மனைவியிடமிருந்து மகனைக் கடத்திய கணவன்.. இறுதியில் நேர்ந்த சோகம்!!

கன்னியாகுமரியில்..

கன்னியாகுமரி மாவட்டம் மேக்கா மண்டபம் அருகே தந்தையால் கடத்தப்பட்ட 3 வயது சிறுவனை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் மேக்கா மண்டபத்தை அடுத்த பிலாங்காலை பகுதியைச் சேர்ந்த பிபின் – பிரியா தம்பதியின் 3 வயது மகன் ஆத்விக்.

கடமலைக்குன்று பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் காரில் பள்ளிக்குச் சென்ற சிறுவனை, இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் வந்த 20 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்றது.

பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து சிறுவனின் தாய் தக்கலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் சிறுவனின் பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வருவதும், இந்த நிலையில் சிறுவனின் தந்தையே அவரை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, நாகர்கோவில் அருகே பிபினின் நண்பர் வீட்டிலிருந்த சிறுவன் ஆத்விக்கை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

பெற்றோரை நெருக்கிய மகனின் கடன்… விரக்தியில் எடுத்த விபரீத முடிவு!!

திருப்பூரில்..

திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே நீதியம்மாள் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவர் மனைவி அமலோற்பமேரி. இந்தத் தம்பதியின் மகன் சார்லஸ். இவர் திருப்பூரில் பனியன் நிறுவனம் நடத்திவருகிறார்.

தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட நிலையில், தொடர்ந்து தொழிலை நடத்துவதற்காக பல்வேறு இடங்களில் சார்லஸ் ரூ.15 லட்சம் வரை கடன் பெற்றிருக்கிறார். கடன் கொடுத்தவர்கள் சார்லஸிடம் பணம் கேட்க, அவர் வீரபாண்டி பகுதியில் குடியேறியிருக்கிறார்.

அதனால், பணம் கொடுத்தவர்கள் சார்லஸின் தந்தை அலெக்சாண்டரிடம் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்திருக்கின்றனர். இதன் காரணமாக மனமுடைந்த அலெக்சாண்டர், அமலோற்பமேரி தம்பதி, திங்கள்கிழமை இரவு விஷம் குடித்திருக்கின்றனர்.

இதை தன்னுடைய மகன் சார்லஸிடமும் செல்போனில் தெரிவித்திருக்கின்றனர். இதையடுத்து விஷமருந்திய நிலையில், இருவரும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டனர். இதில் அலெக்சாண்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அமலோற்பமேரி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தார். செவ்வாய்க்கிழமை இரவு அவரும் உயிரிழந்தார். இது தொடர்பாக திருப்பூர் வடக்கு போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். மகன் பெற்ற கடனுக்காக பெற்றோர் தற்கொலை செய்துகொண்டது திருப்பூரில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

வீடுபுகுந்து பெண்ணை வெட்டிக்கொன்ற காதலன் : நெஞ்சை உலுக்கும் கொடூரம்!!

கேரளாவில்..

கணவரின் நண்பருடன் தகாத உறவில் இருந்து வந்த இளம் பெண் வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் மாளவாடி ஜங்ஷனை சேர்ந்தவர் 27 வயதான ரஜிதா மோல். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

கணவர் வெளிநாடு சென்றதும் அவருடைய நண்பரான ரன்னி பகுதியை சேர்ந்த அதுல் சத்யாவுடன் ரஜிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்து வந்துள்ளனர்.

இருவரும் லிவின் டுகெதரில் இருந்து வந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரஜிதாவும் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளார். ரஜிதா வெளிநாட்டிற்கு செல்வது, அதுல் சத்யாவுக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து திரும்பி கேரளாவுக்கு வருமாறு அதுல் சத்யா, ரஜிதாவை வற்புறுத்தி வந்துள்ளார்.

இதையடுத்து ரஜிதாவும் ஊர் திரும்பியுள்ளார். இதில் இருந்துதான் இருவருக்கும் பிரச்சனை ஆரம்பித்துள்ளது. அதுல் சத்யாவின் உறவை, ரஜிதா துண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அதுல் ரஜிதாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்தனபுரம் பகுதியில் உள்ள ரப்பர் தோட்டத்தில் ரஜிதாவை சந்தித்த அதுல், கொலை செய்து விடுவதாக கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.

மேலும் அப்போது ரஜிதாவின் அம்மாவுக்கு வீடியோ கால் செய்தும் அந்தக் காட்சியை காட்டி மிரட்டியுள்ளார். இந்த சம்பவத்திற்கு பிறகு இருவரது உறவும் ரொம்பவே மோசமடைந்துள்ளது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு ரஜிதாவின் வீட்டிற்குள் கத்தியுடன் நுழைந்த அதுல், அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். அப்போது ரஜிதாவை காப்பாற்ற வந்த அவரது பெற்றோரையும் வெட்டியுள்ளார் அதுல்.

இதில் பலத்த காயமடைந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் ரஜிதா சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

இதில் அதுல் சத்யாவுக்கும் காயம் ஏற்பட்டது. அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவரையும் கைது செய்தனர். திருமணத்தை மீறிய உறவால் இளம் பெண் ஒருவர் தனது கள்ளக்காதலனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி மாணவியை விரட்டி விரட்டி கத்தியால் தாக்கிய இளைஞர்.. நடுவீதியில் நடந்த கொடூரம்!!

புனேவில்..

புனேவில் கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் துரத்தித் துரத்தி கத்தியால் தாக்கிய அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. புனேவின் சதாசிவ் போத் என்ற பகுதியில் இருசக்கர வாகனத்தில் இளம் பெண்ணும், வாலிபரும் சென்றுள்ளனர்.

அப்போது அவர்களை இளைஞர் ஒருவர் தடுத்து நிறுத்தினார். பின்னர் அந்த இளைஞர் உடனே மறைந்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென வாகனத்தில் வந்த இளம் பெண்னை தாக்கியுள்ளார்.

இதில் அதிர்ச்சியடைந்த அப்பெண் அந்த வாலிபரிடம் இருந்து தப்பித்து ஓடியுள்ளார். இருப்பினும் அந்த இளைஞர் அவரை துரத்திச் சென்றுள்ளார். இதைப்பார்த்த அங்கிருந்த பகுதி மக்கள் உடனே அந்த வாலிபரை பிடித்து போலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பின்னர் போலிஸார் அந்த வாலிபரிடம் விசாரித்தபோது முல்ஷி பகுதியைச் சேர்ந்த சாந்தனு லஷ்மன் என்பது தெரியவந்தது. மேலும் தாக்குதலுக்கு உள்ளான பெண் கல்லூரியில் படித்து வருவது தெரியவந்தது.

அவரை மீட்ட போலிஸார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்தனர். தற்போது அவர் அபாய கட்டத்தைத் தாண்டி விட்டதாக போலிஸார் தெரிவித்துள்ளனர். கல்லூரி மாணவியை இளைஞர் துரத்தித் துரத்தி தாக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவர்களுக்கு திருமணம் செய்து நூதன வழிபாடு.. ஆச்சரியத்தில் ஆழ்த்தும் மக்களின் நம்பிக்கை!!

கர்நாடகாவில்..

தொழில்நுட்பமும், நாகரீகமும் எத்தனையோ வளர்ந்து விட்ட போதிலும் பல இடங்களில் மூடநம்பிக்கைகளும் குறைந்தபாடில்லை. மாதம் மும்மாரி மழை பெய்ததாக கதைகளில் படித்துள்ளோம்.

ஆனால் இப்போதெல்லாம் பருவமழையே காலம் தவறி தான் பெய்கிறது. இதுதவிர புயல் மழை எனில் கொட்டி தீர்க்கிறது. குறிப்பிட்ட கால கட்டத்தில் மழை பெய்யாமல் விவசாயம் தடைபடுகிறது.

இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே போகிறது. மழையின் அளவை அதிகரிக்க மூடநம்பிக்கை அடிப்படையில் இந்த செயலை செய்துள்ளனர்.

கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் கிருஷ்ணராஜபேட்டை தாலுகாவுக்கு உட்பட்ட கங்கனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர்கள் குழந்தை திருமணம் நடத்தினால் மழை பெய்யும்.

இதன்படி, சிறுவர்கள் 2 பேரை பாரம்பரிய ஆடை அணிவித்து அவர்கள் இருவரையும் மணமக்களாக மாற்றி திருமண நிகழ்ச்சி ஒன்றை நடத்தி உள்ளனர். அதனுடன், மழை வரவேண்டும் என கிராமவாசிகள் மழை கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டனர்.

இதன் பின்னர், சிறப்பு விருந்து ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. கிராமவாசிகளும் அதில் கலந்து கொண்டனர். இது குறித்து உள்ளூர்வாசிகள் “கடந்த ஆண்டை ஒப்பிடும்பொழுது, கர்நாடகாவில் பருவமழை பலவீனம் அடைந்து உள்ளது.

நடப்பாண்டில் மழை பற்றாக்குறையாக உள்ளது. இந்த நடைமுறை நமது பாரம்பரியம் தான். காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பழைய பாரம்பரிய நடைமுறைகளை கொண்டாடுவது என மக்கள் முடிவு செய்வதில் தவறு ஒன்றும் இல்லை” என கூறுகின்றனர்.

2 சிறுவர்களில் ஒருவரை சூர்யதேவன் வேடத்திலும், மற்றொருவரை சந்திரமதியாகவும் வேடமிட்டு அலங்காரம் செய்தனர். பின்னர் இருவரும் வீடு வீடாக சென்று மைதா மாவை வாங்கி வந்தனர். அதன்பிறகு அந்த மாவை கொண்டு அப்பம், ரொட்டி தயாரித்தனர்.

திறந்தவெளியில் சிறுவர்களுக்கு திருமணம் நடத்தி நூதன வழிபாடு நடத்தப்பட்டது. கிராம மக்கள் மழை வேண்டி ஆடிப்பாடி அப்பம், ரொட்டியை மக்கள் போட்டி போட்டு எடுத்து சாப்பிட்டனர். இதனால் வருண பகவான் மனமிரங்கி மழை பொழிய வைப்பார் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

வாகன விபத்தில் சிக்கி விஜயகலா மகேஸ்வரன் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி!!

யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் வாகன விபத்தில் படுகாயமடைந்துள்ளார். குறித்த வாகன விபத்து புத்தளத்தில் இன்று(29.06.2023) இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த விஜயகலா, புத்தளம் வைத்தியசாலையின் அவசர விபத்து பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் பயணித்த வாகனம் மரமொன்றின் மீது மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

விஜயகலா மகேஸ்வரனுடன் வானில் பயணித்த மேலும் மூவர் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் விஜயகலா மகேஸ்வரனின் உறவினர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இப்படியும் ஓர் மோசடி.. 10 லட்சத்தை இழந்த மல்லாவியில் இருந்து மாடு வாங்க வந்தவர்கள்!!

மாடு வாங்குவதற்காக ஆர்வம் கொண்டிருந்த மல்லாவியை சேர்ந்த நபரிடம் வவுனியா ஓமந்தையில் மாடுகள் விற்பதற்கிருப்பதாக தெரிவித்து பணத்தை சுருட்டிக்கொண்டு சிலர் தலைமறைவாகியுள்ளனர்.

மல்லாவியை சேர்ந்த ஒருவருடன் அண்மையில் வவுனியாவை சேர்ந்த ஒருவர் அறிமுகமாகியுள்ளார். இதன்போது மாடுகள் இருந்தால் கூறுங்கள் என மல்லாவியை சேர்ந்தவர் அவரிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில் அண்மையில் தொடர்புகொண்ட குறித்த நபர் ஓமந்தையில் மாடுகள் விற்பனைக்கு இருப்பதாகவும் உடனடியாக வந்தால் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும் மல்லாவியை சேர்ந்தவர் தற்போது பணம் இல்லை. ஒரு சில நாட்களின் பின்னர் வாங்குவதாக தெரிவித்துள்ளார். இதன்போது வவுனியாவில் வசிப்பவர் தனது அண்ணாவிற்கு பணம் அவசரம் தேவைப்படுவதால் உடனடியாக விற்கவேண்டியுள்ளது பணத்துடன் வாருங்கள் என கூறியுள்ளர்.

இந்நிலையில் நகைகளை அடைவு வைத்து மல்லாவியில் இருந்து ஓமந்தைக்கு வருகை தந்தவரிடம் ஓமந்தை வைத்தியசாலை பகுதியில் வைத்து பத்து இலட்சம் ரூபா பணத்தை பெற்ற நபர் சற்று தூரம் அழைத்து சென்று மாடுகள் சிலவற்றை காட்டியுள்ளார்.

குறித்த மாடுகளுடன் வேறு இருவரும் நின்ற நிலையில் மாடுகளை பொலிஸாருக்கு தெரியாது வேறு பாதையால் கொண்டு வந்து தருவதாக தெரிவித்ததுடன் பணத்தை பெற்றமைக்காக கடிதம் எழுத வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதன்போது ஓமந்தையில் உள்ள கடையொன்றில் பணத்தை பெற்றவர் காகிதாதி ஒன்றை வாங்கச் சென்ற சமயம் மாடு வாங்க வந்தவரும் சென்றுள்ளார். இதன்போது மாடு கொண்டு செல்லும்போது வீதியை விட்டு வேறு இடத்துக்கு சென்றுவிட்டதாக கூறி மாடு வாங்க வந்தவரை அவ்விடத்திற்கு செல்லுமாறு கூற அவரும் சென்றுள்ளார்.

அங்கு சென்ற மல்லாவியை சேர்ந்த மாடு வாங்க வந்தவர் மாட்டையும் காணாமல் கொண்டு சென்றவர்களையும் காணவில்லை என்பதால் கடிதம் எழுதுவதற்காக காகிதாதி வாங்க சென்றவரிடம் மீண்டும் சென்றுள்ளார். எனினும் அவரும் அங்கு இல்லாத நிலையில் பணத்தை இழந்து செய்வதறியாது நின்றுள்ளார்.

இந் நிலையில் ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு சென்றபோது பத்து இலட்சத்திற்கு மேல் என்பதால் வவுனியாவில் உள்ள குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவர்கள் தாம் முறைப்பாட்டை எடுக்க முடியாது மீண்டும் ஓமந்தையில் முறைப்பாட்டை பதிவு செய்யுங்கள் என திருப்பி அனுப்பிய நிலையில் பணத்தையும் இழந்து முறைப்பாடும் செய்ய முடியாத நிலையில் மல்லாவியில் இருந்து மாடு வாங்க வந்தவர்கள் செய்வதறியாதுள்ளனர்.

வவுனியாவில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்!!

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் எரிந்த நிலையில் இளைஞனின் சடலம் ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞரின் பெற்றோர் நேற்று (28.06.2023) காலை வெளியில் சென்றுவிட்டு மதியம் வீடு திரும்பியிருந்தனர்.

இதன்போது குறித்த இளைஞர் வீட்டின் பின்புறத்தில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தமை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த அயந்தன், வயது 23 என்ற இளைஞரே மரணித்துள்ளார். அவர் இன்று காலை தொழிலுக்கு சென்றுவிட்டு பின்னர் வீடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா கணேசபுரத்தில் மன்னார் வீதியினை மறித்து போராட்டம் நடாத்திய மக்கள்!!

அரசாங்கத்தின் நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு எனத் தெரிவித்து வவுனியா பெரியகட்டு கிராம சேவையாளர் அலுவலகம் முன்பாக மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் வவுனியா – மன்னார் பிரதான வீதியும் மக்களால் முடக்கப்பட்டது.

இன்று (28.06) காலை 9 மணி தொடக்கம் 10.30 மணிவரை சுமார் ஒன்டரை மணித்தியாலத்திற்கு மேலாக இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன் அவ் வீதியுடான போக்குவரத்தும் ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.

அரசாங்கத்தினால் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில் இரு நேரம் மட்டும் உணவை உட்கொண்டு வாழ்பவர்கள், விசேட தேவைக்குட்பட்டவர்கள், முதியோர்கள், விதவைகள் உட்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படாமல்,

வெளிநாடுகளில் இருப்போர், அரச உத்தியோகத்தர்கள், வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்து பெரியகட்டு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட கணேசபுரம் கிராமத்தினை சேர்ந்த மக்களினால் இக் கவனயீர்ப்பு வீதி மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வவுனியா பெரியகட்டு கிராம சேவையாளர் அலுவல வாயில் முன்பாக காலை 9.30 மணியளவில் மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் 30 நிமிடங்களின் பின்னரும் எவ்வித அதிகாரிகளும் போராட்ட இடத்திற்கு வருகை தராமையினையடுத்து ஆத்திரமடைந்த மக்கள்,

வவுனியா – மன்னார் பிரதான வீதியினை முற்றாக வழிமறித்து போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். இதன் காரணமாக அவ்வீதியுடான போக்குவரத்து ஒரு மணி நேரமாக முற்றாக ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.

அதன் பின்னர் போராட்ட இடத்திற்கு வருகை தந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வீதியினை விட்டு செல்ல மறுப்பு தெரிவித்தனர்.

அதன் பின்னர் பறயனாலங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வருகை தந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார் எனினும் மக்கள் கிராம சேவையாளர் இவ்விடத்திற்கு சமூகளிக்கும் வரை தாம் செல்ல மாட்டோம் என தெரிவித்த நிலையில்,

பறயனாலங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மக்களை பலவந்தமாக தள்ளியமையுடன் கதிரையில் அமந்திருந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விசேட தேவைக்குட்பட்ட முதியவரை எழுப்பி அவரை தள்ளியதுடன் அவர் அமந்திருந்த கதிரையினை தூக்கி பற்றையில் வீசினார்.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் செயலால் ஆத்திரமடைந்த மக்கள் மீண்டும் வீதியில் இறங்கி தமது போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். அதன் பின்னர் அவ்விடத்திற்கு வருகைதந்த பெரியகட்டு கிராம சேவையாளர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடி மேல்முறையீடுகளை மேற்கொள்ளுமாறும் தன்னால் இயன்ற உதவிகளை தாம் செய்வதாகவும் தெரிவித்தமையினையடுத்து போராட்டம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டதுடன் பொதுமக்கள் வீதியினை விட்டு வெளியேறினர்.

எனினும் கதிரையில் அமந்திருந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விசேட தேவைக்குட்பட்ட முதியவரை எழுப்பி அவரை தள்ளியதுடன் அவர் அமந்திருந்த கதிரையினை தூக்கி பற்றையில் வீசிய பொறுப்பதிகாரி அவரிடம் மன்னிப்பு கோர வேண்டும் என மக்கள் தெரிவித்தமையினையடுத்து,

பொறுப்பதிகாரி அவரிடம் மன்னிப்பு கோரினார் எனினும் பாதிக்கப்பட்ட நபர் பொறுப்பதிகாரியின் பதிலுக்கு உடன்படவில்லை என்பதுடன் நான் தலைமைக் காரியாலயத்தில் முறைப்பாடு செய்வதாகவும் தெரிவித்திருந்தார்.

கிளிநொச்சியில் பெண் ஒருவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. ஆலயத்தில் நடந்த சம்பவம்!!

கிளிநொச்சியில்..

கிளிநொச்சியில் பெண் ஒருவரின் தங்க நகைகள் அபரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றுக்கு சென்ற பெண் அணிந்திருந்த நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆலய வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அங்கு வந்த திருடன் நகைகளை களவாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளையில் ஈடுபட்ட நபரை கிளிநொச்சி பொலிஸார் தேடி வருகின்றனர்.

வீதியில் வைத்து இளம் பெண் மீது விரட்டி விரட்டி கொடூர தாக்குதல்.. சிசிரிவி கமராவில் சிக்கிய ஆதாரம்!!

பிலியந்தலையில்..

கூரிய ஆயுதத்தால் இளம் பெண் ஒருவரின் தலையில் தாக்கி காயப்படுத்திய நபரை பிலியந்தலை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (27.06.2023) அரவ்வல, சமகி மாவத்தை-பெலன்வத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய 19 வயதுடைய இளம் பெண்ணே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார். 40 வயதான சந்தேகநபர் குறித்த இளம் பெண்ணை தாக்கிய விதம் அருகில் இருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.

இந்த தாக்குதலில் குறித்த இளம் பெண்ணின் தலையில் காயம் ஏற்பட்டு ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். தாக்குதலை நடத்தியவா் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

தந்தையுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக குறித்த பெண்ணை அவா் தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. யுவதியை தாக்கிய நபர் நேற்று மாலை தொலைபேசி கோபுரம் ஒன்றில் ஏறியிருந்த போது பிலியந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுதாபத்தால் நபர் ஒருவரை வீட்டில் தங்கவிட்ட பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

கொழும்பில்..

பெண்ணின் கையடக்க தொலைபேசி விற்பனை நிலையத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான பணத்தை கொள்ளையிட்ட நபரை தேடி பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனா். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கொள்ளையிட்ட சந்தேக நபர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் தொலைபேசி கடைக்கு சென்றிருந்த சந்தேக நபர் தனது கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்ய விரும்புவதாக கூறியுள்ளார்.​​

அதோடு , தான் அனாதை இல்லத்தில் வளர்ந்ததாக கூறியதுடன் சந்தேக நபர் தனக்கு பெற்றோர், சகோதர, சகோதரிகள் இல்லை என்றும், ஏதாவது வேலையும் தருமாறும் கெஞ்சியுள்ளார்.

அவரது கதையைகேட்டு இரங்கிய பெண் தனது கடையில் சந்தேகநபரை வேலைக்கு அமர்த்தியுள்ளார். பின்னர் சந்தேக நபரை வெள்ளவத்தை பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று வீட்டிலேயே தங்க வைக்கவும் ஏற்பாடு செய்துள்ளார்.

சம்பவத்தன்று, பெண் தனது இளைய மகளை சந்தேக நபருடன் விற்பனை நிலையத்திற்கு அனுப்பிவிட்டு புறக்கோட்டை பகுதிக்கு சென்றுள்ளார். அதன்படி நேற்று (27) காலை 9 மணியளவில் மகளும், சந்தேகநபரும் விற்பனை நிலையத்தை திறந்துள்ளனர்.

பின்னா் மகள் உணவருந்துவதற்காக வௌியில் சென்றிருந்தமை தெரியவந்துள்ளது. அந்த நேரத்தில் பெண் தனது மகளுக்கு தொலைபேசியில் அழைத்துள்ள நிலையில், மகள் பதிலளிக்காததால் சந்தேக நபரின் தொலைபேசி எண்ணுக்கு அழைத்ததாகவும் , எனினும் அதற்கும் எந்த பதிலும் வராததால், அருகில் உள்ள விற்பனை நிலையத்திற்கு அழைப்பெடுத்து மகளிடம் கொடுக்குமாறு கோாியுள்ளாா்.

விற்பனை நிலைய உரிமையாளர், பெண்ணின் விற்பனை நிலையத்திற்கு சென்று தேடியபோது, ​​அங்கு யாரும் இல்லை என தகவல் தெரிவித்த நிலையில், , சந்தேகமடைந்த பெண் விரைந்து சென்றுள்ளார். அங்கு சென்ற போது ​​மகள் மட்டும் இருந்ததை அவதானித்துள்ளார்.

சந்தேகநபரை காணாததால் , கடையை சோதனையிட்ட போது, ​​கடையின் ஒரு அறையில் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணம் முழுவதும் காணாமல் போயுள்ளதாகவும் குறித்த பெண் பொலிஸாாிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

கொள்ளையிட்ட பணங்களின் மொத்த பெறுமதி ஒன்றரை கோடி ரூபாய் என்று அந்த பெண் கூறியுள்ள நிலையில் சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

வெளிநாடொன்றில் கோர விபத்தில் சிக்கி இலங்கையர் மரணம்!!

கட்டாரில்..

ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான கட்டாரில் நேற்றையதினம் (27) இடம்பெற்ற விபத்தில் சிக்கி இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவத்தில் அம்பாறை- கல்முனை பகுதியை சேர்ந்த 33 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வாகனத்தில் மூன்று பேர் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து இடம் பெற்றுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றைய இருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஃபேஸ்புக் நேரலையில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

ஐதாரபாத்தில்..

அத்தனை வருஷங்கள் பாசமாக வளர்த்த அம்மா, அப்பாவை எதிர்த்து, காதலிச்சவன் நல்லா பார்த்துப்பான்னு நெனைச்சு தான் பொண்ணுங்க கல்யாணம் பண்ணிக்கறாங்க. அப்படி காதலிச்சு கரம் பிடிச்சவனே வேறொரு பெண்ணுடன் தொடர்பு வெச்சிருந்தால் பெண் மனசு சுக்குநூறாய் உடைந்து தானே போகும்?

ஆனால், பல இடங்களில் பெண்கள் இப்படி இருந்தாலும், சிலர் தைரியமாக அவன் முன்பு கெத்தாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்கிற வைராக்கியத்துடன் முன்னேறுகிறார்கள். தற்கொலை என்பது தீர்வாகாது. அது, ஏமாற்றுபவர்களை மேலும் அடுத்தவர்களை ஏமாற்றவே வழி வகுக்கும்.

எத்தனைக் கனவுகளுடன் பெற்றோரை எதிர்த்து, காதலித்தவனைக் கல்யாணம் செய்திருப்பார் சனா. இன்று பரிதாபமாக உயிரை இழந்துள்ளார். ஐதாரபாத் நகரில் உள்ள புகழ் பெற்ற ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றியவர் சனா கான் (32).

கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு சனாவுக்கும், ராஜஸ்தானைச் சேர்ந்த ஹேமந்த் படேல் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இருவரும் காதலித்து வந்த நிலையில், ஹேமந்த்தின் பெற்றோர் இவர்களின் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.

சனாவுக்காக வீட்டை விட்டு வெளியேறிய ஹேமந்த், மதம் மாறி சனாவை திருமணம் செய்து கொண்டார். இருவரும் சில காலம் ராஜஸ்தானில் வாழ்ந்த நிலையில், சனா கானின் வேலை நிமித்தமாக சில மாதங்களுக்கு முன்னர் ஐதராபாத்தில் குடியேறியுள்ளார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளார்.

இசை கலைஞரான ஹேமந்த், வீட்டிலேயே இசைப்பயிற்சி வகுப்புகள் எடுத்து வந்தார். சமீப காலமாகவே ஹேமந்திடம் இசை வகுப்புக்கு வரும் வேறு ஒரு பெண்ணுடன் ஹேமந்த் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இவர்களது காதல் சனாவிற்கு தெரிய வரவே இருவருக்கும் இடையே கடும் சண்டை ஏற்படத் தொடங்கியுள்ளது.

இது குறித்து சனா ஹேமந்திடம் கேட்டதில் இருந்து, சனாகானைக் கொடுமைப்படுத்தி, தனது சுயரூபத்தைக் காட்டத் தொடங்கினார் ஹேமந்த்.இந் நிலையில் கடந்த வியாழக்கிழமை ஜூன் 22ம் தேதி இரவு சனா கான், அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் லைவ் வீடியோ வெளியிட்டார்.

அந்த வீடியோவில், தனது கணவரின் தொடர்பு குறித்து தெரியப்படுத்திய சனாகான், அது குறித்து கேட்டதும், தன்னைத் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வருவதாக, அவரது கொடுமைகளை எல்லாம் விவரித்தபடியே வீடியோவில் லைவ்வாக சென்று கொண்டிருந்த போதே தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ஐதராபாத்தில் வசிக்கும் சானாவின் வீட்டில் இருந்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் சனாவின் செல்போன் உள்ளிட்ட ஆதாரங்களை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் கதிரையில் அமர்ந்து போராடிய முதியவரை தள்ளி கதிரையை தூக்கியெறிந்த பொலிஸ் பொறுப்பதிகாரி!!

வவுனியா, கணேசபுரத்தில் நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு எனத் தெரிவித்து கதிரையில் அமர்ந்திருந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விசேட தேவைக்குட்பட்ட முதியவரை தள்ளிவிட்டு கதிரையை பொலிஸ் பொறுப்பதிகாரி பற்றைக்குள் வீசிய சம்பவம் ஒன்று இன்று (28.06) இடம்பெற்றது.

அரசாங்கத்தினால் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில் இத் திட்டத்திற்கான தெரிவில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து,

பெரியகட்டு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட கணேசபுரம் கிராமத்தினை சேர்ந்த மக்கள் காலை கிராம சேவையாளர் அலுவலகம் முன்பாக வவுனியா – மன்னார் பிரதான வீதியினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால் அவ்வீதியூடான போக்குவரத்து ஒரு மணி நேரமாக முற்றாக ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.

இந்நிலையில் போராட்ட இடத்திற்கு வருகை தந்த பறயனாலங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார். எனினும் மக்கள் கிராம சேவையாளர் அவ்விடத்திற்கு சமூகளிக்கும் வரை தாம் செல்ல மாட்டோம் என தெரிவித்த நிலையில்,

பறயனாலங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மக்களை பலவந்தமாக தள்ளி வெளியேற்ற முயன்றதுடன், கதிரையில் அமந்திருந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விசேட தேவைக்குட்பட்ட முதியவர் ஒருவரை எழுப்பி அவரை தள்ளியதுடன், அவர் அமந்திருந்த கதிரையினை தூக்கி பற்றைக்குள் வீசினார்.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் செயலால் ஆத்திரமடைந்த மக்கள் மீண்டும் வீதியில் இறங்கி தமது போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். அதன் பின்னர் அவ்விடத்திற்கு வருகை தந்த பெரியகட்டு கிராம சேவையாளர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடி மேல்முறையீடுகளை மேற்கொள்ளுமாறும் தன்னால் இயன்ற உதவிகளை தாம் செய்வதாகவும் தெரிவித்தமையினையடுத்து போராட்டம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டதுடன் பொதுமக்கள் வீதியினை விட்டு வெளியேறினர்.

எனினும் கதிரையில் அமந்திருந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விசேட தேவைக்குட்பட்ட முதியவரை எழுப்பி அவரை தள்ளியதுடன் அவர் அமந்திருந்த கதிரையினை தூக்கி பற்றையில் வீசிய பொறுப்பதிகாரி அவரிடம் மன்னிப்பு கோர வேண்டும் என மக்கள் தெரிவித்தமையினையடுத்து பொறுப்பதிகாரி அவரிடம் மன்னிப்பு கோரினார்.

எனினும் பாதிக்கப்பட்ட நபர் பொறுப்பதிகாரியின் மன்னிப்புக்கு உடன்படவில்லை என்பதுடன் நான் தலமைக்காரியாலயத்தில் முறைப்பாடு செய்வதாகவும் தெரிவித்திருந்தார்.

தனக்கு தீர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட விசேட தேவைக்குட்பட்ட நபர் மீது பொலிஸ் பொறுப்பதிகாரி முன்னெடுத்த மனிதாபிமானமற்ற செயற்பாடு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியிருந்தது.

ஏரியில் தவறி விழுந்த மாணவிக்கு நேர்ந்த சோகம்!!

ரஷ்யாவில்..

இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் ஒருவர் ரஷ்யாவில் உள்ள ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் முழபிலாங்காடு பகுதியில் குரும்ப பகவதி கோவில் அருகே வசிக்கும் ஷெர்லியின் ஒரே மகள் இ. பிரத்யுஷா (E. Pratyusha).

24 வயதாகும் இவர், ரஷ்யாவில் ஸ்மோலென்ஸ்க் மாநில மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு மாணவி ஆவார்.

பிரத்யுஷா தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்றபோது தவறுதலாக ஏரியில் விழுந்து நீரில் மூழ்கி இறந்ததாக, அவருடன் படிக்கும் மலையாளி மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை மதியம் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவத்தின்போது, விபத்தில் சிக்கிய சக மாணவிகள் இருவரும் மீட்கப்பட்டதாகவும், ஆனால் பிரத்யுஷாவை காப்பாற்ற முடியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

பிரத்யுஷா ஆகஸ்ட் மாதம் வீடு திரும்பவிருந்த நிலையில், இப்போது இந்த விபத்து நடந்துள்ளது. இந்நிலையில், புதன்கிழமை மும்பை வழியாக உடல் கொண்டு வரப்படும் என உறவினர்கள் தெரிவித்தனர்.