பிறந்தநாள் வாழ்த்து கூற வந்த இளைஞர் கொலை… மனமுடைந்த காதலி விபரீத முடிவு!!

கோவையில்..

கோவையில் பிறந்தநாள் வாழ்த்து கூற வந்த காதலன் கொல்லப்பட்டதால், மனமுடைந்த அவரது காத0லி தற்கொலை செய்து கொண்டார். கோவை சுந்தராபுரம் காந்தி நகரைச் சேர்ந்தவர் பிரசாந்த்(21).

லோடுமேனாக பணியாற்றி வந்தார். இவரும், செட்டிபாளையம் அருகேயுள்ள மயிலாடும்பாறையைச் சேர்ந்த தன்யா(18) என்பவரும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தனர்.

இவர்களது காதல் விவகாரம் இருதரப்பு பெற்றோருக்கும் தெரியவந்தது. அவர்கள் சில ஆண்டுகளுக்கு காத்திருக்கும்படி இருவரையும் அறிவுறுத்தியுள்ளனர். மதுபோதையில் வந்தார்: கடந்த 5-ம் தேதி தன்யாவுக்கு பிறந்தநாள்.

அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதற்காக, அன்று அதிகாலை பிரசாந்த் தன் நண்பர்களுடன் மதுபோதையில் தன்யாவின் வீட்டுக்கு வந்தார். அப்போது அவருக்கும், தன்யாவின் குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த தன்யாவின் உறவினர் விக்னேஷ் அரிவாளால் பிரசாந்தை வெட்டினார். இதில் படுகாயமடைந்த பிரசாந்த் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக செட்டிபாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விக்னேஷை கைது செய்தனர்.

பிறந்தநாள் வாழ்த்து கூறவந்த காதலன் உயிரிழந்த சோகத்தில் இருந்த தன்யா மறுநாள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன் பின்னர், அவர் வீடு திரும்பினார்.

2-வது முறையாக..: இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் தன்யா மற்றும் அவரது பாட்டி மட்டுமே இருந்துள்ளனர். காதலன் உயிரிழந்த சோகத்தில் இருந்த தன்யா, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த செட்டிபாளையம் போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் எழுதி வைத்த கடிதத்தையும் போலீஸார் கைப்பற்றினர். இச்சம்பவம் தொடர்பாக செட்டிபாளையம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்தியாவை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன் கிண்ணத்தை வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா!!

உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி அவுஸ்திரேலியா சாம்பியன் ஆனது.

லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கிய உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் இந்தியா – அவுஸ்திரேலியா அணிகள் மோதின.

அவுஸ்திரேலிய அணி நிர்ணயித்த 445 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 4வது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 164 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

அதனைத் தொடர்ந்து, கடைசி நாளான இன்று இந்திய அணி தனது ஆட்டத்தை தொடர்ந்தது. அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் போலன்ட் ஒரே ஓவரில் இந்திய அணிக்கு செக் வைத்தார்.

அவரது ஓவரில் விராட் கோலி 49 ஓட்டங்களில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ஜடேஜா தனது 2வது பந்திலேயே அலெக்ஸ் கேரியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

கோலியைத் தொடர்ந்து ஸ்டார்க் பந்துவீச்சில் அஜிங்கிய ரஹானே 46 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி ஏறக்குறைய தோல்வியடைந்து விட்டது என பலரும் கருதினர்.

ஆனாலும் விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத் நம்பிக்கை அளிக்கும் வகையில் பொறுமையுடன் ஓட்டங்கள் சேர்த்தார். எனினும் நாதன் லயன் அவரை 23 ஓட்டங்களில் வெளியேற்றினார்.

அதன் பின்னர் கடைசி விக்கெட்டாக லயன் ஓவரில் சிராஜஜ் ஒரு ரன்னில் அவுட் ஆனார். இதன்மூலம் அவுஸ்திரேலிய அணி 209 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

மட்டக்களப்பில் மீன் உணவினை சாப்பிட்டு உயிரிழந்த பெண் : மரணத்தின் காரணம் குறித்து அதிர்ச்சி!!

மட்டக்களப்பில்..

மட்டக்களப்பில் மீன் உணவினை சமைத்து சாப்பிட்ட பின் உயிரிழந்த இளம் தாயின் மரணத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது. மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மாங்காடு பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் பாஃபர் என்ற மீனினை சமைத்து உண்ட நிலையில் இவை விசமாகி உடல் முழுவதும் பரவி உயிரிழந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை களவாஞ்சிகுடி பொது வைத்தியசாலையில் வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார். நச்சு தன்மையான மீனினத்தை உட்கொண்டமையினால் உயிரிழப்பு சம்பவித்திருக்கலாம் எனவும் இந்த மீனில் ட்ரெற்றோட டோக்சின் எனும் ஒரு வகையான நச்சு தன்மையும் உள்ளமை குறிப்பிட்டுள்ளார்.

சம்பவத்தில் 27 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே (08.06.2023) இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் குறித்த பெண் கனடாவிற்கு அடுத்த மாதம் செல்லவிருந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மதிய உணவை உட்கொண்ட பின்னர் அவரது 4 மற்றும் 7 வயதுடைய இரு பிள்ளைகள் மற்றும், அவரது தாயார் உட்பட 4 பேர் வாந்தியெடுத்து மயங்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட 5 வயது சிறுவனின் தாத்தா கைது!!

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவில் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட 5 வயது சிறுவனின் தாத்தா கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு முல்லேரியா ஹல்பராவ பிரதேசத்தில் உள்ள கட்டுமான தளத்திலே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரான தாத்தா நாளை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முன்னதாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபா் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிறுவன் தங்கியிருந்த இடத்தில் புல் வெட்டும் தொழிலாளியாக பணிபுரிந்த கொட்டாவை பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய ஒருவரே (09) முல்லேரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்து மூன்று நாட்களாக உயிருக்கு போராடிய சிறுமி.. இறுதியில் நேர்ந்த சோகம்!!

மத்தியப்பிரதேசத்தில்..

மத்தியப்பிரதேசம், முங்காவல்லி என்ற கிராமத்தில் கடந்த 6 ஆம் திகதி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 3 நாட்களாக உயிருக்கு போராடிய குழந்தை உயிரிழந்துள்ளது.

வீட்டு வாசலில் இரண்டரை வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்த போது, வீட்டின் அருகே தோண்டப்பட்டிருந்த 30 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளது.

இதனையடுத்து பெற்றோர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளடுனதுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், தேசிய மீட்புப் படையினரை வரவழைத்துள்ளனர்.

இ தனையடுத்து, தன்னார்வலர்கள் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டதுடன் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுமிக்கு ஆக்சிஜன் வாயு தொடர்ந்து செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் பெரிய குழி தோண்டப்பட்டு சிறுமியை மீட்கும் பணி 3வது நாளாக தொடர்ந்து நடந்து வந்த நிலையில் முதலில் 50 அடியில் சிக்கியிருந்த குழந்தை, குழி தோண்டப்படும் இயந்திரங்களின் அதிர்வால் 100 அடி ஆழத்திற்கு சென்றுள்ளது.

இதனையடுத்து குழந்தையை மீட்கும் பணி பொலிஸாருக்கு கடும் சவாலாக இருந்ததனையடுத்து, 55 மணிநேர போராட்டத்திற்கு பிறகு நேற்று குழந்தை மீட்கப்பட்டுள்ளது. இதன்போது, குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மூச்சுத்திணறல் காரணமாக குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

பேருந்து விபத்தில் சிக்கி பாடசாலை மாணவருக்கு நேர்ந்த பரிதாபம்.. 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி!!

இலங்கையில்..

பதுரலிய – கெலிங்கந்த மத்துகம வீதியில் மகேலியல்ல பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாக பதுரலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், விபத்தில் உயிரிழந்தவர் கெலின்கந்த காலனி அகலவத்தை என்ற முகவரியில் வசிக்கும் 16 வயதுடைய தில்ஷான் என்ற பாடசாலை மாணவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மத்துகம டிப்போவுக்குச் சொந்தமான பேருந்து கெலிங்கந்தவிலிருந்து மத்துகம நோக்கிச் சென்று கொண்டிருந்த போது எல்ல பகுதியில் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த அணையில் மோதி விபத்துக்குள்ளானதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் புலத்சிங்கல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கிரிக்கெட் ஜாம்பவான் லசித் மாலிங்கவினால் தேடப்பட்ட சிறுவனுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு!!

லசித் மாலிங்க..

சிறுவன் ஒருவன் லசித் மாலிங்க போன்று பந்து வீசும் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியிருந்தது.

இதனை அவதானித்த லசித் மாலிங்க இந்த சிறுவனை கண்டுபிடிக்க உதவுமாறு தனது முகநூல் பதிவொன்றில் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டிருந்தார்.

வீரவில பகுதியை சேர்ந்த தரம் ஐந்தில் கல்வி கற்கும் தினித் என்ற சிறுவனே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில்,சிறுவனின் திறமையை பாராட்டி சிறந்த கிரிக்கெட் பயிற்சியாளரிடம் பயிற்சிகளை பெறுவதற்கான வாய்ப்புக்களை பெற்றுத்தரவுள்ளதாகவும்,மற்றுமொரு சிறந்த பாடசாலையில் சேர்க்கவுள்ளதாகவும் கூறியிருந்தார்.

இதன்படி, தெபரவெவ தேசிய பாடசாலைக்கு சிறுவன் வரவழைக்கப்பட்டு மூத்த வேகப்பந்து வீச்சாளர் சுரங்கா லக்மாலின் பயிற்றுவிப்பாளர் முன்னிலையில் பந்து வீசியுள்ளார்.

இதன்போது குறித்த சிறுவனின் பந்து வீச்சினை பார்த்து தான் ஆச்சரியமடைந்ததாக சுரங்கா லக்மாலின் பயிற்சியாளர் கூறியுள்ளார்.

பலவந்தமாக பெண்ணை தூக்கிச் சென்று அரங்கேறிய கொடுமை.. தப்பிக்க முடியாமல் கதறிய இளம்பெண்!!

ராஜஸ்தானில்..

ராஜஸ்தான் மாநிலத்தில் இளம்பெண் ஒருவரை கடத்தி கட்டாய திருமணம் செய்த இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் இளம்பெண்ணை கடத்தி, கட்டாய திருமணம் செய்துள்ளார் புஷ்பேந்திர சிங் எனும் நபர்.

இவர் பாலைவனம் ஒன்றில் தீ மூட்டி, குறித்த இளம்பெண்ணை பலவந்தமாக தூக்கிக்கொண்டு, நெருப்பை சுற்றி வரும் சடங்கினை செய்துள்ளார்.இந்த சடங்கின் போது குறித்த பெண் கதறி அழுதுள்ளார். இக்காட்சி இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து புஷ்பேந்திர சிங்கை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இறப்பிலும் பிரியாத நண்பர்கள்.. ஒன்றாக நடந்த இறுதிச் சடங்கு… சோகமயமான கிராமம்!!

திருவாரூரில்..

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தலையாமங்கலம் பகுதியில் சிவராமகிருஷ்ணன் (80) மற்றும் ராமலிங்கம் (82) ஆகிய இருவர் வசித்து வந்தனர். இருவரும் சிறு வயது முதலே நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.

மன்னார்குடியில் இருவரும் ஒன்றாக பள்ளி படிப்பை முடித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினத்தில் ஒரே அறையில் தங்கி இருவரும் பாலிடெக்னிக் படிப்பை முடித்துள்ளனர்.

மன்னார்குடியில் இருவரும் ஒன்றாக பள்ளி படிப்பை முடித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினத்தில் ஒரே அறையில் தங்கி இருவரும் பாலிடெக்னிக் படிப்பை முடித்துள்ளனர்.

ஆண்டுகள் பல ஓடிய பிறகும், சிறுசிறு சண்டைகளைக் கடந்தும் அவர்களின் நட்பு பெரும் பினைப்புடன் இன்றளவும் தொடர்ந்தது. அந்த கிராமம் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதி மக்களே ஆச்சரியப்படும் அளவுக்கு அவர்களின் நட்பு இருந்தது.

இதில், சிவராமகிருஷ்ணனுக்கு மனைவி, இரண்டு மகன், ஒரு மகளும், ராமலிங்கத்திற்கு மனைவி மற்றும் இரண்டு மகன், இரண்டு மகள்களும் உள்ளனர். இருவரும் மன்னார்குடி அருகே உள்ள மத்திய அரசு நிறுவனத்தில் ஒன்றாக வேலைக்கு சேர்ந்தனர்.

அதன் பின்னர் சிவராமகிருஷ்ணன், ராமலிங்கம் ஒரே நாளில் பணி ஓய்வும் பெற்றுள்ளனர். அடிக்கடி குடும்பத்துடன் சேர்ந்து சுற்றுலா சென்று வந்துள்ளனர். இந்நிலையில், சிவராமகிருஷ்ணன் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில், சிவராமகிருஷ்ணன் உயிரிழந்துள்ளார். நண்பர் உயிரிழந்த தகவலை கேட்ட ராமலிங்கம் பெரும் சோகத்தில் மூழ்கினர்.

மேலும் அடுத்த சில நிமிடங்களில் ராமலிங்கம் அதே இடத்தில் மயங்கிய நிலையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இவர்களது இறுதிச் சடங்கும் ஒன்றாக நடைபெற்றது.

இறப்பிலும் இணை பிரியாமல் நண்பர்கள் உயிரிழந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறுதி சடங்கில், மொத்த ஊரே திரண்டு வந்து இருவருக்கும் அஞ்சலி செலுத்தி, அவர்களது நட்பைப் போற்றினார்கள்.

2023ம் ஆண்டில் உலகம் சந்திக்கப்போகும் அடுத்த பேரழிவு : பாபா வங்காவின் அதிர்ச்சிகர கணிப்பு!!

பாபா வாங்கா..

உலகில் மிகவும் முக்கிய நபராக கருத்தப்பட்டவர்களில் ஒருவரான பால்கன் நாஸ்ட்ராடாமஸ் என்று அழைக்கப்படும் பாபா வாங்கா கடந்த 1996- ஆம் ஆண்டு தன்னுடைய 84வது வயதில் காலமானார்.

பாபா வாங்கா உயிரிழப்பதற்கு முன், இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என பல்வேறு கணிப்புகளை கணித்துள்ளார். இவரது கணிப்புகளில் 85% சரியானவையாக இருக்கு என்று கூறப்படுகிறது. இவரது கணிப்புகள் தற்போது வரை பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இவரது பெரும்பாலான கணிப்புகள் நிகழ்ந்துள்ளதே இந்த அதிர்ச்சிக்கு காரணம். உதாரணமாக அமெரிக்காவில் இரட்டை கோபுரம் மீது விமான தாக்குதல், இளவரசி டயானாவின் மரணம், 2004 சுனாமி, பராக் ஒபாமாவின் ஜனாதிபதி பதவி மற்றும் சோவியத் யூனியன் கலைப்பு ஆகிய இவரது கணிப்புகளும் உண்மையாகின என குறிப்பிடுகிறார்கள்.

இவ்வாறான நிலையில் 2023 ஆம் ஆண்டில் அணு ஆயுத அச்சுறுத்தல் நடக்கப்போவதை பாபா வாங்கா தனது குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் அணு ஆயுதப் பேரழிவு இந்த ஆண்டு இறுதிக்குள் மேற்கொள்ளப்படலாம் எனும் பாபா வாங்காவின் கணிப்பு தற்பொழுது பேசுபொருளாக மாறியுள்ளது.

ரஷ்ய – உக்ரைன் போர் ஒராண்டை கடந்த நிலையிலும் தீவிரமடைந்து வருகின்றது, இரு நாடுகளும் அணு ஆயுத பாவனை தொடர்பில் செய்திகளை வெளியிட்டு வரும் வகையில் பாபா வாங்காவின் இந்த அதிர்ச்சிகர கணிப்பு வெளிப்பட்டிருக்கிறது.

மேலும், 2023இல் அணுமின் நிலையம் வெடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைனில் ஒரு பேரழிவு ஏற்படும் என்ற அச்சம் இருப்பதாகவும், “அணு ஆயுத அச்சுறுத்தல்” விடுப்பதாக உக்ரைன் ரஷ்யாவை குற்றம் சாட்டி வரும் நிலையில், இவரது கணிப்பு அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, மக்கள் மீது உயிரியல் ரீதியான போரை உலகின் மிகப்பெரிய நாடு மேற்கொள்ளும் என்றும், இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும் என்றும் பாபா வாங்கா கணிப்பு எச்சரிக்கிறது.

இதனால் 2023ஆம் ஆண்டிலும் என்னவெல்லாம் நடக்கும் என்பது குறித்த பாபா வாங்காவின் கணிப்பு தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது. அதில், உலகில் உள்ள அணு உலைகள் உருகுவதால் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் மாற்றம் ஏற்படுமாம்.

ஒருவேளை பாபா வாங்காவின் கணிப்பு படி பூமியில் சிறிய மாற்றம் நடந்தால்கூட அது கால நிலையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும். அதேபோன்று சூரியனை விட்டு பூமி விலகினால் பனி யுகத்திலும் அடர்ந்த இருளிலும் மூழ்கக் கூடிய கதி நேரலாம்.

அடுத்தபடியாக, இயற்கை முறையிலான குழந்தை பெற்றெடுப்புக்கு தடை விதிக்கப்பட்டு, இனி வரும் காலங்களில் ஆய்வகங்களில் பெற்றோர்கள் தங்களுக்கான குழந்தைகள் எந்த நிறத்தில் உருவ அமைப்பில் இருக்க வேண்டும் என தெரிவு செய்துக்கொள்ளும் வகையில் இருக்கும் என்றும் பாபா வாங்கா கணிப்பில் கூறப்பட்டிருக்கிறதாம்.

வாங்கெலியா குஸ்டெரோவ் -ஆகப் பிறந்த இந்த பாபா வாங்கா பல்கேரியாவைச் சேர்ந்தவராவார். பாபா வாங்கா என்ற இந்தப் பெண் தனது 12 வயதில் பார்வையை இழந்திருக்கிறார். அதன் பிறகு எதிர்காலத்தை கணிக்கும் ஆற்றல் இவருக்கு இருந்ததாகவும், இவர் கணித்தால் 85 சதவிகிதம் நடக்கும் என்றும் நம்பப்படுகிறது.

1996ஆம் ஆண்டே இறந்திருந்தாலும் 5079ஆம் ஆண்டு வரைக்குமான எதிர்காலத்தை பாபா வாங்கா கணித்திருக்கிறாராம். இதன் மூலம் உலகம் 5079ஆம் ஆண்டு வரை இயங்கும் என்பது அறிய முடிகிறது.

4 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் இளம்பெண் விபரீத முடிவு.!!

திருச்சியில்..

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள பச்சைமலை தோணுர் கிராமத்தில் அழகேசன் – சந்தியா தம்பதி வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் நீண்ட காலம் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். அழகேசன் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

அழகேசன் – சந்தியா தம்பதிக்கு திருமணம் முடிந்து நான்கு ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி குடும்பத் தகராறு வந்ததாக தெரிகிறது.

இதனிடையே, லாரி ஓட்டும் பணியை விட்டுவிட்டு, விவசாய பணிக்கு செல்லும்படி கணவரிடம் சந்தியா கூறிவந்துள்ளார். எனினும் போதிய பணி இல்லாததால் அவரும் லாரி ஓட்டுவதற்கு அவ்வப்போது சென்றுள்ளார்.

இந்த நிலையில் லாரி ஓட்டுனரான அழகேசன் வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார். லாரி ஓட்டுவதற்கு செல்லவேண்டாம் என கூறியபோதும், அங்கு செல்வதாக கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மனம் உடைந்த சந்தியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக தெரிகிறது. சந்தியாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முசிறி கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகிறார். திருமணம் ஆகி 4 ஆண்டுகளில் பெண் இறந்து போன சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.

இறப்பிலும் இணைபிரியா தம்பதி… இறந்த கணவரை பார்த்துக்கொண்டே நெஞ்சை பிடித்த மனைவி!!

செங்கல்பட்டில்..

இருவரது உடல்களும் அடக்கம் செய்வதற்காக ஒரே வாகனத்தில், எடுத்துச் செல்லப்பட்டு மயானத்தில், அருகருகே வைத்து அடக்கம் செய்யப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே கணவன் உயிரிழந்த சோகத்தில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த செம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட அச்சரவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராம் வயது 75. இவர் கடந்த 2001 முதல் 26 ஆம் ஆண்டு வரை செம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்து வந்துள்ளார்.

ராமுவின் மனைவி தங்கமணி வயது ( 65). இவர்கள் இருவரும் அப்பகுதியில் இணைபிரியாத தம்பதிகளாக இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் ராமு கடந்த சில நாட்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி ராமு உயிரிழந்தார். இதனை அடுத்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கிராம மக்கள் பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு சென்றனர்.

இந்த நிலையில் தன்னை விட்டு கணவர் பிரிந்து சென்ற துக்கத்தை தாங்க முடியாமல், ராமுவின் மனைவி தங்கமணி தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திடீரென அழுது கொண்டிருந்த பொழுது நெஞ்சை பிடித்தபடி கீழே விழுந்துள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் தங்கமணியை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை தங்கமணியும் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்து உள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது உடலும் செம்பாக்கம் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்குகளை உறவினர்கள் செய்துள்ளனர்.

கணவன் இருந்த சோகத்தில் மனைவியும் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் திரண்டு வந்து அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் இருவரது உடல்களும் அடக்கம் செய்வதற்காக ஒரே வாகனத்தில், எடுத்துச் செல்லப்பட்டு மயானத்தில், அருகருகே வைத்து அடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பட்டம் எடுக்கும் போது 30 அடி உயரத்திலிருந்து விழுந்த சிறுவன்.. சோகத்திலும் பெற்றோர்கள் செய்த செயல்!!

சென்னையில்..

சென்னையில் பட்டம் பிடிக்க முயன்ற போது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சிறுவன் உடலை பெற்றோர்கள் தானமாக வழங்கியுள்ளனர். சென்னை சூளைமேடு பாரதி தெருவை சேர்ந்தவர் தண்டபாணி.

இவரது இரண்டாவது மகன் பிரசன்னா. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை பிரசன்னா தனது நண்பர்களுடன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது பட்டம் ஒன்று அறுந்து காற்றில் பறந்து வந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்த பிரசன்னா, பட்டத்தைப் பிடிப்பதற்காக அதன் பின்னே ஓடியுள்ளார். பிறகு அந்த பட்டம் பெரியார் பாதை பகுதியில் உள்ள ஒரு வீட்டின் இரண்டாவது மாடியில் சிக்கிக் கொண்டது. அதை எடுப்பதற்காகப் பிரசன்னா மாடியின் மீது ஏறி உள்ளார்.

அப்போது ஒரு மாடியில் இருந்து மற்றொரு மாடிக்குத் தாவ முயன்ற போது 30 அடி உயரத்திலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சிறுவனை மீட்டு அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் உயிரிழந்த சிறுவனின் உடலைப் பெற்றோர் தானமாக வழங்கியுள்ளது. மகன் இறந்த போதும் யாருக்காவது உதவியாக மகன் இருக்கட்டும் என பெற்றோர்கள் உடல் உறுப்புகனை தானமாக வழங்கியது அப்பகுதி மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த இருவர் எச்.ஐ.வி தொற்றுடன் அடையாளம்!!

வெளிநாட்டில் இருந்து வருகை தந்த இருவர் வவுனியாவில் எச்.ஐ.வி தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இருவர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இவ்வாறு இனங்காணப்பட்ட இருவரும் ஆண்களாவர்.

வவுனியா மாவட்டத்தில் எச்.ஐ.வி சிகிச்சைப் பிரிவு 2003 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டத்தில் இருந்து கடந்த டிசம்பர் வரை 30 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

அவர்களில் சிகிச்சைக்கு பிந்திய நிலையில் வந்தவர்கள் மற்றும் சீராக சிகிச்சை பெறாத 7 ஆண்களும் 5 பெண்களுமாக 12 பேர் இறந்துள்ளனர்.

ஏனையவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது அடையாளம் காணப்பட்டவர்களுக்கும் அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஐந்து வருட காதல்… பெற்றோர் எதிர்ப்பால் விபரீத முடிவெடுத்த கல்லூரி மாணவி!!

சென்னையில்..

சென்னை பெரம்பூர் சேர்ந்தவர் கோபி என்பவரின் மகள் ஆர்த்தி. இவர், சென்னையில் உள்ள கல்லூரியில் ஆங்கில இலக்கியம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். வீட்டில் இருந்த மாணவி வழக்கம்போல் தனது பணிகளை செய்துக்கொண்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று திடீரென வீட்டின் சமையலறையில் இருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடலில் தீ பற்றியதால் வலியால் அவர் அலறிதுடித்தார்.

ஆர்த்தியின் அலறல் சத்தம் கேட்டு பதறி துடித்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அறைக்குள் சென்று மகளை மீட்க போராடினர். சிறிது நேரத்துக்கு பிறகு ஆர்த்தி மீது பற்றிய தீயை அணைத்து 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால், உடலில் 65 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறினர். தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த ஆர்த்தி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், மாணவியின் தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தினர். இதில், காதல் விவகாரத்தில் இளம்பெண் ஆர்த்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தற்கொலை செய்து கொண்ட ஆர்த்தியும், ஆகாஷ் என்ற இளைஞரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலிக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், விரக்தியில் இளம்பெண் தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறது.

6 வயது மகளை வெட்டிக் கொலை கொடூர தந்தை.. நெஞ்சு பதைபதைக்கும் சம்பவம்!!

கேரளாவில்..

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் மாவேலிக்கரை அருகே புன்னமூடு பகுதியில் ஸ்ரீமகேஷ் (38) – வித்யா தம்பதி வசித்து வந்தனர். இதில் ஸ்ரீமகேஷ் துபாயில் பணி புரிந்து வந்தார். இந்த தம்பதிக்கு 6 வயதில் நக்‌ஷத்ரா என்ற ஒரு மகள் இருந்தார்.

இந்த நிலையில், ஸ்ரீமகேஷின் மனைவி வித்யா 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனை தொடர்ந்து சொந்த ஊர் திரும்பிய ஸ்ரீமகேஷ், அதன் பிறகு அவர் வெளிநாட்டுக்கு செல்லவில்லை.

தொடர்ந்து சில மாதங்களில் ஸ்ரீமகேஷின் தந்தையும் ரயிலில் அடிபட்டு இறந்து விட்டார். இதனால் தாய் சுனந்தா (62), மகள் நக்‌ஷத்ராவுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

நேற்று அவர்களின் வீட்டில் தந்தை ஸ்ரீமகேஷ் மற்றும் மகள் நக்‌ஷத்ரா இருந்துள்ளனர். தாய், சுனந்தா அருகில் உள்ள வீட்டுக்கு சென்றிருந்தார். அந்த நேரத்தில் வீட்டில் இருந்து திடீரென நக்‌ஷத்ராவின் அலறல் சத்தம் கேட்டது.

இதனால் பதற்றத்துடன் சுனந்தா மற்றும் உறவினர்கள் ஓடிச்சென்று பார்த்தனர். வீட்டு சோபாவில் கழுத்தில் வெட்டு பட்டநிலையில் ரத்த வெள்ளத்தில் நக்‌ஷத்ரா கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அதேநேரத்தில் அங்கு கையில் கோடாரியால் ஸ்ரீமகேஷ் ஆவேசமாக நின்று கொண்டு இருந்தார். திடீரென சுனந்தாவையும் அவர் கோடாரியால் வெட்டினார். இதற்கிடையே அங்கு பொதுமக்கள் திரண்டதால் மகேஷ் தப்பி ஓட முயற்சித்தார். ஆனால் பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

பின்னர் படுகாயம் அடைந்த நக்‌ஷத்ராவை மீட்டு சிகிச்சைக்காக மாவேலிக்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மகேஷின் தாயார் சுனந்தாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், மனைவி இறந்த நிலையில் 2ஆவது திருமணம் செய்ய ஸ்ரீமகேஷ் பெண் பார்த்து வந்துள்ளார். ஆனால் ஸ்ரீமகேசுக்கு இருக்கும் மகளை காரணம்காட்டி பலரும் பெண் கொடுக்க முன்வரவில்லை. இந்த ஆத்திரததில் கொலை செய்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.