இலங்கையில் விபரீதமாக முடிந்த காதலர்களின் முதல் சந்திப்பு : தீயில் அழிந்த 3 ஏக்கர் காட்டுப் பகுதி!!

இலங்கையின் குருநாகல் பகுதியில் உள்ள அத்துகல காட்டுக்கு தீ வைத்த சம்பவத்தில் காதல் ஜோடி ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இலங்கையில் குருநாகல் காட்டுப்பகுதியில் உள்ள புத்தர் சிலையை தரிசிப்பதற்காக காதல் ஜோடி ஒன்று அதுகல மலை உச்சிக்கு நேற்று காலை சென்றுள்ளனர்.

இந்த காதல் ஜோடிக்கு இது முதல் சந்திப்பு என கூறப்படும் நிலையில், இளைஞனின் சட்டை பையில் தீப்பெட்டி இருப்பதை பார்த்த இளம்பெண் அது குறித்து கேட்டுள்ளார்.

மேலும் அதிலிருந்த இரண்டு தீ குச்சிகளை கொளுத்தி இளம்பெண் காட்டுப் பகுதிக்குள் வீசியதாக கூறப்படுகிறது. இதனால் அதுகல மலையின் காட்டுப் பகுதியில் தீ பரவியதை தொடர்ந்து காதல் ஜோடி அங்கிருந்து தப்பியோடியுள்ளது.

இதையடுத்து காதல் ஜோடியை மடக்கி பிடித்த பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் 24 மற்றும் 20 வயதுடைய மாத்தளை மற்றும் மஹவ பகுதிகளை சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.

மாநகர சபை ஊழியர்களின் உதவியுடன் பொலிஸார் காட்டுத் தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் இந்த காட்டுத்தீ விபத்தில் கிட்டத்தட்ட 3 ஏக்கர் பகுதி அழிவடைந்ததாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் தடுப்பூசியால் பதிவான மற்றுமொரு மரணம் : அதிர்ச்சியில் பெற்றோர்!!

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தடுப்பூசி வழங்கப்பட்டதன் காரணமாக சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுவனே இந்த துரதிஷ்டவசமான சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

தடுப்பூசிகள் வழங்கப்பட்டதன் பின்னர் சிறுவனின் உடல்நிலையில் பல பிரச்சினைகளை ஏற்பட்டதாக சிறுவனின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

களனி திப்பிட்டிகொட பிரதேசத்தைச் சேர்ந்த 6 வயதுடைய தெனுஜ சஸ்மிர நாணயக்கார என்ற சிறுவன், கடந்த 9ஆம் திகதி கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

முழங்காலில் ஏற்பட்ட காயம் மற்றும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் 6 நாட்களாக பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதிலும் குணமடையவில்லை.

அவரது நோயைக் கண்டறிய முடியவில்லை என்று பெற்றோர்கள் கூறுகின்றனர். ஆனால், சிறுவனின் உடல்நிலை மோசமடைந்து, மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகக் கூறி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்கள் அவரை ஒரு இயந்திரத்துடன் இணைக்க முயன்றுள்ளனர், ஆனால் சுயநினைவு திரும்பாத தெனுஜ, துரதிர்ஷ்டவசமாக தீவிர சிகிச்சை பிரிவில் இறந்துள்ளார்.

இதன் பின்னர் சிறுவனின் நுரையீரல் சுருங்கிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உடல்நிலை மோசமடைந்த சிறுவனுக்கு 3 தடுப்பூசிகளை மருத்துவர்கள் செலுத்தியதாக பெற்றோர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பில், கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரியவிடம் கேட்ட போது, ​​குறித்த சிறுவன் காச நோயினால் உயிரிழந்துள்ளதாகவும், வழங்கப்பட்ட தடுப்பூசி காரணம் அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

யாழில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழப்பு!!

நெல்லியடி – கொடிகாமம் வீதியில் கலிகை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டையிழந்து,

பாலத்துக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று (20.08.2023) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக உள்ள உணவகம் ஒன்றைச் சேர்ந்த செல்வநாயகம் வின்சன் மனோஜ்குமார் (வயது 31), கரவெட்டி வதிரியைச் சேர்ந்த விஜயகாந்த் நிசாந்தன் (வயது 29) ஆகிய இருவரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

குழந்தைகளுக்கு பிஸ்கட் வாங்க கூட காசு இல்லை: மறைந்த நகைச்சுவை நடிகரின் மனைவி கதறல்!!

நடிகர் பவுன்ராஜ்..

மாரடைப்பினால் உயிரிழந்த பிரபல நடிகரின் பவுன்ராஜின் மனைவி தனது குழந்தைக்கு பிஸ்கட் கூட வாங்கிக்கொடுக்க முடியாமல் கஷ்டப்படுவதாக கூறியுள்ளார்.நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் கொமடி நடிகராக வலம்வந்தவர் தான் நடிகர் பவுன்ராஜ்.

மறைந்த நடிகர் பவுன்ராஜ் பொன்ராமின் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த இவரை பிரபலமாக்கியது என்றால் ரஜினி முருகன் திரைப்படத்தில் உள்ள வாழைப்பழ கொமடி தான்.

இப்படத்தில், “மதுரைக்காரனுக்கு கையே கத்தி விரலே வீச்சிடா என்ற வசனத்தை பேசியிருந்தார்.இவர் கடந்த 2021ம் ஆண்டில் எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது அந்த குழந்தைகளுக்கு பிஸ்கட் கூட வாங்க பணம் இல்லை என்று அவரது மனைவி நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், கணவர் இறந்த பின்பு குழந்தைகளுக்கு பால் வாங்க கூட பணம் இல்லை என்றும், வீட்டு வாடகையும் கொடுக்க முடியவில்லை என்று கண்ணீர் விட்டுள்ளார்.யூ

டியூபர் ஒருவர் தனது முகத்தை வெளியே காட்டாமல் ஹெல்மெட் அணிந்து உதவி செய்து வரும் நிலையில், அவரிடம் பவுன்ராஜின் மனைவி உதவி கேட்டுள்ளார்.தற்போது குறித்த நபர் செய்த உதவியால் சிறிய கடை ஒன்றினை வைத்து தங்களை பார்த்துக் கொள்வதாகவும், குறித்த நபருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

நான்கு ஏ சித்திகளை பெற்ற பல்கலைக்கழக மாணவனின் விபரீத முடிவு!!

கிளிநொச்சியில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விவேகானந்தா நகர் 155 ஆம் கட்டை பகுதியில் வசிக்கும் சந்திரமேனன் தேனுஜன் (வயது 21) என்ற பல்கலைக்கழக மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் நேற்றைய தினம் (19.08.2023) தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், உயிரிழந்த மாணவன் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கணிதப்பிரிவில் கற்கும் மாணவன் என கூறப்படுகின்றது.

இந்நிலையில் உயிரிழந்த மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

முன்னாள் காதலியை கிணற்றில் தள்ளி கொலை : காதலனின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

விருதுநகரில்..


விருதுநகர் மாவட்டம் சிவகாசி சித்து ராஜபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் சுசீந்திரன். முதலில் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த இவர் தற்போது டிரேடிங் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஷீலாராணி . இவர்களுக்கு 10 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.இவரது மனைவி ஷீலா ராணி ஒப்பனை கலைஞராக பணிபுரிந்து வந்தார்.

சிவகாசி மேற்கு ரிசர்வ் லைன் பகுதியில் வசித்து வரும் ஷேக் முகமதுயாசின் ஆன்லைன் மூலமாக பொருட்களை விற்பனை செய்பவர். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் கிடையாது. 10 வருடங்களுக்கு முன்பு ஷீலாராணியும், சேக் முகமதுயாசினும் திருமணத்திற்கு முன்பாக சிவகாசி புது ரோட்டு தெருவில் உள்ள ஒரு ஜவுளி கடையில் ஒன்றாக பணிபுரிந்து வந்தனர்.

அப்போது முதல் இருவருக்கும் பழக்கம் தான். ஷேக் முகமது யாசின் வெளிநாட்டு வேலைக்கு சென்ற சமயத்தில் ஷீலாவுக்கு திருமணமாகிவிட்டது.மீண்டும் காதலை புதுப்பிக்கும் வகையில் இருவரும் தினசரி செல்போனில் பேச்சு தொடர்ந்தது. அதிகமாக கடன் இருந்து, பணத்தட்டுப்பாடு உள்ளதால் ஷீலா ராணியிடம், சேக் முகமதுயாசின் பண உதவி கேட்டுள்ளார்.

கடந்த 4 ம் தேதி வெள்ளிக்கிழமை ராதாகிருஷ்ணன் காலனி பகுதியில் ஒப்பனை பணிக்காக செல்வதாக கூறிவிட்டு ஷீலா ராணி சென்றுள்ளார். பணி முடிந்து ஷீலா ராணி வீடு திரும்பவில்லை.இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் சுசீந்திரன், தனது மனைவியை காணவில்லை என காவல் நிலையத்தில் 5ம் தேதி சனிக்கிழமை புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடர்ந்தனர்.ஷேக்முகமது யாசின் அளித்த வாக்குமூலத்தில், சிவகாசி ராதாகிருஷ்ணன் காலனியில் உள்ள ஒரு வீட்டுக்கு ஒப்பனை பணிக்காக வந்தஷீலா ராணியை தான் செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு பேசியதை ஒப்புக்கொண்டார்.

அவரை ஒரு காரில் ஏற்றிக் கொண்டு திருத்தங்கலிலிருந்து விருதுநகர் செல்லும் சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றதாகவும்,அங்கு பணம் கேட்டபோது தன்னிடம் பணம் இல்லை என்று கூறிய ஷீலாராணியிடம் அவர் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 3 பவுன் மதிப்புள்ள தங்கச் செயினை கேட்டுள்ளார் ஷீலா ராணி தர மறுத்ததால் செயினை பறித்துக் கொண்டு அவரை கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இளைஞர் ஷேக்முகமது யாசின் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா பூந்தோட்டம் மதுபானசாலையில் தாக்குதல் : இரு பிள்ளைகளின் தந்தை பலி – சந்தேகநபர் கைது!!

வவுனியா பூந்தோட்டம் மதுபானசாலையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் மரணமடைந்துள்ள நிலையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பூந்தோட்டம் சந்தியில் அமைந்துள்ள மதுபானசாலையில் நேற்று முன்தினம் (18.08) குறித்த நபர் மீது (உயிரிழந்த நபர்) மீது அங்கிருந்த இரு நபர்கள் தாக்குதல் மேற்கொண்டதில் குறித்த நபர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (20.08) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்தில் மகாறம்பைக்குளம் பகுதியை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான 36 வயதுடைய தங்கராசா பிரதீபன் என்ற நபர் உயிரிழந்துள்ளமையுடன் பூந்தோட்டம் பகுதியினை சேர்ந்த 32வயதுடைய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளமையுடன் சிசிரிவி உதவியுடன் மற்றைய சந்தேகநபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமையுடன் உயிரிழந்த நபரின் சடலம் இன்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

இடுப்பளவு தண்ணீரில் இறந்தவர்களின் சடலத்தை மயானத்திற்கு தூக்கிச் செல்லும் அவலம்!!

திண்டுக்கல்லில்..

திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடி கிராமம், செட்டியபட்டியில் 1000க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ளவர் யாரேனும் உயிரிழந்து விட்டா, அவர்களை அங்குள்ள சந்தனவர்த்தினி ஆற்றுப்படுகை ஓரமுள்ள இடுகாட்டில் அடக்கம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த இடுகாட்டிற்கு செல்ல முறையான சாலை வசதி இல்லை .இதனால் மக்கள் மிகுந்த கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். வழியில் நீரோடையும் குறுக்கே இருப்பதால் அதில் இறங்கியே உடலை சுமந்து செல்ல வேண்டிய நிலை நீடித்து வருகிறது.

சுடுகாட்டிற்கு செல்லும் சாலையை சீரமைத்துத் தர வேண்டும் என தற்போதுள்ள திமுக ஊராட்சி மன்ற தலைவர் மாதவி காமராஜ் மற்றும் இதற்கு முன் இருந்த பல ஊராட்சி தலைவர்களிடமும் தொடர்ந்து அப்பகுதி மக்கள் முறையிட்டுள்ளனர். ஆனாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் அப்பகுதியில் வசித்து வரும் அழகம்மாள் நேற்று மரணம் அடைந்தார். அழகம்மாளை அடக்கம் செய்வதற்காக, சடலத்தை எடுத்துச் சென்றனர். அப்போது அவரது. உறவினர்கள் சந்தனவர்தினி ஆற்றுப் படுகையில் உள்ள குளத்தில் இடுப்பளவு தண்ணீரில் அழகம்மாளின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்தனர்.

விரைவில் சுடுகாட்டிற்கு பாதை அமைத்து தர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்தவர்களின் உடலைக் கொண்டு செல்ல முடியாத நிலையை மாற்ற தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிராமங்களில் ட்ரெண்டாகும் ஒரு நாள் திருமணம்.. கடைபிடிக்கப்படும் நடைமுறை!!

சீனாவில்..

ஒரு நாள் முதல்வர் போல் சீனாவில் ஒரு நாள் திருமணம் ட்ரெண்டாகி வருகிறது. உலகம் முழுவதிலும் பல விநோத நடைமுறைகளுக்கு முன்னோடியாக இருந்து வருவது சீனா தான். அந்த வகையில் ஒருநாள் திருமணம் எனும் புது வகையான கலாச்சார நடைமுறை தற்போது சீனாவில் பரவி வருகிறது.

சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் இருக்கும் கிராமங்களில் ஒரு நாள் திருமணங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதற்கு காரணம் அங்கு கடைபிடிக்கப்படும் நடைமுறை தான். ஏழ்மை காரணமாக திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் ஆண்கள், திடீரென உயிரிழந்தால் அவர்களின் குடும்ப கல்லறையில் அவர்களின் சடலங்களைப் புதைக்க முடியாது.

இதனால் அவர்களால் மூதாதையருடன் சொர்க்கத்தில் சேர முடியாது என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. இதனால் பாவங்கள் ஏற்படும். இந்த பாவம் பல தலைமுறைகளுக்கும் தொடரும் என்பது அந்நாட்டு மக்கள் நம்பிக்கை. இதன் காரணமாக, இறந்த பின்பும் தங்கள் மூதாதையருடன் ஒன்று சேர வேண்டும் என்றால் அனைத்து ஆண்களுக்கும் கட்டாயம் திருமணமாகி இருக்க வேண்டியது அவசியம்.

இம்முறையில் திருமணம் செய்து கொள்பவர்கள் தங்களுக்கு திருமணம் நடந்து விட்டதை மூதாதையர்களுக்கு தெரிவிக்கும் வகையில் அவர்களின் குடும்ப கல்லறைக்கு செல்வார்கள். உள்ளூர் பெண்கள் இப்படி ஒருநாள் திருமணம் செய்ய தயங்குவதால், வெளியூரில் இருந்து ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்து பெண்கள் பணத்திற்காக வந்து திருமணம் செய்து கொள்கிறார்கள் .

இதற்கு தனிப்பட்ட திருமண தரகரும் உண்டு. திருமணமான பல பெண்களும் அவர்களின் குடும்பத்தினருக்கே தெரியாமல் இது போன்ற ஒருநாள் திருமணங்களை செய்து கொள்ள முன்வருகிறார்கள்.

இந்த திருமணங்கள் எதுவுமே சட்டப்பூர்வமானவை கிடையாது. சடங்கிற்காக மட்டுமே செய்யப்படுகின்றன. திருமணம் முடிந்த மறுநாள் நீ யாரோ, நான் யாரோ என பிரிந்து சென்று விடுகின்றனர்.

மட்டக்களப்பில் இளம் பெண் பரிதாபமாக மரணம் : அதிர்ச்சியில் மக்கள்!!

மட்டடக்களப்பு போதனா வைத்தியசாலையில் மகப்பேறுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு பிள்ளைக்கு தாயான மட்டக்களப்பு கிரான்குளத்தை சேர்ந்த 35 வயதுடைய சின்னத்தம்பி சுபாஸ்ஜினி அனுமதிக்கப்பட்டு ஒரு வாரத்தின் பின் 14.08.2023 அன்று உயிரிழந்துள்ளார்.

தொடர்ந்து அவரது சிசுவும் உயிரிழந்துள்ளது. முறையாக ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மருத்துவ கிளினிக்கு சென்று வந்த தாயின் சிசுவின் மரணத்திற்கான காரணம் என்ன?

ஒரு வாரம் வரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பபட்டிருந்த தாயை கவனிக்க நேரமில்லாத தனியார் வைத்தியசாலையில் பிசியானது தான் இந்த மரணத்திற்கான காரணமா? என்ற பதிவு சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

ஐபோன் வெடித்து குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோகம்!!

உத்தரப்பிரதேசத்தில்..

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் வசித்து வருபவர் பிரேம் ராஜ் சிங்.இவருக்கு வயது 47. இவர் ரியல் எஸ்டேட் தொழிலதிபராக இருந்து வருகிறார். இவர் எப்போதும் தனது பேண்ட் பாக்கெட்டில் ஐபோன் வைத்திருப்பது வாடிக்கையான செயல். திடீரென அவரது போன் சூடாவதை அவர் உணர்ந்தார்.

மேலும் சில நிமிடங்கள் கழித்து போனிலிருந்து புகை வெளியேற ஆரம்பித்தது. அவர் பையில் இருந்து எடுக்கும் முன் ஐபோன் பயங்கர ஒலியுடன் வெடித்ததாக கூறப்படுகிறது.இந்த விபத்தில் பிரேம்ராஜ் சிங்கின் இடது தொடை மற்றும் கட்டைவிரலில் தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து சிங் ” திடீரென என் பாக்கெட்டிலிருந்த ஐபோன் சூடானது. உடனே வெளியே எடுத்த போது ஒரு பெரிய ஒலியுடன் வெடித்து விட்டது. ஐபோன் 2 துண்டுகளாக உடைந்துவிட்டது” எனக் கூறினார். இச்சம்பவம் அலிகாரில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மன்னாரில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இளம் பெண்ணின் மரணம் : கதறும் உறவுகள்!!

மன்னாரில் இளம் பெண்ணின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு குழந்தையின் தாயான இளம் பெண் கடன் தொல்லை மற்றும் பிரிந்து வாழும் கணவனால் இடையிடையே துன்புறுத்தலுக்கு உள்ளாகிய காரணத்தினால் மனவிரக்தி அடைந்த நிலையில் தற்கொலைக்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

றெஜினோல்ட் வாசுகி என்ற 22 வயதான தாயே அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இச்சம்பவம் மன்னார் நறுவிலிக்குளம் மாதிரி கிராமத்தில் நேற்று முன்தினம் (17.08.2023) இரவு இடம்பெற்றுள்ளதாக மரண விசாரனை மூலம் தெரியவருகின்றது.

இந்த சம்பவம் மன்னார் மாவட்டத்தையே சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதுடன் மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுள்ளதை காட்டுகின்றது.

இம் மாத ஆரம்பத்தில் யாழ் பல்கலைகழகத்தில் கல்வி கற்கும் மடு பகுதியை சேர்ந்த யுவதி ஒருவரின் உடலமும் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு மன்னார் மாவட்டத்தில் அண்மைக்காலமாக பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

யாழில் இடம்பெற்ற கோர விபத்து : கணவன் பலி : ஆபத்தான நிலையில் இளம் மனைவி!!

யாழ்ப்பாணம் -நாவற்குழி சந்தியில் இன்று (19.08.2023) விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. பொலிஸாரின் பவுசர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் ஆணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில் விபத்துக்குள்ளானவர்கள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பவுசர் வாகனத்துடன் மோதிய மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் மன்னாரைச் சேர்ந்தவர்கள் என அறியமுடிகின்றது.
இச் சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

துபாய் செல்வந்தரை மணந்த பிரித்தானிய பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்!!

துபாயில்..

துபாய் செல்வந்தரை மணந்து கொண்ட பிரித்தானிய பெண்மணி தனது தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய கடுமையான விதிமுறைகள் குறித்த தகவலை பகிர்ந்துள்ளார்.

பிரித்தானியாவின் சசெக்ஸ் பகுதியை சேர்ந்த சவுதி அல் நடக்(Soudi Al Nadak, 26) என்ற இளம்பெண்ணுக்கும், துபாய் செல்வந்தரான அவரது கணவர் ஜமால் அல் நடக்-கிற்கும்(Jamal Al Nadak, 32) 3 ஆண்டுகள் முன்பு திருமணம் நடைபெற்றது.

7 வருடங்களுக்கு முன்பு இருவரும் துபாயில் படித்து கொண்டு இருந்த போது நட்பு ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர். செல்வந்தரை மணந்து கொண்டதால் பிரித்தானிய பெண்ணான சவுதி அல் நடக் ஆடம்பர சொகுசு வாழ்க்கையை தினம் தினம் அனுபவிக்கிறார்.

மேலும் தனது ஆடம்பர சொகுசு வாழ்க்கை குறித்து சமூக ஊடகத்திலும் சவுதி அல் நடக் பகிரும் நிலையில் அவரை இணைய வாசிகள் “தங்க வெட்டி”(gold-digger) என கிண்டல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தங்களது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்காக சில முக்கியமான விதிமுறைகளை கணவன்-மனைவியாக தாங்கள் பின்பற்றுவதாக இணையதள பதிவு ஒன்றில் சவுதி அல் நடக் தெரிவித்துள்ளார்.

அதன்படி, எதிர் பாலினத்தினருடன் எத்தகைய நட்புறவும் வைத்து கொள்ள கூடாது, அனைத்து கடவுசொல்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும், தங்கள் இருப்பிடம் குறித்த GPS லொக்கேஷனை இருவரும் தொடர்ச்சியாக பகிர்ந்து கொள்ள வேண்டும்.

அத்துடன் தாங்கள் இருவரும் திறந்த உரையாடலை எப்போதும் நடத்துவதாகவும், நான் எப்போது அடக்கமான ஆடைகளை மட்டுமே அணிவதாகவும் சவுதி அல் நடக் தெரிவித்துள்ளார்.

மேலும் சமூக ஊடகங்களில் பதிவுகளை பகிரும் போது ஜமால் மற்றும் அவரது குடும்பத்திற்கான மரியாதையை சீர்குழைக்காத வகையில் மிகவும் கவனமாக பதிவிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சிகரெட் புகையை மாறி மாறி ஊதி ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் எடுத்த தம்பதி!!

கேரளாவில்..

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பது பழமொழி. ஆனால் சொர்க்கத்தையே திருமணத்தில் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என இளையதலைமுறையின் மோகம் திரும்பியுள்ளது.

அந்த வகையில் திருமணத்திற்கு முன் ப்ரீ வெட்டிங் சூட் என்ற பெயரில் கலாச்சாரத்தை சீரழிக்கும் பலதரப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை எடுப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வருகின்றனர். இந்தியாவை பொறுத்தவரை பல்வேறு திருமண முறைகள் இருந்தாலும் அவரவர் கலாச்சார முறைப்படி நடத்திக் கொள்கின்றனர்.

சைவ, அசைவ விருந்து, பாட்டுக் கச்சேரி, அந்தாக்‌ஷரி, நடனம், நாட்டியம் என கேளிக்கை கொண்டாட்டங்கள் திருமணத்தில் . அதே நேரத்தில் ஃப்ரீ வெட்டிங் எனப்படும் திருமணத்திற்கு முந்தையை போட்டோ வெட்டிங் சூட்கள் பெரும் பாய்ச்சலுடன் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றன.

தற்போது வைரலாகும் ஒரு போட்டோ ஷூட்டில் மணமகனுக்கு மது ஊற்றிக் கொடுக்கும் மணமகள், செயற்கை மழையை பெய்ய வைத்து அதில் மணமக்கள் முழுமையாக நனைய வைத்து புகைப்படம், வீடியோக்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த வகையான புகைப்படங்கள், வீடியோக்கள் உயரமான மலைப்பிரதேசங்கள், நீர்வீழ்ச்சிகள், இயற்கை சூழல் நிறைந்த வனப்பகுதிகள், கடல்களில் கூட இப்படியான ஆபத்தான போட்டோஷுட்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

கேரளாவில் சமீபத்தில் அரைகுறை ஆடைகளுடன் மணமகள் மற்றும் மணமகன் ஆகிய இருவரும் திருமணத்துக்கு முன்பு ஃப்ரீ வெட்டிங் ஷூட் புகைப்படம் எடுக்கப்பட்டது. இந்தப் புகைப்படங்கள் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளன.

இந்த வீடியோவில் மணமகனின் வாயோட வாய் வச்சு சிகரெட் புகையை மணமகள் உறிஞ்சி அதனை மணமகள் வெளியிடுகிறார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன.

சிகரெட் புகைக்கு எதிராக உலகம் முழுவதும் பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில், மணமகனின் சிகரெட் புகையை மணமகள் வாய் வைத்து உறிஞ்சுவது அவரது உடல் நலத்திற்கும் கேடானது என நெட்டிசன்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

வவுனியாவைச் சேர்ந்த தமிழ் இளைஞன் கொழும்பில் அடித்துக் கொலை!!

கொழும்பில் தமிழ் இளைஞர் ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் கொழும்பு மோதரையில் நேற்று(18) மாலை இடம்பெற்றதாக தெரிய வந்துள்ளது.

வவுனியாவைச் சேர்ந்தவரும் வெல்லம்பிட்டியில் வசிப்பவருமான அருணாசலம் அஜந்தன் (வயது 24) என்ற இளைஞரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அவ் இளைஞர் கொழும்பில் கடந்த 5 வருடங்களாகக் குடும்பத்தினருடன் தங்கி நின்று வேலை புரிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் இரு குழுக்களுக்கிடையில் நேற்று ஏற்பட்ட மோதலில் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.