றும், செய்திகளை ஆங்கிலத்தில் தெரிந்துகொள்ள முடியும் என்றார். இது போன்ற ஒரு விசயத்தை ஊக்குவிப்பதில் தங்களுக்கு பெருமை என்றும், இதில் தாங்களும் ஒரு பங்காக இருப்பதை எண்ணி மகிழ்ச்சியடைவதாகவும் அந்த பள்ளியின்ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் வெளியான இந்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது.
குடும்ப சூழ்நிலை காரணமாக தனது படிப்பை 2-ம் வகுப்போடு முடித்துக்கொண்ட மிசோராம் முதியவர் ஒருவர் தற்போது மீண்டும் பள்ளியில் சேர்ந்து படித்து வரும் செய்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
திருப்பத்தூர் அருகே பெண்ணை காப்பாற்ற சென்ற இளைஞருக்கு கத்தி குத்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தமிழ்நாட்டில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்க வழக்கங்கள் அதிகமாக காணப்படுகிறது.
அவ்வப்போது இந்த பழக்கவழக்கத்தால் சில உயிரிழப்புகளும் நிஅழ்ந்து வருகின்றன. அந்த வகையில், தற்போது திருப்பத்தூரிலும், அதித கஞ்சா போதையால் ஒரு கொலை நிகழ்ந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூர் பகுதியை சேர்ந்தவர்கள் கிரண் குமார், துர்கேஸ்வரி தம்பதி. துர்கேஸ்வரின் தங்கை வெளியூரில் இருப்பதால் அவர்களுடைய மகள்கள் இருவரும் துர்கேஸ்வரியின் அரவணைப்பில் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவர் கஞ்சா போதையில் தங்கை மகள்களிடம் அவ்வப்போது தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் துர்கேஸ்வரிக்கும், சண்முகத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது.
இந்நிலையில் இன்று வழக்கம்போல் துர்க்கேஸ்வரி வீட்டின் முன்பு அளவுக்கு அதிகமான கஞ்சா போதை தலைக்கு ஏறிய நிலையில் அமர்ந்திருந்த சண்முகம், மீண்டும் துர்கேஸ்வரியின் தங்கை மகள்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனை துர்கேஸ்வரி தட்டி கேட்ட நிலையில் ஆத்திரமடைந்த சண்முகம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு தாக்க முயன்றள்ளார். அப்போது துர்க்கேஸ்வரியின் தங்கை மகள்களின் நண்பர் வல்லரசு என்பவர் தடுக்க முயன்ற போது, சண்முகம் அவரை சரமாரியாக கத்தியால் குத்தியதில் வல்லரசு சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் துர்கேஸ்வரி அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், வல்லரசுயின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து வல்லரசை கொலை செய்த சண்முகத்தை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தனது வீட்டிற்கு முன்பு கஞ்சா அடிக்க கூடாது என கூறியதன் காரணமாக தன்னை கொலை செய்த வந்த இடத்தில் தனது மகள்களின் அப்பாவி நண்பரை குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காதல் என்பது கடவுள் படைத்த ஒரு அற்பதமான உணர்வு. இது வெறும் உணர்வு மட்டுமல்ல அதில் ஏகப்பட்ட அன்பும் அக்கறையும் தன்னாலே அடங்கி விடும்.காதலனும் காதலியும் தங்களின் உணர்வுகளை விதவிதமாக பரிமாறிக்கொள்ளும் ஒரு அற்புதப்படைப்பே இந்தக் காதல். காலம் காலமாக சாதி, மதம், இனம், அழகு இப்படி எதுவும் பார்க்காமல் தோன்றி இறுதிவரை வாழ்வது தான்.
அப்படி தள்ளாத வயதிலும் பிரியாத காதல் கொண்டு இன்னும் அதீத காதலோடு இருந்தால் அதை தவிர வேறு என்ன இருக்கப் போகிறது. அப்படியான ஒரு காதல் வீடியோ ஒன்றுதான் இணையத்தில் தற்போது வட்டாரமிட்டுக் கொண்டிருக்கிறது.
குறித்த வீடியோவில் ஒரு வயதான பாட்டி தன் வயதான கணவரை ஒரு இடத்தில் நிற்க வைத்து விட்டு முன்னாள் வரும் பேருந்தை நிறுத்துவதற்காக ஓடிப்போய் பாதை நடுவில் நின்று தன் கணவனை அழைத்துச் செல்கிறார்கள்.
இந்த வீடியோ பலருக்கும் பிடித்துப்போக அனைவரும் இந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள். மேலும், எப்படி வாழ்ந்தாலும் தள்ளாத வயதிலும் இப்படியான காதல் தான் வேண்டும் என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் போலீஸ் கணவரை கொல்வதற்கு முன் மது ஊற்றி கொடுத்து மட்டன் சமைத்து பரிமாறிய மனைவி தன்னை புகழ்ந்து பேச வைத்து எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ரமேஷ்(35), போலீஸ்காரர். இவரது மனைவி ஷிவானி(30). தம்பதிக்கு 8 மற்றும் 6 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் ரமேஷின் நண்பரான டாக்சி டிரைவர் ராமாராவ்(33) என்பவருடன் ஷிவானிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் தகாத உறவாக மாறியது.
இது ரமேஷிற்கு தெரிய வந்ததால் ஷிவானியை கண்டித்தார். கணவர் ரமேஷ் மூலம் தங்கள் தகாத உறவுக்கு தடை ஏற்படும் என்பதால் காதலனுடன் சேர்ந்து ரமேஷை கொலை செய்ய ஷிவானி திட்டமிட்டார்.
இதனால் அவரை கடந்த 1ம் தேதி அதிக மது ஊற்றி கொடுத்து பின்னர் காதலன் மற்றும் அவரது நண்பர் நீலா ஆகியோரை வரவழைத்து ஷிவானி தலையணையால் அமுக்கி கொலை செய்தார்.
மறுநாள் தனது கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக ஷிவானி நாடகமாடினார். இதுகுறித்து என்.வி.பி. போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து ஷிவானி, ராமாராவ் மற்றும் நீலா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
இந்நிலையில், தனது கணவரை கொலை செய்வதற்கு முன்பு ஷிவானி எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் தனது கணவருக்கு மட்டன் குழம்பு, மட்டன் தொக்கு ஆகியவற்றை சமைத்து ஷிவானி பரிமாறியுள்ளார்.
பின்னர் அளவுக்கு அதிகமாக மதுவை ஊற்றிக் கொடுத்து குடிக்க வைத்துள்ளார். அப்போது தன்னை புகழ்ந்து பேசும்படி கூறி வீடியோ எடுத்துள்ளார்.
அந்த வீடியோவில் போலீஸ்காரர் ரமேஷ் அதிக மதுபோதையில் பேசுகையில், ‘எனது மனைவி மிகவும் தெளிவானவள். போதிய படிப்பறிவு இல்லாவிட்டாலும் வழிகாட்டினால் போதும், சிறப்பாக செயல்படக்கூடியவள், என் மனைவியே எனது வாழ்கை. நான் இருக்கும் வரை தைரியமாக இருப்பாள்.
நான் இறந்தாலும் அவள் தைரியமாக இருக்க வேண்டும். என் மனைவிதான் பெஸ்ட்’ என ஷிவானி பேச வைத்துள்ளார். அதன்பின்னர் ரமேஷை படுக்கை அறைக்கு அழைத்து சென்று படுக்க வைத்துள்ளார். பிறகு கொலை நடந்திருக்கிறது.
தொடரும் எல்லை கடந்த காதல் கதைகள்.., இந்திய விசா கிடைக்காததால் பாகிஸ்தான் பெண் ஒருவர் இந்திய இளைஞரை ஆன்லைனில் திருமணம் செய்து கொண்ட சுவாரசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சச்சின்-சீமா ஹைதர் மற்றும் அஞ்சு-நஸ்ருல்லாவின் எல்லை தாண்டிய காதல் கதைகள் இன்னும் நாட்டில் பேசப்படுகின்றன. சமூக ஊடகங்கள், ஊடகங்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொது மக்களும் இந்த காதல் கதைகளைப் பற்றி பேசுவதைக் காணலாம்.
இதற்கிடையில் இன்னொரு சம்பவம் இதற்கு வலு சேர்த்துள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்து கொண்ட தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் கராச்சியில் வசிக்கும் அமினா என்ற இளம்பெண், இந்திய விசா கிடைக்காத நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் வசிக்கும் அர்பாஸ் என்பவரை திருமணம் செய்ய முடிவு செய்ததாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
அனைத்து சடங்குகளும் முடிந்து புதன்கிழமை இரவு (ஆகஸ்ட் 2) அர்பாஸ் மற்றும் அமினா ஆன்லைனில் திருமணம் செய்து கொண்டனர்.இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த காஜிகள் இந்த நிக்காஹ்வை நிகழ்த்தி, தம்பதியரின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
மணமகன் அர்பாஸ் கான் தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஜோத்பூரின் ஓஸ்வால் சமாஜ் பவனுக்கு வந்தார். இம்முறை இருவரின் ஆன்லைன் நிக்காஹ் மட்டுமின்றி, குடும்ப உறுப்பினர்களும் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு அனைத்து திருமண சடங்குகளையும் அர்பாஸ் செய்ய வைத்தனர். இந்நிகழ்வில், இருதரப்பு உறவினர்கள் மற்றும் உறவினர்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர். ஜோத்பூரில், மணமகனின் உறவினர்கள் சாட்சியாக எல்இடி திரையில் முழு திருமணமும் காட்டப்பட்டது.
திருமணத்தைப் பற்றி பேசிய அர்பாஸ், தனது மனைவி அமினா இந்தியாவுக்குள் நுழைவதற்கான விசாவிற்கு விரைவில் விண்ணப்பிப்பேன் என்று கூறினார். பாகிஸ்தானில் எங்களுக்கு பல உறவினர்கள் உள்ளனர். எங்கள் குடும்பத்தினர் இந்த திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர். ஆனால், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டதால், ஆன்லைனில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம். ஆனால் தற்போது அமினாவுக்கு விசா கிடைத்து விரைவில் இந்தியா வரலாம் என்ற நம்பிக்கை உள்ளது.
நாங்கள் பாகிஸ்தானில் திருமணம் செய்திருந்தால், அந்தத் திருமணத்திற்கு இந்தியாவில் சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைத்திருக்காது என்றும் அர்பாஸ் கூறினார். ஆனால் இப்போது அதிகாரபூர்வ திருமணம் மற்றும் இந்திய நிக்காஹ்நாமாவுடன் விசாவிற்கு விண்ணப்பிப்பது செயல்முறையை இன்னும் எளிதாக்கும் என்று நம்பப்படுகிறது.
மணமகளின் வருகையால் குடும்பத்தினர் மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாக அர்பாஸின் தந்தை கூறுகிறார். மேலும் இந்த ஆன்லைன் திருமணம் சாதாரண குடும்பங்களுக்கு நல்லது. ஏனெனில், திருமணத்தின் புனித பந்தத்துடன் தொடர்புடைய சடங்குகளை குறைந்த செலவில் நிறைவேற்ற முடியும் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். மணமகளின் குடும்பம் எளிமையானது என்றும் அவர் கூறினார். இந்த திருமணத்திற்கு அதிக செலவு இல்லை என்று அவர் மேலும் கூறினார்.
யாழ்.சுன்னாகத்தில் 19 வயதான காதலியுடன் ஓடிய 54 வயதான நபர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் நபர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் பலரை பொலிஸார் தேடிவருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்.சங்குவேலி பகுதியை சேர்ந்த ஜெகதாஸ் (வயது 54) என்பவர் தனது 19 வயது காதலியுடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊரை விட்டு வெளியேறி இருந்தார்.
இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக உறவினர்கள் உறுதி அளித்ததால், இருவரும் ஊர் திரும்பியுள்ளனர். இதனையடுத்து ஊரவர்கள் குடும்பஸ்தர் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டதால், மயக்கமடைந்த நிலையில் அவர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் சுன்னாக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் 06 பேரை கைது செய்து தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கண்டி பிரதான வீதிக்கு அருகில் இலக்கம் ஐந்து டொப்பாஸ் பகுதியில் நேற்றிரவு (07.08.2023) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருவரும் கணவன் மனைவி எனவும், திருமணமாகி எட்டே மாதங்களான எண்டன் தாஸ் மற்றும் நாதன் ரீட்டா ஆகியோரே இந்த சம்பவத்தில் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுவடைந்ததை அடுத்து கணவனால் மனைவி சுட்டு கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் இதனை தொடர்ந்து கணவன் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக என்டன்தாஸின் தாயார் வழங்கியுள்ள வாக்குமூலத்தில், “நான் எனது மகன் மற்றும் மருமகளுடன் தனியான வீட்டில் வசித்து வந்தேன். வழமை போல திங்கட்கிழமை இரவு எனது மகனுக்கும் மருமகளுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது. நான் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தபோது சமையல் அறையில் பாரிய வெடிப்பு சத்தம் கேட்டது.
நான் சமையல் அறைக்குள் சென்று பார்த்தபோது மருமகள் குருதி தோய்ந்த நிலையில் நிலத்தில் சரிந்து காணப்பட்டார். மகனிடன் ஏன் என கேட்டப்போது மின்சாரம் தாக்கி கீழே விழுந்து கிடக்கின்றாள் யாரையாவது உதவிக்கு அழைக்குமாறு கூறினார்.
நான் அயலவர்களை கூப்பிடுவதற்காக வீட்டில் இருந்து வெளியே வரும்போது மீண்டும் ஒரு வெடிப்பு சத்தம் கேட்டது. வீட்டினுள் சென்று பார்த்தால் மகனும் குருதி தோய்ந்த நிலையில் நிலத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்து காணப்பட்டார்” என குறிப்பிட்டுள்ளார்.
குறித்த துப்பாக்கி உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது எனவும், நீதவான் விசாரணைக்கு பிறகு உடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படும் என்றும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நுவரெலியா பொலிஸார் கூறியுள்ளனர்.
நுவரெலியாவில் குடும்பத் தகராறு காரணமாக கணவரொருவர், மனைவியைச் சுட்டுக் கொன்றதுடன் அவரும் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இந்த சம்பவம் டோப்பாஸ் பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று (07.08.2023) இரவு இடம்பெற்றுள்ளது.சம்பவத்தின் போது இலங்கையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை கணவர் பயன்படுத்தியுள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நுவரெலியா, டோப்பாஸை வசிப்பிடமாகக் கொண்ட 28 மற்றும் 26 வயதுடைய தம்பதியினரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
திருகோணமலை, சீனக்குடா விமானப்படை தளத்தில் விமான விபத்தில் உயிரிழந்த இரண்டு விமானப்படை வீரர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.
சீனக்குடா விமானப்படை பயிற்சி முகாமில் பயிற்சிக்காக பயன்படுத்தப்பட்ட GT6 ரக இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி மற்றும் விமானப்படை பொறியியலாளர் உயிரிழந்துள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் விமானி தரிந்து ஹேரத் மற்றும் பொறியியலாளர் மதுசங்க வர்ணகுலசூரிய ஆகியோரோ இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.இலகுரக விமானம் ஓடுபாதையில் இருந்து சற்று உயரத்தில் இருந்த போது திடீரென விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளதாக விமானப்படையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட மூன்று நிமிடங்களில் விமானம் விபத்துக்குள்ளானதாகவும் அந்த மூத்த அதிகாரி கூறியுள்ளார். இந்த இலகுரக விமானம் சோதனை நோக்கத்திற்காக பறக்கவிடப்பட்டதாகவும்,
விமானப்படை வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.குறித்த விமானம் ஓடுபாதையில் விழுந்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சீனக்குடா பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
வாதுவ கல்லூரி வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று (07.08.2023) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக வாதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர் வாதுவ, தல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் என கூறப்படுகின்றது. குறித்த இளைஞன் வாத்துவ பாடசாலை பகுதியிலிருந்து வாதுவ நோக்கி மோட்டார் சைக்கிளை செலுத்தியுள்ளார்.
இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி 25 மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு சுவரில் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.