குழந்தைகள் கண்முன்னே மனைவியை கொலை செய்த கொடூர கணவன்!!

உத்தரப்பிரதேத்தில்..

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொழிலதிபவர் ஒருவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவரது மனைவி இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இதனால் அவரைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனை கண்டித்த கணவர் மனைவியின் இன்ஸ்டா கணக்கை அவரது கணவர் முடக்கியுள்ளார். இதன் காரணமாக கணவன், மனைவிக்குள் தகராறு இருந்து வந்தது. அத்துடன் இன்ஸ்டாகிராம் மூலம் தனக்குத் தெரியாமல் யாரிடமோ மனைவி பழகுகிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பூர்வாஞ்சல் விரைவு சாலையில் தொழிலதிபரின் கார் நேற்று நின்று கொண்டிருந்தது. பூட்டப்பட்ட காருக்குள் தொழிலதிபர் அழுது கொண்டிருந்தார். அவர் அருகில் அவரது 2 குழந்தைகள் அழுது கொண்டிருந்தனர்.

இது குறித்து அவரது 12 வயது மகள் “ காரில் வரும் போது தனது தாய்க்கும், தந்தைக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், அதனால் ஆத்திரமடைந்த தந்தை, தாயின் கழுத்தை நெரித்துக் கொன்று விட்டார்” எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர் தொழிலதிபரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலைக்கு இன்ஸ்டாகிராம் கணக்கு தான் பிரச்சினையா வேறு ஏதும் பிரச்சினையா என தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன.

திருமணமான காதலனைக் கடத்தி சென்ற காதலி… 7 வருட காதலின் விபரீதம்!!

காதலி..

திருமணமான காதலனை முன்னாள் காதலி கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் பார்த்திபன் (31).

இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் மென்பொறியாளராக பணியாற்றி வரும் நிலையில், பிரியா என்ற 31 வயது பெண்னை கடந்த ஜுலை மாதம் திருமணம் செய்துள்ளார்.

இவரும் மென் பொறியாளராக வேலை பார்த்து வரும் நிலையில், நேற்றைய தினம் வழக்கம் போல் பார்த்திபன் வேலைக்கு புறப்பட்ட நிலையில், மர்ம கும்பல் ஒன்று அவரைக் கடத்திச் சென்றது.

மகனின் அலறல் சத்தம் கேட்டு வந்து தடுத்த தாயையும் கீழே தள்ளிவிட்டு சென்றுள்ளது. பின்பு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

பொலிசார் அங்கிருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்த போது, பல திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. மேலும் பார்த்திபனின் செல்போன் சிக்னலை வைத்து ஆய்வு செய்த போது காஞ்சிபுரத்தில் அடைத்து வைத்திருப்பதும் அம்பலமாகியுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் 1 பெண் உட்பட 4 பேரை கைது செய்து விசாரித்ததில் பார்த்திபனின் முன்னாள் காதலி சவுந்தர்யா என்பது தெரியவந்துள்ளது.

கல்லூரி படிக்கும் இருவரும் காதலித்து வந்த நிலையில், 7 வருட காதல் திடீரென கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். பேச்சு வார்த்தை இல்லை என்றாலும் பார்த்திபன் நினைவாகவே இருந்த சவுந்தர்யா தனது தாயிடம் புலம்பி அழுதுள்ளார்.

இதனால் பார்த்திபனை கடத்திச் சென்று கட்டாயப்படுத்தி தாலி கட்டி வைத்துள்ளனர். பொலிசார் காதலி சவுந்தர்யா அவருக்கு உதவியாக இருந்த தாய், தாய்மாமன், சித்தப்பா உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர்.

2484 கோடி சொத்துக்களை விட்டு காதலனை கரம் பிடித்த இளம்பெண்!!

மலேசியாவில்..

மலேசிய தொழில் அதிபர் கூ கே பெங். இவருக்கு வயது 78. கூ கே பெங், மலாயன் யுனைடெட் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் . அதாவது சொகுசு பிராண்டுகள் மற்றும் ஓட்டல்களில் பெரும் பங்குகளைக் கொண்ட பெரும் முதலீட்டு நிறுவனம். 2015ல் போர்ப்ஸ் பத்திரிகையில் மலேசியாவின் 50 பணக்காரர்களில் 44 வது இடத்தைப் பிடித்தவர்.

அவரது சொத்தின் நிகர மதிப்பு 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் . இவருடைய மகள் ஏஞ்சலினா ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தபோது தன்னுடன் படித்த சக மாணவரான ஜெடிடியாவை காதலித்து வந்தார். தனது காதல் குறித்து பெற்றோரிடம் தெரிவித்த போது அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பணம், சொத்து, அந்தஸ்து போன்ற காரணங்களை கூறி ஏஞ்சலினாவின் காதலை அவரின் தந்தை ஏற்கவில்லை. இதன் காரணமாக பரம்பரை சொத்துகள் அனைத்தையும் உதறி விட்டு வெளியேறி தனது காதலரை திருமணம் செய்துகொண்டு புதிய வாழ்க்கையைத் தொடங்க முடிவு செய்திருந்தார்.

ஏஞ்சலினாவும், ஜெடிடியாவும் 2008ல் திருமணம் செய்து கொண்ட நிலையில், தனது குடும்பத்தினரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். ஏஞ்சலினா தனது பெற்றோரின் விவாகரத்தில் சாட்சிக்காக நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டார்.

தந்தை பணம் சம்பாதித்து கொண்டிருந்த போது தாய் தான் முழுவதுமாக குடும்பத்தை பார்த்துக் கொண்டதால் தனது ஆதரவாக ஏஞ்சலினா கருத்து தெரிவித்தார்.

வெகுவிரைவில் தாயும், தந்தையும் மீண்டும் ஒன்றாக சேர்வார்கள் எனக் கூறினார். ஏஞ்சலினாவின் கதையும் காதலைப் பற்றிய அவரது நேர்மறையான கருத்தும் உலகம் முழுவதும் பெரும் பேசுபொருளாகி வருகிறது. இது குறித்து ஏஞ்சலினா கூறும்போது ”நாம் விரும்பினால் எப்போதும் பணம் சம்பாதிக்கலாம்.

ஆனால் அன்பு விலைமதிப்பற்றது. பணம் பல எதிர்மறை குணங்களுடன் வருகிறது. பிரச்சனைகள் குழப்பத்தை ஏற்படுத்தும். ஆனால் அன்பு மட்டுமே மகிழ்ச்சியைத் தரும்” எனக் கூறியுள்ளார்.

தாயின் இறுதிச்சடங்கிற்கு சென்ற மகனும் விபத்தில் பலியான சோகம்!!

மத்தியபிரதேசத்தில்..

மத்தியபிரதேச மாநிலத்தில் ரேவா மாவட்டம், ஜாத்ரி கிராமத்தில் ராணிதேவி தன்னுடைய மூத்த மற்றும் கடைசி மகனுடன் வசித்து வந்தார். இவருக்கு 3 மகன்கள், 3 மகள்கள். ராணி தேவி, தனது தாய் வீட்டிற்கு செல்வதற்காக மகன் ஸன்னியுடன் இருசக்கர வாகனத்தில் கிளம்பினார்.

வீட்டிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் தபோராவுக்கு அருகில் சென்ற போது எதிரே வந்த பைக் மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

முதலுதவி அளித்த பிறகு மருத்துவர்கள் இருவரையும் 80 கிமீ தொலைவில் உள்ள ரேவா பகுதி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினர். கொண்டு செல்லும் வழியிலேயே ராணி தேவி உயிரிழந்தார்.

இந்த தகவல் மற்றொரு மகன் சூரஜ்ஜுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சூரஜ் உடனே தாயின் முகத்தை பார்க்க அவருடைய நண்பர் அபிஷேக் சிங்குடன் ஒரு காரில் புறப்பட்டார்.

அந்த கார் சாட்னா மாவட்டம் ராம்பூர் பகேலன் பகுதியில் வந்தபோது விபத்தில் சிக்கியது. டிரைவருடன் 3 பேரும் ரேவா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சூரஜ் உயிரிழந்தார்.

தாய், மகன் இருவரது உடல்களும் ஜாத்ரி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 12மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து தாயும் மகனும் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

செல்போனில் மூழ்கிய மனைவி.. கணவன் செய்த கொடூரம்.. உடந்தையாக இருந்த மாமனார்!!

கர்நாடகாவில்..

கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டம் கொப்பலு கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீநாத். இவருக்கும் பூஜா என்பவருக்கும் 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.

பூஜா ரீல்ஸ் பதிவிடுவது, ஷார்ட் பதிவிடுவது என சமூக வலைதளங்களில் அதிக நாட்டம் காட்டி வந்தார். இது ஒரு கட்டத்தில் கணவன் – மனைவிக்கு இடையே பிரச்னையை உண்டாக்கியது. மேலும் மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாகவும் ஸ்ரீநாத் சந்தேகப்பட்டார்.

இந்த நிலையில் ஏன் செல்போனிலேயே அதிக நேரம் செலவழிக்கிறாய் என கேட்டு பூஜாவிடம் சில நாட்களுக்கு முன்பு சண்டையிட்டுள்ளார் ஸ்ரீநாத். இதனால் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதனால், மனைவி மீது கடும் ஆத்திரத்தில் இருந்த ஸ்ரீநாத் ஒரு கட்டத்தில் துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். கொலை நடந்த சில நாட்களுக்குப் பிறகு, ஸ்ரீநாத் நிமிஷாம்பா கோயிலுக்கு சென்று தங்கியுள்ளார்.

எனினும், மனைவியை கொன்ற குற்ற உணர்வு மேலோங்கவே போலீசில் சரணடைந்தார். அங்கு அவர் அளித்த வாக்குமூலம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மனைவியின் உடலை அப்புறப்படுத்த தனது மாமனார்தான் உதவினார் என வாக்குமூலம் அளித்தார். மனைவியை கொலை செய்த பிறகு மாமனார் சேகரிடம் சென்ற ஸ்ரீநாத், தான் பூஜாவை கொலை செய்துவிட்டதாக ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து, மகளை கொன்ற குற்ற உணர்வு இல்லாமல் உடலை அப்புறப்படுத்த மாமனாரும் உதவி செய்துள்ளார். அதன்படி, மோட்டார் சைக்கிளில் பூஜாவின் உடலை எடுத்துச் இருவரும், பெரிய கல்லைக் கட்டி அருகில் இருக்கும் ஆற்றில் இறக்கியுள்ளனர்.

ஸ்ரீநாத் மற்றும் சேகர் இருவரும் தற்போது அரகெரே காவல் நிலையத்தில் போலீஸ் கஸ்டடியில் உள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் மர்ம மரணம் : கணவன், மாமனாருக்கு போலீஸ் வலைவீச்சு!!

அரியலூரில்..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே திருமணமாகி 4 வருடமான நிலையில் பட்டதாரி பெண் மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து மாமனார், கணவரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த கடாரங்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் பிரகாஷ். இவர் தனியார் ஓட்டுநராகவும், அவ்வப்போது எலக்ட்ரீசியன் வேலையும் செய்து வருகிறார்.

இவருக்கும், தெற்கு தெரு ஆயுதகளம் கிராமத்தைச் சேர்ந்த காசிநாதன் என்பவரது மகள் ஷாலினி (பி ஏ) ஆகிய இருவருக்கும் நான்கு வருடத்திற்கு முன்பு திருமணமாகி இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

பிரகாஷ், மனைவி ஷாலினி மற்றும் மாமனார் பன்னீர்செல்வம் ஆகியோருடன் அவ்வப்போது குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு ஒரு மணி அளவில் கணவர் பிரகாஷ், மனைவி ஷாலினிக்கும் பிரச்சினை ஏற்பட்டு சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஷாலினி வீட்டில் பின்புறம் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதுகுறித்து சம்பவ இடத்திற்கு சென்ற ஜெயங்கொண்டம் காவல் துறையினர் ஷாலினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ஷாலினி மரணத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் கணவர் பிரகாஷ், மாமனார் பன்னீர்செல்வம் ஆகியோரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். 2 வயதில் குழந்தை இருக்கும் நிலையில் பட்டதாரி பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இரண்டு முறையும் தோல்வி : தந்தையும் மகனும் தற்கொலை செய்த சோகம்!!

சென்னையில்..

சென்னையில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவன் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தந்தையும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் ஜெகதீஸ்வரன் (19) இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதியுள்ளார். இந்த நிலையில் 2 முறை தேர்வு எழுதியும் தோல்வியைடந்ததால் ஜெகதீஸ்வரன் மனமுடைந்தார்.

அதே சமயம் தன்னுடன் பயின்ற சில மாணவர்கள் பொறியியல் படிப்பை தேர்ந்தெடுத்ததும், இருவர் தனியார் மருத்துவ கல்லூரியில் பணம் செலுத்தி சேர்ந்ததும் தெரிய வந்ததால் ஜெகதீஸ்வரன் விரக்தியில் இருந்துள்ளார்.

இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து ஜெகதீஸ்வரன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். பொலிஸார் விசாரணைக்கு பிறகு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. மகனை இழந்த சோகத்தில் தந்தை செல்வமும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் செல்வத்தின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நீட் தேர்வு தோல்வி விரக்தியில் மாணவன் உயிரிழந்த நிலையில், தந்தையும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா வைத்தியசாலை விவகாரம் : வடக்கு ஆளுநர் உத்தரவின் பேரில் மூவர் கொண்ட குழு விசாரணைக் குழு நியமனம்!!

வவுனியா பொது வைத்தியசாலையில் சிசுவொன்றுக்கு சிகிச்சை அளிப்பதில் தாதியர் நடந்துகொண்ட விதம் மற்றும் தாதிய உத்தயோகத்தர்கள் தமது கடமையை சீராக செய்யவில்லை என தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை விசாரணை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய வட மாகாண ஆளுனர் உத்தரவின் போரில் மூவர் கொண்ட குழு வடமாகாண சுகாதார பணிப்பாளரால் (15.08.2023) நியமிக்கப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலையில் கடந்த 4 ஆம் திகதி குழந்தை குழந்தை பேற்றுக்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் மற்றும் அவரது கணவருடன் பிரசவ விடுதியில் கடமையிலிருந்த தாதிய உத்தியோகத்தர் ஒருவர் முரண்பட்ட நிலையில் குழந்தை பிறந்த பின்னரும் குறித்த முரண்பாடு தொடர்ந்து நிலையில் அவ்விடயம் தொடர்பாக குழந்தையின் தந்தையால் முகப்புத்தகத்தில் பகிரப்பட்டிருந்தது.

இதன் காரணமாக வவுனியா சுகாதார வட்டாரத்திலும் மக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் வட மாகாண ஆளுனரின் கவனத்திற்கு இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக ஆளுனரின் ஆலோசனைக்கமைய வட மாகாண சுகாதார பணிப்பாளர் இன்று காலை வவுனியா வைத்தியசாலைக்கு வருகை தந்து வைத்தியசாலையில் கலந்துரையாடியதுடன் மூவர் கொண்ட குழுவும் விசாரணைக்காக நியமித்துள்ளார்.

யாழில் வெளிநாட்டு பண உதவியுடன் அரங்கேறிய மோசமான சம்பவம்!!

யாழில்..

யாழ்.கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது வன்முறைக் கும்பல் ஆயுதங்களுடன் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் அந்த தாக்குதலுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளாதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

கல்வியங்காடு பூதவராயர் வீதியில் உள்ள அரச உத்தியோகத்தர் ஒருவரது வீட்டின் மீதே இன்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,பெண்களின் ஆடை அணிந்து வந்த ஒருவர் உட்பட்ட ஆயுதங்களுடன் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பலே அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், மாணவர்களின் புத்தகப்பை என்பன தீயிட்டு கொளுத்தப்பட்டதுடன் யன்னல் கண்ணாடிகள், கண்காணிப்பு கமராக்கள் என்பனவும் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கண்காணிப்பு கமராக்களில் பதிவான காட்சிகளை அடிப்படையாக கொண்டு கோப்பாய் பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

வெளிநாட்டில் உள்ள தரப்பே இங்குள்ள வன்முறை கும்பலுக்கு பணம் அனுப்பி குறித்த வன்முறையில் ஈடுபட்டதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதேவேளை கல்வியங்காட்டில் வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பப்பட்டு பல்வேறு வன்முறை சம்பவம் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றபோதும் குற்றவாளிகளோ? வன்முறைக் கும்பலோ? இதுவரை கைது செய்யப்படுவதில்லை என பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இலங்கையில் சடுதியாக உயர்வடைந்துள்ள தங்கத்தின் விலை!!

தங்கம்..

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றைய நாளுடன் (14.08.2023) ஒப்பிடுகையில் இன்றைய தினம் (15.08.2023) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

அந்தவகையில், இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 613,008 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் (14.08.2023) 24 கரட் 8 கிராம் (1பவுன்) தங்கத்தின் விலை 172,960 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.

இன்றைய தினம் ( 15.08.2023) 24 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 40 ரூபாவினால் அதிகரித்து 173,000 ரூபாவாகவும் 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 158,650 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 158,550 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

பாடசாலைகளுக்கான விடுமுறை : சற்றுமுன் வெளியான அறிவிப்பு!!

பாடசாலைகளுக்கான விடுமுறை..

இலங்கையில் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளுக்குமான இரண்டாம் தவணை விடுமுறை எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடயத்தை சற்று முன் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான முதற்கட்ட விடுமுறை எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதியிலிருந்து ஆகஸ்ட் 28ஆம் திகதி வரை வழங்கப்படவுள்ளது.

எனவே, பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் 28ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பேஸ்புக் பதிவால் பறிபோன இளம் தந்தையின் உயிர்!!

தொடம்கொடவில்..

தொடம்கொட பிரதேசத்தில் வீடு புகுந்து நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக பேஸ்புக்கில் விளம்பரம் செய்த சம்பவம் காரணமாக போதைப்பொருள் வியாபாரி உள்ளிட்ட குழுவினர் கூரிய ஆயுதங்களுடன் தொலலந்த பிரதேசத்தில் வீடொன்றிற்குள் புகுந்து ஒருவரைக் கொன்றுவிட்டு தப்பி ஓடியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்டவர் 37 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான திமுத் சாமிக்க என்ற தொடங்கொட தொலலந்த பிரதேசத்தில் வசித்து வந்தவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொல்லப்பட்ட நபர் நேற்று முன்தினம் தனது வீட்டிற்கு அருகில் மதுபான விருந்துக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் போது வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த போதைப்பொருள் வியாபாரி மற்றும் குழுவினர் கூரிய ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொல்லப்பட்டவர் மத்துகம ஷான் என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் கும்பலைச் சேர்ந்தவர் எனவும், போதைப்பொருள் கடத்தல் கும்பலில் இருந்து விலகியவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

போதைப்பொருள் கடத்தல் கிராமத்திற்கு தலைவலி என கொலைசெய்யப்பட்ட நபர் பேஸ்புக்கில் விளம்பரம் செய்ததன் காரணமாகவே இக்கொலை நடந்துள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சில தினங்களுக்கு முன்னர், கொலைசெய்யப்பட்ட நபர் தொடம்கொட பொலிஸ் நிலையத்திற்கு வந்த வீடு திரும்பும் போது, ​​போதைப்பொருள் கும்பலை சேர்ந்தவர்கள் அவரை அடித்து, பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதியில் விட்டு சென்றிருந்ததாக பொாலிஸார் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரம் தொடருந்து நிலைய உணவகத்தின் உணவுகள் மீது எலி : ஆதாரத்துடன் காட்டிக் கொடுத்த மக்கள்!!

அநுராதபுரத்தில்..

அநுராதபுரம் தொடருந்து நிலைய நடைமேடையில் உள்ள உணவகத்தில் உணவு பொதி செய்யப்பட்ட அலமாரிகளில் எலிகள் சுற்றித் திரிவதாக பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.இதனைப் பார்த்த பயணிகள் அதனை தமது கைத்தொலைபேசியில் பதிவு செய்து சம்பந்தப்பட்ட துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதற்கமைய, ரயில்வே அதிகாரிகள், உணவகத்திற்கு சீல் வைத்ததையடுத்து, உணவகத்தை நடத்தி வந்தவர், சீலை உடைத்து, உபகரணங்கள் மற்றும் உணவு பொருட்களை எடுத்துச் சென்றுள்ளார்.

பின்னர் சுகாதார அதிகாரிகள் வந்து உணவகத்திற்கு மீண்டும் சீல் வைத்ததுடன், மறைத்து வைக்கப்பட்ட உணவை எடுத்து வருமாறு சம்பந்தப்பட்ட நபருக்கு உத்தரவிட்டனர்.

இந்த உணவகத்தை நடத்தியவர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், அநுராதபுரம் தொடருந்து நிலையம் மட்டுமன்றி கொழும்பு கோட்டை, கண்டி, மஹவ மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய தொடருந்து நிலையங்களிலும் இதே நபர் உணவகங்களை நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது.

மலையக குயில் அசானிக்கு பின்னணி குரல் கொடுத்த யாழ் கில்மிக்ஷா!!

தென்னிந்தியாவில்..

தென்னிந்திய தொலைகாட்சியில் இடம்பெறும் சரிகமப நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து சென்ற இரண்டு சிறுமிகள் தங்களின் திறமையால் ஒட்டுமொத்த உலகவாழ் தமிழர்களின் கவனத்தினையும் ஈர்த்து வருகின்றனர்.

யாழ்பாணத்தை சேர்ந்த கில்மிக்ஷா, மற்றும் பெருந்தோட்ட தொழிலாளியின் மகளான அசானி ஆகியோரே தமது திறமைகளை வெளிப்படுத்த களம் அமைத்துகொடுத்துள்ளது தென்னிந்திய தொலைகாட்சியின் ஜீ தமிழ் சரிகமப நிகழ்ச்சி.

இந்த வாரம் நடைபெற்ற பக்தி பாடல்கள் சுற்றில் நடுவர்கள் முதல் சரிகமப அரங்கத்தினையே அசானி பக்தி பரவசப்படுத்தியுள்ளார்.“தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா” என அவர் பாடிய பாடல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதில் சிறப்பம்சம் என்னவென்றால் அசானிக்கு பின்னணியில் யாழ் குயில் கில்மிசாவும் பாடுகின்றார்.மலையக குயிலும் ஈழத்து குயிலும் பாடிய பாடலை ரசிகர்கள் தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

யாழில் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பெண் சமுர்த்தி முகாமையாளர்!!

யாழில்..

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் நேற்று (14-08-2023) இடம்பெற்றுள்ளது.

சமிக்ஜை விளக்கு ஒளிர்ந்த பின்னும் கட்டுப்பாட்டை மீறி பயணித்த டிப்பர் மோதி சமுர்த்தி முகாமையாளர் ஒருவர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் கோப்பாய் பகுதியை சேர்ந்த 52 வயதுடைய பெண் சமுர்த்தி முகாமையாளரே உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான் A9 வீதி பனிச்சங்குளம் பகுதியில் விபத்து : மூவர் பலி!!

மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A9 வீதி பனிச்சங்குளம் பகுதியில் இன்று (15.08.2023) அதிகாலை மூன்று வாகனங்கள் விபத்தில் சிக்கியதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

அதே திசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் பின்பகுதியில் வான் மோதியதிலேயே குறித்த லொறிக்கு முன்னால் சென்ற மற்றுமொரு லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது பின்னால் இருந்த லொறியின் சாரதி வாகனத்தை விட்டு இறங்கியதில் இரண்டு லொறிகளில் சிக்கி பலத்த காயங்களுக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லொறியின் பின்பகுதியில் பயணித்த ஒருவரும், வானின் முன் இருக்கையில் பயணித்த நபரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகி மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளனர்.

மேலும், வானில் பயணித்த மூன்று பெண்களும், லொறியில் பயணித்த ஆண் ஒருவரும் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், லொறியில் பயணித்த மூன்று ஆண்கள் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முல்லேரியா, வெல்லம்பிட்டி மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 38, 46 மற்றும் 58 வயதுடையவர்களே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். விபத்து தொடர்பில் வான் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.