மன்னார் கத்தோலிக்க ஊடகத்தின் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஜெகநாதன் உயிரிழந்தமைக்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.அதன்படி ஜெகநாதனின் உடலில் விச ஜந்து ஒன்று தாக்கியதன் காரணமாகவே இந்த மரணம் சம்பவித்துள்ளதாக பிரேதப் பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது.
இவர் மடுத் திருவிழா கத்தோலிக்க நிகழ்வுகளை நேரலையாகத் தொகுத்து அனுப்பும் பணியை செய்துள்ளார்.மன்னார் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள புதுக்கமத்தைச் சேர்ந்த ஜெகநாதன் டிரோன் (வயது 28) என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (13) இரவு எட்டாம் நாள் நவநாள் ஒளிப்பரப்பு நிகழ்வுகளை முடித்துவிட்டு மடுவில் தனது நண்பர்களுடன் இரவு 11 மணியளவில் உரையாடிக் கொண்டிருந்தபோதே இவர் திடீரென மரணித்துள்ளதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.மன்னார் கத்தோலிக்க ஊடகத்தின் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஜெகநாதன் டிரோன் தனது 27ஆவது வயதில் மடுவில் காலமானார்.
கடமை நிமித்தம் மடுத் திருவிழாவுக்குச் சென்ற நிலையில், நேற்று (13.08.2023) இரவு திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக மடு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழப்பிற்கான காரணம் இது வரை கண்டறியப்படவில்லை.தற்போது சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
களுத்துறை பாடசாலை ஒன்றில் இரு சுவர்களுக்கு இடையில் சிக்கியிருந்த 7 வயதான சிறுமியை சுமார் 30 நிமிட போராட்டத்திற்கு பின்னர் மீட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.சுவருக்குள் சிக்கிகொண்ட சிறுமியை களுத்துறை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரே மீட்டுள்ளனர்.
களுத்துறை – கட்டுகுருந்த றோமன் கத்தோலிக்க பாடசாலையில் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளார்.பள்ளியின் கழிவறை அமைப்புக்கும் சுவருக்கும் இடையே சிறுமி சிக்கிக் கொண்டதாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து , களுத்துறை மாநகர தீயணைப்புத் துறையின் அவசர ஆம்புலன்ஸ் வந்து அதிநவீன கருவியின் உதவியுடன் இரண்டு சுவர்களைத் தள்ளி காப்பாற்றியதாகவும் தலைமை தீயணைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவர் ஒருவர் 11மணி 36 நிமிடத்தில் 1300 திருக்குறளை தென்னை ஓலையில் எழுதி சாதனை படைத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த வல்லாஞ்சேரி ரகுமான் தெருவைச் சேர்ந்தவர் முகமது இஷாக்.
இவர் ப்ரிட்ஜ், வாஷிங் மிஷின் பழுது பார்க்கும் தொழில் செய்து வரும் நிலையில், இவரது மனைவி ஷகீலா பானு. இந்த தம்பதிகளின் மூத்த மகன் வஜாகத்(15) என்பவர் தனியார் பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படித்து வருகின்றார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவர்களுக்கான திறன் வளர்ச்சி போட்டியில் கலந்து கொண்டு 2 சாதனைகளை படைத்துள்ளார். இதில் முதல் சாதனையாக 6 வகையிலான ரூபிக்ஸ் க்யூப் இணைத்து கொண்டே 160 திருக்குறளை 7 நிமிடம், 41 நொடியில் உச்சரித்துள்ளார்.
மற்றொரு சாதனையாக 1330 திருக்குறளை 11 மணி 36 நிமிடத்தில் 133 தென்னை ஓலையில் பேனா மூலம் தொடர்ந்து எழுதி முடித்து சாதனை படைத்துள்ளார்.
இதுகுறித்து மாணவன் கூறுகையில், ”நான் 2 சாதனைகளை நிகழ்த்துவதற்கு எனது பெற்றோர் மற்றும் தம்பி, உறவினர்கள், சக மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் என அனைவரும் ஒத்துழைப்பு தந்ததால் தான் தன்னால் முடிந்தது என்றும் இன்னும் பல உலக சாதனைகளை நிகழ்த்தி தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்ப்பதுதான் எனது லட்சியம்” எனறு கூறியுள்ளார்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் கல்லூரணி கிராமம் வஉசி நகரில் வசித்து வருபவர் சின்னத்துரை. இவரின் மகள் குமுதா. இவருக்கும் ராயப்பநாடானூர் கிராமத்தில் வசித்து வரும் வேலாயுதம் மகன் சுதர்சனுக்கும் 6 மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடைபெற்றது.
இதில் சென்னையில் காவலராக பணிபுரிந்து வரும் சுதர்சன் திருமணமாகி 25 நாட்கள் மட்டுமே குமுதாவுடன் வாழ்ந்தார். சென்னையில் வீடு பார்த்து விட்டு வந்து அழைத்துச் செல்வதாக கூறி குமுதாவின் தாய் வீட்டில் விட்டுச் சென்றுவிட்டார்.
கூறியபடி குமுதாவை அழைத்துச் செல்லவில்லை. குமுதா தொலைபேசியில் அழைத்தாலும் சுதர்சன் அழைப்பை ஏற்காமல் நிராகரித்து வந்துள்ளார். சில நாட்களுக்கு பிறகு குமுதாவிடம், உன்னை எனக்குப் பிடிக்கவில்லை.
நான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள போகிறேன் எனக் கூறியுள்ளார். இதனை குமுதாவின் குடும்பத்தினர் சுதர்சனின் குடும்பத்தினரிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தும் எந்தவித பலனும் இல்லை. தொலைபேசியில் குமுதா அழைக்கும் பொழுதெல்லாம் கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்டே இருந்துள்ளார்.
தன்னை அழைத்து செல்வார் என்ற ஏக்கத்திலேயே இருந்த குமுதா, நேற்று முன் தினம் இரவில் விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு சுதர்சன் வந்திருந்ததை அறிந்து தனது உறவினர்களுடன் சேர்ந்து சுதர்சனின் வீட்டுக்கு சென்று திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
குமுதா நீண்ட நேரம் சுதர்சனின் வீட்டு வாயிலில் இருந்த போதும் சுதர்சனின் வீட்டில் உள்ளவர்கள் வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். பின்னர் குமுதா தனது தாய் வீட்டிற்கு சென்ற நிலையில் சுதர்சன் குமுதாவை மொபைலில் அழைத்து கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
மன அழுத்தத்தில் இருந்த குமுதா நேற்று காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இப்பதான கல்யாணமாச்சு… தாலிக் கயிற்றின் மஞ்ச வாசம் கூட மறையலையே அதுக்குள்ள என்ன அவசரம் இப்படி தூக்கில் தொங்கிட்டாளே… என இச்சம்பவம் அந்த கிராமம் முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக 7 பேர் காயமடைந்துள்ளனர்.பம்பலப்பிட்டி, டூப்ளிகேஷன் வீதியில் கொழும்பில் இருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
போக்குவரத்து சமிக்ஞைகளை மீறி குறித்த பேருந்து கொழும்பில் இருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த போது தும்முல்லயிலிருந்து வந்த லொறியுடன் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் 7 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த விபத்தில் பெண்கள் இருவர் மற்றும் ஆண்கள் ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கர வண்டி ஓட்டப்பந்தயத்தை காணொளி பதிவு செய்து கொண்டிருந்த இரு இளைஞர்கள் மின்கம்பத்தில் மோதியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொரு இளைஞர் படுகாயமடைந்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் பாணந்துறை நல்லுருவ மொரவின்ன பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய ஜயவீர லியனகே தேஷான் பெரேரா என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறையில் இருந்து பாணந்துறை நோக்கி இடம்பெற்ற முச்சக்கரவண்டி போட்டியை மோட்டார் சைக்கிள்களில் காணொளி எடுத்துக்கொண்டு மற்றுமொரு இளைஞர் குழு வந்துள்ளது.
இதன்போது நல்லுருவ பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதியதில் பலத்த காயமடைந்த இரு இளைஞர்களும் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அனுமதிக்கப்பட்ட இளைஞர்களில் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி பிரசான் விஜேதுங்கவினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு பிட்டிப்பன மீன் சந்தைக்கு அருகில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அனுமதி பத்திரம் வழங்கும் இளைஞன் நேற்று காலை தலையில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்களுக்கு ஏற்பட்ட தவறினால் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸ் அத்தியட்சகர் எரிக் பெரேரா தெரிவித்தார்.நீர்கொழும்புக்கு வடக்கே பிட்டிப்பன பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய தனுஷ்க அஞ்சன என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.குறித்த இளைஞன் விரைவில் திருமணம் செய்ய இருந்ததாகவும் கூறப்படுகிறது.
பிட்டிப்பன லெல்லம என்ற இடத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவரால் குறித்த இளைஞன் தலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.இதன்போது, பிட்டிப்பன லெல்லம மீன் சந்தைக்கு அருகில் அதிகளவான மக்கள் சுற்றித் திரிந்த நிலையில், சந்தேகநபர்கள் இளைஞனைக் கொன்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர்.
சாதாரண காதல் விவகாரத்தின் அடிப்படையில் சந்தேகநபர்கள் தொடர்பில்லாத நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த இளைஞரைப் போன்று மேலும் ஒருவர் இருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் சிகேரா மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் எரிக் பெரேரா ஆகியோரின் பணிப்புரைக்கு அமைவாக துங்கல்பிட்டிய பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி ரோஹன சில்வா இந்த கொலை தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.
சிசிடிவி காட்சிகள் மற்றும் கொலையாளிகள் வந்த மோட்டார் சைக்கிளின் இலக்கம் மற்றும் உயிரிழந்த இளைஞருக்கு கிடைத்த தொலைபேசிச் செய்தி இலக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் சந்தேக நபர்களை கைது செய்வது கடினம் அல்ல என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து அரசாங்கத்திடம் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரெஞ்சிகே விடுத்துள்ள கோரிக்கையில் மேலும்,ஜப்பானில் இருந்து வாகனங்களை கடன் அடிப்படையில் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
வாகனங்களை இறக்குமதி செய்யும் போது நாட்டின் வெளிநாட்டு கையிருப்பில் இருந்து பணத்தை செலவழிக்க வேண்டிய அவசியமில்லை.இவ்வாறு வாகனங்களை இறக்குமதி செய்யும் போது வாகனங்களின் விலை தற்போதைய விலையை விட 70% குறையலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனது மரணத்திற்கு மனைவியும், காதலியும் தான் காரணம் என பதிவிட்டு விட்டு ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரைச் சேர்ந்தவர் பாரத் மிஸ்ரா. 45 வயதான இவர் பத்திரிகை ஒன்றில் உள்ளூர் செய்தியாளராக பணியாற்றி வந்துள்ளார்.
இவருக்கும் கவுசல்யா என்பவருக்கும் 21 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. அதன்பிறகு பின்சி பெரேரா என்ற பெண்ணுடன் காதலில் விழ திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார். இந்த உறவு குறித்து கவுசல்யாவிற்கு முதலில் தெரியவில்லை. இதனால் மனைவிக்கு தெரியாமல் காதலியுடன் இருந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் கவுசல்யாவிற்கு பாரத் மிஸ்ராவின் திருமணத்தை மீறிய உறவு குறித்து தெரியவந்தது. இதனால் இருவருக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்ட நிலையில், பாரத் மிஸ்ரா மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மதியம் பின்சி பெரேராவுடன் செல்போனில் கடுமையான வாக்குவாதத்தில் பாரத் மிஸ்ரா ஈடுபட்டுள்ளார். சிறிது நேரத்தில் பின்சி வீட்டிற்கு சென்ற அவர், அங்கு துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக்கொண்டார்.
இந்த விபரீத முடிவை எடுக்கும் முன்னர் பேஸ்புக்கில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், தன்னுடைய மரணத்திற்கு மனைவி கவுசல்யாவும், காதலில் பின்சி பெரேராவும் தன் வாழ்க்கையில் ஏற்படுத்திய குழப்பம்தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட பதிவில், “எனது வாழ்க்கையை முடித்துக்கொள்கிறேன். என் மனைவி கெளசல்யா அனைத்தும் இடங்களில் என்னை இழிவுபடுத்தினார். அவரிடம் இருந்து எனக்கு எந்த வித சந்தோஷமும் கிடைக்கவில்லை.
அவரை விவாகரத்து செய்ய பல முறை நினைத்தேன். என் வயதான தாய் மற்றும் தந்தையின் மீதான மரியாதைக்காக சகித்துக்கொண்டேன். பிறகு அவரை பிரிந்து என் வழியில் வாழ ஆரம்பித்தேன்
இதற்கிடையில், என் வாழ்க்கையில் பின்சி பெரேரா வந்தார். எங்கள் வாழ்க்கை மிகவும் நன்றாக இருந்தது. பின்சி வீட்டிற்கு வந்த கெளசல்யா அவதூறாக பேசினார். நானும் பின்சியும் நீண்ட காலமாக கணவன் – மனைவியாக வாழ்ந்து வந்தோம்.
ஆனால் பின்சியும் என் மனைவி கௌசல்யாவை பற்றி பேச ஆரம்பிக்க எங்கள் சண்டை அதிகரிக்க ஆரம்பித்தது. கௌசல்யா என் வாழ்க்கையை சீரழித்துவிட்டார். பின்சி நீயும் என் வாழ்க்கையை சீரழித்துவிட்டாய்.
உங்கள் இருவராலும் நான் தற்கொலை செய்துகொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். பாரத் மிஸ்ராவின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பஞ்சாப்பின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் முச்சல் கிராமத்தில் பெற்றோர், மனைவி மற்றும் 5 குழந்தைகளோடு வசித்து வருபவர் பாவ். இவர் சீக்கியர்களின் நிஹாங் பிரிவைச் சேர்ந்தவர்.
4 மகள், ஒரு மகன் என 5 வாரிசுகளை உடைய பாவின் குடும்பத்தில், 3வது மகளை காணவில்லை. வீட்டில் தகவல் எதுவும் தெரிவிக்காமல் அந்த 16 வயது பெண் வெளியே சென்றதில் தந்தை பாவ் கோபம் அடைந்தார். வியாழக்கிழமை அந்த பெண் வீட்டுக்கு திரும்பி வந்தார்.
வந்ததும் ஏன் சொல்லிவிட்டு போகவில்லை எங்கே சென்றுவந்தாய்? என பலக் கேள்விகளை எழுப்பினார். மகள் அமைதியாக இருந்தார் எந்த பதிலும் சொல்லவில்லை.
உடனே ஆத்திரத்தில் கைவசமிருந்த கூர்மையான ஆயுதத்தால் மகளை ஆத்திரம் தீரக் குத்திக் கொலை செய்தார். இச்சம்பவம் குறித்து குடும்பத்தில் எவரேனும் வெளியே கூறினால் அவர்களுக்கும் இதே கதி தான் என மிரட்டல் விடுத்தார். மகளின் சடலத்தை பைக்கில் கட்டி தரதரவென சுமார் அரை கிமீ தொலைவுக்கு கிராமத்தின் சாலைகளில் உயிரிழந்த மகளை இழுத்து சென்றார்.
கடைசியில் ஊர் எல்லையில் இருந்த தண்டவாளத்தில் மகள் சடலத்தை வீசிவிட்டு தலைமறைவாகி விட்டார். குடும்பத்தினர் அச்சத்தில் வாய் மூடியிருந்த போதும், ஊருக்குள் நேரில் பார்த்தவர்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அத்துடன் பாவ் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெற்ற மகளை கொன்று விட்டு தலைமறைவாக இருக்கும் இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய பள்ளிப்பிள்ளைகளுக்கு ஆசிரியர்கள் எதுவும் கேட்க கூடாது. வீட்டில் பெற்றோர்களும் கண்டிக்க கூடாது . உடனே பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாகி விடுகின்றனர்.
இதனால் விபரீதமான முடிவுகளையும் எடுத்துவிடுகின்றனர். பெற்றோருக்கும் பயந்து, பிள்ளைகளுக்கும் பயந்து இன்றைய பெற்றோரின் நிலைமை மிக பரிதாபமாக உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அண்ணா நகர் பகுதியில் வசித்து வருபவர் கணேசன்.கூலித்தொழிலாளியான இவருடைய மகள் சுபிஷா. இவர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
சமீபத்தில் பள்ளியில் நடத்தப்பட்ட மாதாந்திர தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் எடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆசிரியர்கள் மாணவியின் பெற்றோரை அழைத்து மதிப்பெண்கள் குறைவாக வாங்கியது குறித்து கண்டித்துள்ளனர்.
வீட்டுக்கு சென்ற பெற்றோர் மகளை மதிப்பெண்கள் குறைந்ததற்காக கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி சுபிஷா வீட்டில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்வில் மதிப்பெண் குறைந்ததை பெற்றோர் கண்டித்ததால் 10ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்திய மாநிலம் தெலங்கானாவில் அரசு அலுவலக கட்டடம் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதால் ஊழியர்கள் அச்சத்தில் ஹெல்மெட் அணிந்து பணிபுரியும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.தெலங்கானா மாநிலத்தில் ஜக்தியால் மாவட்டத்தில் உள்ள பீர்பூர் நகர் அருகே வருவாய்த்துறை அலுவலகம் உள்ளது.
அங்கு, அலுவலகத்தில் உள்ள மேற்கூரை மிகவும் மோசமான நிலையிலும், எப்போது வேண்டுமானாலும் இடிந்து ஊழியர்கள் மீது விழும் நிலையில் இருக்கிறது.இதனால் அலுவலகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் எந்த நேரத்திலும் தங்கள் மீது விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் அலுவலக ஊழியர் ஒருவர் தப்பியோடியதை அடுத்து, அலுவலகத்தை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றுமாறு அலுவலக ஊழியர்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த அலுவலகம் பல ஆண்டுகளாக வாடகைக் கட்டடத்தில் அமைக்கப்பட்டு, உயர் அதிகாரிகளிடம் ஊழியர்கள் பலமுறை முறையிட்டும் இடமாற்றம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசு அலுவலர்கள் ஹெல்மெட் அணிந்து பணிபுரியும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோவில், “ஊழியர்கள் ஹெல்மெட் அணிந்து வேலை செய்கிறார்கள். மேலும், கட்டடம் எந்த நேரத்திலும் இடிந்து விடலாம் என்ற அச்சத்தில் பொதுமக்களும் உள்ளனர்” என்பதை காட்டுகிறது.
கட்டடம் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால், ஊழியர்கள் மட்டுமின்றி அலுவலகத்திற்கு வரும் கிராம மக்களும் அலுவலகத்திற்குள் செல்ல தயங்குகின்றனர்.சமீபத்தில் பெய்த கனமழையால் சுவர்கள் மற்றும் கூரைகள் ஈரமாகிவிட்டதால் பிரச்சினை மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
காவல்துறையில் பணிபுரிந்து கொண்டு காவலர் ஒருவரே தான் திருமணம் முடித்த பெண்ணை மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலை செய்யும் அளவிற்கு தூண்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கல்லூரணி கிராமம் வஉசி நகரை சேர்ந்தவர் சின்னத்துரை.
இவரது மகள் குமுதா(23), ஆவுடையானூர் அருகே உள்ள ராயப்பநாடானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மகன் சுதர்சன் (29), இவர் சென்னையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். சுதர்சனுக்கும், குமுதாவிற்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக பெரியோர்களின் முன்னிலையில் நிச்சயிக்கப்பட்டு திருமணமும் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சுதர்சன் திருமணமாகி 25 நாட்கள் மட்டுமே குமுதாவுடன் குடும்பம் நடத்திவிட்டு சென்னைக்கு சென்று உள்ளார். அப்போது அங்கு சென்று வீடு பார்த்துவிட்டு பின்பு வந்து அழைத்துச் செல்வதாக கூறி குமுதாவை அவரது தாய் வீட்டில் விட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் குமுதா தொலைபேசி வாயிலாக அழைத்த பொழுது அதனை சுதர்சன் நிராகரித்து வந்ததாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் சுதர்சன் குமுதாவிடம் உன்னை எனக்கு பிடிக்கவில்லை நான் வேறு ஒரு பெண்ணை விரும்புகிறேன் எனவும் கூறியதாக கூறப்படுகிறது.இதனால் அதிர்ச்சி அடைந்த குமுதாவின் குடும்பத்தினர் சுதர்சனின் குடும்பத்தினரிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் சுதர்சனின் பேச்சைக் கேட்டே இருந்துள்ளதாகவும் தெரிகிறது. மேலும் தொலைபேசியில் குமுதா சுதர்சனை அழைக்கும் பொழுதெல்லாம் கெட்ட வார்த்தைகளால் திட்டியதாகவும் இதனால் குமுதா மன வேதனையில் இருந்ததாகவும் தெரிகிறது.
இதே நேரம் சுதர்சன் தனது சொந்த ஊருக்கு வந்திருப்பதாக அறிந்த குமுதா தனது உறவினர்களுடன் சேர்ந்து நேற்று இரவு சுதர்சனின் வீட்டு வாயிலில் தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது தர்ணாவில் இருந்த குமுதாவிடம் பலரும் பேச்சுவார்த்தை நடத்தினர். குமுதா தர்ணாவில் இருந்ததை அறிந்து சுதர்சன் மற்றும் அவரது பெற்றோர் சுதாரித்துக் கொண்டு வீட்டிற்கு வராமல் வீட்டை பூட்டி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
மேலும் தகவலறிந்த பாவூர்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்ததோடு எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.இந்த நிலையில் இரவு நீண்ட நேரமாகியும் சுதர்சன் வீட்டை திறக்காததால் குமுதா தனது தாய் வீட்டிற்கு இரவில் சென்றுள்ளார். அப்போது இன்று அதிகாலையில் சுதர்சன் மற்றொரு செல்போன் நம்பரில் இருந்து குமுதாவை அழைத்து கடுமையான வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் விரக்தி அடைந்த குமுதா காலை 8 மணி அளவில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.மகள் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த குடும்பத்தினர் கதறி அழுதது காண்போரை கண் கலங்க செய்தது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாவூர்சத்திரம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குமுதா மீது ஏற்கனவே சுதர்சன் போலீசில் புகார் அளித்திருந்ததாகவும், அதில் குமுதாவிற்கு மனநிலை சரியில்லை என்றும் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. பதிலுக்கு குமுதா உறவினர்களும் சுதர்சன் மீது ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
திருமணம் செய்து விட்டு அவருடன் வாழாமல் ஒரு மாதத்திற்குள்ளாகவே அவரது உறவை முறித்ததால் மனமுடைந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அக்கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. காவல்துறையில் பணிபுரிந்து கொண்டு காவலர் ஒருவரே தான் திருமணம் முடித்த பெண்ணை மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலை செய்யும் அளவிற்கு தூண்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கையில் சுற்றுலா மேற்கொண்டுள்ள பிரித்தானிய முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூனின் செயற்பாடு பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அரங்கில் பலம்பொருத்திய பிரதமராக செயற்பட்ட கெமரூன், தனது மனைவியுடன் எளிமையான முறையில் இலங்கையை சுற்றிப் பார்த்துள்ளார்.
உனவட்டுன, மிரிஸ்ஸ, சிகிரியா, உடவலவ, பின்னவல, திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கு அவர் பயணம் மேற்கொண்டிருந்தார். கடலில் குளித்தவர், வீதி ஓரங்களில் உள்ள சிறிய பெட்டிக்கடைகளிலும் உணவு பெற்றுக்கொண்டுள்ளார். கேமரூனை அடையாளம் கண்ட ஒரே நபர் விமான நிலைய குடிவரவு அதிகாரி மாத்திரமே என அவர் கூறியுள்ளார்.
சாதாரண பயணியாக இலங்கை வந்த பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் சாதாரண பயணியாகவே இலங்கையை விட்டு வெளியேறியுள்ளார். இலங்கையில் சுமார் 20 நாட்கள் தங்கியிருந்த கெமரூன் குடும்பத்தினர் பல இடங்களை சுற்றிப் பார்த்துள்ளனர்.
விமான நிலையத்திற்கு திரும்பும் வழியில் தனது பழைய நண்பர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அரை மணி நேரம் சந்தித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு சுற்றுலா பயணியாக வருகை தந்த பிரித்தானிய பிரஜை ஒருவர் மலையில் இருந்து தவறி சுமார் 50 அடி கீழே விழுந்துள்ளார்.இந்த விபத்து பண்டாரவளை-எல்ல சுற்றுலாப் பிரதேசத்தில் இன்று (13.08.2023) காலை இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் சுற்றுலா பயணியின் ஒரு காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மலையில் இருந்து தவறி விழுந்த சுற்றுலா பயணி தற்போது தியத்தலாவ ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எதிர்காலத்தில் நடக்கவுள்ள பேரழிவுகள் மற்றும் உலக ஒழுங்குமுறையில் ஏற்படவுள்ள மாற்றங்களை கணித்திருந்த நிலையில் அவற்றில் சில நடந்துள்ளதாகவும் கூறப்படுவதால் பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பாபா வாங்காவின் கணிப்புகளை பலரும் ஆச்சரியத்துடன் உற்று நோக்குகின்றனர்.
அந்த வகையில் 2023ஆம் ஆண்டு உலகம் முழுமையாக இருளில் மூழ்கும் எனவும், பெரிய நாடொன்று உயிரியல் ஆயுதங்களால் மக்களை தாக்கும் எனவும், சூரிய புயல் அல்லது சூரிய சுனாமி ஏற்படும் என்றும், இது கிரகத்தின் காந்த கவசத்தை கடுமையாக சேதப்படுத்தும் எனவும் கணித்துள்ளமை அனைவரையும் கதிகலங்க வைத்துள்ளது.
அத்துடன் வேற்றுகிரகவாசிகள் (ஏலியன்ஸ்) பூமியைத் தாக்கலாம் மற்றும் மில்லியன் கணக்கான மக்கள் அதில் இறக்க நேரிடும். அணுமின் நிலையத்தில் ஒரு வெடிப்பு ஏற்படலாம், இதன் காரணமாக நச்சு மேகங்கள் ஆசியா கண்டத்தை மூடிவிடும். இதன் விளைவாக பல நாடுகள் கடுமையான நோய்களால் பாதிக்கப்படும் என அவர் கணித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
2023க்குள் மனிதர்கள் ஆய்வகங்களில் பிறப்பார்கள். இங்கிருந்து மக்களின் தன்மை மற்றும் தோலின் நிறம் தீர்மானிக்கப்படும். இதன் பொருள் என்னவெனில் பிறப்பு செயல்முறை முற்றிலும் கட்டுப்படுத்தப்படும் என கணித்துள்ளார்.மற்றொரு கணிப்பில், 2023ஆம் ஆண்டில் விஞ்ஞானிகள் பல விசித்திரமான கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
இவற்றில் ஒன்று ஆபத்தான உயிரியல் ஆயுதமாகவும் இருக்கலாம். அதை பயன்படுத்தினால் பெரிய அளவில் உலகம் பேரழிவை காணலாம் என கூறப்படுகிறது.2023ஆம் ஆண்டு சோகம் மற்றும் இருள் நிறைந்ததாக இருக்கும். இந்த ஆண்டு பருவமழை பெய்யும். இதனால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.
பல பகுதிகளில் கடுமையான புயல்களும் ஏற்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.இதேவேளை 2024 இற்கான பாபா வங்காவின் தீர்க்கதரிசனங்களில் பூகம்பம், தீ மற்றும் வெள்ளம் போன்ற பல பேரழிவுகள் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.மேலும் புற்றுநோய்க்கான தீர்வு 2024 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்படும் என பாபா வங்காவின் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024இல் உலகம் ஒரு பெரிய மாற்றத்தை சந்திக்கும் என்றும் பாபா வங்காவின் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு குவாண்டம் கணினிகளின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரேம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் குறித்த பாபா வங்காவின் கணிப்பு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.2024ஆம் ஆண்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது சொந்த நாட்டைச் சேர்ந்த ஒருவரால் படுகொலை செய்யப்படுவார் என குறிப்பிட்டுள்ளார்.பாபா வங்காவின் இந்தக் கணிப்புத் தான் தற்போது எதிர்காலம் குறித்து அறிய ஆர்வம் காட்டுபவர்களை உலுக்கியுள்ளது.
மேலும் ஐரோப்பாவில் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரிக்கும் என்றும், 2024ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளார்.அதுமட்டுமின்றி அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 2024ஆம் ஆண்டில் மர்ம நோயால் பாதிக்கப்படுவார் என்றும், அது அவரை காது கேளாதவர் ஆக்கும் என்றும் மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளார்.
2024ஆம் ஆண்டில் சைபர் தாக்குதல்கள் அதிகரிக்கும் என்றும் ஹக்கர்கள் மிகவும் அதிநவீனமாகி, பவர் கிரிட்கள் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற முக்கியமான உள்கட்டமைப்புகளை குறிவைப்பார்கள் என்றும் தனது கணிப்புகளின் மூலம் எச்சரித்துள்ளார்.உலகப் புகழ்பெற்ற பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வாங்காவின் 2024 ஆம் ஆண்டுக்கான தீர்க்கதரிசனங்கள் ருமேனிய ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், இன்னும் பல ஆண்டுகளுக்கு பின்னர் நடக்கவிருக்கும் சம்பவங்கள் தொடர்பிலும் அவரின் கணிப்புகள் வெளியாகியுள்ளது.2046 காலகட்டத்திற்கு பின்னர் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு மக்கள் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக உயிருடன் வாழ்வார்கள் எனவும் பாபா வங்கா கணித்துள்ளார்.
2100க்கு பின்னர் பூமியில் இரவு நேரம் என்பதே இருக்காது எனவும், இரவை பகலாக்கும் செயற்கை சூரியன் உருவாக்கப்படும் எனவும் அவர் கணித்துள்ளார்.மேலும், பூமியின் சுற்றுப்பாதை 2023இல் மாறும் என்றும் விண்வெளி வீரர்கள் 2028ல் வீனஸுக்கு பயணம் மேற்கொள்வார்கள் எனவும் பாபா வங்கா கணித்துள்ளார்.உலகம் 5079 காலகட்டத்தில் பேரழிவால் முடிவுக்கு வந்துவிடும் எனவும் பாபா வங்கா கணித்துள்ளார்.
இந்த ஆண்டு சில பெரிய வானியல் நிகழ்வுகள் நடக்கலாம். இது மட்டுமன்றி இதன் காரணமாக பூமியின் சுற்றுப்பாதையில் மாற்றம் ஏற்படலாம்.இது நமது சுற்றுச்சூழலில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும். பூமியிலுள்ளவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். ஏற்கனவே காலநிலை மாற்றத்தினால், மக்கள் கடும் வெப்பம் அனுபவித்து வரும் நிலையில், இந்த கணிப்பு குறித்தும் மக்கள் மத்தியில் கவலை ஏற்பட்டுள்ளது.
பல்கேரிய நாஸ்டர்டாமஸ் பாபா வங்கா, பல்கேரிய நாஸ்டர்டாமஸ் என்றும் அழைக்கப்பட்டு வருகிறார். பல்கேரியாவின் சோபியா பகுதியில் வசித்து வந்த பாபா வங்கா கடந்த 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் திகதி மரணம் அடைந்தார்.பாபா வங்கா உலக நடப்புகள் குறித்து கணித்து கூறியவைகளில் சுமார் 85 சதவீதம் அப்படியே நடந்தேறியுள்ளது.
இதனால் இவருடைய கணிப்புகள் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் பெற்று வருகின்றன.குறிப்பாக செர்னோபில் அணு உலை விபத்து, பிரிட்டன் இளவரசி டயானா மரணம், சோவியத் யூனியன் கலைப்பு, அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல், கறுப்பின அதிபர், பிரிஸிட் போன்றவை பாபா வங்காவின் கணிப்புகளை நிஜமாக்கியுள்ளன.
இதன் காரணமாக உலகின் பெரும்பாலான மக்கள் இவருடைய கணிப்புகளை உற்று நோக்கி வருகின்றனர்.2023 ஆம் ஆண்டு குறித்து பாபா வங்கா கூறிய கணிப்புகளும், கொஞ்சம் கொஞ்சமாக அரங்கேறி வருகிறது. அதன்படி வளர்ந்த நாடு ஒன்று அணு ஆயுத தாக்குதலில் ஈடுபடும் என்று தெரிவித்திருந்தார்.
அதற்கு ஏற்றது போல் ரஷ்ய உக்ரைன் போர் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்து வருவது பாபா வங்காவின் கணிப்போடு ஒத்துப்போகிறது.அவரது கணிப்புப்படியே பிரிட்டன் ராணியின் மரணமும் நிகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.பாபா வாங்காவின் இந்த கணிப்புகள் எந்த அளவிற்கு உண்மை என்பது எதிர்காலத்தில் தெரியும்.