ஏரியில் தவறி விழுந்த மாணவிக்கு நேர்ந்த சோகம்!!

ரஷ்யாவில்..

இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் ஒருவர் ரஷ்யாவில் உள்ள ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் முழபிலாங்காடு பகுதியில் குரும்ப பகவதி கோவில் அருகே வசிக்கும் ஷெர்லியின் ஒரே மகள் இ. பிரத்யுஷா (E. Pratyusha).

24 வயதாகும் இவர், ரஷ்யாவில் ஸ்மோலென்ஸ்க் மாநில மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு மாணவி ஆவார்.

பிரத்யுஷா தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்றபோது தவறுதலாக ஏரியில் விழுந்து நீரில் மூழ்கி இறந்ததாக, அவருடன் படிக்கும் மலையாளி மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை மதியம் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவத்தின்போது, விபத்தில் சிக்கிய சக மாணவிகள் இருவரும் மீட்கப்பட்டதாகவும், ஆனால் பிரத்யுஷாவை காப்பாற்ற முடியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

பிரத்யுஷா ஆகஸ்ட் மாதம் வீடு திரும்பவிருந்த நிலையில், இப்போது இந்த விபத்து நடந்துள்ளது. இந்நிலையில், புதன்கிழமை மும்பை வழியாக உடல் கொண்டு வரப்படும் என உறவினர்கள் தெரிவித்தனர்.

வவுனியாவில் எரிந்த நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!!

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் எரிந்த நிலையில் இளைஞனின் சடலம் ஒன்று மீட்க்கப்பட்டது.

குறித்த இளைஞரின் பெற்றோர் இன்றுகாலை வெளியில் சென்றுவிட்டு மதியம் வீடுதிரும்பியிருந்தனர். இதன்போது குறித்த இளைஞர் வீட்டின் பின்புறத்தில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தமை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

குறித்த சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த அஜந்தன், வயது 23 என்ற இளைஞரே சாவடைந்துள்ளார். அவர் இன்று காலை தொழிலிற்கு சென்றுவிட்டு பின்னர் வீடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

திருமண நாளில் கணவனும் மனைவியும் ஒன்றாக உயிரிழந்த சோகம்!!

ராணிப்பேட்டையில்..

ராணிப்பேட்டை மாவட்டம் அரும்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் 34 வயது ஈஸ்வரன். இவர் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி 29 வயது சங்கீதா.

இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இவர்களுக்கு மூன்றரை வயது மற்றும் ஒரு வயதில் 2 மகன்கள். நேற்று ஜூன்26ம் தேதி ஈஸ்வரன் – சங்கீதா தம்பதிக்கு திருமண நாள் ஆகும்.

காலை மூத்தமகன் கிஷோரை பள்ளிக்கு அனுப்பிவிட்டு ஈஸ்வரன், சங்கீதா, இளைய மகன் தஸ்வந்த் மூவரும் மோட்டார் சைக்கிளில் ஆற்காடு அருகே உள்ள புதுபாடி பச்சையம்மன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர்.

இருசக்கர வாகனம் கடப்பந்தாங்கல் அருகே சென்றபோது ஆற்காட்டில் இருந்து செய்யாறு நோக்கி எதிரே வந்த தனியார் பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் ஈஸ்வரன், சங்கீதா ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்த தஸ்வந்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் தனியார் பேருந்து டிரைவரின் அலட்சியம், கவனக்குறைவு மற்றும் அதிவேகத்தால் தான் இரு உயிர்கள் பலியாகி உள்ளனர்.

இதற்கு ஒரு முடிவு தெரியாமல் உடலை இங்கிருந்து அகற்றக்கூடாது என சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு நிலவியது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருமண நாளன்று கணவன் மனைவி இருவரும் ஒரே நேரத்தில் சாலை விபத்தில் பலியானது அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

திருமணமான அடுத்த நாளே புதுமண தம்பதி உட்பட 5 பேர் கொலை… தானும் தற்கொலை செய்து கொண்ட சகோதரன்!!

உத்தரபிரதேசத்தில்..

உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரி பகுதியில் வசித்து வருபவர் 28 வயது ஷிவ் வீர். இவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில் ஷிவ் வீரின் சகோதரனுக்கு சோனுவுடன் நேற்று திருமணம் நடைபெற்றது.

திருமண நிகழ்ச்சிக்கு பின் நேற்று இரவு அனைவரும் வீட்டில் தூங்கச் சென்று விட்டனர். புத்தம் புதுமணத் தம்பதியரான ஷிவ் வீரின் சகோதரன், சோனு இருவரையும் அதிகாலை 5மணிக்கு ஷிவ் வீர் கோடாரியால் வெட்டி கொலை செய்தார்.

அவர்களின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மற்ற உறவினர்களான சகோதரர் பஹ்லன், சோனியின் சகோதரன் சவ்ரவ், நண்பன் தீபக் மொத்தம் 5 பேரை ஷிவ் வீர் கோடாரியால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளார்.

அத்துடன் அவரது ஆத்திரம் ஓயவில்லை. தொடர்ந்து ஷிவ் வீர் தனது மனைவி, அத்தை, தந்தை ஆகியோரையும் கொலை செய்ய முயற்சி செய்தார். அவர்கள் படுகாயங்களுடன் தப்பி ஓடிவிட்டனர்.

அதன் பிறகு இவர்கள் அனைவரையும் கொலை செய்த ஷிவ் வீர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய குடும்ப உறுப்பினர்கள் 5 பேரை சுட்டுக்கொன்ற ஷிவ் வீர் தானும் தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் விரைந்து வந்த காவல்துறையினர் பலியானவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் வழக்கு பதிவு செய்து இந்த கொடூர கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது

58 வயதில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த பெண்!!

இந்தியாவில்..

இந்தியாவில் 58 வயதான மூதாட்டி ஒருவர் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். ராஜஸ்தானின் பிகானேரில் உள்ள சிறப்பு மருத்துவமனையிலேயே குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார் ஷேரா படு(வயது 58).

IVF சிகிச்சை மூலம் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாக மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.

ஸ்ரீ கிருஷ்ணா நியூரோஸ்பைன் மற்றும் மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் டாக்டர் ஷைஃபாலி தாதிச் துங்கேரியன் அளித்த சிகிச்சையின் மூலமே இது நடந்துள்ளது.

தற்போது தாயும், குழந்தையும் நலமாக இருப்பதாகவும், மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியா ஆசிகுளத்தில் வீதியினை மறித்து மக்கள் போராட்டம்!!

அரசாங்கத்தின் நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு எனத் தெரிவித்து வவுனியா ஆசிகுளம் கிராம சேவையாளர் அலுவலகம் முன்பாக மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் வவுனியா – சிதம்பரபுரம் பிரதான வீதியும் மக்களால் முடக்கப்பட்டது.

இன்று (27.06) காலை 9.30 மணி தொடக்கம் 11 மணிவரை சுமார் ஒன்றரை மணித்தியாலத்திற்கு மேலாக இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன் அவ் வீதியுடான போக்குவரத்தும் ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.

அரசாங்கத்தினால் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில் இருநேரம் மட்டும் உணவை உட்கொண்டு வாழ்பவர்கள், விசேட தேவைக்குட்பட்டவர்கள், முதியோர்கள், விதவைகள் உட்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படாமல்,

வெளிநாடுகளில் இருப்போர், அரச உத்தியோகத்தர்கள், வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்து ஆசிகுளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட 12 கிராமங்களை சேர்ந்த மக்களினால் இக் கவனயீர்ப்பு வீதிமறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வவுனியா ஆசிகுளம் கிராம சேவையாளர் அலுவலகம் முன்பாக காலை 9.30 மணியளவில் மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் 30 நிமிடங்களின் பின்னர் பேரணியாக சென்று வவுனியா – சிதம்பரபுரம் பிரதான வீதியினை முற்றாக வழிமறித்து போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

இதன் காரணமாக அவ்வீதியூடான போக்குவரத்து ஒரு மணிநேரமாக முற்றாக ஸ்தம்பிதம் அடைந்திருந்தது. அதன் பின்னர் போராட்ட இடத்திற்கு வருகைதந்த சிதம்பரபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் ஆசிகுளம் கிராம சேவையாளர், சமூர்த்தி உத்தியோகத்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியதுடன்,

மேல் முறையீடு செய்வதற்குரிய நடவடிக்கைகள் மற்றும் அதற்குரிய உதவிகளை பெற்றுத்தருவதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னாலான செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் மேலும் இறுதிப்பட்டியல் வரும்வரை காத்திருக்குமாறும் ஆசிகுளம் கிராம சேவையாளர் தெரிவித்தமையினையடுத்து காலை 11 மணியளவில் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

கைபேசியால் தற்கொலை செய்த கல்லூரி மாணவி.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

திருப்பூரில்..

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. பள்ளிக்குழந்தைகள் தொடங்கி கல்லூரி மாணவ, மாணவிகள் வரை மன அழுத்தம் என்கின்றனர். தனிக்குடும்பங்கள் பெருகி விட்ட இக்காலத்தில் பெரும்பாலான வீடுகளில் ஒற்றை பிள்ளைகள். கேட்பதற்கு முன் தேவைகள் கிடைத்து விடுகின்றன.

பெற்றோர்களும் வீட்டில் செல்லமாக திட்டாமல் வளர்க்கின்றனர். இந்த பிள்ளைகள் ஓரளவு வளர்ந்து விட்ட பிறகு யார் திட்டினாலும் , கேட்டது கிடைக்காமல் போனாலும் பெரும் மன அழுத்தம் வந்து விடுகிறது. அத்துடன் விபரீத முடிவுகளுக்கும் சென்று விடுகின்றனர்.

எத்தனையோ விழிப்புணர்வு நிகழ்வுகள் இதுகுறித்து நடத்தப்பட்டாலும் இவர்களின் முடிவால் பெற்றோர்களின் வாழ்க்கையும் அர்த்தமற்றதாக்கி விடுகின்றனர் . திருப்பூர் மாவட்டம் காங்கயம் பாளையங்கோட்டை சாலை பகுதியில் வசித்து வரும் தர்மலிங்கத்தின் மகள் 22 வயது ஸ்ரீகவி .

இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தார். செமஸ்டர் தேர்வுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் கல்லூரியில் தேர்வு நடைபெற்றது. தேர்வு அறைக்குள் மொபைல் போன் வைத்திருக்க அனுமதியில்லை.

ஆனால் மாணவி ஸ்ரீகவி மறந்துபோய் தேர்வு அறைக்குள் தனது செல்போனை எடுத்துச் சென்று விட்டார். இதனை கவனித்த தேர்வு அறையின் கண்காணிப்பாளர், ஸ்ரீகவியிடம் இருந்த மொபைல் போனை பிடுங்கினார். அத்துடன் நில்லாமல் அது குறித்து விளக்க கடிதம் ஒன்றையும் எழுதி தரச் சொல்லியிருக்கிறார்.

15 நாட்கள் கழித்து மொபைல் போனை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என ஸ்ரீகவியின் பெற்றோரிடம் தெரிவிக்கப்பட்டது. மற்ற மாணவ, மாணவிகள் எதிரில் அவரை கண்டித்ததால் அவருக்கு மிகுந்த அவமானமாகி விட்டது.

இதனால் ஸ்ரீகவி மிகுந்த மன வருத்தத்துடன் காணப்பட்டார் . இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் ஸ்ரீகவி துணிகளை துவைத்து விட்டு அதை அவரது தாயாரிடம் கொடுத்து கீழே காய போட்டு வருமாறு சொல்லியுள்ளார்.

தாயார் துணிகளை எடுத்துக்கொண்டு கீழே சென்று காய போட்டுவிட்டு மேலே வந்து ஸ்ரீகவியை அழைத்தார். சத்தம் எதுவுமே கேட்கவில்லை. உடனே ஸ்ரீகவியின் அறைக்குச் சென்று எட்டிப் பார்த்தபோது அங்கு ஸ்ரீகவி மின்விசிறியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.

இதனை கண்ட அவரது தாயார் அலறி கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு ஓடி வந்து அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே ஸ்ரீகவி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குளத்தில் குளித்துக்கொண்டிருந்த இளம்பெண் துடிதுடித்து உயிரிழந்த சோகம்!!

இந்தியாவில்..

இந்தியாவில் திருவாரூர் மாவட்டம் குன்னூர் கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜுனன். இவரது மகள் பிரகதீஸ்வரி(18). கல்லூரியில் படித்துவரும் இவர் தனது வீட்டின் அருகே உள்ள குளத்தில் துணிகளை துவைத்து குளித்துக் கொண்டிருந்துள்ளார்.

அப்பொழுதி எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் மின்கம்பம் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் மின்கம்பத்தில் சென்று கொண்டிருந்த மின்கம்பங்கள் குளித்துக் கொண்டிருந்த பிரகதீஸ்வரி மீது விழுந்துள்ளது.

இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்துள்ளார். பின்பு தகவலறிந்த பொலிசார் குறித்த பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளதுடன், இந்த சம்பவம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூக்கத்தில் சித்ரவதை அனுபவிக்கும் குழந்தை.. சுயநலமான பெற்றோர்களுக்கு எச்சரிக்கை காட்சி!!

குழந்தை..

குழந்தை ஒன்று தூக்கத்தில் அழுதுகொண்டு கையில்Tablet வைத்து விளையாடுவது போன்று காணப்பட்ட காட்சி ஒட்டுமொத்த அம்மாக்களையும் அதிர வைத்துள்ளது. இன்று பெரும்பாலான குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கையில் செல்போன் மற்றும் டேப்லெட் இவற்றினைக் கொடுத்துவிட்டு தனது வேலையை தடையில்லாமல் செய்து வருகின்றார்.

இவ்வாறு கையில் எதாவது ஒன்று கிடைத்துவிட்டால் மற்றவர்களை தொந்தரவு செய்யாமல் குழந்தைகள் அதிலேயே மூழ்கி விடுகின்றனர். பெற்றோர்கள் தங்களது சுயநலனுக்காக செய்யும் இந்த செயல் பாரிய விளைவினை ஏற்படுத்தும் என்பதை தெளிவாக காட்டியுள்ளது இந்த காட்சி.

குறித்த காட்சியில் சிறுவன் ஒருவன் தூங்கிக் கொண்டிருக்கும் நிலையில், திடீரென அழுதுகொண்டு தனது கையில் டேப்லெட் வைத்து விளையாடுவதாக நினைத்து தன்னை அறியாமல் ஆக்ஷன் செய்கின்றார். இந்த அதிர்ச்சி காணொளி ஒட்டுமொத்த பெற்றோர்களுக்கும் ஒரு விழிப்புணர்வாக இருக்க வேண்டும்.

அலட்சியத்தால் பரிதாபமாக பறிபோன இளைஞனின் உயிர்!!

விழுப்புரத்தில்..

`20 நாள்களுக்கும் மேலாக மின்கம்பி அறுந்து கிடந்தபோதும், மின்துறை அதிகாரிகள் அலட்சியமாகச் செயல்பட்டதால், இளைஞரின் உயிர் அநியாயமாகப் பறிபோய்விட்டது’ என இறந்தவரின் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில், அறுந்துவிழும் மின்கம்பிகளால் நிகழும் உயிரிழப்புச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன. கடந்த மார்ச் 20-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 1-ம் தேதி வரை மட்டும் மூன்று மனித உயிர்களும், ஒரு கால்நடையின் உயிரும் பரிதாபமாகப் பறிபோயிருக்கின்றன.

அதைத் தொடர்ந்து கோடை வெயில் சுட்டெரித்துவந்த நிலையில், ஜூன் மாதத் தொடக்கத்திலிருந்து விழுப்புரம் மாவட்டத்தில் அவ்வப்போது மழை பொழிந்துவருகிறது.

அப்படி, கெடார் அருகேயுள்ள சிறுவாலை கிராமத்தில் கடந்த 1-ம் தேதி பலத்த காற்றுடன் மழை பெய்திருக்கிறது. அப்போது செல்வராஜ் என்பவரின் கரும்புத் தோட்டத்தில் மின்கம்பி அறுந்து விழுந்ததாகச் சொல்லப்படுகிறது.

இது குறித்து மின்துறை ஊழியர்களுக்கு அந்தப் பகுதியினர் தகவல் தெரிவித்த நிலையிலும், மின்கம்பி சரிசெய்யப்படாமல் இருந்துவந்ததாம். இந்த நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த விஷ்ணுபதி என்ற இளைஞர் நேற்று முன்தினம் முதல் காணாமல்போயிருக்கிறார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரின் பெற்றோரும் உறவினர்களும், பல்வேறு இடங்களில் அவரைத் தேடிப் பார்த்திருக்கின்றனர். ஆனால், அவரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லாமல் இருந்துவந்த நிலையில், செல்வராஜ் என்பவரின் கரும்புத் தோட்டத்தில் அறுந்துகிடந்த மின்கம்பியில் சிக்கி விஷ்ணுபதி உயிரிழந்துகிடப்பது நேற்றைய தினம் தெரியவந்திருக்கிறது.

இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற கெடார் போலீஸார், இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்திருக்கின்றனர்.

மேலும், காட்டுப்பன்றி ஒன்றும் இவருக்கு முன்பாகவே அதே மின்கம்பியில் சிக்கி உயிரிழந்துகிடந்திருக்கிறது. இது குறித்த தகவலின்பேரில் அங்கு சென்ற கால்நடை மருத்துவர்கள், வனத்துறை அதிகாரிகள் ஆகியோர் உயிரிழந்துகிடந்த பன்றியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக எடுத்துச் சென்றிருக்கின்றனர்.

இது தொடர்பாக கெடார் காவல் நிலையத்தில் புகாரளித்துவிட்டு, செய்தியாளர்களைச் சந்தித்த விஷ்ணுபதியின் குடும்பத்தார், “மின்கம்பி அறுந்து 20 நாள்களுக்கு மேலாக அதே இடத்தில் கிடக்கிறது. இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும், மின்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள்.

கேட்கும்போதெல்லாம், இங்கு வேலை இருக்கிறது, அங்கு வேலை இருக்கிறது என்று சொன்னார்களே தவிர… இந்த மின்கம்பியைச் சரிசெய்திருந்தால் இன்று ஓர் உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது.

இந்த உயிரிழப்புக்கு இந்த மின்சாரத்துறையும், தமிழக அரசும் என்ன பதில் சொல்லும் எனத் தெரியவில்லை. எனவே இந்த மின்துறையில் ஒழுங்காகப் பணி செய்யாமலிருந்த அதிகாரிகள்மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழப்புக்கான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். கவனக்குறைவாக இருந்த அதிகாரிகள்மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில், விஷ்ணுபதியின் உடலை வாங்க மாட்டோம்” என்றனர்.

அவர்களின் புகாரை ஏற்ற கெடார் போலீஸார், மின்சாரத்துறை ஊழியர்களான பாலு, மணிகண்டன், சரவணன் ஆகியோர்மீது 304/2 பிரிவின்கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர்.

`மின்சாரத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை’ என்ற குற்றச்சாட்டுக்கு விளக்கம் கேட்க, விழுப்புரம் மாவட்ட மேற்பார்வைப் பொறியாளர் ராஜேந்திர விஜய்யிடம் பேசினோம்.

“மின்கம்பி அறுந்து விழுந்து 20 நாள்களாகவெல்லாம் கிடந்திருக்காது. ஏனெனில், அது போன்று அறுந்து விழுந்தால் விபத்து ஏற்படும் என்பதால், அதிகாரிகள் கட்டாயம் சென்று சரிசெய்துவிடுவார்கள். மூன்று நாள்களாக அந்தப் பகுதியில்தான் வேலை செய்துவந்திருக்கின்றனர்.

அங்கிருந்து யாரும் தகவல் சொல்லவில்லை. தகவல் தெரிந்திருந்தால், ஊழியர்கள் போகாமல் இருந்திருக்க மாட்டார்கள். இந்தச் சம்பவம் குறித்து துறைரீதியாகச் சம்பந்தப்பட்ட மக்களிடமும் ஊழியர்களிடமும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

இது போன்று மின்கம்பிகள் அறுந்துவிழுவதைத் தடுப்பதற்காக, பழைய மின்கம்பிகளைக் கண்டறிந்து, புதிதாக மாற்றிக்கொண்டுதான் இருக்கிறோம்” என்றார்.

காதலியின் பிரிவினால் 22 வயது காதலன் செய்த விபரீத செயல் : பலரையும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்!!

பலாங்கொடையில்..

பலாங்கொடை பிரதேசத்தில் காதலி இறந்து சில நாட்களின் பின்னர் தன்னால் வாழ முடியாது என இளைஞரொருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் பலாங்கொட வெலிகேபொல பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. குடும்ப பிரச்சினை காரணமாக குறித்த இளைஞனின் காதலி கடந்த சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதனை தொடர்ந்து கடும் விரக்தியுடன் பொழுதை கழித்து வந்த இளைஞன் காதலியின்றி தன்னால் வாழ முடியாது என கூறி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த இளைஞர் இறப்பதற்கு முன்னர் தனது காதலியின் பிரிவு குறித்து தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றினையும் பதிவேற்றியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட இளைஞன் : ஆபத்தான நிலையில் தந்தை!!

ஹகுரன்கெத்தவில்..

ஹகுரன்கெத்த பிரதேசத்தில் காணி பிரச்சினையால் இளைஞன் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். முகத்தில் மிளகாய் பொடியை வீசி தலையில் சுத்தியலால் தாக்கப்பட்டதில் தந்தை மற்றும் மகன் இருவர் படுகாயம் அடைந்தனர்.

அவர்களில் 22 வயதுடைய மகன் நேற்று முன்தினம் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். தங்கவேலு சண்தலு சந்துஷ் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஜப்பானில் வேலை பெறுவதற்காக அவர் கற்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். ஹகுரன்கெத்த – உடவத்தகும்புரவில் கடந்த 19 ஆம் திகதி இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் சந்தேகநபர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இவர்களில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினரும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர்களுக்கு மிளகாய் பொடியை கொடுத்து தாக்கியதாக கூறப்படும் பெண் ஒருவரை ஹகுரன்கெத்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான காணி ஒன்றின் உரிமை தொடர்பில் இவ்விரு குழுக்களுக்கிடையில் தகராறு ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றதையடுத்து, கடந்த 19ஆம் திகதி இரவு பிரதான சந்தேகநபரின் வீட்டிற்கு சிலர் தீ வைத்து எரித்துள்ளனர். தலைமறைவான சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை ஹகுரன்கெத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கனடாவில் கல்வி விசா பெற்று தருவதாக கூறி ஏமாற்றிய பெண் கும்பல்.!!

கனடாவில்..

கனடாவில் கல்வி விசா பெற்று தருவதாக கூறி பணம் மோசடி செய்த ஆண் மற்றும் 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்திற்கு பல முறைப்பாடுகள் கிடைத்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, தேடுதல் உத்தரவுக்கு அமைய நேற்று கடவத்தை பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் இயங்கி வந்த போலி ஆவண நிலையம் ஒன்று சோதனையிடப்பட்டது.

அங்கு, 03 கணனிகள், 03 மடிக்கணினிகள், 04 பிரிண்டர்கள், 01 ஸ்கேனர்கள், போலி வைப்புச் சான்றிதழ்கள், கணக்கு அறிக்கைகள், பல்வேறு கடவுச்சீட்டுகள், தூதரகத்திற்கு அனுப்பத் தயாரிக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள், பல்வேறு உத்தியோகபூர்வ முத்திரைகள் மற்றும் ரொக்கமாக 1,187,130 ரூபாய் பணத்துடன் சந்தேக நபர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சீதுவ பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடையவர் எனவும், ஏனைய சந்தேகநபர்கள் வத்தளை, ராகம மற்றும் களனி பிரதேசங்களை சேர்ந்த 47, 45, 31, 28 மற்றும் 23 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விசா கோரி வருபவர்களின் பெயரில் போலியான லெட்டர்ஹெட்களை பயன்படுத்தி பல்வேறு சொத்து விவரங்கள், பண வைப்பு சான்றிதழ்கள், கணக்கு விவரங்கள் ஆகியவற்றை அவர்கள் வழங்கியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முகப்புத்தகத்தில் பெண் வேடமிட்டு இளைஞன் செய்த இழிவான செயல்!!

முகப்புத்தகத்தில்..

முகப்புத்தகத்தில் பெண் வேடமிட்டு 14 வயது சிறுவனை வன்கொடுமை செய்த சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. இக் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய 24 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ருவன்வெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் சிறுவனை முகப்புத்தகத்தில் தொடர்பு கொண்டு “நவோத்யா” என்ற யுவதி போல் நடித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

அத்தோடு அச் சிறுவனை கம்பஹாவுக்கு அழைத்து வந்து மறைந்திருந்து வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பஹா, மகேவிட்ட பிரதேசத்தை சேர்ந்த திருமணமாகாத இச் சந்தேகநபர் தற்போது தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருவதாக தெரிய வந்துள்ளது.

இந் நிலையில் இவர் பிரிவெனாவில் கல்வி கற்று பல்வேறு விதமான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளானவர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் பல ஆண்களிடம் நடத்தைகளை மேற்கொண்டு அவற்றினை படம்பிடித்து, மிரட்டி பணம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பறித்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

இவரால் வன்கொடுமைக்கு உள்ளான 14 வயது சிறுவன் தற்போது கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும் குறித்த சந்தேகநபரால் பாதிக்கப்பட்டவர்கள் நேரில் வந்து புகார் தெரிவிக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேருந்து விபத்தில் இளம் யுவதிக்கு நேர்ந்த சோகம்!!

அவிசாவளையில்..

அவிசாவளை பிரதான வீதியில் உள்ள உக்வத்தை மயானத்திற்கு முன்பாக, 23 வயதுடைய யுவதி ஒருவர், தான் பயணித்த அதே பேருந்து மோதியதில் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவமானது இன்று (25.06.2023) இடம்பெற்றுள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். புவக்பிட்டிய, அவிசாவளை, பிரகதிபுர பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய டொலவகே டோனா திலக்ஷி டில்ஷிகா என்ற யுவதியே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் விபத்து தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில், உயிரிழந்த யுவதி அவிசாவளையில் இருந்து குறித்த பேருந்தில் வருகை தந்து உக்வத்தை மயானத்திற்கு அருகில் இறங்கியுள்ளார்.

இதன் போது பின்னால் இயக்க முற்பட்ட அதே பேருந்து அவர் மீது மோதியதில் உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த யுவதியின் சடலம் அவிசாவளை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேதப் பரிசோதனை நாளை (26.06.2023) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸ் தலைமையக போக்குவரத்து பிரிவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா இளைஞன் முல்லைத்தீவு மல்லாவி பகுதியில் நடந்த விபத்தில் மரணம்!!

மல்லாவியில்..

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பகுதியில் இடம்பெற்ற வாகனம் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்றைய தினம் மதியம் (26) இடம்பெற்ற இந்த விபத்தில் வவுனியா தேக்கவத்தை பகுதியை சேர்ந்த கமலதாஸ் கபில்தாஸ் (26) என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.

மற்றும் மல்லாவி திருநகர் பகுதியை சேர்ந்த கமலநாதன் சபேசன் என்ற இளைஞர் படுகாயமடைந்த நிலையில் மல்லாவி ஆதார வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு – மல்லாவி பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளுடன் சிறிய ரக வாகனம் ஒன்று மோதியே குறித்த விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது. இதன்போது இரண்டு வாகனங்களும் தீபற்றி எறிந்துள்ளதாகவும் அதில் மோட்டார் சைக்கிள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.

இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டு வருகின்ற இதே வேளை கிளிநொச்சி தடயவியல் பொலிசார் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுக்கின்றனர்.