குருநாகல் பிரதேசத்தில் பிறந்தநாள் நிகழ்வில் நண்பர்களுக்கு காதலியின் அந்தரங்க புகைப்படங்களை பரிமாறிக்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.இதனால் 6 மாணவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட மாணவர்களுக்கு தலா 1500 ரூபாய் அபராதம் செலுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருநாகல் பிரதேசத்தில் உள்ள பிரதான பாடசாலையொன்றின் 6 பாடசாலை மாணவர்களுக்கு அபராதம் விதித்த நீதவான் இனிமேல் இவ்வாறான தவறுகளை செய்ய வேண்டாம் என எச்சரித்துள்ளார்.
காதலன் என்று கூறப்படும் சந்தேகத்திற்குரிய மாணவன் அதே வயதுடைய பாடசாலை மாணவி ஒருவருடன் காதல் தொடர்பு வைத்திருந்த நிலையில் பிரிந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.இந்நிலையில் மாணவியின் பிறந்த நாள் அன்று அவரின் அந்தரங்க புகைப்படங்களை நண்பர்களின் தொலைபேசிகளுக்கு அனுப்பியுள்ளார்.
சந்தேகநபர்கள் நீதிமன்றத்தின் முன் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 306 ஆவது பிரிவின்படி அவர்களுக்கு தண்டனை வழங்குமாறு சட்டத்தரணி நீதிமன்றில் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான், குறித்த மாணவர்களுக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
திருச்சி மேல சிந்தாமணி காவேரி நகர் பகுதியில் வசித்து வருபவர் அழகப்பன். இவரது மகன் விஜயகுமார் மற்றும் மகள் ஜெகஜோதி. இதில் ஜெகஜோதி மேலபுத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று விஜயகுமார் மற்றும் ஜெகஜோதி இருவரும் பள்ளிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது சத்திரம் பேருந்து நிலையம் அருகில் வந்தபோது, தனியார் பேருந்து அதிவேகமாக வந்து மோதியது. இதில் பள்ளி மாணவி ஜெகஜோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அண்ணன் சிவக்குமார் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், விபத்தில் மாணவி உயிரிழந்தது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.
இந்தக் கோர விபத்தைக் கண்டித்து இன்று காலை திருச்சி ஸ்ரீரங்கம் கோட்டை மாநகராட்சி இளநிலை பொறியாளர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் , சி.ஐ.டி.யு சங்க மாவட்ட செயலாளர் , இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் உட்பட சுமார் 100க்கும் மேற்பட்டோர் முற்றுகை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெற்றோர், கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் சிஐடியு சங்கத்தினர், திருச்சி கோட்டாட்சியர், மாநகர காவல் துறை துணை ஆணையர் அன்பு, மாநகராட்சி ஸ்ரீரங்கம் மண்டல உதவியாளர், ஸ்ரீரங்கம் காவல்துறை உதவியாளர் உட்பட பேச்சு வார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் முதற்கட்டமாக, 15நாட்களுக்குள் பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்து சாலை சீரமைத்து தரப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் உயிரிழந்த பள்ளி மாணவி குடும்பத்திற்கு ரூ4லட்சம் நிவாரணம் வழங்கப்படும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதே நேரத்தில் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை மற்றும் பேருந்து நிறுத்தத்தை அகற்ற வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கைகளை தவிர மற்ற கோரிக்கைகள் அனைத்தும் பின்னர் பரிசீலிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2008-ல் வெளியான ‘1920’ படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் அதா சர்மா. அதன்பிறகு தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி படங்களில் நடித்து வந்த இவர், 2017-ல் சிம்பு நடிப்பில் வெளியான ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார்.
தொடர்ந்து, ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் பிரபுதேவாவுடன் நடித்து இருந்தார். சர்ச்சையை ஏற்படுத்திய ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானார். கேரளாவில் இளம்பெண்கள் காணாமல் போன சம்பவங்களை மையமாக வைத்து இந்த படம் வந்தது.
பெண்களை வெளிநாடுகளுக்கு கடத்தி பயங்கரவாத அமைப்பில் சேர்ப்பதுபோன்று திரைக்கதை அமைத்து இருந்தனர். இந்த படத்தில் நடித்ததற்காக தனக்கு மிரட்டல்கள் வருவதாக அதா சர்மா தெரிவித்து இருந்தார். இந்தி, தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார்.
இந்த நிலையில், நடிகை அதா சர்மாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு வயிற்று போக்கு, உணவு அலர்ஜி போன்ற பிரச்சினைகள் இருந்ததாகவும் இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் தாஸ் (27). இவர் 6 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த நிகிதா (25) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இவர்களுக்கு குழந்தைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தாஸ்க்கு குடிப்பழக்கம் இருந்ததால் தினமும் வீட்டிற்கு குடித்துவிட்டு வருவதால் நிகிதா அதிக மன உளைச்சலுக்கு உள்ளாகி கணவனை திருத்த பல கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளார்.
அனைத்து போராட்டங்களும் தோல்வியுற்ற நிலையில், கடந்த 28 ஆம் தேதி இரவில் மீண்டும் தாஸ் அதிக போதையுடன் வீட்டுக்கு வந்துள்ளார். கடைசி முயற்சியாக கணவனை திருத்துவதற்காக கடந்த வாரம் தன்னுடைய உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு, நீ குடிப்பழக்கத்தில் இருந்து விடுபடவில்லை என்றால் நான் கொளுத்திக் கொள்வேன் என்று கூறி தீக்குச்சியை பற்ற வைத்து கணவனை மிரட்டி உள்ளார்.
எதிர்பாராத விதமாக தீ நிகிதாவின் உடையில் பிடித்து உடல் முழுவதும் குபுகுபுவென எரிய தொடங்கியுள்ளது. இதைப் பார்த்து அதிர்ந்து போன தாஸ் ,நிகிதாவை கட்டிப்பிடித்து காப்பாற்ற முயற்சி செய்துள்ளார்.
இதில் தாஸ் மீதும் தீ பிடித்து எரிய தொடங்கியுள்ளது. இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இருவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு 75% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிகிதா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் 40% தீக்காயங்களுடன் தாஸ் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிப்பழக்கத்திலிருந்து காதல் கணவனை மீட்டெடுக்க போராடிய பாசக்கார மனைவியின் செயல் விபரீதத்தில் முடிந்தது.
குடும்பத் தகராறு காரணமாக மனைவியின் கைவிரலை கடித்து தின்ற கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்திய மாநிலம் கர்நாடகாவின் பெங்களூரூவைச் சேர்ந்த தம்பதியினர் விஜய்குமார் (45), புஷ்பா(40).
இவர்கள் 23 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இரண்டாவது மகன் பிறந்து சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் அடிக்கடி சண்டை, தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
பின்பு புஷ்பா, தனது இரண்டு மகன்களை அழைத்துக் கொண்டு கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஜூலை 28 ஆம் திகதி விஜயகுமார், புஷ்பாவின் வீட்டிற்கு சென்று தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
பின்பு, இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தையில் ஆரம்பித்து கைகலப்பில் ஏற்பட்டுள்ளது. அப்போது, விஜயகுமார் ஒரு கட்டத்திற்கு மேல் மனைவியின் இடது கை விரலை தனது வாயில் வைத்துள்ளார்.
பின்னர், ஆத்திரமடைந்து வாயில் வைத்தே விரலை கடித்து மென்று தின்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, கை விரலின் வலியால் துடித்த புஷ்பாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சை முடிந்த பிறகு புஷ்பா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், தனது கணவன் எனது கை விரலை கடித்து மென்று தின்றுவிட்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறியுள்ளார். மேலும், இது தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை கொடுங்கையூரில் வசித்து வருபவர் தினேஷ்.இவருக்கு வயது 29. இவருடைய மனைவி சௌமியா 8 மாத கர்ப்பிணி. இவர், ஆவடியை அடுத்த ஐயப்பாக்கத்தில் தனியார் கழிவுநீர் அகற்றும் நிறுவனத்தில் மிஷின் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வருகிறார்.
வழக்கம் போல் நேற்று மாலை அலுவலகத்தில் பணியில் இருந்த போது, கீழே கிடந்த வயரை எடுத்தார். எதிர்பாராதவிதமாக திடீரென மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தகவலின் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தினேஷ் இறப்பு குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டம் சிவகிரி நெசவாளர் காலனியில் வசித்து வருபவர் பூபாலன். இவர் இருசக்கர மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மோகன பிரியா. இவர்களுக்கு 6வயதில் தமிழ் மாறன் என்ற மகனும், தமிழினி என்ற ஒன்றரை வயது மகளும் உள்ளனர்.
பூபாலனின் தாய் விஜயாள் . இவர் சிவகிரி ஜீவா தெருவில் பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். விஜயாள் நேற்று காலை வேலைக்கு செல்லும் போது தமிழினியை அழைத்து சென்றுள்ளார்.இந்த நிலையில் மதியம் விஜயாள் நிறுவனத்தில் உள்ளே வேலை பார்த்து கொண்டிருந்தார்
அப்போது தமிழினி நிறுவனத்தின் வாசலுக்கு வந்து நின்றார். அப்போது அங்கு நிறுத்தியிருந்த காரை அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் பின்னோக்கி எடுக்க முயன்றார். இதில் எதிர்பாராதவிதமாக தமிழினி மீது கார் மோதியது.
இந்த விபத்தில் அவர் தலையில் பலத்த காயம் அடைந்து மயங்கி விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக சிவகிரி அரசு மருத்துமவனையில் சேர்த்தனர்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு தமிழினி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகிரி போலீசார், தமிழினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமவனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டிய டிரைவர் சுப்பிரமணி என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் மோதி குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒடுகத்தூர் அடுத்த ஆசனாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன் (23). இவரது மனைவி செல்வி (21). இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில் செல்வி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
பிரசவத்திற்காக அவர் ஒடுகத்தூர் அருகே உள்ள ஓ.ராஜாபாளையம் கிராமத்தில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு சென்றார். இதையடுத்து செல்விக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
3 மாத குழந்தை பிரனீஷ் உடன், செல்வி தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு முழுவதும் குழந்தை அருகில் தூங்கிய தாய் செல்வி, விடிந்ததும் வழக்கம்போல் வீட்டிற்கு வெளியே வேலை செய்து கொண்டு இருந்தார்.
குழந்தை வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்கிக்கொண்டு இருந்தது. திடீரென குழந்தையின் அலறல் சத்தம் கேட்டது. பதறிப்போன செல்வி வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது குழந்தையை நாகப்பாம்பு ஒன்று கடித்துவிட்டு படம் எடுத்து நின்றது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் செல்வி அக்கம் பக்கத்தினர் உதவியோடு பாம்பை விரட்டினார். அதையடுத்து பாம்பு கடித்த குழந்தையை மீட்டு, ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தூக்கி சென்றனர்.
அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமவனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். குழந்தை இறந்த தகவலை கேட்டு தாய் செல்வி கதறி அழுதார்.
இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாகப்பாம்பு கடித்து 3 மாத பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தங்கை முறை பெண்ணை காதலித்து திருமணம் செய்ததால் இளைஞர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் கருப்பம்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார்.
இவர் அதே ஊரை சேர்ந்த கோபிகா என்ற உறவுக்காரப் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் கடந்த மாதம் 9 ஆம் தேதி திருமணம் செய்துக்கொண்டனர்.
கிருஷ்ணமூர்த்திக்கு கோபிகா தங்கை உறவு முறை வருவதால் இந்த திருமணத்திற்கு கோபிகாவின் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் எதிர்ப்பையும் மீறி இருவரும் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
இந்தநிலையில், கடந்த ஜூலை 21 ஆம் தேதி வழக்கு தொடர்பாக கிருஷ்ணமூர்த்தி, தொட்டியம் நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். இதையறிந்த கோபிகாவின் உறவினர்கள் நீதிமன்றத்தின் இருந்து செல்லும் வழியில் கிருஷ்ணமூர்த்தியை வழிமறித்து காரில் கடத்தி சென்றுள்ளனர்.
இந்தநிலையில் நீண்ட நேரம் ஆகியும் கிருஷ்ணமூர்த்தி வீடு திரும்பாததால், அவரது மனைவி கோபிகா தொட்டியம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் ஸ்ரீநாத், கார்த்திக், சரவணன், கோபால கிருஷ்ணன் ஆகிய 4 பேர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் கோபிகாவின் அண்ணன் ரவிவர்மன், அவரது நண்பர் தினேஷ், கோபிகாவின் தாயார் ஹேமலதா, பாட்டி பாப்பாத்தி ஆகியோர் கிருஷ்ணமூர்த்தியை காரில் கடத்திச் சென்று கழுத்தை நெறித்து கொலை செய்து ஆற்றில் வீசிய அதிர்ச்சி தகவல்களை வாக்குமூலம் அளித்தனர்.
இதையடுத்து கடத்தல் வழக்கை கொலை வழக்காக பதிவுச் செய்த போலீசார், கோபிகாவின் தாய் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிக்கிமில் வசித்து வரும் ராணுவவீரர் ராம்பிரசாத் சர்மா. இவர் 2020ல் நேபாளத்தில் வசித்து வரும் ருக்மீனாவை திருமணம் செய்து கொண்டார். ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் ராணுவத்தில் ராம்பிரசாத் சர்மா பணிபுரிந்து வந்தார். ராம்பிரசாத்- ருக்மீனா தம்பதிக்கு ரித்திமா என்ற 2வயது மகளும் உண்டு.
குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பிடித்து தனது மனைவி, மகள் இறந்து விட்டதாக ராம்பிரசாத் காவல்துறையில் சில நாட்களுக்கு முன் புகார் அளித்தார். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அதில் தாய், மகள் இருவரும் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதன் பின் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டது.
இதன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ராணுவவீரர் ராம்பிரசாத்திடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்களை ராம்பிரசாத் வாக்குமூலமாக அளித்துள்ளார். அதன்படி கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
அவர்களுடன் ஒத்து போக முடியவில்லை. இதனால் மனைவி, மகளை கொலை செய்ய முடிவு செய்தார். அதிகாலை 4 மணியளவில் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
தனது 2 வயது மகளையும் கழுத்தை நெரித்து ராம்பிரசாத் கொலை செய்துள்ளார். இதன் பின் பெட்ரோலை மீது ஊற்றி தீவைத்து எரித்துவிட்டார். இந்த வாக்குமூலத்தின் பேரில் அவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடும்பச்சண்டையில் மனைவி, மகளை கொன்று நாடகமாடியதும், ராணுவவீரர் கைது செய்யப்பட்டதும் ஜோத்பூரில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கணவரை கொலை செய்து உடலை எரித்து விட்டதாக மனைவி கூறிய நிலையில், கணவன் உயிரோடு வந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் அடூர் என்ற பகுதியில் வசித்து வருபவர்கள் அஃப்சானா – நௌஷாத் தம்பதியினர்.
கார் ஓட்டுநராக வேலை செய்து வரும் நௌஷாத் தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த சூழலில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் சண்டையிட்டு வந்துள்ளனர்.
இந்த சூழலில் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்னர் நௌஷாத் திடீரென காணாமல் போயுள்ளார். இதனால் நௌஷாத்தின் குடும்பத்தார் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அவர்கள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் நௌஷாத்த்தின் குடும்பத்தார், அவரது மனைவி என அனைவரிடமும் விசாரித்தனர். அதோடு அவர் வேலை செய்யும் இடம், அந்த பகுதியில் அமைந்திருக்கும் சிசிடிவி காட்சிகள் என தொடர்ந்து விசாரித்து வந்தனர். செல்போன் எண்ணை வைத்தும் வழக்கை விசாரித்தனர்.
எனினும் அவர் குறித்த தகவல்கள் எதுவும் தெரியாமல் இருந்தது. இதையடுத்து நௌஷாத்தின் மனைவியிடம் கிடுக்குபிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது தான்தான் தனது கணவனை கொன்றதாக வாக்குமூலம் அளித்தார்.
மேலும் தனது கணவனை துண்டு துண்டாக வீட்டில் தனித்தனி இடங்களில் புதைத்து விட்டதாகவும், அவரது உடலை எரித்து ஆற்றில் சாம்பலை கரைத்து விட்டதாகவும், வீட்டுக்கு பின்புறம் அடக்கம் செய்திருப்பதாகவும் மாறி மாறி போலீசாரிடம் தெரிவித்தார்.
இதனால் அவர் கூறிய இடங்களில் எல்லாம் தோண்டி சடலத்தை தேடினர். எனினும் சடலம் கிடைக்கவில்லை. இதனால் அவரிடம் மேலும் விசாரிக்கையில், மாபெரும் ட்விஸ்ட்டாக கொலை செய்துவிட்டதாக கூறிய கணவர் நௌஷாத் திடீரென உயிருடன் முழு உருவமாக வந்து நின்றுள்ளார்.
இதனை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் நௌஷாத்திடம் விசாரிக்கையில், தனது நண்பர் ஒருவர் மூலம் இந்த விவகாரத்தை அறிந்துகொண்டதாகவும், தனது மனைவிக்கு பயந்து வீட்டை விட்டு தான் சென்றதாகவும், தன்னை யாரும் கொலை செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து விசாரிக்கையில், தனது மனைவி தன்னுடன் சண்டையிடுவது மட்டுமின்றி தன்னை தினமும் தாக்கியதாகவும், என்றாவது ஒருநாள் தன்னை கொலை செய்துவிடுவார் என்ற பயத்திலும் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு சென்றதாக கூறினார்.
மேலும் யாருடனும் உறவு வைத்துக்கொள்ள வேண்டாம் என்று மொபைல் போன் கூட வாங்கவில்லை என்றும் தெரிவித்தார். இதையடுத்து இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கணவரை கொலை செய்து உடலை எரித்து விட்டதாக மனைவி கூறிய நிலையில், கணவன் உயிரோடு வந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆடிப்பெருக்கு தமிழகத்தின் அனைத்து நீர்நிலைகளிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஈரோடு மாவட்டம் கொடுமுடி காசிபாளையத்தில் இன்று ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடும் வகையில் சுற்று வட்டாரப் பகுதிகளில் வசிப்பவர்கள் காவிரி ஆற்றங்கரைக்கு வந்து ஆற்றுக்கு படையலிட்டனர். சிறப்பு பூஜைகள் செய்து காவிரித்தாயை வழிபட்டனர்.
காசிபாளையத்தில் கொந்தாளம் புதூர் மதுரை வீரன் கோயிலுக்கு தீர்த்தம் எடுப்பதற்காக சிலர் காவிரி ஆற்றில் இறங்கினர். ஆற்றில் தண்ணீர் சுழித்துக் கொண்டு ஓடியது.
இந்த ஆற்று வெள்ளத்தில் கொந்தாளம்புதூரில் வசித்து வரும் 18 வயது ஜகதீஷ், 14 வயது சவுத்ரி, 17 வயது குப்புராஜ் ஆகியோர் நீரில் மூழ்கத்தொடங்கினர் . சுற்றி இருந்தவர்கள் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் பலனில்லை.
உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் சௌத்ரியின் உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது.
மற்ற இருவரின் உடல்களையும் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோவிலுக்காக தண்ணீர் எடுக்க சென்றவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் ஹட்டன் மல்லியப்பு பகுதியில் முச்சக்கரவண்டிகளை ஒற்றைச்சக்கரத்தில் செலுத்தி சாகசம் காட்டிய இரு இளைஞர்கள் ஹட்டன் பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளால் நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹட்டன் மல்லியப்பு பகுதியில் இளைஞர்கள் குழுவொன்று ஆபத்தான முறையில் முச்சக்கர வண்டிகளை செலுத்தி அதனை காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
இந்த காணொளியின் அடிப்படையில் இரு முச்சக்கரவண்டிகளின் பதிவு எண்கள் மூலம் விசாரணை நடத்தி சந்தேகத்தின் பேரில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் 20-30 வயதுடைய ஹட்டன் பகுதியில் வசிப்பவர்கள் எனவும்,நீண்ட விசாரணைகளின் பின்னர் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கர வண்டிகளை ஆபத்தான முறையில் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர்களுக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலவத்துகொடையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் லிப்ட் திடீரென பழுதடைந்ததால், அதில் பயணம் செய்த சுமார் 10 பேர் சிக்கி உயிர் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.லிப்ட்க்குள் சிக்கியிருந்தவர்கள் கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் வெளியேற முடியாமல் போயுள்ளதுடன் தங்கள் உயிரை காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளனர்.
இறுதியில், காப்பாற்றும் முயற்சியின் நடுவில் லிப்ட் இடிந்து விழுந்தது, ஆனால் அதிர்ஷ்டவசமாக லிப்டில் இருந்தவர்கள் குலுங்கியதால் அதிர்ச்சிக்குள்ளாகிய போதிலும் காயமின்றி உயிர் தப்பியுள்ளனர்.
லிப்ட் பராமரிப்பு இல்லாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக லிப்டில் இருந்தவர்கள் கூறுகின்றனர். ஆனால், அங்கு அதிகமானோர் பயணம் செய்ததால் இது நடந்ததாக ஹோட்டல் நிர்வாகம் கூறுகிறது.மின்சார மணி அடித்ததாக ஹோட்டல் நிர்வாக அதிகாரிகள் கூறிய போதிலும் மணி அடிக்கவில்லை என லிப்டில் பயணம் செய்தவர்கள் தெரிவித்தனர்.
இனிமேலாவது இதுபோன்ற ஆபத்தான சூழ்நிலைகள் ஏற்படாமல் இருக்க ஹோட்டல் நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர்.இந்த ஹோட்டலில் நேற்று இரண்டு திருமண நிகழ்வுகள் நடந்தன. அந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்கள் லிப்ட்டில் சென்றதாக கூறப்படுகிறது.தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த லிப்ட் செயலிழந்ததாகவும், அது கீழே விழவில்லை எனவும் ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சகோதரிகளான 12 மற்றும் 10 வயதுடைய சகோதரிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குறச்சாட்டில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ( 57) மொனராகலை பொலிஸாரால் வியாழக்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளார்.
மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரகெட்டிய பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர் மொனராகலை மதுரெகெட்டிய இறப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தில் கள அதிகாரியாக கடமையாற்றுகின்றார்.அகலவத்தை பிரதேசத்தை சேர்ந்த சந்தேகநபர் , மதுருகெட்டிய பிரதேசத்தில் உள்ள வீட்டில் சில காலமாக அறையில் தங்கி வேலை செய்து வந்துள்ளார்.
இரண்டு சிறுமிகளின் தாயும் தந்தையும் கூலித்தொழிலாளர்கள் என்றும், அவர்கள் வீட்டில் இருந்து வெளியில் சென்ற போது இரண்டு சிறுமிகளும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.இதனையடுத்து சிறுமிகள் இருவரும் மருத்துவ பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கைதான சந்தேக நபரை மொனராகலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொரளை லேடிரிஜ்வே வைத்தியசாலையில் உயிரிழந்த மூன்று வயது சிறுவனின் மருத்துவ அறிக்கைகளுக்கும் பிரேதபரிசோதனை அறிக்கைகளுக்கும் முரண்பாடு காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி சிறுவனின் சிறுநீரகங்கள் குறித்து மருத்துவ அறிக்கைகளுக்கும் பிரேதபரிசோதனை அறிக்கைகளுக்கும் இடையில் காணப்படும் முரண்பாடு குறித்து உடனடி விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை பொரளை பொலிஸாருக்கு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜெயசூரிய பிறப்பித்துள்ளார்.மருத்துவபரிசோதனைகளில் சிறுவனிற்கு இரண்டு சிறுநீரகங்கள் என தெரிவிக்கப்பட்டதாகவும் எனினும் பிரேதபரிசோதனையில் ஒரு சிறுநீரகம் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களின் சார்பில் ஆஜரான சட்டத்தரணியின் வேண்டுகோளை தொடர்ந்தே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.மருத்துவபரிசோதனை அறிக்கை இரண்டுசிறுநீரகங்கள் என தெரிவிக்கும்போது பிரதேசபரிசோதனை அறிக்கையில் ஒரு சிறுநீரகம் என ஏன் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அது விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.