கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 157,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 170,000 ரூபாவாக காணப்படுகிறது.
அத்துடன் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படும் வரையிலேயே தங்கத்தின் பெறுமதி குறைந்த அளவில் இருக்கும் எனவும், இறக்குமதி தடை நீக்கப்பட்டு டொலரின் பெறுமதி அதிகரிக்க ஆரம்பித்தால் சுமார் இரண்டு இலட்சம் ரூபாவை தங்க விலை எட்டும் சாத்தியம் காணப்படுவதாகவும் ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இவ்வாறான சூழலில் தற்போது தங்கத்தின் விலையானது மீண்டும் அதிகரித்து வரும் அதேவேளை பல பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான இணுவில் பகுதியில் உள்ள விடுதியில் போதை ஊசி ஏற்றிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.
போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான விடுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு பழக்கமான குறித்த இளைஞன் நேற்று இரவு விடுதிக்கு வந்துள்ளார். கொக்குவில் தெற்கு தாவடி பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் பவிசன் (வயது 25) என்ற இளைஞரே இரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
எனினும் பின்னர் அவரை காணாத நிலையில் தேடிச் சென்றபோது விடுதியின் ஒரு பக்கத்தில் இறந்த நிலையில் காணப்பட்டதாபவும், அவரின் அருகில் ஊசி மூலம் போதை ஏற்றியதற்கான அடையாளங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கொழும்பு – கண்டி வீதி யக்கல அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் நான்காவது மாடியிலிருந்து வீழ்ந்து ஒரு பிள்ளையின் தாய் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு (16) யக்கல போகமுவ பிரதேசத்தில் உள்ள ஐந்து மாடிக் கட்டிடத்தின் நான்காவது மாடியிலிருந்து வீழ்ந்தே குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக பெமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் சதுரிகா மதுஷானி என்ற 31 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் தனது கணவர் மற்றும் ஏழு வயது மகளுடன் ஐந்து மாடி கட்டிடத்தின் நான்காவது மாடியில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார்.
குறித்த மரணத்தில் சந்தேகம் எழுந்ததன் காரணமாக உயிரிழந்த பெண்ணின் கணவரை பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பெமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் சில காலமாக அடிக்கடி தகராறு நிலவியமையும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.சம்பவ இரவு இருவருக்கும் இடையில், வாக்குவாதம் ஏற்பட்டதாக அவர்களின் ஏழு வயது மகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இளம் தாய் உயிர்ழந்தமை தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து பெமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் கடன் பிரச்சினையால் நபர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.யாழ் நகரப் பகுதியில் நகைப் பட்டறையில் பணியாற்றும் 40 வயதான குடும்பஸ்தர் ஒருவரே மட்டுவிலில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார்.
பொட்டாசியம் அருந்தி குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்தச் சம்பவம் நேற்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.கடன் பிரச்சினை காரணமாக அவர் இவ்வாறானதொரு தவறான முடிவு எடுத்துள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
யக்கல போகமுவ பிரதேசத்தில் உள்ள வீட்டுத் தொகுதியின் நான்காவது மாடியில் இருந்து வீழ்ந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த வீட்டுத் தொகுதியில் வசித்து வந்த 31 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் தனது கணவர் மற்றும் 7 வயது மகளுடன் வாடகை அடிப்படையில் அங்கு வசித்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் தொடர்ந்து தகராறுகள் இருந்து வந்துள்ளது. இந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
எனினும் குறித்த பெண்ணின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பதை கண்டறிய மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் பெம்முல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தடுப்பூசி செலுத்தப்பட்டு ஒரு நாளின் பின்னர் ஏற்பட்ட திடீர் சுகயீனத்தால் உயிரிழந்த பண்டுவஸ்நுவரவைச் சேர்ந்த குழந்தையின் பிரேத பரிசோதனையில் மரணம் குறித்து திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குளியாபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொமுகொமுவ பிரதேசத்தில் வசித்து வந்த டபிள்யூ.எஸ்.நிம்னாதி திஸாநாயக்க என்ற நான்கு மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
அதன்படி, குழந்தையின் உடற்கூறுகள் மேலதிக பரிசோதனைகளுக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குருநாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
சுகாதார திணைக்களத்தினால் 4 மாதங்களில் பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி கடந்த சனிக்கிழமை ஹெட்டிபொல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் குழந்தைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன்பின்னர், வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தைக்கு மறுநாள் அதிகாலை ஏற்பட்ட திடீர் காய்ச்சல் காரணமாக நேற்றுமுன் தினம் காலை உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்துள்ளது.
இதனையடுத்து, பெற்றோர் உடனடியாக குழந்தையை குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அந்த குழந்தை ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் பின்னர் குழந்தையின் உடலம் பிரேத பரிசோதனைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், சட்ட வைத்திய அதிகாரி அஜித் ஜயசேன இது தொடர்பில் வெளிப்படையான தீர்ப்பை வழங்கியுள்ளார்.
இதனையடுத்து மேலதிக பரிசோதனைக்காக உடற்பாகங்களை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.இதனை தொடர்ந்து குழந்தையின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு நேற்று இறுதிச் சடங்கு நடைபெற்றுள்ளது.
இலங்கையில் மலை உச்சியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படும் 32 வயதுடைய டென்மார்க் பெண்ணின் சடலத்தை அடையாளம் காண அவரது தோழி ஒருவர் இலங்கை வந்துள்ளார்.
சடலத்தை அடையாளம் காண்பதற்காக அவரது தோழி தூதரக அதிகாரிகளுடன் கண்டிக்கு பயணிக்கவுள்ளார். அதற்கமைய, இன்று அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க முடியும் என பொலிஸார் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
டென்மார் பெண்ணின் உடல் மலை அடிவாரத்தில் கண்டெடுக்கப்பட்ட போது, அது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. அவரது உடல் கடந்த 14ஆம் திகதி வனப்பகுதியில் மலை அடிவாரத்தில் கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
குறித்த பெண் கண்டி ஹோட்டலில் இருந்து மலையேறுவதற்காக சென்ற போது, கடந்த 10ஆம் திகதி இந்த மரணம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இப்பிரதேசத்தில் நிலவும் குளிர் காலநிலை காரணமாக உடல் விரைவாக சிதைவடையவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய பிறகே அவரது இறப்புக்கான காரணம் தெரியவரும். அவரது மரணம் குறித்து, இந்தியாவில் உள்ள டென்மார்க் தூதரகம் மூலம் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்க வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மலையேறுவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்ததாகக் கூறப்படும் டென்மார்க் பெண்ணின் சடலம் தற்போது கண்டி தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சடலம் கண்டெடுக்கப்பட்ட போது, 20 டொலர் தாள்கள் ஐந்தும், இரண்டு 05 டொலர் தாள்கள் மற்றும் 62000 இலங்கை நாணயங்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அவரது கையடக்க தொலைபேசி இன்னும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில் திருமணமாகி 4 மாதங்களேயான இளம் குடும்பப் பெண் ஒருவர் உடல் சுகயீனம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். 27 வயதான சுகிர்தராசா நிதர்சினி என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தெல்லிப்பழை – மாவை கலட்டி, கொல்லங்கலட்டி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில், அவருக்கு நேற்றையதினம் (16-07-2023) வலிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவர் நேற்றையதினம் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்த நிலையில் அவர் இன்றையதினம் (17-07-2023) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அதன்பின்னர் அவரது சடலமானது பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.சடலத்தின் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி திரு. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
லிந்துலை – கிளனிகல்ஸ் தோட்டத்தில் ஒரு பிள்ளையின் தாயான வீரன் சிவரஞ்சனி (வயது 30) என்ற இளம் குடும்ப பெண், தன் குடும்ப வறுமையை போக்குவதற்காக அரபு நாடு சென்ற நிலையில் அங்கு கடுமையாக தாக்கி சித்திரவதை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த , கடந்த ஜூன் மாதம் 17ஆம் திகதி கொழும்பில் உள்ள முகவர் மூலம் சவுதி நாட்டிக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றார்.அந் நாட்டு மொழி தெரியாத காரணத்தால் வீட்டு உரிமையாளரால் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாகிய தாய் அது தொடர்பான தகவல்களை தனது கணவனுக்கு தொலைபேசி ஊடாக வழங்கியுள்ளார்.
வீட்டு உரிமையாளரின் மனைவி தன்னை கடுமையாக தாக்கி குண்டு ஊசிகளை உடம்பு முழுவதிலும் பலவந்தமாக குத்தி உள்ளதாகவும் தான் பெரும் சிரமப்படுவதாகவும் கணவனிடம் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
துன்புறுத்தல்களை தன்னால் தாங்க முடியவில்லை என்றும், உடனடியாக இலங்கைக்கு எடுக்குமாறு சிவரஞ்சனி தனது கணவனுக்கு குரல் பதிவு ஊடாக அனுப்பிவைத்தார்.
வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்த முகவர் மற்றும் உபமுகவர் இருவரிடமும் சம்பவம் தொடர்பாக பல முறை கதைத்தபோதிலும் உபதரகர் அச்சுறுத்தல் கொடுத்ததாக கூறுகின்றார்.
எனினும் சிவரஞ்சனி சவுதி நாட்டில் உள்ள வெளிநாட்டு பணியகத்திற்கு தெரிந்தவர் ஒருவரின் உதவியுடன் வந்துள்ளார். பணியகத்தில் இருந்த அதிகாரி சிவரஞ்சனிக்கு உதவி வழங்கியதோடு கழுத்தில் இருந்த குண்டு ஊசி ஒன்றினை அகற்றிய பின்பு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
கடந்த 14 ஆம் திகதி அன்று இலங்கைக்கு காலை 6 மணிக்கு வந்த நிலையில், உறவினர்களால் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்தனர். வைத்தியர்கள் பரிசோதனை செய்தபோது உடம்பில் அதிகமான குன்டூசிகள் இருப்பது தெரிய வந்துள்ளமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
சிவரஞ்சனியின் உடம்பில் இருந்து இதுவரை 4 குண்டூசிகள் அகற்றப்பட்டுள்ளதுடன் இன்னும் நான்கு ஊசிகள் உடம்பில் இருப்பதுடன் இதனை அகற்ற வைத்தியர்களால் திகதியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் சிவரஞ்சனியின் கணவர் புகார் அளித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் தம் வாழ்வை வளப்படுத்த குடும்பத்தை பிரிந்து அரபு நாட்டுக்கு சென்ற சிவரஞ்சனியின் நிலை கண்களில் கண்னீரை வரவழைக்கின்றது.
வவுனியா தமிழர் கலாசார பண்பாட்டுடன் தொடர்புடைய ஆடிப்பிறப்பு நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது.
வவுனியா நகரசபை மற்றும் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் தர்மலிங்கம் வீதியில் அமைந்துள்ள நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் நினைவுத்தூபியில் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தலைவர் இ.ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்றது.’
இந்நிகழ்வில் அன்னாரின் நினைவுத்தூபிக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நினைவுப் பேருரையும் நிகழ்த்தப்பட்டது.
ஆடிப்பிறப்பிற்கு நாளை விடுதலை பாடலை வவுனியா பிரமாண்டு வித்தியாலய மாணவர்கள் பாடியிருந்தனர். அதனைத் தொடர்ந்து கருத்துரைகள் இடம்பெற்றதுடன், ஆடிக்கூழும் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் நகரசபை செயலாளர் செந்தில்நாதன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், முன்னாள் நகரசபை தலைவர் இ.கௌதமன், முன்னாள் நகரசபை உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், பாடசாலை மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
அஸ்ஸாம் மாநிலத்தில் வசித்து வருபவர் 30 வயது ஜாகீர் உசேன் இவரது மனைவி 28 வயது கைரொன்னிஷா . இவர்களின் மகன் 7 வயது கைரல் இஸ்லாம். இவர்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேலை தேடி கோவை வந்தனர்.
பின்னர் ஜாகீர் உசேனும், அவரது மனைவியும் சூலூர் அருகே சின்ன கலங்கலில் உள்ள நூற்பாலைக்கு வேலைக்கு சேர்ந்துள்ளனர். மேலும் அங்குள்ள குடியிருப்பில் தங்கியிருந்தனர்.
நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் கணவன் – மனைவி 2 பேரும் வேலைக்கு சென்றுவிட்டனர். சிறுவன் கைரல் இஸ்லாம் மட்டும் வீட்டில் இருந்தான். பிற்பகலில் கணவன் – மனைவி 2 பேரும் வீட்டிற்கு சாப்பிட வந்தனர்.
அப்போது வீட்டில் மகன் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவனை சூலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்தவர்கள் தெரிவித்தனர்.
சிறுவனின் கழுத்து மற்றும் முகத்தில் காயம் இருந்ததால் இச்சம்பவம் குறித்து சூலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சிறுவன் பனியன் மூலம் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
சிறுவன் கொலை செய்யப்பட்டது மில் வளாகம் என்பதால் வெளியாட்கள் உள்ளே வரவாய்ப்பு இல்லை என்பதால், மில்லில் உள்ளவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதில் ஜாகீர்உசேன் அக்காவும், சிறுவனின் அத்தையுமான நூர்ஜாகதுன் (32) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் நூர்ஜாகதுனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜாகிர் உசேனின் அக்காவான நூர்ஜாகதுன், அசாமில் இருந்தபோது, வேலையில்லாமல் தவித்து வந்துள்ளார்.
இதனால் தனது சகோதரியை கோவைக்கு வரவழைத்த ஜாகிர், தான் பணியாற்றும் மில்லிலேயே கடந்த ஆண்டு வேலை வாங்கி கொடுத்துள்ளார். இதனிடையே, மில்லில் ஆர்வத்துடன் வேலை செய்து வந்த ஜாகிர் உசேனுக்கு, மில்லின் உரிமையாளர் புதிதாக வீடு ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளார்.
இதனை நூர்ஜாகதுனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எப்படியாவது அந்த வீட்டிற்கு பிற்காலத்தில் உரிமையாளராக ஆகி விட வேண்டும் என்ற எண்ணத்தில், ஜாகிர் உசேனின் மகனை கொன்று, இந்த கொடூர செயலில் ஈடுபட்டது அம்பலமானது.
தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹனிமூன் சென்ற இடத்தில் நண்டு உணவு சாப்பிட்டு மூச்சுத்திணறலால் புதுமணப்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் பசுபதி பாளையம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார்.
பொறியாளரான இவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இவர் 25 வயதான தனது மனைவி கிருபா உடன் பல ஊர்களுக்கு ஹனிமூன் சென்று திரும்பிய நிலையில் குமரி மாவட்டத்தில் தமிழக கேரளா எல்லையான நெட்டா பகுதியிலுள்ள சிற்றாருக்கு சென்றுள்ளனர்.
அங்குள்ள அணையின் கரையில் அமைந்துள்ள ரிசார்ட் உணவகம் ஒன்றில் செவ்வாய்கிழமை அறை எடுத்து தங்கி உள்ளனர். இந்நிலையில் விடுதியில் வழங்கபட்ட நண்டு உணவை தினேஷ்குமார்-கிருபா தம்பதியினர் விரும்பி சாப்பிட்டுள்ளனர்.
அப்போது தனது மனைவிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கணவர் தினேஷ்குமார் ஓட்டல் ஊழியர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து கிருபாவை மீட்டு குலசேகரம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி கிருபா உயிரிழந்தார். தகவலறிந்த கடையாலுமூடு காவல்துறையினர் உயிரிழந்த கிருபாவின் உடலை கைபற்றி உடற்கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவகல்லூரி மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வழக்குபதிவு செய்து விடுதியில் வழங்கப்பட்ட உணவால் உயிரிழப்பு ஏற்பட்டதா ? அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
கிருபாவுக்கு திருமணமாகி மூன்று மாதங்கள் மட்டுமே ஆகிறது. அவருக்கு சிறுவயதிலிருந்தே மூச்சு திணறல் பிரச்சனை இருந்தும் வந்ததாகவும், அதற்குரிய மருந்துகளை கையொடு அவர் எடுத்துச்சென்ற நிலையிலும் இந்த உயிரிழப்பு நேர்ந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தனியார் விடுதி மேலாளர் கூறுகையில், “புதுமண தம்பதியர் மதியம் வேளையில், அவர்கள் தங்கி இருந்த அறைக்கு நண்டு உணவை கொண்டு வருமாறு ஆர்டர் செய்தனர்.
இளம் பெண் நண்டு குழம்பை சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவருக்கு திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டதாகவும், கையில் கொண்டு வந்த மருந்துகளை உண்ட பின்பும் அவருக்கு மூச்சு திணறல் நிற்கவில்லை என்று இந்த பிரச்சனை ஏற்பட்டு சில மணி நேரத்திற்கு பிறகு தான் கணவர் எங்களிடம் தகவலை தெரிவித்தார்.
உடனடியாக நாங்கள் குலசேகரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு வைத்து தான் சிகிச்சை பலனின்றி அந்தப்பெண் உயிரிழந்தார். சிகிச்சைக்கு தாமதமாக சென்றதும் அவர் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்ததாக உணவக மேலாளர் தெரிவித்துள்ளார்.
நாகரீகமும், தொழில்நுட்பமும் எத்தனையோ வளர்ந்து விட்ட இந்த காலத்திலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளும், சித்திரவதைகளும் குறையவே இல்லை. பெண்குழந்தைகள் பிறந்ததால் கணவனும், மாமியாரும் மனைவியின் விரல்களை உடைத்துதனி அறையில் வைத்து சித்திரவதை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் வசித்து வரும் சந்த்பாஷாவிற்கும் பலமனேர் நகரில் வசித்து வரும் சபீஹாவுக்கும் 2017ல் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி 6 ஆண்டுகள் ஆன நிலையில் அடுத்தடுத்து இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள்.
தொடர்ந்து பெண் குழந்தைகளை பெற்றதால் சந்த்பாஷா மற்றும் அவரது பெற்றோர், சகோதரிகள் சபீஹாவை தொடர்ந்து அடித்து துன்புறுத்தினர். இதற்காக ஏற்கனவே 3 முறை போலீசில் புகார் அளித்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த மாதம் முதல் சந்த்பாஷா பெற்றோர் மற்றும் சகோதரிகள் இணைந்து ஆண் வாரிசு வேண்டி சந்த்பாஷாவிற்கு வேறு திருமணம் செய்து வைத்து விடுவோம் என மிரட்டி வருகின்றனர்.
அத்துடன் சபீஹாவை வீட்டின் மேல் மாடியில் கை விரலை உடைத்து தனி அறையில் அடைத்து வைத்து சாப்பாடு தராமல் சித்தரவதை செய்து வந்துள்ளனர். சபீஹா அந்த அறையில் உள்ள குளியல் அறையில் தண்ணீர் பிடித்து குடித்து உயிரை கையில் பிடித்தபடி வாழ்ந்து வந்தார்.
சபீஹா பல நாட்களாக வெளியே வராமல் இருந்ததால் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது கணவர், மாமியாரிடம் விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
இதனையடுத்து சபீஹாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். சபீஹாவின் பெற்றோர் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சென்று சபீஹாவை மீட்டு சிகிச்சை அளித்தனர்.
தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சந்த் பாஷா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் டி.எடையார் கிராமத்தில் வசித்து வருபவர் முகில்வண்ணன். இவரது மனைவி ஆஷா. இவர்களுக்கு ஒன்றரை வயதில் தியாஸ்ரீ என்ற பெண் குழந்தை .
இந்த குழந்தை நேற்று பிற்பகலில் வீட்டு சமையலறைக்குள் விளையாடிக் கொண்டிருந்தது. ஆஷா வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்ததால் குழந்தையை கவனிக்க முடியவில்லை.
சிறிது நேரத்தில் குழந்தையின் சத்தம் நின்று விட்டதால் ஆஷா அதிர்ச்சி அடைந்தார். உடனே குழந்தை விளையாடிக் கொண்டிருந்த சமையலறைக்கு சென்று பார்த்ததில் குழந்தை தியாஸ்ரீ அங்கு அன்னக்கூடை தண்ணீரில் தவறி விழுந்து கிடந்தாள்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஆஷா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர், ஏற்கனவே குழந்தை தியாஸ்ரீ இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒன்றரை வயது குழந்தை அன்னக்கூடை தண்ணீரில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
கனிஷ்ட பொதுநலவாய போட்டி தொடரில் பளு தூக்கும் போட்டிகளில் மூன்றாமிடத்தை பெற்று வெண்கலப்பதக்கத்தை சுவீகரித்துக் கொண்ட மாணவி கோசியா திருமேனனுக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வரவேற்பு வழங்கப்பட்டது.
அகில இலங்கை மெய்வல்லுனர் சங்க பிரதிநிதிகள் இந்த வரவேற்பினை வழங்கினார்கள். அவர்களோடு கோசியாவின் அம்மா மற்றும் சகோதரி, பயிற்றுவிப்பாளர் ஞானகீதன் ஆகியோரும் விமான நிலையம் சென்றிருந்தனர். ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லவதே தனது குறிக்கோள் என பதக்கம் வென்ற வீராங்கனை கோசியா தெரித்துள்ளார்.
34 வீர வீராங்கனைகள் பங்குபற்றிய இந்த விளையாட்டுப் போட்டியில் இலங்கை 18 பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது. இவற்றில் இரண்டு வெண்கலப் பதக்கங்கள் வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் வீராங்கனைகளினால் வெல்லப்பட்டுள்ளன.
1ம் இணைப்பு..
பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியின் பளுதூக்கல் போட்டியில் பங்குகொண்ட வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவி 3ம் இடத்தை பெற்று சாதித்திள்ளார்.
2023ம் ஆண்டிற்கான கனிஷ்ட பொதுநலவாய போட்டிக்கான பளு தூக்கல் போட்டிக்காக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்த வடமாகாணத்தின் வவுனியாவிலிருந்து, வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய தரம் 09 மாணவி கோசியா திருமேனன் தெரிவாகியிருந்தார்.
14 வயதான கோசியா திருமேனன், 16 வயதுக்குட்பட்ட 40 கிலோ எடை பிரிவில் டெல்லியில் நடைபெற்ற போட்டியில் 92 கிலோ கிராம் எடையை தூக்கியதன் மூலம் 3ம் இடத்தை பெற்று வெண்கலப்பதக்கத்தை தனதாக்கிக்கொண்டார்.
இந்த மாத ஆரம்பத்தில் நடைபெற்ற தேசிய ரீதியிலான போட்டியில் 87 கிலோ கிராம் எடையை தூக்கிய கோசியா இரண்டாமிடத்தை வெற்றி கொண்டிருந்தார். கனிஷ்ட பொதுநலவாய போட்டியில் 5 கிலோ அதிகமாக தூக்கி அவருடைய அதி கூடிய எடையை பதிவு செய்துள்ளார்.
வவுனியா, கணேசபுரம் பகுதியை சேர்ந்த கோசியா, இந்தியா செல்வதற்கான தயார்ப்படுத்தல்களினால் தேசிய போட்டிகளுக்கு பின்னர் எந்தவித பயிற்சிகளிலும் ஈடுபடவில்லை எனவும், வறுமையான குடும்பத்தை சேர்ந்த இவர் போட்டிகளுக்கு அணியும் பாதணியை கூட இரவல் வாங்கி சென்றதாகவும் அவரின் பயிற்றுவிப்பாளர் ஞானகீதன் தெரிவித்தார்.
பயணம் செய்வதற்கு கூட அதிகளவான பணமின்மையால் தான பயிற்றுவிப்பாளராக போட்டிகளுக்கு செல்லவில்லை எனவும், மொழி அவ்வளவாக தெரியாத நிலையில் இலங்கையின் ஏனைய வீர வீராங்கனைகளுடனும், அதிகாரிகளுடனும் இந்தியா டெல்லிக்கு சென்று இவ்வாறு வெற்றி பெறுவது பெரும் சாதனை என பயிற்றுவிப்பாளர் பெருமிதம் கொள்கிறார்.
இவருக்கு உரிய பயிற்சிகளை வழங்கி வளர்த்தெடுத்தால் கனிஷ்ட ஒலிம்பிக் போட்டிகளிலும், எதிர்காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளிலும் சாதனை படைப்பர் எனவும் பயிற்றுவிப்பாளர் ஞானகீதன்நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இவரது பாடசாலை விளையாட்டு ஆசிரியர்கள் வி.நிரஞ்சலா, ஜே.டி ரெஜினோல்ட், எஸ்.அகிலா ஆகியோரும் கோசியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றியுள்ளார் எனவும் பயிற்றுவிப்பாளர் நன்றி தெரிவித்தார்.
இலங்கை பூர்வீகம் கொண்ட சிறுவன் ஒருவர் இத்தாலியில் தனது காதலியை கொலை செய்த சம்பவத்தால் சர்ச்சை நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த கொடூர கொலையால் இலங்கையில் இருந்து இத்தாலி செல்பவர்களுக்கு கடும் நெருக்கடி நிலைமை ஏற்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சிறுவன் தனது மிஷேல் என்ற 17 வயதான சிறுமியுடன் காதல் தொடர்பில் இருந்தார் என கூறப்படுகின்றது. 30 யூரோக்கள் தொடர்பில் இடம்பெற்ற வாக்குவாதம் கொலைக்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
இத்தாலியில் தற்போதுள்ள சட்டத்தின்படி, 18 வயதுக்கு அதிகரிக்காமல் இருந்தால், அது மைனர் என்ற பிரிவின் கீழ் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். மேலும் கொலை செய்யப்பட்ட மிஷேலும், சந்தேக நபரான இலங்கை சிறுவனும் 17 வயதானவர்கள் என்பதனால் இந்த கொலைக்கான தீர்ப்பு எப்படி வழங்கப்படும் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. தீர்ப்பு குறித்து இன்னும் உறுதியான எதுவும் அறிவிக்கப்படவில்லை.
இதேவேளை, கடந்த காலங்களில் இத்தாலியில் இலங்கையர்களால் பல கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், இது இத்தாலியில் வாழும் மற்றும் பணிபுரியும் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்களுக்கு மேலும் ஒரு கரும்புள்ளியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்தாலிக்கு செல்லவும் அங்கும் வேலை தேடவும் முயற்சிக்கும் இலங்கையர்களுக்கு இந்தப் பின்னணி மோசமான நிலைமைகளை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.