இலங்கையில் இன்று முதல் வட்டி விகிதங்கள் குறைப்பு!!

இலங்கையில்..

நாட்டில் இன்று முதல் கிரெடிட் கார்ட்களுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்படுகின்றன.

இலங்கை மத்திய வங்கியினால் அண்மையில் நாணயக் கொள்கை தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, வட்டி விகிதங்களைக் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கையின் பல வர்த்தக வங்கிகள் அறிவித்துள்ளன.

கிரெடிட் கார்ட்களுக்கான 36 சதவீத வட்டி விகிதம் அடுத்த மாதம் முதல் 34 சதவீதமாக குறைக்கப்படும் என வங்கிகள் தெரிவித்துள்ளன. இதேவேளை, கடந்த வாரம், நாட்டில் கடன் அட்டைகளின் பாவனை தொடர்பான தரவுகளை மத்திய வங்கி வெளியிட்டது.

அதன்படி, ஏப்ரல் மாதத்தில் நாட்டில் செயற்பாட்டில் உள்ள கிரெடிட் கார்ட்களின் எண்ணிக்கை 1,929,984 ஆக இருந்தது. அதேசமயம் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் மொத்தம் 1,952,991 கிரெடிட் கார்டுகள் பயன்பாட்டில் இருந்தன.

அதன்படி, நாட்டில் செயல்பாட்டில் உள்ள கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை சில மாதங்களில் 23,000க்கும் மேல் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் வியக்கத்தக்க வாழைமரம் : ஒரு மரத்தில் இத்தனை குலைகளா!!

நுவரெலியாவில்..

நுவரெலியா – ஐபொரஸ்ட் கந்தப்பொலயிலுள்ள தோட்டத்திலேயே வாழைமரம் ஒன்று பலரையும் அதிசயிக்க வைத்துள்ளது.

இந்த வாழைமரம் குலை போட்டுள்ளதுடன் அந்தக் குலையின் கீழ் பகுதியில் மேலும் 4 குலைகள் தோன்றியுள்ளது.இந்நிலையில் இந்த விசித்திர வாழைமரம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவதாய் அமைந்துள்ளது.

இந்நிலையில் அந்த வாழைமரத்தின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இலங்கையில் சோகத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மாணவனின் செயல்.. கண்ணீரில் உறவினர்கள்!!

இலங்கையில்..

இலங்கையில் பாடசாலை மாணவன் ஒருவரின் செயற்பாடு நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.தனது தாய் உயிரிழந்த போதும், பாடசாலை அணிக்காக விளையாடி வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார்.

கொழும்பு இசிபத்தன கல்லூரியை சேர்ந்த ஹேஷான் ரந்திமால் என்ற மாணவனே வேதனையுடன் கல்லூரிக்காக வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார்.19 வயதுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான ரக்பி போட்டித்தொடர் நடைபெற்று வருகிறது.

கொழும்பு இசிபத்தன கல்லூரி அணிக்கும் கொழும்பு புனித சூசையப்பர் கல்லூரி அணிக்கும் இடையிலான போட்டி நேற்று நடைபெற்றது.இந்தப் போட்டியில் ஹேஷான் ரந்திமால் பங்கேற்ற இசிபத்தன கல்லுரி வெற்றி பெற்றுள்ளது. போட்டி முடிவடைந்ததும் அணியின் சக மாணவர்களை ஹேஷானுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், அனைவரும் இணைந்து அவரைஅழைத்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் மைதானத்திலிருந்து இருந்த ஏனைய மாணவர்களுக்கு வேதனை அளித்திருந்தது. எனினும் தாய் உயிரிழந்திருந்த போதும் கல்லூரியின் வெற்றிகாக விளையாடிய மாணவனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை, இனிபத்தன மற்றும் புனித சூசையப்பர் அணியின் வீரர்கள் ஹேஷானின் வீட்டுக்கு சென்று அவரின் தாயாருக்கு அஞ்சலி செலுத்தினர்.ஹேஷானின் தாயார் நேற்று காலமானதுடன், அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை இடம்பெறவுள்ளது.

இலங்கை மாணவிக்கு தென் இந்திய தொலைக்காட்சியில் கிடைத்த வாய்ப்பு!!

இந்தியாவில்…

இந்தியாவின் பிரபல தென் இந்திய தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடவுள்ள பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பை மலையக மாணவியான ஆஷினி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கண்டி மாவட்டத்துக்குட்பட்ட புசல்லாவை, நயப்பன தமிழ் வித்தியாலய மாணவியான ஆஷினி இன்று தமிழகம் நோக்கி புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவி ஆஷினி இயல்பாகவே சிறப்பாக பாடும் திறனை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

நயப்பன தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்ற பழைய மாணவர் சங்க கூட்டத்தின் நிகழ்வொன்றின்போது குறித்த மாணவி பாடிய பாடல் வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

மலையகத் தமிழர்களின் அடையாளமாக அதுவும் பெருந்தோட்ட தொழிலாளியின் பிள்ளையொருவர் சர்வதேச ரீதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள குறித்த இசை நிகழ்வில் பங்கேற்பது மலையக மண்ணுக்கு பெருமை என சமூக ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர்.

பலரையும் வியப்பில் ஆழ்த்திய ஆண் ஒருவரின் புதிய உலக சாதனை!!

ஸ்பெய்னில்..

ஸ்பெய்னை சேர்ந்த ஆண் ஒருவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை கிறிஸ்டியன் ரொபர்ட்டோ லோபஸ் ரொட்ரிகஸ் என்பவரே படைத்துள்ளார்.

பெண்களின் 2.76 அங்குலம் குதி உயர்ந்த (ஹை ஹீல்ஸ்) பாதணிகளை அணிந்த நிலையில் 100 மீற்றர் தூரத்தை 12.82 விநாடிகளில் ஓடி முடித்து, புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

இதேவேளை ஜேர்மனியை சேர்ந்த அன்ட்ரே ஓர்டோல்வ் 2019 ஆம் ஆண்டில் 14.02 விநாடிகளில் ஓடியமையே, ஹை ஹீல்ஸ் ஓட்டத்தில் இதுவரை சாதனையாக இருந்தது.

இவர் பல்வேறு கின்னஸ் சாதனைகளை படைத்துள்ளார். இந்நிலையில், குதி உயர்ந்த பாதணியுடன் வேகமாக ஓடுவதற்கு தயாராகுவது சவாலாக இருந்தது என கூறியுள்ளார்.

மனிதர்களை பொறாமைப்பட வைத்த நாரைகளின் காதல் கதை.!!

நாரைகள்..

மனிதர்கள் மட்டுமல்ல உயிருள்ள அத்தனை உயிரினங்களுக்கு உணர்வுகள் என்ற ஒரு விடயம் இருக்கின்றது. மனிதர்கள் தான் காதலிப்பார்கள், காதலை தியாகம் செய்வார்கள், காதலுக்காக போராடுவார்கள் என்று ஒரு விடயமில்லை.

அந்தவகையில் காதலுக்கு நாம் ரோமியோ -ஜீலியட் மற்றும் முந்தாஜ், சாஜகான் ஆகியவர்களை கூறுவோம். ஆனால் நாம் தற்போது பார்க்க போகும் கதையில் காதலர்களாக இருப்பவர்கள் மனிதர்கள் இல்லை நாரைகள்.

மலினா – கிளிப்படன் என இரண்டு நாரைகள் மனித இனத்தையே மாற்றியமைக்கக்கூடிய வகையில் வாழ்ந்து காட்டியுள்ளது. சுமார் 17 வருடங்கள் இணைந்து வாழ்ந்து 66 குழந்தைகளுக்கு பெற்றோர்களாக இருந்துள்ளன.

இவைகளின் காதலை தெரிந்துக் கொண்ட அந்த நாட்டு அரசாங்கம் கிளிப்படனனின் வருகைக்காக காத்திருந்த சம்பவம் உலக மக்களிடையயே அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது. அந்த வகையில் அரைகுறையுமாக தெரிந்து கொண்ட மலினா – கிளிப்படன் காதல் கதையை கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.

இலங்கையில் ஆயிரம் ரூபாவை எட்டிய பச்சை மிளகாயின் விலை!!

சந்தையில்..

காய்கறி சந்தையில் ஒரு கிலோ பச்சை மிளகாயின் சில்லறை விலை ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளதாக பொருளாதார மத்திய நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாயின் மொத்த விலையும் 800 முதல் 900 ரூபா வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தைக்கு வரும் பச்சை மிளகாயின் அளவு பெருமளவில் குறைந்துள்ளமையால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த வாரங்களில் 350 முதல் 500 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பச்சை மிளகாய், தற்போது ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளது. இதேவேளை எதிர்வரும் நாட்களில் பச்சை மிளகாயின் விலை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

வறுமையிலும் சாதித்து காட்டிய கிளிநொச்சித் தாய்.!!

இலங்கையில்..

போசாக்கு பற்றாக்குறையின் அடிப்படையில் இலங்கையானது உலகளலாவிய ரீதியில் 6ஆவது இடத்திலும், தெற்காசியாவில் கடுமையான ஊட்டச்சத்து குறைப்பாட்டை சந்திக்கும் நாடுகளில் இரண்டாவது இடத்தையும் பெற்றிருக்கிறது.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்ததால் ஒவ்வொருவரின் உணவு முறையும் பாதிக்கப்பட்டது அதிலும் வறிய குடும்பத்தில் உள்ள குடும்பத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்.

இவ்வாறு போசாக்கில்லாமல் வறுமைக் கோட்டில் வாழ்பவர்களுக்கு கிளிநொச்சியில் வசித்து வரும் ஒரு தாய் சொந்தமாக சத்துமா செய்துக் கொடுத்து வருகிறார். இலங்கையில் கிளிநொச்சி, ஆனந்தநகர் பகுதியில் தாய் தன் சொந்த முயற்சியில் அனைவருக்கும் 10 ஆண்டுகளாக சத்துமா விற்பனை செய்து வருகிறார் வில்வரட்ணம் ராசலட்சுமி.

இடம்பெயர்ந்து வந்த பிறகு கடன் கொடுத்து மேலதிகமாக சோளம், பசளை என்பவற்றைக் கொடுத்து உதவியிருக்கிறார்கள். அவ்வாறு விளையும் சோளத்தை வேறு எங்காவது விற்பதற்கு பதிலாக நாங்களே அனைத்து சத்துக்களும் கொண்ட இந்த சோளத்தில் அனைவருக்கும் பயன்படும் வகையில் சத்துமா செய்யலாம் என்று யோசனை வந்து இதனை செய்ய ஆரம்பித்திருக்கிறார்.

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : நாளைமுதல் குறையும் மின்கட்டணம்!!

இலங்கையில்..

நாளை (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சார கட்டணத்தை 14.2 வீதத்தால் குறைக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

அதன்படி புதிய கட்டண திருத்தத்தின்படி, 0 முதல் 30 அலகு வரையிலான மாதாந்திர நுகர்வு கொண்ட பிரிவினருக்கு அலகிற்கு 30 ரூபாய் என வசூலிக்கப்படும் கட்டணம் 10 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது அந்த பிரிவிற்கு வசூலிக்கப்படும் நிலையான கட்டணமும் 400 ரூபாயில் இருந்து 150 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

60 அலகுகளுக்கு குறைவான பிரிவில் அலகிற்கான கட்டணம் 42 ரூபாயிலிருந்து 32 ரூபாவாகவும், அந்த பிரிவினருக்கு 650 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்ட மாதாந்திர கட்டணம் 300 ரூபாய் ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் 91 முதல் 120 அலகுகளுக்கு இடைப்பட்ட பிரிவுக்கு அலகு கட்டணம், 42 ரூபாயில் இருந்து 35 ரூபாய் ஆகவும், மாதாந்திர நிலையான கட்டணம் 1500 ரூபாயில் இருந்து 1000 ரூபாய் ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

வவுனியாவை நோக்கி பாத யாத்திரையாக பயணித்த பௌத்த பிக்குகள்!!

ருவென்வெலிசாய விகாரையில் இருந்து தமிழர் பகுதியான வவுனியாவில் உள்ள விகாரை நோக்கி பௌத்த பிக்குகள் பாதயாத்திரை ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

அனுராதபுரத்தில் உள்ள வராலற்று சிறப்பு மிக்க ருவென்வெலிசாய விகாரையில் கடந்த 28 ஆம் திகதி வணக்கத்திற்குரிய கல்காமு சாந்தபோதி பௌத்த பிக்கு தலைமையில் ஆரம்பமான குறித்த பாதயாத்திரையானது இன்று (30.06) காலை வவுனியா கண்டி வீதியில் உள்ள விகாரையை வந்தடைந்தது.

அங்கிருந்து வவுனியாவில் தமிழர் பகுதியை கையகப்படுத்தி குடியேற்றம் செய்யப்பட்ட காலபோகஸ்வேவ பகுதியில் உள்ள சபுமல்கஸ்கட விகாரையை சென்றடையவுள்ளது.

குறித்த பாத யாத்திரையில் 50 இற்கு மேற்பட்ட பௌத்த பிக்குகள் மறைந்த பௌத்த பிக்குகளின் கேசம், பற்சின்னம் உள்ளிட்ட புனிதப் பொருட்களுடன் சென்று அதனை அங்கு பார்வைக்கு வைப்பதுடன், எதிர்வரும் போயா தினத்தன்று விசேட பூஜை நிகழ்வையும் நடத்தவுள்ளனர்.

பௌத்த கலைகலாசார பாரம்பரியத்துடன் குறித்த பாதயாத்திரை இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

வவுனியாவில் 400 மில்லியன் டொலர் முதலீட்டில் 200 ஏக்கர் காணியில் சீனி உற்பத்தி நிலையம் : அமைச்சரவை அங்கீகாரம்!!

முதலீட்டை ஊக்குவித்தல் மற்றும் சீனி கைத்தொழிலை ஊக்குவிப்பதில் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக தாய்லாந்தின் Sutech Sugar Industries Ltd நிறுவனத்திற்கு வவுனியா மாவட்டத்தில் பரந்த நிலப்பரப்பை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

400 மில்லியன் டொலர்கள் பெறுமதியான இந்த முக்கியத் திட்டமானது 20% அல்லது 120,000 மெட்ரிக் தொன் சீனியை உற்பத்தி செய்வதன் மூலம் இலங்கையின் சர்க்கரைத் தேவையின் கணிசமான பகுதியை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

200 ஹெக்டேர் பரப்பளவில் குறுங்காடுகளால் சூழப்பட்ட இந்த நிலம் , பசுமை வயல் சர்க்கரை மேம்பாட்டுத் திட்டத்திற்கு அடித்தளமாக நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்கப்படவுள்ளது.

ஆண் பிள்ளையாக வாழ ஆசைப்படுகின்றேன்.. கடிதம் எழுதி வைத்துவிட்டு 14 வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு!!

ராகமவில்..

ராகம – கந்தானை பகுதியில் 14 வயது சிறுமியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இந்த சிறுமி தான் ஆணாக வாழ ஆசைப்படுவதாக கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெண்ணாக பிறந்து வாழ்வது மிகவும் வருத்தமாக உள்ளதாகவும், சிறுவனைப் போல் வாழ விரும்புகிறேன்’ என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆண் நடிகர் ஒருவரை தான் அதிகம் விரும்புவதாகவும், ஆண் குழந்தையாக வாழ விரும்புவதாகவும் அவர் எழுதிய கடிதத்தில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலையில் அடித்துவரப்பட்ட இரும்புப் பெட்டி : திறந்து பார்த்தவருக்கு ஏற்பட்ட நிலை!!

அமெரிக்காவில்..

அமெரிக்காவில் உள்ள கடற்கரை ஒன்றில் அலையில் அடித்துவரப்பட்ட இரும்புப் பெட்டி ஒன்று அமெரிக்கர் ஒருவருக்கு கிடைத்துள்ளது. டெக்சாஸில் உள்ள கடற்கரை ஒன்றில், அலையில் அடித்துவரப்பட்ட பணம், நகை போன்ற விலையுயர்ந்த பொருட்களை வைக்க பயன்படுத்தும் இரும்புப் பெட்டி ஒன்றை 49 வயதான Jace Tunnell என்ற அமெரிக்கர் கண்டெடுத்துள்ளார்.

ஏதோ பொக்கிஷம் கிடைத்துள்ளது என எண்ணிய குறித்த நபர், அதனுள் தங்கம், பணம் ஏதாவது இருக்கும் என்று எண்ணி, அதைத் திறக்க முயன்றுள்ளார். எனினும், அவரால் அதைத் தூக்கமுடியாததால், தன் மகன் உட்பட 3 பேரை வரவழைத்துள்ளார் Jace.

எவ்வளவோ முயன்றும் அந்தப் பெட்டியைத் திறக்கமுடியாததால், மின்சார அரம் கொண்டு அதை வெட்டித் திறந்துள்ளார்கள். இருப்பினும், திறந்தவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது.

காரணம், அந்தப் பெட்டிக்குள், ஈரப்பதத்தை அகற்றுவதற்கு பயன்படும் சிலிக்கா ஜெல் அடங்கிய பாக்கெட் ஒன்று மட்டுமே இருந்துள்ளது. எனினும், பெரிதாக ஏதோ கிடைக்கும் என எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தாலும், தன்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை என்று கூறி விழுந்து விழுந்து சிரித்துள்ளார் Jace.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 300 பயணிகளின் உயிரை காப்பாற்றிய விமானி!!

கட்டுநாயக்கவில்..

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஜப்பானின் நரீட்டா சர்வதேச விமான நிலையத்திற்குப் புறப்பட்ட இலங்கை விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 02 மணித்தியாலங்கள் 25 நிமிடங்களுக்குப் பின்னர் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க நேரிட்டதாக விமான நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இந்த விமானம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான மிகப்பெரிய ஏ.33-0-300 ஏர்பஸ் விமானமாகும். ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 455 கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கடந்த 28ஆம் திகதி இரவு 08.20 மணியளவில் ஜப்பானின் நரிட்டா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது.

ஆனால் இந்த விமானத்தின் சக்கர அமைப்பு வளைந்து செல்வதாக கணனி அமைப்பினால் சுட்டிக்காட்டாததால் விமானி 02 மணித்தியால 25 நிமிட பயணத்தின் பின்னர் மீண்டும் 28 ஆம் திகதி இரவு 10.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க நடவடிக்கை எடுத்தார்.

எரிபொருளை சரியான முறையில் பயன்படுத்திய பின்னர் விமானம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பறந்து பத்திரமாக தரையிறங்கியது. இந்த விமானத்தில் 301 பயணிகள் மற்றும் ஊழியர்கள் இருந்தனர்.

எனினும் ஒருவருக்கும் எவ்வித பாதிக்கும் ஏற்படாத வகையில் 2 மணித்தியாலங்கள் வானில் வட்டமிட்டு தரையிறங்குவதென்பது மிகப்பெரிய சவாலாகும் என கூறப்படுகின்றது.

இந்த நிலையில் விமானி தனது கடமையை சிறப்பான முறையில் முன்னெடுத்துள்ளார் என குறிப்பிடப்படுகின்றது. மற்ற விமானங்கள் மூலம் பயணிகள் ஜப்பானில் உள்ள நரீடாவுக்கு அனுப்பப்பட்டதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாண விபத்தில் உயிரிழந்த இருவர் : முகநூலில் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி வெளியிட்ட பதிவு!!

யாழ்ப்பாணத்தில்..

யாழ் அராலி, வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வெளி பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (29-06-2023) நண்பகல் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 37 வயதான மகேஸ்வரன் மயூரன், அராலி மத்தியைச் சேர்ந்த 29 வயதான ஜெயசுந்தரம் சரோஜன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நேர் எதிராக பயணித்த மோட்டார் சைக்கிள்கள் விபத்தில் இருவர் உயிரிழந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

விபத்தின் பின்னர் யாழ் போதனா வைத்தியசாலை விபத்து சிகிச்சை பிரிவில் படுகாயமடைந்தவர்களின் உயிரைக் காப்பாற்ற வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கடுமையான முயற்சித்த போதும் சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.

இருவரது குடும்பங்கள், உறவினர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், மற்றும் நண்பர்களின் அழுகையும் துயரமும் வைத்தியசாலை விபத்து சிகிச்சை பிரிவுப் பகுதியை சில மணி நேரம் அவல உணர்வை ஏற்படுத்தியது.

வடபகுதியில் உந்துருளி பயணம் மிகவும் அபாயகரமான செயல். அதிகரித்த வேகம், கவனக்குறைவு, என பல தவிர்க்கபட வேண்டிய விடயங்களில் அக்கறை கொள்வதில்லை.

உந்துருளி பயணிக்கும் முன்னர் மிகவும் பாதுகாப்பான பயணம் செய்ய வேண்டும் என தீர்மானம் எடுக்க வேண்டும் அல்லது உந்துருளி பாவனையை கைவிட வேண்டும். என வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கட்டாரில் மர்மமான முறையில் உயிரிழந்த முல்லைத்தீவு இளைஞர்கள்.. தவிக்கும் குடும்பங்கள்!!

கட்டாரில்..

மத்தியகிழக்கு நாடான கட்டாருக்கு வேலைக்காக சென்ற முல்லைத்தீவை சேர்ந்த இரு இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளளதாக அதித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

காட்டாரில் குறித்த இரு இளைஞர்களும் தங்கியிருந்த இடத்திலேயே மர்மமான முறையில் சடலமாக மீட்கப்படுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு நாட்களாக வேலைக்கு வராத காரணத்தால் குறித்த இரு இளைஞர்களும் தங்கியிருந்த அறைக்குள் சென்று பார்த்தபோது இருவரும் சடலமாக காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் விசுவமடு – இளங்கோபுரம் பகுதியை சேர்ந்த 21 வயது சிவகுமார் தர்சன் என்ற இளைஞன் சடலமாக காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குடும்ப வறுமை காரணமாக சிவகுமார் தர்சன் வேலைக்காக கட்டாருக்கு சென்ற நிலையில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எனினும் உயிரிழந்த மற்றைய இளைஞர் தொடபில் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் தமது குடும்ப வறுமையை போக்க வெளிநாட்டுக்கு வேலைதேடிச்சென்ற இளைஞர்கள் உயிரிழந்த சமபவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.