கர்ப்பிணி மனைவியும் கணவனும் துடிதுடித்து பலி.. கதறித் துடித்த உறவினர்கள்!!

திண்டுக்கல்லில்..

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பள்ளப்பட்டியில் வசித்து வருபவர் 27 வயது சுரேஷ். இவரது மனைவி 24 மனைவி காளீஸ்வரி . இவர் ஆறு மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் சுரேஷ் திருப்பூரில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

காளீஸ்வரிக்கு பள்ளபட்டியில் வளைகாப்பு நிகழ்த்திவிட்டு சுரேஷும் – காளீஸ்வரியும் தங்களது பெண் குழந்தை அபித்ரா ஸ்ரீயுடன் பைக்கில் திருப்பூருக்கு வந்து கொண்டிருந்தனர்.

அப்போது ரெட்டியார்சத்திரம் அருகே கதிரணம்பட்டி என்ற இடத்தில், திருச்செந்தூரில் இருந்து தாராபுரம் நோக்கி சென்ற கார் இவர்களது பைக்கில் அசுர வேகத்தில் மோதியது. அ. இந்த கோர விபத்தில் கணவன் , மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

குழந்தை அபித்ரா ஸ்ரீ படுகாயங்களுடன் சிகிச்சைக்காக திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து ரெட்டியார்சத்திரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காதலிக்க மறுத்த இளம்பெண்ணை உயிரோடு புதைத்த இளைஞர்!!

ஆஸ்திரேலியாவில்..

ஜாஸ்மின் கவுர் – தாரிக்ஜோத் சிங்ஜாஸ்மின் கவுர் – தாரிக்ஜோத் சிங்குற்றவாளி வாக்கு மூலத்தின் அடிப்படையில் ஜாஸ்மின் உடலை போலீசார் கண்டுபிடித்த சம்பவம், படத்தில் நடப்பதை போன்று இருந்தது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம்பெண்ணை அவரது முன்னாள் காதலர் பழி வாங்கு நடவடிக்கையாக உயிருடன் புதைத்து கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜாஸ்மின் கவுர் என்ற 21 வயதாகும் நர்ஸிங் மாணவி ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் படித்து வந்தார். அவருக்கும், தாரிக்ஜோத் சிங் என்பவருக்கும் இடையே 2 ஆண்டுகளுக்கு முன்பாக காதல் ஏற்பட்டுள்ளது.

பின்னாளில் இருவருக்கும் இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியுள்ளது. ஒரு கட்டத்தில் தாரிக்ஜோத்தை ஜாஸ்மீன் தனக்கு வேண்டாம் என்று ஒதுக்கியுள்ளார்.

இருப்பினும், ஜாஸ்மின் மீது வெறியாக இருந்த தாரிக்ஜோத் சிங், தன்னை வேண்டாம் என ஒதுக்கும் ஜாஸ்மினை பழிவாங்க கடந்த 2021 ஆம் ஆண்டு காரில் கடத்திக் கொண்டு சென்றுள்ளார்.

அப்போது 4 மணிநேரமாக காருக்குள்ளே இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தாரிக்ஜோத் சிங், முடிவில் கேபிள் வயர்களால் ஜாஸ்மினை கட்டிப்போட்டு, அவரை குழி ஒன்றில் இறக்கி உயிருடன் புதைத்த விட்டார்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது தாரிக்ஜோத் சிங் தனது குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார். இந்த கொடூரமான கொலை சம்பவம் குறித்த தகவல்கள் ஆஸ்திரேலியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்த விவகாரத்தில் குற்றவாளி தாரிக் ஜோத் சிங்கிற்கு மிகக்கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று உயிரிழந்த ஜாஸ்மின் கவுரின் குடும்பத்தினர் வலியுறுத்தினர். தாரிக்ஜோத் சிங்கிற்கு ஆயுள் தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

தனக்கு முன் திருமணம் செய்ததால் ஆத்திரம் – தம்பியை கொன்ற அண்ணனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

நெல்லையில்…

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே தனக்கு முன்பாக திருமணம் செய்ததால் ஏற்பட்ட தகராறில் தம்பியை கொலை செய்த அண்ணனுக்கு ஆயுள்தண்டனை வழங்கி நெல்லை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது .

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள இளையநயினார்குளம் வடக்கூரை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது அண்ணன் தானுசெல்வம். இவர்கள் இருவரும் கூலி தொழில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அண்ணன் தாணு செல்வத்திற்கு திருமணம் நடக்கும் முன்பாகவே தம்பி அய்யப்பன் அனிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதனால் அண்ணன் தம்பி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு தனக்கு முன்பாக நீ எப்படி திருமணம் செய்யலாம் என அண்ணன் தாணு செல்வம் தம்பியிடம் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றி கைகலப்பாகியுள்ளது .

இதில் ஆத்திரம் அடைந்த அண்ணன் தாணு செல்வம், தம்பி அய்யப்பனை வெட்டி கொலை செய்தார். இது சம்மந்தமாக ராதாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தாணு செல்வத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வழக்கு நெல்லை மாவட்ட 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம், தாணு செல்வத்திற்கு ஆயுள் தண்டனையும் 1000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

நடிகையின் தலையை உடைத்த பெண்.. போலிசார் தீவிர விசாரணை!!

கன்னடத்தில்..

நிலத்தகராறு காரணமாக பிரபல கன்னட நடிகை அனு கவுடாவை கடுமையாக தாக்கிய பெண் உட்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கன்னடத்தில் பிரபல நடிகையாக இருப்பவர் அனு கவுடா.

42 வயதான இவர் நடிப்பில் ஆர்வம் காட்டி தற்போது வரை நடித்து வருகிறார். சிஷ்யா, ஹுடுகரு, குரு, பஜ்ரங்கி, கெம்பேகவுடா என சில கன்னட படங்களில் துணை நடிகையாக நடித்த இவர், அவ்வப்போது சில சீரியல்களிலும் தோன்றியுள்ளார்.

இந்த சூழலில் தற்போது பெங்களுருவில் வசிக்கும் இவர்க்கு தனது சொந்த ஊரான ஷிவமொகாவின் ஒசநகரில் என்று சொந்தமாக நிலம் உள்ளதாக கூறப்படுகிறது. சாகர் தாலுகா கஸ்பாடி கிராமத்தில் இருக்கும் இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை இவர் பெற்றோர் கவனித்து வருகின்றனர்.

இதனால் இவரும் தனது வேலையில் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் அனு கவுடாவின் பெற்றோருக்கும், அதே கிராமத்தில் வசிக்கும் நீலம்மா, மோகன் ஆகியோருக்கும் இடையே இந்த நிலம் குறித்து பிரச்னை எழுந்துள்ளது.

தொடர்ந்து இந்த பிரச்சனை பெரிதாகவே, அனு கவுடா பெங்களுருவில் இருந்து தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது தனது பெற்றோரிடம் தகராறு செய்த நீலம்மா, மோகனை சந்தித்து இவர் பேசியுள்ளார்.

இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது கைகலப்பாக மாறவே, நீலம்மாவும், மோகனும் சேர்ந்து அனுவை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் அனுவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அனு சாகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், பாதிக்கப்பட்ட அனு இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து நீலம்மா, மோகனை காவல் நிலையம் அழைத்து விசாரித்து வருகின்றனர். நிலத்தகராறு காரணமாக பிரபல கன்னட நடிகை அனு கவுடா கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் நம்பர் 1 பணக்கார பிச்சைக்காரர் : அவரது மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில்..

இந்தியாவின் மும்பை சேர்ந்த பிச்சைக்காரர் பாரத் ஜெயின் ₹7.5 கோடி ரூபாய் நிகர சொத்து மதிப்புடன் உலகின் முதல் பணக்கார பிச்சைக்காரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

பொதுவாக பிச்சை எடுப்பவர்கள் என்றால் நம்மில் உருவாகும் முதல் பிம்பம் அவர்கள் குறித்த உருவ தோற்றமும், அவர்களின் ஏழ்மையான பொருளாதார நிலையும் தான். ஆனால் மும்பை சேர்ந்த பாரத் ஜெயின்(Bharat Jain) என்ற பிச்சைக்காரர் ஒருவர் நம்முடைய இந்த பிம்பத்தை சுக்குநூறாக உடைத்து எறிந்துள்ளார்.

மோசமான பொருளாதார நிலை காரணமாக பாரத் செயின் பள்ளிப்படிப்பை தொடர முடியவில்லை, மும்பை வீதிகளில் பிச்சை எடுக்க தொடங்கியுள்ளார். சத்ரபதி சிவாஜி டெர்மினல், ஆசாத் மைதானம் மற்றும் மும்பையின் பல தெருக்களில் பிச்சை எடுக்கும் பாரத் செயின் ஒரு நாளைக்கு மக்கள் தயவில் சுமார் 2000 முதல் 2500 ரூபாய் வரை வசூல் செய்கிறார்.

அதனடிப்படையில் மாதத்திற்கு 60,000 முதல் 75,000 வரை பிச்சை எடுப்பதன் மூலம் பாரத் செயின் வசூல் செய்கிறார். இவ்வாறு பிச்சை எடுத்து பிச்சை எடுத்து பாரத் ஜெயின் தற்போதைய நிகர சொத்து மதிப்பு ரூ 7.5 கோடியாகும்.

எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையின் தகவல் படி, மும்பை வீதிகளில் பிச்சை எடுக்கும் பாரத் ஜெயின் உலகின் முதல் பணக்கார பிச்சைக்காரர் என தெரியவந்துள்ளது. பாரத் ஜெயின் திருமணமானவர் இவரது குடும்பத்தில் மனைவி, இரண்டு மகன்கள், தந்தை மற்றும் சகோதர் உள்ளனர்.

அவரது இரண்டு மகன்களும் கான்வென்ட்டில் பள்ளி படிப்பை முடித்துள்ளனர். அத்துடன் இவர்களுக்கு மும்பையில் 1.2 கோடி மதிப்புள்ள 2 படுக்கையறைகள் கொண்ட பிளாட் வீடு உள்ளது, மேலும் மாதம் 30 வருமானம் தரக்கூடிய இரண்டு கடைகள் மும்பை தானே பகுதியில் உள்ளது.

பாரத் ஜெயின் தற்போது தன்னுடைய குடும்பத்துடன் பரேலில் உள்ள ஒற்றை படுக்கையறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார். கோடிகளுக்கு சொந்தக்காரராக மாறிய பின்னும் மும்பை வீதிகளில் பாரத் செயின் பிச்சை எடுத்து வருகிறார்.

காய்ச்சலுக்கு ஊசி போட்ட மாணவனுக்கு நேர்ந்த சோகம்!!

திருப்பத்தூரில்…

திருப்பத்தூர் வாணியம்பாடியை அடுத்த ஜொடாங்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சக்கரவர்த்தி. இவரது மகன் சூரிய பிரகாஷ் (13) நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்து உள்ளான்.

சூரிய பிரகாஷுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அருகில் உள்ள நாயணசெருவு பகுதியில் ஒரு மருத்துவ கிளினிக்கு சென்று உள்ளார். அங்கு மருத்துவராக கோபிநாத் என்பவர் இருந்து உள்ளார். சிறுவனுக்கு, கோபிநாத் தவறான ஊசி போட்டதாக கூறப்படுகிறது.

இதனால் வீட்டிற்கு சென்றதும் மாணவனுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு மாணவனை கொண்டு சென்றனர்.

அவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தந்தை இது குறித்து உடனடியாக திம்மாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் மருத்துவமனைக்கு சென்ற காவல் துறையினர் மாணவனின் உடலை கைப்பற்றி உடற் கூராய்விற்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோபிநாத் மீது சந்தேகம் ஏற்பட்ட நிலையில் அவரை பிடித்து ஊசி போடப்பட்டது குறித்து விசாரித்தனர். அப்போது தான் விஷயம் வெளியே வந்தது. கோபிநாத், லேப் டெக்னீஷியனுக்கு படித்து விட்டு, கடந்த 10 ஆண்டுகளாக சிகிச்சையளித்து வந்தது தெரிய வந்தது. இது குறித்து திம்மாம்பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து போலி மருத்துவர் கோபிநாத்தை கைது செய்தனர்.

சக்கரவர்த்திக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர். அதில் ஒரே மகனான சூரிய பிரகாஷ் போலி மருத்துவரின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற போலி மருத்துவர்களை அரசு கண்டுபிடிக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

கண்களை கட்டி உயிருடன் புதைக்கப்பட்ட மாணவி.. காதலன் செய்த கொடூரம்!!

ஆஸ்திரேலியாவில்..

ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவி ஜாஸ்மீன் கவுர்(21).

இவர் நர்சிங் படித்து வந்துள்ளார். இந்நிலையில், 2021ம் ஆண்டு மார்ச் மாதம் ஜாஸ்மீன் கவுரின் முன்னாள் காதலன் தாரிக்ஜோத் சிங்கால் கடத்தப்பட்டு சுமார் 650 கி.மீ. காரில் கடத்தி செல்லப்பட்டு தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தின் ஃபிளிண்டர்ஸ் ரேஞ்சஸ் மலை பகுதியில் அழைத்து சென்று உயிருடன் புதைத்துள்ளார்.

இந்த கொடூர கொலை தொடர்பான அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு தாரிக்ஜோத் சிங்கும், ஜாஸ்மீன் கவுரும் காதலித்து வந்துள்ளனர்.

இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஜாஸ்மீன் கவுர் காதலுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். அப்படி இருந்த போதிலும் காதலன் பேசும் படி ஜாஸ்மீனை தொந்தரவு செய்துள்ளார். ஆனாலும், ஜாஸ்மீன் அவருடன் பேச மறுத்துவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர், ஜாஸ்மீனை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி, அடிலெய்டில் பயிற்சி செவிலியராக பணியாற்றி வந்த அவரை காரில் கடத்தி சுமார் 650 கி.மீ. தூரத்திற்கு ஓட்டிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து ஃபிளிண்டர்ஸ் மலைப்பகுதிக்கு அழைத்து சென்று கழுத்தை அறுத்து கண்களை கட்டி அப்படியே கல்லறையில் உயிருடன் புதைத்துள்ளார். விசாரணையின் போது தாரிக்ஜோத் சிங் குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தாலும், கொலை குறித்த கொடூரமான விவரங்கள் உச்ச நீதிமன்றத்தில் இறுதிக்கட்ட விசாரணையில் வெளி வந்துள்ளது.

தாரிக்ஜோத் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என கூறப்படுகிறது.

தொலைபேசியை பறித்த அதிபர்.. விபரீத முடிவெடுத்த பாடசாலை மாணவி!!

அனுராதபுரத்தில்..

அனுராதபுரம் – கலென்பிடுனுவெவ பொலிஸ் பிரிவில் விபரீத முடிவினால் உயிரிழந்த பாடசாலை மாணவியின் மரணத்திற்கான காரணத்தை பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

அனுராதபுரம் – கலென்பிடுனுவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுருலு நிக்கா லேக் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் விஷம் அருந்தியதன் காரணமாக ஆபத்தான நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்திருந்தார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட 15 வயதுடைய மாணவி அப்பகுதியில் உள்ள பாடசாலையில் கல்வி கற்பவராவார். குறித்த மாணவி பாடசாலைக்கு வீட்டில் உடைந்து காணப்பட்ட தொலைபேசியை பெற்றோருக்கு தெரியாமல் திருத்தி, சிம் அட்டையொன்றினையும் வாங்கி செலுத்தி இளைஞரொருவருக்கு பாடசாலையில் வைத்து கதைத்து வந்துள்ளார்.

இதனை அவதானித்த அதிபர் உடனடியாக மாணவியை எச்சரித்து தொலைபேசியை பறித்து, நாளைய தினம் பாடசாலைக்கு பெற்றோரை அழைத்து வருமாறு கூறியுள்ளார்.

இதன் காரணமாக மனம் உடைந்த மாணவி வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பூச்சி மருந்தினை அருந்தி தவறான முடிவை எடுத்துள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். இந்த மாணவியின் மரணம் தொடர்பில் தந்தையான எஸ்.ஜி.சிரிசேன வாக்குமூலம் வழங்கியுள்ளதுடன், மாணவியின் தற்கொலைக்கு தொலைபேசி பாவனையே காரணம் என்றும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், தன்னை போன்று எதிர்காலத்தில் எந்தவொரு தந்தையும் பிள்ளையை இழக்கக்கூடாது எனவும், பிள்ளைகளிடமிருந்து தொலைபேசி பாவனையை முற்றான அகற்றுமாறும் ஏனைய பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மோட்டார் சைக்கிள் ரேஸ் போட்டியை பார்வையிட சென்ற இளைஞனுக்கு நேர்ந்த சோகம்..!

கற்பிட்டியில்..

கற்பிட்டியில் வீதி விபத்துச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.கற்பிட்டி, பள்ளிவாசல்துறை பகுதியில் நேற்றிரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கற்பிட்டி திகழி, ஏத்தாளையைச் சேர்ந்த சஹாப்தீன் சல்மான் (வயது 25) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிளும், சிறிய ரக லொறியொன்றும் கற்பிட்டி பள்ளிவாசல்துறை கண்டல்குடா பாலத்திற்கு அருகே மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதன்போது அங்கிருந்தவர்கள் அவ் இளைஞனை சிகிச்சைக்காக கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின் அவர் அங்கிருந்து புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துச் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் கற்பிட்டி, குறிஞ்சிப்பிட்டியில் நேற்று (07) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் ரேஸ் போட்டியை பார்வையிட்ட பின் தனது வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த போதே இவ் விபத்திற்கு முகம் கொடுத்துள்ளார் என கூறப்படுகிறது.

உயிரிழந்த இளைஞனின் ஜனாஸா புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விபத்துச் சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவி, குழந்தைகள் கொலை செய்த நபருக்கு இங்கிலாந்தில் 40 ஆண்டுகள் சிறை!!

கேரளாவில்..

கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சு. இவர் இங்கிலாந்தின் என்.ஹெச்.எஸ் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றிவந்தார். அதன் காரணமாக தன் கணவர் சாஜு (50), இரண்டு குழந்தைகளுடன் இங்கிலாந்தின் கெட்டரிங் பகுதியில் வசித்துவந்தார். இந்த நிலையில், கடந்த டிசம்பர் 15, 2022 அன்று பணிக்கு அஞ்சு வரவில்லை.

தொலைபேசியிலும் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அதனால், அவர் வசித்த இல்லத்துக்குச் சென்று சக ஊழியர்கள் பார்த்தபோது அஞ்சுவும் அவரின் இரண்டு குழந்தைகளும் மூர்ச்சையற்று கிடந்திருக்கின்றனர். உடனே, இது தொடர்பாக காவல்துறைக்கு தகவலளிக்கப்பட்டு மூன்று பேரும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

அஞ்சுவையும் அவரின் இரண்டு குழந்தைகளையும் பரிசோதித்த மருத்துவர்கள், மூன்று பேரும் மூச்சுத் திணறி இறந்திருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து, காவல்துறை வழக்கு பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கியது. அப்போதுதான் அஞ்சுவின் கணவர் சாஜு அவரின் மனைவி மற்றும் குழந்தைகளைக் கொலைசெய்திருப்பது தெரியவந்தது.

விசாரணையில், அவர் தன்னுடைய மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாகச் சந்தேகித்ததாகவும், குடிபோதையில் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாகவும் தெரிவித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த வழக்கு இங்கிலாந்தின் நார்த்தாம்டன் கிரவுன் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “நீங்கள் உங்கள் மனைவியின் உயிரைப் பறிக்கும்போது, ​​உங்கள் சிறு குழந்தைகள் தங்கள் தாயிக்காக கதறினர். அவர்கள் நேரில் கண்ட சாட்சிகளா என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது.

ஆனால், அவர்கள் என்ன நடக்கிறது என்பதைப் பார்த்தவர்கள். அவர்களின் தாய் உங்களால் காயப்படுத்தப்படுகிறார் என்பதை பார்த்திருப்பார்கள்” என்றார். மேலும் இந்த வழக்கில் சாஜு, மனைவிமீது சுமத்திய குற்றங்கள் எங்கும் உறுதிசெய்யப்படவில்லை.

மாறாக, சாஜு போனை சோதனையிட்டபோது, மனைவி பணிக்குச் சென்ற பிறகு பல டேட்டிங் ஆப்களைப் பயன்படுத்தியது தெரியவந்தது. இந்த வழக்கில் சாஜுவுக்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்திருக்கிறது.

புதுமணத் தம்பதி தலையை முட்டிய சர்ச்சை.. உறவினர் கைது!!

கேரளாவில்..

போலீஸார், மணப்பெண்ணான சஜ்லாவிடம் வாக்குமூலம் பெற்றனர். அதைத் தொடர்ந்து, பெண்மையை அவமதித்ததாகவும், உடலுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் தொல்லை கொடுத்ததாகவும் சுபாஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் சுபாஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோட்டு பல்லச்சனா பகுதியில் திருமணம் முடிந்து புகுந்த வீட்டுக்குச் சென்ற புதுமணப்பெண் சஜ்லாவின் தலையையும், அவரின் கணவர் சச்சினின் தலையையும், பாரம்பர்ய பழக்கம் என்ற பெயரில் ஒருவர் சேர்த்து முட்டவைத்த சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியது.

கடந்த திங்கள்கிழமை திருமணம் முடிந்து கணவர் வீட்டுக்குப் போனபோது, கணவரின் உறவினரான சுபாஷ் என்பவர் பின்னால் நின்றுகொண்டு, புதுமண தம்பதியின் தலைகளைப் பிடித்து ஒன்றோடு ஒன்று பலமாக மோதச் செய்தார்.

மகிழ்ச்சியாக புகுந்த வீட்டுக்குச் சென்ற சஜ்லா, தலையில் கடுமையான வலியுடன், கண்களில் கண்ணீர் பெருகிய நிலையில் நின்றார். மணமகன், மணமகளின் தலையை முட்டும் சம்பிரதாயம் கொல்லங்கோடு பகுதியில் இருந்துவருவதாகக் கூறப்பட்டது.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து மகளிர் ஆணையம் வழக்குப்பதிவு செய்தது. மேலும் இதுகுறித்து விசாரித்து அறிக்கை அளிக்கும்படி கொல்லங்கோடு போலீஸுக்கு மகளிர் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

விளையாட்டாக மணமக்களின் தலையை லேசாக முட்ட வைக்கும் செயல் அந்தப் பகுதியில் நடப்பது வழக்கம் எனவும், இந்தச் சம்பவத்தில் மணமகளுக்கு வலியும், அதிருப்தியும் ஏற்பட்டதால் விவாதமானதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் போலீஸார் மணப்பெண்ணான சஜ்லாவிடம் வாக்குமூலம் பெற்றனர். அதைத் தொடர்ந்து, பெண்மையை அவமதித்ததாகவும், உடலுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் தொல்லை கொடுத்ததாகவும் சுபாஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் சுபாஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து சஜ்லா கூறுகையில், “கணவர் வீட்டுக்குச் செல்லும் சடங்கின்போது அந்த வேதனையான நிகழ்வு நடந்தது. தலையை முட்டக்கூடாது என அங்கிருந்த என் தங்கை, கணவரின் தங்கையிடம் சொல்லியிருக்கிறார். ஏற்கெனவே சொல்லி வைத்திருப்பதால் இடிக்கமாட்டார்கள் என நான் நினைத்தேன்.

ஆனால் அவர் திடீரென எங்கள் தலையை பிடித்து மோதிவிட்டார். சாதாரணமாக நான் பிறர் முன்னிலையில் அழமாட்டேன். ஆனால், அவர் தலையை பிடித்து மோதியபோது எங்கே நிற்கிறோம் என்ற உணர்வே சிறிது நேரம் இல்லாமல்போனது.

இல்லையென்றால் உடனே அவரை திட்டியிருப்பேன். இப்போதும் எனக்கு சிறிய அளவில் தலையில் வலி இருந்துகொண்டே இருக்கிறது. எந்தப் பெண்ணாக இருந்தாலும் அவரது உடலில் தொட்டு வலி ஏற்படுத்தினால் வருத்தமாகத்தான் இருக்கும்.

நான் சந்தோஷமாக கணவர் வீட்டுக்குள் போகவேண்டும் என நினைத்து வந்தேன். இந்தச் சம்பவத்தால் விளக்குடன் அழுதுகொண்டே புகுந்த வீட்டுக்குள் சென்றேன். அவர் இந்த சம்பவத்துக்கு வருத்தம்கூட தெரிவிக்கவில்லை.

எனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம் இனி இங்கு திருமணம் ஆகிவரும் வேறு பெண்களுக்கு ஏற்படக்கூடாது” என்றார். இதுகுறித்து சஜ்லாவின் கணவர் சச்சின் கூறுகையில், “எங்கள் பகுதில் தலையை மோதும் ஒரு சடங்கு உண்டு என அவர்கள் சொல்கிறார்கள்.

ஆனால், நான் அப்படி எதுவும் கேள்விப்பட்டது இல்லை. லேசாக தலையை சேர்த்து வைத்துவிட்டு விட்டிருந்தால் பிரச்னை இருந்திருக்காது. தலையை பலமாக மோதியதால் வலியில் சஜ்லா அழுதுவிட்டாள்’’ என்கிறார்.

பண்ணை வீட்டில் நடந்த பயங்கரம்.. கழுத்தறுக்கப்பட்ட காதல் தம்பதி!!

திருச்சியில்..

திருச்சி அருகே காதல் திருமணம் செய்த தம்பதி, தோட்டத்து வீட்டில் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காதல் ஜோடியை வெட்டிக்கொன்றது யார் என்பது தெரியவில்லை. போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் பி.மேட்டூர் ஆசாரித்தெருவில் வாழ்ந்து வந்த 29 வயது ராஜ்குமார், சோபனாபுரத்தை சேர்ந்த 20 வயதாகும் சாரதா என்பவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். ராஜ்குமார் சாரதா தம்பதிக்கு குழந்தை இல்லை.

நெல் அறுவடை இயந்திரத்தின் டிரைவரான ராஜ்குமார்,வைக்கோல் சுற்றும் எந்திரம் வைத்துள்ளார். நெல் அறுவடை இயந்திரம், வைக்கோல் இயந்திரத்தை வைத்து பணிகளை செய்து வரும் ராஜ்குமார், சோபனாபுரம் பகுதியில் விஜயசேகரன் என்பவரது 4 ஏக்கர் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயமும் செய்து வந்தார்.

விஜயசேகரனின் தோட்டத்தில் வீடு ஒன்றும் உள்ளது. ராஜ்குமார் அந்த வீட்டில் தங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த ஞாயிறு அன்று ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி சாரதா ஆகியோர் பி.மேட்டூர் பகுதியில் வைக்கோல் சுற்றும் பணிக்கு சென்று வந்துள்ளார்கள்.

வேலைக்கு சென்று வந்த பின்னர் தம்பதி இருவரும் தோட்டத்து வீட்டில் வழக்கம் போல் தூங்கினர். இந்நிலையில் திங்கள்கிழமை காலை 10 மணியளவில் விஜயசேகரன் தோட்டத்து வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

அப்போது, ராஜ்குமாரும், சாரதாவும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் உடனடியாக உப்பிலியபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

அதன் பேரில் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இரட்டை கொலை தொடர்பாக விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் சில தகவல்கள் தெரியவந்துள்ளது.. ராஜ்குமாரும் சாரதாவும் தோட்டத்து வீட்டின் வராண்டாவில் கயிற்றுக்கட்டிலில் படுத்து தூங்கி உள்ளனர்.

அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் கத்தியால் அவர்களது கழுத்து, தலை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியிருக்கிறார்கள். ஆனால் கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்ற விவரங்கள் போலீசாருக்கு தெரியவரவில்லை.

இந்நிலையில் உப்பிலியபுரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வருகிறார்கள். கொடுக்கல்-வாங்கல், முன்விரோதம், நிலப்பிரச்சினை, தொழில் போட்டி உள்ளிட்ட காரணங்களால் கொலை செய்யப்பட்டார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தோட்டத்து வீட்டுக்கு செல்லும் பிரதான சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்த்த போலீசார், அதில் உள்ள சந்தேக நபர்கள் யார் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த கொலையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தனிப்படை அமைத்தும் தேடி வருகின்றனர். காதல் தம்பதி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நான்கு மாத கர்ப்பிணி மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவன்!!

கடலூரில்..

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கர்ப்பமான மனைவி மீது சந்தேகமடைந்த கணவன், மனைவியின் கழுத்தை பிளேடால் அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் அருகே கீழ் அனுப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியான சிலம்பரசனுக்கும், மயிலாடுதுறை மாவட்டம் அரசூர் கிராமத்தைச் சேர்ந்த ரோஜா என்பவருக்கும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் 4 மாத கர்ப்பிணியாக இருந்த ரோஜா மீது சிலம்பரசனுக்கு சந்தேகம் ஏற்பட்டு நாள்தோறும் தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில் சிலம்பரசன் வீட்டில் இருந்த பிளேடால் ரோஜாவின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதில் படுகாயமடைந்த ரோஜா ரத்த வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கிராம மக்கள் கிள்ளை போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் விரைந்து சென்ற போலீசார் ரோஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த வழக்கு குறித்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், சிதம்பரம் உதவி காவல் கண்காணிப்பாளர் ரகுபதி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ரோஜாவை கொலை செய்துவிட்டு தலைமறைவான சிலம்பரசனை தேடி பிடித்த போலீசார் விசாரணை நடத்தியதில், நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் ரோஜாவுக்கு திருமணத்தில் சம்மதம் இல்லை என்றும், அடிக்கடி செல்போனில் சிலரிடம் பேசி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

திருமணமான சில மாதங்களிலேயே புதுப்பெண்ணை கணவன் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் சிதம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கோர விபத்தில் மூவருக்கு நேர்ந்த சோகம்!!

பதுளையில்..

பதுளையில் இடம்பெற்ற வீதிவிபத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பதுளை கெப்பட்டிபொல பிரதான வீதியில் இன்று முற்பகல் இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கந்தேகெதரவிலிருந்து பதுளை நோக்கி பயணித்த சிற்றூந்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறே விபத்துக்கு காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மிஸ் கலிபோர்னியா பட்டத்தை வென்ற இலங்கை யுவதி!!

இலங்கையில்..

அமெரிக்க வாழ் இலங்கை யுவதியான தாலியா பீரிஸ் மிஸ் கலிபோர்னியா டீன் யு.எஸ்.ஏ 2023 (Miss Teen USA 2023) எனும் பட்டத்தை வென்றுள்ளார்.

இவருடனான சந்திப்பு தொடர்பில், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் Julie Chung தனது டுவிட்டரில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இன்று நான் புதிய மிஸ் கலிபோர்னியா டீன் தாலியா பீரிஸை சந்தித்தேன், கிரீடம் அணிந்த முதல் அமெரிக்க வாழ் இலங்கையர் தாலியா அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையே கலை மற்றும் அதற்கு அப்பால் உள்ள உறவுகளை உருவாக்க தனது தளத்தை பயன்படுத்துகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வந்துள்ள உலகின் மிகவும் ஆபத்தான பறவை!!

இலங்கையில்..

‘உலகின் மிகவும் ஆபத்தான பறவை’ என்று பெயரிடப்பட்டுள்ள இரண்டு காசோவரி பறவைகள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த பறவைகள் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து MH179 மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நேற்று முன்தினம் (05.07.2023) கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

தாய்லாந்திலிருந்து நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள குறித்த காசோவரி (Cassowary) பறவைகளை இன்னும் ஒரு மாதத்தின் பின்னர், பொதுமக்கள் பார்வையிட சந்தர்ப்பம் வழங்கப்படும் என தெஹிவளை மிருக காட்சிசாலை தெரிவித்துள்ளது.

உலகின் இரண்டாவது பெரிய மற்றும் ஆபத்தை விளைவிக்க கூடிய பறவைக் கூட்டத்தில், 9 மாதமான ஆண் கெசோவரி பறவையொன்றும், இரண்டு பெண் காசோவரி பறவைகளும் உள்ளதாக தெஹிவளை மிருக காட்சிசாலையின் பிரதி பணிப்பாளர் தினுசிக்கா மானவடு தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த பறவைகள் தற்போது, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.