யாழில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தாய் பேசவில்லை என்ற காரணத்தினால் தவறான முடிவை எடுத்து உயிரிழந்துள்ளா சம்பவம் பெரும் சோகத்தை ஏறபடுத்தியுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,குறித்த இளம் குடும்பஸ்தரும் அவரது தாயாருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தாயார் அவருடன் கடந்த சில நாட்கள் பேசவில்லை.
இதனால் மனமுடைந்த நபர் கடந்த 14ஆம் திகதி எலிப்பாசனம் அருந்தியுள்ளார்.இந்த நிலையில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.இவ்வாறான நிலையில், நேற்றையதினம் (15-08-2023) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 41 வயதான தங்கராசா சதீஷ் என தெரியவந்துள்ளது.இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்த நிலையில் இவருக்கு 8 மாதங்கள் நிரம்பிய குழந்தை ஒன்றும் உள்ளது.இவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியில் இளைஞர் ஒருவர் காணாமல் போய்யுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
கடந்த 11ஆம் திகதி வீட்டிலிருந்து மதிய உணவினை உட்கொண்டு விட்டு சென்ற பின்னரே குறித்த 27 வயதான தம்பிப்பிள்ளை விதுசன் எனும் மனநலம் குன்றிய இளைஞர் இவ்வாறு காணாமல் போயுள்ளார்.மேலும், குறித்த இளைஞன் மாயமான அன்று 14 ஆம் வட்டாரத்தில் கட்டப்பட்டிருந்த தெப்பம் ஒன்றும் காணாமல் போயுள்ளது.
குறித்த தெப்பத்தில் இளைஞர் தீவினை விட்டு வெளியேறியிருக்ககூடும் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.இவ்வாறான நிலையில், இது தொடர்பில் கடற்படை ஏனைய பொலிஸ் நிலையங்கள் என அனைத்திற்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைப்பவர்கள் பொலிஸாருக்கு அறிவிக்கும்படியும் நெடுந்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
பிரபல தென்னிந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியின் சீசன் 3 யில் மேடையில் நேற்றைய தினம் இலங்கை சிறுமி அசானி கனகராஜ் தனது திறமையை வெளிப்படுத்தி தனக்கான அடையாளத்தினை ஏற்படுத்தி கொண்டார்.சரிகமப நிகழ்ச்சியின் 3 வது சீசன் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த வார நிகழ்ச்சியின் இடையில் சரிகமப மேடையில் கேட்ட ஒரு குரல் ஒட்டுமொத்த மலையக மக்களின் அடையாளமாக நின்றது.பாடல் நிகழ்ச்சிக்கு தேர்வான அசானி பணப் பிரச்சினையால் இந்தியா சென்றடைய தாமதமாகிவிட்டது.இந்த நிழ்ச்சிக்கு தாமதமாக சென்ற இலங்கை சிறுமி அசானி ஏமாற்றத்துடன் நாடு திரும்ப கூடாது என்பதற்காக, ஜீ தமிழ் தொலைக்காட்சி ஒரு வாய்ப்பை வழங்கியது.
இதனையடுத்து, ‘ராசாவே உன்ன நம்பி ஒரு ரோசாப்பூ’ என்ற பாடலை பாடி முடித்ததும் நடுவர்கள் வெறும் வானொலி பாட்டை கேட்டு இப்படி பாடுவது என்பதெல்லாம் கடவுள் கொடுத்த வரம். பாடலை பற்றி கூறும் முன்பு உங்களை பற்றி கூறுங்கள் என்று கோரினார்கள்.
”சிறுவயதில் இருந்தே பாடுவதற்கு எனக்கு மிகவும் விருப்பம். எனது பெற்றோர் நான் பாடும் போது உயர்ந்த இடத்திற்கு வருவேன் என்று அடிக்கடி கூறுவார்கள். எனக்கு 14 வயது, நான் 9ம் வகுப்பில் படிக்கிறேன். நான் மேடையில் பாடுவது இது தான் முதல் முறை” என்று தன்னை அறிமுகப்படுத்தினார்.
அதுமட்டுமின்றி மேடையில் பேசிய அசானியின் தந்தை கனகராஜ் பணப்பிரச்சினை இருந்தது. இதனால் முதலில் வாய்ப்பை மறுத்து விட்டேன். பிறகு ஊர் மக்கள் பணம் சேர்த்து தங்களை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தியாவை வந்தடைய இலங்கை காசுப்படி ஒரு இலட்சம் பணம் தேவைப்பட்டது. தோட்ட தொழிலாளியான நான் அதை சம்பாரிக்க 2 ஆண்டு சென்று இருக்கும். மேலும், கடல் தாண்டி சாதிக்க உதவி அத்தனை உறவுகளுக்கும் நன்றி கூறினார்.
இதனை கேட்ட நடுவர்களான ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், சைந்தவி, அபிராமி ஆகியோர் சரிகமப மேடையை நம்பி வந்த சிறுமி ஒரு போதும் ஏமாற்றத்துடன் நாடு திரும்ப கூடாது என்று இன்னும் 2 வாரங்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர். மேலும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அர்ச்சனாவும் அசானிக்காக கண்ணீர் சிந்தியதுடன் வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் அசானிக்கு செய்த உதவிக்காக நன்றி தெரிவித்தார்.
கனடாவில் குடும்பத்துடன் வசித்து வந்த வடமராட்சி வல்வெட்டித்துறை தீருவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த இளைஞர் தற்கொலை செய்யும் நோக்கத்துடன் 16 வது மாடியிலிருந்து கீழே இருந்த அந்த நாட்டவரும் மீது குதித்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் வல்வெட்டித்துறை தீருவில் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ரகுபதி ஆனந்த் என்ற இளைஞரும் அந்த நாட்டவர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக கனடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
யாழ்ப்பாணம் புலோலியில் கர்ப்பப்பை குழாய் வெடித்து பெண்ணொருவர் நேற்றைய தினம்(16) உயிரிழந்துள்ளார். புலோலியைச் சேர்ந்த 30 வயதுடைய அனுசன் துளசி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் மன்னார் சென் சேவியர் பெண்கள் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார். திடீர் வயிற்று வலியினால் துடிதுடித்த அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
உடற்கூற்று பரிசோதனையின் போது , கர்ப்பப்பை குழாயினுள் கரு தங்கியமையின் காரணமாக கர்ப்பப்பை குழாய் வெடித்தே மரணம் சம்பவித்ததாக வைத்தியர்களால் அறிக்கையிடப்பட்டுள்ளது.
கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் சிறுவன் ஒருவர் சர்ப்பம் தீண்டி உயிர்ழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம்(15.08.2023) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஒரு வயதும் 7 மாதம் நிரம்பிய தனுஜன் ஜெஸ்மின் எனும் பாலகனே உயிரிழந்துள்ளார்.
சர்ப்பம் தீண்டியவுடன், சிறுவன் தருமபுர வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
கிளிநொச்சி வைத்தியசாலையில் சிறுவனை கடித்த பாம்பினை கொண்டு வருமாறு கூறியதை அடுத்து, உறவினர்கள் பாம்பினை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
வவுனியா வலயமட்ட விளையாட்டு போட்டிகள் வவுனியா பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்ற போது நீர்க்குழியில் விழுந்து இரு மாணவர்கள் மரணமடைந்த நிலையில் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இன்று மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா வலயமட்ட விளையாட்டுப் போட்டிகள் கடந்த இரு தினங்களாக பம்பைமடுவில் அமைந்துள்ள பல்கலைகழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வந்தது.
மைதானத்தில் மெய்வல்லுநர் விளையாட்டு போட்டி இடம்பெற்றபோது மைதானத்தின் அருகில் காணப்பட்ட நீர்க்குழியில் இரு மாணவர்கள் தவறுதலாக விழுந்துள்ளனர்.
மாணவர்கள் விழுந்ததை அவதானித்தவர்கள் கடமை இருந்த ஆசிரியருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, பூவரசங்குளம் பொலிஸார், விசேட அதிரடி படையினர் அவ்விடத்திற்கு வருகை தந்து பல்கலைக்கழக மாணவர்கள், ஊர் மக்கள் ஆகியோருடன் இணைந்து குறிந்த மாணவர்களை மீட்டுள்ளனர்.
மீட்க்கப்பட்ட இரு மாணவர்களையும் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், அவர்களை வைத்தியசாலைக்கு அனுமதிப்பதற்கு முன்பே இறந்துள்ளார்கள் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சம்பவத்தை அறிந்து பல்கலைக் கழகத்திற்கு சென்ற வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் ரி.மங்கலேஸ்வரன் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது அவ்விடத்தில் பல்கலைகழக மாணவர்கள் குவிந்திருத்தமையால் பதற்ற நிலை ஏற்பட்டது.
பல்கலைகழக மாணவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் துணைவேந்தரை பாதுகாப்பாக பல்கலைகழகத்திற்கு அழைந்து சென்றதுடன், பூவரசங்குளம் பொலிஸார் மற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்புடன் அவர் அங்கிருந்து வெளியேறி சென்றிருந்தார்.
குறிந்த சம்பவத்தில் வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலத்தை சேர்ந்த 14,15 மாணவர்களே மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரத்தினபுரி – ஹூனுவல பிரதேசத்தில் வசிக்கும் பதினொரு வயதுடைய நிமான்சா சத்சராணி காய்ச்சலுக்கு மருந்து உட்கொண்ட நிலையில் தற்போது கண் பார்வை குறைபாடு உள்ளிட்ட பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறுமியின் தந்தை கவலையுடன் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி குடும்பத்தில் ஒரே பிள்ளை என்றும் ஐந்தாம் தரத்தில் படித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி மொரத்தோட்டையில் உள்ள தனியார் மருந்தகமொன்றில் வைத்தியர் வழங்கிய மருந்தில் விஷம் கலந்ததால் தனது மகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டதே இதற்குக் காரணம் எனவும் சிறுமியின் தந்தை கூறுகிறார். அவர் மேலும் கூறுகையில்,கடந்த ஏப்ரல் 5ம் திகதி மகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டது.
அதன்பின் கடந்த 6ம் திகதி காலை அங்குள்ள தனியார் மருந்தகத்தில் இருந்த மருத்துவரிடம் காண்பித்து மருந்து வழங்கப்பட்டது.ஆனால் மறுநாள் ஏப்ரல் 7ஆம் திகதி காலையிலேயே மகளின் உடல் முழுவதும் சிவப்பு புள்ளிகள் தென்பட்டன. கண்கள் மூடியிருந்தன.
உடல் சோர்வடைந்து காணப்பட்டது அதன்படி, மகள் அதே மருத்துவரிடம் திரும்பியபோது, மகளுக்கு அம்மை நோய் தாக்கியுள்ளதாக மருத்துவர் கூறினார்.மருந்துக் கடையில் எடுக்க வேண்டிய மருந்தையும் எழுதிக் கொடுத்துவிட்டு, ஒரு வாரத்தில் குளிக்கச் சொன்னார். ஆனால் மறுநாள் ஏப்ரல் 8ஆம் திகதி மகளின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ன்றதாகவும் தந்தை கூறியுள்ளார்.
அங்கு மகளுக்கு மருந்தில் விஷம் கலந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கொழும்பு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் எனவும் அவர் தெரிவித்தார்.ஏப்ரல் 8ஆம் திகதி முதல் ஒரு மாதத்திற்கு மேல் கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் மகளுக்கு உள்நோயாளியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
உடம்பில் இருந்த காயங்கள் ஓரளவு ஆறின.ஆனால் பார்வை கிடைக்கவில்லை எனவும் அவர் வேதனை வெளியிட்டுள்ளார். அதேவேளை மருந்தகத்தில் சிறுமிக்கு முதலில் மருந்து வழங்கிய மருத்துவர் , அரச மருத்துவமனையில் பணி புரிபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுகின்றது.
மது அருந்தி விட்டு போதையில் பாடசலைக்குச் சென்ற 14 வயதுடைய மாணவி ஒருவரை கெகிராவ பிரதேச பொலிஸார் செவ்வாய்க்கிழமை (17) வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
குறித்த மாணவி பாடசாலை அருகில் நின்ற போது அவரது நடவடிக்கை மீது சந்தேகப்பட்ட பொலிஸார், மாணவியை விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது மாணவி மது அருந்தி உள்ளதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதனையடுத்து பொலிஸார் மாணவியை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று , பாடசாலை அதிபரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக தொடர்பு கொள்ள முயற்சி செய்த போது பாடசாலையில் இருந்து தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவியிடம் பொலிஸார் விசாரனை நடத்திய போது மாணவியின் தாத்தா தான் தன்னை மது பழக்கத்திற்கு அடிமையாக்கியதாக தெரிவித்துள்ளார்.
பாடசாலைக்கு மாணவி மது போதையில் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் கெகிராவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சமீபகாலமாக சின்னஞ்சிறு வயதில் மாரடைப்பு ஏற்படுவதும், அதனால் உயிரிழப்புக்கள் அதிகரித்து வருவதும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. விளையாடிக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்து பலி,திருமண மேடையில் சரிந்து பலி, நடனம் ஆடிய போது உயிரிழப்பு என திடீர் உயிரிழப்புக்கள் தொடர்கதையாகி வருகிறது.
அந்த வகையில் கல்லூரி மாணவி நடனம் ஆடிய போது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தில் அரசு ஆதர்ஷ் கல்லூரியில் நடன நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்ச்சியில் அதே பகுதியில் வசித்து வரும் குண்டு அஞ்சையா மற்றும் சாரதாலா தம்பதியின் 16 வயது மகள் பிரதீப்தி சிங் சக மாணவர்களுடன் நடனமாடிக் கொண்டிருந்தார். திடீரென மாணவி மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக மருத்துவ கல்லூரி ஆசிரியர்கள் மாணவிக்கு முதலுதவி கொடுத்தனர்.
ஆனால் மாணவிக்கு மூச்சு பேச்சு இல்லை. மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அந்த மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த மாணவிக்கு ஏற்கனவே இதயத்தில் ஓட்டை இருந்ததாக பெற்றோர்கள் தெரிவித்தனர். மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய பெற்றோரிடம் அறிவுறுத்தி இருந்தும் மருத்துவ செலவிற்கு போதிய பணம் இல்லாத காரணத்தால் பெற்றோர்கள் மாணவிக்கான அறுவை சிகிச்சையை தள்ளிப் போட்டு வந்த நிலையில் தான் மாணவி உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து இதய நோய் மருத்துவர் ”இதய நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உடலை வருத்தி செய்யும் எந்த வேலைகளையும் செய்ய அனுமதிக்கவேண்டாம். அவை அவர்களின் உயிருக்கே ஆபத்தாக அமையலாம். மேலும் இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாமதிக்காமல் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்”எனவும் அறிவுறுத்தியுள்ளார்
தென்னிலங்கையில் பாடசாலை ஆசிரியை ஒருவரின் செயல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பாடசாலை மாணவர்களை வெளியில் சுற்றுலா அழைத்துசெல்வது வழமை.பல்வேறு விடயங்களை மாணவர்கள் அறிந்துகொள்வதற்காக கல்விச்சுற்றுலாக்கள் அழைத்து செல்லப்படுகின்றன.
அந்தவகையில் தென்னிலங்கை பாடசாலை ஆசிரியை ஒருவரின் செயல் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மாணவர்களுடன் சென்ற அந்த ஆசிரியை பிள்ளைகளின் தலையில் வெய்யில் படாமல் இருப்பதற்காக தனது சேலைத் தலைப்பால் அவர்களை மூடி அழைத்துசெல்கின்றார்.
கோழிகள் தங்கள் குஞ்சுகளை சிறகுள்ள மறைத்து காப்பது போல மழை வெய்யில் காலங்களில் பொதுவாக அம்மாக்களே இவ்வாறு பிள்ளைகளை அழைது செல்வதனை நாம் கண்டிருக்கின்றோம். இந்நிலையில் ஆசியை ஒருவர் இவ்வாறு மாணவர்களை தனது சேலைத் தலைப்பால் மூடி அழைத்துசென்ற சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சந்தையில் மரக்கறிகளின் விலை குறைந்துள்ள போதிலும், அதன் பயனை நுகர்வோர் பெறவில்லை என தெரியவந்துள்ளது.பல சில்லறை வியாபாரிகள் இலாபத்தை அதிகரிக்கும் நோக்கில் அதிக விலைக்கு காய்கறிகளை விற்பனை செய்து வருவது தெரியவந்தது.
ஒரு கிலோ பாகற்காய் மொத்த விலை 200 ரூபாயாக இருந்தாலும், சில சில்லறை கடைகளில் பாகற்காய் கிலோ 480 ரூபாய் வரை அதிக விலைக்கு விற்கப்பட்டது.ஒரு கிலோ வெண்டைக்காய் மொத்த விலை 140 ரூபாவாக இருந்தாலும், சில்லறை சந்தையில் ஒரு கிலோவின் விற்பனை விலை 320 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
சமீப நாட்களாக சில்லறை சந்தையில் மற்ற வகை காய்கறிகளும் மிக அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகின்றன.இடைத்தரகர்கள் ஊடாக வியாபாரம் செய்வதால் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொகவந்தலாவையில் ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவியை தன்னுடைய உத்தியோகபூர்வ இல்லத்துக்கு அழைத்து துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இக் குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொகவந்தலாவை பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆசிரியரை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.பாடசாலை முடிந்தவுடன் தன்னுடைய உத்தியோகபூர்வ இல்லத்துக்கு வருமாறு செவ்வாய்க்கிழமை (15) மாணவியை அழைத்துள்ளார்.
அவ்வாறே மாணவியும் சென்ற போதே ஆசிரியர் அம்மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அது தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.வைத்திய பரிசோதனைக்காக மாணவி, பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
வவுனியா வடக்கு மருதொடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வளாகத்திற்குள் இன்று(16) காலை காட்டு யானையொன்று புகுந்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து கிராம மக்கள் ஒன்றினைந்து குறித்த காட்டுயானையைக் காட்டுக்குள் விரட்டியதாக கூற்ரப்படுகின்றது. எனினும் அந்த யானையானது அக் கிராமத்தினை அண்டிய பகுதியிலேயே தொடர்ந்து சுற்றிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த யானையின் காலில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் இது குறித்து வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி, கட்டுகஸ்தோட்டையில் தன்னுடைய காதலிக்கு கோல் எடுத்த காதலனை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.நன்றாக கசிப்பு அருந்திவிட்டே காதலியையும் அவளுடைய சகோதர்களையும் காதலன் நடுசாமத்தில் திட்டிக்கொண்டிருந்துள்ளார்.
பொலிஸார் இரவு ரோந்து சென்று கொண்டிருந்தபோது , கண்டி மாவில்மட பிரதேசத்தில் வீதியோரத்தில் முச்சக்கர வண்டி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அதிருந்த ஒருவர் கடுமையான தூசன வார்த்தைகளால் திட்டிக்கொண்டிருப்பதை பொலிஸ் அதிகாரிகள் கண்டுள்ளனர்.கசிப்பை குடித்துக்கொண்டே தொலைபேசியில் திட்டிக்கொண்டிருந்ததை பொலிஸ் அதிகாரிகள் அவதானித்தனர்.
சுமார் 30 வயது மதிக்கத்தக்க அவரிடம் விசாரித்த போது, இரவில் தனது காதலியை சந்திக்க அவரது வீட்டிற்கு வந்ததாகவும் அப்போது அளவுக்கு அதிகமாக கசிப்பு குடித்ததால் , காதலியின் சகோதரர்கள் அவரை அடித்து உதைத்ததாகவும் தெரியவந்தது.அதன்பின், முச்சக்கரவண்டியை சாலையோரம் நிறுத்திவிட்டு, காதலிக்கு போன் செய்து, காதலியையும் , அவரது சகோதரர்களையும் திட்டியதாக தெரிவித்துள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்த போத்தலில் 750 மில்லி லீற்றர் கசிப்பு எஞ்சியிருந்ததுடன் , சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு பகலகுண்டே அருகே மல்லசந்திரா பகுதியில் வசித்து வந்தவர் லட்சுமி. இவரது மகன் ரஞ்சித் . இந்த சிறுவன் துமகூரு மாவட்டம் கியாதசந்திரா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சித்தகங்கா மடத்தில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான்.
அவனுடன் சேர்ந்து சங்கர் மற்றும் ஹர்ஷத் ஆகிய 2 மாணவர்களும் படித்து வந்தார்கள். ஒரே வகுப்பில் படித்ததால் 3 பேரும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்த 3 மாணவர்களும் மடத்திற்கு சொந்தமான விடுதியிலேயே தங்கி படித்தார்கள்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கு விடுமுறை என்பதால் லட்சுமி தனது மகனை பார்க்க பெங்களூருவில் இருந்து துமகூருவுக்கு சென்றார். சித்தகங்கா மடத்திற்கு சென்ற அவர் தனது மகன் ரஞ்சித்தை பார்த்து பேசினார்.
பின்னர் மகனுக்காக கொண்டு வந்த சாப்பாடு, பிற உணவு பொருட்களை கொடுப்பதற்காக மடத்தின் அருகே உள்ள குளத்து பகுதிக்கு லட்சுமியும், ரஞ்சித்தும் சென்றார்கள். அப்போது ரஞ்சித்துடன், அவரது நண்பர்கள் சங்கரும், ஹர்ஷத்தும் சென்றனர்.
குளத்தின் அருகே அமர்ந்து அவர்கள் 4 பேரும் சாப்பிட்டனர். பின்னர் கை கழுவுவதற்காக ரஞ்சித் மட்டும் குளத்திற்கு சென்றுள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக குளத்திற்குள் ரஞ்சித் தவறி விழுந்தான்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவனது நண்பர்கள் சங்கர், ஹர்ஷத் குளத்துக்குள் குதித்து ரஞ்சித்தை காப்பாற்ற முயன்றுள்ளனர்.அவர்களுக்கு நீச்சல் தெரியாது என தெரிகிறது. இதனால் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த லட்சுமி தனது மகனையும், நண்பர்களையும் மீட்க தண்ணீரில் குதித்துள்ளார். அவருக்கும் நீச்சல் தெரியாது என தெரிகிறது. இதனால் அவரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார்.
அப்போது குளத்தின் அருகே வேடிக்கை பார்த்து கொண்டிருந்த மற்றொரு நபர், அவர்கள் 4 பேரையும் மீட்க குளத்திற்குள் குதித்தார். அவர் ரஞ்சித்தை மட்டும் மீட்டு கரை சேர்த்தார். ஆனால் மற்ற 3 பேரையும் அவரால் மீட்க முடியவில்லை.
மேலும் அவரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். அங்கு வேறு யாரும் இல்லாததால் லட்சுமி, சங்கர், ஹர்ஷத் மற்றும் காப்பாற்ற வந்த நபர் என 4 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கியாதசந்திரா போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் துமகூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டும் அங்கு விரைந்தார்.
அதே நேரத்தில் தீயணைப்பு படைவீரர்களும் விரைந்து வந்து குளத்தில் மூழ்கி உயிரிழந்த 4 பேரின் உடலையும் தேடும் பணியில் ஈடுபட்டார்கள். அந்த குளம் 35 அடி ஆழம் இருந்ததால், 4 பேரின் உடல்களும் உடனடியாக கிடைக்கவில்லை. நீண்ட நேர போராட்டத்தை தொடர்ந்து 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்டது.
போலீஸ் விசாரணையில், குளத்துக்குள் தவறி விழுந்தவர்களை காப்பாற்ற முயன்று உயிரிழந்த நபர், யாதகிரியை சேர்ந்த மகாதேவப்பா என்பது தெரியவந்தது. மேலும் மகாதேவப்பாவின் மகன் பவன், சித்தகங்கா மடத்தில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான்.
மகனுடன், குளத்தின் அருகே அமர்ந்திருந்த மகாதேவப்பா, சிறுவர்களை காப்பாற்ற முயன்று உயிரை பறிகொடுத்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கியாதசந்திரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.