பொரளை லேடிரிஜ்வே வைத்தியசாலையில் உயிரிழந்த மூன்று வயது சிறுவனின் மருத்துவ அறிக்கைகளுக்கும் பிரேதபரிசோதனை அறிக்கைகளுக்கும் முரண்பாடு காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி சிறுவனின் சிறுநீரகங்கள் குறித்து மருத்துவ அறிக்கைகளுக்கும் பிரேதபரிசோதனை அறிக்கைகளுக்கும் இடையில் காணப்படும் முரண்பாடு குறித்து உடனடி விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை பொரளை பொலிஸாருக்கு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜெயசூரிய பிறப்பித்துள்ளார்.மருத்துவபரிசோதனைகளில் சிறுவனிற்கு இரண்டு சிறுநீரகங்கள் என தெரிவிக்கப்பட்டதாகவும் எனினும் பிரேதபரிசோதனையில் ஒரு சிறுநீரகம் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களின் சார்பில் ஆஜரான சட்டத்தரணியின் வேண்டுகோளை தொடர்ந்தே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.மருத்துவபரிசோதனை அறிக்கை இரண்டுசிறுநீரகங்கள் என தெரிவிக்கும்போது பிரதேசபரிசோதனை அறிக்கையில் ஒரு சிறுநீரகம் என ஏன் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அது விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பிரபல தொலைக்காட்சியில் தமிழில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சிரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ஸ்ருதி ஷண்முகப்பிரியா. இவர் நாதஸ்வரம் சிரியலை தொடர்ந்து வாணி ராணி, கல்யாண பரிசு, பாரதி கண்ணம்மா போன்ற பல தொடர்களில் நடித்து வந்தார்.
மேலும், இவர் தொலைக்காட்சி தொடர் மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவ்வாறான நிலையில், ஸ்ருதி ஷண்முகப்பிரியா கடந்த ஆண்டு மிஸ்டர் தமிழ்நாடு 2022 போட்டியில் பங்கேற்று 2வது பரிசை வென்ற அரவிந்த் சேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு இவர் சின்னத்திரையில் இருந்து விலகி இருந்தார். இந்த நிலையில், ஸ்ருதியின் கணவர் அரவிந்த் சேகர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 30 வயதான அரவிந்த் சேகரின் உயிரிழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரின் மறைவிற்கு பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து, ஸ்ருதிக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.
தம்புத்தேகம – ஈரியகம பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்ததுடன் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.வான் ஒன்று லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குருநாகலில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியோரத்தில் நிற்க தயாரான போது, அதே திசையில் பயணித்த வான் ஒன்று லொறியின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண்கள் 36 மற்றும் 43 வயதுடையவர்கள் எனவும் ஆண்கள் 36 மற்றும் 46 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் கஹட்டலஸ்திகிலிய பிரதேசத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் 55, 11, 06 மற்றும் 08 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.அதிக வேகத்துடன் வேனை ஓட்டி வந்த சாரதியினால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் லொரியுடன் மோதியதனால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் இந்தியா தமிழ்நாடு நாகபட்டினத்திற்கு இடையேயான கப்பல் சேவையினை விரைவில் ஆரம்பவுள்ளதாக யாழ் இந்திய துணைத்தூதுவர் ஸ்ரீமான் ராகேஷ் நடராஜ் தெரிவித்தார்.
வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
ஆரம்பத்தில் காங்கேசன்துறை மற்றும் காரைக்கால் இடையே கப்பல் சேவை ஆரம்பிக்க திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது கங்கேசன்துறை – நாகபட்டினம் இடையே குறித்த பயணப்பாதை மாற்றப்பட்டமையினாலேயே தாமதம் ஏற்பட்டது.
குறித்த கப்பல் சேவை தொடர்பில் விரைவில் ஆரம்பிப்பதற்காக தமிழ்நாடு நாகபட்டினத்தில் பயணிகள் இறங்குமிடம் , சுங்கம் போன்ற அமைக்கும் பணிகளை இடம்பெற்று வருகின்றன.
அப்பணிகள் நிறைவடைந்தமையுடன் கப்பல் சேவையினை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம் . கப்பல் சேவை தொடர்பிலான நல்லதொரு செய்தியினை மக்களுக்கு விரைவில் அறிவிப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.
மயிலாடுதுறை அருகே காதலித்து பதிவுத்திருமணம் செய்து கொண்டு எதிர் எதிர் வீட்டில் இருந்தும் சேர்ந்து வாழாத இளம்பெண் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் செல்லதுரை, இவர் மகள் 29 வயதான கனகலட்சுமி. எம்.இ., பொறியியல் முதுகலை பட்டதாரியான இவர் தனது எதிர்வீட்டில் வசிக்கும் பகுதிநேர வாகன ஓட்டுனரான 32 வயதான சக்திவேல் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
கனகலட்சுமியின் தாய் மாற்றுசமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் இவர்களது காதலுக்கு சக்திவேலின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், அவர்கள் கடந்த 2018-ஆம் ஆண்டு கடலூரில் பதிவுத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ஆனாலும், இருவரையும் சேர்ந்த வாழ கணவர் வீட்டில் ஏற்றுக் கொள்ளாததால் கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் எதிர்எதிர் வீட்டில் வசித்தாலும், பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதுகுறித்து, கனகலட்சுமி குடும்பத்தார் சக்திவேல் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருவருக்கும் ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி (ஆவணி 3) முறைப்படி திருமணம் செய்ய முடிவு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், செல்லதுரை விவசாய வேலைக்காக வெளியில் சென்றுவிட்டதால் கனகலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மாலையில் வேலைமுடித்து விட்டு செல்லதுரை வீடுதிரும்பிய போது, வீட்டில் கனகலட்சுமி துப்பட்டாவால் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கியுள்ளார்.
அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த செல்லதுரை இது தொடர்பாக பொறையார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் சக்திவேல் மேலும் சிலருடன் வீட்டிற்கு வந்ததாகவும், கணவன் சக்திவேல் தன்மகளை அடித்து கொன்றுவிட்டதாகவும், தனது மகள் 2 முறை கருக்கலைப்பு செய்துள்ளதாகவும், கனகலட்சுமியின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.
அவர் அளித்த புகாரின் பேரில் பொறையார் காவல்துறையினர் இயற்கைக்கு மாறான மரணம் என 174 வழக்குப்பதிவு செய்து கனகலட்சுமியின் உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். பதிவுத் திருமணம் நடைபெற்று 7 ஆண்டுகள் நிறைவடையாததால் இச்சம்பவம் குறித்து சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா விசாரணை மேற்கொண்டுள்ளார்.
திருமணமாகி 5 ஆண்டுகளாக கணவரோடு சேர்ந்து வாழாத இளம்பெண்ணுக்கு விரைவில் முறைப்படி திருமணம் நடைபெற்று கணவருடன் சேர்ந்து வாழ இருந்த நிலையில், மர்மமான முறையில் தூக்கிட்டு திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் ஜோசியர் பேச்சைக் கேட்டு கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார்.
இவரது மனைவி பிரியா (31). இவர்களுக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆன நிலையில், இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் பிரியா நான்கு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
ஜோசியர் ஒருவரிடம் வயிற்றில் இருப்பது ஆண் குழந்தையா? இல்லை பெண் குழந்தையா என கேட்டுள்ளார். அப்போது அந்த ஜோசியர் வயிற்றில் இருப்பது பெண் குழந்தை எனக் கூறியதாக சொல்லப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பிரியா தனது கணவர் சிவக்குமாருக்கு தெரியாமல் தனது தாயை அழைத்துகொண்டு கருக்கலைப்பு செய்வதற்காக துறையூர் பச்சமலை அருகே செங்காட்டுபட்டி கிராமத்தில் மருந்தகம் நடத்தி வரும் சித்ரா என்பவரிடம் சென்று கருக்கலைப்பு செய்துள்ளனர்.
abortion legal in India
இதில் ரத்தப்போக்கு அதிகமாக இருந்ததால் பாதிக்கப்பட்ட பிரியா சம்பவம் தொடர்பாக தனது கணவர் சிவகுமாருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
உடனடியாக துறையூருக்கு வந்த கணவர் சிவக்குமார், மனைவி பிரியாவை மீட்டு திருச்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், உரிய பாதுகாப்பின்றி அவருக்கு கருகலைப்பு செய்யப்பட்டதே உயிரிழப்புக்கு காரணம் எனத் தெரிவித்துள்ளனர்.
பின்னர் தனது மனைவி பிரியாவின் இறப்புக்கு காரணமாக இருந்த செங்காட்டுப்பட்டியில் இயங்கி வரும் மருந்தகத்தின் உரிமையாளர் சித்ரா மீது சிவகுமார் துறையூர் காலை நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த துறையூர் போலீசார் சிதராவை கைது செய்தனர்.
தமிழக மாவட்டம் திருவள்ளூரில் பிறந்த நாளை கொண்டாட இருசக்கர வாகனத்தில் சென்ற சகோதரர்கள் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்கள் தூர்வாசன், சரத்குமார்.
இவர்கள் இருவரும் திருத்தணி அருகே மாம்பாக்கம் சத்திரத்தில் பிறந்தநாளை கொண்டாட இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அதிவேகமாக எதிரே வந்த கார் இவர்களது இருசக்கர வாகனத்தில் மீது மோதியுள்ளது.
இதில் சகோதரர்கள் இருவருமே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
வவுனியா, தோணிக்கல்லில் வீட்டுக்கு தீ வைத்து வாளால் வெட்டிய சம்பவத்தில் இருவர் மரணமடைந்திருந்தனர். இச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபராக கருதப்படும் நபரை 24 மணித்தியாலம் தடுத்து வைத்து விசாரணை செய்ய சிஐடிக்கு வவுனியா நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 23 ஆம் திகதி வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புகுந்த குழு வீட்டு உரிமையாளர் மீது வாளால் வெட்டிவிட்டு வீட்டுக்கு பெற்றோல் ஊற்றி தீ வைத்திருந்தனர்.
குறித்த சம்பவத்தில் இளம் குடும்பப் பெண் மூச்சுத் திணறல் காரணமாகவும் அவரது கணவன் தீயில் எரிந்தமை காரணமாகவும் மரணமடைந்திருந்ததுடன் மேலும் 9 பேர் காயமடைந்திருந்தனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்பில் பொலிசார் மற்றும் சிஐடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் ஐவரை கைது செய்த பொலிஸார் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய எதிர்வரும் 11 ஆம் திகதி வரை அனுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் குறித்த சம்பவத்தின் பிரதான சந்தே நபராக கருத்தப்படும் கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று (02.08) மாலை கைது செய்யப்பட்டிருந்தார்.
இன்று (03.08.2023) குறித்த நபரை வவுனியா நீதிமன்றில் முற்படுத்திய சிஐடியினர் அவரை தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி கோரினர். அதற்கு அமைய 24 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய மன்று அனுமதி வழங்கியுள்ளது.
யாழ்ப்பாணம் – கலட்டிப் பகுதியில் உள்ள தனியார் வீடொன்றில் தங்கியிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலாமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் வருட மாணவி ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவர். மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த மாணவி யாழ்ப்பாணம் – கலட்டிப் பகுதியில் உள்ள தனியான் வீடொன்றின் அறையில் வாடகைக்குக் குடியிருந்துள்ளார்.
இந்த மாணவி இன்று காலை விரிவுரைகளுக்குச் செல்லாமல் தனித்திருந்ததாகவும், சக மாணவிகள் நண்பகல் அளவில் அறைக்குத் திரும்பி வந்த வேளையில் மாணவியின் சடலத்தைக் கண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில், காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த வருணிகா தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார்.காக்கா முட்டை படத்தில் குழந்தை நட்சத்திரங்களாக நடித்த விக்னேஷ், ரமேஷ் இருவரும் கதை நாயகர்களாக நடிக்கும் படம் புது வேதம்.
புது வேதம் ராசா விக்ரம் இயக்குகிறார். இந்த படத்தில் விக்னேஷ் ஜோடியாக நடிக்கிறார் வருணிகா.யாழ்பாணத்தை சேர்ந்த வருணிகா , உள்நாட்டு போர் நடந்தபோது அங்கிருந்து குடும்பத்துடன் சென்னை சென்று செட்டிலானார்.
நடிப்பு மீது ஆசை கொண்ட வருணிகா சினிமா ஆடிசன்களில் கலந்து கொண்டு சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார்.இப்போது புதுவேதம் படத்தின் மூலம் ஹீரோயின் ஆகியிருக்கிறார்.
சென்னையில் உள்ள குப்பை மேடுகளில் வாழும் மக்களை பற்றிய கதை இது. இதில் அவர் அந்த பகுதியில் வாழும் ஏழைப் பெண்ணாக நடித்துள்ளார். படம் அடுத்த மாதம் வெளிவருகிறது.
திருமணத்திற்கு பெண் பார்க்க சென்ற இளைஞனை நூதன முறையில் ஏமாற்றி 18 இலட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கிளிநொச்சி பளையை சேர்ந்த இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதற்கு பெண் பார்க்க சென்றுள்ளார்.
இளைஞன் பெண் பார்த்து சென்ற சில நாட்களில், இளைஞனின் தொலைபேசிக்கு அழைப்பு ஏற்படுத்திய நபர் ஒருவர், தான் அவுஸ்ரேலியாவில் இருந்து கதைப்பதாகவும், தன்னை இப்பெண்ணின் சகோதரர் என அறிமுகப்படுத்திக்கொண்டு, தனது தங்கை வெளிநாட்டு மாப்பிள்ளையை எதிர்பார்ப்பதாகவும், அதனால் உங்களை நான் வெளிநாட்டுக்கு எடுத்து விட முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார்.
இதற்காக 18 இலட்ச ரூபாய் பணத்தினை இந்த கணக்கு இலக்கத்திற்கு வங்கியில் வைப்பிலிடுங்கள் என ஒரு கணக்கிலக்கத்தை வழங்கியுள்ளார். இளைஞனும் அவரின் பேச்சை நம்பி பணத்தினை வைப்பிலிட்டுள்ளார்.
சில மாதங்கள் கடந்த நிலையிலும் தனது வெளிநாட்டு அலுவல்கள் எதுவும் முன்னெடுக்கப்படாத நிலையில் சுதாகரித்துக்கொண்ட இளைஞன், அவுஸ்ரேலிய நபருடன் தொடர்பு கொண்டுள்ளார். இந்நிலையில் இருவருக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக சந்தேகநபர் தொடர்பை துண்டித்துள்ளார்.
அதன் பின்னர் அந்த தொலைபேசி இலக்கமும் செயலிழந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட இளைஞன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகராம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், இளைஞன் தனது பணத்தை வைப்பிலிட்ட கணக்கிலக்க உரிமையாளரான கிளிநொச்சியை சேர்ந்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
குறித்த கணக்கு இலக்கத்திற்கு பல தடவைகள் இலட்சங்களில் பணப்பரிமாற்றம் நடந்துள்ளமை தெரியவந்துள்ளது. அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போது இவ்வாறாக வடமராட்சி பகுதியில் உள்ள இளைஞனையும் ஏமாற்றி வருவது தெரிய வந்துள்ளது.
இதேவேளை மானிப்பாயில் இளைஞன் பெண் பார்க்க சென்ற பெண் , வேறு ஒரு நபரை திருமணம் செய்துள்ள நிலையில் அவரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது , பளை இளைஞன் தன்னை பெண் பார்த்து சென்ற உடனேயே இளைஞனை பிடிக்கவில்லை என கூறி விட்டதாகவும், அதன் பின்னர் தனது சகோதரன் அவரை ஏமாற்றிய விடயம் தனக்கு தெரியாது எனவும் கூறியுள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கனடாவின் டொரண்டோவில் தமிழ் சிறுமி ஒருவர் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இவ்வாறு 12 வயதுடைய தமிழ் என்ற பெயருடைய சிறுமியே காணாமல்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 31ஆம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில், லோரன்ஸ் அவென்யூ கிழக்கு மற்றும் ஓர்டன் பார்க் வீதி பகுதியில் கடைசியாக காணப்பட்டார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 12 வயதுடைய 5 அடி 4 அங்குலம் உயரமுடைய மெல்லிய தேகமுடைய காணாமல்போன சிறுமி, கடைசியாக கறுப்பு நிற ரி சேட் மற்றும் கறுப்பு நிற பான்ட் அணிந்திருந்தார் எனவும் டொரண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமி தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் 416-808-4300, Crime Stoppers anonymously at 416-222-TIPS (8477), or at www.222tips.com.அறிவிக்குமாறு ரொறன்ரோ பொலிஸார் பொது மக்களிடம் உதவிகோரியுள்ளார்.
லிட்ரோ எரிவாயு நிறுவனம் நாளைய தினம் (04.08.2023) விலை அதிகரிப்பு அறிவிப்பை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.சர்வதேச அளவில் எரிவாயுவின் விலை அதிகரிப்பிற்கு ஏற்றவாறு இலங்கையிலும் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித்த பிரீஸ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.ஒரு மெட்ரிக் தொன் எடையுடைய சமையல் எரிவாயுவின் உலக சந்தை விலை 85 டொலர்களால் உயர்வடைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.உலக சந்தையில் ஏற்படும் விலை மாற்றம் உள்நாட்டு சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே நாளைய தினம் சமையல் எரிவாயு விலை தொடர்பிலான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஒவ்வொரு மாதத்திலும் லிட்ரோ நிறுவனம் விலை மாற்றம் தொடர்பில் அறிவிப்புக்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலை ஒன்றில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான மாணவன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர் தலைமறைவாகியுள்ளார்.
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் உள்ள பிரபல அரச பாடசாலை ஒன்றில் கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி உடற்கல்வி ஆசிரியரால் விளையாட்டு அறையில் வைத்து பாலியல் ரீதியாக மாணவன் வன்புணர்வு முயற்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அதிபரிடம் முறையிடப்பட்டிருந்தது.
சம்பவம் இடம்பெற்று மறுநாள் பாதிக்கப்பட்ட குறித்த மாணவன் அதிபரிடம் முறையிட்டுள்ளதுடன், இதுவரை இரு வாரங்கள் கழிந்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் மூடி மறைப்பதற்கான முழு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நிந்தவூர் பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் தரம் 9இல் கல்வி கற்கும் தனது மகனிடம் வாக்குமூலம் ஒன்றை இரு தடவை பெற்றுச் சென்றுள்ளதுடன், மகனை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சி செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபரான ஆசிரியர் தொடர்ந்தும் தலைமறைவாகி உள்ளதாகத் தாயார் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பாலியல் வன்புணர்வு முயற்சிக்கு உட்படுத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படும் தனது மகன் நேற்று (02.08.2023) மாலை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் வாக்குமூலங்களைப் பெற்றுச்சென்றுள்ளதாகத் தாய் மேலும் குறிப்பிட்டுள்ளார்.இந்த விடயம் தொடர்பில் எந்த தரப்பினரும் எமக்கு உதவவில்லை என கண்ணீர் மல்கப் பாதிக்கப்பட்ட மாணவனின் தாயார் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
குவைத்தில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு தூக்கிலிடப்பட்ட இலங்கையர் ஒருவரின் மரண விசாரணை நேற்று நீர்கொழும்பு மாநகரசபை மற்றும் நீர்கொழும்பு வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி சிறி ஜயந்த விக்கிரமரத்ன முன்னிலையில் ஆரம்பமானது.
எனினும் உயிரிழந்தவரின் மனைவிகள் என கூறி மூன்று பெண்கள் முன்னிலையாகியதால் விசாரணை இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.அநுராதபுரம், கல்கடவல, சூர இசுருகம பகுதியைச் சேர்ந்த வீரசிங்க ஆராச்சிலாகே ஜூட் ரவீந்திர பெரேரா என்ற 46 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் மனைவி எனக் கூறப்படும் குறித்த முகவரியில் வசிக்கும் எஸ்.திஸாநாயக்க முதியன்சேலாகே என்பவர் சாட்சியமளித்துள்ளார்.“உயிரிழந்தவர் நான் திருமணம் செய்துக் கொண்ட எனது கணவராகும். எங்களுக்கு திருமணமாகி 17 வருடங்கள் ஆகிறது. நான் ஓமானில் வேலை செய்கிறேன்.
கடற்படையில் சிப்பாயாக பணியாற்றி வந்த அவர், பின்னர் வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்றார்.தனது தந்தை குவைத்தில் தூக்கிலிடப்பட்டதை யூடியூப்பில் பார்த்ததாக எனது மகன் என்னிடம் தெரிவித்தார். எனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
அவரது உடல் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. அவர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் தண்டனை பெற்று தூக்கிலிடப்பட்டார் என்பதை அறிந்தேன். இறந்த எனது கணவருக்கு வேறு இரண்டு பெண்களுடன் திருமணம் நடந்தது பின்னரே தெரிய வந்தது.
நான் கணவனின் உடலை ஏற்க விரும்பவில்லை. ஆனால், இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள எனக்கு வாய்ப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்” என அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.இறந்தவரின் சகோதரர் ஒருவர் சாட்சியம் அளித்ததுடன், சடலத்தை ஏற்றுக்கொள்ள தாய் விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இறந்தவரின் மனைவிகள் என கூறப்படும் பெண்களின் அடையாளத்தை சரிபார்த்து, அவர்களை பிள்ளைகளின் தகவல், திருமண சான்றிதழ் மற்றும் பிறப்பு சான்றிதழ்களுடன் இன்று பரிசோதனைக்கு முன்னிலைப்படுத்துமாறு மரண விசாரணை அதிகாரி சிறி ஜயந்த விக்கிரமரத்ன கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்தார்.
வவுனியா – தோணிக்கல் பகுதியில் வீடு புகுந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட ஐவரை கைது செய்த பொலிஸார் நீதிமன்ற உத்தரவினை பெற்று நடத்திய விசாரணையின் பின்னர் கூமாங்குளத்தை சேர்ந்தவரும் சம்பவத்தில் மரணமடைந்த சுகந்தனின் நண்பராக இருந்து பெண் விவகாரத்தால் பின்னர் பிரிந்தவருமான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரை இன்று (03.08.2023) குற்ற புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை விசாரணை பிரிவினர் நீதவான் முன்னிலையில் மன்றுக்கு முன்னிலைப்படுத்தி பொலிஸ் விசாரணைக்குட்டபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறித்த தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று(02.03.2023) நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறும், மீண்டும் 11ஆம் திகதி ஆள் அடையாள அணி வகுப்பிற்காக 2ஆம் 3ஆம் 4ஆம் 5ஆம் சாட்சிகளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும் எனவும் நீதிபதியால் உத்தரவிடப்பட்டது.
இதன்போது, மன்றில் 4ஆம் சாட்சி தனது கருத்தினை தெரிவிக்க முற்பட்ட போது நீதிபதி 02.08.2023 உங்கள் கருத்தை தெரிவித்தால் உங்களுக்கு அனுகூலம் ஏற்படுத்த சந்தர்ப்பமாக அமையும்,
அதனால் 11ஆம் திகதி நீங்கள் விரும்பினால் யோசித்து உங்கள் கருத்தை தெரிவிக்கலாம் என வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் அகமட் ரசீம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.