நடனம் ஆடிய போது சோகம்.. கல்லூரி மாணவி மாரடைப்பால் பலி!!

மங்களூருவில்..

நடனம் ஆடிய போதே மரணம், விளையாடிக் கொண்டிருந்த போதே மரணம், பள்ளி மாணவன் மயங்கி சரிந்து மரணம், மணமேடையில் மரணம் என இளவயது மரணங்கள் தொடர்கதையாகி வருகின்றன.

இந்நிகழ்வுகள் மக்கள் மனதில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா நெரியா பகுதியில் வசித்து வருபவர் 19 வயது சுமா.

இவர் மங்களூருவில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சுமா நீண்ட நாட்களாக கல்லூரிக்கு செல்லவில்லை.

ஆகஸ்ட் 9ம் தேதி மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று முன்தினம் சுமா தனது வீட்டில் மயங்கி சரிந்து விழுந்தார். அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், சுமாவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள்.

சுமா ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகத்தில் கடந்த சில மாதங்களில் குடகு, துமகூரு, மங்களூரு பகுதிகளில் 6 மாணவ, மாணவிகள் அடுத்தடுத்து மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர்.

அதே போல் பள்ளியில் பிரார்த்தனை பாடல் பாடிக் கொண்டிருந்த 10ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. தொடர் உயிரிழப்புக்கள் மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

12ம் வகுப்பு மாணவியின் காதல் வலை… பறிபோன இரு உயிர்கள்!!

ஆந்திராவில்..

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் கொத்தபாலம் நாகேந்திரா காலனியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வந்தார். ஆதர்ஷா நகரை சேர்ந்த சூர்ய பிரகாஷ் ராவ் என்பவரை காதலித்து வந்து உள்ளார்.

அதே போல், சூர்ய பிரகாஷின் நண்பரான லெங்கா சாய் குமாரையும் சிறுமி காதலித்து வந்து உள்ளார். ஒருவருக்கு தெரியாமல், இன்னொருவரை காதலித்து வந்த சிறுமி, தன்னை மட்டுமே உயிருக்குயிராக நேசிப்பதாக அந்த இரு இளைஞர்களும் நினைத்துக் கொண்டனர்.

சாய்குமாரும், சூரியபிரகாஷூம் நண்பர்கள் என்றாலும், மாணவியை காதலிப்பதை ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளவில்லை. இது மாணவிக்கு இன்னும் வசதியாகிவிட்டது. இதனால், அவர் 2 வாலிபர்களுடனும் உல்லாசமாக சுற்றித்திரிந்தார்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு, மாணவி, சாய்குமார் இருவரும் அந்த பகுதியில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கிய போது, சாய்குமார் லாட்ஜ் அறையில் வைத்தே மாணவிக்கு தாலி கட்டி ரகசிய திருமணம் செய்துள்ளார். இதனை செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து இருவரும் அவரவர் வீடுகளில் அலைப்பாயுதே பட பாணியில் வசித்து வந்தனர். இந்த நிலையில், சாய்குமார், மாணவிக்கு தாலி கட்டிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சூர்ய பிரகாஷ், தன்னுடைய காதலிக்கு நண்பன் சாய்குமார் தாலி கட்டியதைப் பற்றி, நேரடியாகவே அந்த மாணவியிடம் கேட்டுள்ளார். வீடியோ வந்துவிட்டதால், அந்த மாணவியும் வேறு வழியின்றி உண்மையை ஒப்புக்கொண்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சூரியபிரகாஷ், நேராக சாய்குமாரிடம் சென்று, மாணவி தன்னையும் காதலித்து நடித்தது பற்றி புட்டு புட்டு வைத்தார். இதைக்கேட்டு, அதிர்ந்து போன சாய்குமார் அதிர்ந்து போனார்.

இதைத் தொடர்ந்து, சூரிய பிரகாஷ் மற்றும் சாய் குமாரும் மாணவியின் வீட்டுக்கு சென்று, முக்கோண காதல் விவகாரத்திற்கு, ஒரு முடிவை சொல்லுமாறும் கேட்டுள்ளனர்.

இப்படி 2 காதலர்களும் வீட்டுக்கு தனது முகத்திறையை கிழித்து விட்டதால், வீட்டில் யாருமில்லாத நேரத்தில் மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், போலீஸ் விசாரணை வரை சென்றதால் எங்கே நாம் மாட்டிக் கொள்வோமோ என்று சூரியபிரகாஷ் பயந்துவிட்டார். மேலும், தன்னை போலீசார் கைது செய்து விடுவார்களோ? என்று நினைத்து, ஓடும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

மைனர் பெண்ணுக்கு தாலி கட்டியதாக சாய்குமார் மீது, வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். 2 பேரை காதலிப்பதாக 12-ம் வகுப்பு மாணவி நடித்து மோசடி செய்ததன் விளைவு, 2 உயிர்கள் பறிபோனதுடன், இளைஞர் ஒருவர் வாழ்க்கை தொலைத்து ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த முக்கோணக் காதலால் 3 குடும்பங்கள் தத்தளிப்பதை உணர்ந்து, இளைஞர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் இளைய சமுதாயத்திற்கு அறிவுரை கூறி வருகின்றனர்.

4வயதுச் சிறுமி துடிதுடித்து பலியான சோகம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

ஆந்திராவில்..

பன்றியை சுட குறி வைத்தபோது தவறுதலாக 4 வயது சிறுமி மீது துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் சம்பவ இடத்திலேயே சிறுமி உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் காக்கிநாடா அடுத்துள்ளது லோவகோதுரு (Lovakothuru) என்ற கிராமம் உள்ளது. இங்கு பாலிவேல ராஜு – நாகலட்சுமி தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு தன்யாஸ்ரீ என்ற 4 வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவர்களது பக்கத்து வீட்டில் அனந்தரபு சூரிய சந்திரா என்ற நபர் வசித்து வருகிறார்.

சூரிய சந்திரா என்ற இந்த நபர் பன்றிகள் வளர்த்து வருகிறார். இந்த சூழலில் இவரது பன்றி ஒன்று பன்றி குடிலில் இருந்து வெளியேறி திரும்பாமல் இருந்துள்ளது. அந்த பன்றியை சூர்யா பிடிக்க முயற்சித்தும் அது பிடிபடவில்லை.

எனவே மற்றொரு பன்றி வளர்ப்பாளாரான வைரலா பத்ரி என்பவர் அந்த பன்றியை சுட்டு பிடிக்க சொல்லி அறிவுறுத்தியுள்ளார். அதன்பேரில் சூர்யாவும் ஒரு நாட்டு துப்பாக்கி பயன்படுத்துபவரை நியமித்துள்ளார். அந்த நபரும் பன்றியை குறிநோக்கி சுட்டு தள்ள காத்திருந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த துப்பாக்கி நபர் துப்பாக்கியோடு பன்றியை சுட தயாராக இருந்தார். அந்த சமயத்தில் பக்கத்து வீட்டில் வசிக்கும் 4 வயது சிறுமி தன்யா வெளியே வந்து விளையாடி கொண்டிருந்தார்.

அப்போது இந்த நபர் துப்பாக்கியால் பன்றியை சுட்டபோது, குறி தவறி அந்த குண்டு சிறுமி தன்யா மீது பாய்ந்தது. இதில் சிறுமி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பலியானார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கதறி அழுதனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் சிறுமியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து குற்றத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவு மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு!!

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவு மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு பாடசாலையின் ஆரம்ப பிரிவு மைதானத்தில் நேற்று(17.08.2023) காலை பிரார்த்தனையுடன் ஆரம்ப பிரிவு அதிபரின் தலைமையில் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

1000ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் ஆரம்ப பிரிவில் 40மாணவ தலைவர்கள் தெரிவு செய்யப்பட்டு சின்னம் சூட்டப்பட்டனர்.

இந்நிகழ்வில் தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் முதல்வர் லோகேஸ்வரன் பிரதம அதி்தியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு சின்னம் சூட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்நிகழ்வில் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பிரிவிற்கான பொறுப்பாசிரியர்கள், ஒழுக்காற்றுக் குழுவினர், பெற்றோர்கள் என பலரும் கொண்டு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வாழ்துக்களையும் தெரிவித்திருந்தனர்.

டொலரின் பெறுமதியில் ஏற்ப்பட்ட மாற்றம் : மத்திய வங்கி அறிவிப்பு!!

டொலர்..

நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (18.08.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 329.49 ரூபாவாகவும், கொள்வனவு விலை 316.28 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 244.68 ரூபாவாகவும், கொள்வனவு விலை 232.81 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 360.13 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 343.32 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 421.18 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 402.68 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

யாழில் ஒரு கடல் மைல் தூரத்தை நீந்திக் கடந்த 56 வயது பெண்!!

யாழில்..

யாழ்ப்பாணம் – வடமராட்சி வடக்கு இன்பருட்டி பகுதியில் இடம்பெற்ற நீச்சல்ப் போட்டியில் 56 வயதான பெண் ஒருவர் ஒரு கடல் மைல் தூரத்தை நீந்திக் கடந்து மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளார்.

இன்று (17.08.2023) இடம்பெற்ற ஒரு கடல் மைல் நீச்சல்ப் போட்டியில், மற்றுமொரு 40 வயது பெண் முதலாமிடத்தையும், 44 வயதுடைய பெண் இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

வடமராட்சி – வடக்கு இன்பருட்டி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் 67வது ஆண்டு விழாவும், காண்டீபன் விளையாட்டு கழகத்தின் மாபெரும் விளையாட்டுப் போட்டியும் இன்று இடம்பெற்றது.

இதில் பெண்களுக்கான ஒரு கடல் மைல் நீச்சல்ப் போட்டி இடம்பெற்றது. இதன்போதே குறித்த பெண்கள் நீந்தி முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளனர்.

இதில் ஆண்களுக்கான நீச்சல், படகோட்டப் போட்டிகள் இடம்பெற்றன. பருத்தித்துறை- தென்னியம்மன் முனையில் இருந்து இன்பசிட்டி வரை நீச்சல்ப் போட்டி இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் 13 கடிதங்களை எழுதிவிட்டு உயிரை மாய்த்த இளைஞன் : சோகத்தில் தாய், தந்தை!!

கொழும்பில்..

கொழும்பின் புறநகர் பகுதியான கெஸ்பேவ மாகந்தன பிரதேசத்தில் 30 வயதுடைய ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.கெஸ்பேவ மாகந்தன விஜிதபுர பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இசுரு நெரஞ்சன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடனை அடைக்க முடியாத காரணத்திலேயே அவர் இவ்வாறு உயிரிழக்க நேரிட்டதாக உயிரிழந்த இளைஞனின் தாய் குறிப்பிட்டுள்ளார்.இசுரு கடந்த 15ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் தனது பெற்றோருடன் உரையாடிவிட்டு வீட்டில் உள்ள தனது அறைக்கு சென்றுள்ளார். அப்போது, ​​இரவு உணவுக்கு வருமாறு தாய் இசுருவின் அறையை நோக்கிச் சென்ற போது, ​​கதவு மூடப்பட்டிருப்பதைக் கண்டார்.

மகன் தூங்கி விட்டதாக அம்மா நினைத்துள்ளார். மறுநாள் காலை தனது மகனின் அறைக்கு தேநீர் கொண்டு சென்றதாகவும், ஆனால் அதற்கும் அவர் பதிலளிக்கவில்லை என்றும் தாய் பொலிஸாரிடம் கூறினார்.பின்னர், இசுருவின் தந்தை அறையின் முன் ஒரு கதிரையை வைத்து, கதவில் உள்ள ஜன்னல் வழியாக பார்த்தபோது, ​​அவரது மகன் படுக்கையில் இல்லை.

இது குறித்து பெற்றோர் அயலவர்களிடமும் தெரிவித்ததையடுத்து, அறையின் கதவை உடைத்து திறந்து பார்த்த போது, ​​அறையில் இசுரு தூக்கிட்ட நிலையில் காணப்பட்டுள்ளார்.இசுருவின் அறையை பொலிஸார் சோதனையிட்ட போது, தாய், தந்தை உட்பட உறவினர்களுக்கு எழுதிய 13 கடிதங்களும் அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இசுருவின் இறப்பதற்கு முன் தாயாருக்கு எழுதிய கடிதத்தில், “அம்மா, இந்த உலகத்தில் நான் நேசித்த ஒரே நபர் நீங்கள் என்று சொன்னால் தவறில்லை என்று நம்புகிறேன். ஏனென்றால் எனக்குத் தெரிந்தவர்களில் மரணத்தின் முன்னால் விட்டு செல்ல முடியாத ஒருவராக நீங்கள் மாத்திரமே இருக்கின்றீர்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இசுரு தனது தந்தைக்கு எழுதியுள்ள கடிதத்தில் “அப்பா நீங்கள் இப்போது சோகமாக இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும், ஏனென்றால் நீங்கள் என்னை அதிகமாக நம்புனீர்கள்.முதலில் இரண்டு விஷயங்களைச் சொல்ல வேண்டும். பிறப்பும் இறப்பும் இரண்டு வார்த்தைகள் என்றாலும் இரண்டின் விளைவும் ஒன்றுதான். அதாவது அவை இரண்டும் ஒன்றுதான்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய கடித அட்டைகளை அதன் பெயர்களில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களிடம் ஒப்படைக்குமாறும் அவரது இறுதி உயிலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். எனினும் இசுரு இரண்டு பேரிடம் 10 லட்சம் ரூபா கடனாக பெற்று பின்னர் 3 லட்சம் ரூபாவை திருப்பி செலுத்தியுள்ளார்.

பணத்தை கொடுத்தவர்கள் கொடுத்த தொகையை விட அதிக பணம் கேட்டதாகவும், கொடுக்க கடினமாக இருந்ததால் மகன் இந்த முடிவை எடுத்துள்ளதாக தாயார் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னரும் இசுரு உயிரை மாய்க்க முயன்றதாக இசுருவின் தந்தை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஒரே நாளில் இளம் பெண்ணும் இளைஞனும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!

மன்னாரில்..

இலங்கையின் வடமாகாணத்தில், மன்னார் மாவட்டத்தில் ஒரே நாளில் இருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை மாவட்டத்தையே சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

நேற்று (17.08.2023) காலை மன்னார் – உப்புக்குளம் பகுதியை சேர்ந்த 34 வயதான டிலக்‌ஷன் தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

அதே நேரம் மன்னார் நறுவலிக்குளம் மாதிரிகிரமத்தை சேர்ந்த றெஜினோல்ட் வாசுகி என்ற 22 வயதான யுவதி நேற்று இரவு தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் ஒரே நாளில் இரு தற்கொலை மரணங்கள் மன்னார் மாவட்டத்தையே சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதுடன் மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுள்ளதை காட்டுகின்றது.

இம் மாத ஆரம்பத்தில் யாழ். பல்கலைகழகத்தில் கல்வி கற்கும் மடு பகுதியை சேர்ந்த யுவதி ஒருவரின் உடலமும் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு மன்னார் மாவட்டத்தில் அண்மைக்காலமாக பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு : கடந்த 24 மணிநேரத்தில் 4 மரணங்கள்!!

வவுனியா புதிய கற்பகபுரம் கிராமத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா புதிய கற்பகபுரம் கிராமத்தை சேர்ந்த வாகனம் திருத்தும் தொழில் புரியும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய ரூபன் என்பவர் அவரது இல்லத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

இன்று (18.08.2023) பிற்பகல் அவரது மனைவி வெளியில் சென்று திரும்பிய வேளை கணவரான ரூபன் தூக்கில் சடலமாக கிடந்ததை அவதானித்துள்ளனர்.

தொடர்ந்து கிராம மக்கள் பொலிஸாருக்கு அறிவித்தல் வழங்கிய பின் பூவரசங்குளம் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்

கடந்த 24 மணி நேரத்தில் வவுனியாவில் விபத்தில் ஒருவரும் , நீரில் மூழ்கி இரு சிறுவர்களும், தற்சமயம் குறித்த குடும்பஸ்தருமாக 4பேர் ஆகாலமரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் நீரில் மூழ்கி மரணமடைந்த இரு மாணவர்களின் சடலங்களும் பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் அடக்கம்!!

வவுனியாவில் வலயமட்ட விளையாட்டுப் போட்டியின் போது நீரில் முழ்கி மரணமடைந்த இரு மாணவர்களின் சடலங்களும் பெருந்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் இன்று (18.08) அடக்கம் செய்யப்பட்டது.

வவுனியா வலயமட்ட விளையாட்டுப் போட்டியானது பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக் கழக மைதானத்தில் நேற்று நடைபெற்ற போது மைதானத்தின் அருகில் இருந்த நீர் குழியில் விழுந்த வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலத்தைச் சேர்ந்த 15 மற்றும் 14 வயதுடைய இரு மாணவர்கள் மரணமடைந்திருந்தனர்.

குறித்த இரு மாணவர்களின் சடலம் பட்டாணிச்சூர் பள்ளியில் அஞ்சலிக்காக வைகப்பட்டு பட்டாணிச்சூர் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது.

இதன்போது, முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிசாட் பதியுத்தீன், வலயக் கல்வித் திணைக்களத்தினர், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள்,

உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்துடன், பலரதும் கண்ணீருக்கு மத்தியில் இருவரது சடலங்களும் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பள்ளியில் சுருண்டு விழுந்து மாணவி உயிரிழப்பு.. போலீசார் தீவிர விசாரணை!!

அவிநாசியில்..

அரசு பள்ளியில், காலையில் நடைப்பெற்ற இறை வழிபாட்டில் கலந்து கொண்ட 9ம் வகுப்பு மாணவி, திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தெக்கலூர் பகுதியில் வசித்து வருபவர் முருகன். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி. இவர்கள் இருவரும் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு கபில்தேவ் என்ற மகனும் கந்தேஸ்வரி என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில், வீட்டின் அருகில் உள்ள தனியார் பள்ளியில் கபில்தேவ் 11ம் வகுப்பும் கந்தேஸ்வரி 9-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். கந்தேஸ்வரிக்கு காலில் ரத்தக்குழாய் அடைப்பால் பாதிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறார்.

காலை வழக்கம் போல கந்தேஸ்வரி பள்ளிக்கு சென்று, பள்ளியில் காலை நடைபெற்ற இறை வழிபாட்டில் கலந்து கொண்ட போது திடீரென கந்தேஸ்வரி மயங்கி விழுந்துள்ளார். பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக கந்தேஸ்வரியை அவிநாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்ததில் மிக மோசமான நிலையில் உள்ளதாக கூறியதை அடுத்து, உடனடியாக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர்.

ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவிநாசி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிக்கு வந்த மாணவி திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இளம் மனைவி தற்கொலை… மரணத்தில் மர்மம் இருப்பதாக மாமியார் வீட்டை சூறையாடிய உறவினர்கள்!!

அரியலூரில்..

அரியலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வேள்வி மங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் கொளஞ்சிநாதன் மகள் கவுசல்யா. இவருக்கு வயது 27. இவருக்கும் கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த கீழ் ஆதனூர் கிராமத்தில் வசித்து வரும் ராமச்சந்திரன் மகன் ராஜாராமுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு 10 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 2ம் தேதி கணவன்-மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளான கௌசல்யா வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு கொண்டார்.

இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே ராஜாராம் குடும்பத்தினர் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.

கௌசல்யாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, நேற்று மாலை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அடக்கம் செய்தவற்காக கவுசல்யாவின் உடலை உறவினர்கள் கீழ் ஆதனூருக்கு கொண்டு வந்தனர்.

அப்போது அவரது உடலை கணவர் ராஜாராமின் வீட்டின் முன்பு வைத்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி கவுசல்யாவை கொன்று விட்டதாகவும், அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர் .

மேலும் ராஜாராமின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்த டி.வி., மின்விசிறி, கிரைண்டர், மிக்சி, கியாஸ் அடுப்பு, ஜன்னல் என அனைத்தையும் அடித்து நொறுக்கி சூறையாடினர்.

இதுபற்றி குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். இதன் பிறகு கௌசல்யாவின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்று, கவுசல்யாவின் உடலை அடக்கம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நாடு கடந்த காதல்.. தென்னாப்பிரிக்க பெண்ணை திருமணம் செய்த தமிழ் இளைஞன்!!

தமிழகத்தில்..

தமிழக இளைஞர் ஒருவர், தென்னாப்பிரிக்க பெண்ணை காதலித்து தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துள்ளார். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கல்பகனூரைச் சேர்ந்த தம்பதி செல்லத்துரை மற்றும் சின்ன பொண்ணு. இவர்களுக்கு குட்டிமார்க்ஸ் என்ற மகன் உள்ளார்.

இவர், பட்டப்படிப்பு முடித்துவிட்டு தென்னாப்பிரிக்க நாட்டின் எத்தியோபியா நகரில் உள்ள அர்பா மினாச் அரசு பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

அப்போது, அதே பல்கலைக்கழகத்தில் எத்தியோப்பியா நாட்டின் அடமா நகரரைச் சேர்ந்த அக்லிலுகிஸான் என்பவரின் மகளான மென்பரே அக்லிலு என்பவர் துணை பேராசிரியையாக பணியாற்றினார். இவர்கள் இருவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்தனர்.

இந்நிலையில், இரு வீட்டின் சம்மதத்துடன் இவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பின்னர், பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தில் உறவினர்கள் முன்னிலையில் தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது.

ஆப்பிரிக்க மணப்பெண் மென்பரே அக்லிலு சேலை அணிந்து மாலை மாற்றி தமிழக இளைஞரை கரம் பிடித்தார். இந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதத்தில் இருந்தது. இவர்களது திருமணத்தில் கலந்த கொள்ள மணப்பெண்ணின் வீட்டாருக்கு விசா கிடைக்காததால் அவர்களால் திருமணத்தில் கலந்துகொள்ள முடியவில்லை.

பள்ளியில் சுருண்டு விழுந்து 9ம் வகுப்பு மாணவி பலியான சோகம்!!

அவிநாசியில்..

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தெக்கலூர் பகுதியில் வசித்து வருபவர் முருகன். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி. இவர்கள் இருவரும் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு கபில்தேவ் என்ற மகனும் கந்தேஸ்வரி என்ற மகளும் உள்ளனர்.

அருகில் உள்ள தனியார் பள்ளியில் கபில்தேவ் 11ம் வகுப்பும் கந்தேஸ்வரி 9-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். கந்தேஸ்வரிக்கு காலில் ரத்தக்குழாய் அடைப்பால் பாதிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறார்.

நேற்று காலை வழக்கம் போல கந்தேஸ்வரி பள்ளிக்கு சென்று பள்ளியில் காலை நடைபெற்ற இறை வழிபாட்டில் கலந்துகொண்டபோது திடீரென கந்தேஸ்வரி மயங்கி விழுந்துள்ளார். பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக கந்தேஸ்வரியை அவிநாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்ததில் மிக மோசமான நிலையில் உள்ளதாக கூறியதை அடுத்து, உடனடியாக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து அவிநாசி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிக்கு வந்த மாணவி திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

வவுனியா இரட்டைக் கொலைக்கு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் வாகனங்கள் சிஐடியால் மீட்பு!!

வவுனியாவை அதிரவைத்த இரட்டைக் கொலை வழக்கின் சந்தேகநபர்கள் பயன்படுத்திய வாகனங்கள் குற்ற புலனாய்வுத் திணைக்களத்தினால் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வீடு ஒன்றில் நுழைந்து தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் உட்பட ஆறு சந்தேக நபர்கள் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில்,

தலைமறைவாகியுள்ள பிரதான சந்தேக நபருக்கு சொந்தமானதும், குறித்த குற்றச்செயலுக்கு பயன்படுத்தியதாகவும் சந்தேகிக்கப்படும் வாகனங்கள் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த கொலை சம்பவம் தொடர்பாக விசாரணையை மேற்கொண்டு வரும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது டிப்பர், பட்டா ரக வாகனம் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள் என்பன குற்ற புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினரால் நேற்று மாலை (16.08) மீட்கப்பட்டுள்ளன.

குற்ற புலனாய்வுத் திணைக்களத்தின் கொலைவிசாரணை பிரிவினரின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மொடில் ரஞ்சலமரகே ஆலோசனைக்கு அமைவாக செயற்பட்டுவரும் பொலிஸ் பரிசோதகர் இக்பால்,

பொலிஸ் சார்ஜன்ட் சந்தரூவன், பொலிஸ் கான்ஸ்டபிள் விஜரட்ண மதுசங்க பண்டார ஆகியோர் இணைந்து கைப்பற்றிய வாகனங்களை நீதவான் முன்னிலையில் மன்றுக்கு முற்படுத்தியுள்ளனர்.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!!

வவுனியா ஈரற்பெரியகுளம் பகுதியில் இன்று (17.08.2023) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளார். குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்,

வவுனியாவில் இருந்து ஈரற்பெரியகுளம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் அனுராதபுரத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதுடன் வாகனத்தின் சாரதி சிறுகாயங்களிற்குள்ளாகினார்.

விபத்து தொடர்பாக ஈரற்பெரியகுளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.