உண்மையான காதலுக்கு வயது முக்கியமில்லை : மில்லியன் கணக்கான இதயங்களை வென்ற காட்சி!!

காதல்..

காதல் என்பது கடவுள் படைத்த ஒரு அற்பதமான உணர்வு. இது வெறும் உணர்வு மட்டுமல்ல அதில் ஏகப்பட்ட அன்பும் அக்கறையும் தன்னாலே அடங்கி விடும்.காதலனும் காதலியும் தங்களின் உணர்வுகளை விதவிதமாக பரிமாறிக்கொள்ளும் ஒரு அற்புதப்படைப்பே இந்தக் காதல். காலம் காலமாக சாதி, மதம், இனம், அழகு இப்படி எதுவும் பார்க்காமல் தோன்றி இறுதிவரை வாழ்வது தான்.

அப்படி தள்ளாத வயதிலும் பிரியாத காதல் கொண்டு இன்னும் அதீத காதலோடு இருந்தால் அதை தவிர வேறு என்ன இருக்கப் போகிறது. அப்படியான ஒரு காதல் வீடியோ ஒன்றுதான் இணையத்தில் தற்போது வட்டாரமிட்டுக் கொண்டிருக்கிறது.

குறித்த வீடியோவில் ஒரு வயதான பாட்டி தன் வயதான கணவரை ஒரு இடத்தில் நிற்க வைத்து விட்டு முன்னாள் வரும் பேருந்தை நிறுத்துவதற்காக ஓடிப்போய் பாதை நடுவில் நின்று தன் கணவனை அழைத்துச் செல்கிறார்கள்.

இந்த வீடியோ பலருக்கும் பிடித்துப்போக அனைவரும் இந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள். மேலும், எப்படி வாழ்ந்தாலும் தள்ளாத வயதிலும் இப்படியான காதல் தான் வேண்டும் என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.

கணவரை கொல்வதற்கு முன் தன்னை புகழ்ந்து பேச வைத்த மனைவி!!

திருமலையில்..

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் போலீஸ் கணவரை கொல்வதற்கு முன் மது ஊற்றி கொடுத்து மட்டன் சமைத்து பரிமாறிய மனைவி தன்னை புகழ்ந்து பேச வைத்து எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ரமேஷ்(35), போலீஸ்காரர். இவரது மனைவி ஷிவானி(30). தம்பதிக்கு 8 மற்றும் 6 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் ரமேஷின் நண்பரான டாக்சி டிரைவர் ராமாராவ்(33) என்பவருடன் ஷிவானிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் தகாத உறவாக மாறியது.

இது ரமேஷிற்கு தெரிய வந்ததால் ஷிவானியை கண்டித்தார். கணவர் ரமேஷ் மூலம் தங்கள் தகாத உறவுக்கு தடை ஏற்படும் என்பதால் காதலனுடன் சேர்ந்து ரமேஷை கொலை செய்ய ஷிவானி திட்டமிட்டார்.

இதனால் அவரை கடந்த 1ம் தேதி அதிக மது ஊற்றி கொடுத்து பின்னர் காதலன் மற்றும் அவரது நண்பர் நீலா ஆகியோரை வரவழைத்து ஷிவானி தலையணையால் அமுக்கி கொலை செய்தார்.

மறுநாள் தனது கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக ஷிவானி நாடகமாடினார். இதுகுறித்து என்.வி.பி. போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து ஷிவானி, ராமாராவ் மற்றும் நீலா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

இந்நிலையில், தனது கணவரை கொலை செய்வதற்கு முன்பு ஷிவானி எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் தனது கணவருக்கு மட்டன் குழம்பு, மட்டன் தொக்கு ஆகியவற்றை சமைத்து ஷிவானி பரிமாறியுள்ளார்.

பின்னர் அளவுக்கு அதிகமாக மதுவை ஊற்றிக் கொடுத்து குடிக்க வைத்துள்ளார். அப்போது தன்னை புகழ்ந்து பேசும்படி கூறி வீடியோ எடுத்துள்ளார்.

அந்த வீடியோவில் போலீஸ்காரர் ரமேஷ் அதிக மதுபோதையில் பேசுகையில், ‘எனது மனைவி மிகவும் தெளிவானவள். போதிய படிப்பறிவு இல்லாவிட்டாலும் வழிகாட்டினால் போதும், சிறப்பாக செயல்படக்கூடியவள், என் மனைவியே எனது வாழ்கை. நான் இருக்கும் வரை தைரியமாக இருப்பாள்.

நான் இறந்தாலும் அவள் தைரியமாக இருக்க வேண்டும். என் மனைவிதான் பெஸ்ட்’ என ஷிவானி பேச வைத்துள்ளார். அதன்பின்னர் ரமேஷை படுக்கை அறைக்கு அழைத்து சென்று படுக்க வைத்துள்ளார். பிறகு கொலை நடந்திருக்கிறது.

இந்திய மாப்பிள்ளைக்கும் பாகிஸ்தான் மணபெண்ணுக்கும் இணையத்தில் நடந்த திருமணம்!!

இணையத்தில் நடந்த திருமணம்..

தொடரும் எல்லை கடந்த காதல் கதைகள்.., இந்திய விசா கிடைக்காததால் பாகிஸ்தான் பெண் ஒருவர் இந்திய இளைஞரை ஆன்லைனில் திருமணம் செய்து கொண்ட சுவாரசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சச்சின்-சீமா ஹைதர் மற்றும் அஞ்சு-நஸ்ருல்லாவின் எல்லை தாண்டிய காதல் கதைகள் இன்னும் நாட்டில் பேசப்படுகின்றன. சமூக ஊடகங்கள், ஊடகங்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொது மக்களும் இந்த காதல் கதைகளைப் பற்றி பேசுவதைக் காணலாம்.

இதற்கிடையில் இன்னொரு சம்பவம் இதற்கு வலு சேர்த்துள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்து கொண்ட தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானின் கராச்சியில் வசிக்கும் அமினா என்ற இளம்பெண், இந்திய விசா கிடைக்காத நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் வசிக்கும் அர்பாஸ் என்பவரை திருமணம் செய்ய முடிவு செய்ததாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

அனைத்து சடங்குகளும் முடிந்து புதன்கிழமை இரவு (ஆகஸ்ட் 2) அர்பாஸ் மற்றும் அமினா ஆன்லைனில் திருமணம் செய்து கொண்டனர்.இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த காஜிகள் இந்த நிக்காஹ்வை நிகழ்த்தி, தம்பதியரின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

மணமகன் அர்பாஸ் கான் தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஜோத்பூரின் ஓஸ்வால் சமாஜ் பவனுக்கு வந்தார். இம்முறை இருவரின் ஆன்லைன் நிக்காஹ் மட்டுமின்றி, குடும்ப உறுப்பினர்களும் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு அனைத்து திருமண சடங்குகளையும் அர்பாஸ் செய்ய வைத்தனர். இந்நிகழ்வில், இருதரப்பு உறவினர்கள் மற்றும் உறவினர்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர். ஜோத்பூரில், மணமகனின் உறவினர்கள் சாட்சியாக எல்இடி திரையில் முழு திருமணமும் காட்டப்பட்டது.

திருமணத்தைப் பற்றி பேசிய அர்பாஸ், தனது மனைவி அமினா இந்தியாவுக்குள் நுழைவதற்கான விசாவிற்கு விரைவில் விண்ணப்பிப்பேன் என்று கூறினார். பாகிஸ்தானில் எங்களுக்கு பல உறவினர்கள் உள்ளனர். எங்கள் குடும்பத்தினர் இந்த திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர். ஆனால், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டதால், ஆன்லைனில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம். ஆனால் தற்போது அமினாவுக்கு விசா கிடைத்து விரைவில் இந்தியா வரலாம் என்ற நம்பிக்கை உள்ளது.

நாங்கள் பாகிஸ்தானில் திருமணம் செய்திருந்தால், அந்தத் திருமணத்திற்கு இந்தியாவில் சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைத்திருக்காது என்றும் அர்பாஸ் கூறினார். ஆனால் இப்போது அதிகாரபூர்வ திருமணம் மற்றும் இந்திய நிக்காஹ்நாமாவுடன் விசாவிற்கு விண்ணப்பிப்பது செயல்முறையை இன்னும் எளிதாக்கும் என்று நம்பப்படுகிறது.

மணமகளின் வருகையால் குடும்பத்தினர் மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாக அர்பாஸின் தந்தை கூறுகிறார். மேலும் இந்த ஆன்லைன் திருமணம் சாதாரண குடும்பங்களுக்கு நல்லது. ஏனெனில், திருமணத்தின் புனித பந்தத்துடன் தொடர்புடைய சடங்குகளை குறைந்த செலவில் நிறைவேற்ற முடியும் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். மணமகளின் குடும்பம் எளிமையானது என்றும் அவர் கூறினார். இந்த திருமணத்திற்கு அதிக செலவு இல்லை என்று அவர் மேலும் கூறினார்.

யாழில் 19 வயது பெண்ணுடன் வீட்டை விட்டு வெளியேறிய 54 வயதான நபர் அடித்துக்கொலை : 6 பேர் கைது : பலருக்கு வலைவீச்சு!!

யாழ்.சுன்னாகத்தில் 19 வயதான காதலியுடன் ஓடிய 54 வயதான நபர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் நபர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் பலரை பொலிஸார் தேடிவருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்.சங்குவேலி பகுதியை சேர்ந்த ஜெகதாஸ் (வயது 54) என்பவர் தனது 19 வயது காதலியுடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊரை விட்டு வெளியேறி இருந்தார்.

இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக உறவினர்கள் உறுதி அளித்ததால், இருவரும் ஊர் திரும்பியுள்ளனர். இதனையடுத்து ஊரவர்கள் குடும்பஸ்தர் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டதால், மயக்கமடைந்த நிலையில் அவர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் சுன்னாக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் 06 பேரை கைது செய்து தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

கணவன் – மனைவி முரண்பாட்டையடுத்து நேர்ந்த கொடூரம் : தாயார் வழங்கியுள்ள வாக்குமூலம்!!

நுவரெலியாவில்..

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கண்டி பிரதான வீதிக்கு அருகில் இலக்கம் ஐந்து டொப்பாஸ் பகுதியில் நேற்றிரவு (07.08.2023) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருவரும் கணவன் மனைவி எனவும், திருமணமாகி எட்டே மாதங்களான எண்டன் தாஸ் மற்றும் நாதன் ரீட்டா ஆகியோரே இந்த சம்பவத்தில் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுவடைந்ததை அடுத்து கணவனால் மனைவி சுட்டு கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் இதனை தொடர்ந்து கணவன் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக என்டன்தாஸின் தாயார் வழங்கியுள்ள வாக்குமூலத்தில், “நான் எனது மகன் மற்றும் மருமகளுடன் தனியான வீட்டில் வசித்து வந்தேன். வழமை போல திங்கட்கிழமை இரவு எனது மகனுக்கும் மருமகளுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது. நான் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தபோது சமையல் அறையில் பாரிய வெடிப்பு சத்தம் கேட்டது.

நான் சமையல் அறைக்குள் சென்று பார்த்தபோது மருமகள் குருதி தோய்ந்த நிலையில் நிலத்தில் சரிந்து காணப்பட்டார். மகனிடன் ஏன் என கேட்டப்போது மின்சாரம் தாக்கி கீழே விழுந்து கிடக்கின்றாள் யாரையாவது உதவிக்கு அழைக்குமாறு கூறினார்.

நான் அயலவர்களை கூப்பிடுவதற்காக வீட்டில் இருந்து வெளியே வரும்போது மீண்டும் ஒரு வெடிப்பு சத்தம் கேட்டது. வீட்டினுள் சென்று பார்த்தால் மகனும் குருதி தோய்ந்த நிலையில் நிலத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்து காணப்பட்டார்” என குறிப்பிட்டுள்ளார்.

குறித்த துப்பாக்கி உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது எனவும், நீதவான் விசாரணைக்கு பிறகு உடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படும் என்றும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நுவரெலியா பொலிஸார் கூறியுள்ளனர்.

நுவரெலியாவில் குடும்பத் தகராறு காரணமாக கணவரொருவர், மனைவியைச் சுட்டுக் கொன்றதுடன் அவரும் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இந்த சம்பவம் டோப்பாஸ் பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று (07.08.2023) இரவு இடம்பெற்றுள்ளது.சம்பவத்தின் போது இலங்கையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை கணவர் பயன்படுத்தியுள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நுவரெலியா, டோப்பாஸை வசிப்பிடமாகக் கொண்ட 28 மற்றும் 26 வயதுடைய தம்பதியினரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

திருகோணமலையில் விழுந்து நொறுங்கிய பயிற்சி விமானம் : உயிரிழந்த வீரர்களின் விபரங்கள் வெளியாகின!!

திருகோணமலையில்..

திருகோணமலை, சீனக்குடா விமானப்படை தளத்தில் விமான விபத்தில் உயிரிழந்த இரண்டு விமானப்படை வீரர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.

சீனக்குடா விமானப்படை பயிற்சி முகாமில் பயிற்சிக்காக பயன்படுத்தப்பட்ட GT6 ரக இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி மற்றும் விமானப்படை பொறியியலாளர் உயிரிழந்துள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் விமானி தரிந்து ஹேரத் மற்றும் பொறியியலாளர் மதுசங்க வர்ணகுலசூரிய ஆகியோரோ இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.இலகுரக விமானம் ஓடுபாதையில் இருந்து சற்று உயரத்தில் இருந்த போது திடீரென விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளதாக விமானப்படையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட மூன்று நிமிடங்களில் விமானம் விபத்துக்குள்ளானதாகவும் அந்த மூத்த அதிகாரி கூறியுள்ளார். இந்த இலகுரக விமானம் சோதனை நோக்கத்திற்காக பறக்கவிடப்பட்டதாகவும்,

விமானப்படை வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.குறித்த விமானம் ஓடுபாதையில் விழுந்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சீனக்குடா பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

25 மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் : இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!!

வாதுவவில்..

வாதுவ கல்லூரி வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று (07.08.2023) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக வாதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர் வாதுவ, தல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் என கூறப்படுகின்றது. குறித்த இளைஞன் வாத்துவ பாடசாலை பகுதியிலிருந்து வாதுவ நோக்கி மோட்டார் சைக்கிளை செலுத்தியுள்ளார்.

இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி 25 மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு சுவரில் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கைக்கு சுற்றுலா வந்த சீனப் பெண்ணிற்கு நேர்ந்த சோகம்!!

கொழும்பில்..

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி உடரட மெனிகே தொடருந்தில் பயணித்த போது சுற்றுச்சூழலை வீடியோ எடுத்த சீனப் பெண் ஒருவரை ரயில் தண்டவாளத்திற்கு அருகில் இருந்த மூன்று இளைஞர்கள் அவரது கையடக்க தொலைபேசியை திருடுவதற்காக தடியால் தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் சீன பெண்ணின் தொலைபேசியில் பதிவாகியுள்ளதுடன் அவரது கையிலும் காயம் ஏற்பட்டுள்ளது.லியு குயின் என்ற சீனப் பெண், தனது கணவர் மற்றும் மகளுடன் இலங்கைக்கு விஜயம் செய்து, வீதி வழிகாட்டி ஒருவருடன் எல்ல தொடருந்து நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த போது இந்தச் சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார்.

நாவலப்பிட்டி, இங்குருஓயா தொடருந்து நிலையத்தை அடையவிருந்த போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.எவ்வாறாயினும், நாவலப்பிட்டி பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் இரண்டு சந்தேகநபர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இங்குருஓயா பிரதேசத்தை சேர்ந்த 22 மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்கள் எனவும், அவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் எனவும், போதைப்பொருள் குற்றச்சாட்டில் நீதிமன்றில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட பின்னர், சீனப் பெண் பொலிஸாருக்கு அனுப்பிய வாட்ஸ்அப் பதிவு பின்வருமாறு, ‘நானும் எனது குடும்பத்தினரும் இலங்கையை மிகவும் நேசிக்கிறோம்.

அவ்வப்போது நடக்கும் இதுபோன்ற மோசமான சம்பவங்கள் இலங்கை பற்றிய எனது நல்ல எண்ணங்களை பாதிக்க விடமாட்டேன். சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவு என்றென்றும் நிலைத்திருக்கும்’ என பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சாரதியின் கவனக்குறைவால் இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!!

மந்துரங்குளியவில்..

மந்துரங்குளிய நகருக்கு அருகில் மோட்டார் சைக்கிள் மீது லொறி ஒன்று மோதியதால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்தில் மேலும் ஒருவர் காயமடைந்து புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

புத்தளம் ஜயபிம பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய சுரேந்திர அனுருத்திக என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த இளைஞன் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் புத்தளம் நோக்கி பயணித்த போது, ​​புத்தளத்திலிருந்து பயணித்த மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

லொறியின் சாரதியின் கவனக்குறைவே விபத்துக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விபத்தில் படுகாயமடைந்த இரு இளைஞர்கள் சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அனுருத்திக ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.விபத்து தொடர்பில் லொறியின் சாரதி மந்துரங்குளிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் இலங்கை வம்சாவளி இளைஞர் மாயம்!!

திஷாந்தன்..

அவுஸ்திரேலியாவில் இலங்கை வம்சாவளி இளைஞரொருவர் காணாமல்போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இலங்கை வம்சாவளியை சேர்ந்த 18 வயதுடைய திஷாந்தன் என்ற இளைஞனே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.

இவர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் மெல்போர்னில் உள்ள பீக்கன்ஸ்ஃபீல்ட் பகுதியிலிருந்து காணாமல்போயுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.இந்த இளைஞன் கடைசியாக காரில் பயணித்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இச்சம்பவம் குறித்து விக்டோரியா பொலிஸார் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழில் 19 வயது பெண்ணுடன் வீட்டை விட்டு வெளியேறிய 54 வயதுடைய குடும்பஸ்தர் கிராம மக்களின் கொடூர தாக்குதலில் பலி!!

யாழில்..

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் 19 வயது யுவதியுடன் வீட்டை விட்டு வெளியேறிய 54 வயதுடைய குடும்பஸ்தர் கிராம மக்களின் கொடூர தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.சங்குவேலி பகுதியைச் சேர்ந்த மரியதாஸ் ஜெயதாஸ் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

கடந்த 5 ஆம் திகதி யுவதியொருவரை காணவில்லை என உறவினர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் மரியதாஸ் ஜெயதாஸ் என்ற 55 வயதுடைய நபர் ஒருவருடன் குறித்த 19 வயது யுவதிக்கு ஏற்பட்ட காதல் காரணமாக இருவரும் வீட்டை விட்டு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக உறவினர்கள் உறுதியளித்ததால், இருவரும் நேற்றைய தினம் கிராமத்திற்கு திரும்பியுள்ளனர். அதன்போது குடும்பஸ்தர் கிராம மக்களால் நையப்புடைக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்.இதன்போது கடும் தாக்குதலுக்கு உள்ளான நபரை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு சுன்னாகம் பொலிஸார் அனுப்பிவைத்த நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தின் போது கடும் தாக்குதலுக்குள்ளான யுவதியும் தற்போது தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் தொடர்பில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் தேடும் இலங்கையர்!!

இந்திரஜித் மஹிலால் டி சில்வா..

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்கின்றதா என்பதனை ஆய்வு எக்ஸோமார்ஸ் ரோவரின் தொழில்நுட்ப தலைவராக இலங்கை பொறியாளர் இந்திரஜித் மஹிலால் டி சில்வா பணியாற்றுவதாக தெரியவந்துள்ளது.

அவர் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் ஆய்வு செய்ய பயன்படுத்தப்படும் எக்ஸமார்ஸ் என்ற ரோபோ ரோவரின் தொழில்நுட்ப துறையின் தலைவராக பணியாற்றுகிறார்.

எக்ஸோமர்ஸ் ரோவரை ஒருங்கிணைத்து பரிசோதிப்பதே அவருக்கு வழங்கப்பட்ட பொறுப்பாகும். “நான் இந்த திட்டத்தின் தலைமை தொழில்துறை பொறியாளராக பணிபுரிகிறேன்.எக்ஸோமார்ஸ் ரோவரை ஒருங்கிணைத்தல் மற்றும் சோதனை செய்யும் பணியை நான் பெற்றுள்ளேன்” ன மஹிலால் டி சில்வா பிபிசி சேவையிடம் தெரிவித்தார்.

1976 ஆம் ஆண்டு பிறந்த மஹிலால் தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை மூன்று பாடசாலைகளில் பயின்றார். கொழும்பு இசிபதன வித்தியாலயம், கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் நுகேகொட லைசியம் சர்வதேச பாடசாலை என்பனவற்றில் அவர் கல்வி பயின்றுள்ளார்.

எனது பாடசாலை நாட்கள் எனது தொழில்முறை மற்றும் கல்வி வெற்றியின் பிரதிபலிப்பாகும். நான் படித்து 19 வயதுக்குட்பட்ட பாடசாலை கிரிக்கெட் அணியில் உறுப்பினராக பணியாற்றினேன். இந்த வெற்றிக்கு எனது தாயும் தந்தையும் முக்கிய செல்வாக்கு செலுத்தினர்.

வாழ்க்கையைப் பற்றிய தொலைநோக்குப் பார்வையையும், என்னை நம்புவது எப்படி என்பதையும் எனக்குக் கற்றுக் கொடுத்தவர்கள் அவர்கள்தான்” என மஹிலால் டி சில்வா நினைவு கூர்ந்தார்.அவர் 1999 ஆம் ஆண்டு மேற்படிப்புக்காக பிரித்தானியாவில் குடிபெயர்ந்தார். லண்டனில் உள்ள கின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் தொழில்துறை பொறியியலில் பட்டம் பெற்றுள்ளார்.

2020 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப திட்டமிடப்பட்ட எக்ஸமார்ஸ் ரோவர் திட்டத்தின் முக்கிய நோக்கம் செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்வதாகும்.ஐரோப்பாவிலிருந்து செவ்வாய்க்கு செல்லும் முதல் ரோவர் இதுவாகும். ஆனால் ரஷ்ய-உக்ரைன் போர் காரணமாக இங்கு நடவடிக்கைகள் சற்று தடைபட்டுள்ளன.

எக்ஸமார்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் சுமார் 2 மீட்டர் ஆழம் தோண்டி மண் மாதிரிகளை எடுக்கப் போவதாகவும், மண் மாதிரிகளில் உயிரினங்கள் உள்ளதா அல்லது படிமமாக்கப்பட்ட நுண்ணுயிரிகள் உள்ளதா என்று சோதிக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

13 வயது பிரபல மோட்டார் பந்தய வீரர் விபத்தில் பலியான சோகம்!!

ஸ்ரேயாஸ் ஹரீஷ்..

13 வயசு தான். அத்தனைக் கனவுகளும் நொடிப் பொழுதில் கருகி போனது. நேற்று இருங்காட்டுக்கோட்டையில் நடைபெற்ற சர்வதேச மோட்டார் ரேஸ் பந்தயத்தில் கலந்து கொண்ட பெங்களூருவைச் சேர்ந்த13 வயசு இளம் பைக் ரேஸ் சாம்பியன் ஸ்ரேயாஸ் ஹரீஷ், விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள இருங்காட்டுக்கோட்டையில் தனியாருக்கு சொந்தமான ரேஸ் கோர்ஸ் மைதானம் ஒன்றில் வார இறுதிகளில் கார், பைக் ரேஸ் போட்டிகள் நடைப்பெற்று வருவது வழக்கம். அந்த வகையில் நேற்று மோட்டார் சைக்கிள் பந்தயம் இருங்காட்டுக்கோட்டை மைதானத்தில் நடைபெற்றது.

எம்ஆர்எப் நிறுவனம் சார்பில் நேற்று நடத்தப்பட்ட இந்த பந்தயத்தில் பெங்களூரைச் சேர்ந்த 13 வயதான சிறுவன் ஸ்ரேயாஸ் ஹரீஷ் பங்கேற்றார். மோட்டார் சைக்கிள் பந்தயத்தின் மூன்றாவது சுற்றில் ஹரீஷ் திடீரென எதிர்பாராத வகையில் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில், ஸ்ரேயாஸ் ஹரீஷின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக போட்டிக் குழுவினர் ஸ்ரேயாஸ் ஹரீஷை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஸ்ரேயாஸ் ஹரீஷ் பரிதாபமாக உயிரிழந்தார். ஸ்ரேயாஸ் ஹரீஷின் திடீர் மரணத்தையடுத்து, பைக் ரேஸ் பந்தயம் உடனடியாக நிறுத்தப்பட்டது.

தொங்கியபடி கிடந்த கைபேசி சார்ஜர் வயர்.. 8 மாதக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சோகம்!!

கர்நாடகாவில்..

வழக்கம் போல சந்தோஷ் கல்குட்கர் தனது செல்போனை சார்ஜில் போட்டுள்ளார். அது சார்ஜ் ஆனதும் செல்போனை சார்ஜரில் இருந்து எடுத்து விட்டு ஸ்விட்ச் ஆஃப் செய்யாமலே சாக்கெட்டில் பொருத்தப்பட்டிருந்தது.

சுவிட்ச் ஆப் செய்யப்படாமல் ப்ளக் பாயிண்டில் சொருகப்பட்டிருந்த சார்ஜரின் வயரை வாயில் வைத்து கடித்த 8 மாதக் குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் கார்வாரை சேர்ந்தவர் சந்தோஷ் கல்குட்கர். இவரது மனைவி சஞ்சனா. இந்த தம்பதிக்கு 8 மாதமே ஆன சானித்யா என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், வழக்கம் போல சந்தோஷ் கல்குட்கர் தனது செல்போனை சார்ஜில் போட்டுள்ளார். அது சார்ஜ் ஆனதும் செல்போனை சார்ஜரில் இருந்து எடுத்து விட்டு ஸ்விட்ச் ஆஃப் செய்யாமலே சாக்கெட்டில் பொருத்தப்பட்டிருந்தது.

அப்போது சார்ஜர் வயரை பிடித்து சானித்யா விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக வாயில் வைத்துள்ளது. அப்போது மின்சாரம் தாக்கி குழந்தை தூக்கி வீசப்பட்டுள்ளது. சத்தம் கேட்டு அங்கு வந்த தாய் சானித்யா மூச்சு பேச்சின்றி கிடந்த குழந்தையை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறினர்.

8 மாத குழந்தை உள்பட 2 மகள்கள் கொலை.. கணவன், மனைவி தற்கொலை : அதிர்ச்சிக் காரணம்!!

பெங்களூரில்..

பெங்களூரில் தங்களது 8 மாத கைக்குழந்தை உள்பட 2 மகள்களையும் கொலை செய்துவிட்டு கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் தலைநகரம் பெங்களூரு.. இங்கு வசிப்பவர் வசித்து வருபவர் வீர்அர்ஜூன விஜய். இவருக்கு வயது 31. இவர் ஆந்திராவைப் பூர்வீகமாக கொண்டவர். தொழிலுக்காக பெங்களூர் வந்தவர் இங்கேயே குடும்பத்துடன் தங்கிவிட்டார். இவரது மனைவி ஹேமாவதி. அவருக்கு வயது 29.

இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களில் ஒருவருக்கு 6 வயதும், மற்றொரு குழந்தைக்கு 8 மாதமுமே ஆகிறது. விஜய் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் பெங்களூரில் உள்ள கடுகொடியில் உள்ள சாய் கார்டன் அபார்ட்மெண்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில், கடந்த 3 நாட்களாக விஜய்யின் வீட்டில் எந்த ஆள் நடமாட்டமும் இல்லாமல் இருந்ததால் அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் வந்துள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

உள்ளே விஜய், அவரது மனைவி ஹேமாவதி, அவரது இரண்டு குழந்தைகள் என நான்கு பேரும் சடலமாக கிடந்தனர். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினரும் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர், உடனடியாக அவர்கள் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஏ.என்.ஐ.யில் வெளியிட்டுள்ள செய்தியின்படி, விஜய் மற்றும் அவரது மனைவி இருவரும் தங்களது மகள்கள் இருவரையும் கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், விஜய் தன்னுடைய மனைவியை முதலில் கொலை செய்துவிட்டு ஒருநாளுக்கு பிறகு தன்னுடைய 2 மகள்களையும் கொலை செய்தார் என்றும், அதன்பின்பு தானும் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்த மரணங்கள் தொடர்பாக போலீசார் விஜய் மற்றும் ஹேமாவதி இருவரது செல்போன்களையும் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த விஜய்க்கு கடன் தொல்லை ஏதும் இல்லை என்றும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், இந்த மரணங்கள் கொலையா? தற்கொலையா? விஜய் – ஹேமாவதி இணைந்துதான் குழந்தைகளை கொன்றனரா? ஹேமாவதி, 2 குழந்தைகள் என 3 பேரையும் விஜய்தான் கொலை செய்தாரா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 மாத குழந்தை உள்பட நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெங்களூர் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருமண விளம்பரம் கொடுத்து 57 வயது பெண் செய்த செயல் : பொலிஸார் அதிரடி!!

கண்டியில்..

திருமண விளம்பரம் மூலம் தொடர்பை ஏற்படுத்தி 67 வயதுடைய நபரை அச்சுறுத்தி 69 இலட்சம் ரூபா பணத்தை தனது வங்கிக் கணக்கில் வைப்பிலிடச் செய்த 57 வயதுடைய பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட பெண் நிட்டம்புவ தலைமையக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்த மோசடிக்கு இதற்கு உறுதுணையாக இருந்ததாகக் கூறப்படும் 26 மற்றும் 32 வயதுடைய இருவர் சந்தேகத்தின் பேரில் இந்தப் பெண்ணுடன் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் கண்டி கண்ணொருவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் சந்தேக நபர்கள் இருவரும் ஈரியகம மற்றும் முருத்தலாவ பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.