மனிதர்களின் எலும்பை உடைத்து கொலை செய்யும் பறவை… இலங்கையில் ஏற்படுத்தப்போகும் பேரழிவு!!

இலங்கையில்..

நியூகினியா மற்றும் வடக்கு ஆஸ்திரேலியாவின் வெப்ப மண்டல காடுகளில் வாழும் பறவை தான் காசோவரி பறவை. பறக்கும் தன்மையற்ற இந்த பறவைகள் தற்போது 4 மட்டும் தான் இருக்கின்றது.

இதில் 3 கசோவரி இனங்கள் மற்றொரு பறவை ஈமியூ.. உலகின் ஆபத்தான பறவையாக கூறப்படும் இந்த பறவை மனிதர்களின் உயிரை எளிதில் பறித்துவிடுமாம்.

ஆம் தனது கூர்மையான நகங்களை வைத்து மனிதனின் தோலைக் கிழித்து கொலை செய்யும் திறன் கொண்டதுடன், ஒரு உதை கொடுத்தால் எலும்புகளே உடைந்துவிடுமாம்.

சாதாரணமாக தனது அலகினால் கொத்தினாலே கூர்வாள் அளவிற்கு காயத்தை ஏற்படுத்தும். இந்த பறவை இனத்தில் ஆண்பறவை தான் அடைகாத்து குஞ்சு பொரிக்கும். பெண் பறவையானது ஆண் பறவையின் அருகே முட்டையிட்டு சென்றுவிடுமாம்.

இந்த முட்டையை 9 மாதங்கள் ஆண் பறவையே அடைகாத்து குஞ்சு பொரித்து வளர்க்குமாம். இன்னும் இதுகுறித்த விரிவான தகவலை கீழே உள்ள காணொளியில் தெரிந்து கொள்ளலாம்.

ஜப்பான் தடுப்புக் காவலில் மாணவிக்கு நேர்ந்த சோகம்.. குடும்பத்தினர் விடுத்த கோரிக்கை!!

ஜப்பானில்..

ஜப்பான் குடிவரவு மையத்தில் 2021 ஆம் ஆண்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த போது மரணமான இலங்கை பெண்ணின் குடும்பத்தினர், தொழில்முறை அலட்சியத்தால் மரணம் நிகழ்ந்ததாக கூறி ஜப்பான் அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதற்கமைய மரணமான இலங்கை பெண்ணின் குடும்பத்தினர் தமது சட்டத்தரணிகளிடம் இது தொடர்பான வலியுறுத்தலை விடுத்துள்ளனர். ரத்நாயக்க லியனகே விஸ்மா சந்தமாலி என்ற பெண்ணே, குடிவரவு சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது 2021ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

ஜப்பானில் உள்ள தடுப்பு முகாமில் முறையான சிகிச்சை இன்றி உயிரிழந்த இலங்கை மாணவி விஷ்மா சந்தமாலி தொடர்பிலான விசாரணைகள் தொடர்பில் ஜப்பானிய அதிகாரிகளுடன் கலந்துரையாடியதன் பின்னர் அறிக்கை ஒன்றை வழங்குமாறு ஜப்பானில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு வெளிவிவகார அமைச்சு கடந்த மார்ச் மாதம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் அவர் விசா நிபந்தனைகளுக்கு முரணாக தங்கியதால் கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்டில் குடிவரவு பணியகத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.அங்கு வாந்தி மற்றும் வயிற்றுவலி உள்ளிட்ட உடல் நலக்குறைவால் அவதியுற்ற அவர் 2021 மார்ச் 6ஆம் திகதி ஜப்பானின் நகோயாவில் உள்ள தடுப்பு மையத்தில் உயிரிழந்தார்.

விஷ்மா சந்தமாலியின் உடல் நிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் இந்த மரணம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் கூறினாலும், விஷ்மா சந்தமாலி உடல்நிலை மோசமாகிய நிலையில் உரிய சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்திருக்கலாம் என அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

அதன்படி, உயிரிழந்த சந்தமாலியின் பாட்டி இது தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்திருந்தார்.விஷ்மா சந்தமாலியின் கடைசி சில நாட்களைக் காட்டும் சிசிடிவி காணொளியை அண்மையில் அவரது வழக்கறிஞர்கள் வெளியிட்டனர்.எனினும், இது அங்கீகரிக்கப்படாத காணொளி என்று ஜப்பானிய நீதித்துறை அமைச்சு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

23 ஆண்டுகளின் பின்னர் இலங்கைக்கு கிடைத்துள்ள தங்கப்பதக்கம்!!

இலங்கை..

ஆசிய மெய்வல்லுனர் சாம்பியன்சிப் போட்டித்தொடரில் 400 மீற்றர் மகளிருக்கான போட்டியில் நதீஷா ராமநாயக்க தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

நதீஷா இறுதிப்போட்டியில் 52.62 செக்கன்களில் ஓடி முடித்து இந்த வெற்றியை ஈட்டியுள்ளார்.

இதேவேளை, கடந்த 2000 ஆம் ஆண்டு நட்சத்திர ஓட்ட வீராங்கனை தமந்தி தர்ஷா, ஆசிய மெய்வல்லுனர் சாம்பியன்சிப் போட்டித்தொடரில் 400 மீற்றர் போட்டியில் தங்கம் வென்றிருந்தார்.

இதன் பின்னர் 400 மீற்றர் ஒட்டப்போட்டியில் முதல் தடவையாக இலங்கைக்கு 23 ஆண்டுகளின் பின்னர் தங்கப்பதக்கம் கிடைக்கப்பெற்றுள்ளது.

எட்டு நாடுகளை தோற்கடித்து இலங்கை மாணவி கராத்தே சாம்பியன் ஷிப் போட்டியில் சாதனை!!

இலங்கை மாணவி..

சிங்கப்பூரில் எட்டு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற கராத்தே சாம்பியன் ஷிப் – 2023 போட்டியில் இலங்கை வீராங்களை இரண்டு பதக்கங்களை வென்றுள்ளனர்.

கம்பஹா, மிரிஸ்வத்த, கெப்பிட்டிபொல உயர்தரப் பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்கும் ஷெனுஷி தமாஷா என்ற மாணவியே இவ்வாறு 15 வயதுக்குட்பட்ட போட்டியில் தங்கப்பதக்கத்தையும் மற்றுமொரு போட்டியில் வெள்ளிப்பதக்கத்தையும் வென்றுள்ளார்.

இந்த மாணவி, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் பயிற்சியாளர் தனுகா பியூமல் வழிக்காட்டலில் இலங்கையில் நடைபெற்ற போட்டியிலும் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

இம்மாணவி இலங்கைக்கு மட்டுமின்றி கெப்பிட்டிபொல கல்லூரிக்கும் பெறுமையை பெற்றுத்தந்தமைக்காக கல்லூரியின் அதிபர் சாந்தி விஜேசூரிய தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றுள்ளது.

பாடசாலை சென்ற மாணவியை கடத்த முயன்ற மர்ம நபர்கள்!!

பண்டாரவளையில்..

பண்டாரவளை பிரதேசத்தில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 10 வயது சிறுமியை கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.பண்டாரவளை, வனசிரிகம, மகுலெல்ல பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் நேற்று காலை 6.50 மணியளவில் பாடசாலைக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.

10 வயதுடைய அவர் மகுலெல்ல கல்லூரியில் 6ஆம் ஆண்டில் கல்வி கற்று வருகிறார்.சிறுமியின் தகவலுக்கமைய, இந்த சிறுமி வழமை போல் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்தார். வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது முச்சக்கர வண்டியில் வந்த இருவர் தன்னை முச்சக்கரவண்டிக்கு அழைத்துச் சென்றதாக தெரிவித்துள்ளார்.

குறித்த இருவரும் தன்னை முச்சக்கர வண்டியில் ஏற்றிய பின்னர் குடிக்க ஏதோ கொடுத்ததாக கடத்தப்பட்ட சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவை கசப்பாக இருந்ததால், அதனை துப்பி விட்டு அங்கிருந்து தப்பியோடி பாடசாலைக்கு சென்றுள்ளர்.

பாடசாலைக்குச் சென்று வகுப்பறையில் அழுதுகொண்டிருந்தபோது, ​​வகுப்பு ஆசிரியர் சம்பவம் தொடர்பில் விசாரித்துள்ளார். குறித்த சிறுமியை பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்க அதிபர் மற்றும் ஆசிரியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.சம்பவம் தொடர்பான விசாரணைகளை பண்டாரவளை பொலிஸ் மகளிர் பணியகம் தற்போது மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அமெரிக்காவில் வாழ்ந்த இலங்கை இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!!

இலங்கை..

அமெரிக்காவின் அட்லாண்டாவுக்குச் சென்றிருந்த இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.ஜோர்ஜியாவின் கென்னசோவில் உள்ள தனது இல்லத்தில் இருந்து அட்லாண்டாவுக்கு சென்ற நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

ஹசித் நவரத்ன என்ற 34 வயதுடைய இளைஞன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அட்லாண்டாவில் காரில் சடலமாக மீட்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த இளைஞனின் மரணத்திற்கான காரணம் இதுவரை பொலிஸாரினால் உறுதிப்படுத்தவில்லை. ஜூலை மாதம் 7ஆம் திகதி ஹசித் நவர்த்னே காணாமல் போனதாக முதலில் அறிவிக்கப்பட்டது.

அவர் ஜூலை மாதம் 2ஆம் திகதி அட்லாண்டாவுக்குச் செல்லவிருந்ததாகவும், அதன் பின்னர் அவர் தொடர்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

யாழில் 15 வயது மாணவியை கடத்திச் சென்று குடும்பம் நடத்திய 19 வயது இளைஞன் : கம்பி எண்ணும் ஐவர்!!

யாழில்..

யாழில் 15 வயதான பாடசாலை மாணவியை கடத்தி சென்று, குடும்பம் நடாத்திய 19 வயது காதலனும், அவர்களுக்கு உதவிய ஐவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவி கடந்த வருடம் தனது காதலனான 19 வயதான இளைஞனுடன் வீட்டை விட்டு வெளியேறி சென்று இருந்தார்.

அதனையடுத்து, மாணவியின் பெற்றோர், மகளை இளைஞர் ஒருவர் கடத்தி சென்றுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

அந்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்த வேளை, இளைஞனின் தாயார் அவர்களுடன் தொடர்பில் இருப்பதனை அறிந்து இளைஞனின் தாயையும் கைது செய்திருந்தனர்.

இந்நிலையில், மாணவியும், காதலனும் விசுவமடு பகுதியில் வீடொன்றில் குடும்பமாக வாழ்ந்து வந்த நிலையில், தாயார் கைது செய்யப்பட்டதை அறிந்து, இளைஞனும், காதலியும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தனர்.

அதனையடுத்து இளைஞனை கைது செய்த பொலிஸார், மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்தனர்.இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அவர்கள் தங்க வீடு கொடுத்த வீட்டு உரிமையாளர், மாணவியை அழைத்து செல்ல உதவியவர்கள், இளைஞனின் தாயார் என ஐவர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களை நேற்று புதன்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை , அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.

யாழில் நபர் ஒருவரின் செயலால் வியப்பில் பலர்!!

யாழில்..

யாழில் சுமார் 35 இலட்சம் ரூபாய் செலவில் 2 கிலோமீற்றர் வரையிலான வீதியைப் பெயர் குறிப்பிட விரும்பாத நபரொருவர் புனரமைத்துக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கிலிருந்து கடற்கரையில் உள்ள நாலாம் பனை பிள்ளையார் ஆலயத்திற்க்கு செல்கின்ற வீதியும், அங்கிருந்து கடற்கரைக்கு செல்கின்ற வீதியுமே இவ்வாறு புனரமைக்கப்பட்டுள்ளது.இதில் சுமார் முந்நூறு மீற்றர் வரை, 5 அடி வரை உயரமாக மண் அரண் அமைக்கப்பட்டு அதற்கு மேலாகக் கிரவல் இடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது குறித்த நபர் அக் கடற்கரை வீதியில் 100 க்கும் மேற்பட்ட சவுக்கு, இலுப்பை மரங்களை நாட்டி அதனைப் பராமரித்தும் வருகின்றார் எனவும் கூறப்படுகின்றது.செயலிழந்து போன வீதி விளக்குகளை அவர் சீர் செய்து கொடுத்துள்ளதுடன் 17 வீதி விளக்குகளைப் புதிதாகப் பொருத்தியும் கொடுத்துள்ளாராம் அந்த பரோபகாரி.

அத்துடன் நீண்ட தூரம் நடந்து பாடசாலைக்குச் செல்லும் பல மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள், உதிரி பாகங்கள், என்பனவும் வழங்கி கல்வி ஊக்கிவிப்பு பணிகளையும் அவர் மேற்கொண்டு வருவதுடன் பல்வேறு ஆன்மீகப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடி கோடியாக செல்வம் கொட்டிக்கிடந்தாலும் அடுத்தவர்களுக்கு உதவும் குணம் பலரிடம் காணப்படாத இக்காலத்தில் இப்படியும் ஒருவரா என விய்யக்க வைக்கின்றார் அம்மனிதர்.

சுவீடன் பெண்ணை கோலாகலமாக திருமணம் செய்துகொண்ட யாழ் இளைஞன்!!

யாழில்..

சுவீடன் நாட்டு பெண்ணை யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கோலகலமாக திருமணம் செய்துள்ளார்.

குறித்த திருமணம் யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் தமிழ் கலாசார முறைப்படி இடம்பெற்றுள்ளது.

குறித்த தம்பதியின் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவதோடு, பலரும் தமது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

வவுனியாவில் 34வது வீரமக்கள் தினம் : அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட கொடி!!

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 34ஆவது வீரமக்கள் தினம் வவுனியா கோயில்குளத்தில் அமைந்துள்ள க.உமாமகேஸ்வரன் இல்லத்தில் இன்று (13.07.2023) இடம்பெற்றது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) வவுனியா மாவட்ட அமைப்பாளர் ஜி.ரி.லிங்கநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து கழகத்தின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது டன் செயலதிபர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர், முன்னாள் நகரசபை மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

விருந்தில் நடந்த பயங்கரம் : கொலையில் முடிந்த பரிதாபம்!!

மொரகஹஹேன தலகல பிரதேசத்தில் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த பிரதேசத்தில் உள்ள ஏல நிலத்தில் நேற்று இரவு நடந்த விருந்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சம்பவத்தில் உயிரிழந்தவர், மினுவாங்கொட, மாபோதல இத்தவத்தையில் வசிக்கும் அகழ்வு இயந்திர சாரதியாக பணிபுரிந்த 39 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என தெரியவந்துள்ளது.

நான்கு வருடங்களுக்கு மேலாக ஏல நிலத்தில் அகழ்வாராய்ச்சி சாரதியாக பணிபுரிந்து வந்த நபர் தனது பணியை நிறைவு செய்துள்ளார்.

மற்றைய தொழிலாளர்கள் அவருக்கு மதுபான விருந்து ஏற்பாடு செய்தமையினால் நேற்று வீட்டில் இருந்து ஏல நிலத்திற்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரவு 10 மணியளவில் மதுபான விருந்து முடிந்து சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மலிசிறிபுர கிராமப் பகுதிக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் ஏறிக்கொண்டிருக்கும் போதே உயிரிழந்த நபர் கழுத்தை அமுக்கி தொந்தரவு செய்துள்ளார்.

இதன் போது கோபமடைந்த நபர் பையில் இருந்த கூரான கத்தியை எடுத்து அவர் குத்திகொலை செய்துள்ளார் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கொலைக்கு தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வவுனியா LCDC CAMPUS தனது 9 ஆவது அகவையினை நோக்கி அடியெடுத்து வைக்கின்றது

வவுனியா LCDC CAMPUS

வவுனியாவில் ஆங்கில கல்விக்கென தனித்துவமான இடத்தினை தன்னகத்தே கொண்டு இயங்கி வந்த LCDC CAMPUS இன்றுடன் தனது 9வது அகவையினை நோக்கி அடி எடுத்து வைக்கிறது…

சுந்தரலிங்கம் பார்த்தீபன் என்பவரின் தனிப்பட்ட முயற்சியில் 10 மாணவர்களுடன் உருவாகிய இவ் கல்லூரியானது இன்று 1000 திற்கும் மேற்பட்ட மாணவர்களை உள்ளடக்கி ஒரு விருட்சமாக வானுயர்ந்து நிற்கின்றது.

தனியார் கல்வி நிறுவனம் என்றாலே அதன் அடிப்படை நோக்கம் பணமாக தான் இருக்கும் ஆனால் இக்கல்லூரியானது பணத்திற்காக இல்லாமல் ஏழ்மையான மாணவர்களின் கல்வி தேவையினை Lingam foundation என்பதன் மூலம் இலவச ஆங்கில கல்வியினை 500 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழங்கி வழி நடத்தி வருகின்றது.

தனிப்பட்ட ஒரு நபரின் முயற்சியில் சிறிதாக உருவாகிய இக் கல்லூரி ஒன்பதாவது ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கும் இவ் தருணத்தில் தனது தலைமை காரியாலயத்தினை canada வில் நிறுவி உள்ளது இதன் பெருமை இக் கல்லூரியின் முதல்வரான சுந்தரலிங்கம் பார்த்தீபன் என்பவரை மட்டுமே சாரும்.

Canada ல் மட்டுமில்லாமல் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், திருகோணமலை, கொழும்பு ஆகிய இடங்களிலும் தனது கிளைகளை நிறுவ செயல்பட்டு வருகின்றது.

வவுனியாவில் ஆங்கில மொழிக்காக மட்டுமே இயங்கி வருகின்ற இக்கல்லூரி தன்னிடம் கல்வி கற்க வருகின்ற மாணவர்களை Canada and London நாட்டிற்கு செல்வதற்கான Students Visa வினையும் செய்து மாணவர்களின் வெளிநாட்டு கனவினையும் நிறைவேற்றி வைக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஓர் கட்டணம் செலுத்தப்பட்ட பதிவாகும்..

கின்னஸ்ஸில் இடம்பிடித்த குடும்பம் : அப்படி என்ன சாதனை?

பாகிஸ்தானில்..

பாகிஸ்தானைச் சேர்ந்த குடும்பமொன்று ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. அதாவது அக்க குடும்பத்தில் உள்ள 9 பேருமே ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி பிறந்துள்ளனர்.

பாகிஸ்தானின் லர்கானா பகுதியைச் சேர்ந்தவர் அமீர் அலி. இவரது மனைவி குதேஜா. இவர்களுக்கு 19 முதல் 30 வயதுடைய 7 குழந்தைகள் உள்ளனர். இதில் பெண் இரட்டையர்களும், ஆண் இரட்டையர்களும் அடங்குவர்.

இவர்கள் 9 பேருமே ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி அன்று பிறந்துள்ளனர். இந்நிலையில் இது தற்பொது உலக சாதனையாக மாறி இருப்பதாக கின்னஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

இதற்கு முன்பு அமெரிக்காவில் கம்மின்ஸ் என்பவரது குடும்பத்தைச் சேர்ந்த 5 குழந்தைகள் இச் சாதனையைப் படைத்திருந்தனர். அவர்கள் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி அன்று பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது அச்சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. அமீர் அலி- குதேஜாவின் திருமண நாளும் ஓகஸ்ட் 1 என்பது கூடுதல் சிறப்பாகும். இந்நிலையில் இது கடவுளின் பரிசு என அத்தம்பதியினர் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.

மனைவியை கொன்றுவிட்டு 17 வருடமாக நாடகமாடிய கணவர் : ஒற்றை தலைமுடியால் சிக்கிய பிரிதாபம்!!

கேரளாவில்..

 

கேரளாவில் மனைவியை வெட்டிக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவரை போலீசார் 17 வருடங்களுக்குப் பின் கைது செய்தனர். பிணத்தின் கையில் சிக்கிய தலைமுடியால் குற்றவாளி சிக்கினார்.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லா அருகே உள்ள கோழஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் ஜனார்தனன் நாயர் (75). போஸ்ட் மாஸ்டராக இருந்து ஓய்வு பெற்றவர். அவருக்கு திருமணமாகி ரமாதேவி (51) என்ற மனைவி, ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

பிள்ளைகள் இருவருக்கும் திருமணமாகி வேறு ஊர்களில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.இதனால் ஜனார்தனன் நாயரும், ரமாதேவியும் வீட்டில் தனியாக வசித்து வந்தனர். கடந்த 2006ம் ஆண்டு மே 26ம் தேதி ரமாதேவி வீட்டில் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

இது குறித்து ஜனார்தனன் நாயர் திருவல்லா போலீசுக்குத் தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து சென்று ரமாதேவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவல்லா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஜனார்தனன் வெளியே சென்று விட்டு வீட்டுக்குத் திரும்பி வந்தபோது மனைவி கொல்லப்பட்ட நிலையில் கிடந்ததாக போலீசிடம் கூறினார்.சம்பவம் நடந்த சமயத்தில் இவர்களது வீட்டுக்கு அருகே ஒரு புதிய வீடு கட்டப்பட்டு வந்தது. நெல்லையை சேர்ந்த சுடலைமுத்து என்பவர் உள்பட ஏராளமான தொழிலாளர்கள் கட்டிட பணியில் ஈடுபட்டு வந்தனர்.

ரமாதேவியின் கொலைக்குப் பின்னர் சுடலைமுத்துவும், அவருடன் தங்கியிருந்த ஒரு பெண்ணும் மாயமானார்கள். இதனால் போலீசுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இருவரையும் போலீசார் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையே கடந்த சில வருடங்களுக்கு முன் இந்த வழக்கு குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது.

குற்றப்பிரிவு டிஎஸ்பி பிரதீக் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். குற்றப்பிரிவு போலீசின் விசாரணையும் முறையாக நடைபெறவில்லை என்று கூறி ஜனார்தனன் நாயர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

ஆனால் அந்த மனுவை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கிடையே குற்றப்பிரிவு போலீசின் தீவிர விசாரணையில் சுடலைமுத்துவுடன் மாயமான பெண் தென்காசியில் வைத்து பிடிபட்டார்.

அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது தான் ரமாதேவி கொலை குறித்த முக்கிய துப்புகள் கிடைத்தன. ரமாதேவிக்கும், ஜனார்தனன் நாயருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தததை தான் பலமுறை பார்த்ததாக அந்த பெண், போலீசிடம் தெரிவித்தார்.

இதன் பிறகு தான் போலீசின் சந்தேகப் பார்வை ஜனார்தனன் நாயர் மீது விழுந்தது. இதுதொடர்பாக ஜனார்தனனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது தன்னுடைய மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை வெட்டி கொலை செய்ததாக ஜனார்தனன் நாயர் போலீசிடம் ஒப்புக்கொண்டார்.

விசாரணைக்குப்பின் போலீசார் ஜனார்தனன் நாயரை பத்தனம்திட்டா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் கொட்டாரக்கரை சிறையில் அடைக்கப்பட்டார். பெண் கொலை செய்யப்பட்டு 17 வருடங்களுக்கு பிறகு அவரது கணவர் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கனடாவில் மாயமான இலங்கையர் சடலமாக மீட்பு…பேரதிர்ச்சியில் குடும்பத்தினர்!!

கனடாவில்..

கனடாவில் இலங்கையர் ஒருவர் மாயமான நிலையில், அவர் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கிடைத்துள்ள செய்தி அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள Scarboroughவில் அவசர மருத்துவ உதவியாளராக பணியாற்றிவந்த இலங்கையரான அர்ஜனன் சிவசத்தியராஜா (Arjanan Sivasathiyarajah), பணி நிமித்தமாக படகில் சென்ற நிலையில் கடந்த 3ஆம் திகதி மாயமாகியுள்ளார்.

இம்மாதம், அதாவது, ஜூலை மாதம் 5ஆம் திகதி, மாலை 5.00 மணியளவில், Kashechewan நதியில் அர்ஜனனின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவர் நதியில் தவறிவிழுந்திருக்கலாம் என பொலிசார் கருதுகின்றார்கள்.

2017ஆம் ஆண்டு அர்ஜனனின் தந்தை மாரடைப்பால் மரணமடைந்த நிலையில், தன் தந்தைக்கு தன்னால் எந்த உதவியும் செய்யமுடியவில்லையே என வருந்திய அர்ஜனன், அந்த சம்பவத்தின் தாக்கத்தால் அவசர மருத்துவ உதவியாளராக பணி செய்ய முடிவு செய்துள்ளார்.

அவர் புதிதாக பணியில் இணைந்து சில வாரங்களே ஆன நிலையில் தனக்குப் பிடித்த வேலையின்போதே மரணமடைந்துள்ளார். இந்த தகவலை அர்ஜனனின் சகோதரரான காஞ்சனன் (Kajanan Sivasathiyarajah) தெரிவித்துள்ளார்.

அர்ஜனன் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பணியில் இணைந்து சில வாரங்களே ஆன நிலையில், இளம் வயதில் தங்கள் பிள்ளையை இழந்துள்ள அவரது குடும்பத்தினரும் அவரது நண்பர்களும் மீளாத்துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இன்ஸ்டகிராமில் காதல் வலை.. இளம் பெண் செய்துவந்த மோசமான வேலை!!

சேலத்தில்..

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே தொளசம்பட்டியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 30). பைனான்சியரான இவர் நேற்று மாலை தொளசம்பட்டி போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.

அதில், இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த பியூட்டீசியன் ரசீதாவை காதலித்தேன். கடந்த மார்ச் மாதம் 30ம் தேதி இருவரும் ஓமலூர் ஈஸ்வரன் கோயிலில் மாலை மாற்றி, தாலி கட்டி திருமணம் செய்துகொண்டோம்.

3 மாதம் ஒன்றாக வாழ்ந்த நிலையில், கடந்த 5ம் தேதி காலையில் இருந்து அவரை காணவில்லை. வீட்டில் இருந்த 4 பவுன் நகை, ரூ.1.50 லட்சத்தை எடுத்துக் கொண்டு மாயமாகிவிட்டார். அவரை கண்டு பிடித்து தர வேண்டும் எனக் கூறியுள்ளார்.

மாயமான ரசீதாவின் சமூக வலைதள பக்கங்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், பல்வேறு பெயர்களில் போலியாக கணக்குகளை வைத்துக் கொண்டு வசதியான ஆண்களை வலையில் வீழ்த்தி, திருமணம் செய்து பணம் பறிக்கும் செயலில் அவர் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

சொகுசு கார், பைக்குகளில் பியூட்டியாக போஸ் கொடுத்து பலரை வலையில் வீழ்த்தியிருக்கிறார். மூர்த்தியும் அவரது அழகில் விழுந்தே காதல் திருமணத்தை உறவினர்கள் இல்லாமல், தனியாக நடத்தியிருக்கிறார்.

ரசீதாவுடன் பழகியதும் மனைவியை விவாகரத்து செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதனிடையே கடந்த மாதம் 20ம் தேதி கோவை மாவட்டம் துடியலூர் அனைத்து மகளிர் போலீசில், 33 வயது பெண் ஒரு புகார் கொடுத்தார்.

அதில், எனது கணவர் சத்யகணேஷ், ஒரு பெண்ணுடன் (ரசீதா) தொடர்பு வைத்துக்கொண்டு என்னிடம் பணம் கேட்டு பிரச்னை செய்கிறார் எனக்கூறியுள்ளார். அப்புகார் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பதும் தொளசம்பட்டி போலீசாருக்கு தெரியவந்துள்ளது.