இலங்கைப் பெண்ணை அடக்கம் செய்ய மறுத்த இந்தியர்கள்!!

இந்தோனோசியாவில்..

இலங்கை தமிழ் அகதியொருவர் இந்தோனோசியாவில் நோயினால் உயிரிழந்த நிலையில் அவரது உடலை தங்கள் உடல்கள் அடக்கம் செய்யப்படும் பகுதியில் அடக்கம் செய்ய அங்கு வாழும் இந்தியர்கள் மறுத்துள்ளமை குறித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2012ம் ஆண்டு இந்தோனேசியாவில் தஞ்சமடைந்து மெடான் நகரின் பெலாவான் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் ஏதிலியான அசோக்குமார் லலிதா நோயுற்று தகுந்த சிகிற்சையின்றி உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

இந்தோனேசியாவில் இந்தியப் பின்னணி கொண்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் வாழ்கிறார்கள்.

எனினும் உயிரிழந்த இலங்கைப்பெண்ணின் உடலை அவர்களின் தகனம் செய்யும் இடத்திலே அடக்கம் செய்வதற்கு அங்குள்ள இலங்கை தமிழ் உறவுகளஉறவுகள் அணுகிய போது தகனம் செய்ய முடியாது என அவர்கள் மறுத்துவிட்தாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் மனைவியின் உடலோடு தவித்த கணவருக்கு அங்குவாழும் பஞ்சாப்பைச் சேர்ந்த சீக்கியர் ஒருவர் மனித நேயத்தோடு தங்களது மயானத்தில் உடலைத் தகனம் செய்வதற்கு அனுமதி வழகியதை அடுத்து இலங்கைப்பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

சொந்த நாட்டைவிட்டு வெளியேறி பிறிதொரு நாட்டில் அடைக்கலம் புகுந்த இரு பிள்ளைகளின் தாயான இளம்இலங்கை தமிழ் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் தீப்பற்றி எரிந்த வீட்டினுள் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!!

வவுனியா தேக்கவத்தை பகுதியில் இன்று (21.06.2023) அதிகாலை தீப்பற்றி எரிந்த வீட்டினுள் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த வீடு தீப்பற்றி எரிவதாக அயவலர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் மாநகரசபை தீயணைப்புப் பிரிவினர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தமையினையடுத்து வீட்டிக்குள் நுழைந்தனர். இதன் போது வீட்டின் குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமையுடன் தடவியல் பொலிஸாரின் உதவியையும் நாடியுள்ளனர்.

8 கோடி பணத்தை கொள்ளையிட்டு தப்பிய தம்பதி : பழச்சாறு ஆசையால் சிக்கிய பரிதாபம்!!

பஞ்சாப்பில்..

இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் நிதி நிறுவனம் ஒன்றில் இருந்து ஆயுதம் காட்டி மிரட்டி ரூ.8 கோடி கொள்ளையிட்டு தப்பிய தம்பதியை பொலிசார் பழச்சாறு பந்தல் வைத்து சிக்க வைத்துள்ளனர்.

பஞ்சாப் மாகாணம் லுதியானாவில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் இருந்து 8 கோடி ரூபாய் கொள்ளையிட்டவர்கள் மந்தீப் கவுர் மற்றும் அவரது கணவர் ஜஸ்விந்தர் சிங். ஜூன் 10ம் திகதி ஆயுதம் ஏந்திய குழு ஒன்றை ஏற்பாடு செய்து இவர்கள் அந்த நிதி நிறுவனத்தில் இருந்து கொள்ளையிட்டுள்ளனர்.

தொடர்ந்து உத்தரகாண்ட் அருகாமையில் அமைந்துள்ள சீக்கியர்களின் புனிதத் தலமான ஹேம்குந்த் சாஹிப் குருத்வாராவுக்கு யாத்திரை சென்றுள்ளனர். மட்டுமின்றி, குறித்த தம்பதி நேபாளம் செல்ல திட்டமிட்டுள்ளதும் பொலிசாருக்கு தெரிய வந்துள்ளது.

ஆனால் இவர்களை தீவிரமாக தேடுவதாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது, அவர்கள் பயண திட்டத்தை மாற்றியுள்ளது. இதனையடுத்தே சீக்கியர்களின் புனிதத் தலமான ஹேம்குந்த் சாஹிப் குருத்வாராவுக்கு சென்றுள்ளனர்.

பொலிசாருக்கு இந்த தகவல் தெரிந்தும், அந்த தம்பதியை அடையாளம் காண்பது சவாலாக அமைந்துள்ளது. இந்த நிலையில், பக்தர்களுக்கான பழச்சாறு பந்தல் ஒன்றை அமைக்கும் திட்டத்திற்கு பொலிசார் வந்துள்ளனர்.

பொலிசாரின் திட்டம் இதுவென அறியாத அந்த தம்பதி, குறித்த பந்தலில் இருந்து பழச்சாறு வாங்கியதுடன், முகத்தை மறைத்திருந்த திரையை விலக்கி, அருந்தியுள்ளனர்.

மந்தீப் கவுர் மற்றும் அவரது கணவர் ஜஸ்விந்தர் சிங் அது என்பதை உறுதி செய்த பொலிசார், குருத்வாராவில் அவர்களின் வழிபாடுகள் முடியும் மட்டும் காத்திருந்துள்ளனர். தொடர்ந்து அங்கிருந்து வாகனத்தில் வெளியேறிய தம்பதியை விரட்டிச் சென்று பொலிசார் கைது செய்துள்ளனர்.

சுமார் 21 லட்சம் ரொக்கம் அவர்களிடம் இருந்து அப்போதே கைப்பற்றியதாகவும், அதன் பின்னர் இதுவரை சுமார் 6 கோடி அளவுக்கு மீட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி, இந்த விவகாரத்தில் தொடர்புடைய 9 பேர்களை மொத்தமாக கைது செய்துள்ளதாகவும் பஞ்சாப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

காதல் ஜோடியை சுட்டுக் கொன்று சடலத்தை முதலைகளுக்கு உணவாக்கிய பெண்ணின் தந்தை!!

மத்திய பிரதேசத்தில்..

சாதி, கவுரவம் எனக் கூறி, பெற்ற பிள்ளைகளை கொலை செய்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் உள்ள ரத்தன்பசாய் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஷிவானி (வயது 18).

இவரும் பக்கத்து கிராமத்தை சேந்த ராதேஷியாம் தோமருக்கும் (வயது 21) பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்த இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

இதன் காரணமாக இவ்ர்கள் காதலுக்கு பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனிடையே சிறிது நாட்களாக ராதேஷியாம் காணாமல் போயுள்ளார். அவரை அவரின் குடும்பத்தினர் பல இடங்களில் தேடியுள்ளனர்.

ஆனால் அவர் குறித்து தகவல் ஏதும் கிடைக்காததால் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அப்போது போலிஸார் நடத்திய விசாரணையில் ராதேஷியாம் காதலித்த ஷிவானியும் காணாமல் போனது தெரியவந்தது.

தொடர்ந்து ஷிவானியின் குடும்பத்தாரிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, இருவரின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகள் மற்றும் அவர் காதலித்த ராதேஷியாமை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

மேலும், அவர்களின் உடலை கனமான கற்களை கட்டி, சம்பல் ஆற்றில் போட்டுவிட்ட கொடூர செயலையும் பெண்ணின் தந்தை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து போலிஸார் அவர்கள் சொன்ன இடத்தில் இளம் ஜோடிகளின் சடலத்தை தீவிரமாக தேடிவருகின்றனர்.

சாம்பல் ஆற்றில் ஏராளமான முதலைகள் இருக்கும் நிலையில், இளம் ஜோடிகளின் சடலத்தை அவைகள் தின்றிருக்கலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. சாதி, கவுரவம் எனக் கூறி, பெற்ற பிள்ளைகளை கொலை செய்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமாகி ஒரே வருடத்தில் விபரீத முடிவெடுத்த இளம்பெண்!!

கள்ளக்குறிச்சியில்..

கள்ளக்குறிச்சி அருகே அகரக்கோட்டாலம் கிராமத்தில் ஜெயப்பிரகாஷ் (30) – ராதா (28) என்ற இளம்தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒராண்டுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. ஜெயப்பிரகாஷ் – ராதா தம்பதி மகிழ்ச்சியுடன்தான் தங்கள் இல்லறவாழ்க்கையில் வாழ்ந்து வந்தனர்.

ஆனால் ராதாவுக்கு வயிற்றுவலி இருந்துவந்ததாகவும், அடிக்கடி வலிப்பதாக அவர் கூறி வந்துள்ளார். இதற்கு அவர்கள் பல்வேறு மருத்துவமனைக்கு சென்றும் தீர்வுகிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், அண்மையில் மீண்டும் அவருக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த அவர் விவசாயத்துக்கு பயன்படுத்த வீட்டில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதில் ராதா வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்ததை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் மருத்துவர்கள் பரிந்துரையின்பேரில் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், பின்னர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி ராதா உயிரிழந்து விட்டார். இது குறித்து ராதாவின் தந்தை பெரியசாமி கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தையின் பைக்கை ஓட்டிச் சென்ற இரு சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!!

சேலத்தில்..

சேலம் சுக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் மது சாந்தன் (14). அதேபோல், ராஜா என்பவரது மகன் நவீன் (14). நண்பர்களான சிறுவர்கள் இருவரும் ஒன்றாக சுற்றி வந்துள்ளனர்.

இதில் சிறுவன் நவீன் தனது தந்தை ராஜாவின் பைக்கை எடுத்துக் கொண்டு சுற்றியுள்ளார். அப்போது, நண்பன் மது சாந்தனை அழைத்து கொண்டு இருவரும் அயோத்தியாபட்டணம் சென்று விட்டு மீண்டும் சுக்கம்பட்டி நோக்கி பைக்கில் திரும்பினர்.

அரூர் மெயின் ரோடு தேவாங்கர் காலனி அருகே வந்தபோது, முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றனர். அப்போது எதிரே வந்த லாரி, பயங்கரமாக பைக் மீது மோதியது.

இந்த கோர விபத்தில் லாரியில் சிக்கி மாணவன் மதுசாந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த சிறுவன் காயத்துடன் போராடினார். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று சிறுவனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். சாலை விபத்தில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து குறித்து வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவர்களுக்கு பைக் ஓட்டக்கூடுத்தது பெற்றோர் தப்பு என்றும், அதேநேரம் விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்தனர்.

நடு வீதியில் பரிதாபமாக உயிரிழந்த மாணவன்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

சேலத்தில்..

சேலத்தில், அரசு பேருந்து மோதியதில், மூளை சிதறி சம்பவ இடத்திலேயே 7ம் வகுப்பு மாணவர் உயிரிழந்த நிலையில், அரசு பேருந்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம், கன்னங்குறிச்சி ஆறுமுகம் அய்யர் தெருவைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி நடராஜ். இவரது மகன் கவேஷ். அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கவேஷ் 7ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் மாலை பள்ளி விட்டு வீடு திரும்பிய கவேஷ், சிறிது நேரம் கழித்து தனது தாயாரிடம், ஜாமெண்ட்ரி பாக்ஸைப் பள்ளியிலேயே வைத்து விட்டு வந்து விட்டேன்… அதைப் போய் எடுத்து வந்து விடுகிறேன் என கூறி பள்ளிக்கு சென்றிருக்கிறார்.

பள்ளி வகுப்பறைக்கு சென்று ஜாமெண்ட்ரி பாக்ஸை எடுத்துக் கொண்டு, வீட்டிற்கு திரும்பி வருகையில், சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கன்னங்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, அரசு மருத்துவமனை அருகே சென்ற போது, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மாணவன் கவேஷ் மீது மோதியது. இதில் மூளை சிதறி மாணவன் கவேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துணை கமிஷனர் லாவண்யா, கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார், மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்தில் இறந்த மாணவன் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அரசு பேருந்து மோதி பள்ளி மாணவன் இறந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாணவர்கள், பொதுமக்கள் அந்த பகுதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனிடையே சேலம் அரசு மருத்துவமனையில் இருந்த மாணவனின் பெற்றோரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் விபத்து எப்படி ஏற்பட்டது என கேட்டு அறிந்தார். பேருந்தின் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

திருமணமான 15வது நாள் பரிதாபமாக உயிரிழந்த புதுமாப்பிள்ளை.. உடலைப் பார்த்து கதறிய மனைவி!!

கடலூரில்..

கடலூர் சேடபாளையம் கெங்கநாயக்கன்குப்பத்தில் வசித்து வருபவர் 25 வயது விமல்ராஜ். இவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் பைபர் கேபிள் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் சிதம்பரம் அண்ணாமலை நகரில் வசித்து வரும் ரவீனாவை ஜூன் 1ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் வைத்தீஸ்வரன் கோவிலில் நடைபெற்றது. நேற்று தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சி நடைபெற இருந்தது.

இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பணிக்கு செல்ல வேண்டாம் வீட்டில் இருக்க சொல்லி உறவினர்கள் கூறினர். ஆனால் பணிக்கு சென்று சீக்கிரம் திரும்புகிறேன் எனக் கூறி வேலைக்கு புறப்பட்டு சென்றார்.

பின்னர் அவர், திருப்பாதிரிப்புலியூர் தண்டபாணி செட்டிதெருவில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் ஏறி, செல்போன் இணையதள சேவைக்கான கேபிளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது மேலே சென்ற மின்கம்பியில் அவரது கை உரசிவிட்டது. இதில், மின்சாரம் தாக்கி விமல்ராஜ் மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்குடியிருப்பு வாசிகள் உடனடியாக விமல்ராஜை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே விமல்ராஜ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். திருமணமான 15 நாளில் புது மாப்பிள்ளை இறந்தது உறவினர்களிடையே கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

தாலி பிரித்து கோர்ப்பதற்காக காத்திருந்த அவரது மனைவி கணவனின் உடலை பார்த்து கதறி அழுதது அங்கிருந்தவர்கள் அனைவரின் நெஞ்சையும் கரைய வைத்தது. இச்சம்பவம் குறித்து புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் விமல்ராஜ் உயிரிழந்தது குறித்து அறிந்த அவருடைய உறவினர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் இணைந்து காவல்நிலையத்தின் முன் திரண்டனர்

பணியின் போது விபத்தில் இறந்த விமல்ராஜ் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். அவரது மனைவிக்கு அதே நிறுவனத்தில் வேலை வழங்கிட வேண்டும். உடனடியாக இது குறித்து கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும்.

இல்லையெனில் விமல்ராஜ் உடலை வாங்க மாட்டோம் எனக் கூறினர். காவல்துறையினர் முற்றுகையிட முயன்றவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.

உறவினர்களின் கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி வழங்கினர். இதனை ஏற்றுக்கொண்ட விமல்ராஜின் உறவினர்கள் முற்றுகை முயற்சியை கைவிட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கணவர் இறந்த சோகத்தில் 3 குழந்தைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு!!

விருதுநகரில்..

விருந்துநகர் மாவட்டத்தில் கணவரிறந்த துக்கம் தாங்காமல், தன்னுடைய குழந்தைகளின் எதிர்காலம் இனி என்னாகும் என்கிற மன அழுத்தத்தில், 3 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலைச் செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரையடுத்துள்ள கோட்டையூரில் வசித்து வந்தவர் ஈஸ்வரன். இவரது மனைவி பாண்டீஸ்வரி (35). இவர்களுக்கு 2 மகள்கள், 1 மகன். ஈஸ்வரனுக்கு கடந்த சில மாதங்களாக உடம்பில் உப்புச்சத்து அதிகம் இருந்து வந்துள்ளது.

இதனால் கடந்த ஒரு மாத காலமாக கடுமையாக் அவதிப்பட்டு வந்த நிலையில், மதுரையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 2 நாட்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். கணவன் உயிரிழந்ததும் மனைவி பாண்டீஸ்வரி, மிகுந்த மனக்குழப்பத்தில் ஆழ்ந்தார். எப்படி 3 குழந்தைகளை வளர்ப்பது .

செலவுக்கு என்ன செய்வது , வருமானம் எதுவும் இல்லாத நிலையில் 3 குழந்தைகளுடன் ஈஸ்வரனுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள கிணற்றில் விழுந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார். அந்த வழியாக சென்றவர்கள் கிணற்றில் சடலங்கள் மிதப்பதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தீயனைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதில் மனைவி பாண்டிஸ்வரி, மகள்கள் வைத்தீஸ்வரி, காளீஸ்வரி, மகன் விக்னேஸ்வரன் ஆகிய 4 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாமியாரைக் கொல்ல கூலிப்படையை ஏவிய மருமகள்… நடந்த விபரீதம்!!

புதுச்சேரியில்..

புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள அம்மன் கோவில் தெருவில் அண்ணாமலை சாமியின் மனைவி மேரி டெய்சி (72) தம்பதி வசித்து வருகின்றனர். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையான இவரது கணவர், முதல் மகன் உயிரிழந்து விட்டனர். இவர்களின் 2வது மகன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

எனவே மூதாட்டி மேரி டெய்சி வீட்டில் தனியாக தான் வசித்து வருகிறார். வீட்டின் முதல் தளத்தை வாடகைக்கு கொடுத்து விட்டு, 2வது தளத்தில் அவர் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 13ம் தேதி வீட்டில் வெட்டுக்காயங்களுடன் மேரி டெய்சி உயிருக்கு போராடிய நிலைலயில் கிடந்தார்.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் மூதாட்டி மேரி டெய்சியின் மருமகள் ரபெக்கா ரோஸ்லின் நிஷா (36) மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் வசித்து வரும் ரபெக்கா ரோஸ்லின் நிஷாவைப் பிடித்து விசாரித்த போது பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன. அவர் தான் தனது மாமியாரை கூலிப்படையை ஏவி கொல்ல முயன்றது அம்பலமானது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கூலிப்படையினராக செயல்பட்ட நெல்லையைச் சேர்ந்த ராஜேஷ் (27), சிம்சன் (19), முத்து (18) மற்றும் 14 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

தொடர் விசாரணையில், மூதாட்டி மேரி டெய்சியின் உயிரிழந்த மூத்த மகன் அந்தோணி சேவியரை 2வது திருமணம் செய்தவர் ரபெக்கா ரோஸ்லின் நிஷா. அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில், சொத்தை பிரித்து தரும்படி மாமியாரிடம் கேட்டுள்ளார்.

அவர் பிரித்து தரவில்லை. மற்றொருவரை திருமணம் செய்யும் முயற்சியையும் மாமியார் தடுத்து விட்டதாக கூறி அவரைக் கொலைச் செய்ய திட்டம் போட்டதாக ரபெக்கா ரோஸ்லின் நிஷா வாக்குமூலம் அளித்துள்ளார். இதற்காக கூலிபடைக்கு ரூ.15 லட்சம் தருவதாக கூறி அவர்கள் மூலம் மேரி டெய்சியை கொலைச் செய்ய முயற்சி செய்தனர்.

எனது மாமியாருக்கு பலரிடம் பணம் கொடுக்கல்- வாங்கல் தகராறு இருப்பதால், கொலை செய்தாலும், என் மீது சந்தேகம் வராது என்று நினைத்ததாகவும் ரபெக்கா ரோஸ்லின் நிஷா போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். சொத்து தகராறில் மாமியாரை மருகளே தீர்த்துக் கட்ட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மணமகனை காரி துப்பி காலால் எட்டி உதைத்த மணப்பெண்.. எதனால் இந்த ஆக்ரோஷம்?

மணமேடையில்..

மணப்பெண் ஒருவர் மணமேடையில் மாப்பிள்ளையை காரி துப்பி காலால் எட்டி உதைத்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. பொதுவாக திருமண நிகழ்வு என்பது மகிழ்ச்சியான தருணம் மட்டுமின்றி காலத்திற்கும் நீங்காத நினைவுகளாகவே இருக்கும். தற்போது திருமண நிகழ்வில் நண்பர்களின் அட்டகாசம், நடனம் என களைகட்டுகின்றது.

ஆனால் சில திருமணங்கள் முந்தைய காலத்தில் இருந்த சடங்குகளின் படி நடைபெற்று வருகின்றது. இங்கு திருமண நிகழ்வில் மணப்பெண் மணமகனுக்கு இனிப்பு ஊட்டுகின்றார்.

பதிலுக்கு மணமகன் மணப்பெண்ணிற்கு இனிப்பு ஊட்டுகையில் அவர் வாங்க மறுத்துள்ளார். ஒருகட்டத்தில் மணப்பெண்ணின் முகத்திலேயே பூசி விடுகின்றார். இதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற மணப்பெண் மணமகளை காரி துப்பியதோடு, காலால் எட்டி உதைத்து கலேபரமாக்கியுள்ளார்.

மணமகனை மரத்தில் கட்டி வைத்து அடித்த பெண் வீட்டார்.. அதிர்ச்சி சம்பவம்!!

உத்திரபிரதேசத்தில்..

ஆயிரம் பொய் சொல்லியாவது திருமணம் செய் என்பது பழமொழி. கல்யாணத்தை பண்ணிப்பார். வீட்டைக் கட்டிப்பார் என்பார்கள் , முந்தைய தலைமுறை வரை பெண்ணுக்கு வரதட்சணை கொடுத்து திருமணம் செய்தனர். தற்போது நிலைமை மாறிவிட்டது.

வரதட்சிணைகள் குறைந்து வரும் இந்த காலத்தில் சில இடங்களில் விபரீதங்களும் நிகழ்ந்து விடுகின்றன. அந்த வகையில் உத்திரபிரதேசத்தில் நடந்த திருமணம் ஒன்றில் வரதட்சணை கேட்டதால் மணமகனை மரத்தில் கட்டி வைத்து உதைத்துள்ளனர்.

இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அமர்ஜித் வர்மா என்பவருக்குத் திருமணம் நிச்சயக்கப்பட்டு தடபுடலாக நடந்து கொண்டிருந்தது.

திருமண விழாவில் மாலை மாற்றிக்கொள்ளும் ஜெய் மாலா என்ற சடங்கின்போது, அமர்ஜித்தின் நண்பர்கள் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால், மணமகன் – மணமகளின் குடும்பத்தினருக்கு இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது.

அப்போது மணமகன் அமர்ஜித் வர்மா, மணமகளின் குடும்பத்தினரிடம் வரதட்சணைக் கேட்டதாகக் கூறப்படுகிறது. இரு வீட்டாரும் பலகட்டப் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்நிலையில், ஆத்திரமடைந்த மணமகள் வீட்டார், தங்களிடம் வரதட்சணைக் கேட்ட மணமகனைச் சிறைப்பிடித்து மரத்தில் கட்டிவைத்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மந்தடா காவல் நிலைய போலீசார், மணமகனை விடுவித்து அவரைக் கைது செய்தனர்.

இது குறித்து எஸ்எச்ஓ மந்தாதா கூறுகையில், “இரு தரப்பும் காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்தியும், இதுவரை சமரசம் ஏற்படவில்லை” எனறார். மேலும், “மாப்பிள்ளையின் நண்பர்கள் தவறாக நடந்து கொண்டதால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதற்கிடையில், மணமகன் அமர்ஜித் வரதட்சணை கேட்டு கோரிக்கை வைத்தார். திருமண விழா ஏற்பாடுகளில் பெண்ணின் தரப்பு செலவுகளை ஈடுசெய்வதற்கும், ஒரு சமரசத்தை எட்டுவதற்கும் இரு குடும்பங்களுக்கும் இடையே ஒரு சந்திப்பு நடந்து கொண்டிருந்தது” என்று தெரிவித்தார்.

பெற்ற மகனை கொன்றுவிட்டு நாடகமாடிய தாய் : இறுதியில் நடந்த விபரீதம்!!

சென்னையில்..

சென்னையில் 2½ வயது ஆண் குழந்தையை கொன்ற வழக்கில் குழந்தையின் தாய் மற்றும் அவரது ஆண் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் செல்வபிரகாசம்- லாவண்யா.

இவர்களுக்கு 2½ வயதில் ஆண் குழந்தையொன்றும் இருக்கிறது, இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் லாவண்யா குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் மகனை பார்ப்பதற்காக செல்வபிரகாசம் வீட்டுக்கு சென்றுள்ளார், அங்கு லாவண்யா இல்லை. குழந்தை இறந்துவிட்டதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர், இதனால் அதிர்ச்சியடைந்த செல்வபிரகாசம் குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மாங்காடு பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

தொடர்ந்து ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளித்தார், இதனையடுத்து போரூர் உதவி கமிஷனர் ராஜீவ் பிரின்ஸ் ஆரோன், மாங்காடு இன்ஸ்பெக்டர் ராஜி ஆகியோர் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், பெற்ற மகன் என்றுகூட பாராமல் திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்ததால் லாவண்யாவே கொன்றது தெரியவந்தது. இதனையடுத்து தாய் லாவண்யாவையும், அவரது ஆண் நண்பர் மணிகண்டன் என்பவரையும் பொலிசார் கைது செய்தனர்.

கல்லூரியில் படிக்கும்போதே மணிகண்டன்- லாவண்யா பழகி வந்துள்ளனர், இருவருக்கும் வேறொரு நபர்களுடன் திருமணமாகி ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர்.

நாளடைவில் இருவரும் நெருங்கி பழக, இதை தெரிந்து கொண்ட மணிகண்டனின் மனைவி அவரது அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டார். லாவண்யாவும் கணவருடன் சண்டையிட்டு தனியாக வசிக்கத் தொடங்கினார், இருவரும் கணவன்- மனைவி போல் வசித்து வந்துள்ளனர்.

குழந்தை இடையூறாக இருப்பதாக நினைத்த மணிகண்டன் துன்புறுத்தி வந்துள்ளார், சம்பவ தினத்தன்று குழந்தை மணிகண்டனின் செல்போனை தண்ணீரில் போட்டுவிட, கோபமடைந்த மணிகண்டன் குழந்தை சுவற்றில் ஓங்கி அடித்துள்ளார்.

இதனால் குழந்தையின் தலையில் பலமான அடி விழ, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கிருந்து சிகிச்சை முடிந்து வரும்போது, குழந்தை வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளது.

கொலையை மறைக்க அவன் தவறி கீழே விழுந்து இறந்து விட்டதாக லாவண்யா அக்கம் பக்கத்தில் தெரிவித்துள்ளார், இதை அவர்களும் நம்பிவிட்டனர். ஆனால் பொலிசாரின் விசாரணையில் உண்மை அம்பலமாகியுள்ளது, இருவரையும் கைது செய்த பொலிசார் சிறையில் அடைத்தனர்.

பிரித்தானிய தமிழர்களுக்கு பெருமை சேர்த்த லண்டனை சேர்ந்த தமிழ்ச் சிறுமி!!

ஜோர்ஜியாவில்..

ஜோர்ஜியாவில் நடைபெற்ற 8 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான பிரிவில் வாகையாளராக பிரித்தானியா வாழ் தமிழ் சிறுமி முதலாவது இடம் பிடித்துள்ளார்.

லண்டன் கரோ பகுதியை சேர்ந்த போதனா சிவானந்தன் பெண்களுக்கான பிரிவில் வாகையாளராக முதலாவது இடம் பிடித்துள்ளார்.

உலகளவில் நடைபெற்ற இத் தொடரின் Rapid chess மற்றும் Blitz chess ஆகிய இரு வகையான போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். போதனா கலந்து கொண்ட அனைத்துப் போட்டிகளிலுமே வென்றுள்ளார்.

தமிழ்நாட்டை சேர்ந்த சிவானந்தன் தம்பதியின் மகளான போதனா பல அபார திறமைகளை வெளிக்காட்டி வருவதாக பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

கராத்தே போட்டியில் இலங்கைக்கு பெருமை சேர்த்துக் கொடுத்த சானுயா!!

டெல்லியில்..

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற கராத்தே போட்டியில் இலங்கையின் தமிழ் வீராங்கனையான சானுயா வெற்றிபெற்றுள்ளார்.

அதன்படி, இலங்கையின் தேசிய அணியில் இடம்பிடித்த சானுயா குறித்த கராத்தே போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்று வெண்கலப் பதக்கத்தை தனதாக்கிகொண்டார்.

சானுயாவை வழிநடத்திய ஆசிரியர் சென்சேய் விஜயராஜூக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மைக்காலமாக இலங்கையைச் சேர்தவர்கள் தனது திறைமைகளால் இலங்கைக்கு பெருமையை சேர்த்து வருகின்றனர்.

அந்த வகையில் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இந்தியாவில் கல்வி கற்றுவரும் ஈழத் தமிழரான அர்ச்சிகன் என்ற மாணவன் தமிழர்கள் மத்தியில் பெருமை சேர்த்தார். மேலும் ஜோர்ஜியாவில் நடைபெற்ற 8 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான பிரிவில் வாகையாளராக பிரித்தானியா வாழ் தமிழ் சிறுமி முதலாவது இடம் பிடித்துள்ளார்.

வெளிநாட்டு ஆசைகாட்டி 10 கோடி சுருட்டிய மோசடி மன்னன் சிக்கினான்!!

ஐரோப்பிய நாடுகளில்..

ஐரோப்பிய நாடுகளில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாகக்கூறி 10 கோடிக்கும் அதிக பெறுமதியான பணத்தை மோசடி மன்னன் மிரிஹான பொலிஸாரினால் நேற்றையதினம் (19) கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை சந்தேக நபரால் 50 க்கும் மேற்பட்ட நபர்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். அத்துடன் சந்தேகநபருக்கு எதிராக மிரிஹான பொலிஸ் தலைமையகத்தில் மாத்திரம் 15க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர் 5 இலட்சம் முதல் 10 இலட்சம் வரையில் பணம் பெற்றுள்ளதுடன் அவர் கனடா, நெதர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாகக்கூறி ஏமாற்றியுளார். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட நபரொருவர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சந்தேக நபர் பணத்தைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் பல்வேறு காரணங்களை முன்வைத்துள்ளதுடன், சுமார் ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக செயல்முறை பணிகள் தாமதப்படுத்தப்படுவதாகக் கூறி தொடர்ச்சியாக ஏமாற்றி வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களில் சந்தேக நபருக்கு எதிராக 30 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த நிலையில் சந்தேக நபர் பல பிரதேசங்களில் இவ்வாறு பொதுமக்களை ஏமாற்றியுள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

மிரிஹான பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபரை மிரிஹான, மடிவெலவில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.