தங்க நிறத்தில் அபூர்வ ஆமை.. குளத்தில் மீன்பிடி வலையில் சிக்கிய ஆச்சரியம்!!

ஆந்திராவில்..

ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் உள்ள குளத்தில் ஆமை ஒன்று தங்க நிறத்தில் இருப்பதால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக, ஆமைகள் ஆலிவ்-பச்சை, பச்சை அல்லது சிவப்பு பழுப்பு அல்லது கருப்பு நிறத்தில் இருக்கும்.

பல வகையான ஆமை இனங்கள் பரந்த அளவிலான வண்ணங்களைக் கொண்டுள்ளன. ஆனால் தங்க நிறத்தில் உள்ள இந்த ஆமை அபூர்வம் என்பதால் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் மடகசிரா மண்டல் கல்லுமரி கிராமத்தில் உள்ள குளத்தில் தங்க நிற ஆமை கண்டெடுக்கப்பட்டது. உள்ளூர் கிராமக் குளத்தில் வெள்ளிக்கிழமை மீனவர்கள் மீன் பிடிக்க வலை வீசியபோது, அவர்கள் ஒரு அரிய தங்க நிற ஆமையைப் பிடித்தனர், இது அவர்களுக்கு மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்தது.

அத்தகைய பிரகாசமான தங்க நிறத்தை அவர்கள் இதற்கு முன்பு பார்த்தது இல்லை என்பதால், அதனை மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்தனர். தங்க ஆமையை வீடியோ எடுத்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் வந்து அந்த அபூர்வ ஆமையை பார்த்துச்சென்றனர். இறுதியாக மீனவர்கள் அதே குளத்தில் ஆமையை விடுவித்தனர். தங்க நிற ஆமையின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நிபுணர்களின் கூற்றுப்படி, தங்க ஓடு ஒரு மருத்துவ நிலையில் இருந்து விளைகிறது, இதில் குரோமடிக் லுசிசம் தோலை பாதித்து அதன் நிறத்தை மாற்றுகிறது. பல்வேறு உயிரினங்களில் நிறமி குறைவதால் ஏற்படும் அசாதாரண நிலையின் விளைவாக லூசிசம் ஏற்படுகிறது.

மேலும், மரபணு மாற்றம் காரணமாக ஆமைகள் தங்க நிறத்துடன் பிறந்த நிகழ்வுகள் உள்ளன, ஆனால் இவை மிகவும் அரிதானவை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

16 வயதிலேயே கோடீஸ்வரியாகி பின் அனைத்தையும் இழந்த பெண்… இன்று எப்படி இருக்கிறார் தெரியுமா?

பிரித்தானியாவில்..

பிரித்தானியாவில், வெறும் 16 வயதே இருக்கும்போது லொட்டரியில் 1.8 மில்லியன் பவுண்டுகள் வென்ற ஒரு பெண், பின் அரசின் நிதியுதவியைப் பெற்று வாழும் நிலையை அடைந்தார்.

Callie Rogers லொட்டரியில் 1.8 மில்லியன் பவுண்டுகள் வென்றபோது அவருக்கு வெறும் 16வயது. சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பொருட்கள் வாங்கிவிட்டு வெளியே செல்வோரை சோதனையிடும் வேலையில், ஒரு மணி நேரத்துக்கு வெறும் 3.60 பவுண்டுகள் ஊதியம் பெற்றுக்கொண்டிருந்தபோதுதான் Callieக்கு லொட்டரியில் 1.8 மில்லியன் பவுண்டுகள் பரிசு விழுந்தது.

பணம் வந்ததும் காதலும் வந்தது. Nicky Lawson என்பவரை மணந்தார் Callie, 180,000 பவுண்டுகள் மதிப்புள்ள மாளிகைக்கு குடிபோனது குடும்பம். இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். ஆனால், ஐந்தே ஆண்டுகளில் காதல் கசந்தது, தற்கொலைக்கு முயன்றார் Callie.

ஒரு கட்டத்தில் பிள்ளைகள் அவரிடமிருந்து பறிக்கப்பட்டார்கள். அப்போதும், தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வதற்காக, 17,000 பவுண்டுகள் செலவு செய்து மார்பக அழகு சிகிச்சை செய்துகொண்டார் Callie.

நண்பர்கள் என்று கூறிக்கொண்டு ஏராளமானோர் அவருடன் இணைந்து கொண்டார்கள், ஆனால், அவர்கள் நோக்கம் முழுவதும் அவரது பணத்தின் மேலேயே இருந்தது.

கடைசியில் எல்லாம் இழந்து, அரசின் நிதியுதவியை பெறும் நிலையை அடைந்தார் Callie. Cumbria என்ற இடத்தில் அதிவேகத்தில் சென்ற ஒரு காரை துரத்திச் சென்ற பொலிசார், பெப்பர் ஸ்பிரே பயன்படுத்தி மடக்கிப்பிடிக்கும் அளவுக்கு அந்த காரின் சாரதி கட்டுப்பாடில்லாமல் இருந்தார்.

காரணம், அவர் கொக்கைன் என்னும் போதைப்பொருளின் கட்டுப்பாட்டில் இருந்தார். அது, Callieதான். கார் ஓட்ட விதிக்கப்பட்ட நீண்டகால தடைக்குப் பின், தற்போது அவர் அதே Cumbriaவில் கடைக்குச் சென்றுவிட்டு காரில் பயணிக்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

அவ்வளவு சின்ன வயதில் 1.8 மில்லியன் பவுண்டுகள் என்பது மிகப்பெரிய பணம், பணம் வந்தாலும் வாழ்க்கை மாறாது என்றெல்லாம் பேச்சுக்கு சொல்லலாம். ஆனால், அது உண்மையில்லை, வாழ்க்கை மாறத்தான் செய்கிறது, அதுவும் நல்ல விதமாக அல்ல, அது என்னை உடைத்துவிட்டது என்று கூறும் Callie, லொட்டரி நிறுவனங்கள் லொட்டரி வாங்குவதற்கான குறைந்தபட்ச வயதை 18ஆக்கவேண்டும் என்கிறார்.

செவிலியராக முடிவு செய்துள்ள Callie, அதற்காக தற்போது பல்கலைப் படிப்பை மீண்டும் தொடர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கணவன் காணாமல் போன மறுநாள் மாயமான மனைவி, 2 பிள்ளைகள்!!

மகாராஷ்டிராவில் ..

கணவன் காணாமல் போன அடுத்த நாளே, மனைவி மற்றும் 2 பிள்ளைகளும் காணாமல் போன சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி என்ற பகுதியை அடுத்துள்ளது விசாப்பூர் என்ற இடம் உள்ளது.

இங்கு பரத் பாலேகர் – சுகந்தா பாலேகர் தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு ஆராத்யா, ஸ்ரீ என்ற 2 ஆண் பிள்ளைகள் இருக்கும் நிலையில், பரத் பாலேகர் அந்த பகுதியில் வேலை செய்து வருகிறார்; பிள்ளைகளும் அருகில் இருக்கும் பள்ளி ஒன்றில் படித்து வருகிறது.

இந்த சூழலில் கடந்த ஜூலை 2-ம் தேதி பரத் பாலேகர் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அப்படி சென்ற அவர் மறுநாள் வரை வீடு திரும்பவில்லை. பரத் பாலேகருக்கு இப்படி அடிக்கடி வீட்டை விட்டு வெளியே செல்லும் பழக்கம் இருந்துள்ளது.

அப்படி சென்ற அவர் மறுநாள் வரை வீடு திரும்பவில்லை. வழக்கமாக சென்று விட்டு வீடு திரும்பி விடுவார் என்ற எண்ணத்தில் அவரது மனைவியும் பெரிதாக அதனை கண்டு கொள்ளவில்லை.

இதையடுத்து மறுநாள் ஜூலை 3-ம் தேதி சுகந்தா பாலேகர், தனது 2 பிள்ளைகளையும் பள்ளியில் கொண்டு போய் விட்டுள்ளார். பிள்ளைகளை அங்கே விட்டுவிட்டு சென்ற அவர், வீடு திரும்பவில்லை.

மேலும் பள்ளி முடிந்து மாலை நேரத்தில் பிள்ளைகளும் வீடு திரும்பவில்லை. இதனால் யாரேனும் குழந்தைகளை கடத்தி விட்டனரோ என்று உறவினர்கள் பயந்துபோனர். தொடர்ந்து இதுகுறித்து உறவினர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்தே கணவர் காணாமல் போன மறுநாள் மனைவி காணாமல் போனதும், அன்று மாலை நேரத்தில் பிள்ளைகள் காணாமல் போனதும் தெரியவந்தது. தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து காணாமல் போன குடும்பத்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புகையிரதத்தின் முன் பாய்ந்து ஆசிரியை தற்கொலை.. தவிக்கும் 2 மகள்கள்!!

கோவையில்..

இன்றைய இளம் தலைமுறையினர் மன அழுத்தம் தாங்காமல், தோல்வி பயத்தில் பெற்றோர் ஆசிரியர் திட்டுதல் என எந்த பிரச்சனையையும் எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

இவர்களுக்கு முன்னுதாரணமாக அவர்களை அந்த எண்ணத்தில் இருந்து மீட்டெடுக்கும் பணி ஆசிரியர் பணி. பள்ளியின் தலைமை ஆசிரியரே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வெள்ளக்கிணறு பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் விஜயராணி (53). பள்ளிக்கு அருகிலேயே வசித்து வருகிறார்.

இவருக்கு 2 மகள்கள். இருவருக்குமே திருமணமாகி விட்டது. நேற்று ஜூலை8ம் தேதி சனிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை தினம் என்பதால், அவருடைய இருசக்கர வாகனத்தில் துடியலூர் ரயில் நிலையம் வந்திருந்தார்.

அங்கு அவருடைய வாகனத்தை நிறுத்தி விட்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி வந்த பயணிகள் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிவிக்கப்பட்ட உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே காவல்துறையினர் தற்கொலை செய்து கொண்ட தலைமை ஆசிரியை விஜயராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குடும்ப பிரச்சனையா அல்லது பணிச்சுமையா? எதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என பல கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பள்ளியின் தலைமை ஆசிரியை திடீரென தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தான் மகள்களுக்கு திருமணமான நிலையில், இரு மகள்களும் தாயாரின் சடலத்தைப் பார்த்து கதறியழுதது சோகத்தை ஏற்படுத்தியது.

போலந்து நாட்டு பெண்ணை கரம்பிடித்த தமிழ் இளைஞன் : சுவாரஸ்ய காதல் கதை!!

தமிழகத்தில்..

தமிழகத்தை சேர்ந்த அருண் பிரசாத் என்ற இளைஞர் போலந்து நாட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் பூசுச்துரை பகுதியை சேர்ந்த அருண் பிரசாத் என்ற இளைஞர் வேலைக்காக போலந்து சென்றுள்ளார். அங்கு அனியா என்ற போலந்து நாட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் அருண் பிரசாத் பேசி பழகி உள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததை தொடர்ந்து திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளனர்.

இந்நிலையில் பெற்றோர்களிடம் தங்கள் காதலை வெளிப்படுத்திய நிலையில், இன்று இருவீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தமிழ் முறைப்படி நடைபெற்ற இந்த திருமணத்தில் மந்திரங்கள் முழங்க போலந்து பெண் அனியாவை புதுக்கோட்டை இளைஞர் அருண் பிரசாத் கரம்பிடித்தார்.

மனைவியை கொலை செய்து விட்டு ஒன்றரை வருடம் சாமியாராக வலம் வந்த கணவன் கைது!!

ஓட்டேரியில்..

ஓட்டேரியில் மனைவியை கொலை செய்து விட்டு, ஒன்றரை வருடம் சாமியாராக கோயில் கோயிலாக வலம் வந்த கணவன், பிச்சை எடுத்த பணத்தை மகன்களுக்கு அனுப்பியதால் சிக்கினார். சென்னை ஓட்டேரி ஏகாங்கிபுரம் 4வது தெருவில் வசித்து வந்தவர் ரமேஷ் (38).

இவரது மனைவி வாணி (40), மகன்கள் கவுதம் (15), ஹரிஷ் (12). தம்பதியர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ரமேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் அடிக்கடி கணவன், மனைவிக்கு சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 2021, டிசம்பரில் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் வாணியை அடித்துக் கொலை செய்துவிட்டு வீட்டின் சோபாவுக்கு அடியில் உட்புறமாக துணியில் சுற்றி மூட்டையை அடுக்கி வைப்பது போல, அவரது உடலை மறைத்து வைத்துவிட்டு ரமேஷ் தலைமறைவாகிவிட்டார்.

2 நாட்கள் கழித்து வீட்டில் இருந்து துர்நாற்றம் வரவே அக்கம் பக்கத்தினர் ஓட்டேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அப்போதைய ஓட்டேரி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திற்குச் சென்று அழுகிய நிலையில் வாணியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனை செய்து ரமேஷை தேடி வந்தார்.

ஆனால், ரமேஷ் செல்போனை பயன்படுத்தாமல் தலைமறைவாகி விட்டார். இதனால் அவரை பிடிப்பதில் தொடர்ந்து போலீசாருக்கு சிக்கல் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா தலைமையிலான போலீசார் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாறுவேடத்தில் மறைந்திருந்து ரமேஷ் வருவதை கண்காணித்தனர்.

அவர் வந்தபோது சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. ரமேஷிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்த அவரது மனைவி வாணி, கொலையாவதற்கு சில மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து ரமேஷை வீட்டை விட்டு வெளியே செல்லும்படி கூறி வந்துள்ளார்.

மேலும் வாணியின் நடத்தையிலும் ரமேஷுக்கு சந்தேகம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டிற்கு வந்த ரமேஷை வாணி வீட்டை விட்டு வெளியே செல்லும்படி கூறியுள்ளார். அப்போது மது போதையில் இருந்த ரமேஷ், வாணி கட்டியிருந்த சேலையின் முந்தானையால் அவரது கழுத்தை இறுக்கியுள்ளார்.

இதில் வாணி கழுத்து எலும்பு நொறுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ், அவரது உடலை மறைக்க முற்பட்டுள்ளார். அவரது முயற்சிகள் தோல்வியடைந்துள்ளது.

இதனால் வாணியின் தலையிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. வேறு வழி இல்லாமல் வாணியின் உடலை மூட்டை கட்டி சோபாவின் அடியில் போட்டுவிட்டு எலி மருந்து வாங்கி அதனை மதுவில் கலந்து குடித்துள்ளார்.

ஏற்கனவே மது குடித்து இருந்ததால் மொத்தத்தையும் வாந்தி எடுத்துவிட்டு கோயம்பேடு பஸ் நிலையம் சென்று அங்கிருந்து பேருந்து மூலம் ரமேஷ் திருவண்ணாமலைக்கு சென்றுள்ளார்.

திருவண்ணாமலை சென்றதும் சில சாமியார்களுடன் தங்கி இருந்துள்ளார். அதன் பிறகு அங்கிருந்த சில சாமியார்கள் வட இந்தியாவிற்கு ஆன்மிகப் பயணம் சென்றுள்ளனர்.

அவர்களுடன் வட இந்தியாவிற்கு சென்ற ரமேஷ், அங்கு பூரி ஜெகந்நாதர் கோயில், ரிஷிகேஷ், காசி உள்ளிட்ட பல இடங்களுக்குச் சென்று, கோயில் கோயிலாகச் சுற்றியுள்ளார்.

சாமியார்கள் எங்கு தங்குகிறார்களோ, அங்கு தங்கி பிச்சை எடுத்து துறவு வாழ்க்கையை ரமேஷ் வாழ்ந்துள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு, தான் பிச்சை எடுத்த 1,800 ரூபாய் பணத்தை ஓட்டேரியில் உள்ள தனது நண்பரை தொடர்பு கொண்டு அவரது கூகுள் பே நம்பருக்கு, வேறு ஒரு நபர் மூலம் பணம் அனுப்பி வைத்துள்ளார்.

அந்த பணத்தை தனது மகனிடம் கொடுத்து விடுமாறு ரமேஷ் கூறியுள்ளார். குறிப்பிட்ட அந்த நபரும் பணத்தை அவரது மகனிடம் கொடுத்து விட்டார். அதன் பிறகு ரமேஷ் அவர்களை தொடர்பு கொள்ளவில்லை.

அப்போது ரமேஷ், தான் சாமியாராக மாறிவிட்டதாகவும், தற்போது நான் பேசிக் கொண்டிருக்கும் நம்பர் என்னுடன் உள்ள ஒரு சாமியாரின் எண் எனவும் நண்பரிடம் கூறியுள்ளார். மேலும் என்னை யாரும் தேட வேண்டாம் எனவும் கூறியுள்ளார். சில மாதங்கள் கழித்து இந்த தகவல் ஓட்டேரி போலீசாருக்கு தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் ரமேஷின் நண்பரிடம் இருந்து குறிப்பிட்ட அந்த சாமியாரின் செல்போன் நம்பரை வாங்கி கால் லோகேஷன் போட்டு பார்த்தனர். அப்போது அந்த எண் திருவண்ணாமலை, சதுரகிரி, பின்னர் காசி போன்ற கோயில் சார்ந்த மடங்களை காண்பித்தது.

கடைசியாக அந்த எண் டெல்லியில் உள்ள ஒரு ஆசிரமத்தை காண்பித்தது. மேலும் ரமேஷ் சாமியாராக மாறிவிட்ட தகவலையும் தெரிந்து கொண்ட போலீசார், டெல்லியில் உள்ள ஆசிரமங்களில் ரமேஷை தேடினர்.

இதில் டெல்லி அஜ்மேரி கேட் எனும் பகுதியில் உள்ள ஹரிஹர சுதன் ஆசிரமத்தில் ரமேஷ் தங்கி இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. இந்நிலையில் புளியந்தோப்பு உதவி கமிஷனர் அழகேசனின் தனிப்படை போலீசார் ரமேஷை கைது செய்ய டெல்லிக்குச் சென்றனர்.

அப்போது அவர் பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்குச் சென்று இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து உஷாரான ஓட்டேரி போலீசார் கடந்த திங்களன்று பவுர்ணமி முடிந்து எந்தெந்த சாமியார்கள் ஊருக்குக் கிளம்பியுள்ளார்கள் என்ற விவரங்களை சேகரித்தனர்.

இதில் குறிப்பிட்ட சிலர் நேற்று முன்தினம் காலை ரயில் மூலம் வட இந்தியாவிற்குச் செல்ல இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா தலைமையிலான போலீசார் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வைத்து நேற்று காலை ரமேஷை கையும் களவுமாக பிடித்தனர்.

போலீசாரிடம் ஒன்றரை வருடங்களுக்கு பிறகு சிக்கிய ரமேஷிடம் விசாரணை மேற்கொண்டதில் பல தகவல்கள் வெளிவந்தன. அப்போது, அவர், தான் வேண்டுமென்றே வாணியை கொலை செய்யவில்லை எனவும், தொடர்ந்து அவர் என்னை அவமானப்படுத்தி வந்ததால் போதையில் சேலையால் கழுத்தை நெரித்ததில் அவர் உயிரிழந்தார் எனவும் கூறி அழுதுள்ளார்.

ஒன்றரை வருடங்கள் கழித்து தனது தந்தை பிடிபட்டுள்ளதை அறிந்த ரமேஷின் மகன்கள் ஓட்டேரி காவல் நிலையம் வந்தனர். அப்போது ரமேஷ் தனது இரண்டு மகன்களிடமும் என்னை மன்னித்து விடுங்கள் என்றுக் கூறி அழுதுள்ளார்.

இதனையடுத்து கடந்த ஒன்றரை வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த வாணியின் கொலை வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. ரமேஷ் மீது வழக்குப்பதிவு செய்த ஓட்டேரி போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஓடும் ரயிலில் கைப்பேசி பறிப்பு.. தவறி விழுந்து பலியான இளம்பெண்!!

சென்னையில்..

சென்னை இந்திரா நகர் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி ப்ரீதாவிடம்செல்போன் பறிக்கப்பட்டது. இதனால் அந்த மாணவி செல்போனை தாவி பிடிக்க முயன்றதில் பிரீத்தி ரயிலில் இருந்து தவறி விழுந்தார்.

இதில் படுகாயம் அடைந்த ப்ரீத்தி உடனடியாக மீட்கப்பட்டு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மாணவி ப்ரீத்தி உயிரிழந்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட விக்னேஷ் , மணிமாறன் இருவரின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை கந்தன்சாவடியில் வசித்து வரும் 23 வயது இளம் பெண் ப்ரீத்தி. இவர் பி.காம் முடித்துவிட்டு கோட்டூர்புரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரிவில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் ஜூலை2ம் தேதி மின்சார ரயில் மூலமாக தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே 2 இளைஞர்கள் இவரது செல்போனை பறித்து தப்பி ஓடத் தொடங்கினர்.

ரயிலில் இருந்து செல்போனை பறிக்கும் போது இளம் பெண்ணையும் இழுத்ததால் அவர் தவறி ரயிலில் இருந்து கீழே விழுந்து விட்டார். பரீத்தி தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் துடித்துள்ளார்.

ரயில்வே ஊழியர்களால் மீட்கப்பட்டு உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்து பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சாலையோரம் கிடந்த சடலம்.. போலிஸ் விசாரணையில் சிக்கிய மனைவி!!

பெங்களூருவில்..

கணவருக்கு கடன் கொடுத்தவருடன் ஏற்பட்ட காதல் காரணமாக, கணவரை கொலை செய்த மனைவியின் செயல் பெங்களுருவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ளது சன்னப்பட்டினம் என்ற கிராமம். இங்கு அருண்குமார் – ரஞ்சிதா தம்பதி வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் திருமணமானது. இதையடுத்து இந்த தம்பதி தொழில் தொடர்பாக சன்னசந்திரா என்ற இடத்தில் வசித்து வந்துள்ளனர்.

ஹோட்டல் தொழில் செய்து வரும் அருண் குமார், தனது தொழில் நிமித்தமாக கணேஷ் என்பவரிடம் வட்டிக்கு ரூ.8 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இருப்பினும் அவரால் தனது ஹோட்டலை லாபத்துடன் நடத்த இயலவில்லை.

தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் அவர் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் தனது ஹோட்டலை மூட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். மேலும் தான் கொடுத்த கடனை கணேஷும் திரும்ப கேட்டு தொல்லை செய்து வந்துள்ளார்.

நேரடியாக வீட்டுக்கு வந்து கேட்டு வந்தபோது, கணேஷுக்கும் ரஞ்சிதாவுக்கும் திடீரென காதல் ஏற்பட்டுள்ளது. இந்த காதல் விவகாரம் ஒருநாள் அருண் குமாருக்கு தெரியவரவே, தனது மனைவி மற்றும் கடன் கொடுத்த கணேஷை கண்டித்துள்ளார்.

இருப்பினும் அவர்கள் தங்கள் காதலை விடவில்லை. ஒருகட்டத்தில் பொறுமை இழந்த ரஞ்சிதாவும், கணேஷும் அருண்குமாரை கொலை செய்ய எண்ணியுள்ளனர். அதன்படி கணேஷ் தனது நண்பர்கள் உதவியை நாடியுள்ளார்.

பின்னர் கடந்த ஜூன் 29-ம் தேதி ஹோட்டல் விவகாரம் குறித்து பேச வேண்டுமென்று அருணை தனியாக சந்திக்க வர சொல்லியுள்ளார். அருணும் அதனை நம்பி கட்டிகெரேபாளையம் என்ற இடத்திற்கு வந்துள்ளார். பின்னர் அங்கே இருந்த கணேஷ், அருணை அரிவாளால் வெட்டி கொன்று விட்டு தப்பி சென்றுள்ளார்.

இதையடுத்து சடலத்தை கண்டு அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் விசாரித்தனர். அப்போது அது அருண் என்று தெரியவந்ததால் அவரது மனைவி ரஞ்சிதாவிடம் விசாரித்தனர்.

தொடர்ந்து அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் போலீசுக்கு சந்தேகம் வலுத்தது. விடாமல் அவரிடம் விசாரித்ததில் அவரது காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து ரஞ்சிதா, அவரது காதலன் கணேஷ், அவரது நண்பர்களான சிவானந்தா, சரத் மற்றும் தீபக் ஆகிய அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

மனைவியை கொன்று மூளையை வெளியே எடுத்து சாப்பிட்ட இளைஞர்.. மண்டை ஓட்டை என்ன செய்தார் தெரியுமா?

மெக்சிகோவில்..

மெக்சிகோ நாட்டில் வசிக்கும் இளைஞர் ஒருவர், தனது மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்து அவரது மூளையைச் சாப்பிட்ட பகீர் சம்பவம் அரங்கேறி இருக்கிறது. உலகில் ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு விதமான இறை நம்பிக்கை இருக்கும். அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது.

அதேநேரம் சில நாடுகளில் டெவில் எனப்படும் சாத்தானை வழிபடுவதைப் பழக்கமாகவே வைத்துள்ளனர். அவர்களில் சிலர் சாத்தான் அளித்த உத்தரவு என்று கூறி செய்யும் சில சம்பவங்கள் நமக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தும். அப்படியொரு பகீர் சம்பவம் தான் இப்போது மெக்சிகோ நாட்டில் அரங்கேறியுள்ளது.

மெக்சிகோ நாட்டை சேர்ந்த 32 வயதான நபர் டெவில் வழிபாடு எனப்படும் சாத்தான் வழிபாட்டைச் செய்து வந்துள்ளார். அவர் தனது மனைவியை கொன்ற குற்றச்சாட்டில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையே இந்த வழக்கு குறித்து வெளியான பல தகவல்கள் பகீர் கிளப்பும் வகையிலேயே அமைந்துள்ளது. கடந்த ஜூன் 29ஆம் தேதி இந்த இளைஞன் போதை மருந்து எடுத்துள்ளார். போதை தலைக்கேற அவர் தனது மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

அத்துடன் நிற்காமல் தனது மனைவியின் மூளையை வெளியே எடுத்து, அதை டகோ என்ற உணவில் வைத்துச் சாப்பிட்டுள்ளார். மேலும், அவரது மண்டை ஓட்டை சிகரெட் தூசிகளைப் போடும் ஆஷ் ட்ரேவாக பயன்படுத்தியுள்ளார்.

இந்த கொடூர சம்பவத்தைச் செய்த அந்த நபர் அல்வாரோ என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த அல்வாரோ தனது மனைவி மரியா மான்செராட் என்பவரைத் தான் இப்படி கொடூரமாகக் கொலை செய்துள்ளார். கடந்தாண்டு தான் இருவரும் திருணம் செய்து கொண்டுள்ளனர்.

மரியா மான்செராட் இதற்கு முன்பு வேறு ஒருவரைத் திருமணம் செய்து குடும்பம் நடந்து வந்துள்ளார். அந்த திருமணத்தில் அவருக்கு 5 குழந்தைகள் இருந்துள்ளது. அப்போது தான் அவருக்கும் அல்வாரோவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் காதலாக மாற இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்துள்ளனர். இருப்பினும், திருணமான ஒரே ஆண்டில் இந்த கொடூர கொலை நடந்துள்ளது.

அல்வாரோவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சொன்ன தகவல்கள் மேலும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்துள்ளது. தான் வழிபடும் டெவில் தான் இந்த கொலையைச் செய்ய தனக்கு ஆர்டர் போட்டதாகத் தெரிவித்துள்ளார்.

மனைவியைக் கொன்று துண்டு துண்டாக வெட்டிய இந்த சைக்கோ, சில பாகங்களை பிளாஸ்டிக் பைகளில் போட்டுள்ளார். சில பாகங்களை மலையில் வீசிய அவர், வேறு சில பாகங்களை வீட்டிலேயே வைத்துள்ளார்.

அல்வாரோ போதையில் இதைச் செய்துள்ளார். போதை தெளிந்ததும் தான் எவ்வளவு கொடூரமான காரியத்தைச் செய்துள்ளோம் என்பதை உணர்ந்த அவர், இரு நாட்கள் கழித்து தனது வளர்ப்பு மகளை அழைத்து தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

அல்வாரோ தனது வளர்ப்பு மகளிடம் போன் செய்து. “உங்கள் அம்மாவை வந்து வாங்கிக் கொள். ஏனென்றால் நான் அவரை ஏற்கனவே கொலை செய்து பிளாஸ்டிக் பையில் போட்டுள்ளேன். வந்து வாங்கிக் கொள்” எனக் கூறியுள்ளான். இந்த கொடூர கொலை குறித்த தகவல்கள் நெட்டிசன்களை அதிர்ச்சியின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது.

காதலிக்கு போதைப்பொருள் கொடுத்து காதலன் அரங்கேற்றிய கொடூரம்!!

குருணாகலில்..

குருணாகலில் 20 வயதான யுவதிக்கு 22 வயதான நபர் பல சந்தர்ப்பங்களில் போதைப்பொருளை பயன்படுத்த வற்புறுத்திய சம்பவம் தொடர்பில் அந்த யுவதி, யுவதியின் தாய், உறவினர்கள் வெலிபென்ன பொலிஸ் நியைத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

தர்கா நகர் மீகம பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 22 வயதான நபர், கடந்த பல மாதங்களாக இந்த யுவதியுடன் காதல் தொடர்பில் இருந்துள்ளார்.

அப்போது அந்த யுவதியை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று, ஹெரோய்ன் போதைப்பொருளை பயன்படுத்த பலவந்தமாக பழக்கப்படுத்தினார் என்று அந்த யுவதி பொலிஸில் தெரிவித்துள்ளார்.

கண்ணாடி குவலைக்குள் போதைப்பொருளை போட்டு, ஏதோவொரு குழாயை தன்னிடம் கொடுத்து, அந்த கண்ணாடி குவலையின் கீழ், லைட்டர் அல்லது தீக்குச்சிகளாக தீமூட்டுவார்.

அதன்பின்னர், வெளிவரும் புகையை மூக்கில் இழுக்குமாறு வற்புறுத்துவார்.இவ்வாறுதான் தனக்கு​ ஹெரோய்ன் பயன்படுத்த பலவந்தமாக பழக்கப்படுத்தினார் என்றும் அந்த யுவதி தெரிவித்துள்ளார்.போதையில் இருக்கும் போது, பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்துவார் என்றும் அந்த யுவதி தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் தற்போது தலைமறைவாகியிருக்கும் இளைஞனை தேடிவரும் பொலிஸார், ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரி அவர்களை பருவக்காலத்தில் பெற்றோர்கள் மிகக் கவனமாக கண்காணிக்கவேண்டும் என்றும் அறிவுரை கூறியுள்ளனர்.

கனவுகளுடன் கனடா சென்ற இலங்கை இளைஞருக்கு நேர்ந்த துயரம்!!

எம்.எச். வினோஜ் யசங்க ஜெயசுந்தர..

உயர் கல்வியைத் தொடருவதற்காக கனடா சென்ற இலங்கை இளைஞர் ஒருவர் வாகன விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.சம்பவத்தில் 28 வயதான எம்.எச். வினோஜ் யசங்க ஜெயசுந்தர என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 22 ஆம் திகதி மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் இலத்திரனியல் பொறியியலில் பட்டம் பெற்ற வினோஜ் யசங்க , கலாநிதி பட்டம் பெறுவதற்காகச் சென்றபோதே இந்த அனர்த்தத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.

கனடாவின் வான்கூவர் நகரில் மது போதையில் வாகனம் ஓட்டியவரின் கவனக்குறைவால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதேவேளை உயிரிழந்த இளைஞர் கலிபோர்னியாவிலுள்ள ஆப்பிள் நிறுவனத்திலும் பணிபுரிந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் உயர் கல்விக்காக சென்ற இளையர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உயிரிழந்த இளைஞனின் உடல் நேற்றியதினம் (11) இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு இளைஞன் கொலை.. சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாலிநகரில் இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் 23 வயதான இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.இச்சம்பவம் நேற்று முன்தினம் (10-07-2023) இடம்பெற்றுள்ளது.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பான மல்லாவி பொலிஸார் – குற்றப்புலனாய்வுத் துறையினர் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.இந்த நிலையில், சந்தேக நபர்கள் 4 பேரும் மல்லாவி பொலிஸார் நேற்றைய தினம் (11-07-2023) கைது செய்திருந்தனர்.

அவர்களில் மூவர் நேற்றும், ஒருவர் இன்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.சந்தேகநபர்கள் 4 பேரையும் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த கொலைக்கு இடியன் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

புதிய சாதனை படைத்த இலங்கை வீராங்கனை!!

இலங்கை..

தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்று வரும் 25வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையின் கயந்திகா அபேரத்னே மற்றும் தில்ஹானி லேகம்கே ஆகியோர் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

இதன்படி, பெண்களுக்கான 1,500 மீற்றர் போட்டியில் அபேரத்ன 04 நிமிடம் 14.39 வினாடிகளில் ஓடி வெண்கலப் பதக்கத்தையும், பெண்களுக்கான ஈட்டி எறிதலில் லெகாம்கே 60.93 மீற்றர் தூரத்தை எறிந்து இலங்கைக்கான புதிய சாதனையை படைத்ததுடன் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

அபேரத்ன தலைமையிலான 13 பேர் கொண்ட இலங்கை தடகள அணி, ஜூலை 09 ஆம் திகதி பாங்காக் சென்றுள்ளது.இந்த அணி ஜூலை 12 முதல் 16 வரை பாங்காக்கில் உள்ள சுபச்சலசை தேசிய விளையாட்டரங்கில் நடைபெறும் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கிறது.

பரிதாபமாக உயிரிழந்த இளம் பெண் : பேராதனை மருத்தவமனையின் மர்மமான செயற்பாடு!!

பேராதனையில்..

பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட யுவதியின் மரணமடைந்த சம்பவம் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 21 வயதான சமோதி சங்தீபனி கடந்த திங்கட்கிழமை வயிற்றுப்போக்கு காரணமாக கெட்டபிட்டிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அன்றைய தினம் இரவு அந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற அவர், நேற்று முன்தினம் காலை பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 2 ஊசிகள் ஏற்றப்பட்டுள்ளதனை தொடர்ந்து கை கால்கள் நீல நிறமாக மாறி, கீழே வீழ்ந்ததாக சமோதி சங்தீபனியின் தாயார் தெரிவித்தார். கண்கள், வாய் எரிவதாக கூறிய சமோதி எழுந்து நீர் இடத்திற்கு சென்றுள்ளார்.

தனக்கே ஏதோ நடக்கப்போவதாக அவர் தாயிடம் கூறிய நிலையில் கீழே விழுந்துள்ளார். உடனடியாக வந்த தாதி அவரை மருத்துவமனை படுகைக்கு கொண்டு சென்றவுடன் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் ஊசியில் பிரச்சினை இருப்பதாக சங்தீபனியின் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர். நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பலாம் என கூறப்பட்டதன் பின்னர் 2 ஊசிகள் ஏற்றப்பட்டதன் பின்னணி தொடர்பில் குழப்பமாக இருப்பதாக யுவதியின் சகோதரன் தெரிவித்துள்ளார்.

இறுதியான தங்கையின் உடலை பார்க்கும் போது வயிற்று பகுதி வீக்கம் ஏற்பட்டிருந்தது. அவருக்கு எவ்வித உடல் உபாதைகளும் காணப்படவில்லை. ஊசியிலேயே மர்மம் உள்ளதென குடும்பத்தினர் குறிபபிட்டுள்ளனர்.

இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்பவர்களுக்கான செய்தி : தங்க விலையில் ஏற்பட்ட சடுதியான மாற்றம்!!

தங்கம்..

நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(12.07.2023) தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.

இதன்படி இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலை 610,466 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,540 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 172,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், 22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 158,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 18,850 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 150,800 ரூபாவாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது.

எனினும் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் காதலிக்காக கார் மற்றும் தொலைபேசியை திருடிய காதலனுக்கு ஏற்பட்ட கதி!!

அவிசாவளையில்..

அவிசாவளை – ஹன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தித்தெனிய பிரதேசத்தில் சுமார் 68 லட்சம் ரூபாய் பெறுமதியான கார் மற்றும் சுமார் 11000 ரூபா பெறுமதியான கையடக்க தொலைபேசியை திருடிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 8ஆம் திகதி சம்பவம் தொடர்பில் புத்தல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அதற்கமைய 9ஆம் திகதி பல்வத்த பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் ஓட்டுநர் சோதனைக்காக காரின் உரிமையாளருடன் சென்றுள்ளார். அங்கு, காரில் ஏதோ சத்தம் கேட்டது என்று கூறியுள்ளார்.

அதனால் காரில் இருந்து இறங்கி, சத்தம் கேட்ட இடத்தை சோதனை செய்யுமாறு உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார் .உரிமையாளர் சோதனையிட்ட போது சந்தேக நபர் காரை ஓட்டிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.