வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் சேவை பெறுவோர் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு அலுவலகத்தில் சேவைகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவிக்கும் வகையில் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

தற்போதுள்ள பொதுமக்களின் நெருக்கடியை குறைக்கும் வகையில் இன்று (03) முதல் வட மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் அநுராதபுரம் மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு மாத்திரம் வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு அலுவலகத்தில் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வருகைதருவதால் அங்கு நெருக்கடி நிலை ஏற்ப்பட்டுவருவதுடன், பொதுமக்களுக்கிடையில் குழப்பநிலையும் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

வவுனியா குருமன்காடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் பெண்ணின் சங்கிலி அறுப்பு!!

வவுனியா குருமன்காடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பெண் ஒருவர் அணிந்திருந்த சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றது.

நேற்று (02.08.2023) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா,குருமன்காடு காளிகோவிலுக்கு அருகாமையில் பெண் ஒருவர் சென்றுள்ளார்.

இதன்போது பல்சர் ரக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அந்தப்பெண் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். குறித்த நபர்களை சிலர் விரட்டிச் சென்றபோதும் அவர்களை பிடிக்க முயலவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நேற்றயதினம் நெளுக்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் பெண் ஒருவர் அணிந்திருந்த 5 பவுண் தங்கச்சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் துவிச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்து : இருவர் காயம்!!

வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் நேற்று (02.08.2023) இரவு 10 மணியளவில் துவிச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கி முன்பாகவிருந்து வீதிக்கு ஏற முற்பட்ட துவிச்சக்கரவண்டி மீது வைத்தியசாலையிலிருந்து ஹொரவப்பொத்தானை வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் இரு வாகனங்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளமையுடன் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தமையுடன் இரு வாகனங்களையும் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றனர்.

 

வவுனியாவை அதிரவைத்த இரட்டைக் கொலை : சந்தேகநபர்கள் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு அனுப்பி வைப்பு!!

வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில் தம்பதிகள் மரணம் தொடர்பில் சந்தேகநபர்களை எதிர்வரும் 11 திகதி வரை அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்க வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வவுனியா, தோணிக்கல் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களையும் 11 திகதி வரை அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கவும், மீண்டும் 11 திகதி ஆள் அடையாள அணி வகுப்பிற்காக 2ம் 3ம் 4ம் 5ம் சாட்சிகள் நீதிமன்றில் முன்னிலைபடுத்த வேண்டும் எனவும் நீதிபதியால் உத்தரவிடப்பட்டது.

இதன்போது, மன்றில் 4ம் சாட்சி தனது கருத்தினை தெரிவிக்கமுற்பட்ட போது நீதிபதி இன்று (02.08) உங்கள் கருத்தை தெரிவித்தால் உங்களை அனுகூலம் ஏற்படுத்த சந்தர்ப்பமாக அமையும் அதனால் 11ஆம் திகதி நீங்கள் விரும்பினால் யோசித்து உங்கள் கருத்தை தெரிவிக்கலாம் என வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் அகமட் ரசீம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தாக்குதலுக்காக பயன்படுத்தப்பட்ட வாள்கள் மற்றும் கோடாரி, கத்தி, இரும்புகம்பி என்பன நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகிந்த குணரத்ன, பிரதி பொலிஸ் மா அதிபர் பி.அம்பாவில ஆகியோரின் அறிவுறுத்தல்கள் மற்றும் மேற்பார்வையின் கீழ் வவுனியா குற்றப் புலனாய்வுப் பிரிவினர், வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் உள்ளிட்ட பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களையும் நேற்று (02.08) வவுனியா சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்படுதிய பின்னர் வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் நேற்று (02.08) மாலை ஆஜர்படுத்தினர்.

இதன்போதே சந்தேக நபர்களை எதிர்வரும் 11 வரை அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அத்துடன், சந்தேகநபர்கள் சிறு நோய்களுக்கு உட்பட்டவர்கள் என்பதனால் சிறைச்சலை வைத்திய அதிகாரியிடம் சிகிச்சை பெற்றுக் கொடுக்க பணித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் சட்டத்தரணி அருள்மொழிவர்மன் கொன்சியஸ் ஆஜராகி சந்தேகநபர்களை எவ்வித துன்புறுத்தலுக்கும் உள்ளாக்காமல் சந்தேகநபர்களின் நலனுரித்துக்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் சந்தேகநபர்கள் விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட ஐந்து சந்தேகநபர்களையும் குற்ற புலனாய்வுத் திணைக்களத்தின் கொலைவிசாரனை பிரிவினரான பொலிஸ் பரிசோதகர் இக்பால், பொலிஸ் பரிசோதகர் பொல்வத்த, பொலிஸ் சார்ஜன்ட் சங்கர்ரூவான், பொலிஸ்காஸ்டபிள் விஜரட்ண மதுசங்க பண்டார ஆகியோர் இணைந்து அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சந்தேக நபர்களை அனுப்பி வைத்தனர்.

பட்டப்பகலில் கழுத்து நெரித்து கொல்லப்பட்ட இளம்பெண்!!

கோவையில்..

கோவை பீளமேடு சேரன் மாநகர், பாலாஜி நகர் பகுதியில் வசித்து வருபவர் சக்ரவர்த்தி. இவர், பெயிண்டிங் ஒப்பந்ததாரர். இவரது மனைவி ஜெகதீஸ்வரி (41). இந்த தம்பதிக்கு கார்த்திகா என்ற மகள் உள்ளார்.

இவர், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ப்ளஸ்-2 படித்து வருகிறார். சக்கரவர்த்தி அன்னூரில் பெயிண்டிங் ஒப்பந்தம் எடுத்து செய்து வருவதால், காலையில் பணிக்குச் சென்றுவிட்டார்.

வழக்கமாக ஜெகதீஷ்வரி, மகள் கார்த்திகாவை காலையில் பள்ளியில் விட்டுவிட்டு, மாலையில் பள்ளிச் சென்று வீட்டிற்கு அழைத்து வருவார். நேற்றும் அதே போல ஜெகதீஷ்வரி பள்ளிக்கு வருவார் என எண்ணி கார்த்திகா பள்ளியிலேயே காத்திருந்தார்.

ஆனால் மாலை நீண்ட நேரம் ஆகியும் ஜெகதீஷ்வரி வராததாலும், செல்போனை எடுக்காததாலும், கார்த்திகா நடந்தே வீட்டிற்கு சென்றுள்ளார்.வீட்டிற்குள் சென்று பார்த்த போது, ஜெகதீஷ்வரி இறந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கார்த்திகா சத்தம் போட்டதால் அங்கு வந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக கணவர் சக்கரவர்த்திக்கும், போலீசாருக்கும் தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உதவி ஆணையர் பார்த்திபன் தலைமையிலான போலீசார், அங்கு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், ஜெகதீஷ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதல் கட்ட விசாரணையில் ஜெகதீஷ்வரி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதும், அவர் அணிந்திருந்த 4 சவரன் செயின், 1 சவரன் கம்மலும் திருடப்பட்டதும் தெரியவந்தது.

மோப்பநாய் மற்றும் தடயவியல் துறையினர் உதவியுடன் போலீசார் வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பெண்ணை கொலை செய்து நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை பிடிக்க 3 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். பட்டப்பகலில் நகைக்காக பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை இல்லனு அடிக்கிறான், சாகப்போறேன்மா.. இளம் பெண் தற்கொலை.. பதைபதைக்க வைக்கும் கடிதம்!!

புதுச்சேரியில்..

திருமணமாகி நான்கு வருடமாகியும் குழந்தை இல்லை என்ற காரணத்தால்… கணவன், மனைவியை தாக்கியதில் மனமுடைந்த மனைவி வீடியோ பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் புதுவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம், திருக்கனூர் அருகே உள்ள ரோஜா நகர் கே.மணவெளியைச் சேர்ந்தவர்கள் அரவிந்த் – மோனிகா தம்பதி. இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்திருக் கின்றனர்.

இவர்களுக்கு திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகும் நிலையில், குழந்தை இல்லை. இதனால் இருவருக்கும் இடையே அவ்வப்போது பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 25-ம் தேதி மாலை மோனிகா தன் தாய் உண்ணாமலையிடம், தன் கணவருக்கும் தனக்கும் இடையே நடக்கும் பிரச்னை பற்றிக் கூறியுள்ளார்.

அப்போது, மறுநாள் நேரில் வந்து பார்ப்பதாக உண்ணாமலை கூறியுள்ளார். கடந்த 26-ம் தேதி காலை, உண்ணாமலை தன் மகளுக்கு செல்போன் மூலமாக பலமுறை தொடர்புகொண்ட போதும், அவர் அழைப்பை ஏற்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த அவர், திருக்கனூர் பகுதியில் உள்ள தன் மூத்த மகளை அனுப்பி மோனிகாவை வீட்டில் சென்று பார்க்கச் சொல்லியுள்ளார். அவர் சென்று பார்த்தபோது கதவு மூடி இருந்திருக்கிறது.

இதனால் சந்தேகமடைந்தவர், ஜன்னல் வழியாகப் பார்த்தபோது மோனிகா புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது தொடர்பான தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த திருக்கனூர் போலீஸார், மோனிகாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே மோனிகாவின் செல்போனை உறவினர்கள் பார்த்தபோது, அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக இரண்டு வீடியோக்களை பதிவு செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

அந்த வீடியோவில் பேசும் மோனிகா, “என்னால இவன்கிட்ட இருக்க முடியலம்மா. என்னை அடிக்கிறான்மா… தலையில ஒரே வலி. ராத்திரி போட்டு அடிச்சிட்டான்மா. `உன் வீட்டுல இருந்து என்ன பண்ணுறாங்க…

உன்னால பிள்ளை பெத்துக் கொடுக்க முடியலனா நீ எதுக்கு இருக்க… நீ போ, நான் வேறொரு கல்யாணம் பண்ணி பிள்ளை பெத்து காண்பிக்கிறேன்’னு சொல்லி, என்னப் போட்டு அடிக்கிறான்மா.

`உன் ஜாமானை எல்லாம் தூக்கிக்கினு போ, இனி நான் உடன்கூட இருக்க மாட்டேன், செத்துரு போ’னு அடிக்கிறான்மா. நான் சாகப்போறேன்மா, என்னால இவன்கிட்ட இருக்க முடியலம்மா…

நான் செத்துட்டா, நீ யாரையும் சும்மா விடாதம்மா. நான் செத்துட்டாலும் உன் கூடவேதான் இருப்பேன்மா, நீ அழுவாத… அப்பாவை பாத்துக்க, அம்மா நான் போறேன்” என அழுதபடியே தன் தாய்க்கு அவர் அந்த வீடியோ பதிவை செய்துள்ளார்.

தற்போது இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மேலும், “என் இறப்புக்கு காரணம் என் கணவர், அவர் அம்மா, அப்பா, தம்பி. என்னை வரதட்சணை கேட்டு அடிக்குறாங்க. கல்யாணம் ஆகி 5 வருடம் ஆகப்போகுது, குழந்தை பிறக்கலனு என் கணவர் என்னை தினமும் அடிக்கிறாரு.

என்னால இதுக்கு மேல உயிரோடு இருக்க முடியல. இவங்க யாரையும் சும்மா விடாதீங்க” என்று மோனிகா எழுதி வைத்துள்ளதாகக் கூறப்படும் கடிதம் ஒன்று வெளியாகி மேலும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில் திருக்கனூர் போலீஸார், கணவர் அரவிந்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுமட்டுமன்றி, மோனிகா தற்கொலை செய்துகொண்ட தகவலை அறிந்த அவரின் பாட்டி ரங்கம்மா அதிர்ச்சியில் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கணவன் திட்டி தாக்கியதில், மனமுடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் புதுவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி விபரீத முடிவு!!

சென்னையில்..

சென்னை பல்லாவரம் அருகே காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பல்லாவரம் வேம்புலி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த பாலமுருகன் – விமலா தம்பதியினரின் மூத்த மகள் ஹேமிதா.

இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் ஹேமிதா அதே பகுதியில் உள்ள டியூஷன் சென்டரில் சிறு வயதிலிருந்து படித்து வந்து உள்ளார்.

9-ஆம் வகுப்பு படிக்கும் போது டியூஷன் மாஸ்டர் அஜய் (வயது 26) என்பருக்கும் ஹேமிதாக்கும் நட்பு ஏற்பட்டு உள்ளது. நாளடைவில் அது காதலாக மாறியது.இந்த காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரியவர படிக்கும் வயதில் காதல் எதற்கு என ஹேமிதாவை கண்டித்தாதக தெரிகிறது.

அதன் பிறகு ஒரு சில மாதங்களாக இருவரும் பேசுவதை நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. பள்ளி படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்கு சென்று கொண்டு இருக்கும் போது மீண்டும் அஜய், ஹேமிதாவும் நேரில் சந்தித்து தங்களது காதலை தொடர்ந்து கொண்டிருந்தனர்.

ஹேமிதா பயன்படுத்தி இருந்த செல்போனையும் அவரின் பெற்றோர் வாங்கிக் கொண்டதால் இருவரும் பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் தன் காதலிக்கு புதியதாக செல்போனை வாங்கி கொடுத்து இன்ஸ்டாகிராம் மூலமாக பேசி இருவரும் காதலை வளர்த்து வந்துள்ளனர்.

இந்தநிலையில், கடந்த 27-ஆம் தேதி ஹேமிதா வீட்டில் அனைவரும் தூங்கியப் பின் காலையில் எழுந்து ஹேமிதாவை பார்த்த போது அவரைக் காணவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஹேமிதாவை அக்கம்பத்தில் தேடி உள்ளனர். ஆனால் எங்கு தேடியும் மகள் கிடைக்காததால் அருகில் உள்ள பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த பல்லாவரம் போலீசார் ஹேமிதாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ரயில்வே போலீசாருக்கு, குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே ஒரு இளம்பெண்ணின் சடலம் கிடப்பதாக தெரிய வந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டதில் அவர் ஹேமிதா என்பது தெரிய வந்தது. அதன் பின் ஹேமிதாவின் உடல் உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் ஹேமிதா வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டிருந்த நேரத்தில் அதிகாலை நேரத்தில் குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே தற்கொலை செய்துக்கொண்டது தெரிய வந்தது.

இளம்பெண் ஹேமிதாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். குறிப்பாக இறப்பிற்கு அவரது காதலன் தான் காரணம் எனவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

வவுனியா கராத்தே வீரர்கள் மாகாண கராத்தே போட்டியில் 34 பதக்கங்களை வெற்றிபெற்று சாதனை!!

அண்மையில் கிளிநொச்சியில் நடைபெற்ற வடக்கு மாகாணம் முழுவதற்க்குமாக கராத்தே போட்டியில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான போட்டியாளர்கள் மத்தியில்,

வவுனியா வீரர்கள் 15 தங்கம், 12 வெள்ளி, 7 வெங்கலபதக்கங்களைப் பெற்றதுடன் முழுவதுமாக 34 பதக்கங்களைப் பெற்று தேசிய மட்டப் போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளமை வவுனியாவின் சாதனையாக நோக்கப்படுகிறது.

மேலும் போட்டியில் வெற்றி பெறுவதற்கான பயிற்சி நுணுக்கங்களை கற்பிக்கவும் மற்றும் மாணவர்களை வளப்படுத்தவும் பக்கபலமாக இருந்து வழிகாட்டிய போதானாசிரியர் சிகான் முகம்மத் இக்பால் செயற்பட்டிருந்தார்.

இம் மாணவர்களின் வெற்றிக்காக அரும்பாடுபட்ட வவுனியா மாவட்ட பயிற்றுவிப்பாளர்களான சென்சே பா.மிதுஷன் , சென்சே பா.ஆகாஸ் ஆகியோரை கராத்தே சமூகம் பாரட்டி நிற்கின்றது.

பொலிஸ் உத்தியோகத்தரை மிரட்டிய பேருந்து சாரதி : வெளியான காணொளி!!

மஹரகமவில்..

மஹரகம நிலம்மஹர பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை மிரட்டிய தனியார் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

“சீருடைக்கு மதிப்பளித்து அனுப்பி விடு. இல்லையேல் நான் உன்னை தூக்கி தரையில் அடிப்பேன்” என வெலிக்கடை பொலிஸ் போக்குவரத்து பிரிவின் உத்தியோகத்தரை குறித்த தனியார் பேருந்து சாரதி மிரட்டியுள்ளார்.

இராஜகிரிய தேவாலயத்திற்கு அருகில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த போது ஹெட்டியவத்தையிலிருந்து நுகேகொட நோக்கி பயணித்த தனியார் பேருந்து சோதனை நடவடிக்கைகளுக்காக நிறுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது நிறுத்தபட்ட பேருந்தின் சாரதி ” நீ தண்டப்பணம் பிடிப்பது பெரிய விடயம் அல்ல, ஆனால் உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க நினைவில் கொள்ளுங்கள். என் பெயர் தில்ஷன், யாராக இருந்தாலும் எனக்கு பயமில்லை” என அச்சுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் சந்தேகத்திற்கிடமான சாரதியின் நடவடிக்கைகளை, பொலிஸ் உத்தியோகத்தர் தனது கையடக்கத் தொலைபேசி மூலம் காணொளியாக பதிவு செய்துள்ளார்.இதற்கமைய கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார் என வெலிக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவில் உழவு இயந்திர விபத்தில் இளைஞர் ஒருவருக்கு நேர்ந்த சோகம்!!

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று மோட்டார் சைக்கிளில் மோதி தடம்புரண்டதில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து சம்பவம் நேற்றையதினம் (01.08.2023) பதிவாகியுள்ளது.

உழவு இயந்திரத்தின் திருத்தப்பணியை முடித்துவிட்டு திரும்பும்போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் மோதி உழவு இயந்திரம் தடம்புரண்டதில் இளைஞன் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளதுடன் இருவர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து சம்பவத்தில் கொழும்பை சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.இதேவேளை 42 மற்றும் 27 வயதுடைய இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்துக்குள்ளான மூவரும் உழவு இயந்திரத்தில் பயணித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொக்குளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கட்டுநாயக்காவில் சிக்கிய யாழ்ப்பாண இளம் தம்பதிகள் : வெளிநாட்டு மோகத்தால் வந்த விபரீதம்!!

இளம் தம்பதிகள்..

இத்தாலிக்குச் செல்ல முயன்ற யாழ்ப்பாண இளம் தம்பதியினர் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (01) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இத்தாலிக்கு சட்டவிரோதமாக அவர்கள் செல்லமுயன்ற நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் யாழ்ப்பாணம், சங்கானைப் பிரதேசத்தில் வசிக்கும் இளம் தம்பதியினரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் இவர்களின் பயணப்பொதிகளை சோதனையிட்டபோது, பொய்யான தகவல்களுடன் தயாரிக்கப்பட்ட இரண்டு கடவுச்சீட்டுகளும் போலி வீசாவும் இந்த இளைஞனிடம் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து யுவதியை சோதனைக்கு உட்படுத்தியபோது அவரது உள்ளாடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த போலி இத்தாலி வீசா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட தம்பதியினர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை இலங்கை வாழ் தமிழர்கள் பலரும் வெளிநாட்டு மோகத்தால் சட்டவிரோத பயணங்களை மேற்கொண்டுவருகின்ற நிலையில் அதில் உள்ள ஆபத்தினை பலரும் உணர்வதில்லை. கடந்த காலங்களில் இவ்வாறு சட்டவிரோதமாக ஐரோப்பிய மற்று கனடாவுக்கு செல்ல முயன்றவர்கள் தொடர்பில் பல வேதனையான விடயங்கள் வெளியாகி இருந்ததுடன் உயிர்ப்பலிகளும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவர் எடுத்துள்ள புதிய முயற்சி!!

அவுஸ்திரேலியாவில்..

அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர் ஒருவர் தனி நடை பயணத்தை ஆரம்பித்துள்ளார்.நாட்டில் அகதிகளாக தங்கியுள்ள அனைத்து மக்களுக்கும் நிரந்தர வதிவிடத்தை வழங்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தி, ஏறக்குறைய 1000 கிலோமீற்றர் தூரமுடைய இந்த நடை பயணத்தை இன்று(01.08.2023) ஆரம்பித்துள்ளார்.

நீல் பாரா என்ற இலங்கையரே இந்த நடை பயணத்தை ஆரம்பித்துள்ளார்.அவர் Ballarat என்ற இடத்திலிருந்து சிட்னியில் உள்ள பிரதமர் தேர்தல் அலுவலகம் வரை நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார்.இதேவேளை அவர் 8 வருடங்களாக விசா ஏதும் இன்றி நாட்டில் தங்கியிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நாளொன்றுக்கு சுமார் 30 கிலோமீற்றர் தூரம் பயணித்து எதிர்வரும் செப்டெம்பர் 09ஆம் திகதி பிரதமரிடம் தனது கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை வழங்க அவர் திட்டமிட்டுள்ளார்.

தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்த மூன்று வயது சிறுவன் : வைத்தியர் நாட்டைவிட்டு தப்பிஓட்டம்!!

கொழும்பில்..

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மூன்று வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சத்திரசிகிச்சையை மேற்கொண்ட வைத்தியருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

சிறுநீரக சத்திரசிகிச்சையின் பின்னர் குறித்த சிறுவன் உயிரிழந்திருந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.இந்நிலையில் சிறுவனின் மரணத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து சுகாதார அமைச்சும் வைத்தியசாலையும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

இவ்வாறான நிலையிலேயே கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையின் இயக்குநர் வைத்தியர் ஜி விஜயசூரிய இதனை தெரிவித்துள்ளார்.சம்பவம் குறித்து பல தரப்பினர் முறைப்பாடு செய்துள்ளதையடுத்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அதேவேளை சிறுவனுக்கு சத்திர சிகிற்சை செய்த வைத்தியர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்ந்லையில் இது குறித்து வைத்த்யசலை பணிப்பாள்ர் கூறுகையில்,இந்த சம்பவம் நடைபெற முன்னரே வைத்தியர் விசாவிற்கு விண்ணப்பித்திருந்ததால், சிறுவன் உயிரிழப்பின் விசாரணைகள் முடிவடையும் வரை எந்த முடிவிற்கும் வரமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!!

தங்கம்..

இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி இன்று (02) கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தையில் ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை 154,500 ஆக குறைந்துள்ளது.

இதனிடையே வெள்ளிக்கிழமை 169,000 ரூபாவாக இருந்த 24 கரட் தங்க பவுணின் விலை இன்று 167,000 ரூபாவாகக் குறைந்துள்ளதாக கொழும்பு செட்டித் தெரு தங்கச் சந்தையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பத்தாம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு.. கதறித் துடித்த பெற்றோர்!!

நாகையில்..

நாகை மாவட்டம் திருக்குவளை அய்யூர் கிராமத்தில் வசித்து வருபவர் வீரையன். இவருடைய 5 வது மகள் ஷாலினி. இவர் ஆலத்தம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி .

ஷாலினி அதே பகுதியில் வசித்து வரும் சின்னதுரையும் காதலித்துவந்தனர். இது குறித்து ஷாலினியின் அக்கா நந்தினி ஷாலினி மற்றும் சின்னதுரையை கண்டித்துள்ளார். தங்கையுடன் பேசக்கூடாது, பழகக்கூடாது என மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் சின்னதுரைக்கும், நந்தினிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் சின்னதுரை நந்தினியை தகாத வார்த்தையால் திட்டினார். உறவினரோடு சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து நந்தினி திருக்குவளை காவல்நிலையத்தில் ஜூலை 22ம் தேதிபுகார் அளித்துள்ளார். இந்நிலையில் ஜூலை 26ம் தேதி மாலை 6 மணி முதல் ஷாலினியை காணவில்லை .

இதனையடுத்து அவரை பெற்றோர் பல இடங்களில் தேடியுள்ளனர். நள்ளிரவு வீரையன் வீட்டிற்கு பின்புறம் சிறுநீர்கழிக்க சென்றபோது ஷாலினி மரத்தில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார்.

இதைக் கண்டுஅதிர்ச்சி அடைந்த வீரையன் ஷாலினியின் உடலை மீட்டு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். போலீசார் ஷாலினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.பிரேத பரிசோதனையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டது.

ஷாலினியின் அக்கா நந்தினி அளித்த புகாரின்பேரில் காதலன் சின்னதுரை, சகோதரர் கண்ணன், தந்தை ராஜேந்திரன், தாய் பாப்பாய் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தடுப்புச் சுவரில் மோதி பள்ளத்தில் பாய்ந்த கார்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி!!

தேனியில்..

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியில் வசித்து வருபார் அஜித்குமார். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் சென்னையில் இருந்து குடும்பத்துடன் சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

இவர்களின் கார் கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள கோமுகி ஆற்றங்கரையில் வந்து கொண்டிருந்த போது திடீரென கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடத் தொடங்கியது.

கோமுகி ஆற்றின் தடுப்பு சுவரில் மோதி அதன் பின்னர் கார் பள்ளத்தில் பாய்ந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த ஒன்றரை வயது பெண் குழந்தை, அஜித், மதுமிதா, அவரது மாமியார் தமிழ்ச்செல்வி 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 4 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த கோர விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.