போதைப்பொருள் கடத்தல்காரரான கயானி தில்ருக்ஷியின் வீட்டை பறிமுதல் செய்யும் நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.போதைப்பொருள் கடத்தல் காரணமாக தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள குடு கயானி என்ற பெண்ணின் வீடே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வு பிரிவின் மோசடி விசாரணை பிரிவினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.2019 ஆம் ஆண்டு முதல் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தில் அவர் இந்த வீட்டைக் கட்டியுள்ளார்.கட்டப்பட்ட வீட்டின் மதிப்பு சுமார் 5 கோடி ரூபாய் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், வீடு கட்டுவதற்கு பணம் எப்படி கிடைத்தது என்பதை தெரிவிக்க அந்த பெண்ணால் முடியாமல் போனதால் விசாரணை அதிகாரிகள் வீட்டை பறிமுதல் செய்துள்ளனர்.குறிப்பிட்டுள்ளனர்.
யாழ்ப்பாண கலைஞர்களின் கூட்டு படைப்பாக வெளிவந்துள்ள ஆலங்குருவியே பாடல் தற்போது சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
பல அரச தேசிய விருதுகளுக்கு சொந்தக்காரரான அருள்செல்வம் இயக்கியுள்ளார். இவரது ஏனைய படைப்புக்களை போலவே இந்த பாடலும் தனித்துவமான வரவேற்பினை பெற்றுவருகின்றது.
பாடலுக்கான இசையை ஸ்ரீவிஜய் ராகவன் கோர்த்துள்ளதுடன் பாடல் வரிகளையும் அவரே எழுதியுள்ளார் . அழகிய மயக்கும் மெட்டுக்கு பாடல்வரிகளை கோர்வையாக எழுதியுள்ளது சிறப்பானது
படப்பிடிப்பு தளம் யாழ்ப்பாணம்; கலாசார தன்மை மிளிரும் மண்ணை வெகு சிறப்பாக படம்பிடித்து அசத்தியுள்ளார் பன்முகத்திறமையாளர் அருள்செல்வம் பாடலை படத்தொகுப்பு செய்தவரும் அவர்தான், நடிகர்களான லஜந்தா குணாளன் , கிறிஸ்டினா கிரேஸ், சோபிதன், டருன் ஆகியோரும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
நமது மண் வாசனையுடன் இணைந்த இந்த பாடல் மற்றும்திறைமையான நம் கலைஞர்களின் அத்தனை முயற்சியும் வெற்றிபெற நமது வாழ்த்துகள்.
இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவியை ஏமாற்றி விட்டு கள்ளக்காதலி உடன் உல்லாசமாக இருந்து வரும் போலீஸ்காரர் மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க பெண் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டம் தெற்கு காந்தி கிராமம் பகுதியில் வசித்து வரும் லதா (32). இவர் சரவணன் (33) என்பவரை காதலித்து வந்தனர். கடந்த 2012ம் ஆண்டு பெண்ணின் தாயார் ஒப்புதலுடன் கரூர் தான்தோன்றி மலையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் சந்தோஷமாக வாழ்ந்த நிலையில், கடந்த 2014ம் ஆண்டு காவல்துறையில் வேலை கிடைத்தது. காவலர் பயிற்சி முடிந்து, அவர் திருச்சியில் உள்ள ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வந்தார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்த போது, அருகில் உள்ள அம்மா உணவகத்தில் பணிபுரிந்து வந்த சுபாஷினி (45 ) என்பவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.
அப்போது முதல் ஆறு வருட காலமாக லதா, சரவணன் தம்பதியினருக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. இது குறித்து பல்வேறு காவல்துறை அதிகாரிடம் புகார் அளித்து முறையாக நடவடிக்கை எடுக்காத நிலையில், கரூர் ஆயுதப்படையில் கடந்த 8 மாதங்களாக பணியாற்றி வருகிறார்.
தன்னை ஏமாற்றும் கணவர் ஒரு போலீஸ் என்பதால் காவல்துறை அதிகாரிகள் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதோடு, ஆதரவற்று நிற்கதியாய் நிற்கும் தன்னை மிரட்டி வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.
தனக்கும், தனது குழந்தைகளுக்கும் நியாயம் கிடைக்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை என பாதிக்கப்பட்ட பெண் லதா கதறியுள்ளார்.
நேற்று கூட தனது கணவர் கள்ளக்காதலி சுபாஷினி தூண்டுதலின் பேரில், குடிபோதையில் வந்து கன்னத்தில், அடித்ததில், ஏற்கனவே ஆறு மாதங்களாக வலது பகுதியில் உள்ள காது கேட்காத நிலையில், தற்போது இரண்டு காதுகளும் கேட்கவில்லை என தெரிவித்தார்.
தனது இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு சிரமப்பட்டு வரும் லதா தனக்கு நியாயம் கேட்டு கரூர் தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் கணவனை மீட்டுத் தரக்கோரி புகார் அளித்தார்.
வாழ்க்கையை சீரழித்த தனது கணவர் சரவணன் ஒரு போலீஸ் என்பதால் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியுள்ளனர். பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் நியாயம் கேட்டு இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லதா புகார் அளித்துள்ளார்.
சந்தோசமாக இருந்த சரவணன் குடும்ப வாழ்வில் கள்ளக்காதல் என்ற சுனாமி புயல் வீசத் தொடங்கியது. இதனால், மகிழ்ச்சியாக இருந்த இவர்கள் குடும்பம் இன்று சின்னாபின்னமாக மாறிவிட்டது. இதனிடையே, லதாவும், கணவரின் கள்ளக்காதலியான சுபாஷினியும் உரையாடிய ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது.
சென்னை மதுரவாயலை அடுத்துள்ளது புளியம்பேடு. இங்கு வசித்து வரும் ஹரி என்ற நபர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி செல்வி என்ற மனைவியும், 23 வயதில் பூவரசன் என்ற மகனும் உள்ளனர். இதில் மகன் பூவரசன், ராமாபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த சூழலில் நேற்றைய முன்தினம் தந்தை ஹரி வழக்கம்போல் தனது பணி நிமித்தமாக வெளியே சென்றிருந்தார். எனவே இரவு நேரத்தில் தாய் மற்றும் மகன் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர்.
மறுநாள் காலையில் கணவர் ஹரி வீட்டின் கதவை பலமுறை தட்டியும் திறக்கப்படவில்லை. மகன் மற்றும் மனைவிக்கு போன் செய்தும் அது எடுக்கப்படவில்லை.
இதனால் பயந்துபோன ஹரி, அக்கம்பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கே மகனும் மனைவியும் இரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஹரி, உடனடியாக ஆம்புலன்ஸ் உதவியோடு மருத்துவமனைக்கு இருவரையும் கொண்டு சென்றார். அங்கே இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் மகன் பூவரசன் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.
தொடர்ந்து மனைவி செல்விக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது வீட்டில் இருந்து இரத்த கறையோடு இரும்பு கம்பியை மீட்டனர்.
பின்னர் மயக்க நிலையில் இருந்து கண் விழித்த செல்வியிடம் விசாரிக்கையில், தான்தான் தனது மகனை இரும்பு கம்பியால் அடித்து கொன்றதாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்தார்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் செல்வி, கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்ததும், இதனாலே மகனை அடித்து கொன்றதும், கொலை செய்த பின்னர் தனது தலையில் தானே தாக்கி கொண்டதில் மயக்கம் அடைந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லிந்துலையில் இளம் தாய் ஒருவர் தனது ஒரு வயது மகளுடன் தெப்பக்குளத்தில் குதித்து உயிர்மாய்த்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை லோகி தோட்டத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் தாயொருவரே இவ்வாறு உயிரை மாய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரின் சடலம் இன்று (23.08.2023) காலை மீட்கப்பட்டுள்ள நிலையில் அவரின் ஒரு வயது குழந்தைக்கு என்ன நடந்தது என்பது இன்னும் தெரியாமல் உள்ளது. குழந்தையின் சடலம் கிடைக்கப்பெறாததை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அத்தோடு அவர் ஐந்து பக்கத்தில் கடிதமொன்றையும் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம்(23) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (23.08.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 329.86 ரூபாவாகவும், கொள்வனவு விலை 317.46 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 245.19 ரூபாவாகவும், கொள்வனவு விலை 233.07 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 359.96 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 343.29 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 421.76 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 403.46 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அலவத்துகொட, உல்லேகடை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய திருமணமான பெண், ஐந்து மாதங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் 10ஆம் திகதி, பெண் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு, நெல் வயல் ஒன்றில் புதைத்த சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்ட அலவத்துகொட பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அந்தப் பெண்ணின் கணவரை நேற்று கைது செய்துள்ளனர்.
தனுகா மதுவந்தி என்ற 26 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.இக்கொலை தொடர்பில் கிடைத்த தடயங்களுக்கமைய, பொலிஸ் உத்தியோகபூர்வ மோப்ப நாயின் உதவியுடன் வீடொன்றில் இருந்த திருமணமான ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இருந்த போதிலும், சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு ஏற்பட்ட சந்தேகத்திற்கமைய, மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் உயிரிழந்த பெண்ணின் கணவரை கைது செய்துள்ளனர்.கொலை செய்யப்பட்ட பெண்ணின் ஆடைகள் அகற்றப்பட்டு உடல் வயலில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
எப்படியிருப்பினும் மரபணு மற்றும் தடயவியல் அறிக்கைகளுக்கமைய, அவர் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.இதனால் விசாரணையை தவறாக வழிநடத்தும் வகையில் அவரது ஆடைகள் கழற்றப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதுதவிர, சம்பவத்தன்று, அருகில் உள்ள மரண வீட்டிற்கு சென்றதாகக் கூறப்படும் சந்தேக நபர் சுமார் ஒரு மணித்தியாலம் காணாமல் போயிருந்த நிலையில், வீட்டின் சமையலறையில் இருந்த மின்விளக்கு எரியாமல் இருந்தது. அத்துடன் சம்பவத்தின் போது வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் குறைக்காமல் இருந்தது.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் வீட்டில் இருந்து 100 மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது. அதற்கமைய, கணவர் தொடர்பில் பல சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்து சில மீற்றர் தூரத்தில் தான் நடத்தும் கடையை மூடிவிட்டு முச்சக்கர வண்டியில் வீட்டுக்குச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யச் சென்ற போது அவரது நடத்தையில் காணப்பட்ட மாற்றங்களும் அவரை சந்தேகிக்க வைத்துள்ளது.கைது செய்யப்பட்டுள்ள உயிரிழந்த பெண்ணின் கணவரான 27 வயதுடைய சந்தேக நபர் இன்று (23.08.2023) கண்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
பதுளை – ஹாலி எல, உனுகொல்ல வீதியில் லொறியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லொறியில் பயணித்த மூவர் காயமடைந்துள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்று (23.08.2023) காலை இடம்பெற்ற இந்த வீதி விபத்தில் காயமடைந்த மூவரும் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹாலிஎலயில் இருந்து உனுகொல்ல பிரதேசத்திற்கு பால் சேகரிப்பதற்காக சென்ற லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.சாரதியால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதே விபத்துக்கான காரணம் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பில் ஹாலிஎல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ருவான் குணதிலக்கவின் பணிப்புரையின் பேரில், போக்குவரத்துப் பிரிவினரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஹாலிஎல பொலிஸார் கூறியுள்ளனர்.
குருந்தூர் மலை தொல்பொருட் திணைக்களத்திற்கானது. அதனை பௌத்த சமயத்தவர் மட்டும் உரிமை கொண்டாட முடியாது. இந்த நாட்டில் அனைவருக்கும் வழிபடும் சுதந்திரம் உண்டு.
அதற்கு தொல்பொருள் திணைக்களம் அனுமதிக்க வேண்டும் என வடக்கு கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கர் சியம்பலாகஸ்வெவ விமலசார தேரர் தலைமையில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவிற்கு வருகை தந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரங்கே பண்டார அவர்கள் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மகஜர் ஒன்று வழங்கப்பட்டது.
குறித்த மகஜரை வடக்கு கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கர் சியம்பலாகஸ்வெவ விமலசாரநாயக்க தேரர் தலைமையில் தேசிய ஒற்றுமைக்கான சர்வமத மக்கள் ஒன்றியம் மற்றும் இந்து பௌத்த சங்கத்தினர் இணைந்து நேற்றைய தினம் (21.08) கையளித்தனர்.
குறித்த மகஜரிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குருந்தூர் மலை உள்ளிட்ட தொல்பொருட் திணைக்களத்திற்குட்பட்ட பிரதேசங்களை தொல்பொருட் திணைக்களம் பாதுகாக்க வேண்டும். தொல்பொருட் திணைக்களத்தின் பிரதேசங்களை பௌத்த சமயம் மட்டும் உரிமை கொண்டாட முடியாது.
தொல்பொருட் திணைக்களம் இந்த நாட்டிற்கானது. அது அனைத்து மக்களுக்கும் நம்பிக்கையை தரும் விதமாக செயற்பட வேண்டும். தொல்பொருட் பிரதேசங்களிற்கு செல்வதற்கும், வழிபடுவதற்கும் பௌத்த சமயத்திற்கு மட்டும் அனுமதி வழங்காது இந்த நாட்டில் வாழும் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ சமயத்தவர்களுக்கும் வழிபடுவதற்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும். இது தொடர்பில் ஜனாதிபதியும், அரசாங்கமும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவ்ஜீத் ஜும்மா பள்ளிவாசல் மெளலவி சதுர்தீன் மெளலவி, ஓமந்தை பங்கு தந்தை ஜெஸ்லீ ஜெகநாதன், கணேசபுரம் கருமாரி நாகபூசணி அம்மன் ஆலய பிரதம குரு பிரமசிறி பூ.முகுந்தன் சர்மா உட்பட சர்வமத மக்கள் ஒன்றியம் மற்றும் இந்து பௌத்த மக்கள் ஒன்றிய பிரதிநதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டியக் கலையை அனைவருக்கும் சேர்க்க முயற்சி செய்து வருவதாக கூறும் இலங்கையரான ஜெயந்தி யோகராஜா லண்டனில் தமது நாட்டியப் பாடசாலையில் பல நாட்டு மாணவர்களுக்கு நாட்டியக்கலையை பயிற்றுவிக்கிறார்.
இலங்கையில் பிறந்து தற்போது லண்டனில் குடியிருந்து வரும் ஜெயந்தி யோகராஜா பரத நாட்டியத்தை மூன்று வயதில் கற்கத் தொடங்கி, 13 வயதில் இலங்கை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வீரசிங்கம் மண்டபத்தில் அரங்கேற்றம் நடத்தியுள்ளார்.
நுண்கலையில் முனைவர் பட்டம் பெற்றுள்ள ஜெயந்தி யோகராஜா வீணை, வயலின் உள்ளிட்ட இசைக்கருவிகளையும் வாசிக்கும் திறமை பெற்றவர். மட்டுமின்றி, லண்டனில் உள்ள சலங்கை நர்த்தனாலயா அகாடமியின் இயக்குநராகவும், கிரிபின் கல்லூரி நடனத்துறை தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.
அத்துடன் நெதர்லாந்து, ஜேர்மனியில் உள்ள பாடசாலைகளில் நாட்டிய ஆசிரியராக பணியாற்றியுள்ளார். லண்டன் மட்டுமின்றி, நெதர்லாந்து, ஜேர்மனி ஆகிய நாடுகளிலும் நாட்டியப்பள்ளி நடத்தி வருகிறார்.
அங்குள்ள பாடசாலைகளில் முன்னாள் மாணவர்களை நடன ஆசிரியர்களாக நியமித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 2019ல் நடன நிகழ்ச்சியும், 2023ல் லண்டனில் சரஸ்வதம் பிரவாஹம் நாட்டிய நிகழ்ச்சியையும் நடத்தியுள்ளார்.
மட்டுமின்றி, இதுபோன்ற நிகழ்ச்சிகளால் நாட்டியக் கலையை அனைவருக்கும் சேர்க்க முயற்சி செய்து கொண்டிருப்பதாக ஜெயந்தி யோகராஜா தெரிவித்துள்ளார். மேலும், லண்டனில் உள்ள புகழ்பெற்ற அறிவியல் அருங்காட்சியகத்தில் பல ஆங்கிலேயர்களுக்கு நடனம் கற்றுக் கொடுத்ததையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டியக்கலை தொடர்பில் இரண்டு புத்தகங்களை வெளியிட்டுள்ள அவர், பல மொழிகளில் அந்த நூல்கள் இருப்பதால் உலகளாவிய ஆதரவு கிடைப்பதாகவும், மாணவர்கள் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய மாநிலம் ராஜஸ்தானில் அகில இந்திய நாட்டிய சங்கத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றுள்ள இவர் இதுவரை 30-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.
கடையநல்லூர் அருகே இளம்பெண்ணை கொன்று உடலை கிணற்றில் வீசிய இன்ஸ்டாகிராம் காதலன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே வலசை கிராமத்தில் கிணற்றில் கடந்த 10ம் தேதி சாக்குப்பையில் கட்டப்பட்டு அழுகிய நிலையில் இளம்பெண் உடல் மீட்கப்பட்டது.
கடையநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து இளம்பெண் யார்? அவரை கொன்று வீசியது யார்? என விசாரணை நடத்தினர். பெண்ணின் முகம் முழுவதும் சிதிலமடைந்து காணப்பட்ட நிலையில், கையில் பச்சை குத்தப்பட்டிருந்த எம்.வி என்ற எழுத்தை அடையாளமாக வைத்து தமிழகம் முழுவதும் உள்ள காவல்நிலையங்களில் காணாமல்போன இளம்பெண் குறித்து விசாரித்தனர்.
இதில் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை காவல்நிலையத்தில் வினோதினி என்பவர் மாயமானதாக புகார் பதிவாகி இருந்தது. இதையடுத்து அம்மாவட்ட போலீசாரை தொடர்பு கொண்டு காணாமல் போன இளம்பெண்ணின் அங்க அடையாளங்கள் குறித்து விசாரித்தனர்.
இதில் மீட்கப்பட்ட இளம்பெண் பிணம், வினோதினிதான் என்பது உறுதி செய்யப்பட்டது. வினோதினியின் செல்போனில் கடைசியாக தொடர்பு கொண்ட நபர்கள் குறித்து விசாரித்தபோது, வலசையை சேர்ந்த மனோரஞ்சித் என்ற வாலிபர் பேசியது தெரிய வந்தது.
அவரை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது மனோரஞ்சித், வினோதினியை கொலை செய்தது தெரிந்தது. அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது: எனக்கும், வினோதினிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
நான், அவரை தீவிரமாக காதலித்து வந்தேன். ஆனால் வினோதினி, வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் என்னுடனான தொடர்பை கைவிடவில்லை. இதனால் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். வினோதினி அவ்வப்போது என்னை சந்திப்பதற்காக வலசை வந்து செல்வார்.
இந்நிலையில் சமூக வலைதளங்கள் மூலம் வினோதினிக்கு மேலும் சில இளைஞர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. இதுபற்றி நான் கேட்கவே, “என் மீது நம்பிக்கை இல்லையா?, நான் அப்படி எல்லாம் கிடையாது, உனக்கு நான் உண்மையாக உள்ளேன்’ என்று கூறி சமாதானம் செய்தார்.
கடந்த 7ம் தேதி வினோதினியை ஊருக்கு அழைத்தேன். அவரும் வந்தார். வலசை காட்டுப்பகுதியில் அவருடன் பேசிக் கொண்டிருந்தபோது அவரது நடத்தையில் சந்தேகப்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டேன்.
அப்போது வினோதினி, “என்னை நம்பவில்லை என்றால் நீயே என்னை கொன்றுவிடு’ என எதார்த்தமாக கூறினார். ஆத்திரத்தில் இருந்த நான், அருகே இருந்த கட்டையை எடுத்து வினோதினியின் தலையில் பலமாக தாக்கினேன்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து இறந்தார். இதனால் நண்பர்களான மகாபிரபு, பரத், மணிகண்டன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை செல்போனில் அழைத்து அனைவரும் சேர்ந்து சாக்குப்பையில் வினோதினி உடலை கட்டி கிணற்றில் வீசினோம்.
இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து மனோரஞ்சித் மற்றும் உடந்தையாக இருந்த நண்பர்கள் என 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம், தாவணகெரேயில் உள்ள ஹலேகல்லு கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் யோகேஷ். இவருக்கு வயது , 37. இவருடைய மனைவி பிரதிபா. மகன் யஷ்.மூவரும் அமெரிக்காவில் பால்டிமோரில் வசித்து வந்தனர்.
யோகேஷ் அமெரிக்காவில் இன் ஜினியராக பணிபுரிந்து வருகிறார். ஆகஸ்ட் 15ம் தேதி முதல் யோகேஷ் வீட்டில் இருந்து யாரும் வெளியில் வரவில்லை. இதனையடுத்து ஆகஸ்ட் 18ம் தேதி பக்கத்து வீட்டுக்காரரான பால்டிமோர் காவல்துறைக்கு தகவல் அளித்தார்.
அவர்கள் வந்து பார்த்த போது மூவரும் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் யோகேஷ் மனைவி, மகனை சுட்டு கொலை செய்து விட்டு தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து மாகாண காவல் துறையின் செய்தித் தொடா்பாளா் ஆன்டனி ஷெல்டன் கூறியதாவது, உயிரிழந்தவா்களின் உடலில் துப்பாக்கிக் குண்டு காயங்கள் உள்ளன. யோகஷ், முதலில் தனது மனைவியையும் மகனையும் துப்பாக்கியால் சுட்ட பிறகு, தற்கொலை செய்துகொண்டாா் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவத்தால் அருகில் மக்களின் உயிருக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை என்றார். கா்நாடகத்தின் தாவண்கரே மாவட்டத்தில் உள்ள ஹல்லேகல்லு கிராமத்தைச் சேர்ந்த யோகேஷ், கடந்த 9 ஆண்டுகளாக அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இச்சம்பவம் குறித்து அமெரிக்காவில் உள்ள யோகேஷின் சகோதரருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.சம்பவம் நடைபெற்று மூன்று நாள்களாகிவிட்ட நிலையில், உயிரிழந்த மூவரின் உடல்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என யோகேஷின் தாயார் ஷோபா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்களை துப்பாக்கி சூட்டுக்கு பறிகொடுத்து வரும் வல்லரசு நாடான அமெரிக்கா, துப்பாக்கி கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது.
அந்த அளவுக்கு அமெரிக்காவில் துப்பாக்கி பயன்பாடு, ஒரு மிக பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. அமெரிக்காவில் ஒரு நாளைக்கு சராசரியாக 53 பேர் துப்பாக்கிச்சூட்டில் பலியாவதாக அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
கண்டியில் இரண்டு வருடங்களாக தாய் மற்றும் தந்தை வழி உறவினர்கள் குழுவினால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட 15 வயது மாணவியொருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
குறித்த சிறுமி எதிர்கொண்ட ஆபத்தான நிலைமை தொடர்பில் கண்டி பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கண்டி அருப்பொல பகுதியைச் சேர்ந்த இந்த சிறுமி 13 வயது முதல் பாலியல் சித்திரவதைக்குள்ளாகியுள்ளதாக அவரது வாக்குமூலங்களின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவரது அத்தைகளில் ஒருவரின் தலையீட்டில் இந்த குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 10 பேர் அடையாளம் காணப்பட்டதுடன் அவர்களில் 09 பேர் குடும்ப உறுப்பினர்களாகும். இந்த 10 பேரில் ஒருவர் குடும்ப உறுப்பினர் அல்லாத திருமணமான ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மாணவி வீட்டில் இருந்து காணாமல் போனதாக அவரது பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் விசாரணை நடத்தி மாணவியை உறவினர் வீட்டில் கண்டுபிடித்துள்ளனர்.
மேலதிக விசாரணையில் இந்த மாணவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அனைத்து தகவல்களையும் பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர்.
தற்போது, பொலிஸார் அவரை மருத்துவரிடம் ஒப்படைத்து அறிக்கை பெற்றுள்ளனர்.அந்த அறிக்கையின்படி, இந்த மாணவி எப்படி பல சந்தர்ப்பங்களில் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இலங்கையில் சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
உலகச் சந்தையில் ஏற்பட்டிருந்த விலை அதிகரிப்புக்கு அமைவாக கடந்த மாதமே சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவிருந்தது. எனினும் இறுதி நேரத்தில் இந்த விலையேற்றம் கைவிடப்பட்ட நிலையில் இம்மாதம் அதனை அதிகரிக்கும் எண்ணத்தில் லிட்ரோ நிறுவனம் இருப்பதாக தெரியவந்துள்ளது.
அதற்கமைய இந்த விலை உயர்வு உள்ளூர் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலை இந்த மாதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை கடந்த மாதம் 4ஆம் திகதியளவில், 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 204 ரூபாவால் குறைக்கப்பட்டு 2982 ரூபாயாக அறிவிக்கப்பட்டது.
அதேபோல் 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 83 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 1198 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் எரிவாயு விலை அதிகரிக்கப்படுகின்றமையானது மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கம்பஹா பகுதியில் உள்ள தொடருந்து நிலைய முகாமையாளர் மற்றும் பயணச்சீட்டு பரிசோதிக்கும் அதிகாரிக்கு எதிராக பெண் ஒருவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.இளம் தாயும் அவரது 11 வயது மகளும் கம்பஹா தொடருந்து நிலையத்தில் இறங்கியுள்ளனர்.
வாசலில் இருந்த தொடருந்து பயணச்சீட்டு சோதனை அதிகாரி, பயணச்சீட்டைக் கேட்டபோது வழங்குவதற்கு சற்று தாமதமாகியுள்ளது. இதனால் பயணிகள் முன்னிலையில் அவமானகரமான முறையில் பகிரங்கமாகத் திட்டியுள்ளார்.
இது குறித்து தொடருந்து நிலைய தலைமை அதிகாரியிடம் முறைப்பாடு செய்ய சென்றபோது, அவரும் தன்னை இதேபோல் பகிரங்கமாக திட்டிவிட்டு, மீண்டும் நிலையத்திற்கு வர கூடாதென மிரட்டியதாக பொலிஸாரிடம் குறித்த பெண் முறைப்பாடு செய்துள்ளார்.
தலைமை அதிகாரி தனது கையடக்கத் தொலைபேசியில் தன்னைப் புகைப்படம் எடுத்ததாகவும், சம்பவத்தை தனது கையடக்கத் தொலைபேசியில் வீடியோவாக எடுத்ததாகவும் அந்தப் பெண் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் உயர்நிலைப் பாடசாலையின்போது தேசிய மாணவர்ப் படையில் சிங்கப்பூர் ஆயுதப் படையைப் பற்றி கற்றுக்கொண்ட ‘லெஃப்டினன்ட்’ யுகராஜ் கார்த்திக், தற்போது 24 வயதில் ஒரு போர்விமானியாகச் செயல்பட்டு வருகின்றார்.
ஜனாதிபதி மாளிகையில் ஒகஸ்ட் 14ஆம் திகதியன்று சிங்கப்பூர் ஆயுதப்படையின் கல்விமான் விருது பெற்ற 97 பேரில் திரு யுகராஜும் ஒருவர். ஆக உயரிய கல்வி விருதான அதிபர் கல்விமான் விருதிற்கு அடுத்த நிலையிலான விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
யுகராஜ் தந்தை ‘செட்ஸ்’ நிறுவனப் பணிமனை ஊழியர், தாயார் இல்லத்தரசி மற்றும் யுகராஜுக்கு ஓர் அக்காவும் இருக்கிறார். சிறு வயதிலிருந்தே யுகராஜ் விமானத்தைப் பறக்கவேண்டும் என ஆசைப்பட்டுள்ளார்.
உயர்ந்த நோக்குடன் சேவையாற்றவேண்டும் என்ற சிங்கப்பூர்க் குடியரசு ஆகாயப்படையின் கொள்கை தம்மைக் கவர்ந்திருந்ததாகவும் இவர் தெரிவித்தார்.
15 வயதில் மாணவர்ப் படையில் இருந்தபோது சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படையினரை முதன்முதலாகச் சந்தித்து போர் விமானத்தில் பயணம் செய்த அனுபவம் மறக்க முடியாதது என்றார்.“ஃபோக்கர்-50 என்ற விமானத்தில் நானும் சில மாணவர்களும் பயணம் செய்தோம்.
விமானத்திலிருந்து நகரக் காட்சிகளைக் காணும்போது என் சிறுவயது கனவு புதிய பரிமாணத்தைப் பெற்றது. அந்த அனுபவம் என் மனதில் ஆழப் பதிந்தது,” யுகராஜ் தெரிவித்துள்ளார். தொடக்கக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதுதான் போர் விமானியாகும் லட்சியத்தை உறுதிப்படுத்தியதாக யுகராஜ் கூறினார்.
தேசிய சேவையின் அடிப்படை ராணுவப் பயிற்சிக்குப் பிறகு ஆள்சேர்ப்பு அதிகாரி ஒருவர், சிங்கப்பூர் ஆயுதப் படையிலும் சிங்கப்பூர்க் குடியரசு ஆகாயப்படையிலும் உள்ள மானிய வாய்ப்புகளைப் பற்றி பகிர்ந்தபோது யுகராஜ், தமது லட்சியத்தை நிறைவேற்ற எண்ணி விண்ணப்ப விவரங்களைப் பெற்றுக்கொண்டார்.
அதிகாரி பயிற்சிப் பாடசாலையில் சேர்வதற்கு முன் விமானி ஆவதற்கான தகுதியை அளவிடும் சோதனைகளை வெற்றிகரமாக முடித்துக்கொண்டார். ஆயுதப்படை அதிகாரியாகத் தகுதிபெற்ற பிறகு இவர் ஆஸ்திரேலியாவிலும் கனடாவிலும் பயிற்சி மேற்கொண்டார்.
விமானியாகத் தகுதிபெறுவது கடினம் என்றாலும் எந்தெந்த அம்சங்கள் தன் கட்டுப்பாட்டில் உள்ளனவோ அவற்றின் மீது கவனம் செலுத்தியதாக இந்த இளையர் கூறினார்.“விமானப் பயணத்திற்கான தயாரிப்புப் பணிகளை இயன்ற அளவு சிறப்பாகச் செய்து, சிரத்தை எடுத்துப் படித்து பயிற்றுவிப்பாளர்களிடம் வழிகாட்டுதலைப் பெற்று என் சந்தேகங்களை தீர்த்துக்கொள்வேன்,” என்றார் யுகராஜ்.
பிரித்தானியாவின் சவுத்ஹேம்ப்ட்டன் பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியல் துறையில் வரும் செப்டம்பர் மாதம் படிப்பைத் தொடங்கவிருக்கும் யுகராஜ், வெளிநாட்டுக் கல்விக்கான வாய்ப்பை நல்கிய இந்த விருதை நினைத்து நன்றியுணர்வுடன் இருப்பதாகக் கூறினார்.இந்தக் கல்வி வாய்ப்பைப் பயன்படுத்தி ஆயுதப்படையில் பணியாற்றும் சேவையாளர்களின் மீது நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறார் யுகராஜ்.
எதிர்காலத்தில் போர்விமானியாக விரும்புவோர், சிங்கப்பூர்க் குடியரசு ஆகாயப்படையைப் பற்றி நன்கு படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றார் யுகராஜ்.எந்த வேலையாக இருந்தாலும் கவனத்துடன் செய்யுமாறு அறிவுறுத்தும் யுகராஜ், இலக்கை அடையும் வழியில் பின்னடைவுகள் ஏற்பட்டாலும் உறுதியுடன் போராடி வெல்லவேண்டும் என்றார்.
தேசிய மாணவர்ப் படையில் இணைவதுடன் இளம் விமானிகள் சங்கம் போன்ற அமைப்புகளை நாடி விமானியாக விரும்பும் இளையர்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்றார் இளையர் யுகராஜ்.