செல்பியால் உயிரிழந்த புதுமண தம்பதி.. காப்பாற்றச் சென்றவருக்கு நேர்ந்த சோகம்.!!

கேரளாவில்..

கேரளாவில் பாறையில் நின்று கொண்டு செல்பி எடுக்கச் சென்ற புதுமண தம்பதி ஆற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். கேரளாவில் பாறைகள் நின்று செல்பி எடுத்த புதுமண தம்பதி ஆற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதுமட்டுமல்லாமல் அவர்களைக் காப்பாற்றச் சென்ற உறவினர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் பாரிபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் 29 வயதான சித்திக்.

இவருக்கு 25 வயதில் நவ்ஃபியா என்ற மனைவி உள்ளார். இருவருக்கும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. புதுமண தம்பதியான இவர்கள் பாரிப் பள்ளியை அடுத்துள்ள பள்ளிக்கால் என்ற பகுதியில் உள்ள தனது உறவினரான அன்சில் என்பவரின் வீட்டிற்கு விருந்துக்குச் சென்றுள்ளனர்.

தம்பதிகள் தங்களது மதிய விருந்து முடித்துவிட்டு நேற்று முன்தினம் மாலை இருவரும் பொழுது போக்குவதற்காக அருகில் இருக்கும் ஆற்றுப்பகுதிக்குச் சென்றுள்ளனர். அவர்களோடு நண்பர் அன்சில் குடும்பத்தினரும் சென்றுள்ளனர்.

அப்போது புதுமண தம்பதி ஆற்றின் கரையோரம் இருந்த பாறையின் மேல் நின்று கொண்டு செல்பி எடுக்க ஆசைப் பட்டுள்ளனர். அப்போது பாறையில் இருந்து திடீரென ஆற்றுக்குள் இருவரும் கவிழ்ந்து விழுந்துள்ளனர்.

தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட இருவரும் சத்தம் போட்டு உள்ளனர். உடனே இருவரையும் காப்பாற்றுவதற்காக அன்சில் ஆற்றில் குதித்துள்ளார். ஆனால் அவரும் அந்த ஆட்சியில் மூழ்கியுள்ளார். இதனைக் கண்டு அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினர், ஆற்றின் மூழ்கிய மூன்று பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். வெகு நேரம் கழித்துக் காப்பாற்றச் சென்ற அன்சில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.

ஆனால் புதுமணத் தம்பதி உடல்கள் கிடைக்கவில்லை. இரவு நேரமாகி விட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் நேற்று காலை தேடும் பணியில் ஈடுபட்டபோது புதுமணத் தம்பதி உடல்கள் பாறையின் இடுக்கில் சிக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் இருவரின் உடலும் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செல்பி எடுப்பதற்காக ஆசைப்பட்டு புதுமணத் தம்பதி உள்பட 3 பேர் உயிரிழந்த கொடூர சம்பவம் கேரளா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேஸ்புக் காதலனை சந்திக்க இந்தியா சென்ற இலங்கைப் பெண்.. நாட்டை விட்டு வெளியேற உத்தரவு!!

ஆந்திர பிரதேசத்தில்..

இலங்கையிலிருந்து சுற்றுலா விசா பெற்று ஆந்திர பிரதேசத்தில் உள்ள காதலனை காண வந்த பெண்ணை நாட்டை விட்டு வெளியேறுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஆந்திர பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள வி.கோட்டா அடுத்த அரிமகுலப்பள்ளியை சேர்ந்த லட்சுமணன் கட்டட மேஸ்திரி வேலை செய்து வருகிறார்.

இவர் மீது பேஸ்புக் மூலம் இலங்கையைச் சேர்ந்த விக்னேஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது, இது நாளடைவில் காதலாக மாற 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இதனையடுத்து, விக்னேஸ்வரி லக்சுமணனை திருமணம் செய்ய முடிவு எடுத்தார். பின்னர், அவர் இலங்கையிலிருந்து சுற்றுலா விசா எடுத்து சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு, அவரை லட்சுமணன் வரவேற்றுள்ளார்.

பின்பு, தனது வீட்டிற்கு அழைத்து சென்று விக்னேஸ்வரியை அறிமுகம் செய்து வைத்துள்ளார். லட்சுமணன் வீட்டில் உள்ளவர்களும் இவர்களின் காதலை ஏற்று திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.

இதனையடுத்து, ஊரில் உள்ள பெரியவர்கள் முன்னிலையில் இவர்களுக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு சாய் பாபா கோவிலில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், இலங்கை பெண்ணான விக்னேஸ்வரிக்கு சுற்றுலா விசா ஆகஸ்ட் 08 ஆம் திகதியுடன் முடிவடையும் நிலையில் நாட்டை விட்டு வெளியேறுமாறு பொலிசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

மேலும், பெண்ணின் திருமணத்தை இலங்கையில் உள்ள அவரின் பெற்றோருக்கு தெரியப்படுத்துமாறு பொலிசார் கூறினர். எல்லை தாண்டும் காதலில் தற்போது இந்த ஜோடியும் சேர்ந்துள்ளனர்.

வவுனியாவில் இலவச சித்த மருத்துவ முகாம்!!

வவுனியாவில் யாழ் இந்திய துணைத் தூதரகமும் வடமாகாண சுதேச மருத்துவ திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த இலவச சித்த மருத்துவ முகாம் ஸ்ரீராமபுரம் திருஞானசம்பந்தர் வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் (29.07.2023) காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரை இடம்பெற்றிருந்தது.

இவ் முகாமில் பிரதம அதிதியாக யாழ் இந்திய துணைத்தூதுவர் ஸ்ரீமான் ராகேஷ் நடராஜ் கலந்து கொண்டிருந்தமையுடன், வடமாகாண சுதேச மருத்துவ நன்னடத்தை சிறுவர் பரமாரிப்பு சேவைகள் அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் அ.சாந்தசீலன், வடமாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்கள ஆணையாளர் ஜெபநாமகனேசன்,

வவுனியா பிரதேச செயலாளர் கமலதாசன், வவுனியா மாவட்ட சுதேச மருத்துவ திணைக்கள ஒருங்கினைப்பாளர் சரஸ்வதி, பாடசாலை அதிபர் ராமநாதன் மற்றும் கிராம சேவையாளர், அபிவிருத்தி மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சுகாதார சேவை வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இலவச சித்த மருத்துவ முகாமில் கிசிச்சைகள் மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டமையுடன் இரத்த அழுத்தம், சங்கரையின் அளவுகள் என்பனவும் இலவசமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.

இவ் இலவச முகாமினால் அப்பகுதியினை சேர்ந்த மக்கள் பலர் பயனடைந்திருந்தமையுடன் யாழ் இந்திய துணைத் தூதரகத்தினருக்கு தமது நன்றிகளை தெரிவித்தனர்.

சாரதியின் நித்திரை கலக்கத்தால் நேர்ந்த பரிதாபம்!!

இரத்தினபுரியில்..

இரத்தினபுரியில் தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இரத்தினபுரி, எம்பிலிபிட்டிய வீதியின் கலஹிட்டிய பிரதேசத்தில் இன்று (30) காலை இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து மொனராகலை நோக்கி பயணித்த பேருந்து இன்று காலை 5 மற்றும் 6 மணிக்கு இடையில் வீதியில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பட்டமளிப்பு விழாவின் மறுநாள் தவறான முடிவெடுத்த யுவதி : யாழ்ப்பாணத்தில் துயர சம்பவம்!!

யாழ்ப்பாணத்தில்..

பட்டமளிப்பு விழாவின் பின்னர் வீடு திரும்பிய யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவமானது நேற்றிரவு (28.07.2023) வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் மத்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த யுவதி சப்ரமுகவ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த நிலையில் நேற்றுமுன்தினம் (27.07.2023) பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது.

பட்டமளிப்பு விழா முடிந்து நேற்றையதினம் பெற்றோருடன் அவர் சுழிபுரத்தில் உள்ள வீட்டுக்கு வந்துள்ளார்.இந்நிலையில் நேற்றிரவு தந்தை வெளியில் சென்ற நிலையில், தாயார் வீட்டு வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

இதன்போது குறித்த யுவதி தூக்கில் தொங்கியுள்ளார். இதனை அவதானித்த தாயார் அவரை மீட்டு சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து மரண விசாரணைகளை மேற்கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம், உடற்கூற்று பரிசோதனைக்காக சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சுழிபுரம் மத்தி பகுதியைச் சேர்ந்த சற்குணரத்தினம் கௌசி (வயது 26) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.தாய் மற்றும் தந்தை ஆகியோர் இருவரும் தங்களுக்குள் தொடர்ந்து முரண்பட்டு வரும் நிலையில் மன விரக்தி அடைந்த யுவதி உயிர் மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இச்சம்பவமானது அப்பகுதி மக்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

வாகன விபத்தில் சிக்கி தம்பதியினர் உயிரிழப்பு!

திஸ்ஸமஹாராமவில்..

திஸ்ஸமஹாராம – கதிர்காமம் பிரதான வீதி 6 இல் கனுவ பகுதியில் மோட்டார் சைக்கிளொன்றும் வானொன்றும் நேருக்கு நேர் மோதியதில் ஆசிரியை ஒருவரும் அவரது கணவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.மேலும், விபத்தில் காயமடைந்த அவர்களது 15 வயது மகன் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.வானின் சாரதி அதிக மதுபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படுவதாகவும், அவரை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளதாக திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கதிர்காம பூஜைக்காக கிரிந்தேயிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த வானே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஆசிரியர் சங்க கூட்டத்திற்கு சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்தில் சிக்கி தம்பதியினர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பலரையும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் : சிறுநீரக சத்திரசிகிச்சையில் உயிரிழந்த குழந்தையின் கடைசி ஆசை!!

கொழும்பில்..

கொழும்பு ரிட்ஜ்வே லேடி சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திர சிகிச்சையின் பின்னர் குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உயிரிழந்த குழந்தை வைத்தியசாலையில் சிகிச்சையில் இருக்கும் போது தனது தாயாரிடம் கூறிய கடைசி ஆசைகளை தாய் பதிவு செய்துள்ள காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.

குறித்த காணொளியில் குழந்தை விளையாட்டு துப்பாக்கி, சிவப்பு நிற கார் மற்றும் வைத்தியசாலையிலிருந்து சென்று தனது அண்ணாவுடன் விளையாட விரும்புவதாகவும் கூறியுள்ளார். இந்த காணொளி ஊடகங்களில் பரவிவருவதுடன், இந்த சம்பவம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுநீரக சத்திரசிகிச்சையின் பின்னர் கிருமி தொற்று காரணமாக கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதும் 03 மாதங்களும் உடைய ஆண் குழந்தை ஒன்று நேற்று முன்தினம் (27.07) உயிரிழந்திருந்தது.

குழந்தைக்கு சிறுநீரகம் தொடர்பான நோய் நிலைமை இருப்பதாக வைத்தியர்கள் கண்டறிந்ததாகவும், வலது சிறுநீரகம் ஆரோக்கியமாக உள்ள நிலையில் இடது சிறுநீரகத்தை அகற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அறுவை சிகிச்சையின் போது ஆரோக்கியமான வலது சிறுநீரகமும் அகற்றப்பட்டதாக வைத்தியர்கள் பின்னர் அறிவித்ததாக பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், இரண்டு சிறுநீரகங்களும் இல்லாததால், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வரை டயாலிசிஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்ட குழந்தை, பின்னர் கிருமி தொற்று காரணமாக உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை நாடாளுமன்றில் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை: முன்வைக்கப்பட்ட கோரிக்கை..!

நாடாளுமன்றத்தில்..

நாடாளுமன்றத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், மேலதிகாரிகளின் பாலியல் தொல்லைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்றத்தின் பராமரிப்புப் பிரிவில் பணியாற்றும் சில பணிப்பெண்கள் தங்கள் பிரிவின் தலைவர்கள் உட்பட அதிகாரிகளால் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து பெண் ஊழியர்கள் சமீபத்தில் நாடாளுமன்ற முக்கியஸ்தர்களிடம் புகார் அளித்துள்ளனர்.

திணைக்கள பிரதானிகள் மற்றும் ஏனைய அதிகாரிகளாலும் தாம் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்படுவதாகவும் அவ்வாறான விடயங்களுக்கு இணங்காத பட்சத்தில் தாம் பல்வேறு பழிவாங்கல்களுக்கு உள்ளாவதாகவும் ஊழியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.இவ்விடயத்தில் தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீரவிடம் அது குறித்து வினவிய போது, ​​அவ்வாறானதொரு நிலை உண்மையில் நிலவுமாயின் அது தொடர்பில் கடும் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.வேலை பறிபோகும் என்ற அச்சத்தில் சில ஊழியர்கள் இது குறித்து முறைப்பாடு செய்யக்கூட அஞ்சுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, எதிர்காலத்தில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சங்கத்தில் இது தொடர்பில் எழுத்து மூலம் முறைப்பாடு செய்யவுள்ளதாகப் பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

வவுனியா பூந்தோட்டத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயம் : தொடரும் விபத்துக்கள்!!

வவுனியா பூந்தோட்டம் குடியிருப்பு வீதியில் நேற்று (29.07) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளும் பெரும் சேதமடைந்தது. குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பூந்தோட்டம் பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி சென்று கொண்டிருந்த ஹயஸ் வாகனத்துடன் எதிரே வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளும் பெரும் சேதமடைந்திருந்தது. விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை பூந்தோட்டம் குடியிருப்பு வீதியில் மாலை வேளைகளில் அதிகமான வாகனங்கள் பயணித்துவரும் நிலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா ஓமந்தை பகுதியில் விபத்து : ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்!!

வவுனியா ஓமந்தை பகுதியில் அமைந்துள்ள இராணுவ சோதனை சாவடிக்கு அருகாமையில் இன்று (30.07.2023) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் மற்றொரு நபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது…
இன்று அதிகாலை ஓமந்தை இராணுவ சோதனைச் சாவடிக்கு அருகாமையில் நின்றிருந்த உழவு இயந்திரம் மற்றும் பழுதடைந்து நின்ற கப்ரக வாகனம் ஆகியவற்றுடன் அதே திசையில் பயணித்த பாரவூர்தி மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் கப்ரக வாகனத்தில் இருந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன், மற்றொரு நபர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் 23வயதுடைய இராமச்சந்திரன் சதீஸ்குமார் என்ற இளைஞரே பலியாகியுள்ளார். விபத்து தொடர்பான விசாரனைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.. கதறும் பழங்குடியினப் பெண்!!

மணிப்பூரில்..

மணிப்பூரில் மே மாதம் 3ம் தேதி முதல் இரு சமூகத்தினரிடையே வெடித்த கருத்து வேறுபாடு காரணமாக பெரும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இந்த மோதலில் 142 பேர் உயிரிழந்த நிலையில், 1,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

மேலும், 6000க்கும் மேற்பட்ட மணிப்பூர் மக்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து 2 மாதங்களுக்கு மேலாக வன்முறை தீ அணியாமல் எரிந்து கொண்டு இருக்கும் மணிப்பூரில் மறைக்கப்பட்ட மனித தன்மைற்ற கொடுமைகள் குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் ஒவ்வொன்றாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்ற வன்முறை கும்பல் அவர்களை பாலியல் பலாத்காரம் செய்ததும் அதில் ஒரு பெண்ணை தீயிட்டு கொளுத்தியதும் வெளியாகி பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தற்போது மற்றுமொரு பழங்குடியினப் பெண், மே 15ம் தேதியன்று தானும் மூன்று பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாகக் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து ஊடகங்களிடம் பேசிய 19 வயது பழங்குடியினப் பெண், “கலவரக் கும்பலிடமிருந்து தப்பிக்க ஏடிஎம்-முக்குள் சென்றேன். ஆனால், 4 பேர் வெள்ளை நிற பொலேரோவில் வந்து கடத்திச் சென்றனர்.

டிரைவரைத் தவிர, அவர்களில் 3 பேர் என்னைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர் ஒரு மலைக்கு நான் அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு அவர்கள் இரவு முழுவதும் என்னைச் சித்ரவதை செய்தனர்.

சாப்பிட எதுவும் கொடுக்கவில்லை. என்னை எந்த அளவுக்குக் கொடுமைபடுத்த முடியுமோ அந்த அளவுக்குக் கொடுமைப்படுத்தினர். குடிக்கத் தண்ணீர்கூட கொடுக்கவில்லை. அடுத்த நாள் காலை கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என்று கேட்டபோது. அவர்களில் ஒருவன் என்னை அவிழ்த்து விட்டான்.

அப்போதுதான் என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க முயன்றேன். பிறகு அங்கிருந்து ஒருவழியாகத் தப்பித்துவிட்டேன். அதன் பிறகு மே 21-ம் தேதிதான் போலீசில் புகாரளிக்க முடிந்தது” என்றார். தப்பிக்கும்போது காய்கறி குவியலில் மறைத்திருந்த அந்தப் பழங்குடிப் பெண்ணை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பாதுகாப்பாக மீட்டார். அதன் பிறகு அந்தப் பெண் சொந்த ஊரை அடைந்தார்.

அதையடுத்து அவர், பக்கத்து மாநிலமான நாகாலாந்தில் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக, 21-ம் தேதி காங்போக்பி காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த வழக்கிலும் சரியான ஆதாரங்கள் எதுவும் இல்லாததால், குற்றவாளிகளை அடையாளம் காணமுடியாமல் கைது செய்யப்படவில்லை என்ற வாசகமே தொடர்கிறது.

இருப்பினும் இதில் விசாரணை நடைபெற்றுவருவதாகக் கூறும் போலீஸ் தரப்பு, “பாதிக்கப்பட்ட பெண்ணின் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் இல்லாதது விசாரணைக்கு இடையூறாக இருக்கிறது. ஆதாரம் இல்லாததால் இத்தகைய பெண்களுக்கு நீதி கிடைப்பது சவாலான விஷயமாக மாறியிருக்கிறது” என்று கூறுகிறது.

கொரோனா காலத்தில் ஃபேஸ்புக் மூலம் ஏற்பட்ட காதல்… 3 கொலையில் முடிந்த திருமணம்!!

அஸ்ஸாமில்..

அஸ்ஸாம் மாநிலம், கோலாகட் மாவட்டத்தில் வசிப்பவர் நஜ்பூர் ரஹ்மான். இவரின் மனைவி சங்கமித்ரா கோஷ் (24). இருவருக்கும் 2020-ம் ஆண்டு கொரோனா காலத்தில் ஜூன் மாதத்தில் ஃபேஸ்புக் மூலம் அறிமுகம் ஏற்பட்டது. பொறியாளரான நஜ்பூர் சங்கமித்ராவுடன் பழகிய சில மாதத்தில் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது.

உடனே அதே ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி கொல்கத்தா சென்று திருமணம் செய்துகொண்டனர். ஆனாலும் சங்கமித்ராவை அவரின் பெற்றோர் வீட்டுக்கு அழைத்துவந்தனர்.

ஆனால், சங்கமித்ரா வீட்டிலிருந்து நகைகளைத் திருடிவிட்டதாக அவரின் பெற்றோரே போலீஸில் புகார் செய்தனர். அதனடிப்படையில் சங்கமித்ரா கைதுசெய்யப்பட்டு ஒரு மாதம் சிறையில் இருந்தார். சிறையிலிருந்து வெளியில் வந்த பிறகு மீண்டும் தன் பெற்றோர் வீட்டுக்கே சென்றார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மீண்டும் சங்கமித்ரா நஜ்பூருடன் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். இருவரும் சென்னைக்குச் சென்று சில மாதங்கள் வசித்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம் அவர்கள் மீண்டும் கோலாகட்டுக்குத் திரும்பிவந்தனர். சங்கமித்ரா கர்ப்பமாக இருந்தார்.

கடந்த நவம்பரில் சங்கமித்ராவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், கடந்த மார்ச் மாதம் தன் கணவர் தன்னை சித்ரவதை செய்வதாகக் கூறி போலீஸில் புகார் செய்தார். இதனால் நஜ்பூர் கைதுசெய்யப்பட்டார். சங்கமித்ரா தன் குழந்தையோடு தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார்.

நஜ்பூர் ஒரு மாதம் சிறையில் இருந்துவிட்டு வெளியில் வந்தபோது தன்னுடைய குழந்தையைப் பார்க்க விரும்பினார். ஆனால், சங்கமித்ராவின் குடும்பத்தினர் அதற்கு அனுமதிக்கவில்லை. அதோடு சங்கமித்ராவின் வீட்டுக்குச் சென்ற நஜ்பூர் தாக்கப்பட்டார். மீண்டும் நஜ்பூர் தன் மகனைப் பார்க்கச் சென்றார்.

இம்முறை இரு தரப்புக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் நஜ்பூர் தன்னுடைய மனைவி மற்றும் அவரின் பெற்றோரைக் கொலைசெய்தார். பின்னர் தன் ஒன்பது மாதக் குழந்தையை எடுத்துக்கொண்டு போலீஸ் நிலையத்தில் சென்று சரணடைந்தார்.

போலீஸார் சங்கமித்ராவின் வீட்டுக்குச் சென்றபோது மூன்று பேரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ரீல்ஸில் மோகம்… 8 மாத குழந்தையை விற்று ஐபோன் வாங்கிய பெற்றோர்!!

மேற்கு வங்கத்தில்..

மேற்கு வங்கத்தில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோக்களை எடுப்பதற்காக தங்களது 8 மாத குழந்தையை விற்று தம்பதியர் ஐபோன் வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இன்றைய சமூகத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை, சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் நடித்து பதிவேற்றுவதை விரும்பி செய்து வருகின்றனர். இந்த ரீல்ஸ் எடுக்கும் மோகத்தால், தான் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல், பல தவறுகளையும் செய்து வருகின்றனர்.

இது போன்ற ரீல்ஸ் வீடியோக்களை எடுப்பதற்கு விலை உயர்ந்த செல்போன்களை தேர்ந்தெடுத்து வாங்குகிறார்கள். அந்த செல்போன்களை வாங்குவதற்கும், பல குற்றச் செயல்களில் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருகிறது.

அந்த வகையில், மேற்கு வங்கத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. மேற்கு வங்கத்தின், பர்கானாஸ் மாவட்டம், பராக்பூர் பகுதியைச் சேர்ந்த ஜெய்தேவ் – சதி தம்பதிக்கு இன்ஸ்டாக்ராமில் ரீல்ஸ் பதிவேற்றம் செய்யும் மோகம் அதிகமாக இருந்துள்ளது. இந்நிலையில், புதியதாக ஒரு ஆப்பிள் போன் வாங்க ஆசை பட்டுள்ளனர்.

அவர்களுக்கு 7 வயதில் ஒரு மகளும், 8 மாதத்தில் ஓர் ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் தரமான ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிடுவதற்காக ஐபோன் வாங்க முடிவு செய்து தங்களது 8 மாத ஆண் குழந்தையை 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்று புது ஐபோனை வாங்கி உள்ளனர்.

இதையறிந்த அக்கப்பக்கத்தினர் அளித்த தகலின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தையை விற்றது அம்பலமானது. இதனால் விரைந்து செயல்பட்ட காவல்துறையினர், குழந்தையை மீட்டு மற்றும் குற்றவாளி பெற்றோரை கைது செய்தும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

காதலை ஏற்க மறுத்த பெண்.. இரும்பு கம்பியால் துடிக்க துடிக்க அடித்தே கொன்ற இளைஞன்!!

டெல்லியில்..

டெல்லியில் காதலை ஏற்க மறுத்த பெண்ணை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்த கல்லூரி மாணவி நர்கீஸ்(25).

இவருக்கு இர்ஃபான் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இர்ஃபான் டெலிவரி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நர்கீஸை காதலிப்பதாக இர்ஃபான் தெரிவித்துள்ளார். ஆனால் நர்கீஸ் காதலை ஏற்க மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இர்ஃபான் நர்கீஸ் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளான். பின்னர் நர்கீஸ் பேச மறுத்த நிலையில் கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளான். நர்கீஸிடம் பேச விரும்புவதாக தெரிவித்து அவரை அழைத்துள்ளான்.

இதனை நம்பி வந்த நர்கீஸை ஈவு இறக்கமின்றி இரும்பு கம்பியால் துடிக்க துடிக்க அடித்து கொன்றுள்ளான். பின்னர் நர்கீஸ் உடலை கல்லூரி அருகே வீசிவிட்டு சென்றுள்ளான். மறுநாள் தெற்கு டெல்லியின் மாளவியா நகரில் உள்ள அரபிந்தோ கல்லூரி அருகே நர்கீஸின் சடலம் கிடந்துள்ளனது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவயிடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பு வைத்தனர்.

பெண்ணின் உடலில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் உறுதியானது. விசாரணையில் இர்ஃபானுக்கு தொடர்பு இருப்பதை அறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இர்ஃபான் தான் கொலை செய்ததை ஓப்புக்கொண்டார். பின்னர் போலீசார் இர்ஃபானை கைது செய்தனர்.

டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால், இந்த சம்பவத்தை அறிந்து, பெண்களுக்கு தேசிய தலைநகரில் நிலவும் பாதுகாப்பற்ற சூழ்நிலை குறித்து மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தார்.

மேலும் டெல்லியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இன்று 2 சம்பவங்கள் நடந்துள்ளன: தாப்ரியில் ஒரு சிறுமி சுட்டு கொல்லப்பட்டார். அரபிந்தோ கல்லூரி அருகே ஒரு பெண் இரும்பு கம்பியால் அடித்து கொல்லப்பட்டார். டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு குறித்து மத்திய அரசு கூட்டத்தை கூட்ட வேண்டும் எனக் கூறினார்.

ஜிம் பயிற்சியின்போது காதல் : 40 வயதுப்பெண்ணை சுட்டுக்கொன்ற இளைஞர் தற்கொலை!!

டெல்லியில்..

துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது என்றும், ஒரு நபர் அந்த பெண்ணை கடந்து சென்றதைக் கண்டதாகவும், சம்பவத்தின்போது அருகில் இருந்தவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

டெல்லியின் தாப்ரியில் வியாழக்கிழமை இரவு 40 வயது பெண் ஒரு இளைஞர் அவரது காதலரால் சுட்டுக்கொல்லப்பட்டார். துப்பாக்கியால் சுட்ட நபர், பின்னர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

உயிரிழந்த பெண் ரேணு கோயல் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கொஞ்சம் அருகில் நின்றே அந்த நபர் சுட்டுள்ளார். ‘பாயிண்ட் ப்ளான்க் ரேஞ்ச்’ என்று துப்பாக்கி சூட்டில் கூறப்படும் தூரத்தில் இருந்து அவர் சுடப்பட்டுள்ளர்.

அதாவது புல்லட் துப்பாக்கியை விட்டு வெளியேறி, கீழே சாயாமல் நேராக செல்லும் தூரம் வாரை பாயிண்ட் ப்ளான்க் ரேஞ்ச் என்று கூறப்படுகிறது. அந்த பெண்ணை கொலை செய்த பின்னர் தனது உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படும் நபர், 23 வயதான ஆஷிஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பெண்ணைக் கொன்றுவிட்டு வீட்டுக்குச் சென்ற வாலிபர், துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதாக தெரிகிறது. காவல்துறையினரின் கூற்றுப்படி, இந்த சம்பவம் குறித்து வியாழக்கிழமை இரவு 8.45 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த ஒரு குழு மூலம், அப்பகுதியில் உள்ள ஒரு கட்டிடத் தொழிலாளியின் மனைவி ரேணு கோயல், அவரது வீட்டின் அருகே சுட்டுக் கொல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த பெண் உதவி கேட்டு அலறி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அவர் செல்லும் வழியிலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது என்றும், ஒரு நபர் அந்த பெண்ணை கடந்து செல்வதைக் கண்டதாகவும், சம்பவத்தின்போது அருகில் இருந்தவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

“அந்தப் பெண் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார், துப்பாக்கி ஏந்தியவர் அந்த இடத்திற்குச் சென்று அவரைச் சுட்டார்” என்று ஒரு போலீஸ் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். கொலை நிகழ்வு எஃப்ஐஆராக பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று டிசிபி (துவாரகா) எம் ஹர்ஷவர்தன் தெரிவித்தார்.

சிசிடிவி கேமராக்கள் மூலம் குற்றவாளி அடையாளம் காணப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர் தனது பெற்றோருடன் வசித்து வந்த பகுதியில் உள்ள வீட்டிற்கு ஒரு குழு சென்றது. சந்தேகத்திற்குறிய அந்த நபர் வீட்டின் மொட்டை மாடியில் நாட்டுத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார் என பின்பு தெரியவந்தது.

அதே ஆயுதம் பெண்ணின் கொலைக்கும் பயன்படுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். டிசிபி ஹர்ஷவர்தன் கூறுகையில், “ஆஷிஷ் மற்றும் ரேணு இருவரும் ஒரே ஜிம்மிற்கு சென்றதால் ஒருவரையொருவர் அறிந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் பற்றி மேலும் அறிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் விசாரித்து வருகிறோம்.” என்றார்.

பிரிந்து வாழ்ந்த பெற்றோர் : யாழில் பட்டதாரி மாணவியின் விபரீத முடிவு!!

யாழ்ப்பாணத்தில்..

யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் அணமையில் பட்டம்பெற்ற் இளம் பட்டதாரி மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் 27 வயதான சற்குணரத்தினம் கௌசி எனும் யுவதியே, பெற்றோரின் குடும்ப தகராறு காரணமாக விபரீத முடிவால் வீட்டில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

நேற்றிரவு (28) குறித்த யுவதி துக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார். அதேவேளை உயிரிழந்த யுவதி சப்ரகமுவ பல்கலையில் கல்வி பயின்று அண்மையிலேயே பட்டதாரியாக பட்டம் பெற்றவர் என கூறப்படுகின்றது.

யுவதியின் பெற்றோர் குடும்பத்தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், மகளின் பட்டமளிப்பு விழாவில் இருவரும் கலந்துகொண்டதாகவும் தெரியவருகின்றது.

இந்நிலையில் நன்றாக கல்வி கற்று பட்டதாரியாகி நல்லதொரு நிலைக்கு வந்த மாணவி , வாழவேண்டிய வயதில் பெற்றோர் பிரச்சனையால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.